PDA

View Full Version : Buddy / Ignore lists என்றால் என்ன?



அக்னி
30-04-2007, 12:01 PM
Buddy / Ignore lists என்றால் என்ன? இங்கு, நாம் ஒருவரை அனுமதிக்கும்போது, அனுமதிக்கப்படுபவருக்கு என்ன நிகழும்? யாராவது விளக்கம் தாருங்கள் அல்லது விளக்கப்பட்டிருந்தால் சுட்டி தாருங்கள்.

இராசகுமாரன்
01-05-2007, 04:28 AM
உங்களை என்னோட Buddy list-ல் சேர்த்துள்ளேன், இப்போது என்ன நிகழ்ந்திருக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருக்குமே!

இது மன்றத்தில் உங்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் (தவிர்க்க விரும்புபவர்கள்) லிஸ்ட்.

உங்கள் Buddy மன்றத்தில் உலாவினால், அவர்கள் பெயர் அருகில் '+' குறி தோன்றும். Ignore லிஸ்டில் உள்ளவர்கள் உலாவினால் '-' குறி தோன்றும்.

Buddy list என்பது மன்றத்தில் உங்கள் நண்பர்கள் அனைவரையும் ஒரு லிஸ்டில் வைத்துக் கொள்வது. இதன் மூலம் அவர்கள் அனைவருக்கும், மன்றத்தில் ஒரு சேர தனிமடல் அனுப்பலாம். அனைவரையிம் ஒரே லிஸ்டில் மன்றத்தில் உள்ளனரா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்.

அதிகம் உபயோகப் படுத்தியது இல்லை. உபயோகப் படுத்தியவர்கள் கூறினால் நல்லது.

paarthiban
01-05-2007, 11:56 AM
இன்றுதான் தெரிந்துகொண்டேன், நன்றி அண்ணா

அக்னி
01-05-2007, 07:19 PM
அப்படியானால்,
Buddy list - வேண்டியவர்கள்
Ignore list - வேண்டாதவர்கள்
அப்படித்தானே நிர்வாகி அவர்களே...

நிர்வாகி கூறியதைப்போல யாரேனும் பாவனையில் அனுபவம் பெற்றிருந்தால் இங்கே கூறுங்களேன்...

poo
02-05-2007, 04:49 AM
இதுபோன்ற பல சந்தேகங்கள் இருக்கிறது...
நம்ம அறிவுக்கு அதையெல்லாம் ஆராய்ந்துப் பார்க்க முடியாதென வர்றோம், போறோம்னு இருக்கிறேன்.. கடைசி பதிவுக்கு எப்படி போறதுன்னே தலைவர் ஒருநாள் சொல்லித்தான் எனக்கு தெரியும்.. இதுபோன்று மன்றத்தில் இருக்கும் வசதிகளை யாரேனும் பட்டியலிட்டு சொல்லலாமே!?

அறிஞர்
02-05-2007, 12:33 PM
சுபன் இதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்... அவர் வந்தால் உதவுவார் என நம்புகிறேன்.

சுபன்
03-05-2007, 02:30 AM
buddy என்றால் நண்பர் பட்டியல் மற்றையது வேண்டாதவர் பட்டியல்!! நண்பர் பட்டியலிலே தேவையானவர்களை சேர்த்து விட்டு தனிமடல் (PM) தெரிவுகளிலே (option) Receive Private Messages only from Buddies and Moderators என்பதை தெரிந்தெடுத்தால் உங்களுக்கு வேண்டாதவர்களிடம் இருந்து தனிமடல் எல்லாம் வராது!

அவர் எழுதும் பதிவெல்லாத்தையும் நீங்கள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!

அக்னி
03-05-2007, 02:45 AM
நன்றி சுபன். உங்களைத்தான் அறிஞர் அவர்கள் சிபாரிசு செய்திருந்தார்கள். இப்பொழுது தெளிவாக விளங்கிவிட்டது.

அறிஞர்
03-05-2007, 12:23 PM
தொடர்ந்து சுபன் தளம் வந்து... அனைவருக்கும் உதவுவார் என எண்ணுகிறேன்.