PDA

View Full Version : அலைகள்

சுட்டிபையன்
28-04-2007, 10:33 AM
அலைகள்

மணிப்பூர், கடலும், வயலும் சேர்ந்த ஒரு அழகிய சிறிய ஊர். ஊரின் கடற்கைரையை அண்டி முத்துச் சேரி என்னும் மீனவக் கிராமமும், கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் வண்ணார்மலைக் கிராமமும் இருந்தது. வண்ணார்மலைக் கிராமத்தில் அநேகமாக ஏழை விவசாயிகளே இருந்தனர் மற்றும் ஒன்று, இரண்டு பிராமணர்கள் இருந்தனர். அவர்களே அந்தக் கிராமத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர்.

மணிப்பூர் தமிழ் மகாவித்தியாலயம். அதுதான் அந்த ஊருக்கு பொதுவான பாடசாலை, அங்கேதான் ராகேஷ் மற்றும் அவனது நண்பர்களான அர்விந், குகன்,பீற்றர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் உயர்தரம் இறுதியாண்டில் படித்தனர். ராகேஷ் வண்ணார்மலைக் கோவிலின் தலமைக் குருக்களின் ஒரே மகன்.அர்விந் மற்றும் குகனும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். பீற்றரும் ஜோர்ஜும் முத்துச் சேரியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஐவரும் இணைபிரியாத உயிர்த் தோழர்கள். அதே பாடசாலையில்த்தான் வண்ணார்மலையைச் சேர்ந்த எழை விவசாயியின் மகள் மீனாட்சியும் உயர் தரத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தாள். அவள் அறிவு அழகு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள்.

ஒரு நாள் ராகேஷ் பாடசாலைக்குச் செல்லும் போது மீனாட்சியின் சைக்கிள் பழுதடைந்து பாதி வழியில் நின்றாள். ராகேஷ்தான் உதவி செய்து அவளைப் பாடசாலைக்குச் கூட்டிச் சென்றான். அன்று எற்பட்ட நட்பு காலப்போக்கில் ராகேஷின் மனதில் காதலாக மாறியது. ராகேஷ் தனது காதலை மீனாட்சியிடம் கூறினான், ஆனாலும் மீனாட்சி அவன் காதலை ஏற்கவில்லை. அவன் குடும்பம் ஊரிலே செல்வாக்கான பணக்காரக் குடும்பம், தானோ எழை என்று காரணம் சொல்லி அவனது காதலை மறுத்தாள். அவனது இடைவிடாத முயற்ச்சியினால் இருதியில் அவன் காதல் வலையில் அவள் வீழ்ந்தாள்.

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள். பாடசாலையில், வகுப்பறையில், கோவில்,வயல் என்று இவர்கள் காதல் வளர்ந்த்து. காதல் வளர வளர சிறிது சிறிதாக வெளியே தெரியத் தொடங்கியது. முடிவில் ஊரில் வேலைவெட்டி இல்லத சிலரால் அவர்களது காதல் அவர்களின் வீட்டுக்கு தெரியப்படுத்தப் பட்டது.

இந்த விசயத்தையறிந்த மீனட்சியின் பெற்றோர்கள் அவளிடம் அன்பாகவும் ஆறுதலாகவும் பேசிப்பார்த்தார்கள். காதல் வந்த பேதையின் மனம் மாறுமா....? இறுதியில் அவர்களுக்கு தோல்வியே கிட்டியது. ராகேஷின் பெற்றோர் அவனது மனதை பலவந்தமாக மற்றப் பர்த்தார்கள், மீனட்சியை கல்யாணம் பண்ணினால் அவனை ஊரை விட்டு விலக்கி விடுவதாக பயமுறுத்திப் பார்தார்கள். அவனோ அவனது காதலை கொஞ்சம் கூட விடத் தயாரில்லை என்று கூறி மறுத்து விட்டான்.

இறுதியில் ராகேஷின் பெற்றோர் மீனாட்சியின் பெற்றோரைப் போய் மிரட்டிப் பார்த்தார்கள். மீனாட்சி இனிமேல் ராகேஷைப் பார்க்கக்கூடாது என்று. அவர்களும் உயிருக்குப் பயந்து மீனாட்சியை சம்மதிக்க செய்தார்கள்.வெளியில் பெற்றோருக்காக ஒத்துக் கொண்டாள் மீனாட்சி, ஆனாலும் அவள் தன் மனதை மாற்றுவதாக இல்லை. இதையெல்லாம் அறிந்த ராகேஷ் நண்பர்கள் மூலமாக மீனாட்சியைத் தொடர்பு கொண்டு இருவரும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து நாளும் குறித்தனர்.

அந்த நாளும் வந்தது பல இன்னல்கள். கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கி, கடந்து, அவர்கள் நினைத்ததைச் சாதித்தனர். பக்கத்தில் உள்ள நகரத்தில் போய் பதிவுத் திருமணம் செய்து, கோவில் ஒன்றில் தாலியும் கட்டிக் கொண்டார்கள், அவர்களின் உயிர்த் தோழர்களின் உதவியுடன். இந்தப் பிரச்சினைகளிம் குகனும், பீற்றரும் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றார்கள்.

தைரியமாக முடிவெடுத்து கல்யாணம் பண்ணியவர்களுக்கு, இனிமேல் என்ன பண்ணுவது,எங்கே போவது என்று புரியவில்லை. அவர்களிண் ஊருக்குப் போகவே முடியாது. அவர்களின் காதலையும், நண்பர்களையும் தவிர வேறொன்றும் இல்லை. பீற்றர் கொடுத்த அறிவுரை அவர்களின் கிராமத்திற்க்கு வரும்படி, ஆனால் ஜோர்ஜ் அதை விரும்பவில்லை." ராகேஷ் பிராமணர் குடும்பதைச் சேர்ந்தவன் அவனால் மீனவர்களுடன் தங்குவது சிரமம்" என்று காரணம் காட்டினான். இறுதியில் பல வழிகளிலும் யோசித்து வேறு வழி எதுவும் இல்லாததால் அவர்களின் கிராமத்திற்கு போவது என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்த ஊர் பெரியவர்களின் உதவியுடன் முத்துச்சேரியில் ஒரு சிறு வீடமைத்து குடியமர்த்தப் பட்டனர்

ராகேஷ் எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர்ந்ததால் அவன் எந்தத் தொழிலும் பழகாதவன். அந்தக் கிராமத்தில் மீன் பிடிப்பதைத்தவிர வேறு தொழில் எதுவும் கிடையாது. அவன் தன்னை நம்பி வந்த தனது உயிர் மனைவிக்காக அந்தத் தொழிலை செய்வதற்க்கு முடிவெடுத்தான். அவளிற்க்கோ அதில் சற்றும் விருப்பமில்லை. தனக்காகத் தன் கணவன் கஷ்டப்பட்டு தனது குலத்திற்க்கு ஒத்துவராத தொழிலில் ஈடுபடுவதை அவள் அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. ஆனாலும் அவன் தந்து அன்பால் அவளை சம்மதிக்க வைத்தான். அவளும் அரை மனதுடன் சம்மதித்தாள்.

மீன்பிடித் தொழிலில் முன் அனுபவமேதும் இல்லாத்தால் ராகேஷ் மிகவும் சிரமப்பட்டான். அவனின் நண்பர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்லியும் அவன் கேக்கவில்லை. அவனிற்க்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவர்களின் உதவியுடன் மீன்பிடித் தொழிலை சிறிது சிறிதாக கற்று முன்னேறி தனியாகச் சென்று மீன்பிடிக்கும் அளவிற்கு முன்னேறினான்.

அப்படியாக அவர்களது வாழ்க்கை இன்பமாகப் போய்க்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் தாண்டி. முன்னர் பொருளாதாரத்தில் கஷ்டப்பட்டார்கள், இப்போது அதுவும் படிப்படியாக குறைந்து விட்டது. மிகவும் இன்பமாகவும், எழிமையாகவும் வாழ்ந்தார்கள். அந்தக்காலத்தில் மீனாட்சி கருவுற்றாள். இப்போது அவர்கள் வாழ்க்கை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சென்றது. அவர்களின் நண்பர்கள் தான் அவர்களிற்கு உறவினர்களாக, தெய்வமாக உதவி செய்தார்கள். மீனாட்சி தான் கருவுற்றதிலிருந்து ராகேஷ் கடலிற்க்குப் போவதை விரும்பவில்லை, எனினும் அவர்கள்து பொருளாதார நிலமை காரணமாக அவன் போகவேண்டியிருந்தது. முதலில் கிழமைக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் போனவன் இப்போது இரண்டு அல்லது மூன்று நாட்களாகக் குறைத்தான்.

மீனாட்சி எட்டு மாத நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். அன்றுதான் 2004ம் ஆண்டுக்கான கிறுஸ்துவரின் நத்தார்ப்பண்டிகை வந்தது. அவர்களிருவரும் அவர்களுடைய நண்பர்களுடன் தேவாலயத்திற்க்குச் சென்று இறைவணை வணங்கினார்கள். கிறுஸ்துப்பாலனைப் போல ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்று இறைவனை தரிசித்துவிட்டு அவர்கள் நண்பர்கள் வீட்டிற்க்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்கள்.

அன்று இரவு ராகேஷ் கடலிற்குப் புறப்படத் தயாரனான். மீனாட்சியோ "இண்டைக்கு நத்தார்தானே ஜோர்ஜ், பீற்றர் அண்ணா யாரும் வரமாட்டாங்க நீங்க தனியா போகணுமா" என்று கேட்டாள். "இன்று நத்தார் அவங்க யாரும் போகமாட்டாங்க, உனக்கும் பிள்ளை பிறக்க நாள் கிட்டுது, நம்மகிட்டையும் பணம் சேமிப்பில இல்லை இன்றைக்கு போனால் வருமானம் கொஞ்சம் கூட வரும் என் பிள்ளைக்காக நான் போகவேண்டும்" என்று மீனாட்சியின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு புறப்படத் தயாராகின்றான் ராகேஷ். அவளும் அரை மனதுடன் சம்மதம் சொல்கிறாள். ராகேஷிற்க்கு மீனாட்சியை தனியே விட்டுப் போக மனமில்லாமல் அவளைக் கூட்டிச்சென்று ஜோர்ஜ் வீட்டில் விட்டுவிட்டு, அவன் மறுத்தும் கேட்காமல் மறுத்துவிட்டு செல்கிறான்.

மறு நாள் விடிந்து விட்டது. வழமையாக ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள். இன்று மணி ஏழரையும் தாண்டி விட்டது என்னும் காணவில்லை. மீனாட்சி கரையில் அவளவனது வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாள். அவளது மனதை பயம் பற்றிக் கொள்ள ஆரம்பிக்கின்றது. நேரம் எட்டு மணியும் ஆகிவிட்டது. விஷயம் அறிந்த பீற்றர் அங்கு வந்து விட்டான். வேறு இரு படகில் ராகேஷைத் தேடிப் புறப்படத் தயாராகும் போது தொலைவில் ராகேஷின் படகு வருவது அவனுக்குத் தெரிந்தது. அவன் கிட்டே வந்த போதுதான் மீனட்சியின் ஊசல் ஆடிக்கொண்டிருந்த உயிர் ஒரு நிலைக்கு வந்தது. அவன் வந்து சேர்ந்து படகை கரைக்கு கொண்டு வரும் போது நேரம் எட்டு நாற்பதைத் தாண்டியிருந்த்து.

அவன் வந்திறங்கியதும் அவள் நடக்க முடியாமல் ? ?#8220;டிப்போய் அவனைக் கட்டியணைத்து அழுகின்றாள் சிறு குழந்தை போல. அவன் அவளை சமாதனப் படுத்தி பக்கத்தில் இருந்த மரப்படகில் உட்கார வைத்து விட்டு பீற்றரின் உதவியோடு வலையைப் பிரிக்க ஆரம்பிக்கின்றான்.

அவள் மரப்படகில் இருந்து கொண்டு தன் கணவன் வலை பிரிப்பதை பார்த்து மனதில் கவலைப் படுகின்றாள். "எபபடி இருக்க வேண்டியவர் என்னால் கஷ்டப்படுகிறாரே"" என்று. அப்படியே அவள் தனது கவனத்தைச் சற்று திருப்புகிறாள். குழந்தைகள் சிறுவர்கள் என் பலர் ஆனந்தமாக் கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருக்கிண்ரனர். தனது வயிற்றைத் மெதுவாகத் தடவிக் கொண்டே "என் பிள்ளையும் பிறந்து வளர்ந்து இப்படித்தான் விளையாடுவான்" என்று சந்தோஷமாக நினைத்துச் சிரிக்கிறாள். அப்போதுதான் அவளிற்க்கு தேநீர் கொண்டு வந்தது நினைவிற்க்கு வருகிறது ஆனால் தேநீர் ஆறிப் போயிருந்தது. "எழு மணிக்கு போட்ட தேநீர் ஒன்பதையும் தாண்டிவிட்டது ஆறாமல் இருக்குமா..?" எழும்பிப் போய் அவனிடம் சென்று "உங்களிற்க்கு தேத்தண்ணி கொண்டு வந்தேன் இப்ப ஆறிப் போயிற்று, வீட்டுக்குப் போய் சுடச் சுடத் தேத்தண்ணி கொண்டு வாறேன்" என்று சொல்கிறாள். அவன் சொல்கிறான் "வேலையை முடித்து விட்டு ஒரேயடியாக வீட்டுக்குப் போகலாம்" என்று. அவளோ "இல்லை நீங்க வர 11மணியாகும் நான் போய் போட்டு வாறேன்" என்று சொல்லுகிறாள். அவனும் சரி போய்ட்டு வா என்று கண்களால் சொல்கிறான்.

சாலைக்கு வந்து மெதுவாக ஒரு ஐந்து நிமிடம் நடந்து இருப்பாள், கடற்கரையில் பாரிய சத்தம் கேட்கிறது குண்டு வெடிப்பதைப் போல். திரும்பிப் பார்க்கிறாள் கடல் அலை வேகமாக மேல் எழும்புகிறது பனை மர உயரத்திற்க்கு, அவளது கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அவள் வந்த பாதையால் சற்று வேகமாகச் சென்றால் அவள் தப்பலாம். ஆனாலும் அவளது உயிர் அவன் தானே அவள் தனது உயிரை நோக்கி ?#8220;டுகிறாள் அவளால் முடிந்தவரை வேகமாக கடலை நோக்கி ?#8220;டுகிறாள். கரையில் எழும்பிய அலை ஒன்று படகுகள், கற்கள், குப்பைகள் போன்ற ஆயுதங்களுடன் அவளது காலடியில் விழுகிறது. அவள் கத்துகிறாள் "ராகேஷ் ராகேஷ் ராகேஷ் ராகேஷ்.........." என்று. அவளிற்க்கு எதுவும் தெரியவில்லை. எங்கும் தண்ணீர் தண்ணீருடன் சேர்ந்து எழுந்து தானும் மேலே போவது தெரிகின்றது. அவளின் கால் ஒரு மரத்தில் மாட்டுப் படுகிறது. அத்துடன் அவளிற்க்கு சுயநினைவு அற்றுப் போகிறது.

இரு நாட்களின் பின்னர் அவளிற்க்கு நினைவு திரும்புகிறது. அவளின் நினைவு திரும்பியதும் அவளின் உடம்பில் எதோ குறைவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகின்றது. மெதுவாக தனது வயிற்றை தொட்டு தடவுகிறாள். அங்கே வயிற்றைக் காணவில்லை. படுத்திருந்த படியே அந்த இடத்தை சுற்றிப் பார்க்கின்றாள். எங்கும் மரண ?#8220;லம். காயம்பட்டவர்கள், அவர்களை காப்பாற்ற முயற்ச்சித்து கொண்டிருக்கும் வைத்தியர்கள். அவள் கண் எல்லா இடமும் பார்த்துக் கொண்டே தன் கையால் வயிற்றைத் தடவுகிறாள், அவ்விடத்தில் தன்க்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. தாங்க முடியாத சோகத்திலும், வலியிலும் தனது சக்தி எல்லவற்றையும் சேர்த்து வைத்திய சாலையே அதிருமளவிற்க்கு "ராகேஷ் .................." என்று கத்துகிறாள். அவளின் சத்ததைக் கேட்டு எல்லரும் அவள் அருகில் கூடிவிட்டனர். அவளாள் பேச முடியவில்லை, பெசும் அளவிற்க்கு சக்தியும் இல்லை. அழுகிறால் தன்னால் முடிந்தளவு பலமாக அழுகிறாள். "ராகேஷ்" என்று முணுமுணுக்கின்றாள். அப்போதுதான் ஜோர்ஜும் அர்வ்ந்தும் உள்ளே வருகின்றனர், அவளைச் சுற்றி கூட்டம் நிற்பதைப் பார்த்துவிட்டு வேகமாக உள்ளே வருகின்றனர். அவர்களைப் பார்த்ததும் அவளுடைய மணம் சிறிது மகிழ்கிறது. எனினும் அவனைக் காணத்தாள் மீண்டும் கலங்குகிறாள். அவர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றாள். அவர்கள் மீனாட்சியைப் பார்த்து சோகம் தாங்க முடியாமல் அழுகின்றனர். குகன் விஷயத்தைச் சொல்கின்றான் " கடல் நீரினால் அவள் அடித்துச் செல்லப் பட்டு மரத்தில் மோதியதில் அவள் வயிற்றில் பலமாக அடிபட்டதினால் அவளது குழந்தை குறைப் பிரசவமாக பிறந்து இறந்து விட்டது" என்று கூறினான்.

அவள் "ராகேஷ்" என்று மெதுவாக கேட்கிறாள், அவர்களிற்க்கு அத்ற்க்கு பதில் சொல்ல முடியவில்லை. ஜோர்ஜ் அழுதுகொண்டே "கடற்கரையில் வலை பறித்துக் கொன்டிருந்த ராகேச்சும்,பீற்றரும் கடலலையில் அடித்திச் செல்லப் பட்டுவிட்டார்கள்,அவர்களோடு சேர்த்து பல நூறுபேரைக் காணவில்லை, தேடுகிறார்கள்" என்று கூறினான். இதைக் கேட்டதும் படுந்திருந்து அழுதுகொண்டிருந்த அவள் கட்டிலில் எழுந்து இருக்க முயற்ச்சி செய்கிறாள் ஆனல் அவளால் அவள் காலை தூக்க முடியவில்லை மெதுவாக தனது காலை தொடுகிறால் அவளது இடது காலை காணவில்லை. அப்படியே கட்டிலில் சாய்ந்து விழுகின்றாள்.

அன்று மயங்கி விழுந்தவள் இரண்டு ஆண்டுகள்,ஆகியும் என்னும் நினைவு திரும்பவும் இல்லை, கடலோடு அடிபட்டுச் சென்ற ராகேஷும் திரும்பவில்லை.

"வைத்தியர்கள் சொல்கின்றனர் இது கோமா நிலையாம் எப்போ நினைவு திரும்பும் என்டு சொல்லேலாதாம்" என்று அழுதபடி ராகேஷின் தகப்பனார் மீனாட்சியின் தகப்பனிடம் கண்ணீர் வடித்தபடி கூறுகின்றார்.

அன்று காதலித்தபோது எதிர்த்து நின்று அந்த சிறிய பிஞ்சுகளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்க்கு அவனும் உயிருடன் இல்லை, அவழும் சுயநினைவுடன் இல்லை.

அவர்களை மனிதர்களும் சேரவிடவில்லை, சேர்ந்த அவர்களை இயற்க்கையும் ஒன்றாக இருக்கவிடவில்லை.

இந்த மீனாட்சி மட்டுமில்லை இவளைப் போல பல மீனாட்சிகள் இன்றும் நம் சமுதாயத்தில் உயிரில்லாதவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்........

முற்றும்

ஓவியன்
28-04-2007, 10:35 AM
அடே சுட்டி!!
நான் கவனிக்கவே இல்லையே!

1000வது பதிப்புக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.
:angel-smiley-010:
பி.கு - விமர்சனம் பிறகு.

சுட்டிபையன்
28-04-2007, 10:38 AM
வணக்கம் எல்லோருக்கும்!
இ மேலே உள்ள சிறுகதை எனது1000மாவது பதிவு, மன்றத்திற்க்கு ஏதும் நல்லதாக எழுதனும் என்று நினைத்தேன், அதுதான் நான் முதன் முதலாக எழுதின கதையை 1000மாவது பதிப்பாக பதிந்துவிட்டேன்.

இது எனது முதல் சிறுகதை, இதற்க்கு முதல் பாடசாலை காலஙகளில் ஒரு சில சிறுகதைகள் எழுதியிருக்கேன் அதுவும் பரீட்சைகளுக்கு மட்டும், அதன் பின்னர் இதுதான்.

பல மேதைகள் உள்ள மன்றத்தில் இந்த தவளும் குழந்தையிம் ஒரு சிறிய பதிப்பு. முதல் சிறு கதை என்னை அறியாமல் பல பிளைகள் விட்டிருப்பேன் அவற்றி எனக்கு சுட்டி காட்டி பிழையை மன்னிக்கவும்.

உங்கள் முழு விமர்சனங்களை எதிர் பாக்கின்றேன்

இப்படிக்கு
அன்புடன்
சுட்டி

(நன்றி ஓவியாக்கா அவங்கள் 4000மாவது திரியை பார்த்துத்தான் இந்த யோசனை தோன்றியது)

சுட்டிபையன்
28-04-2007, 10:41 AM
அடே சுட்டி!!
நான் கவனிக்கவே இல்லையே!

1000வது பதிப்புக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.
:angel-smiley-010:
பி.கு - விமர்சனம் பிறகு.

ஹாஹா நன்றி ஓவி
மறக்காமை விமர்சனம் சொல்லுங்கள், உங்கள் எல்லோரின் விமர்சனம்தான் மறுபடி கதை எழுத தூண்டுதலா இருக்கும்

lolluvathiyar
28-04-2007, 10:57 AM
அலைகள்
முடிவில் ஊரில் வேலைவெட்டி இல்லத சிலரால் அவர்களது காதல் அவர்களின் வீட்டுக்கு தெரியப்படுத்தப் பட்டது.
அவர்களை மனிதர்களும் சேரவிடவில்லை, சேர்ந்த அவர்களை இயற்க்கையும் ஒன்றாக இருக்கவிடவில்லை.

முற்றும்

அருமை சுட்டி மீனவர்களின்
ஆபத்தான தொழிலை கதை
மூலம் புரிய வைத்த உனக்கு

பாவம்
கனவனை பிரிய வைத்து விட்டது இல்லாமல்
ஏன் அவள் வயிற்றில் உள்ள குழந்தையும் பிரித்து விட்டாய்
இறுதியில் அவள் குழந்தையோடு ஆவது வாழ்ந்திருப்பாளே

சுட்டிபையன்
28-04-2007, 11:02 AM

நன்றி வாத்தியார் உங்கள் கருத்துக்கு,
இப்படி பல நிஜங்கள் நடந்துள்ளது, எதுவுமே இருக்கும் போது அருமை தெரிவதில்லை போன பினர்தான் புரியும்

ஒரு எழுத்தாளனாக குழந்தையை பிரிப்பதே நல்லதாக தோன்றியது:icon_wacko:

ஓவியா
28-04-2007, 03:26 PM
சஞ்சய் அவர்களூக்கு.

நல்ல கதை. நன்று.

தங்களிடம் நல்ல எழுத்து திறமை இருகின்றது.

தொடர்ந்து எழுதினால் நல்ல எழுத்தாளனாக வாய்புகள் பிரகாசமாக இருகின்றன.

எதிர்காலத்தில் பட்டைத்தீட்டிய வைரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்

'இப்படி பல நிஜங்கள் நடந்துல்லன'' என்று கூறியுள்ளீர்கள். அதனால் இதை இது ஒரு உண்மை சம்பவம் என்று எடுத்துக்கொள்கிறேன். சுனாமியின் பொது இது போல் நடந்து இருக்காலாம். கரு சாத்தியமே.

கதையின் ஆரம்பம் நன்று, உலகில் பல கிராமங்கள், பல மானிடர்கள், பல காதல்கள். பலே. கொஞ்சம் தமிழ்படம் பார்ப்பது போல் ஹி ஹி ஹி.....டைரெக்டர் ஆகிவிட்டீர்கள்.

பின் பக்கம், அளவிற்க்கு அதிகமாக சோகத்தை காட்டியுள்ளீர்கள். ஒரு பெண் மனதிற்க்கு இது ரொம்பவே அதிகமான ரணம். அவளை கோமவில் வைத்து நெஞ்சில் கல்லை வைத்து கதையை முடித்து சொகமாக்கிவிடீர்கள்.

சாதாரணமாக காதலை சொல்லாமலே தவிக்கும் மக்களுக்கு துணையின் ரணம் துக்கமே, இவளோ காதலித்து, கலந்து, குழந்தையை சுமந்து, கனவுகளுடன் வாழ அரும்பு விட்ட செடியாய் இருக்க!!!!!!!!! இப்படி மொத்த உறவையும் அறுத்துதெரிவது!!!!!!!! யப்பா நினைக்கவே.......கண் கலங்குகிறது.

ஓவியா
28-04-2007, 03:50 PM
(நன்றி ஓவியாக்கா அவங்கள் 4000மாவது திரியை பார்த்துத்தான் இந்த யோசனை தோன்றியது)

நன்றி

நான் மக்கள் ஓரு சொட்டு கண்ணீர் விடுவது போல் கதவுட்டா, - நீர்
மக்க்கள் ஒரு நாள் முழுதும் அமர்ந்து கண்ண்ணீர் வடிக்கும் அளவுக்கு கதவுட்டிரூக்கீர். :1: :sport-smiley-002:

சுட்டிபையன்
29-04-2007, 09:43 AM
சஞ்சய் அவர்களூக்கு.

நல்ல கதை. நன்று.

தங்களிடம் நல்ல எழுத்து திறமை இருகின்றது.

தொடர்ந்து எழுதினால் நல்ல எழுத்தாளனாக வாய்புகள் பிரகாசமாக இருகின்றன.

எதிர்காலத்தில் பட்டைத்தீட்டிய வைரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்

'இப்படி பல நிஜங்கள் நடந்துல்லன'' என்று கூறியுள்ளீர்கள். அதனால் இதை இது ஒரு உண்மை சம்பவம் என்று எடுத்துக்கொள்கிறேன். சுனாமியின் பொது இது போல் நடந்து இருக்காலாம். கரு சாத்தியமே.

கதையின் ஆரம்பம் நன்று, உலகில் பல கிராமங்கள், பல மானிடர்கள், பல காதல்கள். பலே. கொஞ்சம் தமிழ்படம் பார்ப்பது போல் ஹி ஹி ஹி.....டைரெக்டர் ஆகிவிட்டீர்கள்.

பின் பக்கம், அளவிற்க்கு அதிகமாக சோகத்தை காட்டியுள்ளீர்கள். ஒரு பெண் மனதிற்க்கு இது ரொம்பவே அதிகமான ரணம். அவளை கோமவில் வைத்து நெஞ்சில் கல்லை வைத்து கதையை முடித்து சொகமாக்கிவிடீர்கள்.

சாதாரணமாக காதலை சொல்லாமலே தவிக்கும் மக்களுக்கு துணையின் ரணம் துக்கமே, இவளோ காதலித்து, கலந்து, குழந்தையை சுமந்து, கனவுகளுடன் வாழ அரும்பு விட்ட செடியாய் இருக்க!!!!!!!!! இப்படி மொத்த உறவையும் அறுத்துதெரிவது!!!!!!!! யப்பா நினைக்கவே.......கண் கலங்குகிறது.

கதை எழுதும் போது எந்த வலியும் தெரியவில்லை, கதையை மெருகேற்றி எல்லோர் மனதிலும் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுதினேன், எழுதி முடித்து பதிந்த பின்னர்தான் படித்துப் பார்த்தேன் அளவுக்கதிகமான வலியை கொடுத்து விட்டேன் என்று, முதலாவதாக எழுதியதை மாற்ற விரும்பவில்லை அப்படியே விட்டு விட்டேண், என் நண்பி சொன்னார் ஒரு கதை படித்த பின்னர் அதன் வடு மனதில் நிக்க வேண்டும் என்று உங்கள் பின்னூட்டத்தை படித்த பின்னர் அவர் சொன்னது நிறைவேறி விட்டது என்று தோண்றுகிறது, இனி வரும் காலங்களில் இதை விட சிறப்பாக கதைகள் எழுத முயற்ச்சிக்கின்றேன்,

நன்றி அன்பு அக்கா உங்கள் வாழ்த்துக்கும் அறிவுரைக்கும் :angel-smiley-004:

ஷீ-நிசி
29-04-2007, 10:50 AM
கன்னி முயற்சியை தண்ணியில் ஆரம்பித்த சுட்டிக்கு பாராட்டுகள்... நல்லாருக்கு கதை. ஆனால் இன்னும் முன்னேற வேண்டிய தூரம் நிறைய இருக்குங்க சுட்டி... தொடரட்டும் உங்களின் எழுத்துப் பணி..

சுட்டிபையன்
29-04-2007, 10:59 AM
கன்னி முயற்சியை தண்ணியில் ஆரம்பித்த சுட்டிக்கு பாராட்டுகள்... நல்லாருக்கு கதை. ஆனால் இன்னும் முன்னேற வேண்டிய தூரம் நிறைய இருக்குங்க சுட்டி... தொடரட்டும் உங்களின் எழுத்துப் பணி..

நன்றி நிஷி
தண்ணிலையா:icon_shok: தப்பா நினைக்கப் போரங்கப்பா என்னை :grin:
முன்னேறுவதற்க்கு நீங்கள் எல்லோரும் தான் கை கொடுக்க வேண்டும், நிச்சைஅயம் முன்னேறுவன் உங்கள் எல்லோரின் அன்புமிருந்தால்

ஷீ-நிசி
29-04-2007, 11:18 AM
நன்றி நிஷி
தண்ணிலையா:icon_shok: தப்பா நினைக்கப் போரங்கப்பா என்னை :grin:
முன்னேறுவதற்க்கு நீங்கள் எல்லோரும் தான் கை கொடுக்க வேண்டும், நிச்சைஅயம் முன்னேறுவன் உங்கள் எல்லோரின் அன்புமிருந்தால்

தண்ணியோடு ஆரம்பிச்சீங்களா என்பது உங்களுக்குத் தான் தெரியும்...:nature-smiley-002:

சுட்டிபையன்
29-04-2007, 11:23 AM
தண்ணியோடு ஆரம்பிச்சீங்களா என்பது உங்களுக்குத் தான் தெரியும்...:nature-smiley-002:

ஐயய்யோ நமக்கு சும்மா இருந்தாலே நிதானம் குறைய அதுகுள்ள தண்ணிலையா அவளவும்தான்

நீங்கள் இதை சொல்லும் போது எனக்கு கல்லூரி நாட்களில் நடந்த 1 நினைவுதான் நினைவு வந்தது அதை நினைத்து சிரித்து வயிறு வலிக்குது

ஷீ-நிசி
29-04-2007, 11:26 AM
ஐயய்யோ நமக்கு சும்மா இருந்தாலே நிதானம் குறைய அதுகுள்ள தண்ணிலையா அவளவும்தான்

நீங்கள் இதை சொல்லும் போது எனக்கு கல்லூரி நாட்களில் நடந்த 1 நினைவுதான் நினைவு வந்தது அதை நினைத்து சிரித்து வயிறு வலிக்குது

பரவாயில்ல, அப்படியே லெஃப்ட் எடுத்து நகைச்சுவை பக்கம் வந்து வயிறு வலிக்காம சொல்லுங்க.. உங்க நினைவுகளை!

சுட்டிபையன்
29-04-2007, 11:40 AM
பரவாயில்ல, அப்படியே லெஃப்ட் எடுத்து நகைச்சுவை பக்கம் வந்து வயிறு வலிக்காம சொல்லுங்க.. உங்க நினைவுகளை!

அப்படியே ஆகட்டும்

மனோஜ்
29-04-2007, 04:07 PM
அருமை சுட்டி உண்மையில் சுனாமியை கண்களில் காட்டிவிட்டிர்கள்
தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்

சுட்டிபையன்
30-04-2007, 07:54 AM
அருமை சுட்டி உண்மையில் சுனாமியை கண்களில் காட்டிவிட்டிர்கள்
தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்

நன்றி மனோஜ் அண்ணா
சுனாமில அடிச்சிட்டு போகலியா:grin:

ஓவியா
01-05-2007, 08:52 PM
கதை எழுதும் போது எந்த வலியும் தெரியவில்லை, கதையை மெருகேற்றி எல்லோர் மனதிலும் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுதினேன், எழுதி முடித்து பதிந்த பின்னர்தான் படித்துப் பார்த்தேன் அளவுக்கதிகமான வலியை கொடுத்து விட்டேன் என்று, முதலாவதாக எழுதியதை மாற்ற விரும்பவில்லை அப்படியே விட்டு விட்டேண், என் நண்பி சொன்னார் ஒரு கதை படித்த பின்னர் அதன் வடு மனதில் நிக்க வேண்டும் என்று உங்கள் பின்னூட்டத்தை படித்த பின்னர் அவர் சொன்னது நிறைவேறி விட்டது என்று தோண்றுகிறது, இனி வரும் காலங்களில் இதை விட சிறப்பாக கதைகள் எழுத முயற்ச்சிக்கின்றேன்,

நன்றி அன்பு அக்கா உங்கள் வாழ்த்துக்கும் அறிவுரைக்கும் :angel-smiley-004:

சஞ்சய், கதை அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் சரி, ஆனால் ஓவர் சோகமாக இருந்தால், ஏற்றுக்கொள்ள மனம் சற்று தயங்கும்.....

அன்பு அக்கானு :food-smiley-011: வச்சு இக்ருகீக!!!!!!! :sprachlos020:

சுட்டிபையன்
02-05-2007, 11:49 AM
சஞ்சய், கதை அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் சரி, ஆனால் ஓவர் சோகமாக இருந்தால், ஏற்றுக்கொள்ள மனம் சற்று தயங்கும்.....

அன்பு அக்கானு :food-smiley-011: வச்சு இக்ருகீக!!!!!!! :sprachlos020:

அந்த குறையை நீக்க ஒரு நகைச்சுவை கதையாக எழுதி எல்லோரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடுகிறேன்:D

அக்கா என்று உரிமையோடுதான்:huh:

அக்னி
03-05-2007, 01:55 AM
ஆரம்பத்தில் மிதமாக ஆரம்பித்த சிறுகதை, சுனாமி என்ற நிஜத்தினுள்ளே நுழையும் போது மனதை அழுத்தத் தொடங்கிவிட்டது. அதிலும்,

அவளின் நினைவு திரும்பியதும் அவளின் உடம்பில் எதோ குறைவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகின்றது. மெதுவாக தனது வயிற்றை தொட்டு தடவுகிறாள். அங்கே வயிற்றைக் காணவில்லை.

இவ்வரிகளை வாசிக்கும்போது எனக்குப் புல்லரித்துவிட்டது.

ஜாதியின் வெறி, காதலின் உறுதி, நட்பின் ஆழம், குடும்பத்தின் பாசம், இயற்கையின் சீற்றம், பாதிப்பின் தாக்கம் என உங்கள் கருவின் வரிசை சிறப்பாக அமைந்துள்ளது.

ஆனாலும், இன்னமும் சிறப்பான முறையில் உங்களால் எழுத முடியும். எழுத்துப் பிழைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் சிறப்பான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

ஓவியா
03-05-2007, 02:06 AM
அக்கா என்று உரிமையோடுதான் :huh:

அதற்க்கேன்ன சஞ்சய், தாராளமாக 'ஓவியா அக்கா' என்று பாசத்துடன் அழைக்கலாம். :music-smiley-008:

mravikumaar
03-05-2007, 05:44 AM
சுட்டி,

கதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

சுனாமியின் நினைவை மீண்டும் ஏற்படுத்தியது

அன்புடன்
ரவி

சுட்டிபையன்
03-05-2007, 07:37 AM
ஆரம்பத்தில் மிதமாக ஆரம்பித்த சிறுகதை, சுனாமி என்ற நிஜத்தினுள்ளே நுழையும் போது மனதை அழுத்தத் தொடங்கிவிட்டது. அதிலும்,

இவ்வரிகளை வாசிக்கும்போது எனக்குப் புல்லரித்துவிட்டது.

ஜாதியின் வெறி, காதலின் உறுதி, நட்பின் ஆழம், குடும்பத்தின் பாசம், இயற்கையின் சீற்றம், பாதிப்பின் தாக்கம் என உங்கள் கருவின் வரிசை சிறப்பாக அமைந்துள்ளது.

ஆனாலும், இன்னமும் சிறப்பான முறையில் உங்களால் எழுத முடியும். எழுத்துப் பிழைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் சிறப்பான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

உங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி அக்கினி
எழுத்துப் பிழைகளிற்க்கு மன்னிக்கவும் எழுத்துப் பிழைகளை தவிர்த்து அடுத்த கதைகளில் சிறப்பாக எழுத முயற்ச்சிக்கின்றேன்

சுட்டிபையன்
03-05-2007, 07:39 AM
அதற்க்கேன்ன சஞ்சய், தாராளமாக 'ஓவியா அக்கா' என்று பாசத்துடன் அழைக்கலாம். :music-smiley-008:

நன்றி ஓவியா அக்கா:082502now_prv: :icon_b: :music-smiley-008:

சுட்டிபையன்
03-05-2007, 07:39 AM
சுட்டி,

கதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

சுனாமியின் நினைவை மீண்டும் ஏற்படுத்தியது

அன்புடன்
ரவி

நன்றி ரவி உங்கள் கருத்துக்கு

அன்புடன்
சுட்டி

அரசன்
03-05-2007, 10:45 AM
ஆரம்பமே ஒரு அருமையான 'கரு'வை அமைத்துள்ளீர்கள். காதலர்களின் பெற்றோர்கள் எப்போதுமே இப்படிதானா காதலிக்கும் போது அவர்களை பிரிக்க நினைப்பது, பிறகு ஏதோ காரணங்களினால் வந்து பாசத்தை பொலிவது. ஒரு நல்ல செண்டிமெண்ட் கதை. தொடர்ந்து எழுத பாராட்டுக்கள்.

அக்னி
03-05-2007, 10:51 AM
உங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி அக்கினி
எழுத்துப் பிழைகளிற்க்கு மன்னிக்கவும் எழுத்துப் பிழைகளை தவிர்த்து அடுத்த கதைகளில் சிறப்பாக எழுத முயற்ச்சிக்கின்றேன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"
உங்களின் ஊக்கம், உங்கள் ஆக்கங்களுக்கு வெற்றிகளையே என்றும் பெற்றுத்தரும்... வளர்க மேலும்...

சுட்டிபையன்
07-05-2007, 12:41 PM
ஆரம்பமே ஒரு அருமையான 'கரு'வை அமைத்துள்ளீர்கள். காதலர்களின் பெற்றோர்கள் எப்போதுமே இப்படிதானா காதலிக்கும் போது அவர்களை பிரிக்க நினைப்பது, பிறகு ஏதோ காரணங்களினால் வந்து பாசத்தை பொலிவது. ஒரு நல்ல செண்டிமெண்ட் கதை. தொடர்ந்து எழுத பாராட்டுக்கள்.

நன்றி மூர்த்தி அண்ணா உங்கள் கருத்துக்களுக்கு:062802photo_prv:

அமரன்
21-05-2007, 03:51 PM
சுட்டி உமக்கு நன்றாகக் கதை எழுத வருகின்றதே. அப்புறம் ஏன் எழுதுவதை நிறுத்தி விட்டீர். தொடர்ந்து எழுத வேண்டியதுதானே. கதை அருமை கண்ணா. இக்கதைக்காக எனது பரிசுத்தொகை நூறு. (இதுதான் என்னால் முடிந்தது.)

மயூ
21-05-2007, 04:13 PM
சுட்டி தொடர்ந்து எழுதவும்...
ஒரு எழுத்தாளர் சிங்கம் உன்னுள் ஒளிந்துகொண்டு இருக்கின்றது... கமான்... வெளீயே இழுத்துவிடுப்பா!!!!

அமரன்
21-05-2007, 04:13 PM
சுட்டி தொடர்ந்து எழுதவும்...
ஒரு எழுத்தாளர் சிங்கம் உன்னுள் ஒளிந்துகொண்டு இருக்கின்றது... கமான்... வெளீயே இழுத்துவிடுப்பா!!!!
ஆமாம் தூங்கிட்டிருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பு.

மயூ
21-05-2007, 04:17 PM
ஆரம்பமே ஒரு அருமையான 'கரு'வை அமைத்துள்ளீர்கள். காதலர்களின் பெற்றோர்கள் எப்போதுமே இப்படிதானா காதலிக்கும் போது அவர்களை பிரிக்க நினைப்பது, பிறகு ஏதோ காரணங்களினால் வந்து பாசத்தை பொலிவது. ஒரு நல்ல செண்டிமெண்ட் கதை. தொடர்ந்து எழுத பாராட்டுக்கள்.
பெற்றோர்களை ஒரேயடியாகப் பிழை சொல்வதற்கில்லை... எத்தனையோ கற்பனைகளோடுதான் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்க்கின்றனர்.. அனைத்தும் திடீர்என்று ஒரு நாள் பொய்யாகும் போது அவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடிவதில்லை!!!!!!!!!