PDA

View Full Version : புதுமைப் பெண்

ஷீ-நிசி
30-04-2007, 03:31 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/bharathi_bday2.jpg

எட்டி நிற்கும்
நிலவு மட்டுமல்ல,
சுட்டெரிக்கும்
சூரியனும் தான் நீ!!

முகமூடிகளை
அணியாதவள்!
முகம் வாடி தலை
குனியாதவள்!

உன் விரல் சிந்தும்
வார்த்தைகளோ
ஞானிகளின் ரகம்!

உன் இதழ் சிந்தும்
புன்னகைகளோ,
ராணிகளின் ரகம்!

வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

மறுபாதி,
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்!

தமிழ் மொழியென்றால்
உன் விழிகளிரண்டும்
பரவசமடையும்!

கலாச்சாரமும், பண்பாடும்
உன் மொழிகளிலின்று
மறு பிரசவமடையும்!

இன்று!
பாரதியிருந்தால்
சொல்லியிருப்பான் -நீதான்
புதுமைப் பெண்னென்று!

அன்று,
சொன்னவளுக்கு
இட்டிருப்பான் பேரை
முதுமைப் பெண்னென்று!

ஓவியன்
30-04-2007, 04:10 AM
அடடா அருமை ஷீ-நிசி!!
யார் அந்த புதுமைப் பெண் என்பதனை மட்டும் சொல்லாமலே,
ஊகத்திற்கு விட்டது அருமையிலும் அருமை
வாசிப்போர் எல்லோருக்கும் மனதில் ஒரு பிம்பம் தோன்றும்
அப்படித் தோன்றின் அது இந்த கவியின் வெற்றிக்கு மேலும் ஆதாரம்.
எனக்கும் தோன்றியது - வாழ்த்துக்கள்
உன் விரல் சிந்தும்
வார்த்தைகளோ
ஞானிகளின் ரகம்!

உன் இதழ் சிந்தும்
புன்னகைகளோ,
ராணிகளின் ரகம்!

வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

மறுபாதி,
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்!

ஓவியன்
30-04-2007, 04:14 AM
ஷீ-நீசி அந்த பாரதியாரின் கோட்டோவியம் உங்கள் கை வண்ணம் தானே அதற்கும் எனது பாராட்டுக்கள்.

கோடுகளைச் சிக்கனமாகப் பாவிக்கும் உங்கள் திறமை ஒன்றே போதும் உங்களை நல்லதொரு ஓவியனாகவும் வெளிப்படுத்த.

ஷீ-நிசி
30-04-2007, 04:19 AM
அடடா அருமை ஷீ-நிசி!!
யார் அந்த புதுமைப் பெண் என்பதனை மட்டும் சொல்லாமலே,
ஊகத்திற்கு விட்டது அருமையிலும் அருமை
வாசிப்போர் எல்லோருக்கும் மனதில் ஒரு பிம்பம் தோன்றும்
அப்படித் தோன்றின் அது இந்த கவியின் வெற்றிக்கு மேலும் ஆதாரம்.
எனக்கும் தோன்றியது - வாழ்த்துக்கள்

நன்றி ஓவியன்.. ஊகங்களுக்கு விட்டிருக்கிறேன் என்று நீங்கள் சொன்னது நான் என்ன நினைத்தேனோ அதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்...

ஷீ-நீசி அந்த பாரதியாரின் கோட்டோவியம் உங்கள் கை வண்ணம் தானே அதற்கும் எனது பாராட்டுக்கள்.

கோடுகளைச் சிக்கனமாகப் பாவிக்கும் உங்கள் திறமை ஒன்றே போதும் உங்களை நல்லதொரு ஓவியனாகவும் வெளிப்படுத்த.

ஐயய்யோ இல்லை ஓவியரே! நெட்டிலிருந்து சுட்டது அந்த பாரதியாரின் படம்! ஆனால் இதை அப்படியே பார்த்து என்னால் வரைய முடியும்...

ஓவியன்
30-04-2007, 04:28 AM
ஐயய்யோ இல்லை ஓவியரே! நெட்டிலிருந்து சுட்டது அந்த பாரதியாரின் படம்! ஆனால் இதை அப்படியே பார்த்து என்னால் வரைய முடியும்...

பரவாயில்லை நீங்கள் ஓரு ஓவியரும் கூட என்று தெரிந்தமையால் தான் அப்படிக் கூறினேன்.

அக்னி
30-04-2007, 11:40 AM
பாரதி கண்ட புதுமைப் பெண்...
அது... அன்று..,
பெண்விடுதலையின் தொடக்கம்...
ஷீ-நிசி காணுகின்ற புதுமைப் பெண்...
இது... இன்று..,
பெண்கொண்ட சிறப்புக்களின் அடக்கம்...

மேலும், உங்கள் தமிழ் தளைத்தோங்கட்டும்...

ஷீ-நிசி
30-04-2007, 03:39 PM
பாரதி கண்ட புதுமைப் பெண்...
அது... அன்று..,
பெண்விடுதலையின் தொடக்கம்...
ஷீ-நிசி காணுகின்ற புதுமைப் பெண்...
இது... இன்று..,
பெண்கொண்ட சிறப்புக்களின் அடக்கம்...

மேலும், உங்கள் தமிழ் தளைத்தோங்கட்டும்...

நன்றி அக்னி.....

அன்புரசிகன்
30-04-2007, 04:21 PM
இந்த மரமண்டைக்கு இலகுவாக விளங்கிய கவி. பாராட்டுக்கள் நிஷி.

அன்று மட்டுமல்ல இன்றுமே முதுமைபெண்கள் உள்ளனர். ஆனாலும் சிலர் தத்துவம் கூறுகின்றனர். தமது மனைவிமாரை அடக்கியாழ்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.

ஷீ-நிசி
30-04-2007, 04:31 PM
இந்த மரமண்டைக்கு இலகுவாக விளங்கிய கவி. பாராட்டுக்கள் நிஷி.

அன்று மட்டுமல்ல இன்றுமே முதுமைபெண்கள் உள்ளனர். ஆனாலும் சிலர் தத்துவம் கூறுகின்றனர். தமது மனைவிமாரை அடக்கியாழ்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.

நன்றி அன்புரசிகரே!

சக்தி
01-05-2007, 01:26 PM
புதுமைப்பெண்
யாரவள்
எங்கே இருக்கிறாள்
பாரதி முதல்
ஷீ-நிஷி வரை
தேடிக்கொண்டிருக்கிறோம்
கவிதைகளில் மட்டும்.
மதம், இனம், ஜாதி
இவைகளைத் தாண்டி
ஒரு புதுமைப்பெண்?????
ம்ம்ம்(மனதின் ஏக்கப் பெருமூச்சு)
கனவு மெய்ப்பட வேண்டும்
ஆம்
பாரதி,ஷீ-நிஷி மற்றும்
நமது கனவும்
மெய்ப்படவேண்டும்.

ஷீ-நிசி
01-05-2007, 03:19 PM
நன்றி ரோஜாராஜா....

ஓவியா
01-05-2007, 09:51 PM
வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

மறுபாதி,
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்!

ஷி,

இதை கொஞ்சம் விளக்குங்களேன். பின் விமர்சனம் போடுகிறேன்.

நன்றி.

ஷீ-நிசி
02-05-2007, 11:01 AM
ஷி,

இதை கொஞ்சம் விளக்குங்களேன். பின் விமர்சனம் போடுகிறேன்.

நன்றி.

ஓவியா! உங்களின் கேள்வியை நான் இன்றுதான் பார்த்தேன்.. யாராகிலும் கேட்பார்களா இந்தக் கேள்வியை என்று எதிர்பார்த்தேன்... யாருமே கேட்காமல் போயிருந்தால்தான் ஆச்சரியபட்டிருப்பேன்...
---------------------------------------------------
வாழ்வின் ஒரு பாதி என்பது திருமணத்திற்கு முன்...

ஒரு ஞானிக்கு உகந்த பேச்சுத்திறன், அவள் பக்கத்தில் இருந்தாலே நம் மனது புத்துயிர் பெறும், உள்ளம் சுத்தம் பெறுகின்ற நிலை.. தத்துவ பேச்சுக்கள் என்று அவளுக்கு யாரும் விளக்கி கற்றுத்தராத போதிலும் ஒரு குயிலினைப் போல, மீன் குஞ்சினைப் போல.... பெற்றுக்கொண்டவள்...

வாழ்வின் ஒரு பாதி
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

வாழ்வின் மறு பாதி என்பது திருமணத்திற்கு பின்...

திருமணம் ஆகாமலேயே, ஒரு மனைவியாய் எப்படி இந்த சமூகத்தில் ஒழுக்கமாய் இருந்திடல் வேண்டும், கணவனுக்கும், குழந்தைகளுக்கும் எத்தனை உண்மையாய் இருந்திடல் வேண்டும்..ஒழுக்கமும், கண்ணியமுமாய் எப்படி வாழ்ந்திடல் வேண்டும், உயரிய நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், பட்டப் படிப்புகள் படித்த போதிலும், திருமணத்திற்கு முன்பாய் எந்த பாலியல் உறவுகளுக்கும் இடம் தராமலும் வாழ்ந்திடல் வேண்டும் என்ற ஒழுக்க சிந்தனையை அவள் மனம் கற்றிருக்கிறது.. திருமணம் என்ற உறவை அவள் பெறாதபோதிலும், அது கிடைத்தபிறகு எப்படி வாழ்ந்திடல் வேண்டும் என்று கற்றுக்கொண்டிருக்கிறாள்..

அதுதான்..

மறு பாதி
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்....

உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன் ஓவியா...

ஆதவா
02-05-2007, 11:21 AM
என் மனதில் இருந்ததை அப்படியே சொல்லுகிறேன்... இக்கவிதை படித்ததும் எனக்கு ஒருவர் ஞாபகம் வருகிறார்... அவராக இருக்கலாம்.. அதாவது அவரை நினைவிலிருத்தி எழுதப்பட்ட கவிதையாகத் தோணுகிறது.

தாமத விமர்சனத்தின் பலன் எனக்குத் தெரிகிறது. அனைவரும் வந்து படித்துவிட்டனர்... மன்னிக்க ஷீ!

பல கருத்துக்கள் அடங்கியிருக்கிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்களும் காணாத பெண்களும் இங்கே உள்ளார்கள்.. இன்றையை அவசர தேவை... புதுமைப்பெண்கள்தாம்... அடக்கப்படும் ஆண்வர்க்கத்திற்கு நிரந்தர ஓய்வும் தரப்படவேண்டும்..

அழகிய கவிதை... புரியும்படியான கவிதை.. ஓவியா அவர்கள் கேட்ட இடங்களுக்குச் சரியான விளக்கம்....

ஆனால் ஏன் கேட்டார்???

ஷீ-நிசி
02-05-2007, 11:25 AM
நன்றி ஆதவா,

தாமத விமர்சனத்தின் பலன் நன்றாகவே தெரிகிறது ஆதவா.. உம் விமர்சனம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.. பரவாயில்லை,

நீங்கள் சொல்வது போல் இன்றைய யுகத்திற்கு புதுமை பெண்கள் தேவைதான்..

ஓவியா
03-05-2007, 02:02 AM
நல்ல சமுதய சிந்தையை தூண்டும் கவிதை.

கவிதை புரிந்தது. விளக்கதிற்க்கு நன்றி.

பாரதியேங்கிய அந்த புதுமைப்பெண்கள் தினமும் பிறக்கின்றனர், பின் சில காரணங்களால் அவர்களே அவர்களின் எண்ணாங்களையும் புதைக்கின்றனர்.

என் ஆதங்கம் எல்லாம், பெரும்பாலும் மக்கள் தத்துவம் கூறுகின்றனர். ஆனால் அவர்தம் வீட்டு பெண்களையெல்லாம் அடக்கியாழ்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.

ஷீ-நிசி
03-05-2007, 03:33 AM

நன்றி ஓவியா! 100% சரியே..........

ஓவியா
03-05-2007, 03:37 AM
நன்றி ஓவியா! 100% சரியே..........

நன்றி. ஷீ, உங்க கையால் 100% வாங்கினா!!!!!!!!!

நாந்தான் பாரதி காணா புதுமைப்பெண்ணோ!!!!!!

ஷீ-நிசி
03-05-2007, 03:59 AM
நன்றி. ஷீ, உங்க கையால் 100% வாங்கினா!!!!!!!!!

நாந்தான் பாரதி காணா புதுமைப்பெண்ணோ!!!!!!

என்னைப் பொருத்தவரையில்... நீங்களும் ஒரு புதுமைப் பெண்தான்....

ஓவியா
03-05-2007, 04:18 AM
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி.

தமிழ் மன்றதிற்க்கு வரும் முன் நானும் ஒரு பாரதி காணா புதுமைப்பெண்னே,

ஆனால் இப்பொழுது இல்லை....

poo
03-05-2007, 08:35 AM
பாராட்டுக்கள் நண்பரே...

புதுமைப்பெண்ணிற்கான இலக்கணங்கள் இவைதானென வரையறுத்து சொல்வதென்பது கடினம்.. கால மாற்றங்களுக்கேற்ப .. பழயன கழிதலும், புதியன புகுதலும் என்பதுபோல.. மாறிக் கொண்டே இருக்கிறது... ஆனாலும் அன்று கனாக்கண்ட பாரதிக்கும்கூட கொஞ்சம் ஏமாற்றங்களை விட்டுவைத்திருப்பதைப்போல.. நாளை நமக்கும்..

ஷீ-நிசி
03-05-2007, 08:51 AM

நிதர்சனமான விமர்சனம் நண்பரே! நன்றி பூ