PDA

View Full Version : பாமினியிலிருந்து யுனிக்கோட்...

அக்னி
29-04-2007, 12:32 PM
பாமினி தமிழ் எழுத்துருவிலுள்ளதை எவ்வாறு யுனிக்கோட் எழுத்துருவாக மாற்றலாம்..?
யாரேனும் விளக்குங்களேன்...

ஓவியன்
29-04-2007, 12:37 PM
முடியும் எண்டு நினைக்கவில்லை, யாராவது விடையுடன் வந்தால் எனக்கும் பயன் தரும்.

இராசகுமாரன்
29-04-2007, 02:38 PM
முடியும் எண்டு நினைக்கவில்லை, யாராவது விடையுடன் வந்தால் எனக்கும் பயன் தரும்.
என்ன நண்பரே அப்படி கூறிவிட்டீர்கள்?

நமது மன்றத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கு கீழேயும் (footer-ல்) உள்ள "யூனிகோட் கன்வர்ட்டர்" பிறகு எதற்கு உள்ளது?

செய்முறை விளக்கம்:

1) திஸ்கி, பாமினி, அஞ்சல், மயிலை மற்றும் தங்கிலீஷில் இடது புறம் தட்டச்சு செய்யுங்கள் அல்லது நகலெடுத்துப் பதியுங்கள்,

2) பிறகு நடுவில் உள்ள தேவையான (Bamini) பட்டனை அழுத்துங்கள்,

3) உங்களுக்கு வலது புறம் யூனிகோட் எழுத்துருவாக மாற்றம் செய்யப் பட்டு கிடைக்கும்.

அன்புரசிகன்
29-04-2007, 02:56 PM
பாமினி கீ மான் உள்ளதே. மன்றத்தில் கீழ்ப்பகுதியிலும் உள்ளது.
பாமிகி கீ மான் இற்கு இங்கே (http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=4) சொடுக்கவும்.
மேலும் உதவி தேவையாயின் தனிமடலில் தொடர்பு கொள்ளவும். என்னிடம் மாற்றீடு மென்பொருள் உள்ளது.

அக்னி
29-04-2007, 03:12 PM
எனக்கு சரியாக வரவில்லை.
உதாரணமாக,
"வணக்கம்" என்பதை MS word இல் Bamini யில் எழுதி, பிரதி செய்து, நகலெடுத்து இங்குள்ள மாற்றியில் யுனிக்கோட் ஆக மாற்றும்போது "வணக்கம்" இவ்வாறு வருகின்றது. ஏன் என்று புரியவில்லை.

மனோஜ்
29-04-2007, 04:19 PM
அக்னி ரசிகர் கொடுத்த சுட்டியில் உள்ள இகலப்பையை பயன்படுத்துங்கள்

அக்னி
29-04-2007, 07:38 PM
தகவலுக்கு நன்றி...

எனக்கு சரியாக வரவில்லை.
உதாரணமாக,
"வணக்கம்" என்பதை MS word இல் Bamini யில் எழுதி, பிரதி செய்து, நகலெடுத்து இங்குள்ள மாற்றியில் யுனிக்கோட் ஆக மாற்றும்போது "வணக்கம்" இவ்வாறு வருகின்றது. ஏன் என்று புரியவில்லை.

என்னிடம் யுனிகோட் மாற்றி மென்பொருள் ஏற்கனவே உள்ளது. Bamini யில் MS word இலுள்ள ஒரு பதிப்பை எவ்வாறு யுனிகோட் ஆக மாற்றுவது? நான் தமிழ்மன்றத்திலுள்ள மாற்றியில் மாற்றும்போது மேலே சொன்னவாறு பிரச்சினை வருகின்றது. இதுதான் ஏன் என்று புரியவில்லை. தயவு செய்து இதற்கு தேர்வு தாருங்கள்.

அன்புரசிகன்
29-04-2007, 07:43 PM

உங்களின் தனிமடலை சோதிக்கவும்.

leomohan

சரி இந்த தொடுப்பில் முயற்சி செய்யுங்கள்

Http://www.suratha.com/reader.htm

அக்னி
29-04-2007, 08:22 PM
உங்களின் தனிமடலை சோதிக்கவும்.

"வணக்கம்"
மேலேயுள்ள வணக்கம் உங்களுக்கு, நீங்கள் தந்த மென்பொருளில் மாற்றியது. விளங்குகின்றதா..?

அக்னி
29-04-2007, 08:23 PM
தகவல்களுக்கு நன்றி நண்பர்களே...