PDA

View Full Version : கல் நெஞ்சமடி உனக்கு (ஜிஞ்சர்)ஓவியா
27-04-2007, 02:36 PM
வணக்கம் என் மன்ற உறவுகளே, :medium-smiley-065:இன்று நமது தமிழ் மன்றத்தில் எனது ஒன்றாவது பிறந்தநாள்.
இது எனது முதல் சிறுகதை.
என்னை தமிழ்தாயுடன் இணைத்த தமிழ் மன்றதிற்க்கு இது சமர்ப்பணம்.கல் நெஞ்சமடி உனக்கு (ஜிஞ்சர்)

பூமியின் ஏக்கங்களைக் கண்டு வர்ண பகவான் கர்ண பகவானாக மாறி, மருகும் காதலியிடம் மெல்ல மெல்ல உருகிக் கரையும் காதலன் போல், சொட்டு சொட்டாய், குட்டி குட்டியாய் வட்ட வட்டமாய் தூறல் போட்டார்.

ஒரே ஓட்டமாகச் சென்று கொடிக்கம்பத்தில் உலர்த்திய துணிகளை எடுத்து கொண்டாள் மல்லிகா. ஒரு புறம் சந்தோஷம், இன்றைய இரவாவது உஷ்ணமில்லாமல் இதமாக உறங்கலாம் என்று எண்ணிக்கொண்டே துணிகளை கட்டிலின் மேல் வைத்து உலர்ந்த துணிகளை மடிக்கலானாள்.

வீட்டிலிருந்து 'மியாவ் மியாவ்' என்று ஒரு மெல்லிய குரல் மெல்ல விட்டு-விட்டு ஒலிக்க, ஜன்னலில் எட்டிப்பார்த்தாள். ஒன்றும் புலப்படவில்லை. சில வினாடிகள் சென்று மீண்டும் 'மியாவ்' என்று சத்தம் வரவே, வாசலில் வந்து எட்டிப்பார்த்தாள். சப்பாத்து பெட்டியின் அடியில், தூறலில் நனைந்து ஒல்லியான தேகத்தில் ஒரு சாம்பல் நிற பூனைக்குட்டி நின்றுகொண்டிருந்தது. மல்லிகாவைப் பார்த்ததும் அது பயந்து பேந்த பேந்த விழித்தது. சடாரென ஒரே பாய்ச்சலில் வெளியில் குதித்து ஓடியது. மல்லிகா, உணர்ச்சியே இல்லாமல் உள்ளே சென்று மீதி துணிகளையும் மடித்து வைத்தாள்.

" இந்த பூனைங்களோட தொந்தரவைத் தாங்க முடியல.. சிவா!! சிவா!! எங்கடா இருக்கே!!!?"

" என்னம்மா? "

" என்னடா பண்ணீட்டு இருக்கே?"

" மாடியில படிச்சுட்டு இருக்கேன்மா"

" கிச்சன்ல பால் இருக்கு. குடிச்சுக்கோடா... அப்பாவ இன்னமும் காணமே! எங்கடா போனார் அப்பா?

சிவா மல்லிகாவின் இளைய மகன். ராம் மூத்தவன். ஒரே மகள் மாலா.. மல்லிகாவின் கணவர் சுந்தரம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துகொண்டிருக்கிறார். சின்ன குடும்பம். கலகலப்பான வீடு... எதிரெதிரே சில வீடுகள் இருந்தன. அமைதியான சுற்றுப்புறம்.. நிம்மதியான வாழ்க்கை.

சனிக்கிழமை மதியம், மின்விசிறி அது தான் பிறந்தப்பயனை செய்துக்கொண்டு இருந்தது. மல்லிகா மெல்ல கண்ணயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். மறுபடியும் அதே குரல், பூனையின் அழகான ராகம். இம்முறை மிக அருகில் கேட்பது போல் தோணவே சன்னலில் எட்டிப்பார்த்தாள். அதே பூனை பரிதாபமாய் நின்றுகொண்டிருந்தது. பட்டென்று சன்னலை அடைத்து விட்டுச் சென்றாள். சிறிதுநேரத்தில் ஏதோ தோன்றவே மீண்டும் சென்று எட்டிப்பார்த்தாள். பூனையாரைக் காணவில்லை, ஹூம் ரொம்பத்தான் ரோசம் அதுக்கு, போய்விட்டதோ என்று எண்ணி பூப்பறிக்க வாசல் கதவைத் திறந்தாள். பூனையார் மீண்டும் அதே சப்பாத்து பெட்டியின் அருகில் இருக்க 'ஏய்' என்று விரட்டினாள். பூனையோ சிறிது தூரம் சென்று, பின் திரும்பி அவளையே உற்று நோக்கியது. மல்லிகாவிற்க்கு மனது சற்று நெருடவே, பூனைக்கு பசிக்கும் போல என்று எண்ணியவாறு இரு வாரேன் என்று சொல்லி உள்ளே சென்றாள். உள்ளே வராதே என்று விரலசைத்தும் சென்றாள். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சிறிது பால் உற்றி எடுத்து வந்து கொடிக்கம்பத்தின் அருகில் வைத்து விட்டு,

" ஏய் உனக்குதான், குடிச்சுட்டு கெளம்பு, இனி இங்க வந்த கொன்னு போடுவேன் ஆமா, " என்று சொல்லிட்டு நடந்தாள்..
செல்லும்போதே திரும்பிப் பார்த்தாள்; பூனையார் அங்கேயே அமர்ந்து வீட்டை சுற்றும் முற்றும் நன்கு நோட்டம் விட்டார். மல்லிகாவோ சரி குடிச்சா குடி இல்லாட்டி போ என்று பூ பறித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

இரவு சென்று பகலை அனுப்பியது. வாசல் கழுவ வந்தாள் பிலாஸ்டிக் டப்பா கண்ணில் பட்டது, பார்த்தால் பால் இல்லை.

" மாலா! "

" என்னங்கம்மா?"

"நேத்திக்கு இந்த டப்பாவில இருந்த பாலை நீ கீழ ஏதாச்சும் கொட்டிட்டியா?"

" இல்லம்மா. ஏன் கேக்கிறீங்க?"

" சரி சரி.. ஒன்னுமில்ல. கொஞ்சம் இரக்கப்பட்டு பூனைக்கு பால் ஊத்தினேன். அதான் கேட்டேன்.. "

சில நாட்கள் பிறந்து இறந்தன, ஒரு இரவு 8 மணியளவில் அதே குரல் அதே வசனம், மீண்டும் எட்டிப்பார்கிறாள். மீண்டும் பூனையாரே வாசலில்....

"அடடா ஒருநாள் பால் வச்சா உடனே மறுபடியும் வந்திட்டியா, போ " என்று விரட்டினாள்.

"யாரம்மா ?" சின்னவன் சிவா கேட்டான்.

"அட அதுவா ஒரு பூனைக்குட்டிடா, அன்னைக்கு வந்துச்சு பால் வச்சேன், இன்னைக்கும் வந்துருச்சு... பாலெல்லாம் தீந்துருச்சி "

பார்த்த சிவாவின் கண்களில் அழகு பூனையின் பிம்பம் பதிந்தது. மீண்டும் 'மியாவ்' என்ற சப்தம் வந்தது.

"அம்மா பாவம்மா அது, பாலில்லைனா பரவாயில்லை கொஞ்சம் சோறு வைக்கலாமே " சிவா சொன்னான்.

"வேணாம், நீ போய் பாடத்த படி" அதட்டினாள் மகனை.

" பூனைக்குதான் மீன் பிடிக்குமாமே, இன்னைக்குதான் மீன் கறியாச்சே, கொஞ்சூண்டு போடுவோமே! பாவம் அது " என்று கெஞ்சினான்.

"சிவா உனக்கு பூனை பிடிக்குமா ?"

" அதெல்லாம் ஒன்னுமில்லே சும்மா பாவப்பட்டேன் ".

பதில் பெறாமலே சிவா காட்டூன் பார்க்க சென்று விட்டான். சலித்துக்கொண்டே ஒரு சிவப்பு பிலாஸ்டிக் தட்டில் சோறு பிசைந்து, பூனையிடம் சென்று, 'வாங்க ராசா உங்களுக்குதான்' என்று இளித்து கொண்டே வாசல் பக்கம் வைத்தாள்.....

காலையில் சுந்தரம், " என்ன இது யார் செஞ்சா இத ?" என்று கேட்க ,மல்லிகா வாசலில் வந்து நின்றாள், பிலாஸ்டிக் தட்டில் வைத்த சோறு சிறிது சிதறிக் கிடந்தது. சின்னவன் ஓடி வந்து,

"அதுவாப்பா?, நேற்று ஒரு சாம்பல் பூனைக்குட்டி வந்துச்சு, அம்மா சோறு போட்டாங்க" என்று பழியை மல்லிகா மேல் சுமத்தி நல்ல பிள்ளையானான்.

" ஓ அவ வேலையா இது.. " என்று சொல்லிவிட்டு சுந்தரம் அகன்றார். சிவாஅந்த பிளாஸ்டிக் தட்டில் ஏதோ ஒன்றை உற்று நோக்கினான், தட்டில் இஞ்சி கொஞ்சம் கிடந்தது.

"அம்மா அதுக்கு இஞ்சி பிடிக்காதுபோல, அதுதான் துப்பிடிச்சுனு சொல்லிவிட்டு காரினுள் அமர்ந்துகொண்டான்.

"உலகத்திலே உன் சமையல் பிடிக்காத ஒரே ஆளு இந்த பூனைக்குட்டிதான் " வஞ்சனை இல்லாமல் மனைவியைப் பாராட்டி சிரித்து விடைப் பெற்றார் சுந்தரம்.

இப்படியே இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தன, தினமும் இரவு 8 மணிக்கு அதே ராகம் அதே பல்லவி அதே வாசலில். இம்முறை எடுத்த எடுப்பிலே 5வது கட்டை சுருதியில் கம்பீரமாக " மியாவ் மியாவ் " பாடினார் பூனையார். சிவா ஓடி வந்து, " அம்மா ஜிஞ்சர் வந்து இருக்கு" என்றான்.

மல்லிகா, கொய்யாப்பழம் சீவிக்கொண்டே, " என்னடா அது ஜிஞ்சர் ? "என்றாள்.

"அதான்மா அந்த பூனைகுட்டி, அதுக்குத்தான் இஞ்சி பிடிக்காதே அதான் அதிரடியா டீச்சர்கிட்ட கேட்டு ஜிஞ்சர்னு ஃபேஷனா பேரு வெச்சுட்டேன், "இஞ்சி"னு தமிழில் வச்சா பூனைக்கு பிடிக்குமோ இல்லையோ! "மழழையாய் சிரிக்க மல்லிகாவும் சிரித்தாள்.

"என் அறிவாளி புள்ளடா நீ , சரி வா அதுக்கு சோறு வைக்கலாம்." என்று சொல்லிக் கொண்டே சாம்பார் கலந்துபிசைந்து வைத்தாள். காலையில் தட்டைக் கண்டால் சாம்பார் சாதம் சிறிது மீதம் வைத்துச் சென்றது ஜிஞ்சர். பாத்திரத்தைக் கழுவி ஒரு ஓரமாக வைத்தாள்.

மல்லிகாவைத் தவிர மற்றவர்கள் ரொம்பவே பாசமாக இருந்தார்கள் அந்த பூனைமீது. பூனையின் வருகைக்காக மாலாவும் சிவாவும் தினமும் எதிர்நோக்கி இருப்பார்கள். அன்று வீட்டில் விசேஷம். படபவென்று வேலைகளில் மூழ்கினாள் மல்லிகா. நேரம் போனதே தெரியவில்லை. 6 மணிக்கு பூஜை முடித்து உற்றார் உறவுகளுக்கு உணவு படைத்து அனுப்பி வைத்தாகிவிட்டது. அனைத்து பாத்திரங்களும் கழுவி வைத்தாகி விட்டது. சோர்வாக அமர்ந்தாள். ஜிஞ்சர் சரியா 9 மணிக்கு வந்துவிடும் (பூனைக்குட்டிதான்.. ). சிவா மெல்ல மல்லிகாவிடம் வந்து,

" அம்மா ஜிஞ்சரை நாமே வச்சுக்கலாமே ?" என்று அடம் பிடித்தான்,

"வேணாம் சிவா அண்ணாக்கு பூனைன்னா அலர்ஜி, அதுபாட்டுக்கு வரட்டும் போகட்டும்.. ஆனா நாமளே வெச்சுக்க வேண்டாம் " என்று சமாதானப்படுத்தினாள், சிவாவுக்கு ஜிஞ்சர் மேல் அளவுகடந்த பிரியம். சில சமயம் அதனுடன் விளையாடுவான். கொஞ்சுவான்...

இன்றும் வந்தது. தன் வழக்கமான பாடலை மெல்ல ஆரம்பித்தார் பூனையார் ஜிஞ்சர். மல்லிகாவிற்க்கு ஒரே கலக்கம் அடடா ஒன்னுமில்லையே என்று, அதற்க்குள் மகள் மாலா ஜிஞ்சருக்கு ஏதோ எடுத்துச்சென்றாள்,

"மாலா என்ன அது ?" மல்லிகா.

"ஜிஞ்சருக்கு சோறு " என்றாள்,

"கறி இல்லையே ?"

"இல்லமா; அண்ணா , கடையில் இருந்து நெத்திலித்தல வாங்கிட்டு வந்தான்"

" பணம்? "

ராம் வெளியே வந்து, " அவதான் உண்டியில் இருந்து காசு எடுத்து கொடுத்தா என்று சொன்னான்.

" ஆமா ஐடியா நாந்தான் கொடுத்தேன் "சிவா பூரித்தான் . தாய் ஆச்சரியமாகப் பார்த்தாள், தந்தை எதுவும் கேட்காதவர் போல் செய்தி கேட்டுக்கொண்டு இருந்தார்.

மறுநாள் காய்கறிகளுடன் 1 கிலோ நெத்திலித்தலையும் வாங்கிக்கொண்டு வந்தார் சுந்தரம். இவர்களோடு சுந்தரமும் கூட்டணி சேர்ந்து விட்டார். மல்லிகா மீன் குழம்பு வைக்க மீனை கழுவ, பின் கதவைத் திறந்து வெளியில் உள்ள குழாயில் அமர்ந்தாள், பக்கத்து வீட்டு பாத்திமாவின் மகள் 6 வயது ஜுபைடா குட்டி ஜட்டியுடன் பல் துலக்கிகொண்டு இருந்தாள், மல்லிகாவை உம்மா என்றுதான் அழைப்பாள். ஸ்கூலுக்கு போகலையா ஜுபி என்று கேட்க, வாயில் நுரையுடன் இல்லை என்று தலையசைத்தாள். பின் ஜுபைடா மெல்ல கண் ஜாடை காட்டினாள். என்ன என்று விளங்காத மல்லிகா, என்னடி ஜுபி என்று கேட்க, உணர்ச்சியின் உச்சியில் சென்ற ஜுபி அய்யோ உம்மா அங்க பாருங்க உங்க பெஸ்ட் ஃபிரண்டு வந்திருக்கார் என்று ஆவேசமாக சொன்னாள்.

பின்புறம் ஜிஞ்சர் அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாய் அமர்ந்திருந்தார்....ஓ இவரா!!

"வாங்க சார், என்ன இன்னைக்கு பகலியே வந்துடீங்க? போய்ட்டு இரவு வாங்க...ம்ம் என்ன சரியா..?" பேசிக்கொண்டே மீன்கழிவுகளைப் போட்டாள். ஜிஞ்சரும் மெல்ல சப்பு கொட்டி சாப்பிட்டது. வீட்டில் தொலைப்பேசி அடித்தது. மல்லிகா, மீன்கள் அனைத்தையும் ஒரே பாத்திரத்தில் வைத்து மூடி ஜன்னலின் அருகே மேசைமீது வைத்து விட்டு அவசரமாகச் சென்றாள்.

அதற்க்குள் ஜுபி " உம்மா உம்மா " என்று அலர, பின் பக்கம் ஓடி வந்தாள் மல்லிகா, அவள் வருவதற்குள் ஜிஞ்சரய்யா மூடியைத் தள்ளிவிட்டு ஒரு பெரிய மீனைக் கவ்வி மேசை மீதிருந்து குதித்தார்.

மல்லிகாவை கண்டதும் வேகமாகத் தாவி வெளியில் ஓடியது ஜிஞ்சர். மல்லிகாவும் விரட்ட அதுவும் ஓட பின் அதுவே நின்று நிதானமாக மல்லிகாவை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு அன்ன நடையில் ஃகேட் வாஃகீங்கைத் தொடர்ந்தது. "பாத்தியா! பாத்தியா! உன் புத்திய காட்டீட்ட... என்று மல்லிகா கையில் கிடைத்த பாத்திரத்தை விசிறி அடித்தாள். அது கண்டுக்கவே இல்லை. "ச்சே உன்ன போய் நான் கூட்டாளி பிடிச்சேன் பாரு என்னை சொல்லனும். உன் புத்தி மாறாது, இரு இரு ராத்திரி வருவேல்ல அப்ப வச்சுகிறேன். எனக்கு நல்ல வேணும்." முணகிக் கொண்டே மீன்களை மீண்டும் சுத்தம் செய்தாள். பிள்ளைகள் வந்ததும் புலம்பினாள்.

இரவு...

அது நானா என்பது போல அப்பாவியாய் 9 மணிக்கு ஆஜர் ஆகியது செல்லப் பூனை ஜிஞ்சர். மல்லிகாவின் கட்டளைப்படி யாரும் உணவு வைக்கச் செல்லவில்லை. சிவா உறங்கி இருந்தான். ராம்தான் "பாவம் விடும்மா" என்று வாதாடினான். மாலா கதை புத்தகத்தில் மூழ்கி ஜிஞ்சரை கண்டு கொள்ளவில்லை. "மியாவ் மியாவ்" என்று பாடி பாடி களைப்புற்றது. பின் சத்தம் இல்லை. அனைவரும் உறங்கியபின் மீண்டும் வந்தது தனக்கு தெரிந்த ஒரே ராகத்தை மீண்டும் ஆரம்பித்தது. சமயலறையில் ஏதோ சத்தம் கேட்க மல்லிகா சென்று கண்டாள். சுந்தரம் நெத்திலியுடன் சோறு பிசைந்துகொண்டு இருந்தார்.

"பாவம்டி அது, கல் நெஞ்சம்டீ உனக்கு, உண்மையிலே கல் நெஞ்சம்.. போயும் போயும் ஒரு பூனைகூடவா சண்டை போடனும்? குழந்தை போல் அடம் பண்ணாதே மல்லிகா !! "என்று ஜிஞ்சரை கவனிக்கச் சென்றார்.

காலையில் பாத்திரத்தில் சுந்தரம் வைத்த உணவில் பாதி அப்படியே இருந்தது. மல்லிகாவிற்க்கும் மனது ஒரு மாதிரி இருந்தாலும் அந்த நிகழ்ச்சியையே நினைத்துக் கொண்டிருந்தாள். பிறகு இரண்டு நாட்கல் ஜிஞ்சர் வரவில்லை. வீட்டில் அனைவரும் ஜின்சரைத் தேடினர். சிவா ஏங்கிப் போனான்.

மூன்றாம் நாள் ஜின்சர் வந்தது, மல்லிகாவே 2 முறை சாப்பாடு வைத்தாள். அருகில் இருந்து சாப்பிடுவதையும் கவனித்தாள். சிவாவுடன் நன்கு விளையாடியது.

சில நாட்கள் நகர்ந்தன.

டூட்டி ஆபீசர் போல் தினமும் 9 மணிக்கு ஆஜர் ஆகிவிடுவார். என்ன வைத்தாலும் சாப்பிட்டுவிட்டு சென்று விடுவார். ரசம், சாம்பார், கீரைக்கடையல் என்று தமிழ் பூனையாகவே மாறியது ஜின்சர்.

நேற்று வரவில்லை.

இன்றும் வரவில்லை.

மல்லிகா வீட்டிலே மீன் கழுவிக் கொண்டிருந்தாள் திடீரென தொலைப்பேசி அலறியது. பள்ளியிலிருந்து சிவாவின் ஆசிரியர் போன் செய்தார். என்ன விசயம் என்று கேட்க சிவாவிடம் போனைக் கொடுத்தார். சிவா அழுதுகொண்டே இருந்தான்

" சிவா ஏண்டா அழறே சொல்லுடா " பதட்டமானாள் மல்லிகா,

"அம்மா நான் ஜிஞ்சரப் பார்த்தேன்மா" என்றான்,

"இத வீட்டில் வந்து சொல்லாமே! சரி அழாதே ராத்திரி வரும்" என்றாள்.

"இல்லைமா அது வராது, நான் பார்த்தேன் அது ரோட்டுலே அடி பட்டு செத்துபோச்சு. நான் அத தூக்கிகிட்டு வீட்டுக்கு வரட்டா "என்று கேட்டான்,

"அதெல்லாம் ஒன்னும் வேனாம். நீ போய் பாடத்த படி " என்றாள்.

மீண்டும் மீன் கழுவச் சென்றவளுக்கு என்னமோ மனம் கனத்தது. சட்டென்று கண்ணீர்த் துளிகள் கழுவிய மீன்களின் மேல் விழுந்தது சுந்தரம் சொல்லிய கல் நெஞ்சமடி உனக்கு என்ற வார்த்தை மனதுக்குள் எதிரொலித்தது.....

மீண்டும் மீண்டும் விழுந்த கண்ணீர்த் துளிகள் கல் நெஞ்சமடி உனக்கு என்ற வசனத்தை பொய்யாக்கியது.

ஓவியா
27-04-2007, 02:45 PM
என் முதல் நன்றி எனதருமை தம்பி ஆதவாவிற்க்கு.

இக்கதைக்கு எழுத்துப்பிழை மட்டுமல்லாமல் நான் வடித்த சிலையை சிற்ப்பமாய் வடிக்க உதவி புரிந்ததற்க்கும் இந்த பொன்னான நேரத்தில் ஆதவாவிற்க்கு இருகரங்கூப்பி மீண்டும் மீண்டும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்

நன்றி ஆதவா

s_mohanraju
27-04-2007, 02:54 PM
சூப்பர்.................

என்னங்க இது ஆனந்தவிகடன்.காம் நினைத்து மாற்றி பொஸ்ட் செய்துவிட்டீர்களா?

முதல் கதை என்பதை நம்ம முடியவில்லை, அது உண்மையாயின்
முதல் கதையிலே சென்சூரி அடிச்சீட்டீங்க

தமிழ்த்தாயின் வாரீசுர்க்கு வாழ்த்துக்கள்

மனோஜ்
27-04-2007, 03:01 PM
இளகிய நெஞ்சு உங்களுக்கு ஓவி அக்கா
அருமையான பூனையை மையமாக வைத்த கதை இதயத்தை இளக்கியது:nature-smiley-003:
பல வருடங்கள் தொடர்ந்து மன்றம் வர வாழ்த்துக்கள்:nature-smiley-002:

பென்ஸ்
27-04-2007, 03:05 PM
வாசித்தேன்...
வியந்தேன்...
யோசித்தேன்...
பாராட்டுகிறேன்...

விமர்சனம் ... பின்பு...

ஓவியா
27-04-2007, 04:42 PM
சூப்பர்.................

என்னங்க இது ஆனந்தவிகடன்.காம் நினைத்து மாற்றி பொஸ்ட் செய்துவிட்டீர்களா?

முதல் கதை என்பதை நம்ம முடியவில்லை, அது உண்மையாயின்
முதல் கதையிலே சென்சூரி அடிச்சீட்டீங்க

தமிழ்த்தாயின் வாரீசுர்க்கு வாழ்த்துக்கள்

நன்றி மோஹன்ராஜ்.

100% இது என் கதையே. என் கற்ப்பனைக்கு எட்டிய கருவை எழுதினேன்.

என் முதல் கதைக்கு முதல் வாழ்த்து பின்னூட்டமிட்டு என்னை புன்னகை பூக்க வைத்து விட்டீர்கள்.

சென்சூரி அடிச்சீடேனா!!! மன்மதனும் ஜீவாவும் பார்த்து சிரிக்க போராங்க. ஹி ஹி ஹி.

mukilan
27-04-2007, 05:11 PM
ஒரு சிறுகதைக்குரிய அனைத்து அம்சங்களுடனும். ஒரு சிறு நிகழ்வு, சம்பந்தப் பட்ட பாத்திரங்கள் மட்டுமல்லாமல் ஜூபைதா போன்ற ஒப்புப் பாத்திரங்களும் தேர்ந்த எழுத்தாளர் ஆக எடுக்கும் முயற்சியோ? வாழ்த்துக்கள். முதல் கதையே முத்தாய்ப்பான சிறுகதையாகிவிட்டது. இன்னும் எழுதுங்கள் ஓவியா. மன்றத்து கதாசிரியர் ஆக வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
27-04-2007, 08:16 PM
பூமியின் ஏக்கங்களைக் கண்டு வர்ண பகவான் கர்ண பகவானாக மாறி, மருகும் காதலியிடம் மெல்ல மெல்ல உருகிக் கரையும் காதலன் போல், சொட்டு சொட்டாய், குட்டி குட்டியாய் வட்ட வட்டமாய் தூறல் போட்டார்.

நீங்க எங்கேயோ போயீட்டீங்க... (இப்போ லண்டனிலா உள்ளீர்கள்). வரிகள் நன்றாக உள்ளது.. எங்கேயோ இடிக்கிறதே...

என்னவென்று பாராட்ட. எறும்பு ஊர கல்லும் தேயும் என்பது போல் மல்லிகாவின் கல்மனசையும் கரைத்துவிட்டதுது அந்த ஜிஞ்சர்.

வாழ்த்துக்கள் அக்கா... (4000 ஆவது பதிவோ? :D)

அன்புரசிகன்
27-04-2007, 08:34 PM
ஓஓஓ.. இது உங்களது கன்னி சிறுகதையோ... கன்னியிலேயே கலக்கீட்டீங்க. எப்பிடித்தான் முடியுதோ?... இதுக்கெல்லாம் குப்பி எடுக்க முடியுமா? (நாம ரொம்ப வீக்)

ஓவியா
27-04-2007, 10:19 PM
இளகிய நெஞ்சு உங்களுக்கு ஓவி அக்கா
அருமையான பூனையை மையமாக வைத்த கதை இதயத்தை இளக்கியது:nature-smiley-003:
பல வருடங்கள் தொடர்ந்து மன்றம் வர வாழ்த்துக்கள்:nature-smiley-002:

மிக்க நன்றி மனோஜ்.

கதை பிடித்ததா!! மிக்க மகிழ்ச்சி. :ernaehrung004:

வாழ்த்துகளுக்கும் நன்றி.

ஓவியா
27-04-2007, 10:26 PM
வாசித்தேன்...
வியந்தேன்...
யோசித்தேன்...
பாராட்டுகிறேன்...

விமர்சனம் ... பின்பு...

நன்றி நண்பா..

வியக்க வைத்தேனா!!!!!!!!!! :medium-smiley-025:

ஓவியா
27-04-2007, 10:28 PM
ஒரு சிறுகதைக்குரிய அனைத்து அம்சங்களுடனும். ஒரு சிறு நிகழ்வு, சம்பந்தப் பட்ட பாத்திரங்கள் மட்டுமல்லாமல் ஜூபைதா போன்ற ஒப்புப் பாத்திரங்களும் தேர்ந்த எழுத்தாளர் ஆக எடுக்கும் முயற்சியோ? வாழ்த்துக்கள். முதல் கதையே முத்தாய்ப்பான சிறுகதையாகிவிட்டது. இன்னும் எழுதுங்கள் ஓவியா. மன்றத்து கதாசிரியர் ஆக வாழ்த்துக்கள்.

முகி, நம்பவே முடியலையே!!!!!!

நீங்க பாராட்டினா கதை கொஞ்சம் ஃசக்சஸ் தான்.

நன்றி நண்பா.

ஓவியா
27-04-2007, 10:43 PM
நீங்க எங்கேயோ போயீட்டீங்க... (இப்போ லண்டனிலா உள்ளீர்கள்). வரிகள் நன்றாக உள்ளது.. எங்கேயோ இடிக்கிறதே...

என்னவென்று பாராட்ட. எறும்பு ஊர கல்லும் தேயும் என்பது போல் மல்லிகாவின் கல்மனசையும் கரைத்துவிட்டதுது அந்த ஜிஞ்சர்.

வாழ்த்துக்கள் அக்கா... (4000 ஆவது பதிவோ? :D)

ஓஓஓ.. இது உங்களது கன்னி சிறுகதையோ... கன்னியிலேயே கலக்கீட்டீங்க. எப்பிடித்தான் முடியுதோ?... இதுக்கெல்லாம் குப்பி எடுக்க முடியுமா? (நாம ரொம்ப வீக்)

குப்பியா!!!!!! கொஞ்சம் ஓவாராதான் தெரியுது. இல்ல நேசமாவேதானா?

சில கல் மனது கரையாவே கறையாது. ஆனால் எறும்புர கல் தேயும்.

பாராட்டிற்க்கு நன்றி அன்பு.

அக்னி
27-04-2007, 10:53 PM
கன்னி முயற்சியே அசத்தலாக, அருமையாக உள்ளது. முதலாமாண்டு மன்ற நுழைவு நிறைவு நாளில், ஒவ்வொருவரும் உங்களை வாழ்த்தி நிற்க, நீங்கள் மன்றத்திற்கு அணி செய்துவிட்டீர்கள். உங்களது சிறுகதைப் பயணத்தை இன்றுதான் ஆரம்பித்திருக்கிறீர்கள். எனவே பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்திடுங்கள். எல்லோருடைய வாழ்த்துக்களுடனும் எனது வாழ்த்துக்களும்... பலப்பல..!

ஓவியா
27-04-2007, 11:41 PM
அக்கினியாரே,
தங்களின் கருத்துக்களுக்கும் ஆதரவிற்க்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி.

ஒரு கதையாவது எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்று தமிழ் மன்றத்தின் உதவியால் அது நிறைவேறியது.

மன்றத்தில் இணைந்திருங்கள்.

arun
28-04-2007, 05:37 AM
ஒரு அருமையான சிறு கதைக்குரிய அனைத்து அம்சங்களும் உள்ளது பாராட்டுக்கள் மென்மேலும் பல படைப்புகள் இது போல படைக்க எனது வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
28-04-2007, 07:16 AM
கதை ரொம்ப நல்லாருந்துச்சி ஓவியா.. கவிஞர்கள் கதை எழுத ஆரம்பிச்சா, வார்த்தைகள் கவிதையா வருவதை தடுக்க முடியாது.. ரசித்தேன் பல இடங்களில்.. உதாரணமாக, பூனை 'கேட் வாக்' செய்தது..

தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

Manimegalai
28-04-2007, 09:37 AM
உங்களுடய முதல் படைப்பு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ஓவியா...

:icon_give_rose:

ஓவியா
28-04-2007, 01:42 PM
ஒரு அருமையான சிறு கதைக்குரிய அனைத்து அம்சங்களும் உள்ளது பாராட்டுக்கள் மென்மேலும் பல படைப்புகள் இது போல படைக்க எனது வாழ்த்துக்கள்

நன்றி அருண்.

அனைத்து பெருமையும் மன்றத்தச் சாரும்.கதை ரொம்ப நல்லாருந்துச்சி ஓவியா.. கவிஞர்கள் கதை எழுத ஆரம்பிச்சா, வார்த்தைகள் கவிதையா வருவதை தடுக்க முடியாது.. ரசித்தேன் பல இடங்களில்.. உதாரணமாக, பூனை 'கேட் வாக்' செய்தது..

தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

நன்றி ஷி.

உங்க பாராட்டு கதைக்கு நல்ல மதிப்பை கொடுக்கும்.உங்களுடய முதல் படைப்பு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ஓவியா...

:icon_give_rose:

நன்றி மணி.

உங்கள் தமிழ் புலமைக்கு நீங்களும் கதை எழுதலாம் தோழி.

சுட்டிபையன்
29-04-2007, 09:23 AM
அழகான கதை கரு ஆழமாக சொல்லி இருந்தீர்கள், இறுதியில்தான் மனதை கலங்க வைத்து விட்டீர்கள்

ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வோர் மாதிரி, எல்லோர் மனதிலும் ஈரமிருக்கும்

ஆரம்பமே அசத்தீட்டீங்கள் என்னும் பல படைப்புகள் வழங்க வேண்டும் மன்றத்த்துக்கு
வாழ்த்துக்கள்

ஓவியன்
30-04-2007, 05:38 AM
ஒரு சிறு பொறியில் இருந்து ஒரு அக்னிப் பிராவகத்தையே உருவாக்கிவிட்டீர்களே ஓவியா!

ஓவியா!

கல்நெஞ்சம் தான் உங்களுக்கும்,இவ்வளவு திறமையை இதுவரை வெளிப்படுத்தாது ஒளித்து வைத்திருக்கிறீங்களே?

உங்கள் கல் நெஞ்சத்தை உடைத்த அந்த 4000 வது பதிப்பு வாழ்க.

மன்மதன்
30-04-2007, 06:43 AM
வர்ண பகவான் கர்ண பகவானாக மாறி

மருகும் காதலியிடம் மெல்ல மெல்ல உருகிக் கரையும் காதலன் போல்

சொட்டு சொட்டாய், குட்டி குட்டியாய் வட்ட வட்டமாய் தூறல் போட்டார்

மின்விசிறி அது தான் பிறந்தப்பயனை செய்துக்கொண்டு இருந்தது

அன்ன நடையில் கேட் வாக்கிங்கைத் தொடர்ந்தது.

மாதிரியான சொற்றொடர்களும், கதாபாத்திர தேர்வுகளும் கைதேர்ந்த எழுத்தாளர் (என்னை மாதிரி) எழுதிய மாதிரி இருக்கு.. சபாஷ்.. நீங்க பாஸ் ஆயிடீங்க.. பாஸ் என்று சொன்னது ஜஸ்ட் ப்பாஸ் இல்லை.. சிவாஜி தி பாஸ் மாதிரி .. கதை எழுதுவதிலும் நீங்க பாஸ் ஆயிட்டிங்க..

இது கதை அல்ல....நிஜம்...

மதி
30-04-2007, 07:48 AM
ஓவியாக்கா,

இதுவரை தங்கள் கவித்திறனை வெளிப்படுத்திய நீங்கள் இப்போது கதை சொல்லும் திறனிலும் சிறந்து விளங்குகிறீர்கள். முதல் கதை என்று நம்பமுடியவில்லை.

எப்படியோ நம் மன்றம் உங்களுள் இருக்கும் திறன்களை வெளிக்கொணரும் கருவியாய் இருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே..!

மேலும் தொடருங்கள் உங்கள் ராஜாங்கத்தை..!

ஜெயாஸ்தா
30-04-2007, 01:43 PM
பிசிறில்லாத எழுத்துநடை. கோர்வையான வாக்கியங்கள். நல்லமுறையில் சித்திகரிக்கப்பட்ட பாத்திரங்கள். அனைத்துமே நன்று ஓவியா. ஆனால் மற்ற நண்பர்கள் சொல்வது போல் 'ஜிஞ்சரி"ன் இழப்பு மட்டும் என் மனதில் அந்த அளவுக்கு ஒட்டவில்லை. அதன் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன். அப்படி சொல்லியிருந்தால் அது இன்னும் மனதில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அப்படி ஏற்படுத்தியிருந்தால் இதை விட இந்தக்கதை இன்னும் சிறப்பாய் வந்திருக்கும். ஒருவேளை "என் மனமும் கல்நெஞ்சமோ?"

gragavan
30-04-2007, 02:55 PM
நல்ல முயற்சி ஓவியா. முதல் முயற்சி என்பதால் கண்டிப்பாக பாராட்டலாம். இன்னும் சிறப்பாக எழுத முயலவும். எழுத முடியும்.

பாரதி
30-04-2007, 03:18 PM
அன்பு ஓவியா...

சிறப்பான முதல் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மனதை பாதித்த அல்லது பாதிக்கும் என்று நினைக்கும் சம்பவங்களை எழுத்தில் வடிக்கும் முயற்சி போல தோன்றுகிறது.

முதல்படி வைத்து விட்டீர்கள் அல்லவா... இனி தொடர்ந்து முன்னேற்றம்தான். முன்பு சொன்னதை மீண்டும் சொல்கிறேன். உங்களால் முடியும். நிச்சயம் முடியும். வளர வாழ்த்துக்கள்.

pradeepkt
01-05-2007, 06:31 AM
அம்மணி... எப்படிங்க இது...
முதல் முயற்சிக்குச் சும்மா பின்னிட்டீங்கன்னுதான் சொல்லணும்... ஆனா நீங்க பாரதியண்ணா சொன்ன மாதிரி மனதைப் பாதிக்கும் விசயங்களை எந்தப் பாசாங்கும் இல்லாமல் ஒரு கதை சொல்லி போல் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

வர்ணனைகள் எல்லாம் சூப்பர்தான் ... கடைசியில் ஒரு சின்ன ஜெர்க் விட்டு விட்டதாய்த் தோன்றியது... இன்னும் நேரம் இருந்தால் மெருகேற்றி இருப்பீர்கள்தானே...

எல்லாருமே நல்லாருக்குன்னு சொல்லிட்டா என்னான்னு நான் கொஞ்சம் உல்டா அடிச்சேன்... ஹிஹி :D

ஆதவா
02-05-2007, 05:43 AM
கதை அருமை... விமர்சனம் பின்...

mravikumaar
02-05-2007, 06:15 AM
உங்கள் முதல் படைப்பில் கலக்கிட்டிங்க ஓவியா

மீண்டும் மீண்டும் கலக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
ரவி

ஜெயாஸ்தா
02-05-2007, 12:58 PM
கதை அருமை... விமர்சனம் பின்...

ஆதவா சீக்கிரம் உங்கள் விமர்ச்சனத்தை தாருங்கள். உங்களின் நறுக்கென்ற நடுநிலையான விமர்ச்சனத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

அரசன்
03-05-2007, 11:04 AM
முதல் கதையா! பல வருடமாக தொடர்ந்து கதை எழுதுரவங்க மாதிரி எழுதியிருக்கீங்க, வார்த்தைகளை அப்படி அமைச்சிருக்கீங்க,குறிப்பாக "மின்விசிறி அது தான் பிறந்தப்பயனை செய்துக்கொண்டு இருந்தது." அப்பறம்
"இரவு சென்று பகலை அனுப்பியது" பிறகு
"சில நாட்கள் பிறந்து இறந்தது." இதெல்லாம் ஒரு கதையாசிரியரின் காதைபோல், ஒரு நாவல் போல் வரிகளை அமைத்து இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

ஓவியா
04-05-2007, 02:14 AM
அழகான கதை கரு ஆழமாக சொல்லி இருந்தீர்கள், இறுதியில்தான் மனதை கலங்க வைத்து விட்டீர்கள்.

ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வோர் மாதிரி, எல்லோர் மனதிலும் ஈரமிருக்கும்
ஆரம்பமே அசத்தீட்டீங்கள் என்னும் பல படைப்புகள் வழங்க வேண்டும் மன்றத்த்துக்கு
வாழ்த்துக்கள்

அழகிய கருத்துக்கள். நன்றி சஞ்சய். மன்றத்துடன் என்னாளும் இணைந்திருங்கள்.

ஓவியா
04-05-2007, 02:20 AM
வர்ண பகவான் கர்ண பகவானாக மாறி

மருகும் காதலியிடம் மெல்ல மெல்ல உருகிக் கரையும் காதலன் போல்

சொட்டு சொட்டாய், குட்டி குட்டியாய் வட்ட வட்டமாய் தூறல் போட்டார்

மின்விசிறி அது தான் பிறந்தப்பயனை செய்துக்கொண்டு இருந்தது

அன்ன நடையில் கேட் வாக்கிங்கைத் தொடர்ந்தது.

மாதிரியான சொற்றொடர்களும், கதாபாத்திர தேர்வுகளும் கைதேர்ந்த எழுத்தாளர் (என்னை மாதிரி ஹி ஹி ஹி) எழுதிய மாதிரி இருக்கு.. சபாஷ்.. நீங்க பாஸ் ஆயிடீங்க.. பாஸ் என்று சொன்னது ஜஸ்ட் ப்பாஸ் இல்லை.. சிவாஜி தி பாஸ் மாதிரி .. கதை எழுதுவதிலும் நீங்க பாஸ் ஆயிட்டிங்க..

இது கதை அல்ல....நிஜம்...

நன்றி மன்மதன். எனக்கு பிடித்த வரிகளையே 'கோட்' செய்து காட்டியுள்ளீர்கள். அதாவது அந்த முதல் வரி....:sport-smiley-002:
அதுவே எனக்கு மகிழ்சிதான். உங்க பாராட்டு என்னை மீண்டும் எழுத தூண்டியது போல் உள்ளது. நன்றி நன்றி நன்றி.

ஆத்தா, நான் சிவாஜி தி பாஸ் மாதிரி ஆயிட்டேன்.

ஓவியா
04-05-2007, 02:22 AM
ஓவியாக்கா,

இதுவரை தங்கள் கவித்திறனை வெளிப்படுத்திய நீங்கள் இப்போது கதை சொல்லும் திறனிலும் சிறந்து விளங்குகிறீர்கள். முதல் கதை என்று நம்பமுடியவில்லை.

எப்படியோ நம் மன்றம் உங்களுள் இருக்கும் திறன்களை வெளிக்கொணரும் கருவியாய் இருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே..!

மேலும் தொடருங்கள் உங்கள் ராஜாங்கத்தை..!

மிக்க நன்றி மதி. உன் ஊக்கம் என்றும் எனக்கு வேண்டும். என்னை ஓடி வந்து பாராட்டும் உன் அன்பும் என்னாளும் எனக்கு வேண்டும்..:icon_dance:

ஓவியா
04-05-2007, 02:23 AM
ஒரு சிறு பொறியில் இருந்து ஒரு அக்னிப் பிராவகத்தையே உருவாக்கிவிட்டீர்களே ஓவியா!

ஓவியா!

கல்நெஞ்சம் தான் உங்களுக்கும், இவ்வளவு திறமையை இதுவரை வெளிப்படுத்தாது ஒளித்து வைத்திருக்கிறீங்களே?

உங்கள் கல் நெஞ்சத்தை உடைத்த அந்த 4000 வது பதிப்பு வாழ்க.[/SIZE][/COLOR]

நன்றி ஓவியன். என் எழுத்துப்பிழை (நான் தமிழ் கற்றது 7வயதில்) என்னை எழுத விடாமல் எத்தனையோ முறை தடுத்துள்ளது, அதனால் தான் சற்று தயக்கம். வாய்ப்பிருபின் தொடர்ந்து எழுதுவேன்.

ஓவியா
04-05-2007, 02:36 AM
பிசிறில்லாத எழுத்துநடை. கோர்வையான வாக்கியங்கள். நல்லமுறையில் சித்திகரிக்கப்பட்ட பாத்திரங்கள். அனைத்துமே நன்று ஓவியா. ஆனால் மற்ற நண்பர்கள் சொல்வது போல் 'ஜிஞ்சரி"ன் இழப்பு மட்டும் என் மனதில் அந்த அளவுக்கு ஒட்டவில்லை. அதன் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன். அப்படி சொல்லியிருந்தால் அது இன்னும் மனதில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அப்படி ஏற்படுத்தியிருந்தால் இதை விட இந்தக்கதை இன்னும் சிறப்பாய் வந்திருக்கும். ஒருவேளை "என் மனமும் கல்நெஞ்சமோ?"

நன்றி ஜே.எம். உங்கள் விமர்சனம் என்னைக் கவர்ந்தது.

ஒரு விசயம் என்னவென்றால், சோகம் வாழ்க்கையெனும் மரத்தில் ஒரு முக்கிய கிளைதான், ஆனால் எனக்கு சோகம் பிடிக்காது, அதே வேளை அதிக சந்தோசமும் என்னை கவராது.

இந்த கதைகூட யார் மனதிலும் அதிகம் தாக்கத்தை கொடுக்கக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்தேன். இந்த கதையை எழுத நான் எடுத்துக்கொண்டா நேரம் வெரும் 2 மணி நேரம்தான்.

கதை சிறப்பாக வரவில்லையென்றால் வலி எனக்கு மட்டுமே, ஆனால் வலி அதிகமாகி இருந்தால், 1 வினாடியாவது அது பலரை காயப்படுத்தும். அதில் எனக்கு விருப்பமில்லை. புற்களுக்கு வலிக்கும் என்று (கோமாளியாக) புற்தரையில் நடக்கவே தயங்கும் நான் எப்படி மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்ப்படுத்த முடியும். இது என் பலவீனம்.

ஆதவா
04-05-2007, 02:44 AM
அய்யய்யோ!! விமர்சனம் போட மறந்துட்டேனே!!!.

ஓவியாக்கா மன்னியுங்க..... இதுக்கு மட்டுமில்லை.. நீங்க கஷ்ஷ்ஷ்டப்பட்டு எழுதற பின்னூட்டத்திற்கு நான் சாதாரணமா நன்றின்னு போட்டுட்டு போய்டுவேன்... என்ன பண்றது..??? சில நேரத்தில ஏதாவது கேள்வி கேட்டீங்கன்னா மறந்துடுவேன்.. இதுமாதிரி நிறைய விட்டாச்சு... அது எல்லாத்துக்கும் மன்னிப்பு...... (கோவம் தீர்ந்ததா?)

சரி கதைக்குள் வருவோம்....

முதல் ஆரம்பம்.. அடடா.. சொட்டு சொட்டாய், குட்டி குட்டியாய்... அழகான ஆரம்பம். திறமையான புத்திசாலி புள்ள (அக்கா) நீங்க. சில இடங்கள்ல்ல நின்னு படிக்கனும்... வரிகள் சுவாரசியமா அமைஞ்சிருக்கு,.. அதென்னங்க சப்பாத்து பெட்டி... இப்படி ஒரு வார்த்தையை நான் கேள்வி பட்டதே இல்லை.

இந்தம்மா எந்நேரமும் மீன் தான் சாப்புடுவாங்களா.... கதையிலேயே மூனுதடவ சாப்பிடறாங்க.. நெசத்தில எவ்வளவோ! பூனை இந்த மாதிரி லேசுல அடிபடாது... எனக்குத் தெரிஞ்சு ஆக்ஸிடெண்ட் ஆகுறது பூனனக்கு அவ்வளவா இல்லை. பெருச்சாளி, எலி, ஏன், நாய்கூட விபத்தில இறந்தது பார்த்திருக்கிறேன்.. பூனைக்கு கண்ணூ கெட்டி... என்னை மாதிரி.

கொஞ்சம் மனசை வருடிட்டுதான் போயிருக்கு கதை... இந்தமாதிரி கதையை முடிக்கத் தெரியாமத்தான் நான் முழிச்சுகிட்டு இருக்கேன். நல்ல முடிவு. பூனையோட இழப்பு எப்படி இருக்கும்னு அனுபவத்தில தெரிஞ்சு வெச்சுருக்கேன்.. (அது பூனையில்ல..கோழிக்குஞ்சு.. ஒரு நா எங்கப்பா 'தண்ணி போட்டுட்டு வந்து அதை பொறிச்சு தின்னுட்டாரு... ம்ம்ம். நான் அன்னிக்கித்தான் ஒரு கோழிக்காக அழுதேன்..)

நாலாயிரமாவது, முதலாண்டு என்ற இரண்டு சிறப்புகளோட எழுதினதுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்... எவ்வளவோ வேலைகளுக்கு நடுவே எழுதியதும் ஆச்சரியம்.. நூறு பதிவுக்க்கு ஒரு வாழ்த்து இருந்தா நிறைய கதை எழுதுவீங்களோ??

மேலும் எழுதவேண்டும்.... இது தம்பியின் வேண்டுகோள்.

ஓவியா
04-05-2007, 02:46 AM
நல்ல முயற்சி ஓவியா. முதல் முயற்சி என்பதால் கண்டிப்பாக பாராட்டலாம். இன்னும் சிறப்பாக எழுத முயலவும். எழுத முடியும்.

அட நம்ப எழுத்தாளர் ராகவன் சார். மிக்க நன்றி சார்,

எவ்வளோ பெரிய எழுத்தாளர் நீங்க, பணிப் பளுவிலும் என் கதையை வாசித்து பின்னூட்டமிட்டதற்க்கு என் பணிவான நன்ற்கள்.

உங்க பாராட்டே எனக்கு மெரிட் மார்க்தான். :sport-smiley-018:

ஆதவா
04-05-2007, 02:48 AM
முதல் கதை என்பதற்காகவும் கதை நல்லா இருக்குங்கறதுக்காகவும் பிடியுங்க சன்மானம் 100 பணம்....

ஓவியா
04-05-2007, 02:55 AM
அன்பு ஓவியா...

சிறப்பான முதல் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மனதை பாதித்த அல்லது பாதிக்கும் என்று நினைக்கும் சம்பவங்களை எழுத்தில் வடிக்கும் முயற்சி போல தோன்றுகிறது.

முதல்படி வைத்து விட்டீர்கள் அல்லவா... இனி தொடர்ந்து முன்னேற்றம்தான். முன்பு சொன்னதை மீண்டும் சொல்கிறேன். உங்களால் முடியும். நிச்சயம் முடியும். வளர வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி அண்ணா, நான் பல முறை வந்துப் பார்த்தேன் தாங்கள் படித்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்று விட்டிர்கள் எனக்குள் ஒரே கவலை, அண்ணா பின்னூட்டமிடாமல் சென்று விட்டாரே என்று, ஒருவேலை கதையின் கரு சரியில்லையே என்று. ஹி ஹி ஹி அவசர குடுக்கை தங்கை.

உங்கள் பின்னூட்டம் எனக்கு அல்வா போல். கண்டதுமே ஹி என்று பல் வரிசை தெரிந்தது. :icon_dance:

அண்ணா, 'அந்த முன்பு சொன்னது',
தற்பொழுது என கவனம் அனைத்தும் வேறு திசையில் இருகின்றது. முடிந்தவாரை முயற்ச்சிக்கிறேன்.

ஓவியா
04-05-2007, 03:00 AM
அம்மணி... எப்படிங்க இது...
முதல் முயற்சிக்குச் சும்மா பின்னிட்டீங்கன்னுதான் சொல்லணும்... ஆனா நீங்க பாரதியண்ணா சொன்ன மாதிரி மனதைப் பாதிக்கும் விசயங்களை எந்தப் பாசாங்கும் இல்லாமல் ஒரு கதை சொல்லி போல் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
பாசாங்கா, உங்க கிட்டையா!!!!!!! அதுசரி, அப்படியே ஆகட்டும் குருவே.

வர்ணனைகள் எல்லாம் சூப்பர்தான் ... கடைசியில் ஒரு சின்ன ஜெர்க் விட்டு விட்டதாய்த் தோன்றியது... இன்னும் நேரம் இருந்தால் மெருகேற்றி இருப்பீர்கள்தானே...
ஆமாம் ஆமாம்.

எல்லாருமே நல்லாருக்குன்னு சொல்லிட்டா என்னான்னு நான் கொஞ்சம் உல்டா அடிச்சேன்... ஹிஹி :D

நன்றி பிரதீப்,
உங்கள் விமர்சனமும் எனக்கு வெண்ணி தண்ணியில் போட்ட முருகன் 'சுக்கு' தண்ணிபோல்.
நல்லா போதையா இல்ல இல்ல சுவையா உற்ச்சாகமாக இருக்கு.

ஓவியா
04-05-2007, 03:03 AM
உங்கள் முதல் படைப்பில் கலக்கிட்டிங்க ஓவியா

மீண்டும் மீண்டும் கலக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
ரவி

மிக்க நன்றி ரவி.

நீங்களும் இங்கு கதை, கட்டுரை, கவிதை என எழுதி பதியுங்கள். நம் நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் உங்க்ளை எழுத்தாளனாக்கும்.

பணிவுடன்
ஓவியா.

ஓவியா
04-05-2007, 03:05 AM
ஆதவா சீக்கிரம் உங்கள் விமர்ச்சனத்தை தாருங்கள். உங்களின் நறுக்கென்ற நடுநிலையான விமர்ச்சனத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

ஆதவா விமர்சனம் போட்டாச்சே!!!!!!!!!!

யாகூஊஊஊஊஉ இப்ப நான் ஆள்ரவுண்டெர் ஆகிட்டேனே....
ஹி ஹி ஹி.. சும்மா சும்மாதான் ஒரு :icon_dance:

ஓவியா
04-05-2007, 03:14 AM
முதல் கதையா!
பல வருடமாக தொடர்ந்து கதை எழுதுரவங்க மாதிரி எழுதியிருக்கீங்க, வார்த்தைகளை அப்படி அமைச்சிருக்கீங்க,

குறிப்பாக "மின்விசிறி அது தான் பிறந்தப்பயனை செய்துக்கொண்டு இருந்தது."
அப்பறம் "இரவு சென்று பகலை அனுப்பியது"
பிறகு "சில நாட்கள் பிறந்து இறந்தது."

இதெல்லாம் ஒரு கதையாசிரியரின் காதைபோல், ஒரு நாவல் போல் வரிகளை அமைத்து இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

நன்றி நன்றி நன்றி. வரிகளை கப்புனு புடிச்சிடீங்களே நண்பா!!

பாராட்டிற்க்கு நன்றி.

எனக்கு பிடித்த வரிகள் அனைத்தையும் இங்கே (மன்மதன். அன்பு, நீங்க)நண்பர்கள் 'கோட்' செய்து காட்டி வீட்டீர்கள். இதுவே எனக்கு வெற்றிதான்.

gayathri.jagannathan
04-05-2007, 03:40 AM
ஓவியா. கதை மிகவும் அருமை... ஆரம்பம் அசத்தல்... பாராட்டுகள்....

ஆனால் நடுவில் கொஞ்சம் தொய்ந்து விட்டதைப்போல் தோன்றியது...

தேர்ந்த கதாசிரியரைப் போல அநாயாசமாக கதாப்பாத்திரங்களைக் கையாண்டிருக்கும் முறை அருமை[B]

"வேணாம் சிவா அண்ணாக்கு பூனைன்னா அலர்ஜி, அதுபாட்டுக்கு வரட்டும் போகட்டும்.. ஆனா நாமளே வெச்சுக்க வேண்டாம் " என்று சமாதானப்படுத்தினாள், சிவாவுக்கு ஜிஞ்சர் மேல் அளவுகடந்த பிரியம். சில சமயம் அதனுடன் விளையாடுவான். கொஞ்சுவான்...

இன்றும் வந்தது. தன் வழக்கமான பாடலை மெல்ல ஆரம்பித்தார் பூனையார் ஜிஞ்சர். மல்லிகாவிற்க்கு ஒரே கலக்கம் அடடா ஒன்னுமில்லையே என்று, அதற்க்குள் மகள் மாலா ஜிஞ்சருக்கு ஏதோ எடுத்துச்சென்றாள்,

"மாலா என்ன அது ?" மல்லிகா.

"ஜிஞ்சருக்கு சோறு " என்றாள்,

"கறி இல்லையே ?"

"இல்லமா; அண்ணா , கடையில் இருந்து நெத்திலித்தல வாங்கிட்டு வந்தான்"

" பணம்? "

ராம் வெளியே வந்து, " அவதான் உண்டியில் இருந்து காசு எடுத்து கொடுத்தா என்று சொன்னான்.

" ஆமா ஐடியா நாந்தான் கொடுத்தேன் "சிவா பூரித்தான் . தாய் ஆச்சரியமாகப் பார்த்தாள், தந்தை எதுவும் கேட்காதவர் போல் செய்தி கேட்டுக்கொண்டு இருந்தார்.

இது என்ன மல்லிகாவுக்கு இரு குழந்தைகள் என்று அறிமுகப் படுத்தியிருந்தீர்கள்

நடுவில் திடீரென்று எங்கிருந்து வந்தார் இந்த "அண்ணா"?

அழகாகச் சென்ற கதையில் தொய்வு ஏற்பட்ட இடமே இது தான்....

சற்று கவனம் எடுத்திருக்கக் கூடாதா?

பென்ஸ்
04-05-2007, 03:45 AM
சபாஷ் காயத்ரி...

உங்கள் விமர்சனக்களின் வெற்ரிக்கு காரணமே இந்த மாதிரி சின்ன தவ்றுகளை உற்றுபார்த்து சுட்டு காட்டுவதுதான்...

தொடருங்கள்...

ஓவியா
04-05-2007, 03:48 AM
ஓவியா. கதை மிகவும் அருமை... ஆரம்பம் அசத்தல்... பாராட்டுகள்....

ஆனால் நடுவில் கொஞ்சம் தொய்ந்து விட்டதைப்போல் தோன்றியது...

தேர்ந்த கதாசிரியரைப் போல அநாயாசமாக கதாப்பாத்திரங்களைக் கையாண்டிருக்கும் முறை அருமை

இது என்ன மல்லிகாவுக்கு இரு குழந்தைகள் என்று அறிமுகப் படுத்தியிருந்தீர்கள்

நடுவில் திடீரென்று எங்கிருந்து வந்தார் இந்த "அண்ணா"?

அழகாகச் சென்ற கதையில் தொய்வு ஏற்பட்ட இடமே இது தான்....

சற்று கவனம் எடுத்திருக்கக் கூடாதா?
சிவா மல்லிகாவின் இளைய மகன். மூத்தவள் மாலா.. மல்லிகாவின் கணவர் சுந்தரம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துகொண்டிருக்கிறார். சின்ன குடும்பம். கலகலப்பான வீடு... எதிரெதிரே சில வீடுகள் இருந்தன. அமைதியான சுற்றுப்புறம்.. நிம்மதியான வாழ்க்கை.

இங்கே எந்த வரியுமே மல்லிகாவிற்க்கு 2 குழந்தைகள்தான் என்று கூறவில்லையே!!!!!!!!! இருவரை மட்டும் சுட்டியுள்ளேன், அவ்வலவுதான்

விமர்சனத்திற்க்கு நன்றி.

ஓவியா
04-05-2007, 03:50 AM
சபாஷ் காயத்ரி...

உங்கள் விமர்சனக்களின் வெற்ரிக்கு காரணமே இந்த மாதிரி சின்ன தவ்றுகளை உற்றுபார்த்து சுட்டு காட்டுவதுதான்...

தொடருங்கள்...

பென்சு,

சிவா மல்லிகாவின் இளைய மகன். மூத்தவள் மாலா.. மல்லிகாவின் கணவர் சுந்தரம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துகொண்டிருக்கிறார். சின்ன குடும்பம். கலகலப்பான வீடு... எதிரெதிரே சில வீடுகள் இருந்தன. அமைதியான சுற்றுப்புறம்.. நிம்மதியான வாழ்க்கை.

சற்று கவனிக்கவும் இங்கே நான் சிவா மல்லிகாவின் இளைய மகன் என்றுதான் கூறியுல்லேன், ஒரே மகன் என்று அல்ல.....

பென்ஸ்
04-05-2007, 03:53 AM
ஓவி... இந்த வரிகளை நான் விட்டிருக்கலாம்... இருந்தாலும் கயத்ரி சொன்னது போல எனக்கும் கதை இடையில் இளுப்ப்ப்பது போல தோன்றியது... இருந்தாலும் கதையை நீ அருமையாக (செண்டியாக) முடிதத்மையால் விட்டுவிட்டேன்.....

அப்படி இருந்தாலும்

சிவா மல்லிகாவின் இளைய மகன். மூத்தவள் மாலா..
அண்ணா வராதே ஓவி...:icon_dance: :icon_dance: :icon_dance:

ஓவியா
04-05-2007, 03:56 AM
ஓவி... இந்த வரிகளை நான் விட்டிருக்கலாம்... இருந்தாலும் கயத்ரி சொன்னது போல எனக்கும் கதை இடையில் இளுப்ப்ப்பது போல தோன்றியது... இருந்தாலும் கதையை நீ அருமையாக (செண்டியாக) முடிதத்மையால் விட்டுவிட்டேன்.....

அப்படி இருந்தாலும்

அண்ணா வராதே ஓவி...:icon_dance: :icon_dance: :icon_dance:

B]சிவா மல்லிகாவின் இளைய மகன்[/B]. மூத்தவள் மாலா.. மல்லிகாவின் கணவர் சுந்தரம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துகொண்டிருக்கிறார். சின்ன குடும்பம். கலகலப்பான வீடு... எதிரெதிரே சில வீடுகள் இருந்தன. அமைதியான சுற்றுப்புறம்.. நிம்மதியான வாழ்க்கை.

இங்கே எந்த வரியுமே மல்லிகாவிற்க்கு 2 குழந்தைகள்தான் என்று கூறவில்லையே!!!!!!!!! இருவரை மட்டும் சுட்டியுள்ளேன், அவ்வலவுதான்

பென்ஸ்
04-05-2007, 03:58 AM
மல்லிகாவுக்கு ஒரு அண்ணா இருக்கிரத சொல்லவேயில்லை....
1+1+X* சின்ன குடும்பமா மக்கா உங்க ஊருல...

* X>3

ஓவியா
04-05-2007, 04:04 AM
மல்லிகாவுக்கு ஒரு அன்ன இருக்கிரத சொல்லவேயில்லை....
1+1+X* சின்ன குடும்பமா மக்கா உங்க ஊருல...

* X>3

என்ன குழப்பம் மல்லிகாவிற்க்கு ஏது அண்ணன், அது சிவாவின் அண்ணான், அதான் பின்னாடி 'ராம்' என்று சொல்லி இருக்கேனே,
ஒரு கதாபாத்திரத்தை அவசியம் வரும் பொழுதுதான் உள்ளே கொண்டு வர வேண்டும். அதுதான் ராம்.

ஆரம்பதில் ஜிஞ்சருடன் நெருங்கியது சிவாவும், மகள் மாலாவும், அதான் அந்த கதாபாத்திரங்களை கொண்டு வந்தேன், சொன்னேன்.

ஜிங்சருடன் ராம் ஒட்டவே இல்லை அதனால் பின் இணைத்தேன்.
பக்கத்து வீட்டு ஜுபியும் இன்னொரு கதாபாதிராம், ஆரம்பத்தில் காட்டவில்லையே, பின் தான் வந்தாள் காரணம் அவை ஒட்டு பாத்திரம்.

தாமரை
04-05-2007, 04:59 AM
கல் நெஞ்சமடா உனக்கு..
இன்னும்
விமர்சனம் செய்யவில்லையே!

மதி
04-05-2007, 05:01 AM
கல் நெஞ்சமடா உனக்கு..
இன்னும்
விமர்சனம் செய்யவில்லையே!
செஞ்சு தான் பாருங்களேன்..!:D

ஆதவா
04-05-2007, 06:45 AM
சபையோர்களே!
முதலில் மீண்டுமொரு பாராட்டு ஓவியா அவர்களுக்கு...

கதை அருமையாக இருந்ததும் அதற்குரிய பாராட்டுக்கள் அவர் பெற்றதும் அறிந்ததே.. முதல் சிறுகதை என்று நம்ப முடிகிறதா.... ??

ஓவியா அவர்கள் முதல் கவிதை எழுதும்போதும் சரி முதல் கதை எழுதும்போதும் சரி பிழைதிருத்தத்திற்கு என்னிடம் அனுப்பி வைத்தார். ஓவியா அக்காவின் எழுத்துப் பிழை இந்த மன்றமே அறியுமே... அப்போழுதே எனக்கு சந்தேகம்... எங்கோ இருந்து சுட்டு வருகிறாரோ என்று,,,, இருக்கத்தானே செய்யும்.. அவ்வளவு அருமையாக எழுதுகிறவர் தீடீர் படைப்புகள் சந்தேகத்தை எழுப்பத்தானே செய்யும்.. நான் சராசரி மனிதந்தானே!! ... ஆனால் அதைப் பொய்யாக்கியது அடுத்தடுத்த கவிதைகளும் பதிவுகளும் குறிப்பாக ஸ்மைலீஸ் விளக்கம் அவ்வளவு அருமை.... கொஞ்சம் கொஞ்சமாக என்னை நொந்தேன்.. அட இந்த திறமை சாலி அக்காவை புரிஞ்சுக்காம போய்ட்டேனே!..

முதல் சிறுகதை:

நான் படித்த அளவிற்கு மன்றத்தில் யாரும் படித்திருக்கமாட்டார்கள்.. ஏன் ஓவியாவே படித்திருக்கமாட்டார். ராம் என்ற பாத்திரம் ஒரு காட்சிக்கு மட்டுமே வந்து ஒரு டயலாக் மட்டுமே சொல்லும் பாத்திரம். அதற்கு விளக்கம் தேவையா என்பது ஓவியாவும் தேவை என்று காயத்திரி மற்றூம் பெஞ்சமின் அவர்களும் கேட்டுள்ளார்கள்.. அப்படிப் பார்த்தால் எதிர்த்தவீட்டு ஜூபி அவர்களின் அம்மா அப்பா ஒன்னுவிட்ட சித்தப்பா என்று எல்லாரையும் விளக்கம் சொல்லவேண்டுமா கூடாதா? (இந்த இடத்தில் ராகவன் வந்திருக்கவேண்டும்.. எங்க போனீங்க சாரே??) காய்த்ரி அவர்களின் பார்வை அப்படி.. எனக்கு காட்சிகள் எல்லாமே சரியாகத் தெரியமாட்டேங்குது. (நம்புங்க எனக்கு மைனஸ் 1.5)

ஓவியா சொன்னது சரி என்னும் பட்சத்தில் கொண்டுசென்றாலும் என் மனதிற்கு அது தொய்வு ஏற்படுவது தெரியவில்லை... கதை நன்றாகத்தான் போகிறது... நிற்க.. இது என் கருத்து.

காயத்திரி சொன்னது சரி எனும் பட்சத்தில் என்ன செய்யலாம்??? ஓவியா அக்கா அடுத்த கதை எழுதி தவறை சரிசெய்யலாம்...
--------------
கூர் மிகுந்த விமர்சனங்களை எடுத்து நம்மை நாம் செதுக்கிக் கொள்ள வேண்டும்.. செதுக்க செதுக்க கூர் மழுங்கிவிடும்... பின்னர் விமர்சனங்களே எதுவுமிருக்காது.. எல்லாம் பாராட்டுக்கள்தான்....

நான் எழுதியதில் தவறிருந்தால் மன்னிக்க மக்களே

அறிஞர்
04-05-2007, 08:10 PM
வாழ்த்துக்கள் ஓவியா...

முதலில் நல்ல விமர்சகராக கண்டேன்.
பின் கவிஞராக கண்டேன்.
இப்பொழுது கதாசிரியராக காண்கிறேன்..

எல்லாத்துறைகளிலும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்.

ஓவியன்
06-05-2007, 04:51 AM
ஒரு சிறு பொறியில் இருந்து ஒரு அக்னிப் பிராவகத்தையே உருவாக்கிவிட்டீர்களே ஓவியா!

ஓவியா!

கல்நெஞ்சம் தான் உங்களுக்கும்,இவ்வளவு திறமையை இதுவரை வெளிப்படுத்தாது ஒளித்து வைத்திருக்கிறீங்களே?

உங்கள் கல் நெஞ்சத்தை உடைத்த அந்த 4000 வது பதிப்பு வாழ்க.

இப்படி நான் போட்ட பதிவுக்கு இன்னமும் பதிலளிக்காத ஓவியா அக்காவிற்கு கல் நெஞ்சம் தான்.......

ஓவியா
06-05-2007, 02:23 PM
ஆதவா தங்கள் விமர்சனம் என்னை கவர்ந்தது, மிக்க நன்றி,

தவறுகள் இருப்பின் அடுத்த முறை அவைகளை நிவர்த்தி செய்ய முயல்கிறேன். அன்பாய் சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி.

ஓவியா
06-05-2007, 02:25 PM
வாழ்த்துக்கள் ஓவியா...

முதலில் நல்ல விமர்சகராக கண்டேன்.
பின் கவிஞராக கண்டேன்.
இப்பொழுது கதாசிரியராக காண்கிறேன்..

எல்லாத்துறைகளிலும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி அறிஞ்சரே.

உங்கள் ஊக்கம் எப்பொழுதும் எனக்கு வேண்டும்.

ஓவியா
06-05-2007, 02:31 PM
ஒரு சிறு பொறியில் இருந்து ஒரு அக்னிப் பிராவகத்தையே உருவாக்கிவிட்டீர்களே ஓவியா!

கல்நெஞ்சம் தான் உங்களுக்கும்,இவ்வளவு திறமையை இதுவரை வெளிப்படுத்தாது ஒளித்து வைத்திருக்கிறீங்களே?

ஓவியா!
உங்கள் கல் நெஞ்சத்தை உடைத்த அந்த 4000 வது பதிப்பு வாழ்க

இப்படி நான் போட்ட பதிவுக்கு இன்னமும் பதிலளிக்காத ஓவியா அக்காவிற்கு கல் நெஞ்சம் தான்.......

மன்னிக்கவும் ஓவியன்.

எனக்கு மற்ற பதிவுகளில் இருந்து காப்பி செய்து போட்டு பேர் வாங்கும் பழக்கம் கிடையாது.

என்னுல் இருக்கும் திறமை மெல்ல மெல்ல வெளிப்படுமாயின், போக போக சிறந்த படைபுகளை கொடுக்கிறேன்.

அதுவரை மன்னித்தருள்வீராக.

அன்புரசிகன்
06-05-2007, 04:37 PM
எனக்கு மற்ற பதிவுகளில் இருந்து காப்பி செய்து போட்டு பேர் வாங்கும் பழக்கம் கிடையாது.
என்னுல் இருக்கும் திறமை மெல்ல மெல்ல வெளிப்படுமாயின், போக போக சிறந்த படைபுகளை கொடுக்கிறேன்.
அதுவரை மன்னித்தருள்வீராக.

காப்பியடிப்பதெல்லாம் ஒரு திறமையா?
மன்னிப்பெல்லாம் தேவையற்றது.
வாழ்த்துகிறேன் தொடர.

ஓவியன்
07-05-2007, 04:10 AM
மன்னிக்கவும் ஓவியன்.

எனக்கு மற்ற பதிவுகளில் இருந்து காப்பி செய்து போட்டு பேர் வாங்கும் பழக்கம் கிடையாது.

என்னுல் இருக்கும் திறமை மெல்ல மெல்ல வெளிப்படுமாயின், போக போக சிறந்த படைபுகளை கொடுக்கிறேன்.

அதுவரை மன்னித்தருள்வீராக.

என்ன அக்கா இது மன்னிப்பு அது, இது என்று பெரிய வார்த்தையெல்லாம்?

உண்மையில் உங்களை ஒரு கதாசிரியராகவும் காண்பதில் உள்ள மகிழ்சியுலும் உங்கள் கதையின் தலைப்பை வைத்து உங்களைக் கலாய்க்கும் முயற்சியிலுமே அப்படிக் கூறினேன் - வேறொன்றுமில்லை.

உங்களது படைப்புக்களை இந்த பகுதியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் - அவை மெல்ல மெல்ல வருமென்ற போதும்.

அன்புரசிகன்
07-05-2007, 04:15 AM
யப்பா.. ஓவியா அக்கா தும்முறாங்களாம்.

crisho
07-05-2007, 05:19 AM
கத சூபரா கீது அம்முணி... :4_1_8:

முதல் கதன்னு சொல்லுறீங்க இத வாசிச்சி பாத்தா நீங்க எழுதின முதல் கதைன்னு சொல்ல முடியாது - அவ்வளவு முதுமை உங்கள் வரிகளில்!!

எனக்கு பூனைன்னா அலர்ஜி அதுனால இந்த பூனை கரக்ட்டர் என்னோட ஒட்டல.... ஆனா நீங்க நல்லா எழுதியிருக்கிங்க.

ஒரு வருஷத்தில இவ்வளோ வளர்ச்சி அடைஞ்சியிருக்கீங்கன்னு பார்க்கும் போது வியப்பா இருக்கு.... வாழ்க உங்கள் முயற்சியாற்றல்!! வளர்க உங்கள் படைப்புகள்!!

இன்னும் பல்லாண்டு இம் மன்றத்தில் நிலைத்திருக்கவும்.... இன்னும் இன்னும் படைப்புகள் தந்து எம்மை மகிழ்விக்கவும் வேண்டி / வாழ்த்தி விடைபெறுகிறேன்.

ஓவியா
09-05-2007, 09:48 PM
என்ன அக்கா இது மன்னிப்பு அது, இது என்று பெரிய வார்த்தையெல்லாம்?

உண்மையில் உங்களை ஒரு கதாசிரியராகவும் காண்பதில் உள்ள மகிழ்சியுலும் உங்கள் கதையின் தலைப்பை வைத்து உங்களைக் கலாய்க்கும் முயற்சியிலுமே அப்படிக் கூறினேன் - வேறொன்றுமில்லை.

உங்களது படைப்புக்களை இந்த பகுதியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் - அவை மெல்ல மெல்ல வருமென்ற போதும்.

நன்றி சகோ

ஓவியா
09-05-2007, 09:52 PM
கத சூபரா கீது அம்முணி... :4_1_8:

முதல் கதன்னு சொல்லுறீங்க இத வாசிச்சி பாத்தா நீங்க எழுதின முதல் கதைன்னு சொல்ல முடியாது - அவ்வளவு முதுமை உங்கள் வரிகளில்!!

எனக்கு பூனைன்னா அலர்ஜி அதுனால இந்த பூனை கரக்ட்டர் என்னோட ஒட்டல.... ஆனா நீங்க நல்லா எழுதியிருக்கிங்க.

ஒரு வருஷத்தில இவ்வளோ வளர்ச்சி அடைஞ்சியிருக்கீங்கன்னு பார்க்கும் போது வியப்பா இருக்கு.... வாழ்க உங்கள் முயற்சியாற்றல்!! வளர்க உங்கள் படைப்புகள்!!

இன்னும் பல்லாண்டு இம் மன்றத்தில் நிலைத்திருக்கவும்.... இன்னும் இன்னும் படைப்புகள் தந்து எம்மை மகிழ்விக்கவும் வேண்டி / வாழ்த்தி விடைபெறுகிறேன்.

கிரிஷ் அண்ணா, உங்க விமர்சனம் கண்டு ஆனந்தமடைந்தேன், புது எழுத்தாளருக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் கருத்துக்களிட்டமைக்கு நன்றி.

முடிந்த வரை படைப்புகளை தருவேன். ஆனால் அடுத்த பதிப்பு எப்பொழுது என்று மட்டும் தெரியாதே!!!!!!!!!!

மீண்டும் வைட்டமீன் போன்ற உங்க விமர்சனத்திற்க்கு நன்றி.

ஓவியா
15-05-2007, 03:57 PM
காப்பியடிப்பதெல்லாம் ஒரு திறமையா?
மன்னிப்பெல்லாம் தேவையற்றது.
வாழ்த்துகிறேன் தொடர.

நன்றி அன்பு.

அடுத்து ஒரு கட்டுரை எழுத எண்ணம் கொண்டுல்லேன். பார்ப்போம்.

அன்புரசிகன்
15-05-2007, 04:02 PM
நன்றி அன்பு.

அடுத்து ஒரு கட்டுரை எழுத எண்ணம் கொண்டுள்ளேன். பார்ப்போம்.

சீக்கிரம். ஆவலுடன் காத்திருகிறேன்.

மயூ
23-05-2007, 01:28 PM
நன்றி அக்கா.. இப்படி ஒரு கதையை எழுதிவிட்டு முதல் கதை என்றுகதை மட்டும் விடவேண்டாம் சொல்லிப்போட்டன்...!!!!

கதையில் சில இடங்கள் நன்றாக இருந்தது.. உதாரணமாக அந்த மின்விசிறிபற்றிக் கூறிய இடம்.. பிறந்த கடனை செய்தது..!! நல்ல முயற்சி...

நகைச்சுவையும் இல்லாமல் இல்லை... இஞ்சிப் பகிடி நன்றாக இருந்தது.. எப்படி முடியது உங்களாள.?? கடைசி முடிவுதான் நெஞ்சைக் கொஞ்சம் கலங்கடித்துவிட்டது...

தனிப்பட்ட ரீதியில் எங்கள் குடும்பமும் பூனைப் பிரியர்கள்... எங்கள் வீட்டில் உள்ள பூனை வீட்டு அங்கத்தவர் அனைவரிலும் உயர்ந்தவராக மதிக்கப்படுவார் என்பது எழுதப் படாத சட்டம்...!!! இவ்வேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்கு அம்மா கொண்டுடு வந்த பூனைக்குட்டி என் ஞாபகத்திற்கு வருகின்றது.. யாருடனும் சேராது நான் பள்ளியால் வரும் வரை எனக்காகக் காத்திருக்கும்.. நான் அழைத்தால் மட்டுமே ஓடிவந்து கால்களுக்குள் ஒட்டிக்கொள்ளும்!!!

ஒரு நாள் மாலை வீடு வந்தபோது..
"தம்பி சாப்பிடு.. " அம்மாவின் வார்த்தையில் வழமையான கலகலப்பில்லை. காரணம் புரியாமல் சாப்பிட்டுவிட்டேன்...

சாப்பிட்டு முடிந்ததும்.. கண்கலங்கியவாறு அம்மாவும், தங்கையும் விடயத்தை சொல்லினர்.. அதாவது அந்தப் புபூனைக்குட்டியை எங்கட வீட்டு நாய் கடிச்சிட்டுதாம்.. பூனைக்குட்டி செத்திட்டுதாம்!!! இப்போ நினைதத்தாலும் நெஞ்சு கனக்கின்றது!!!

நினைவுகளை மீளப் பயனிக்க வைத்த அக்காவிற்கு நன்றிகள்.. உங்கள் சிறுகதைப் பயனம் வெற்றிகரமாகத் தொடர இந்தத் தம்பியின் வாழ்த்துக்கள்!!
வாழ்க நின் சிறுகதையாற்றல்!!

ஓவியா
23-05-2007, 01:33 PM
மயூ, கதை பிடிச்சு போச்சா!! நன்றி.

உன் சிறுகதைகளை வாசித்து-வாசித்துதான் நான் கதை எழுதும் ஆர்வத்திற்க்கு வந்தேன். நீரே எங்குருலே.

உன் விமர்சனம் என்னை சந்தோஷப்படுத்தி விட்டது. மிக்க நன்றி.

மயூ
23-05-2007, 01:42 PM
நன்றி அக்காச்சீ... ஆனாலும் என்னை குரு என்பது உங்களுளுக்கே ஓவராத் தெரியேல...!!!

இராகவன் அண்ணா போன்றவர்களின் தாக்கம்தான் என்னை எழுத வைதத்ததது.. அதுதான் உங்களையும் எழுத வைத்திருக்கும்.. வாழ்த்துக்ககள்!!!

ஓவியா
23-05-2007, 01:44 PM
நீ குரு, உன் குரு இராகவனா. நல்லது.

ஹி ஹி ஹி

மயூ
23-05-2007, 01:45 PM
ஹி.. ஹி.. ஆமா.. ஆமா :D

lolluvathiyar
23-05-2007, 01:56 PM
ஓவியா கதை அற்புதம்
விவசாய தொழிலில் இருக்கும் நான்
பல பிரானிகளுடன் பழகுவோம்.
எங்கள் தோட்டத்தில் வளரும் விலங்குள் சாவதை பார்ப்பது எனக்கு சாதர்னம்
நான் வருத்தபட்டதே கிடையாது.

ஆனால் உன்மையை கூறுகிறேன்
எங்களுக்கு பூனை சுத்தமாக பிடிக்காது. துரத்திவிடுவோம்.
என்னையும் கலங்க வைத்த உன்னை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை

ஓவியா
23-05-2007, 02:11 PM
மிக்க நன்றி நல்லவாத்தியார்.

உங்கள் கருத்து என்னை மகிழ்வித்தது. பாராட்டுங்க பாராட்டுங்க.

நீங்களும் ஒரு கதை எழுதுங்கலேன். நான் படித்து பாராட்டுகிறேன்.

lolluvathiyar
23-05-2007, 02:32 PM
நீங்களும் ஒரு கதை எழுதுங்கலேன். நான் படித்து பாராட்டுகிறேன்.

கதை என்கிற பெயரில் ஒன்றை எழுதி பதித்டு விட்டாச்சு ஓவியா
மனிதன் என்று விளங்கியது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9533)
ஆனா பாராட்டும்படி இருக்காது

ஓவியா
23-05-2007, 02:35 PM
அடடே,
இரவு படித்து கருத்து பின்னூட்டம் போடுறேன் சார். மிக்க நன்றி.

aren
01-07-2007, 03:11 PM
மனம் மிகவும் கணக்கிறது. கதை அருமை. நானே காட்சிகளை நேரடியாக கண்டதுபோல் இருக்கிறது. ஐயோ பாவம் ஜிஞ்சர்.

எங்கள் வீட்டில் ஒரு சிறிய நாய்க்குட்டி உள்ளது. அதன் பெயர் ஜாக்கி. ஜாக் ரஸ்ஸல் வகையைச் சார்ந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி. நானும் என் மனைவியும் அதை எங்களுடைய இரண்டாவது பெண்ணாகவும், என் மகள் அவளுடைய தங்கையாகவும் கருதுகிறோம்.

நாங்கள் இரவு வீட்டுக்கு வரும்வரை காத்திருக்கும். ஒருவர் லேட்டாக வந்தாலும் முகத்தை உம்மென்று வைத்திருக்கும். கடைசி நபர் வந்துவிட்டால் அனைவரும் வந்துவிட்ட சந்தோஷத்தில் துள்ளிவிளையாடும்.

உங்கள் கதையைப் படித்தபொழுது எனக்கு ஜாக்கி நினைவுதான்.

நான் இன்று தைவான் வந்திருக்கிறேன். இரவாகிவிட்டது. என்னுடைய வரவை எதிர்பார்த்து உம்மென்று வைத்திருக்கும் ஜாக்கியின் முகம் என் கண் முன்னால் தோன்றுகிறது.

கதை அருமையாக உள்ளது. நிச்சயம் அனைத்து பத்திரிக்கைகளும் பிரசுரம் செய்ய விருப்பம் தெரிவிக்கும். தொடருங்கள். அடுத்த கதையைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியா
01-07-2007, 03:31 PM
அண்ணா தங்களின் விமர்சம் கண்டு மகிழ்ந்தேன்.

உங்களின் ஜிக்கி அனுபவமும் நன்று. வீட்டில் ஒரு பாச பிராணி இருந்தாலே தனி இன்பம்தான்.

என் கதையை படித்த சிலர் (விமர்சனம் போடவில்லை) நான் சிறந்த படைப்புகளுக்குதான் விமர்சனம் எழுதுவேன் என்று மார்தட்டிக்கொண்டு செல்லும் பொழுது, இந்த கதையை நிச்சயம் அனைத்து பத்திரிக்கைகளும் பிரசுரம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் என்று ஒரு வரி எழுதி என்னை ஆனந்த வெள்ளதில் மூழ்கடித்து விட்டீர்கள். மிக்க நன்றி அண்ணா.

அக்னி
02-07-2007, 03:30 PM
இந்தக் கதையெல்லாம் சரி...
இவ்வளவு நாட்களாகியும் இரண்டாவது கதையைக் காணோமே...
எங்கே... எங்கே...?

aren
02-07-2007, 03:36 PM
இந்தக் கதையெல்லாம் சரி...
இவ்வளவு நாட்களாகியும் இரண்டாவது கதையைக் காணோமே...
எங்கே... எங்கே...?

நீங்கள் இப்படி கேட்டதற்காகவே ஒரு கதையை ரெடிசெய்து இங்கே பதித்துவிடூவார்கள் கூடியவிரைவில் என்று நினைக்கிறேன்.

என்ன செய்வீர்களா ஓவியா?

ஓவியா
04-07-2007, 03:52 AM

2 மாததிற்க்கு முன்பே என் 4000வது பதிவை எழுதிவிட்டேன்.
என் ஆஸ்தான* புருஃப் ரீடர் இன்னும் என் பதிவை திருத்தி எனக்கு அனுப்பவில்லை. அவருக்கு ஒரு தனிமடல் போட்டு என்னா ஆச்சு என்று கேட்கிறேன் பதில் இல்லையென்றால் அன்பருக்கு அக்காவின் ஆட்டோதான்.

Gobalan
04-07-2007, 08:16 AM
ஓவியா, ஒரு சாதரண எதார்தமான கரு. நல்ல கற்பனை. இவை இறண்டையும் சேர்த்து ஒரு மகத்தான சோக கதையை பின்னி விட்டீர்கள். மிக அழகான நடையுடன் இந்த கதையை எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துககள். நன்றி.

aren
04-07-2007, 08:57 AM
2 மாததிற்க்கு முன்பே என் 4000வது பதிவை எழுதிவிட்டேன்.
என் ஆஸ்தான* புருஃப் ரீடர் இன்னும் என் பதிவை திருத்தி எனக்கு அனுப்பவில்லை. அவருக்கு ஒரு தனிமடல் போட்டு என்னா ஆச்சு என்று கேட்கிறேன் பதில் இல்லையென்றால் அன்பருக்கு அக்காவின் ஆட்டோதான்.

சாமி வ*ர*ம் கொடுத்தும் பூசாரி இன்னும் வ*ர*ம் கொடுக்க*வில்லையா? அய்யா புருஃப் ரீட*ரே, சிக்கிர*மாக* ஆட்டோ வ*ருவ*த*ற்குள் திருத்தி அனுப்பிவிடுங்க*ள்.

ந*ன்றி வ*ணக்கம்
ஆரென்

இளசு
04-07-2007, 10:13 PM
பாராட்டுகள் ஓவியா..

ஊடாடும் கவித்துவ− நகைச்சுவை வர்ணனைகள்..
ஆனால் அவை இடறாமல் கதையை நீரோட்டமாய் வாசிக்க முடிந்தது..

எளிய சம்பவங்கள்..
கோர்த்த விதம்தான் வலிமை..

முதல் கதை மிக முத்திரைக்கதையாய் அமைந்ததற்கு சிறப்புப்பாராட்டுகள்..

உங்களால் நல்ல கதையாசியராகவும் பரிமளிக்கமுடியும் என முழுமனதுடன்
வாழ்த்துகிறேன்..

'(திருஷ்டி கழிக்க குறை ஒன்றைச் சொல்லலாம்தானே???!!

ஒரே நெருடல் − இடையில் வந்த ராம்... ஜூபைடாவுக்கு கொடுத்த முன்னுரை கூட இல்லாமல்
இடையில் சடாரென வந்ததால் படிப்பதில் சிறு தடங்கல் வந்தது..எனக்கு..)

மன்றத்தில் எனது முதல் ஐ−பண அன்பளிப்பு இக்கதைக்காக உங்களுக்கு!
வாழ்த்துகள் மீண்டும்.. நேரம் அமைந்தால் அடுத்தடுத்து கதைகள் அளியுங்கள்..

ஓவியா
14-07-2007, 02:50 AM
ஓவியா, ஒரு சாதரண எதார்தமான கரு. நல்ல கற்பனை. இவை இறண்டையும் சேர்த்து ஒரு மகத்தான சோக கதையை பின்னி விட்டீர்கள். மிக அழகான நடையுடன் இந்த கதையை எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துககள். நன்றி.

நன்றி கோபாலன்.
சாமி வ*ர*ம் கொடுத்தும் பூசாரி இன்னும் வ*ர*ம் கொடுக்க*வில்லையா? அய்யா புருஃப் ரீட*ரே, சிக்கிர*மாக* ஆட்டோ வ*ருவ*த*ற்குள் திருத்தி அனுப்பிவிடுங்க*ள்.

ந*ன்றி வ*ணக்கம்
ஆரென்

அதானே! நல்லா சொல்லுங்க.

ஓவியா
14-07-2007, 02:54 AM
பாராட்டுகள் ஓவியா..

ஊடாடும் கவித்துவ− நகைச்சுவை வர்ணனைகள்..
ஆனால் அவை இடறாமல் கதையை நீரோட்டமாய் வாசிக்க முடிந்தது..

எளிய சம்பவங்கள்..
கோர்த்த விதம்தான் வலிமை..

முதல் கதை மிக முத்திரைக்கதையாய் அமைந்ததற்கு சிறப்புப்பாராட்டுகள்..

உங்களால் நல்ல கதையாசியராகவும் பரிமளிக்கமுடியும் என முழுமனதுடன்
வாழ்த்துகிறேன்..

'(திருஷ்டி கழிக்க குறை ஒன்றைச் சொல்லலாம்தானே???!!

ஒரே நெருடல் − இடையில் வந்த ராம்... ஜூபைடாவுக்கு கொடுத்த முன்னுரை கூட இல்லாமல்
இடையில் சடாரென வந்ததால் படிப்பதில் சிறு தடங்கல் வந்தது..எனக்கு..)

மன்றத்தில் எனது முதல் ஐ−பண அன்பளிப்பு இக்கதைக்காக உங்களுக்கு!
வாழ்த்துகள் மீண்டும்.. நேரம் அமைந்தால் அடுத்தடுத்து கதைகள் அளியுங்கள்..

மிக்க நன்றி இளசு,

உங்களின் விமர்சனதிற்க்காக பலமுறை ஏங்கியுள்ளேன். இன்று அதனை கண்டு கண் குளிர்ந்தேன், விமர்சங்கண்டு மனம் குளிர்ந்தேன். நன்றி நன்றி நன்றி.

அத்துடன் முதல் ஐ−பணத்தை என் கதைக்கு அளித்து இந்த திரிக்கு சிறப்பு சேர்த்து விட்டீர்கள். மீண்டும் ந*ன்றி. :grin:

விகடன்
26-07-2007, 04:23 AM
அருமையான கதை ஓவியாக்கா. :thumbsup:

தத்ரூபமாக வடித்திருக்கிறீர்கள்.
மன நிறைவுடன் பாராட்டுகின்றேன்.

ஓவியா
05-08-2007, 12:07 AM
அருமையான கதை ஓவியாக்கா. :thumbsup:

தத்ரூபமாக வடித்திருக்கிறீர்கள்.
மன நிறைவுடன் பாராட்டுகின்றேன்.

மிக்க நன்றி விராடா(ஜாவா). உங்கள் பாராட்டு என்னை மகிழ்வித்தது.

kalaianpan
09-08-2007, 04:02 PM
ஆனுபவித்து எழுதியதாக உள்ளது.
வாழ்த்துக்கள்.............
வசன நடை உம்ம்.....
பாராட்டுக்கள்........
தொடர வேண்டும் பணி......
நன்றி....
:4_1_8:

ஓவியா
09-08-2007, 05:45 PM
6565.81

ஆனுபவித்து எழுதியதாக உள்ளது.
வாழ்த்துக்கள்.............
வசன நடை உம்ம்.....
பாராட்டுக்கள்........
தொடர வேண்டும் பணி......
நன்றி....
:4_1_8:

நன்றி கலையன்பன்

ஆதவா
09-08-2007, 05:51 PM
இந்த கதையை இன்னும் நோண்டி எடுத்துக் கொன்டிருக்கிறார்களா? பலே!!

கதையின் வலிமை அப்படிப்பட்டது..

மீண்டுமொருமுறை வாழ்த்துக்கள்....

ஓவியா
09-08-2007, 05:58 PM
நன்றி ஆதவா. ஒரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னும் ஒரு ஆண் இருப்பான் என்பது யாமறிந்த மொழியே!!

எழுத்துப்பிழையை அழகாக திருத்தி, கதையை சிற்ப்பம்போல் செதுக்கிய உங்களுக்கு மீண்டும் என பனிவான வணக்கங்கள்.

leomohan
15-08-2007, 04:04 AM
பூமியின் ஏக்கங்களைக் கண்டு வர்ண பகவான் கர்ண பகவானாக மாறி, மருகும் காதலியிடம் மெல்ல மெல்ல உருகிக் கரையும் காதலன் போல், சொட்டு சொட்டாய், குட்டி குட்டியாய் வட்ட வட்டமாய் தூறல் போட்டார்.

சனிக்கிழமை மதியம், மின்விசிறி அது தான் பிறந்தப்பயனை செய்துக்கொண்டு இருந்தது.

இரவு சென்று பகலை அனுப்பியது.

பார்த்த சிவாவின் கண்களில் அழகு பூனையின் பிம்பம் பதிந்தது. மீண்டும் மீண்டும் விழுந்த கண்ணீர்த் துளிகள் கல் நெஞ்சமடி உனக்கு என்ற வசனத்தை பொய்யாக்கியது.

எளிமையான அழுத்தமான கதை.

சில புதிய வர்ணணைகள் அழகு.

ரசித்து எழுதியிருக்கிறீர்கள் ஓவியா. வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் நடந்ததா.

ஆமாம் சப்பாத்து பெட்டி என்றால் என்ன?

ஓவியா
16-08-2007, 12:31 AM
எளிமையான அழுத்தமான கதை.

சில புதிய வர்ணணைகள் அழகு.

ரசித்து எழுதியிருக்கிறீர்கள் ஓவியா. வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் நடந்ததா.

ஆமாம் சப்பாத்து பெட்டி என்றால் என்ன?

இல்லை இது என் கர்ப்பனை கதை. அது சப்பாத்தி பெட்டி, காலனிகள் அடிக்கி வைக்கும் பெட்டி, நடைமுறை தமிழ் எழுதினேன்.

உங்கள் பின்னூட்டத்திர்க்கு நன்றி.

பின் குறிப்பு,
நான் கேட்டுக்கொண்டதால் தானே இந்த பின்னூட்டம வந்தது, அதனால் இந்த பின்னூட்டம் செல்லுபடியாகாது.

சிவா.ஜி
16-08-2007, 04:49 AM
முதலில் மன்னிப்பு...இந்த அருமையான கதைக்கு இத்தனை நாள் பின்னூட்டமிடாததற்கு. உண்மையில் சொல்வதென்றால் இதை கதையென்று கருதவே முடியவில்லை. என் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வை நானும் ஒரு பார்வையாளனாகவும்,பங்கெடுப்பாளனாகவும் இருப்பதைப்போல உணர்கிறேன்.வெகு சரளமான ஓட்டத்தில் கதை செல்கிறது. கவிதை எழுதிய கைகளில்லையா அதனால் இந்த கதையிலும் அதன் தாக்கம் மிக அழகுடன் கலந்துள்ளது. இயல்பான உரையாடல்கள்,தேவையான அளவுக்கு காட்சி வர்ணனைகள்,ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணத்தை மெள்ள மெள்ள வெளிப்படுத்திய விதம்...என்னவென்று சொல்ல.நல்ல ஒரு கதையை படித்த மனத்திருப்தியும், நல்ல மனங்களை உணர்ந்த சந்தோஷமும் ஒரு சேரக் கிடைதது. வாழ்த்துக்கள் ஓவியா.

இதயம்
16-08-2007, 05:58 AM
வழக்கம் போல் வருத்தம் தெரிவிக்க வார்த்தைகளை தேடுகிறேன். இந்த கதையை ஓவியா எழுதி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும், அதற்கு பின்னூட்டம் இடத்தான் எனக்கு தாமதமானதே தவிர, அதை படித்து சுவைக்க அல்ல.! ஆமாம்..! ஓவியா அதை எழுதி பதித்த உடனேயே படித்துவிட்டு, நல்ல பிள்ளை போல் இருந்து விட்டேன்.

இந்த கதைக்கான பின்னூட்டம் காணும் போதெல்லாம் அதற்கு பின்னூட்டமிடாததை எண்ணி என் மனம் குற்ற உணர்ச்சியில் தவிக்கும். ஆனால், நேரமின்மை அதை வெற்றிகொண்டுவிடும். ஆனால், இன்று நேரமின்மை, குற்ற உணர்ச்சி முன் மண்டியிட்டு சரணடைந்ததால் இதோ இந்த பின்னூட்டம் தயாராகிக்கொண்டிருக்கிறது. எனக்கு மனதை மயக்கும், பாதிக்கும், பயனுள்ள படைப்புகளுக்கு ஒரு வரியில் சம்பிரதாய பின்னூட்டம் என்பது பிடிக்காத விஷயம். ஏறக்குறைய என் எல்லா மன உணர்வுகளையும் அங்கு கொட்டதான் பார்ப்பேன். அப்படி உணர்ந்து, அதற்காக எழுதி முடிக்கும் போதும் ஒவ்வொரு முறையும் இன்னும் நிறைய எழுதாமல் விட்டுவிட்ட ஏக்கத்தோடு தான் என் பின்னூட்டங்கள் முடிகின்றன.

ஓவியாவின் படைப்புகளுக்கு பின்னூட்டம் என்பது வஞ்சனையில்லாமல் கிடைக்கும் என்பது நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. அதற்கு அடிப்படையாக அவருடைய எழுத்து திறமையும், இதய அன்பும் காரணமாக இருக்கிறது. அன்பு என்பது பரிமாறிக்கொள்ளப்படும் போது தான் அதன் உண்மையான நோக்கம் நிறைவேறுகிறது. அதை ஓவியாவின் எழுத்துக்கள் அற்புதமாக செய்கின்றன. அதை அவருடைய பின்னூட்டங்களை படிப்பவர்கள் உணர்வார்கள். பொதுவாக ஆண்களுக்கு பெண்களைத்தான் அதிகம் பிடிக்கும். காரணம், அவர்களிடம் இருக்கும் தாய்மை. அதனால் தான் ஆண்களுக்கு முதலில் தாயையும், மனைவியையும் அதிகம் பிடிக்கிறது. ஓவியா அந்த தாய்மையையை தன் எழுத்தில் காட்டி, எல்லோரையும் கட்டிப்போடுகிறார். சரி.. கதைக்கு வருகிறேன்.

ஓவியாவுக்கு இது முதல் சிறுகதையாம். மனம் நம்ப மறுக்கிறது. அதற்கு கதையில் நிறைந்து நிற்கும் கருத்து செறிவும், பொருத்தமான வர்ணனைகளும், இயல்பான உரையாடல்களும், கருவை சிதைக்காத அனுபவம் மிக்க நடையும் துணை நிற்கின்றன. கதையின் துவக்கமே அற்புதமான உவமையுடன் கூடிய...

பூமியின் ஏக்கங்களைக் கண்டு வர்ண பகவான் கர்ண பகவானாக மாறி, மருகும் காதலியிடம் மெல்ல மெல்ல உருகிக் கரையும் காதலன் போல், சொட்டு சொட்டாய், குட்டி குட்டியாய் வட்ட வட்டமாய் தூறல் போட்டார்.

என்ற வர்ணனையில் தொடங்கும் போது கதைப்பற்றிய ஆர்வத்தை தூண்டி விடுகிறது. தொடர்ந்து படிக்க ஆரம்பித்தால், அந்த கதாபாத்திரங்கள் வாழும் சூழலுக்குள் நாம் இயல்பாக தள்ளப்படுகிறோம். படித்துக்கொண்டிருக்கும் போதே, இதை ஓவியா தன்னுடைய கற்பனை கதை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இவர் எழுதிய கதையை விட, அவர் விட்ட "கதை" ரசனையானது. காரணம், தன் மனதில் ஏந்தி, அனுபவித்த ஒரு சம்பவத்தை எழுதிவிட்டு அதை கற்பனை என்று சொன்னால் அதை நம்ப நாங்கள் என்ன கீழ்பாக்கத்திலா குடியிருக்கிறோம்?!. வேண்டுமானால், அதில் கொஞ்சம் கற்பனை கலந்திருக்கிறது என்று சொல்லட்டும்.

இந்த கதை கற்பனையல்ல என்பதை நகரும் வேகம் கொண்டு நிரூபிக்க முடியும். கற்பனை கதை என்றால் எதிர்பாராத திருப்பங்களை கோர்த்து, ஜெட் வேகத்தில் கொண்டு செல்ல முடியும். அந்த வேகம் இந்த கதையில் இல்லை என்பதால் இது கற்பனைக்கதைக்கான சாத்தியங்களை குறைத்துவிடுகிறது. அடுத்து, கதையின் வேகத்திற்காக கொடுக்கப்படும் திருப்பங்கள் படிக்கும் நம் நேரத்தை தின்னுமே தவிர, நெஞ்சை தொடாது. ஆனால், தென்றலின் இதமான வேகத்துடன் தவழ்ந்து போகும் இந்த கதை உறவுகளை கொண்டு உணர்வுகளை சொல்லுவதால் நெஞ்சை நெகிழச்செய்கிறது.

கதையில் அமைந்துள்ள உரையாடல்கள் ஒரு கைதேர்ந்த எழுத்தாளரை காண்பிக்கிறது என்றால், அதை எழுத தேர்ந்தெடுத்த வார்த்தைகள் ஓவியாவின் விகல்பமில்லாத மனதை காட்டுகிறது. உன் நண்பனைப்பற்றி சொல், உன்னைப்பற்றி சொல்கிறேன் என்ற பொன்மொழி உண்டு. அதில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். உன் எழுத்தை காட்டு, உன்னை காட்டுகிறேன் என்பது தான் அது.! கதையின் பாத்திரங்களாக ஓவியா தேர்ந்தெடுத்த பெயர்கள் கூட கற்பனை அல்ல. அவர் தன் வாழ்வில் சந்தித்த, பாதித்த அல்லது மறக்க முடியாதவர்களின் பெயர்களாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

கதையை சொன்ன விதத்தில் கற்பனையின் அடையாளம் கொஞ்சமும் இல்லை. ஒரு நன்றாக எழுதத்தெரிந்த பெண்ணை "நடந்ததை எழுது" என்று சொன்னால் வெளிப்படும் எழுத்தாகவே இது தெரிகிறது. அத்தோடு ஓவியாவின் கற்பனை வர்ணனைகள் கதைக்கு கை கொடுத்திருக்கின்றன, அவ்வளவே..! எனக்கு தெரிந்து பெண்ணின் மன உணர்வை ஆணின் மன உணர்வோடு ஒப்பிட முடியாத அளவுக்கு மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம் தான் பெண்மையை உயர்த்துகிறது. கையில் காசு கொடுத்து சாப்பிடச்சொல்லும் ஒரு தந்தையின் அக்கறையை விட, "சாப்பிட்டியா..?" என்று கேட்கும் தாயின் ஒற்றை நெகிழ்வு வார்த்தை கொடுக்கும் அன்பு எத்தனை உயர்வானது, அழகானது.? ஒரு பூனைக்குட்டியின் மீதான அன்பை சொன்ன விதத்தில் அந்த நெகிழ்வை காண்கிறேன். கதையின் இறுதியில் சொல்லப்பட்ட குட்டியின் மரணம் சாதாரணர்களுக்கு வேண்டுமானால் அது தூசு.! அன்பு என்ற அற்புத உணர்வை முழுதும் புரிந்தவர்களுக்கு அது துயரம்..!

கருத்தை தொட்ட கதை என்பதை விட, மனதை தொட்ட கதை என்பது தான் இதற்கு பொருந்தும். பரபரப்பு கதை, திகில் கதை என்ற பெயரில் எழுத முயற்சித்து, தன்னுள் இருக்கும் உணர்வுகளை உன்னத முறையில் பதிவு செய்யும் ஒப்பற்ற எழுத்தாளரை ஓவியா கொல்லக்கூடாது என்பது என் அன்பு வேண்டுகோள்..!

ஓவியா
24-08-2007, 03:15 PM
முதலில் மன்னிப்பு...இந்த அருமையான கதைக்கு இத்தனை நாள் பின்னூட்டமிடாததற்கு. உண்மையில் சொல்வதென்றால் இதை கதையென்று கருதவே முடியவில்லை. என் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வை நானும் ஒரு பார்வையாளனாகவும்,பங்கெடுப்பாளனாகவும் இருப்பதைப்போல உணர்கிறேன்.வெகு சரளமான ஓட்டத்தில் கதை செல்கிறது. கவிதை எழுதிய கைகளில்லையா அதனால் இந்த கதையிலும் அதன் தாக்கம் மிக அழகுடன் கலந்துள்ளது. இயல்பான உரையாடல்கள்,தேவையான அளவுக்கு காட்சி வர்ணனைகள்,ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணத்தை மெள்ள மெள்ள வெளிப்படுத்திய விதம்...என்னவென்று சொல்ல.நல்ல ஒரு கதையை படித்த மனத்திருப்தியும், நல்ல மனங்களை உணர்ந்த சந்தோஷமும் ஒரு சேரக் கிடைதது. வாழ்த்துக்கள் ஓவியா.

ந*ன்றி சிவா அண்ணா, உங்க*ளை போன்ற* சிற*ந்த* எழுத்தாள*ர்க*ளின் கையால் பாராட்டு பெருவ*தை என் பாக்கிய*மாக*வே க*ருதுகிறேன்.

ஓவியா
24-08-2007, 03:34 PM
ஜபர் அண்ணா, தங்களின் அலசல் பின்னூட்டம் கண்டு வாயடைத்து போனேன், பிரமாதம், மிக்க நன்றி.

ஆனால் ஒரு விசயம், இது முற்றிலும் கற்ப்பனை கதையே!!

முத*ல் வ*ரி ஒருவ*ரின் காத*லுக்கு ஏங்கி த*விக்கும் பொழுது, அவ*ரை க*ண்டு மெல்ல க*றைவ*து தான் அந்த* வ*ரியின் அர்த்தம். நமக்கு பிடித்தமான ஒருவர் (பூமி=பெண், மழை=ஆண்) கண்முன் தோன்றினால் எப்படி என்று என் அனுபவத்தை இய*ற்க்கையுட*ன் ஒப்பிட்டு எழுதினேன்.

ம*ற்ற*ப*டி கதையின் க*ரு க*ற்ப்ப*னைதான்

பிச்சி
25-08-2007, 05:39 AM
அக்கா அடுத்த கதை எப்போது??

ஓவியா
27-08-2007, 12:33 AM
அடுத்த பதிவில் ஒரு கதையே இருக்கு!! :−)

அக்னி
27-08-2007, 01:25 AM
இதயம் அவர்களே...
உங்கள் பின்னூட்டம் சிறப்பு...
ஒரு படைப்பின் வெற்றி, ரசிகன் அந்தப் படைப்பை ரசிப்பதற்கும், அதற்குண்டான குறைநிறைகளை கூறுவதற்கும் செலவிடும் நேரத்தை வைத்து, மேன்மை பெறுகின்றது என்பது மறுக்கமுடியாது...
அந்த வகையில், நீண்டதொரு பின்னூட்டத்தை இடுமளவுக்கு, ரசித்திருக்கிறீர்கள்...
உங்களது ரசனையையே பெரும் பதிவாக்கி மகிழ்வித்தமைக்கு நன்றி!

பரபரப்பு கதை, திகில் கதை என்ற பெயரில் எழுத முயற்சித்து, தன்னுள் இருக்கும் உணர்வுகளை உன்னத முறையில் பதிவு செய்யும் ஒப்பற்ற எழுத்தாளரை ஓவியா கொல்லக்கூடாது என்பது என் அன்பு வேண்டுகோள்..!
இதனை என்னால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் பன்முகப்படுவது, சிறப்பும், வளர்ச்சியுமே பெறும் என்று நினைக்கின்றேன்... ஒரே திசையில் எழுத்துக்கள் அணிவகுத்தால், குறிப்பிட்ட வரையறைக்குள் எழுதும் எழுத்தாளர் என்றல்லவா முத்திரை குத்தப்பட்டுவிடும்? எழுத்துக்கள் பன்முக பார்வை பெறுவது என்பது, எழுத்தாளரின் ஆற்றல் என்பதோடு, அது, பல்வேறு தரப்பினரிடமும் அந்த எழுத்தாளரைக் கொண்டு செல்லும் என்றே எண்ணுகின்றேன்...

இதயம்
29-08-2007, 08:02 AM

உங்கள் பாராட்டுக்கும், கருத்திற்கும், இவற்றிற்கு அடிப்படை காரணமான சகோதரி ஓவியாவிற்கும் நன்றிகள்.!

உங்களின் மேற்சொன்ன கருத்தில் நான் முரண்படுகிறேன். ஒரு துறை சார்ந்த விஷயத்தில் நுனிப்புல் மேய்வது போல் இல்லாமல், அந்த துறையில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் கவனம் செலுத்தினால் மட்டுமே அதில் உயர் சாதனைகள் செய்ய வாய்ப்புகள் அதிகம். அப்போது தான் அது அடுத்தவர்கள் கவனத்தை கவரும், திறமை வெளி உலகிற்கு எடுத்துச்செல்லப்படும் என்பது என் கருத்து. பன்முகத்திறமை என்பது எல்லோருக்கும் கிட்டுவதில்லை அல்லது இருந்தும் ஊக்குவிக்க சுய விருப்பமோ அல்லது தூண்டுதலோ கிடைப்பதில்லை. ஆனால், அவரே ஏதேனும் ஒரு துறையில் தன் சிந்தனையை செலுத்தி அதில் மேலும், மேலும் தன் உழைப்பை அளிக்கும் போது, அதில் அவர் சிறந்து விளங்குவார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

எழுத்தாளர்களில் உலகப்புகழ்பெற்றவர்களின் பட்டியலை கண்டோமென்றால் இது போன்ற பன்முகத்திறனுடைய எழுத்தாளர்களின் பெயர் இல்லை என்றே சொல்லலாம். உதா.அகதா கிறிஸ்டி என்ற புகழ்பெற்ற் ஆங்கில எழுத்தாளர் எழுதிய கதைகள் எல்லாம் மர்ம நாவல்கள். அவர் புகழை உயர்த்தியது அவை மட்டுமே. அதுவே, அவர் மற்றவகை நாவல்களும் எழுதியிருந்தால் அவரின் நாவல் தரம் குறைந்து புகழடையாமலேயே போயிருக்கலாம். கொஞ்சம் இறங்கி நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு வந்தால் க்ரைம் கதைக்கு ராஜேஷ்குமார், சுபா, குடும்ப கதைகளுக்கு இந்துமதி, அனுராதா ரமணன், சரித்திரக்கதைகளுக்கு கல்கி, சாண்டில்யன் என்று அவர்களுக்கென்று ஒரு பொருளை தேர்ந்தெடுத்து அதில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதே போல் க்ரைம் கதை என்ற வகையில் பார்த்தால் அதிலும் தனக்கென்று தனி பாணி கொண்டவர்கள் உண்டு. திடுக்கிடும் திருப்பங்கள் ராஜேஷ்குமாருடையது, கொஞ்சம் சில்மிஷ உரையாடல்களை உள்ளடக்கியது பட்டுக்கோட்டை பிரபாகர், பெண்கள் படிக்க வெட்கப்படும் கவர்ச்சி மிகுந்த எழுத்து புஷ்பா தங்கத்துரையினுடையது. இப்படி அவர்கள் எப்படி தனக்கென்று தனி பாணியை வரையறுத்துக்கொண்டு அதில் சிறப்பாக படைப்புகளை செய்கிறார்களோ அப்போது அவர்களின் திறமை வெளிப்பட பெரும் வாய்ப்புள்ளது என்பது என் கருத்து. இது எழுத்து துறை மட்டுமல்ல, எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும்.

ஆதவா
29-08-2007, 08:08 AM
உங்கள் பாராட்டுக்கும், கருத்திற்கும், இவற்றிற்கு அடிப்படை காரணமான சகோதரி ஓவியாவிற்கும் நன்றிகள்.!

அவர்கள் எப்படி தனக்கென்று தனி பாணியை வரையறுத்துக்கொண்டு அதில் சிறப்பாக படைப்புகளை செய்கிறார்களோ அப்போது அவர்களின் திறமை வெளிப்பட பெரும் வாய்ப்புள்ளது என்பது என் கருத்து. இது எழுத்து துறை மட்டுமல்ல, எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும்.

பொருந்தாது... பிறகு இதை விளக்கமாக சொல்லுகிறேன்....

ஓவியா
14-09-2007, 02:24 AM
ஆமாம், எப்போ ஆதவா, அந்த பதிவு வரும்??.

Keelai Naadaan
29-04-2008, 06:50 PM
அற்புதமாக இருக்கிறது. பல புத்தகங்கள் படித்து பலமுறை எழுதி பார்த்த ஒருவரால் தான் இப்படி ஒரு கதையை எழுத முடியும். சொல்ல வரும் கருத்தை, ஆரம்பத்தில் ரசிக்கும் படியாய் எழுதி கடைசியில் அதை புரியவைக்கும் திறன்....!
பாராட்டுகள் சொர்ணக்கா. இல்லை நீங்கள் சொர்ணக்கா இல்லை. கருணை மேரி தான்.

அனுராகவன்
30-04-2008, 03:18 AM
நன்றி ஓவி....
நல்லதொரு கதை புத்தகம் படித்த அனுபவம் வருது..
நல்ல கரு அமைத்து நல்குதந்த உனக்கு என் வாழ்த்துக்கள்!!

MURALINITHISH
31-10-2008, 09:19 AM
கல் நெஞ்சம்தான் இப்போது அனைவருக்குமே
தள்ளி நின்றுதான் ரசிக்க முடியுமே தவரி அருகில் வைத்து அல்ல

ஓவியா
13-11-2008, 03:34 PM
அற்புதமாக இருக்கிறது. பல புத்தகங்கள் படித்து பலமுறை எழுதி பார்த்த ஒருவரால் தான் இப்படி ஒரு கதையை எழுத முடியும். சொல்ல வரும் கருத்தை, ஆரம்பத்தில் ரசிக்கும் படியாய் எழுதி கடைசியில் அதை புரியவைக்கும் திறன்....!
பாராட்டுகள் சொர்ணக்கா. இல்லை நீங்கள் சொர்ணக்கா இல்லை. கருணை மேரி தான்.

அஹஹ்ஹ அண்ணா, நான் சொர்ணாக்காதான், சொர்ணம்=தங்கம் (தங்க ஓவியா) :D:D:D

ஆரம்பக்கல்வி மலாய் மொழியிலும், பின் லண்டன் பலகலைகளகங்களில் ஆங்கிலத்தில் படித்தாலும், முறையாக கற்காத என் தமிழே எனக்கு இனிமை, (கீழே பாரதி அண்ணா இந்தபின்னூடாத்தை வாசிக்க கண்டேன், பாரதியண்ணாவின் மனதில் அனேகமாக இதான் ஓடியிருக்கும்: ஓ அப்ப ஓவிக்கு மலாயும் ஆங்கிலமும் பிரமாதமாக வருதா :lachen001:) தமிழ் வளம் இன்னும் பெருகுமானால் இன்னும் பல கதைகளை படைக்க ஆவல் கொண்டுள்ளேன் அண்ணா.

பாராட்டிற்க்கு மிக்க நன்றி அண்ணா.

நன்றி ஓவி....
நல்லதொரு கதை புத்தகம் படித்த அனுபவம் வருது..
நல்ல கரு அமைத்து நல்குதந்த உனக்கு என் வாழ்த்துக்கள்!!

மிக்க நன்ற்றி அனு அக்கா. :)கல் நெஞ்சம்தான் இப்போது அனைவருக்குமே
தள்ளி நின்றுதான் ரசிக்க முடியுமே தவரி அருகில் வைத்து அல்ல

அனைவருக்கும் கல் நெஞ்சமா? ஓ வைரநெஞ்சத்தைதான் (வைரம்=கல்) என்று சொல்ல வருகின்றீர்களோ? :D:D

உங்கள் பின்னூட்டம் புரியவில்லையோ எனக்கு :redface: