PDA

View Full Version : காதலித்தால்lolluvathiyar
29-04-2007, 08:11 AM
காதலித்தால்
இன்பம் வரும்

காதலை வெளிபடுத்தினால்
கவிதை வரும்

காதல் மறுக்க பட்டால்
செருப்பு வரும்

காதல் ஏற்க பட்டால்
பாட்டு வரும்

காதலி பிரிந்து விட்டால்
தாடி வரும்

காதலி அப்பனுக்கு தெரிந்தால்
பிரச்சனை வரும்

காதல் திருமனத்தில் முடிந்தால்
அனைத்து துன்பமும் ஒரு சேர வரும்

காதலிப்பரை வேடிக்கை பார்த்தால்
சிரிப்பு வரும்


தமிழ் மன்ற நேயர்களே இது நான் பதித்த
முதல் கவிதை
(நான் கவிதை என்று அழைத்து விட்டேன், நீங்கள் எப்படி அழைகிறீர்கள்)
மன்ற கவிகள் என் முதல் கவிக்கு குட்டு வைக்க அழைக்கிறேன்

ஓவியன்
29-04-2007, 08:21 AM
வாத்தியாரின் முதல் கவிதைக்கு:icon_rollout: எனது வாழ்த்துக்கள்!

அப்படியே சொந்த அனுபவத்தை எடுத்து வரிகளாக்கியுள்ளீர்கள் போல!
பலே, பலே!:icon_blush:

சுட்டிபையன்
29-04-2007, 08:43 AM
வாத்தியார் வித்தியாசமாக யோசித்து கவிதை எழுதி இருக்குறீர்கள்
மேலும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்


வாத்தியாரின் முதல் கவிதைக்கு:icon_rollout: எனது வாழ்த்துக்கள்!

அப்படியே சொந்த அனுபவத்தை எடுத்து வரிகளாக்கியுள்ளீர்கள் போல!
பலே, பலே!:icon_blush:


அவருக்கு இருக்கோ இல்லையோ உங்களுக்கு இருக்கு போல:lachen001: :sport-smiley-013:

ஓவியா
01-05-2007, 07:16 PM
காதலித்தால்
இன்பம் வரும்
ஆமாம். அம்மா திட்டினாலும் புன்னகையாகாவே காட்சியளிக்கும் முகம்.


காதலை வெளிபடுத்தினால்
கவிதை வரும்
அதே அதே, கவிதை போட்டியிலே பரிசுகூட வீடு தேடி வரும்.


காதல் மறுக்க பட்டால்
செருப்பு வரும்
இப்பவேல்லாம் இது கம்மி, இ-மெய்ல் தான் வருது.
(எதுக்கும் ஒரு வார்த்தை ஆதவாய் கேளுங்களேன்)


காதல் ஏற்க பட்டால்
பாட்டு வரும்
ஆமாம். பாட்டுக்கு பாட்டில், திரைப்பட பாடல்களின் வரியில்.


காதலி பிரிந்து விட்டால்
தாடி வரும்
ஆமாம். சேவிங் கத்தி வாங்க கூட பைசா இருக்கதாம் , எல்லாம் ஐஸ்கிரின் பாலரில் முடிந்ததாம்.


காதலி அப்பனுக்கு தெரிந்தால்
பிரச்சனை வரும்
அப்பனா சும்மாவா!!!!!!!, தீட்டிவச்ச அருவா ஒரு முறையாவது சர்வீஸ் செய்ய வேண்டாம்
(ஆமாம். காதல் தெரியும் முன்னவே, வீடு தேடி பெண் கேட்டுங்க, மானஸ்தானா காட்டிகுங்க)


காதல் திருமனத்தில் முடிந்தால்
அனைத்து துன்பமும் ஒரு சேர வரும்
மனைவியின் அன்புத்தொல்லை, குழந்தயின் மாழலைகுரல், பெரியவர்களின் ஆசிர்வாதம், நோயில் மருந்து கொடுக்க, இன்பத்துன்பதில் பங்கு கொள்ள ஒரு ஜீவான்......அனைத்து துன்பமும் ஒரு சேர வரும். சரியா சொன்னீங்க
ஹி ஹி ஹி துன்பம் வரும் பொழுது சிரிக்கனும்.
(ஆமாம். சம்சாரம், குழந்தை, காவல் நாய்க்குட்டி, மாமியார், மாமனார்)

காதலிப்பரை வேடிக்கை பார்த்தால்
சிரிப்பு வரும்
இதுதான் 100% சரி. நம்பவில்லை என்றால் முகத்தை கண்ணாடியில் கானுங்கள் தெரியும். (மூகம்= பிரதீப் முகம்)
நான் கண்ணாடியில் கண்டேன் இது உண்மையே


தமிழ் மன்ற நேயர்களே இது நான் பதித்த
முதல் கவிதை
(நான் கவிதை என்று அழைத்து விட்டேன், நீங்கள் எப்படி அழைகிறீர்கள்)
மன்ற கவிகள் என் முதல் கவிக்கு குட்டு வைக்க அழைக்கிறேன்


அடடே கவிதை நல்லா இருக்கு சார்.

சபாஷ் அண்ணா.

இது 99% உண்மையே!!! நான் கவிதையை ரசித்தேன்.

சக்தி
01-05-2007, 07:32 PM
கவிதை ரசிக்கும் படியும் சிரிக்கும் படியும் உள்ளது. இதுதான் விகடகவியோ?

அக்னி
01-05-2007, 07:32 PM
எளிய நடையில், மனதை குளிர்விக்கிறது வாத்தியாரே... கன்னி முயற்சியிலேயே கவர்ந்துவிட்டீர்கள். தொடர்ந்து படையுங்கள்...

அன்புரசிகன்
01-05-2007, 07:39 PM
காதலிப்பரை வேடிக்கை பார்த்தால்
சிரிப்பு வரும்

எனக்கு இந்தச்சிரிப்பில் நிறைய அனுபவம் உண்டு. அவர்களுடைய பம்மல்களை நினைத்துக்கொண்டு இருருந்தால் எமக்கு தூக்கம் வராது. ஓரே சிரிப்பாகத்தான் இருக்கும்.

வாத்தியாரின் கவிக்கு நன்றி + பாராட்டுக்கள்.

ஆதவா
02-05-2007, 12:16 PM
வாத்தியாரே!!! முதல் கவிதையா?? பிரமாதம் போங்கள்.. உள்ளதை அப்படியே சொல்லியிருக்கிறீர்களே!

இதைக் கவிதை என்றழைக்காமல் வேறென்னவென்றழைக்க? அருமை.. சும்மா பிச்சி உதறீட்டீங்க.. தூள்...

முதல் கவிதை என்பதால் விமர்சனமில்லை... இன்னும் எழுதுங்கள்... இரத்தம் ஒழுகும் பேனாவோடு காத்திருக்கிறேன்...

(ஓவியா அவர்களே!! என்னை மாட்டிவிடப் பார்க்கிறீர்களா? அது நடக்குமா? )

கண்மணி
02-05-2007, 12:25 PM
வரும் வருமென
உறுமிச் சொன்னாலும்

காதல்.. காத தூரம் தள்...

lolluvathiyar
02-05-2007, 04:48 PM
என் திறமையே உரைநடையில் தத்துவம் பேசுவதுதான்
எனக்கு இதுவரை சுத்தமாக சம்மந்தம் இல்லாமல் இருந்தது கவிதை
கூச்சபடாமல் கூறுகிறேன்,
எனக்கு இதுவரை கவிதை எழுதவும் தெரியாது
தமிழ் மன்றம் வந்தவுடன் கவிதை ரசித்து படிக்கவும் தெரியாது

சும்மா ஒருதடவை எழுதிதான் பார்க்கலாம்
எழுதினா இந்த கவிதைக்கு கூட இத்தனை பாராட்டிய
மண்ற மூத்த கவிஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் நண்றி

மனோஜ்
02-05-2007, 05:01 PM
வாத்தியார் நல்லவாத்தியார்
வாழ்க்கை படியை கவிதை ஆக்கிய வாத்தியர்
வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
02-05-2007, 05:29 PM
வாத்தியாரே! உங்கள் கவிதையில் நீங்கள் அறியாமலே ஒரு ஸ்டைல் உருவாக்கியிருக்கிறீர்கள்...


முதலாம் வரிகளை மாற்றாமல், இரண்டாம் வரிகளை மட்டும் மாற்றி.. பல ஸ்டைல்கள் உள்ளன... பழக பழக எல்லாம் சுலபமாகிவிடும்.. வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

lolluvathiyar
11-05-2007, 03:33 PM
என் கவிதைக்கு எடுத்து காட்டு
இட்ட தங்கை ஓவியாவுக்கு நண்றி

அரசன்
12-05-2007, 12:49 PM
காமெடி கவிதையாக இருக்குங்கோ!
நகையும் ஒரு ரசம் தானே. உணர்வுபூர்வமாக யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம். நகைச்சுவையோடு எழுதுவது சற்று சிரமம்தான். அதையே செய்துவிட்டீர்கள். பிறகென்ன தூள் கிளப்புங்கோ!

ஓவியா
12-05-2007, 01:03 PM
என் கவிதைக்கு எடுத்து காட்டு
இட்ட தங்கை ஓவியாவுக்கு நண்றி

அண்ணா
உங்க முதல்கவிதை மெய்யாலுமே சூப்பர்தான்.

அமரன்
16-05-2007, 03:17 PM
கலக்கிட்டீங்க வாத்தியாரே. காதலை அழகாக அனுபவித்துச் சொல்லியுள்ளீர்கள். எனது அனுபவம் இதோ

கடிதம் கொடுத்த காதலியிடம்
கன்னத்தில் வாங்குவோர் இருவர்
ஒருவர் காதலன்
மற்றவர்
காதலனின் நண்பன்
எழுதியவனுக்கு முத்தம்
கொடுத்தவனுக்கு அடியா?

lolluvathiyar
08-07-2007, 08:05 AM
இன்னும் எழுதுங்கள்... இரத்தம் ஒழுகும் பேனாவோடு காத்திருக்கிறேன்...

இர்த்தம் ஒழுகும் பேனாவா?
இரத்தம் வாங்கும் பேனாவா?

பிச்சி
08-07-2007, 08:09 AM
அண்ணா... கவிதை பன்டாஸ்டிக்.. கிண்டல் பண்றமாதிரி இருந்தாலும் அருமையா எழுதியிருக்கீங்க.

lolluvathiyar
09-07-2007, 02:32 PM
வரும் வருமென
உறுமிச் சொன்னாலும் காதல்.. காத தூரம் தள்...

என்ன கன்மனி உங்கள் பின்னூட்டம் துளியும் சம்மந்தமில்லாமல் இருகிறதே

அரசன்
09-07-2007, 02:35 PM
கவிதையை காமெடியைப் போல் கூறி கடைசி வரியில் ஒரு உண்மையையும் கூறிவிட்டீர்கள்.

யவனிகா
18-11-2007, 08:46 AM
என்னங்கண்ணா போற போக்கப் பாத்தா நம்ம மன்றத்துக் கவிராயர்களையெல்லாம் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருவீங்க போல...கவி மழை பொழியுங்கள்..நனைந்து ஜல்ப்பு புடிக்குதா பாக்கலாம்?

சூரியன்
18-11-2007, 11:45 AM
அழகான கவிதை வாத்தியார் அண்ணா..

ஆதி
18-11-2007, 04:25 PM
[QUOTE=lolluvathiyar;198772
காதலி பிரிந்து விட்டால்
தாடி வரும்

காதலி அப்பனுக்கு தெரிந்தால்
பிரச்சனை வரும்

காதல் திருமனத்தில் முடிந்தால்
அனைத்து துன்பமும் ஒரு சேர வரும்

லொள்ளுவாத்தியார் என்ற பெயருக்கு ஏற்ற மாதிரியான வரிகள் இவை..


காதலி அப்பனுக்கு தெரிந்தால்
பிரச்சனை வரும்

அதிலும் இந்த வரியை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான்..
இரவில் தூங்கும் முன் கூட இதை நினைத்துதான் சிரித்துக்கொண்டு இருந்தேன்..

உண்மையில் கவிதையில் சிரிக்கவைத்து சிந்திக்கும் கருத்துக்களை வைத்தால் அது ஆழமாய் பாயும் படிப்பவர் மனதில்..

அழகிய கவிதை.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..


நண்றி ஆதி

kavitha
19-11-2007, 08:07 AM
நீங்க சினிமாவிற்கு கானா பாட்டுப்பாடக்கூட போகலாம். அந்த அளவிற்கு சூப்பர்.

இளசு
19-11-2007, 07:33 PM
காதலின் ஒருபக்கம் சொல்ல கவிஞர்கள் ஆயிரமுண்டு
காதலின் மறுபக்கம் சொல்ல வாத்தியார்போல் சிலரே உண்டு..

பாராட்டுகள் நண்பரே!