PDA

View Full Version : மென்மை..!

அக்னி
27-04-2007, 11:59 PM
http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/My%20poems/j9.jpg

என் மனம்
கடினமானதுதான்...
அதனால்தானோ,
நீ எனக்குள்
அழிய முடியாமல்
பதிந்துபோனாய்..!

உன் மனம்
மென்மையானதுதான்...
அதனால்தானோ
நான் உனக்குள்
பதிய முடியாமல்
அழிந்துபோனேன்..?

ஓவியன்
28-04-2007, 04:25 AM
மனசின் மென்மை, வன்மை தான் இந்த காதற் தோல்விகளுக்கெல்லாம் - காரணமா?

அருமையான கற்பனை அக்கினி - வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
28-04-2007, 04:47 AM
அழகிய கவிதை.. அக்னி.. பெண்மையின் மென்மை புரிந்துகொள்ள முடியாதுது...

தொடருங்கள்..

crisho
28-04-2007, 04:54 AM
பிரமாதம்.
தொடருங்கள் கவிஞ்ஞரே!!
இன்னும் இன்னும் காண ஆவலாயிருக்கிறேன்

சுட்டிபையன்
28-04-2007, 05:03 AM
அழகான கவிதை அக்கினி மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்

arun
28-04-2007, 05:25 AM
கவிதை அருமை தொடருங்கள்

ஓவியா
28-04-2007, 02:54 PM
என் மனம்
கடினமானதுதான்...
அதனால்தானோ,
நீ எனக்குள்
அழிய முடியாமல்
பதிந்துபோனாய்..!

உன் மனம்
மென்மையானதுதான்...
அதனால்தானோ
நான் உனக்குள்
பதிய முடியாமல்
அழிந்துபோனேன்..?

காதலை வித்தியாசமாக கண்டு வடித்த கவிதை அருமை.

நல்லா கவிதை எழுதுகின்றீர்கள். பாராட்டுக்கள்..

அடுத்த கவிதை போட்டியில் கலந்து சிறப்பிக்கவும்.

கொசுரு:
மென்மையான மனதில் தான் சீக்கிரம் இடம் பிடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். கப்பல கவுதுட்டீகலே :music-smiley-019: ஹி ஹி ஹி ஹி

அக்னி
29-04-2007, 12:01 PM
அனைவருக்கும் நன்றிகள்...
* நான் கவிஞனா..? இல்லை கிறுக்கத் தெரிந்தவன்.
* "ஓவியாவின் கொசுருகள்" என புது திரி ஆரம்பிக்கலாம் போல இருக்கிறதே...
* நிச்சயமாக பங்குபற்ற முயற்சிக்கிறேன் ஓவியா...

அரசன்
29-04-2007, 12:03 PM
உங்கள் கவிதைகளில் ஒருவித ரசம் தெரிகிறது. வாழ்த்துக்கள் அக்னி!

அக்னி
01-05-2007, 06:54 AM
உங்கள் கவிதைகளில் ஒருவித ரசம் தெரிகிறது. வாழ்த்துக்கள் அக்னி!

விம்பம் தரும் கண்ணாடி ரசமா?
போதை தரும் திராட்ச்சை ரசமா?

ரசிப்புக்கு நன்றி...

மயூ
01-05-2007, 09:28 AM
வன்மை மென்மைக்கு புதிய அர்த்தம்... காதல் எங்கும் வியாபித்துள்ளது..!!!

அக்னி
01-05-2007, 07:14 PM
காதல் எங்கும் வியாபித்துள்ளது..!!!

ஆம்... மயூரேசன்!
காதலை மறுப்பவர்கள், வெறுப்பவர்கள் கூட காதல் இருப்பதை ஏற்றுக்கொண்டவர்களே. இல்லாவிடின், இல்லாத ஒன்றை மறுக்கவோ, வெறுக்கவோ முடியாது தானே...

அமரன்
26-05-2007, 05:29 PM
அருமை அக்னி. இக்கவிதையில் ஒரு விடயம் எனக்குப் பிடித்துள்ளது. இங்கே கடினமான மனதுக்குரியவர் ஆணா பெண்ணா என்றும் சொல்லவில்லை. மென்மையான மனதுக்குரியவர் ஆணா பெண்ணா என்றும் சொல்லவில்லை. அதை படிப்போர் கற்பனைக்கே விட்டிருக்கின்றீர்கள். பாராட்டுகள் அக்னி.

சின்னதாக ஒரு எடக்கு மடக்கு.
கல்நெஞ்சக்காரர்கள் மனதில் காதல் இல்லை என்பார்கள். ஆனால் கல்லில் பொறித்த எழுத்துகள் அழிவதில்லை. அப்போ எப்படி கல்நெஞ்சுக்காரன்(வன்மையான மனம்) காதல் வயப்ப்ட்டான்.

அக்னி
29-05-2007, 12:04 PM
சின்னதாக ஒரு எடக்கு மடக்கு.
கல்நெஞ்சக்காரர்கள் மனதில் காதல் இல்லை என்பார்கள். ஆனால் கல்லில் பொறித்த எழுத்துகள் அழிவதில்லை. அப்போ எப்படி கல்நெஞ்சுக்காரன்(வன்மையான மனம்) காதல் வயப்ப்ட்டான்.

முதலில் நன்றிகள் அமரன்...

அடுத்து,
கல்லில் சிற்பம் செதுக்கப்படுதல், கடினம். ஆனாலும் செதுக்கமுடியும் என்பது உண்மை.
அதேபோலத்தான், வன்மையான மனதிலும் காதல் வருவது கடினமானதாயிருந்தாலும், காதல் வரும் என்பதும் உண்மைதான்...

ஆதவா
06-06-2007, 07:51 PM
என் மனம்
கடினமானதுதான்...
அதனால்தானோ,
நீ எனக்குள்
அழிய முடியாமல்
பதிந்துபோனாய்..!

உன் மனம்
மென்மையானதுதான்...
அதனால்தானோ
நான் உனக்குள்
பதிய முடியாமல்
அழிந்துபோனேன்..?

தவறுகளையே சரிசெய்யும் பண்பு சிலருக்கு உண்டு.. வன்மையை மென்மையாக்கும் திறமை சிலருக்குண்டு. இந்த வகைக் கவிதைகள் கடினமான மனதை மென்மையாக்கி, மென்மையைக் கடினமாக்கும் மாற்றுக்கவிதைகள்.. இந்த மாறுதல் கவிதையின் வித்தியாசம். சிறு வரிகளுக்குள் வித்தியாசங்களைப் புகுத்தி இப்படியும் எழுத முடியும் என்பதை தங்களின் பேனா காண்பிக்கிறது.. மனம் மென்மையானதும் சில சமயங்களில் கடினமானதும்தான்...

அருமைக் கவிக்கு ஐம்பது..

அமரன்
10-06-2007, 07:23 PM
முதலில் நன்றிகள் அமரன்...

அடுத்து,
கல்லில் சிற்பம் செதுக்கப்படுதல், கடினம். ஆனாலும் செதுக்கமுடியும் என்பது உண்மை.
அதேபோலத்தான், வன்மையான மனதிலும் காதல் வருவது கடினமானதாயிருந்தாலும், காதல் வரும் என்பதும் உண்மைதான்...
கல்லில் செதுக்கும் சிற்பம்கூட அழியலாம்.
ஆனால் இதுபோன்ற கவியால் மனசில்
செதுக்கப்படும் சிற்பங்கள் என்றும் அழியாது.

மனோஜ்
10-06-2007, 07:32 PM
அருமை வன்மை மென்மையின் வித்தியாசம்

அக்னி
12-06-2007, 01:00 AM
தவறுகளையே சரிசெய்யும் பண்பு சிலருக்கு உண்டு.. வன்மையை மென்மையாக்கும் திறமை சிலருக்குண்டு. இந்த வகைக் கவிதைகள் கடினமான மனதை மென்மையாக்கி, மென்மையைக் கடினமாக்கும் மாற்றுக்கவிதைகள்.. இந்த மாறுதல் கவிதையின் வித்தியாசம். சிறு வரிகளுக்குள் வித்தியாசங்களைப் புகுத்தி இப்படியும் எழுத முடியும் என்பதை தங்களின் பேனா காண்பிக்கிறது.. மனம் மென்மையானதும் சில சமயங்களில் கடினமானதும்தான்...

அருமைக் கவிக்கு ஐம்பது..
நன்றி ஆதவா... விமர்சனத்திற்கும், பரிசிற்கும்...

கல்லில் செதுக்கும் சிற்பம்கூட அழியலாம்.
ஆனால் இதுபோன்ற கவியால் மனசில்
செதுக்கப்படும் சிற்பங்கள் என்றும் அழியாது.
நன்றி அமரன்...

அருமை வன்மை மென்மையின் வித்தியாசம்
நன்றி மனோஜ்...