PDA

View Full Version : இன்றைய காதல் ஸ்பெஷல்..!



அக்னி
29-04-2007, 08:35 PM
http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/My poems/j7.jpg

உன்னை முத்தமிட
காத்திருந்த இதழ்கள்...

உன்னைச் சுட்டியபடி
இறுகிப்போன விரல்கள்...

உன்னை அடைவதற்காய்
அடிவைத்த பாதங்கள்...

உன்னை தாங்குவதற்காய்
மெத்தையான நெஞ்சம்...

இவற்றுடன்..,
உன் உருவோடு,
கண்ணீர் கருக்கட்டிப்போன
விழிகள்...
உன் நினைவோடு,
குருதி உறைந்துபோன
இதயம்...

மொத்தத்தில்..,
நீ தந்த தீயில்... தீய்ந்துபோன..,
உயிர்கொண்ட என்னுடல்...
பதமாக..!

ஓவியன்
30-04-2007, 05:46 AM
அட!
உங்களை அக்னியாக மாற்ற்றியதும் ஒரு காதலா??
இலகுவான வரிகள் இயல்பாக ஓடுவது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே



இவற்றுடன்..,
உன் உருவோடு,
கண்ணீர் கருக்கட்டிப்போன
விழிகள்...
உன் நினைவோடு,
குருதி உறைந்துபோன
இதயம்

மொத்தத்தில்..,
நீ தந்த தீயில்... தீய்ந்துபோன..,
உயிர்கொண்ட என்னுடல்
பதமாக..!

அக்னி
01-05-2007, 06:50 AM
ஒரு வகையில்... ஓவியன்!

என்னை பற்றிக் கொண்டதும்...
நானும் பற்றிக் கொண்டேன்...
பற்றிக் கொண்டது.., அணைய மறுக்கிறது...

சுட்டிபையன்
01-05-2007, 06:51 AM
அழகாகத்தானிருக்கு உங்கள் காத ஸ்பெஷல்

ஷீ-நிசி
01-05-2007, 07:04 AM
மிகவும் நன்றாகவே இருக்கிறது.. நண்பரே! வேதனைகளே வார்த்தையாய்.. அழகாக.... தொடருங்கள்..

மயூ
01-05-2007, 09:18 AM
பெயருக்கும்.. கவிதைக்கும் என்ன ஒற்றுமை...
காதல் தான் கவிஞர்களை உருவாக்குகின்றது என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் நண்பா!

அக்னி
01-05-2007, 06:23 PM
பெயருக்கும்.. கவிதைக்கும் என்ன ஒற்றுமை...
காதல் தான் கவிஞர்களை உருவாக்குகின்றது என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் நண்பா!

காதல் மட்டுமல்ல நண்பா, வாழ்வின் யதார்த்தங்களும், சோகங்களும், சுகானுபங்களும் கூட வார்த்தைகளை உருவகிக்கும்...

ஓவியா
01-05-2007, 09:43 PM
என்னை பற்றிக் கொண்டதும்...
நானும் பற்றிக் கொண்டேன்...
பற்றிக் கொண்டது.., அணைய மறுக்கிறது...

சூப்பர்.....



உன் நினைவோடு,
குருதி உறைந்துபோன
இதயம்

மொத்தத்தில்..,
நீ தந்த தீயில்... தீய்ந்துபோன..,
உயிர்கொண்ட என்னுடல்
பதமாக..!


இந்த வரிகள் அருமை.
காதல் ரணம் யாருகில்லை?? நல்ல வலியுல்ல கவிதை.

தொடருங்கள்.

அக்னி
03-05-2007, 01:22 AM
தொடருங்கள்.

நன்றி ஓவியா உங்கள் ஊக்குவிப்புக்கு...

அமரன்
26-05-2007, 05:35 PM
வேதனைகளைக்கூட அழகாகச் சொல்ல கவிதை ஒரு சிறந்த கருவி. அதை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றீர்கள் அக்னி. எளிதில் புரியக்கூடிய வரிகள். ஆனால் கனத்த கருத்துள்ள வரிகள். பாராட்டுகளும் நன்றிகளும்.

அக்னி
12-06-2007, 12:52 AM
வேதனைகளைக்கூட அழகாகச் சொல்ல கவிதை ஒரு சிறந்த கருவி. அதை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றீர்கள் அக்னி. எளிதில் புரியக்கூடிய வரிகள். ஆனால் கனத்த கருத்துள்ள வரிகள். பாராட்டுகளும் நன்றிகளும்.
ரசிப்புக்கு எனது நன்றி நண்பா...