PDA

View Full Version : தமிழுக்கு அமுதென்றும் பெயர்.



ஜோய்ஸ்
28-04-2007, 07:54 AM
தமிழுக்கு அமுதென்றும் பெயர்.
ஆம் நாம் பேசிவரும் இனிய தமிழுக்கு எத்தனை எத்தனை பெயர்கள்தான் பாருங்களேன். எந்த ஒரு மொழிக்கும் இப்படி பல பெயர்கள் இருந்ததாகவோ அல்லது இருப்பதாகவோ நான் அறிந்தவரை கேள்விப்பட்டதே இல்லை.அத்தனை தொன்மையும் பழமையும் இனிமையும் வாய்ந்தது நம் தமிழ் மொழி.

நம் தமிழில் இருந்து பிரிந்து போனதுதான் தெலுங்கு,மலயாளம்,கன்னடம்.ஆகவேதான் இவைகளை தமிழின் சார்பு மொழிகள் என்கிறோம்.

அதற்க்குத்தான் எத்தனை எத்தனை தாலாட்டுப் பெயர்கள் பாருங்களேன்.எடுத்துக்காட்டாக சில.

தமிழ்.
நற்றமிழ்.
செந்தமிழ்.
முத்தமிழ்.
பைந்தமிழ்.
கன்னித்தமிழ்.
சுவடித்தமிழ்.
பிள்ளைத்தமிழ்.

ஓவியன்
28-04-2007, 07:59 AM
நற்றமிழ் - தூய்மையானது.
செந்தமிழ் - செழுமையானது
பைந்தமிழ் - காலத்தால் அழியாது பசுமையானது

என்ன நான் கூறுவது சரியா?

அன்புரசிகன்
28-04-2007, 08:19 AM
முத்தமிழ் இயல் இசை நாடகம்.
நல்ல விடையமொன்று.

ஓவியன்
28-04-2007, 08:21 AM
பிள்ளைத்தமிழ் - குழந்தை பேசுவதா?

சுட்டிபையன்
28-04-2007, 08:30 AM
சுவடித் தமிழ் - எழுதிப் படிப்பது


என நான் சொல்வதும் சரிதானே

ஓவியன்
28-04-2007, 08:32 AM
சுவடித் தமிழ் - எழுதிப் படிப்பது


என நான் சொல்வதும் சரிதானே

சரிதான் என்று நினைக்கிறேன் - எழுத்து வடிவாக்கப் பட்ட தமிழ்.

அரசன்
28-04-2007, 11:13 AM
இலக்கியத் தமிழ் ஒன்றும் உள்ளது.

lolluvathiyar
28-04-2007, 12:05 PM
தெய்வதமிழ் என்று ஒன்று உண்டு
அதை பயன் படுத்தி நாவுக்கரசர், மானிக்கவாசகர்
ஈசனுக்கு பாடல் படைத்தார்கள்

ஓவியா
28-04-2007, 01:37 PM
நல்ல பதிவு. நன்றி மக்களே.

என்னுடைய முதல் தமிழ் புத்தகம் 6 வயதில் வாங்கியது.

'நற்றமிழ்' துணைவன் என்று பெயரிடப்பட்டிருந்தது.