PDA

View Full Version : வீட்டு வைத்தியம்!



அரசன்
28-04-2007, 05:55 PM
இப்பகுதியில் நான் படித்து தெரிந்து கொண்ட சில வைத்திய முறைகளை பதிவிடுகிறேன்.

சீரகம் 1 பங்கு, ஓமம் 2 பங்கு எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து சோறு வெந்து கொண்டிருக்கும் பாத்திரத்தில் போட்டு விட வேண்டும். சாதம் வடித்த பிறகு துணியில் உள்ள சீரகம், ஓமத்தை எடுத்து, நன்றாக நுணுக்கி, தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்க நாட்பட்ட சளி தீரும்.

தர்ப்பூசணி பழத்துடன் எலுமிச்சைச்சாறு கலந்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், பித்தம் மொத்தமாக விலகும்.

:food-smiley-011: :icon_tongue:

நன்றி: முத்தாரம்

ஓவியா
28-04-2007, 07:27 PM
பதிவுக்கு நன்றி.

வைத்தியம் என்பதால் புத்தகத்தின் பெயரை மறவாமல் குறிப்பிடுங்களேன், குறிப்புகள் பிடித்திருந்தால் ஒரு புத்தகத்தை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளாம்.

அரசன்
28-04-2007, 07:32 PM
பதிவுக்கு நன்றி.

வைத்தியம் என்பதால் புத்தகத்தின் பெயரை மறவாமல் குறிப்பிடுங்களேன், குறிப்புகள் பிடித்திருந்தால் ஒரு புத்தகத்தை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளாம்.

தக்க தருணத்தில் சொன்னீர்கள். நன்றி!

ஓவியா
28-04-2007, 07:39 PM
ஹி ஹி ஹி

அதான் ஓவி.

அன்புரசிகன்
28-04-2007, 08:14 PM
மலச்சிக்கல்களுக்கு பழங்கள் சரிப்பட்டு வராவிட்டால் முந்திரிவத்தலை வென்னித்தண்ணியில் ஊறப்போட்டு சாற்றைக்குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.

அரசன்
29-04-2007, 04:20 AM
பிள்ளைப் பேற்றுக்குப் பின் வயிரு பெருகாமல் இருக்க, தினசரி நான்கைந்து ஏலக்காயைத் தூள் செய்து ஒரு கோப்பை சுடுநீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டி இளம் சூட்டோடு குடித்து வர வேண்டும்.

சேற்றுப்புண் உள்ள இடத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு, கடுக்காயை சந்தனக் கல்லில் உரைத்து தடவி வந்தால் சேற்றுப்புண் நீங்கும்.

வெற்றிலை, ஓமம் இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருக வயிற்று பொருமல், வயிற்றுப்போக்கு நீங்கி விடும்.
:icon_hmm: :icon_hmm: :icon_hmm:

நன்றி: முத்தாரம்

அரசன்
30-04-2007, 04:58 PM
மது மற்றும் தீவிரமான மருந்துகளைச் சாப்பிட்டு ஈரல் பாதிக்கப்பட்டவர்கள் வெண்தாமரைப் பூவைக் குடிக்கும் நீரில் வைத்திருந்து குடித்து வர ஈரலில் வெப்பம் அகன்று உட்சூடு குறைந்து ஈரல் பலப்படும்.

அருகம்புல் சாற்றை அடிக்கடி பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கும். வயிற்றுப்புண், குடல்புண் நீங்கிவிடும்.

அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிடுவதால் கை, கால், மூட்டுவலி தீரும்.

இரண்டு வெற்றிலையுடன், இரண்டு கிராம்பு, ஒரு துண்டு சுக்கு வைத்து பால் தெளித்து நன்கு பொடியாக அரைத்து நெற்றியில் பத்துப்போட்டால் கடுமையான தலைவலி போய் விடும்.

:medium-smiley-029:

நன்றி: முத்தாரம்

அரசன்
01-05-2007, 04:42 PM
தொண்டைப் புண் இருந்தால் கவலை வேண்டாம். வெண்டைக்காயைக் கொதிக்கும் நீரில் போட்டு அதனுடைய ஆவியை நுகர்ந்தால் தொண்டை வலி தீரும்.

கீழாநெல்லிச்செடியின் வேரை வாயில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்தால், விக்கல் உடனே நிற்கும்.

வேர்க்குரு மீது வெங்காயச் சாற்றைத் தடவி வர வேர்க்குரு மரைந்து விடும். உடம்பு குளிர்ச்சியாகிவிடும்.

நெஞ்செரிச்சல் நீங்க சுத்தமான சந்தன கட்டையை நீர் விட்டரைத்து, சிறிதளவு எடுத்து ஒரு குவளை நீரில் கலக்கி சாப்பிட, நெஞ்செரிச்சல் நீங்கி விடும்.

அரசன்
02-05-2007, 11:29 AM
சுரைக்காய் மூளை பலம் பெற்றவும், சிறுநீர் கோளாறுகள் நீங்கவும், உடலில் உள்ள கெட்ட நீரைப் போக்கி உடலை இளைக்கவும் செய்யும்.

நன்னாரி வேரை நன்றாக மென்று தூப்பினாலே போதும். பல் நேய் ஏதும் வராது.

காராக் கருணையை சாப்பிடுபவர்களுக்கு நோயின் வேர் அறுபடும்.

நன்றி: முத்தாரம்

அரசன்
08-05-2007, 12:59 PM
நகச்சுற்று வந்து விட்டால் சுண்ணாம்பையும், பூண்டையும் தண்ணீர் விட்டரைத்து போட்டு வந்தால் நகச்சுற்று விரைவில் நீங்கும்.

அகத்திக் கீரையை பச்சையாக வாயில் போட்டு மென்று தின்றாலே வாய்ப்புன் மற்றும் வலி நீங்கிவிடும்.

நன்றி: அ. சாந்தி, முத்தாரம்

poo
09-05-2007, 05:37 AM
நகச்சுத்தி வைத்தியத்தைப் பார்த்ததும், கும்பிடப்போன தெய்வம் குறுக்கு வந்திடுச்சேன்னு மகிழ்ந்தேன் நண்பா...

பயனுள்ள குறிப்புகள்... தொடருங்கள்!

அரசன்
10-05-2007, 02:08 PM
கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு தேய்த்து வர முகப்பரு மறையும்.

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் தேய்த்து ஊறிய பின் கழுவி வர பருக்கள் மறையும்.

காரட், பீட்ருட் கிழங்குகளை சம அளவு சேர்த்து சூப் வைத்து தினமும் பருகினால் நோயிலிருந்து மீண்டவர்கள் அற்புதமான வகையில் சுறுசுறுப்படைவார்கள்.

சிறுநீர்க்கடுப்பு உள்ளவர்கள் நான்கைந்து சிறிய வெங்காயத்தைத் தின்று ஒரு குவளை மோர் குடித்தால் நலமாகும்.

நன்றி: பா. மலர், முத்தாரம்