PDA

View Full Version : ஈழத்து செய்திகள்



சுட்டிபையன்
27-04-2007, 07:11 AM
ஈழத்து செய்திகளை இங்கே பதியலாம் என்று நினக்கின்றேன்:icon_wink1:

சுட்டிபையன்
27-04-2007, 07:13 AM
புலிகளின் விமானங்கள் மீண்டும் வந்ததாகக் கிலி! கட்டுநாயக்கா, கொழும்புப் பகுதிகளில் பெரும் பதற்றம்!! ஒரு மணிநேரம் இருளடையச் செய்து விமான எதிர்ப்புப் பீரங்கிகள் முழங்கின.
கொழும்பு,ஏப்.27
.விடுதலைப் புலிகளின் விமானங்கள் மீண்டும் கட்டுநாயக்கா நோக்கி வந்துவிட்டதாகக் கிலி கொண்டு, விமானத் தளத்தில் இருந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகளும் ஷெல்களும் தொடர்ச்சி யாக அரை மணிநேரத்துக்கும் அதிகமாக நேற்றிரவு முழுங்கின.
கட்டுநாயக்காவை அண்டிய பகுதிகளான ஜா.எல, சீதுவ, வத்தளை, பேலியகொட மற்றும் நீர்கொழும்புப் பிரதேசங்களில் இடியோசை போன்ற பெரும் சத்தங்கள் கேட்டதால் அப் பகுதி மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். என்ன நடக்கப் போகின்றதோ எனத் திகிலுற்றனர்.
விமான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டு தலைநகர் கொழும்பு உட்படப் பல பிரதேசங்கள் இருளடையச் செய்யப்பட்டன. அதனால் பல பிரதே சங்களைச் சேர்ந்த மக்கள், என்னவோ, ஏதோ என்று பதற்றமுற்றனர்.
நேற்றிரவு சுமார் 10.55 மணிக்குத் துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் சுமார் 11.45 மணிக்கு கிடைத்த பின்னரே கட்டுநாயக்கா வில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் மற்றும் ஷெல்கள் முழங்கியதன் கார ணம் மக்களுக்கு தெரியவந்தது.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, கட்டுநாயக்க விமானத் தளம் மற்றும் சர்வதேச விமான நிலையம், இராணுவத் தலைமையகம் உட்பட பிரதான இடங்களில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளடையச் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.
புத்தளத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மூன்று விமானங்கள் வடக்கிலிருந்து தெற்குப் பக்கமாக கடலை முட்டிச் செல்வது போன்று பறப்பதைக் கண்டதாக விமானப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதனால் உண்டான சந்தேகத்தின் அடிப்படையில் அவசரத் தடுப்பு பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டன. அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்ற அபாய நிலையைக் கருத்தில்கொண்டு சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. மின்சாரமும் துண் டிக்கப்பட்டது என்று மூத்த படை அதிகாரி ஒருவர் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு கூறியிருந்தார்.
விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் வானத்தில் விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்தப்பட்டன என்பதை பாதுகாப்புத் தரப்புகள் உறுதிப்படுத்தின. கட்டுநாயக்காவைச் சூழ உள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வானத்தை நோக்கி நீண்ட நேரம் எரிபந்தப் பரசூட்டுகள் ஏவப்பட்டதைத் தாம் கண்டதாகக் கூறினர்.
அங்கிருந்து எச்சரிக்கை வேட்டுக்கள், குண்டுகள் வெடித்ததைக் கேட்க முடிந்ததாகவும் அவர்கள் மேலும்தெரிவித்தனர்.
இதேவேளை
நேற்றிரவு சுமார் 11 மணிக்கு புத்தளம் கடற்பகுதிக்கு மேலாக இரண்டு சந்தேகத்துக்கு இடமான இனந்தெரியாத விமானங் கள் பறந்ததாகக் கிடைத்த எச்சரிக்கையாக தற்காப்பு பீரங்கி வேட்டுகளைத் தீர்த்ததாக மற்றொரு செய்தி தெரிவித்தது.
நேற்றிரவு 10.50 மணியளவில் மர்ம விமானம் பறக்கும் சத்தம் கேட்டதைய டுத்து விமானத் தளத்தில் இருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. ஷெல்களும் ஏவப்பட்டன.
இதனால் விமான நிலையத்துக்குச் சென்ற பயணிகளிடையேயும் பதற்றம் ஏற்பட்டது.
இடிமின்னல் சத்தத்துடன் சேர்ந்து குண்டு வெடிக்கும் சத்தங்களும் கேட்ட தாக கட்டுநாயக்காவுக்குச் சமீபமாகவுள்ள கிராம வாசிகள் தெரிவித்தனர்.
சுமார் 45 நிமிடங்களின் பின் நிலைமை வழமைக்குத் திரும்பியது.
விமான நிலையம் செல்லும் பாதை கள் உடனடியாக யாவும் மூடப்பட்டிருந்த போதிலும் நேற்று நள்ளிரவு 12.30 மணி யளவில் விமானப் பறப்புக்கள் ஆரம்பமா கின. விமான சேவைகள் வழமைக்குத் திரும்பின.
கடந்த மாதம் 25ஆம்திகதி நள்ளிரவு 1.20 மணிக்கு விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் கட்டுநாயக்க விமானத் தளம் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி யிருந்தமை தெரிந்ததே.
நன்றி உதயன்

சுட்டிபையன்
27-04-2007, 07:19 AM
விடுதலைப் புலிகளின் விமானத்தை தாக்கச்சென்ற எம்.ஐ. 24 ரக ஹெலிகொப்டர் வீழ்ந்து நொருங்கியதாக கூறப்படுகிறது. காரணம் என்னும் தெரிய வில்லை. விமானத்திலிருந்து தாக்குதல் நடத்தப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன:icon_wacko:

சுட்டிபையன்
29-04-2007, 04:14 AM
எரிவாயுக் குதங்கள் தீப்பற்றி எரிகின்றன
கொழும்பின் வடபுலத்தில் உள்ள வத்தளை கெரவெல்பிட்டிய பகுதியில் அமைந்திருக்கும், எரிபொருள் - எரிவாயுக் குதங்களில் பாரிய வெடியதிர்வுகள் ஏற்பட்டு தீப்பற்றியுள்ளன.

கெரவெல்பிட்டிய பகுதியில் உள்ள மூன்று எரிபொருள் - எரிவாயுக் குதங்கள், தற்போது தீப்பற்றி எரிவதாக கூறப்படுகின்றது.

இதேபோன்று முத்துராஜவெல பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றும், தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக இவை வெடித்து தீப்பற்றிய இருக்கலாம் என, உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, இன்று அதிகாலை 1:45 மணிக்கு, கட்டுநாயக்கா வான்படை தளத்தின் ராடர் திரையில், வடக்கின் திசையில் இருந்து தெற்கை நோக்கி இரண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கட்டுநாயக்கா - ரத்மலானை ஆகிய வான்படை தளங்களில் இருந்தும், கொழும்பு துறைமுக கடற்படை தளத்தில் இருந்தும், கொழும்பு மத்தி, வத்தளை, நீர்கொழும்பு மத்தி, கொலன்னாவ, கெலனி திஸ்ஸ, ராஜகிரிய, முத்துராஜவெல ஆகிய பகுதிகளில் இருந்தும், வான்பரப்பை நோக்கி சிறீலங்கா படைகளால் தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுக்களும், ரேசர் வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு, பரா வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டுள்ளன.

அதிகாலை 2:25 மணியளவில் ஓய்ந்த துப்பாக்கி வேட்டொலிகள், மீளவும் அதிகாலை 3:05 மணி முதல் செவிமடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக, கொழும்புக்கான மின்சார இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு, நகரம் இருளில் மூழ்கியுள்ளது.

இதனால், மேற்கிந்திய தீவுகளில் அவுஸ்திரேலிய - சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணிகளுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும், உலகக் கிண்ண துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றை, தொலைக்காட்சியில் கண்டுகளிக்க முடியாது, கொழும்பில் உள்ள சிங்களவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதனிடையே கொழும்பில் குழப்பநிலை ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், வன்னியில் சிறீலங்கா வான்படையின் யுத்த விமானங்கள், வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி விட்டு, தெற்கு நோக்கி பறப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

பதிவு


இந்த கெரவலப்பிட்டியவிலிருந்து 500மீற்றர் தொலைவில்தான் அடியேனது வீடு உள்ளது:p

சுட்டிபையன்
29-04-2007, 04:58 AM
கொழும்பை அலங்கரிக்கும் குண்டுகள்
http://i113.photobucket.com/albums/n206/lmut1/air-strike.jpg
http://i113.photobucket.com/albums/n206/lmut1/aa1ji8.png

கொல்லான்வை எண்ணை குதம்
http://i113.photobucket.com/albums/n206/lmut1/aa2ix5.png

நன்றி-bbc,siber news,puthinam.com

அக்னி
29-04-2007, 11:06 AM
நல்ல சிந்தனை சுட்டிபையன் அவர்களே...
இந்தச் சுட்டிமூலமாக ஈழத்தின் செய்திகளை ஒரே தொகுப்பாக எல்லோரும் கண்டுணரலாம்.

அக்னி
29-04-2007, 12:21 PM
இன, மொழி பேதமின்றி பத்திரிகைச் சுதந்திரம் சிங்கள அரசாலும், ஒட்டுக்குழுக்களாலும் அடக்கப்படும் வரிசையில்...

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் இளம் உடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் (வயது 25) இன்று முற்பகல் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்...

நன்றி:- புதினம்

சுட்டிபையன்
29-04-2007, 12:24 PM
மேலதிக படங்கள்

http://img03.picoodle.com/img/img03/8/4/29/f_cofire1m_8cf9b1e.jpg
http://img03.picoodle.com/img/img03/8/4/29/f_cofire4m_82ba539.jpg
http://img03.picoodle.com/img/img03/8/4/29/f_cofire7kuthm_1713e8e.jpg

ஓவியன்
29-04-2007, 12:32 PM
தகவலுக்கு நன்றி சுட்டி!

சுட்டிபையன்
29-04-2007, 12:34 PM
3ஆவதாக இருப்பதுதான் கொலன்னாவ எண்ணய் குதம், 1995ம் ஆண்டு இங்கே புலிகளால் நடத்தப் பட்ட தாக்குதலில் குதம் 3 நாட்கள் எரிந்தது, கொழும்பே புகை மண்டலமாக காட்சி அளித்தது

சுட்டிபையன்
30-04-2007, 01:23 PM
புலிகளின் பகுதிகளுக்கு குண்டு போடச் சென்ற கிபீர் ஜெட் விமானம் புலிகளினால் சுடப் பட்டு புகையை கக்கிய படி கட்டுப்பாட்டை இழந்து பறந்துள்ளது 2:45க்கு கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்ட கிபீர் என்னும் வந்து சேரவில்லை என்று அர்ரசு அறிவித்துள்ளது

ராஜா
30-04-2007, 01:51 PM
இன்னிக்கு ஒரு கிபீர் விமானத்தை போட்டுத் தள்ளிட்டாங்களாமே..!

சுட்டிபையன்
30-04-2007, 03:11 PM
கிபிர் யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டது
சிறீலங்கா விமானப் படையினருக்குச் சொந்தமான கிபிர் யுத்த விமானம் இன்று பிற்பகல் 3 மணிக்கு விடுதலைப் புலிகளால் சுடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது செய்தியாளர் தகவல் தெரிவிக்கையில்.....

சிறீலங்கா விமானப் படையினரின் கிபிர் விமானங்கள் இரண்டு இரணைமடுப் பகுதியில் குண்டுவீச்சை நடாத்த வட்டமிட்டபோது. இரணைமடுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்புத் தானியங்கி கருவிகள் செயற்பட்டு கிபிர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்புத் தாக்குதலில் சிக்கிய கிபிர் யுத்த விமானம் புகையினை கக்கிக்கொண்டு பறந்து தென்திசை நோக்கிப் பறந்து சென்றதாகக் கூறியுள்ளார்.

கொழும்புத் தகவலின்படி தாக்குதலுக்கு உள்ளாகிய கிபிர் விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை எனவும் அவ்விமானம் இதுவரை தொடர்பை இழந்துள்ளது எனவும் தெரியவருகிறது.

இதேவேளை குடிசார் தகவலின் படி விமானம் புகையினை கக்கிக் கொண்டு தென் திசை நோக்கி பறந்தையும் அவதானித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமானத் தளத்தின் வான் தொடர்பை இழந்த இக்கிபிர் விமானம் அநுராபுரப் பகுதியில் வீழ்ந்திருக்கலாம் அல்லது அவசர அவசரமான தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நன்றி pathivu

சுட்டிபையன்
30-04-2007, 03:43 PM
http://vwt.d2g.com:8081/thel2.jpg

சுட்டிபையன்
30-04-2007, 04:05 PM
மிக்-27 ரக யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டது
சிறீலங்கா விமானப் படையினருக்குச் சொந்தமான மிக்-27 ரக யுத்த விமானம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது செய்தியாளர் தகவல் தெரிவிக்கையில்.....

சிறீலங்கா விமானப் படையினரின் மிக்-27 ரக விமானங்கள் இரண்டு இரணைமடுப் பகுதியில் குண்டுவீச்சை நடாத்த வட்டமிட்டபோது. இரணைமடுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வான் காப்புப் படையணியின் விமான எதிர்ப்புத் தாக்குதலில் சிக்கிய மிக்-27 ரக யுத்த விமானம் . புகையினை கக்கிக்கொண்டு தென்திசை நோக்கிப் பறந்து சென்றதாகக் கூறியுள்ளார்.

கொழும்புத் தகவலின்படி தாக்குதலுக்கு உள்ளாகிய மிக்-27 யுத்த விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை எனவும் அவ்விமானம் இதுவரை தொடர்பை இழந்துள்ளது எனவும் தெரியவருகிறது.

இதேவேளை குடிசார் தகவலின் படி விமானம் புகையினை கக்கிக் கொண்டு தென் திசை நோக்கி பறந்தையும் அவதானித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமானத் தளத்தின் வான் தொடர்பை இழந்த இக்கிபிர் விமானம் அநுராபுரப் பகுதியில் வீழ்ந்திருக்கலாம் அல்லது அவசர அவசரமான தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பதிவு

மயூ
30-04-2007, 04:05 PM
நல்ல செய்தி... இயந்திரப் பறவைகளை அடக்க இதைத் தவிர வேறு வழி இல்லை!

சுட்டிபையன்
30-04-2007, 04:11 PM
அதுதான் மயூ இனிமேல் கைய கால வச்சிட்டு இருக்க வேண்டியதுதான் இவங்கள்

சுட்டிபையன்
30-04-2007, 04:12 PM
சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் எதைச் சாதித்தார்கள். கருணா பிரிவு அவர்களை பலவீனமாக்கிவிட்டது. விடுதலைப்புலிகளால் இனி செய்வதற்கு எதுவுமில்லை. அன்ரன் அண்ணா இழப்புடன் புலிகளின் சக்தியே அழிந்து விட்டது என்று எத்தனையே மனவோட்டங்களையும் கதைகளையும் பரப்பிய வல்லு{றுகள் இன்று வாய்பிழந்து நிற்கின்றன. பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு புலிகளே உதாரணம். பிரபாகரன் என்னும் நாமம் நினைத்தததை சாதிக்கும். எப்போது என்று எவராலும் புரிந்துகொள்ளமுடியாத ஓரு மர்மம். 5வருட சமாதான காலத்தில் சமாதானம் என்னும் நீரோட்டத்திலும் புலிகள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிலை நாட்டினார்கள். இன்று இந்த 4ம் கட்ட ஆரம்ப யுத்ததத்திலே நாம் என்றைக்கும் எவரிற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிலைநிறுத்தி வெற்றிவாகை சூடி நிற்கின்றார்கள்.
இந்த வெற்றி இத்துடன் முடிவுறப்போவதில்லை. தினம் தினம் இனி எமக்கு தீபாவளிதான்.

சுட்டிபையன்
01-05-2007, 05:26 AM
தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் புலிகள் சம்பந்தப்படவில்லை என அறிவிப்பு
தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போன மைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது:
தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலி களுக்கும் தொடர்பு இருப்பதாக வெளி வருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என் பதை தெளிவுபடுத்த விரும்புகின் றோம்.
இவை தமிழ் மக்களுக்கும் அவர் களுடைய விடுதலைப் போராட்டத் திற்கும் எதிரான சக்திகளால் திட்ட மிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.
தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்க ளைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங் களை கட்டவிழ்த்துவிட்டு இன அழிப் பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாகவே தமி ழக மீனவர்களை அவ்வப்போது கட லில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.
இப்படியான குற்றச்சாட்டுக் களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற் கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.
அதற்காகவே தமிழக மீனவர் கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்க ளிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர் களுக்கு மறைத்து அரசியல் இலா பம் சம்பாதிக்க நினைக்கின்றது.
எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வரு கின்றனர். அவர்களை அச்சுறுத்து வதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன் முறைகளில் இருந்தும் பல சந்தர்ப் பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின் றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத் திருக்கின்றோம்.
அப்படியிருந்தும் 300-க்கும் மேற் பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற் படையால் இதுவரையும் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.
அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமி டப்பட்டு சிங்கள இராணுவத்தின ராலேயே மேற்கொள்ளப்பட்டிருக் கின்றது. மேலும் அதற்கு விடுத லைப் புலிகள் தான் காரணம் என்ற பொய்யான பரப்புரையையும் அது முன்னெடுத்து வருகின்றது.
இவ்வன்முறையில் 12 தமிழக உறவுகள் காணாமற் போய்விட்ட தாக கூறப்படுகின்றது. இவர்கள் குறித்த நிலவரங்களை அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
எமது பிரதேசத்தில் இதுவரைக் கும் அப்படியானவர்கள் இருப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.
ஆயினும் எமது பிராந்தியத் தலை வர்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவர்களை மீட்பதற் கான எந்த நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
தமிழகக் காவல்துறை இது தொடர் பாக எமது அமைப்புடன் தொடர்பு கொண்டதாகவும், பேச்சுவார்த்தை கள் இடம்பெறுவதாகவும் வெளி வருகின்ற செய்திகள் யாவுமே உண் மைக்குப் புறம்பானவையாகும். இது வரையில் தமிழகக் காவல்துறைக் கும் எமது அமைப்புக்குமிடையில் உத்தியோகபூர்வமான எந்தத் தொடர்புகளும் ஏற்படுத்தப்பட வில்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். என்று உள்ளது.

நன்றி உதயன்

சுட்டிபையன்
01-05-2007, 10:45 AM
படம்: எடுக்கப் பட்டு விட்டது

சுட்டிபையன்
01-05-2007, 10:46 AM
உண்மை பொய் எனக்கு தெரியாது சுற்றுப் புறங்களைப் பாருங்கள் அது 100% வன்னிப் பகுதி

அன்புரசிகன்
01-05-2007, 10:57 AM
விடுதலைப்புலிகள் முதலில் காட்டிய விமானத்தால் இவ்வளவு துல்லியமாக தாக்குதல் நடத்ததியிருக்கமுடியாது. இது போன்ற மிகை ஒலி வேக தாரை விமானங்கள் மூவம் தான் தாக்கியிருக்கவேண்டும்.

சுட்டிபையன்
01-05-2007, 11:05 AM
விடுதலைப்புலிகள் முதலில் காட்டிய விமானத்தால் இவ்வளவு துல்லியமாக தாக்குதல் நடத்ததியிருக்கமுடியாது. இது போன்ற மிகை ஒலி வேக தாரை விமானங்கள் மூவம் தான் தாக்கியிருக்கவேண்டும்.

ஆனால் இறுதியாக தாக்குதல் நடத்திய விமானம் இந்த வகை விமானம் இல்லை, தாக்குதல் நடந்த இடம் எனது வீட்டுக்கு 1-2 கிலோ மீற்றர் தூரத்தில்தான் சத்தம் மோட்டர் சத்தமாக்த்தானிருந்தது:fragend005:

ஓவியன்
01-05-2007, 11:08 AM
சுட்டி அந்தப் படம் உண்மையே அல்ல!

யாரோ வேடிக்கையாக செய்த போட்டோஷோப் வேலை அது, பின்னணியில் இருப்பது என்னவோ வன்னி பிராந்தியம் தான். ஆனால் அதற்காக வன்னியில் விமானங்கள் இப்படி பொது இடத்தில் நிறுத்தி வைக்கப் பட மாட்டாது.

அத்துடன் அதில் அருகே நிற்கும் புலிவீரனின் துப்பாக்கியின் அருகே பாருங்கள் அது வேறு ஒரு இடத்தில் இருந்து ஒட்டப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

மயூ
01-05-2007, 12:39 PM
முன்பு வான் புலிகள் பற்றிய ஒரு ஆய்வு எனது வலைப்பதிவில் எழுதிய போது.. ஏதொ ஒரு முகவரியில் இருந்து உமது வலைப்பதிவில் பதியும் என்று ஒரு புகைப்படம் அனுப்பப்பட்டது!!! அதுவும் இப்படித்தான் இருந்தது.. இது ஒட்டுவேலை!

சுட்டிபையன்
01-05-2007, 12:42 PM
எனக்கு என்னோட நண்பன் அனுப்பினான்

சுட்டிபையன்
01-05-2007, 01:04 PM
முன்பு வான் புலிகள் பற்றிய ஒரு ஆய்வு எனது வலைப்பதிவில் எழுதிய போது.. ஏதொ ஒரு முகவரியில் இருந்து உமது வலைப்பதிவில் பதியும் என்று ஒரு புகைப்படம் அனுப்பப்பட்டது!!! அதுவும் இப்படித்தான் இருந்தது.. இது ஒட்டுவேலை!

இது நிச்சயம் உண்மையான படமல்ல பின்னால் இருக்கும் விளம்பரங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றது விளம்பரங்கள் இருகின்ற வகையில் அது ஒரு மக்கள் நடமாஅட்டமுள்ள இடம் இப்படி இடத்தில் எதிரிக்கு தகவல் கசியவிடப்படும் கடைசி வரை புலிகள் இப்படியான ஒரூ மோட்டு வேலையை செய்ய மாட்டார்கள்
அத்துடன் படத்தில் இருக்கும் புலி வீரர்கள் ஒட்டப்பட்டது உற்று பார்த்தால் தெட்டதெளிவாக தெரிகின்றது.மற்றது ஒரு சமச்சீரற்ற நிலத்தில் படத்தில் காட்டப்பட்ட நிலமானது ஒரு விவசாய நிலம் போல இருக்குது இப்படி பட்ட இடத்தில் விமானத்தை நிற்பாட்டிவிட்டு உடனே தேவைக்கு பறப்பில் ஈடுபட முடியாது
அத்துடன் இப்படி வெட்ட வெளியில் அனைத்து விமானக்களையும் உருமறைப்பு செய்யாமல் நிற்பாட்ட போவதுமில்லை.ஒன்றாக அனைத்து விமானங்களை தரிப்பிலிடவும் போவதில்லை

ஒருவேளை டம்மி விமானங்களாக இருக்கலாம்.ஆனால் இப்படமானது கம்பூட்டர் சித்து விளையாட்டால் மிக அற்புதமாக வடிவமைக்கபட்டிருப்பதே உண்மை

சுட்டிபையன்
01-05-2007, 01:19 PM
தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்திருக்கமாட்டார்கள் என்கிறார் தமிழக மீனவர் சங்கத் தலைவர் பீட்டர் தாஸ்


தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்தோ அல்லது கடத்தியோ இருக்கமாட்டார்கள் என்று தமிழக மீன் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பீட்டர் தாஸ் கூறியுள்ளார்.


கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி தமிழக மீனவர்கள் 5 பேர் கடற்பரப்பில் கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சம்பந்தம் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறைத் தலைவர் டி. முகர்ஜி அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது அதிர்ச்சியைத் தெரிவித்திருந்தார்.

இவை குறித்துக் கேட்கப்பட்டபோதே பீட்டர் தாஸ் இவ்வாறு பதிலளித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான அரசியல் அழுத்தம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், உலக அளவில் எந்தவொரு தமிழருக்கும் எதிராக விடுதலைப்புலிகள் இவ்வாறு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகளோ அல்லது இலங்கைத் தமிழர்களோ கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

ஆயினும் ஒருவேளை விடுதலைப்புலிகளால் மீனவர்கள் கடத்தப்பட்டிருந்தால் அவர்களைப் பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

bbc.com

சுட்டிபையன்
01-05-2007, 01:23 PM
மூன்று வெளிநாட்டு விமானங்கள் தமது சேவைகளை இடை நிறுத்தியுள்ளன - புலிகளின் விமானத்தாக்குதல்களே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது

சிறிலங்கா கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு அரிம் 3 சர்வதேசம் தமது பயண சேவைகள் நிறுத்தியும் அதேவேளை மட்டுப்படுத்தவும் உள்ளன என்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளன ஹொங்கொங்க்கு சொந்தமான கத்தேபசிபிக்கு தனது அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்தியுள்ளன


அதே வேளை டுபாய் தலைநகரமாக கொண்ட எமிரேச்சும் தனது சேவையை இடைநிறுத்தியுள்ளது

கொழும்பு மற்றும் புறநகர் பகுதியில் புலிகளின் விமானத்தாக்குதல்களே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது

பகல் வேளைகளின் மாத்திரம் தமது பணிகளை தொடர எண்ணியுள்ளது சிங்கபூர் ஏயர்லைன்ஸ் நிறுவனம் இரவு நேர விமானங்கள் பகல் வேலைக்கு மாற்றப்படவுள்ளன என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது எமிரேட்ஸ் முதலில் பகலில் சேவையை நடத்த தீர்மானித்த பின்பு தமது சேவைளை முற்றாக நிறுத்தியுள்ளது என ஏ.ஏப்பி தெரிவித்துள்ளது

நன்றி வீரகேசரி

சுட்டிபையன்
01-05-2007, 01:30 PM
தொடர் புலிகளின் விமான தாக்குதல்களை அடுத்து கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள வெளிநாட்டு நிறுவனத்திற்க்கு சொந்தமான எண்ணெய் தயாரிப்பு சாலை தற்காலிக முடப்பட்டுள்ளதாக ரொய்டர் தெரிவிக்கின்றது


குறிப்பிட்ட நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பகம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அதே நேரம் புலிகளின் விமானத்த்தாக்கள் காரணமா பங்குகளின் விலையில் கடும் வீழ்ச்சி காணப்படுகிறது அதே நேரம் டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மதிப்பிழந்து காணப்படுகிறது தெரிவிக்கப்படுகிறது

இப்பொழுதே உச்சக்கட்டதை அடைந்துள்ள பொருட்களின் விலை என்னும் உச்சத்திற்க்கு போகப் போகிரது

சுட்டிபையன்
01-05-2007, 02:06 PM
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் 3 சடலங்களை இராணுவத்தினர் இன்று மீட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.


இச்சடலங்கள் மூற்றிலும் துப்பாகி சூட்டு காயங்கள் காணப்படுவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை.

சுட்டிபையன்
01-05-2007, 04:37 PM
http://youtube.com/watch?v=ckqs4oof3yg

சுட்டிபையன்
02-05-2007, 12:42 PM
பாதிப்புறும் விமான சேவைகள்`

கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது 2001 ஜூலையில் புலிகள் நடத்திய தரைவழித் தாக்குதலினால் ஏற்பட்ட நேரடி சேதங்களைப் போன்று பாரிய நேரடி அழிவை, இப்போது விடுதலைப்புலிகளின் வான் புலிகள் நடத்தியிருக்கும் மூன்று விமானத்தாக்குதல்களும் ஏற்படுத்தாமல் போயிருக்கலாம்.
ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உயர் பாதுகாப்பு மிக்க தலைநகரின் வான் பிரதேசத்துக்குள், அரசுப் படைகளின் தீவிர கண்காணிப்புக் ஏற்பாடுகளையும் மீறி, வெற்றிகரமாகப் புலிகளின் விமானங்கள் பறந்து சென்று, குண்டுகளை வீசிவிட்டு, பாதுகாப்பாகத் தமது தளங்களுக்குத் திரும்புகின்றமை மறைமுக வழியில் பெரும் பாதிப்புகளையும், பின்னடைவுகளையும், இழப்புகளையும் அரசுத்தரப்புக்கு ஏற்படுத்தி வருவது கண்கூடு.
ஏற்கனவே எமிரேட்ஸ் மற்றும் கத்தே பசுபிக் விமான சேவை நிறுவனங்கள் கொழும்புக்கான தமது விமான சேவைகளைத் தாம் இடைநிறுத்துகின்றன என அறிவித்துள்ளன. சிங்கப்பூர் விமானசேவையோ கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இரவில் நெருங்குவதையே தவிர்ப்பது என முடிவுசெய்துவிட்டது. இனிமேல் பகலில்தான் அந்த விமான சேவை விமானங்கள் கொழும்பு வந்து போகும் என்ற நிலைமை. அதற்கேற்ப தனது விமான சேவை அட்டவணையை அந்நிறுவனம் மாற்றி அமைத்திருக்கின்றது.
ஏனைய பல விமான சேவை நிறுவனங்களும் இவற்றைப் பின்பற்றி கொழும்புக்கான தமது விமான சேவைகள் குறித்து மறுபரிசீலனை செய்து வருகின்றன.
இவ்வாறு அச்சப்பட்டு அவசரப்பட்டு அவை முடிவுகளை எடுப்பதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.
கடந்த ஞாயிறு அதிகாலை தலைநகர் கொழும்பு வரை புலிகளின் விமானங்கள் மீண்டும் வந்திருக்கின்றன என்ற தகவல் வெளியானபோது பாதுகாப்புத்தரப்பில் ஏற்பட்ட பீதி அனைவருக்கும் தெரிந்ததுதான். அச்சமயம் விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாண்ட படைத்தரப்பினர் எவ்வாறு செயற்பட்டனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
உரிய விமான சமிக்ஞை விளக்குகளை எரிய விட்டபடி அச்சமயம் கொழும்புக்கு மேலாக பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்த பயணிகள் ஜெட் விமானம் ஒன்றை இலக்கு வைத்து, தரையிலிருந்து படையினர் குண்டுகளைத் தொடர்ந்து ஏவியமையையும், அந்த ஜெட் விமானம் சென்றுகொண்டிருந்த திசையை நோக்கி, சிவப்பு நிறத்தில் அக்னிப் பிழம்பாக வேட்டுகள் தொடர்ந்து சீறிக்கொண்டு சென்றமையையும் தலைநகரில் சாதாரண பொதுமக்களே பீதியுடன் அவதானித்துக் கொண்டிருந்தனர்.
தெய்வாதீனமாக, கீழிருந்து ஏவப்பட்ட அக்குண்டுகள் சம்பந்தப்பட்ட ஜெட் விமானம் பறந்த பல்லாயிரம் அடி உயரத்தில் அரைவாசியைக் கூட எட்டமுடியாமல் செயலிழந்ததால் சேதங்கள் ஏற்படவில்லை.
இதனை நோக்கும், சாதாரண பாமர மக்கள் மனதிலேயே இரண்டு முக்கிய அனுமானங்கள் எழுந்தன.
ஒன்று சாதாரண சிவில் பயணிகள் விமானம் எது, எதிரிகளின் விமானம் எது என்பதைக் கூட அடையாளம் காணும் தகைமையும் திறமையும் அற்றவர்களின் கைகளில் தலைநகர் கொழும்பின் பாதுகாப்புத் தொடர்பான விமான எதிர்ப்பு ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
மற்றது அவ்வளவு உச்சத்தில், உயரத்தில், பறக்கும் ஒரு ஜெட் விமானத்தை தமது கைகளில் இருக்கும் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளின் சன்னங்கள் எட்டமாட்டா என்பதைக்கூட உணரமுடியாத நிலையில் தான் அந்த ஆயுதங்களைக் கையாள்வோர் இருந்திருக்கின்றனர். ஒன்று, இரண்டல்ல, பல நூறு வேட்டுக்களை அந்த விமானத்தை நோக்கி சரமாரியாக தொடர்ந்து அவர்கள் தீர்த்ததை நோக்கும்போது இப்படித்தான் அனுமானிக்க முடிகின்றது.
தலைநகரின் பாதுகாப்புக்கான விமான எதிர்ப்பு ஆயுதங்களை இத்தகைய தகைமையுடையவர்களின் கைகளில் ஒப்படைத்துள்ள நிலையில் கொழும்புக்கு சர்வதேச விமான நிறுவனங்கள் தமது விமானங்களை வழமைபோல சேவையில் ஈடுபடுத்தவேண்டும் என எதிர்பார்ப்பது எங்ஙனம் நியாயமாகும்?
சர்வதேசப் பயணிகள் விமானத்தை இலக்கு வைத்து விமான எதிர்ப்பு ஆயுதங்களைத் தொடர்ந்து பல நிமிடங்கள் இயக்கியமை தொடர்பாகப் பாதுகாப்புத் தரப்பில் யாராவது பொறுப்புக் கூறுவார்களா? யார் அந்தப் பெரும் தவறுக்கு பொறுப்பேற்கப் போகின்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கப் போவதில்லை என்பது ஊகிக்கக்கூடிய விடயம்.
இந்தப் பின்னணியில் இலங்கைக்கான சர்வதேச விமான சேவைகளில் ஆபத்து ஏதுநிலை அதிகரித்துள்ள சூழலில் கொழும்புக்கான சேவைகளுக்கு தனது காப்புறுதிக் கட்டணங்களை சர்வதேசக் காப்புறுதி நிறுவனங்களும் பல மடங்கு அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகளும் அதிகம் உண்டு. அத்தகைய நிலையில் இந்த விமான சேவை நிறுவனங்கள் மேலும் பல இக்கட்டுகளை எதிர்நோக்க வேண்டி நேரும்.
கொழும்புக்கான பயணக்கட்டணங்கள் உயரும். ஆபத்துகள் நிறைந்த மரணங்கள் மலிந்த இலங்கைத் தீவுக்கு பயணிக்கின்ற சுற்றுலாப் பயணிகள் உட்பட சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை பெரு வீழ்ச்சி அடையும். இவற்றால் விமான சேவை நிறுவனங்கள் மேலும் பாதிக்கப்படும்.
விமான சேவைகள், சுற்றுலாத்துறை உட்பட இலங்கையின் பொருளாதாரத்தின் அடி நாதமாக விளங்கும் ஒவ்வொரு துறைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரும் தாக்கங்களையும், பாதிப்புகளையும், மோசமான விளைவுகளையும் புலிகளின் வான் தாக்குதல்கள் ஏற்படுத்தப் போகின்றன என்பது வெளிச்சமாகத் தெரிகின்றது.
போர் வெறி முனைப்போடு இராணுவத் தீர்வில் தீவிரம் காட்டி நிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, தனது அத்தகைய போரியல் போக்கினால் இந்தப் பாதகமான விளைவுகளை, தானே விதைத்து இப்போது வினையாக அறுவடை செய்துகொண்டிருக்கின்றது.
கேட்டைக் கேட்டு வாங்குபவர்களை யார் தான் என்ன செய்ய முடியும்?

நன்றி உதயன்

சுட்டிபையன்
02-05-2007, 03:15 PM
ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பது எப்படி?


தமிழ்நாட்டைப் போல, சிங்கள அரசின் கொடுமைகளை பத்திரிகையாளர் கூட்டம் நடத்தி பேட்டி கொடுத்து, கண்டனக் கூட்டம் போட்டு, ஆர்ப்பாட்டங்களை நடத்தி - இலங்கை அரசே; தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறிக் கொண்டிருந்தால் தாக்குதல் நிறுத்தப்பட்டுவிடுமா? அல்லது இலங்கை அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, ராணுவத் தாக்குதலுக்கு இடைக்காலத் தடை வாங்க முடியுமா? அத்தகைய வாய்ப்புகள் அங்கே இருந்தால், விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தக் கூடாது, அது பயங்கரவாதம் என்று கூறலாம்.

உண்மையில் - அங்கே என்ன நடக்கிறது?

ஈழத் தமிழர்களின் ராணுவ அமைப்பான விடுதலைப்புலிகள் ஆயுதம் தரித்தவர்களாக - கரும்புலிகளாக - உயிர்த் தியாகம் செய்யக்கூடியவர்களாக - களத்துக்கு வந்து, ராணுவத் தாக்குதலை எதிர்கொண்டு நிற்பதால் தான் தமிழர்கள், கொஞ்சமாவது, உயிருடன் மிஞ்சியிருக்கிறார்கள்.

அப்படி ஒரு ராணுவ வலிமையோடு தமிழர்கள் இருப்பதால்தான் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காவது பேச்சு வார்த்தைக்கு இலங்கை அரசு வருகிறது.

அப்படி ஒரு ராணுவ அமைப்பு தமிழர்களுக்கு இருப்பதால்தான் - தமிழ் பிரதேசங்களை ஓரளவுக்காவது, தமிழர்கள் தங்களிடம் இருத்திக் கொள்ள முடிந்தது.

தமிழ் மக்களின் ராணுவமான விடுதலைப்புலிகளின் ராணுவ வலிமையும், லட்சிய உறுதியும் உயிர்க்கொடைத் தியாகமும் தான் ஈழத் தமிழர்களின் ஒரே பாதுகாப்பு அரண்!

இந்த நிலையில் ஈழத் தமிழர்களை சிங்களப் பேரினவாதத்திடம் அடிமைப்படுத்தத் துடிக்கும் சிங்களப் பார்ப்பன சக்திகள் விடுதலைப் புலிகளின் ராணுவ வலிமையைப் பலவீனமாக்கி விட வேண்டும். அது ஒன்றே இதற்கு வழி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டார்கள்.

இலங்கை அரசின் தமிழின அழிப்புக் கொள்கைக்கு பெரும் தொண்டாற்றியதற்காக சிங்கள ரத்னா விருது பெற்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ராம், அவர் தனது இந்து ஏட்டை தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 22 ஆம் தேதி - இந்து ஏட்டில் வெளிவந்த தலையங்கம் - தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் ராணுவத்தளமாக்கப்படுவதாக தமிழக அரசை எச்சரிப்பதுபோல் மிரட்டியது.

தமிழக முதல்வர் கலைஞர் நட்பு சக்திகளுக்கு தரும் முக்கியத்துவத்தைவிட பார்ப்பன எதிர்ப்புச் சக்திகளைத் திருப்திப்படுத்துவதில் தான் தீவிர ஈடுபாடு காட்டுவார் என்ற உண்மையை - பார்ப்பனர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுதான் நடந்தது.

சிங்கள தேசிய விருது பெற்ற பார்ப்பனருக்கு - வெள்ளைக்கொடி காட்டி அடுத்த நாளே தன்னிலை விளக்கம் தந்து விட்டார், கலைஞர்.

இலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப்படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டுமென்று, தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகள், குறிப்பாக தி.மு.கழகம் போன்றவை கேட்டுக் கொள்வதற்கும், அதற்காக இந்து பத்திரிகை எழுதியிருப்பதைப் போல நடைபெறுகிற எல்.டி.டி.யினருக்கான ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை தமிழக அரசு உணராமல் இல்லை. இந்து தலையங்கத்திலே குறிப்பிட்டிருப்பதைப்போல், அத்தகைய செயலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று சிங்கள தேசிய விருதாளருக்கு தன்னிலை விளக்கம் தருகிறார் கலைஞர்!
நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாலேயே அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இருப்போம் என்று நம்பி விடாதீர்கள் என்பதையே கலைஞர் வேறு வார்த்தைகளில் சொல்கிறார் போலும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு என்ன வழி? தமிழ் மக்களின் ராணுவமான விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு, சிங்கள அரசிடம் கவுரவமான சரணாகதி அடைய வேண்டும் என்கிறது இந்து! அந்த சரணாகதி வெற்றி பெற தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே உள்நாட்டு, வெளிநாட்டு கடல் பரப்புகளில் விடுதலைப் புலிகள் போக்குவரத்தை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்கிறார், சிங்கள விசுவாசி ராம்!

தமிழ் மக்களின் ராணுவத்துக்கு ஆயுதம் ஏற்றி வந்ததாகக் கூறப்பட்ட ஒரு படகை, இந்திய கப்பற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து, பிறகு வெடி வைத்து தகர்த்துள்ளனர். ஆனால், அந்தப் படகு தமிழகத்தை நோக்கி வரவில்லை. யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற படகு! இதை பத்திரிகையாளரிடம் கூறியிருப்பவர் தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குனராக இருக்கும் முகர்ஜி எனும் பார்ப்பனர்! (The vessel was not heading for the Tamil Nadu Costs) காவல்துறை இயக்குனர் உண்மையைக் கூறிவிட்டார் என்பதாலேயே அவரையும், தமிழக அரசையும் தனது தலையங்கத்தில் கடுமையாக சாடுகிறது இந்து. யாழ்ப்பாணம் நோக்கிப் போனாலும்கூட, விடுதலைப்புலிகள் ஆயுதம் கொண்டு போவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் இந்துவின் நோக்கம்! இந்த பச்சை இன துரோகத்தை எப்படி தமிழக அரசு அங்கீகரிக்கிறது, என்பதுதான் நமது கவலை!

தமிழ்நாடு - விடுதலைப்புலிகளின் ஆயுதத் தளமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை தானா?

இது பார்ப்பன ஊடகங்கள் - மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜெயலலிதா கட்சியினர் இணைந்து, திட்டமிட்டு நடத்தும் பொய்ப் பிரச்சாரமே தவிர வேறு அல்ல.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஆயுதம் தயாரித்தார்களா? அப்படி ஏதாவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதா?

தமிழ்நாட்டில் - விடுதலைப்புலிகளின் ராணுவப் பயிற்சிகள் நடக்கிறதா?

தங்களது நாட்டிலிருந்து - ஆயுதங்களைக் கொண்டு வந்து தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் பதுக்கி வைத்திருக்கிறார்களா? அப்படி ஏதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

மதுரையிலிருந்து அலுமினியக் கட்டிகள்; பம்பாயிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட, சைக்கிளில் பயன்படுத்தப்படும் பால்ரஸ் குண்டுகள் ஆகியவை தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்படும் போது பிடிபட்டிருக்கின்றன. இவைகள் ஆயுதங்கள் அல்ல, ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் உதிரிப் பொருள்கள்; அவ்வளவுதான். அதுவும் தமிழ் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டவையே தவிர, அங்கிருந்து தமிழகம் வரவில்லை. இந்த நிலையில் - தமிழ்நாட்டை ராணுவத்தளமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டுவது சரிதானா?

விண் தொலைக்காட்சியின் செய்தி அலசலில் அதன் செய்தியாளர் டி.எஸ்.எஸ்.மணி ஒரு செய்தியைக் கூறினார்: நடுக் கடலில் இந்தியக் கப்பல் படையால் விடுதலைப்புலிகள் படகு சுற்றி வளைக்கப்பட்டவுடன் கைது செய்யப்பட்டவர்களில் விடுதலைப் புலி இயக்கத்தைச் சார்ந்தவராக உளவுத் துறையால் கூறப்படும் ஒரு தோழர் சொன்னாராம், தமிழ் நாட்டுக்கோ, தமிழ் நாட்டு மக்களுக்கோ ஒரு சிறு இடையூறும் எங்களால் ஏற்பட்டு விடக் கூடாது என்று எங்கள் தலைமை கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. நடுக் கடலில் நிற்கும் படகில் வெடி மருந்துகள் உள்ளன.
அவை கடலில் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்குமானால் வெடிக்கக்கூடிய ஆபத்துகள் உண்டு. எனவே உடனே படகை வெடிவைத்து தகர்த்து விடுங்கள் என்று அந்தத் தோழர் சொல்ல, உடனே, இந்திய அதிகாரிகள், படகை வெடி வைத்து தகர்த்தார்கள்; விடுதலைப்புலிகள் எவ்வளவு பொறுப்புணர்வோடு செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம் என்று, உயர் அதிகாரி ஒருவரே கூறியதாக, அந்த செய்தியில் டி.எஸ்.எஸ். மணி குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசிடமோ, இந்திய அரசிடமோ விடுதலைப் புலிகள் ஆயுத உதவி கேட்கவில்லை. ராணுவ உதவி கோரவில்லை, தமிழ்நாட்டை தங்களது ராணுவத்துக்கான தளமாகவும் பயன்படுத்தப்படவில்லை.

அதே நேரத்தில் - இலங்கை அரசு என்ன செய்கிறது?

தமிழ்நாட்டிலிருந்து ஈழத்துக்கு உயிர் காக்கும் மருந்துகளை வாங்க முயற்சித்தார்கள் என்று ஜெயலலிதா ஈழத் தமிழர்களை கைது செய்து, சிறையில் போட்டார். அவரது பார்ப்பன ஆட்சியில் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்புவது கூட பயங்கரவாத நடவடிக்கைகளாகக் கருதப்பட்டன.

அதே தமிழ்நாட்டில் - சிங்கள விமானப் படைக்கு பயிற்சிகள் நடக்கின்றன. கோவையில் எதிர்ப்பு தெரிவித்தால் - போபாலுக்குக் கொண்டு போய் பயிற்சி தருகிறார்கள்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் - தமிழ் நாடு மீனவர்கள், சிங்களக் கப்பல் படையால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கொழும்புக்குக் கொண்டு போய் சிறையிலடைக்கப்படுகிறார்கள். அவர்களின் படகுகளும், வலைகளும் நாசமாக்கப்படுகின்றன. இது தொடர்ந்து நடக்கும் அவலம்.

இப்போது கடல் பரப்பைச் சுற்றி வளைத்து கடலோரப் பாதுகாப்புப் படை - கப்பல் படைகள் கூடுதல் படை வலிமையோடு கண்காணிக்கக் கிளம்பியிருப்பதைப் போல் - தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்றும் தீவிர நடவடிக்கைகள் இதற்கு முன் எடுக்கப்பட்டனவா? ரோந்து சுற்றுவதற்கு இப்போது மட்டும் வந்துள்ள 23 மிதவைக் கலங்கள் இந்த மீனவர்களைக் காப்பாற்ற வராமல் போனது ஏன்?

இவ்வளவு தீவிர கண்காணிப்புகளும், முடுக்கி விட்டதற்குப் பிறகுதான், புதுக்கோட்டை மீனவர் ஒருவர் சிங்களக் கப்பல் படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அப்படியானால் இந்தக் கண்காணிப்புப் படைகள், தமிழ் மீனவரைக் கண்காணிக்காதா? இந்தக் கண்காணிப்புப் படைகள் யாருக்காக? சிங்களர்கள் நலன் காக்க மட்டும் தானா?

ஒவ்வொரு முறை மீனவர் சுடப்பட்டு சாகும்போதும் முதல்வராக இருப்பவர்கள் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவதோடு, பிரச்சினை முடிந்து போய் விடுகிறது. இது தானே தமிழன் நிலை?

இவற்றையெல்லாம் எதிர்த்து - எந்தப் பார்ப்பான் எழுதினான்?

இப்போதும்கூட மத்திய அரசு - ஏதாவது உருப்படியான நடவடிக்கை எடுத்துள்ளதா? அதற்கு தமிழக முதல்வர் கலைஞர் அழுத்தம் தந்திருக்கிறாரா?

ஈழத்திலிருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை, பிரதமர் மன்மோகன் சந்தித்தார். மகிழ்ச்சிதான். அதுவே ஈழத் தமிழரைக் காப்பாற்றும் நடவடிக்கை ஆகிவிடுமா?

அந்த சந்திப்பிற்குப் பிறகு - சிங்கள ராணுவத்தின் தாக்குதல் நின்றதா? - சிங்கள ராணுவம் அதற்கு பயந்ததா?

அதற்குப் பிறகாவது - சிங்கள அரசுக்கு இந்தியாவின் சார்பில், தாக்குதலை நிறுத்தச் சொல்லி எச்சரிக்கையாவது செய்யப்பட்டதா? முதல்வர் என்ற முறையில் கலைஞர் மத்திய அரசிடம் வலியுறுத்தினாரா?

கலைஞர் ஆட்சியில் - தமிழரின் தன்மானத் தந்தை பெரியார் சிலை உடைப்பைக் கண்டு கொதித்தெழுந்த - பெரியார் திராவிடர் கழகத்தினரும், தேச விரோதிகள் - அவர்கள் மீது தேச பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.

தங்களின் தேசப் பாதுகாப்புக்காக தங்களது தேசம் நோக்கி - கடலில் ஆயுதங்களை எடுத்துச் சென்றவர்களும் தேசவிரோதிகள். அவர்கள் மீதும் தேசப் பாதுகாப்புச் சட்டம்!

அப்படியானால் இந்தத் தேசம் யாருக்கான தேசம்?

இந்த தேசத்தின் உண்மையான விசுவாசிகள் என்றால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு பணிந்து போக வேண்டுமா?
பார்ப்பனர்கள் மிரட்டினால் - உடனே ஓடி வந்து அவர்களைத் திருப்திப்படுத்துவோர்தான் தேச பக்தர்களா? தேச பக்திக்கு இலக்கணம் வகுப்பதே பார்ப்பனர்கள்தானா? பார்ப்பானை எதிர்த்தால் - தேச விரோதி முத்திரை குத்தப்பட்டு
தேசப் பாதுகாப்பு சட்டம் பாயுமா? தமிழரின் ஆட்சிக்கு இது அடையாளம் ஆகுமா?

மனசாட்சியும், மான உணர்வும், சுய மரியாதையும் வற்றிப் போகாத தமிழர்களின் சிந்தனைக்கு இந்தக் கேள்விகளை பணிவோடு சமர்ப்பிக்கிறோம்!

நன்றி:கீற்று

சுட்டிபையன்
03-05-2007, 06:09 AM
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு
இருதரப்புகளுடனும் பேச பிரிட்டன் தயார்!
நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம்
லண்டன்,மே 3இலங்கையின் நிலைவரம் தொடர்பாக இனப்பிரச்சினைத் தீர் வுக்கு உதவுவது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் ஒன்று இடம்பெற்றது.
பிரிட்டனின் ஆளும் தொழிற்கட்சி, கன்ஸர்வேட்டிவ் கட்சி உட் பட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று உரையாற்றியிருக்கின்றனர்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஒரு சமமான அணுகுமுறையை கைக்கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை வெளிக்காட்ட விடு தலைப் புலிகளை அங்கீகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்திய போதிலும் அதற்கு பிரிட்டன் அரசு மறுத்துவிட்டது.
இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து மனித உரிமைமீறல்கள் இடம்பெறுகின் றமைக்கு இலங்கை அரசு மீதும் பிரிட்டன் நாடாளுமன்றம் வன்மையான அதிருப் தியை வெளியிட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் இந்த விவாதத்தில் உரையாற் றும்போது இலங்கைப் பிரச்சினை தொடர்பான தமது அரசின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தினார்.
""இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கையிலேயே விடுதலைப் புலிகளை சந்திக்க பிரிட்டிஷ் அரசு தயாராக இருக்கிறது. பிரிட்டிஷ் அரசு இந்த விடயத்தில் ஒரு முழுமையான சமநிலையை கடைப்பிடிக்கிறது. விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இருதரப்புகளுடனும் நாம் தொடர்பில் இருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.
""இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு கிடையாது என்று பிரிட்டிஷ் அரசு நம்புகிறது. ஓர் உடன்பாடு குறித்த நம்பகத்தன்மை மிக்க கட்டமைப்பு தேவை. அனைத்து இலங்கையர்களும் மனித உரிமைகளை மதிக்கவேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
""இலங்கையில் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்துவதற்காக முடிந்தவரையில் பங்களிப்பு வழங்க பிரிட்டன் தயாராகவே இருக்கிறது. என்றும் அவர் கூறினார்.
இந்த விவாத்தில் உரையாற்றிய கன்ஸர்வேட்டிங் கட்சியின் உறுப்பினர் ஜெவ்ரி கிளிவ்டென் பிறவுண் தெரிவித்தாவது:
இலங்கையில் வன்முறை அதிகரித்து நிலைமை மோசமடைந்தமைக்கு இலங்கை அரசுக்கு பங்கே இல்லை என்று கூறிவிட முடியாது. நாட்டின் வடபகுதியான யாழ்ப்பாணத்தை இணைக்கும் முக்கியமான வீதியான ஏ9 நெடுஞ்சாலையை அரசு மூடியமை இலங்கையை மேம்படுத்த உதவில்லை. இதுதவிர இலங்கையின் வடக்குகிழக்கு மக்களுக்கு உதவி மிகிவும் அவசியமாக தேவைப்பட்ட நிலையில் சர்வதேச உதவி நிறுவனங்கள் அங்கு செல்ல அரசு அனுமதி தரவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள இயலாதது.
சிறுபான்மையினருக்கு இலங்கை அரசியலில் பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும் என்பது தீவிரமாகப் பரிசீலிக்கப்படவேண்டும்.
இனப்பிரச்சினைக்கு நீண்டகால அரசியல் தீர்வு எட்டத் தகுதியுடையதாக இலங்கை அரசு மாறவேண்டுமானால் அனைத்துத் தரப்பினையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் வழிமுறை என்பது மிகமிக அவசியம். தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்பது தெளிவாக்கப்படவேண்டும்.
இனப்பிரசினையைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு குறித்தும் நான் இங்கு கூறவிரும்புகிறேன். இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பத்தில் இந்திய அரசுக்கு முக்கிய பங்கு இருப்பதாக நான் நம்புகிறேன்.
விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள மக்ளிடையே நல்ல ஆதரவு இருப்பது தெளிவு என்றார்.


உதயன்

சுட்டிபையன்
05-05-2007, 05:41 AM
சிறீலங்கா விமானப் போக்குவரத்து வருமானமும் வீழ்ச்சி
வான் புலிகளின் தாக்குதலின் எதிரொலி காரணமாக சிறீலங்கா அரசு விமானப் போக்குவரத்து மூலம் பெற்றுவந்த வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ நேற்று மாலை விமான நிறுவன அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணிவரை விமான சேவையை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

வான் புலிகளின் தாக்குதல் காரணமாக விமான நிலையத்தை இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை மூடுவதற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் முடிவு செய்திருந்தது.

இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை மூலமும் பெற்றுவந்த நிதிகள் தடைப்படுவதால், சிறீலங்காவின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியைச் சந்திக்கவுள்ளது.

வான் புலிகள் கட்டுநாயக்க விமானப் படைத் தளம் மீதும், கொலன்னாவ எண்ணைக் குதங்கள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

சுட்டிபையன்
07-05-2007, 12:04 PM
இலங்கை அமைதி ஒப்பந்தம்: கைவிட அரசு
முடிவு?!- மீண்டும் முழு போர் மூளும் அபாயம்



கொழும்பு: புலிகளுடன் நார்வே மத்தியஸ்தில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ககிலிய ரம்புகெவெல்லா நிருபர்களிடம் கூறுகையில்,

நாங்கள் அமைதி உடன்பாட்டை மதிக்கிறோம். ஆனால், இந்த உடன்பாடு தொடர்ந்து மீறப்பட்டு வருவதைப் பார்த்தால் அதை தொடர்ந்து அமலாக்குவதா அல்லது அதை கைவிடுவதா என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இது குறித்து புலிகளுடன் பேச வேண்டியது நார்வேயின் வேலை.

அமைதி உடன்பாடு அமலில் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியானால், புலிகளைத் தாக்க அரசுக்கு முழு உரிமை உள்ளது. இந்த உரிமையை அரசு விட்டுத் தராது.

கடந்த 2002ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இதுவரை அது 10,000 முறை மீறப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்தம் செத்துவிட்டதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும் என்றார்.

வன்னி பகுதியை விமானங்களைக் கொண்டு உளவு பார்ப்பது ஒப்பந்தந்தை மீறிய செயல் என நார்வே அமைதி கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனரே என்று கேட்டதற்கு, அது குறித்துப் பேச அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

சமீபகாலமாக விமானத் தாக்குதலும் புலிகள் நடத்தி வருவதால் வான் வழியாக உளவு பார்ப்பதை அதிகரிக்கப் போகிறோம்.

புலிகளின் விமானங்களை எதிர்கொள்ளும் வகையில் விமானப் படையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் ககிலியா.

2002ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி எந்தத் தரப்பாவது ஒப்பந்ததை கைவிட முடிவு செய்தால் 14 நாள் நோட்டீஸ் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி தற்ஸ் தமிழ்

சுட்டிபையன்
07-05-2007, 12:07 PM
இலங்கையில் காஸ் நிறுத்தம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் சேதமடைந்த செல் எரிவாயு நிலையத்தின் தீயணைப்பு இயந்திரங்களைச் சீரமைக்க 5 இலட்சம் அமெரிக்க டொலர் முதல் 10 லட்சம் அமெரிக்க டொலர் வரை செலவிடப்பட உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

புலிகளின் வான் தாக்குதலில் செல் எரிவாயு சேமிப்பு நிலையத்தின் தீயணைப்பு இயந்திரப் பகுதி நேரடியாகப் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து அந்நிறுவனம் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

சிறிலங்காவில் முதன்மையாக எரிவாயு விநியோகிப்பு நிறுவனமாக செல் நிறுவனம் இயங்கி வந்தது. செல் நிறுவனம் மூடப்பட்டதனைத் தொடர்ந்து மற்றொரு பிரதான நிறுவனமான லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தினரால் தேவைக்குரிய எரிவாயுவினை விநியோகிக்க இயலவில்லை.

இந்நிலையில் மகிந்தவின் செயலகமும் லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தினரைத் தொடர்பு கொண்டு செல் எரிவாயு நிறுவனத்துக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

செல் எரிவாயு நிறுவனத்தின் நிதிப் பிரிவு இயக்குநர் ரிமோ சல்டின் கூறுகையில், எமது நிறுவன வளாகத்தில் வான்புலிகளின் ஒரு குண்டு வெடித்து விழுந்ததில் பாரிய சேதமேற்பட்டு விட்டது. நிறுவனத்திலிருந்த 4 இராட்சத தீயணைப்பு குழாய்களில் 3 முற்றாக நாசமடைந்து விட்டன. மற்றொன்றும் கூட சேதமடைந்துவிட்டது. 4 எரிவாயு சேமிப்பு கலங்களில் ஒன்றுகூட தாக்குதலுக்குள்ளாகாதது அதிர்ஸ்டம்தான். ஒவ்வொரு சேமிப்பு கலமும் 2 ஆயிரம் தொன் கொள்ளளவு கொண்டது என்றார் அவர்.

தீயணைப்பு இயந்திரப் பகுதியை சீரமைக்காமல் மீள இயங்க முடியாது. அதனைச் சீரமைக்க 5 இலட்சம் அமெரிக்க டாலர் முதல் 10 இலட்சம் அமெரிக்க டொலர் வரை செலவாகும் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

சுட்டிபையன்
07-05-2007, 12:07 PM
சிறிலங்கா வான்படை கல்மடு மக்கள் குடியிருப்புக்கள் மீது வான் தாக்குதல்.

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி, கல்மடு மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் நடத்திய தாக்குதலில் மக்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா வான்படையின் இரண்டு கிபீர் வானூர்திகள் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் வட்டக்கச்சி கல்மடு பிரதேச மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளன.

கல்மடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு அருகில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கல்மடுப் பிரதேச பாடசாலை மாணவர்கள், சிறார்கள், பொதுமக்கள் அச்சமடைந்து இன்றைய காலை நேர இயல்பு வாழ்வை இழந்தனர்

-Puthinam-

சுட்டிபையன்
07-05-2007, 12:09 PM
கடுமையான செய்தியுடன் கொழும்பு செல்கிறார் ரிச்சர்ட் பெளச்சர்.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கான அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் கொழும்பிற்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08.05.07) செல்லும் இவர், இதன் போது சிறிலங்கா அரசாங்கத்தை பேச்சு மேசைக்கு திரும்பும் படியாக கடுமையான ஒரு செய்தியை அவர் எடுத்து வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்க அதிகாரிகளை ரிச்சர்ட் பெளச்சர் சந்திப்பதுடன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனது கடுமையான நிலைப்பாட்டையும் தெரிவிக்க உள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் பல தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் யாழ். குடாநாட்டிற்கும் செல்வார் என கூறப்படுகின்றது. பௌச்சர் மீண்டும் அமெரிக்க செல்வதற்கு முன்னர் எதிர்வரும் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளார்.

நாடு மிக மோசமான மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும். பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி சிறிலங்காவிற்கான உதவித் தொகைகளை நிறுத்தியுள்ள நிலையிலும் பௌசரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

ரிச்சர் பௌச்சரின் சிறிலங்காவிற்கான பயணத்தின் போது மாலைதீவுக்கும் செல்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

-Puthinam-

சுட்டிபையன்
07-05-2007, 12:16 PM
இந்தியாவுக்கு மகிந்தவின் தூதுவர் பயணம்


இலங்கை நிலைமைகள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு விளக்கம் அளிக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க புதுடில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.


சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம், தமிழீழ விடுதலைப் புலிகளின் 4 வான் தாக்குதல்கள் உள்ளிட்டவை குறித்து இந்தியப் பிரதமருக்கு மகிந்த கொடுத்தனுப்பிய தகவல்களை லலித் வீரதுங்க கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் புதுடில்லியில் லலித் வீரதுங்க முகாமிட்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பண்டாரநாயக்க அனைத்துல வானூர்தி நிலையத்து சிறப்பு இந்திய வான்படை வானூர்தி மூலம் ஒரு குழுவினர் வந்துள்ளனர்.

இந்திய அரசாங்கத்தால் சிறிலங்காவுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 2 டி ராடார் செயற்பாடுகள் குறித்து இந்திய வான்படையினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் சிறிலங்கா கோரியிருந்த மூன்றாவது 2 டி ராடார் குறித்தும் இந்திய அதிகாரிகள் கவனமெடுத்துள்ளனர்.

இதனிடையே பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர், மகிந்தவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இலங்கை அமைதி முயற்சிகளை மீளத் தொடங்க நோர்வே அனுசரணையாளர்களுடன் இணைந்து உதவ தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விவாதிக்க ரொனி பிளேயரின் இரு சிறப்புத் தூதுவர்கள் கொழும்புக்கு வருகை தர உள்ளனர். மகிந்தவுக்கான ரொனி பிளேயரின் கடிதத்தை கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட், மகிந்தவிடம் ஒப்படைத்தார்


சிறிலங்கா அமைச்சர்களைச் சந்திக்க தமிழக முதல்வர் மறுப்பு


சிறிலங்கா அமைச்சர்களைச் சந்திக்க தமிழக முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளதாக தெரிகிறது.

அண்மையில் சிறிலங்கா அமைச்சர் பி. சந்திரசேகரன், முதல்வர் கருணாநிதியை சந்திக்க அனுமதி கேட்டிருந்ததாகவும் ஆனால் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழாவை சுட்டிக்காட்டி சந்திரசேகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒருவரை சந்திக்க விரும்பாததால்தான் மலையக கட்சியைச் சேர்ந்த சந்திரசேகரனுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன
http://www.eelampage.com/


மஹிந்தவின் விசேட செய்தியுடன் லலித் வீரதுங்க புதுடில்லி விரைவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளிப்பதற் காக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க புதுடில்லி விரைந்திருக்கிறார்.
இந்தியப் பிரதமருக்கான விசேட செய்தி யில் என்ன விடயம் அடங்கியுள்ளது என் பதை அரசுத் தரப்பு வெளியிடவில்லை. எனினும் அரச வட்டங்களின் தகவல்களின் படி கடந்த வாரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த அதிகாரப் பரவலாக்கல் யோசனை நகல் தொடர்பாக இந்தியப் பிரதமருக்கு இலங்கை அரசின் நிலைப் பாட்டை நேரில் விளக்குவதற்காகவே அந்த தீர்வு யோசனை நகலின் பிரதி ஒன்று டன் தனது செயலாளரை மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு அனுப்பியிருக்கிறார் என்பது தெரியவருகிறது.
இதுவே லலித் வீரதுங்கவின் டில்லி விஜயத்தின் பிரதான நோக்கம் என்றாலும் அன்மையில் தலைநகர் கொழும்பு மீது விடுதலைப்புலிகள் அடுத்தடுத்து மேற்கொண்ட வான் தாக்குதலை அடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக் கும் அச்சுறுத்தல் தொடர்பில் இந்திய அர சின் ஆதரவை கோரும் விதமான விட யமும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும௼br />? செய்தி யில் அடங்கியுள்ளது என்று வேறுசில வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன் மைச் செயலர் சி.ஜே.என்.நாயர், உள்துறை செயலர் மதுகிடர் குப்தா ஆகியோரைச் லலித் வீரதுங்க சந்தித்துப் பேசினார்.
விடுதலைப் புலிகளினால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதல்கள் அத னால் ஏற்பட்ட விளைவுகள் அதனைத் தடுப்பதற்கு படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப் பட்டதாக இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய அமைச்சர்களான மணிசங்கர் ஐயர், சரத் பவார், அம்பிகா சோனி ஆகி யோரையும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஜஸ்வந்த் சிங்கையும் லலித் வீரதுங்க தனித் தனியே சந்தித்துக் கலந்துரையாடினார். மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு நாடு திரும்பினார்.


உதயன்

மலர்
09-05-2007, 07:02 AM
தமிழீழம் பற்றிய முழுதகவலுக்கு நன்றி

சுட்டிபையன்
11-05-2007, 04:14 PM
புலிகளின் வான்படையை புகழ்ந்து ஆற்றிய உரையால் சர்ச்சை
நாடாளுமன்றத்தில் அமளி துமளி!
கஜேந்திரன் வெளியேற்றப்பட்டார்!!
கைதுசெய்யக்கோரி ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம்;
``
எதிர்த்தும் ஆதரவாகவும் அமைச்சர்கள் விவாதம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று நாடாளுமன்றத்திலி ருந்து இடைநடுவே வெளியேற்றப்பட்டார்.
அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் நேற்றுமுன்தினம் கஜேந் திரன் ஆற்றிய உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையை மெச்சும் விதத்தில் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையையும், வாதப் பிரதிவாதங்களையும் கிளப்பிவிட்டன. இதனால் நேற்று நாடாளுமன்றம் பெரும் அமளி துமளிப்பட்டது. அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டது. அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டமும் கூட்டப்பட்டது. கஜேந்திரனைக் கைதுசெய்யுமாறு கோரி ஜே.வி.பியினர் சபை நடுவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசமைப்பையா, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளையா மதிப்பது என்ற கோணத்தில் பலத்த வாதப் பிரதி வாதங்களும் தூள் பறந்தன. கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு கஜேந்திரன் எம்.பியை சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். புலிகளைப் புகழ்ந்ததற்காக அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஜே.வி.பி. மற்றும் அரச தரப்பு எம்.பிக்கள் விடாது வற்புறுத்தினர். மன்னிப்புக் கோர மறுத்த கஜேந்திரன் சபையிலி ருந்து வெளியேறினார்.
விடுதலைப்புலிகளின் வான் படை யைப் புகழ்ந்தமைக்காக கஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமா என் பது தொடர்பில் அமைச்சர்கள் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அணி பிரிந்து ஆதரவாகவும், எதிர்த்தும் வாதம் புரிந்தனர்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ ராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் நாடாளு மன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் ஆற்றிய உரை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை நேற்று நாடாளுமன்றத்தை சுமார் மூன்று மணி நேரங்கள் அல்லோல கல்லோலப்படுத்தி விட்டது.
நேற்றுக் காலை நாடாளுமன்றம் கூடிய போது ஜே.வி.பி. பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ சபையில் கவன ஈர்ப்புப் பிரே ரணை ஒன்றை முன்வைத்தார்.
""நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும், பிரிவினைவாதத்தை ஆதரித்தும் பேசினார். விடுதலைப்புலிகளின் குண்டுவீச்சுகளையும் வான் தாக்குதல்களையும் நியாயப்படுத்தினார்.
""இலங்கை அரசமைப்பின் ஆறாவது திருத்தத்திற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளோம்.
"பயங்கரவாதத்தை ஆதரிக்கவோ, பிரிவினைவாதத்தை ஆதரிக்கவோ, வன்முறைகளை ஆதரிக்கவோ அல்லது அவ்வாறான செயல்களில் ஈடுபடவோ பேசவோ மாட்டோம்'' என சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு இந்த சபைக்கு வந்த கஜேந்திரன் இன்று அதற்கு எதிர்மாறாக செயல்பட்டுள்ளார். நாட்டின் இறைமையையும், அரசமைப்பையும் உதாசீனப்படுத்தியுள்ளார்.
""இவருடைய நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் இருக்கும் சபாநாயகர் உட்பட 225 உறுப்பினர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
""எம்மிடம் வான்படை, கடற்படை, தரைப்படை என முறையான இராணுவக் கட்டமைப்பு உண்டு.
பொதுமக்கள் மீதோ அல்லது இந்தியாவின் மீதோ தாக்குதல்களை நடத்தமாட்டோம். ஆனால் பொருளாதார மையங்கள் மற்றும் குறித்த இலக்குகள் மீதும் தான் தாக்குதல்களை நடத்துவோம் என்று இச்சபையில் எச்சரிக்கை விடுத்தார்.
""கஜேந்திரன் ஒரு சாதாரண பிரஜையாக இருந்து பொது இடம் ஒன்றில் இப்படிப் பேசி இருந்தால் அவரைப் பொஸிஸார் உடனடியாகக் கைது செய்திருப்பர்.
நாம் மௌனம் கழிக்க வேண்டுமா?
""ஆனால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதை அனுமதிக்க முடியாது.
""இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டே பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கின்றார். நாம் தொடர்ந்தும் மௌனம் சாதித்துக் கொண்டிருக்க வேண்டுமா?
""சிறு வண்டுகள் போன்று இரண்டு விமானங்களை வைத்துக் கொண்டு வீராப்புப் பேசுகின்றனர். பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் என்ன செய்கின்றனர்? நாட்டின் பாதுகாப்புக் கருதி கஜேந்திரகுமார் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும். அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படவேண்டும்'' என விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்தார்.
இதனை ஆதரித்து தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் டாக்டர் மேர்வின் சில்வா உரையாற்றினார்.
""கஜேந்திரன் ஒரு புலி. அவரை இந்த சபைக்குள் இருக்கவிடக்கூடாது. அவரது எம். பி. பதவி பறிக்கப்படவேண்டும். சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும். உடனடியாக கைது செய்யப்படவேண்டும்'' என ஆக்ரோஷமாகப் பேசினார் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா.
இந்த விவகாரம் தொடர்பாக அரச தரப்பில் நாடாளுமன்ற கொரடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சில கருத்துகளை முன்வைத்தார்.
""எல்லோரும் சத்தம் போட்டுக் கூறுவதால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்யவோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவோ முடியாது.
""நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளும் சிறப்புரிமை ஏற்பாடுகளும் இதற்கு இடமளிக்காது'' என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறினார்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கூற்றை நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார்.
நாடாளுமன்ற வரலாற்றில் என்றுமே இல்லாத வகையில் கஜேந்திரன் இந்த சபையில் உரையாற்றினார். இந்தியா மீது குண்டு போடமாட்டோம். இங்கு குறித்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்கிறார். இதில் உள்ள விபரீதங்களை உணரவேண்டும். சபாநாயகர் தனக்குரிய அதிகாரங்களை உபயோகித்து கஜேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். '' என வற்புறுத்தினார் அமைச்சர் தினேஷ் குணவர்தன.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர்
எழுந்து நின்று கோஷம் எழுப்பினர்
உங்களுடைய ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சபையில் தமது கருத்துகளை வெளிப்படுத்தலாம். சுதந்திரமாகப் பேசலாம். நிலையியல் கட்டளைகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை பாதுகப்பளிக்கின்றது என்று விளக்கம் அளித்தார்.
சபாநாயகரின் கூற்றை விமல் வீரவன்ஸ நிராகரித்தார்.
தனி ஒரு மனிதரின் சிறப்புரிமையைப் பாதுகாப்பதற்காக 225 உறுப்பினர்களைப் பணயம் வைக்க முடியாது. சிறப்புரிமையை விட அரசமைப்பே உயர்வானது.
எனவே அரசமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி கஜேந்திரன் எம். பியை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். என மீண்டும் மீண்டும் கூறினார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஜே. வி. பி. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கஜேந்திரனை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
ஐ. தே. க. சார்பில் ஜோசப் மைக்கல் பெரேரா சில கருத்துக்களை முன்வைத்தார்.
இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று உண்டு. ஆனால் நம்மில் சிலர் அதை ஏற்க மறுக்கின்றனர்.
பிரச்சினைகளைத் தீர்க்கப் பல வழிகள் இருக்கின்றன. பேசித் தீர்க்க முடியும். ஆனால் பயங்கரவாதத்தின் மூலம் தீர்த்து விட முடியாது. அதற்கு இடம் கொடுக்கவும் முடியாது.
நாட்டைத் துண்டாட இடமளிக்க முடியாது
புலிகளிடம் இப்படியான ஒரு சக்தி உண்டு என்பது இப்பொழுது வெளிச்சமாகி விட்டது.
குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்குவோம் என்கின்றனர். இதனால் நாட்டு மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரே நாடு. யுத்தத்தின் மூலமோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலமோ நாட்டைத் துண்டாட இடமளிக்க முடியாது.
சிறப்புரிமைகளை கௌரவப்படுத்துவதற்காக அரசமைப்பை உதாசீனப் படுத்திவிடக் கூடாது.
கஜேந்திரனின் பேச்சு மிகவும் பாரதூரமானது. புலிகள் பொருளாதார மையங்கள் மீது மட்டுமின்றி பாடசாலைகள், வைத்தியசாலைகள் ஏன் இந்த நாடாளுமன்றின் மீதும் குண்டு போடலாம். அப்போது என்ன? எனவே சபாநாயகர் தனது அதிகாரத்தப் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலோசனை கூறினார் ஜோசப் மைக்கல் பெரேரா.
நிமல்
சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா மேலும் ஒரு விளக்கம் அளித்தார்.
அரசமைப்பின் ஆறாவது திருத்தச்சட்டத்தின்படி சத்தியம் செய்ய மறுத்தே கூட்டணி உறுப்பினர்களான அமிர்தலிங்கம் போன்றோர் இந்த நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.
ஆனால் கஜேந்திரன் ஆறாவது திருத்தத்தின்படி சத்தியம் செய்துவிட்டு, இங்கே அதற்கு முரணாக நடந்துகொள்கின்றார். எனவே, இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை கூறினார்.
இதனை அமைச்சர்களான மனோ விஜேரத்ன, ஹே.மகுமார நாணயக்கார, மேர்வின் சில்வா உட்பட ஜே. வி. பியினர் அனைவரும் ஆட்சேபித்தனர். பயங்கரவாதி ஒருவர் இந்தச் சபையில் அமர்ந்துகொண்டு பிரிவினைவாதம் பேசுகின்றார். நாம் அமைதியாக இருக்க முடியாது எனக் கூச்சல் போட்டனர்.
சபையில் அமைதி ஏற்படாததினால் சபாநாயகர் சுமார் 10.45 மணிக்கு சபை அமர்வுகளை இடைநிறுத்தி கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி சபையை ஒத்திவைத்தார்.
எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் சபையில் இருக்கும் போது தனியாக ஒரு கூட்டம் தேவையில்லை. இங்கேயே தீர்மானிக்க முடியும் எனக் கூறி ஜே. வி. பியினர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
வாபஸ் பெற்று வருத்தம் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார் சபாநாயகர்
சபை மீண்டும் 11 மணிக்கு கூடியபோது சபாநாயகர் ஒரு அறிவித்தலை வெளியிட்டார்.
அரசமைப்பின் 157 ஆம் பிரிவின் 3 ஆவது உப பிரிவின்படி எவரும் இலங்கையின் அரசமைப்பை உதாசீனப்படுத்த முடியாது.
பயங்கரவாத நடவடிக்கைகள் மூலமோ அல்லது வேறு ஏதாவது செயற்பாடுகளின் மூலம் நாட்டைத் துண்டாடவோ தனிநாடு ஒன்றை உருவாக்கவோ முடியாது.
மீறும் பட்சத்தில் அவர்களுக்கு ஏழு ஆண்டு காலம் அரசியல் குடியுரிமை பறிப்பதுடன் அவரதும் அவரது குடும்பத்தினரதும் உடைமைகளையும் சொத்துகளையும் பறிமுதல் செய்யமுடியும்.
மேலும் 77 ஆவது பிரிவின்படி நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கவும் இடமுண்டு. எனவே இங்கு பேசுபவர்கள் பொறுப்புடன் பேசவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு உறுப்பினர் கஜேந்திரன் தனது பேச்சை வாபஸ் பெற்றுக்கொண்டு அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டார்.
சபாநாயகரின் வேண்டுகோளின்படி கஜேந்திரன் எம். பி. தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
""இலங்கையின் அரசபடைகள் மேற்கொள்ளும் தாக்குதல்களையும் அதனால் ஏற்படும் பேரழிவுகளையும் நேரில் கண்டவன் நான். நானும் எனது உறவுகளும் நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள். இந்தப் பாதிப்புகளால் ஏற்பட்ட உத்வேகம் தான் என்னை அப்படி உணர்ச்சிவசப் படுத்திவிட்டது. தனிப்பட்ட முறையில் சிங்களவர்களையோ வேறு எவரையுமோ பாதிக்கும் வகையில் பேசவில்லை'' என்று கூறிவிட்டு கஜேந்திரன் அமர்ந்து விட்டார்.
இதனை ஜே. வி. பியினர் ஏற்கவில்லை. கஜேந்திரன் இப்போதும் கூட வருத்தம் தெரிவிக்கவோ , பேச்சை வாபஸ் பெறவோ இல்லை. எனவே உடனடியாக அவரைக் கைது செய்யவேண்டும். சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூச்சல் போட்டனர்.
வெளியேற்றும் பொறுப்பை தம்மிடம் தரக் கோரினார் மேர்வின்
பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா சபாநாயகரைப் பார்த்து ""ஐயா உங்களால் முடியாவிட்டால் அப் பொறுப்பை என்னிடம் தாருங்கள் நான் நடவடிக்கை எடுக்கின்றேன்'' என்று கூச்சல் போட்டார்.
சபையில் சத்தமாகப் பேசுவதாலோ கூச்சல் போடுவதாலோ ஓர் உறுப்பினரைக் கைது செய்யவோ அல்லது உறுப்புரிமையைப் பறிக்கவோ முடியாது என சபாநாயகர் பதில் அடி கொடுத்தார்.
கட்சியின் சார்பில் வருத்தம் தெரிவித்தார் மாவை
"ஐயா! கஜேந்திரன் எம். பி. தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டார். கட்சியின் சார்பில் நான் ஒன்றைக் கூறுகின்றேன். அவருடைய பேச்சு எவரது மனதையும் புண்படுத்தியிருந்தால் கட்சியின் சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.' என்றார் மாவை சேனாதிராஜா.
அதனையும் எவரும் ஏற்கவில்லை. "கஜேந்திரனைக் கைது செய்' என்று கூச்சல் போட்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீல. மு. காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கஜேந்திரன் எம். பியின் கூற்றை சபைக்கு தெளிவு படுத்தினார்.அதுவும் பயன் அளிக்கவில்லை.கூச்சல் குழப்பம் . எதுவும் கேட்கவில்லை; புரியவுமில்லை.
ஐயா, கஜேந்திரன் எம். பி. தனது நிலைப்பாட்டை விளக்கிவிட்டார். கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இதற்கும் மேல் என்ன செய்வது என்று புரியவில்லை என்று கூறிவிட்டார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
சபாநாயகரின் உத்தரவின் படி கஜேந்திரன் மன்னிப்புக் கேட்கவேண்டும். தனது பேச்சை வாபஸ் பெறவேண்டும் என அமைச்சர் மனோ விஜேரத்ன ஆலோசனை கூறினார்.
அப்போது தனது முந்திய நிலைப்பாட்டை மீண்டும் அடித்துக் கூறிவிட்டு அமர்ந்து கொண்டார் கஜேந்திரன் எம். பி.
இதனால், " சபாநாயகரின் உத்தரவை மீறியதாலும் அதனை நிறைவேற்றத் தவறியதாலும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இன்றைய அமர்வுகளில் இருந்து (ஒருநான் மட்டும்) வெளியேறும்படி உத்தரவிடுகின்றேன்.'' என சபாநாயகர் அறிவித்தார்.
மன்னிப்புக் கேட்க மறுத்த கஜேந்திரன் எம். பி. சபையில் இருந்து வெளியேறினார்.(சி)

--Uthayan---

சுட்டிபையன்
11-05-2007, 04:16 PM
இராணுவ மயப்படும் அரசியல்


அண்மையில் சிறிலங்கா சனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் சிறிலங்கா இராணுவத்திற்கு சிவில் நிர்வாக விஷயங்களைக் கையாள்வதற்கான அதிகாரம் இராணுவத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தல் வெளிவந்து சிலமணி நேரத்திற்குள்ளேயே சிறிலங்கா இராணுவ வடபகுதிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ்.குடா நாட்டில் சீரான உணவு விநியோகம் நடைபெறுகிறது எனவும், எரிபொருள் போதியளவு கையிருப்பில் உண்டு எனவும் சிவில் நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது இனி அரச அதிபரால் மேற்கௌ;ளப்பட்ட விடயங்கள் யாவும் இராணுவத்தளபதிகளால் மேற்கொள்ளப்படும். அல்லது, அவற்றின் மேல் இராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாடு இருக்கும் என்பதன் வெளிப்பாடே அவரின் அறிக்கையின் வெளிப்பாடாகும். இது வெளிப்படையாக நோக்கும் போது இது ஒரு போர்க்காலம் என்பதனால் போரிற்கு இசைவாக ஏனைய விஷயங்களைக் கையாளவே இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பது போலவே தோன்றும் ஆனால் தெடர்ச்சியாக .இடம் பெற்று வரும் இராணுவ அரசியல் நகர்வுகளை நோக்கும் போது இம்மாற்றத்திற்கு அதைவிட ஆழமான பரிமாணம் உண்டு என்பது புலப்படுகின்றது.

தமிழர் தாயகப்பகுதிகளில் ஏற்கனவே ஒரு இராணுவ சர்வதிகார ஆட்சியே இடம் பெற்று வருகின்றது அது மட்டுமன்றி அப்படி ஒரு ஆட்சிக்கு அவசரகாலச்சட்டம் என்பன மூலம் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கேள்வி நியாயமற்ற கைதுகள், கடத்தல்கள், படுகொலைகள் இடம்பெயர வைத்தல் எனப்பலவித கொடுமைகளும் இடம்பெற்று வருகின்றன.

இச்சட்டங்கள் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடனேயே கொண்டுவரப்பட்டன. இவை கொண்டு வரப்படுவதற்கும் கொடூரமான முறையில் அமுல் படுத்தப்படுவதற்கும் எதிர்கட்சிகள் உட்பட சிங்கள அரசியல்கட்சிகள் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கின .

ஆனால், இன்று சட்டங்கள் சிங்கள அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கப்படுகின்றது. அதாவது இச்சட்டங்கள் தமிழ் மக்கள் என்ற எல்லையைக் கடந்து சிங்கள மக்கள் மேலும் விரிய ஆரம்பித்து விட்டன. இதன் வெளிப்பாடே மௌபிம, டெய்லிமிறர் பத்திரிகைகள் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்களும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி பொன்றோரின் கைதுகளுமாகும். இப்படியான ஒரு நிலையிலேயே அண்மைய வாத்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது.

தமிழர் தாயகப்பகுதிகளின் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளைப் பொறுத்தவரையில் இராணுவமே சிவில் நிர்வாகத்தை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அத்தியாவசிய தேவைப் பொருட்களின் விநியோகம் மின்சாரம் எரிபொருள் விநியோகம் போக்குவரத்து முதலிய சகல அம்சங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இடம் பெறுகின்றன அடிக்கடி சந்திப்புக்கள் என்ற பெயரில் இடம் பெறும் கூட்டங்கள் மூலம் அதிகாரிகள் இயல்பாகவே படை அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

இப்படியான ஒரு நிலையில் தமிழர் தாயகப்பகுதியை பொறுத்தவரை இப்படி ஒரு வர்த்தமானி அறிவித்தல் அவசியமில்லை அப்படியானால் இது ஏன் விடுக்கப்பட்டது?

இன்று தமிழர் தாயகப்பகுதிகளில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் குறிப்பாகக் கொழும்பிலும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள் காணாமற்போதல்கள் இயல்பான விடயங்களாகிவிட்டன. இவை ஆயுதப்படைகளின் ஒத்துழைப்போடு துணை இராணுவக் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெட்டத்தெளிவான விடயமாகும் இவற்றைத்தடுத்து நிறுத்தவோ கட்டுப்படுத்தவோ அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என உள்ளுர் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன. சில வெளிநாட்டுத் தூதரகங்களும் சிறிலங்கா மூலம் அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகத் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இப்படியான ஒரு நிலையில் சிறிலங்கா அரசு பல சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தோன்ற ஆரம்பித்து விட்டது.

இப்படியான ஒரு சனநாயக விரோதம் சூழலில் சிவில் கட்டுக்கோப்புகளை இராணுவமயப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பும் முயற்சியில் இதுவும் ஒன்று எனவே கருதப்படுகின்றது,

இன்றைய மகிந்த ஒரு போரை நோக்கி வேகமாக முன் சென்று கொண்டிருக்கிறது. சமாதான முயற்சிகளுக்கான ஒரு சிறு நகர்வைக் கூடத் தடுத்து நிறுத்துமளவுக்கு போரின் பால் முனைப்புக் காட்டி வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் சர்வதேசத்தைத் அணிதிரட்ட எடுத்த முயற்சி தோல்வியடைந்து விட்ட போதிலும் இது சிங்களத்தால் வெல்லப்படக்கூடிய ஒரு போர் என்ற மாயையை ஊட்டுவதன் மூலம் சிங்கள மக்களைப் போருக்கு ஆதரவாக அணி திரட்டி வருகிறது. அதனால் ஒரளவு வெற்றியும் பெற்றள்ளது. அண்மையில் சிங்கள மக்கள் மத்தியில் எடுக்கப்பட்ட சில கருத்துக் கணிப்புகள் கூட இவ்விடயத்தை வெளிப்படுத்தி உள்ளன.

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் போர் வெற்றி பற்றிய மாயையை சிங்கள மக்கள் மத்தியில் எற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்ற போதிலும் கட்டுநாயக்கா பலாலி விமானத்தளங்கள் மற்றும் கொழும்பு எரிபொருள் மையங்கள் மீது நடத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்கள் இந்நம்பிக்கை மீதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன அது மட்டுமன்றி மன்னார் வவுனியா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற முயற்சிகளில் ஏற்பட்ட படுதோல்விகளும் மஹிந்த அரசின் போர் வலு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

இப்படியான ஒரு சூழ்நிலையில் முன்னாள் விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக்க போன்ற படைத்துறை அனுபவசாலிகள் பாதுகாப்புச் செலவீனங்களை 1.6 பில்லியனிலிருந்து 2. பில்லியனாக அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளனர். இது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக எழுந்துள்ளது.

எனவே இப்படியான பாதுகாப்பு செலவின அதிகரிப்பு தென்னிலங்கைப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தப் போவது தவிர்க்க முடியாததாகும்.

இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வழிகளும் மிக வேகமாக அடைக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்க முடியும் விடுதலைப் புலிகளின் விமானத்தாக்குதல்கள் துறை முகங்களின் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உட்பட தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை மழுங்கடிப்பதுடன் சுற்றுலாத்துறையில் பெரும் வீழ்ச்சியையும் எற்படுத்தியுள்ளது.

இன்னொரு புறம் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் காரணமாகவும் சர்வதேசத்தின் சமாதான முயற்சிகளுக்கு விரோதமான நடவடிக்கைகள் காரணமாகவும் வெளிநாடுகளின் உதவிகளை எதிர்பார்க்க முடியாத ஒரு நெருக்கடி உருவாகும் நிலையில் நிலையும் தோன்றியுள்ளது.

இதன் அறிகுறியாக அண்மையில் சனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் சனாதிபதி மஹிந்த ராஜபக்சவினதும் அவரது அரசாங்கத்தினதும் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமை வெளிப்பட்டுள்ளது. சனாதிபதி ஆலோசகர் சுனில் பெரேராவால் நாடளாவிய அளவில் நடத்தப்பட்ட இக்கணிப்பீட்டில் மஹிந்த ராஜபக்சவின் செல்வாக்கு ஆறுமாத காலத்தில் 58.05 வீதத்திலிருந்து 50.2வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு தேர்தல் நடைபெறுமானால் ஆறுமாதங்களுக்கு முன்பு 100 ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி தற்சமயம் 82 ஆசனங்களை மட்டுமே பெறும் என இக்கணிப்பீடு உணர்த்தியுள்ளது.

இது மட்டுமின்றி இன்றைய அரசின் பாராளுமன்ற பலம் கூட நம்பிக்கையளிப்பதாக இல்லை. மஹிந்த சிந்தனை என்ற சுலோகத்தை வைத்துக் கொண்டு ஜே.வி;பி அரசாங்கத்தை தனது நோக்கங்களுக்கமைய ஆட்டிப்படைத்து தனது சொந்த அரசியல் செல்வாக்கை மக்கள் மத்தியில் பெருக்கி வருகிறது. ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து கட்சிமாறி அரசுடன் இணைந்தவர்கள் மீண்டும் எந்நேரமும் ஐக்கிய தேசியக்கட்சிக்குப் பாயக்கூடும். இதே போன்று முஸ்லிம் காங்கிரஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளும் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என நம்ப முடியாது.

எனவே வெகுவிரைவிலேயே மஹிந்தரின் அரசாங்கம் பெரும் பொரளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையையும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்கும் நிலையையும் உருவாகப் போவது நிச்சயம்.

இப்படியான ஒரு நிலையில் அரசாங்கத்தைப் பாதுகாக்ககூடிய ஒரே ஒரு சக்தி இராணுவபலம் மட்டும் தான். இவ்வகையில் முப்படைகளின் தளபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளரான அவரது சகோதரர் கோதாபய ராஜபக்சவும் உள்ளனர். அதாவது இராணுவத்தின் மீதான கட்டுப்பாடு ராஜபக்ச குடும்பத்தினரின் கையிலேயே உள்ளது. இவற்றிற்கு ஏற்ப இராணுவ உட்கட்டமைப்புகளில் மாற்றம் ஏற் படுத்தப்பட்டுள்ளது.

இப்படியான ஒரு நிலையிலேயே சிவில் நிர்வாகம் தொடர்பான குறிப்பாக பொலிஸ் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கு அவசர வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது சனநாயக சட்டங்கள் மூலம் ஒரு சர்வதிகாரத்திற்கான ஒரு அடித்தளம் இடப்படுகின்றது என்ற உண்மை இங்க புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் சிறிலங்கா இராணுவ முகாம்கள் சித்திரவதை கூடங்களாக மாற்றப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்ட கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது இதுவரையில் தமிழர் தாயகப்பகுதிகளில் நிலவி வந்த இராணுவ சர்வதிகாரம் இராணுவ மயப்படுத்தப்படும் அரசியல் மூலம் தென்னிலங்கைக்கும், இன்னொரு வார்த்தையில் சொல்லப் பேனால் தென்னிலங்கையில் எழக்கூடிய சகல எதிர்ப்புகளும் இராணுவமயப்படுத்தப்பட்ட குடும்ப சர்வதிகாரம் மூலம் அடக்கி ஒடுக்கப்படும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்

பதிவு

சுட்டிபையன்
13-05-2007, 09:43 AM
அமெரிக்கா, பிரித்தானியா திடீர் கரிசனை உள்நோக்கம் என்ன?

வான் புலிகளை எப்படிச் சமாளிப்பதென்பது தெரியாது இலங்கை அரசு தடுமாறுகிறது. இதுவரை வான் புலிகளை எதுவுமே செய்ய முடியாத நிலையில் இனி என்ன செய்வதெனக் குழப்பமடைந்துள்ளது. சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெறும் அதேநேரம், வான்புலிகளுக்கெதிராக சர்வதேசத்தின் கவனத்தையும் திருப்ப இலங்கை அரசு முயல்கிறது.
வான் புலிகளின் அச்சுறுத்தலால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இரவு நேரங்களில் இழுத்து மூடப்படுகிறது. இலங்கை வான்பரப்பை பாதுகாக்கும் ஆற்றலை விமானப் படையினர் இழந்துவிட்டதால் வான்புலிகளின் அச்சுறுத்தலுக்கு அரசு அடிபணியும் நிலையேற்பட்டுள்ளது.

விமானப் படை விமானங்களால் தமிழர் பகுதிகளில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீச முடிகிறதே தவிர வான் புலிகளை கண்டுபிடித்து அவற்றை தாக்கியழிக்கும் வல்லமையை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இதனால், அவசர அவசரமாக மிக நவீன விமானங்களை கொள்வனவு செய்வதில் தீவிர அக்கறை காட்டும் அரசு, அதற்கிடையில் வான் புலிகள் குறித்து சர்வதேசமெங்கும் அச்ச உணர்வைத் தோற்றுவிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு வான் புலிகள் பெரும் அச்சுறுத்தலாயிருப்பரென இலங்கை அரசு எச்சரித்ததையடுத்து, இந்திய அரசு முழு உஷாரடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின்றன. தமிழகத்திலுள்ள அணு உலைகளை வான்புலிகள் தாக்கும் சாத்தியமிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண எச்சரித்ததை இந்தியா வேதவாக்காக எடுத்துள்ளது.

புலிகளின் விமானங்கள் 200 முதல் 300 கிலோமீற்றர் வரை பறக்கக்கூடியவையென்பதால், வன்னிக்குச் சமீபமாகவுள்ள தமிழகத்தில் புலிகள் தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகளுள்ளதாகவும் பாலித கோஹண தெரிவித்ததையடுத்து, இந்திய அரசு உஷாரடைந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், வெளியுறவுச் செயலர், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்ட மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது.

இதில் இலங்கை அரசு விடுத்த எச்சரிக்கை குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வதெனவும் விரிவாக ஆராயப்பட்டது. வான் புலிகளின் அச்சுறுத்தலை, சமாளிக்க தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் வான் வழிப் பாதுகாப்பை பல மடங்காக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் போர் விமானங்களை தமிழகத்திற்கு அனுப்பவும் அங்கு புதிய நவீன விமானப் படைத்தளத்தை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதுவரை விடுதலைப்புலிகளின் படையணிகளால் இந்தியாவுக்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படாத நிலையில் தற்போது இலங்கை கள நிலையிலும் இராணுவச் சமவலு நிலையிலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகையில் இந்தியா புதிய வியூகம் வகுப்பது பெரும் ஆச்சரியமாகவேயுள்ளது.

அதுவும் இலங்கை சிவில் அதிகாரியொருவர் (கோஹண) தெரிவித்த கருத்தின் அடிப்படையில் மற்றொரு நாட்டுடனான போருக்குத் தயாராகுவது போல் இந்தியாவில் ஆயத்தங்கள் செய்யப்படுவது பெரும் வியப்பைத் தருகிறது.

வான் புலிகளினால் இந்தியாவுக்கு ஆபத்தேற்படுமா, இல்லையா என்பது குறித்து இந்திய புலனாய்வாளர்கள் எவருமே எதுவித தகவல்களையும் தெரிவிக்காத நிலையில், பாலித கோஹணவின் கூற்றின் அடிப்படையில் பெரும் ஏற்பாடுகள் செய்யப்படுவது இந்தியாவின் பாதுகாப்பு குறித்த புலனாய்வுத் தகவல்களை இலங்கை சிவில் அதிகாரிகள்தான் வழங்குகின்றார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

விடுதலைப்புலிகளை எப்போதெல்லாம் இலங்கைப் படைகளால் சமாளிக்க முடியாது போகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்கும் புலிகளுக்குமிடையில் சிண்டு முடிவதுதான் இலங்கையின் தந்திரமாகும். இதுவரை காலமும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவந்த இலங்கை அரசு, தற்போதும் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை இந்தியா உணர்ந்து கொள்ளாதது அவர்களது பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

புலிகளை சமாளிக்க முடியாவிட்டால், இந்தியாவின் உதவியை அல்லது வேறு நாடுகளின் உதவியை இலங்கை அரசு பெற முயலுமென்பது அனைவரும் அறிந்ததொன்று. இதனால், வான் புலிகளால் இலங்கையை விட இந்தியாவுக்குத்தான் பெரும் அச்சுறுத்தலேற்படுமென்பது போல் அவர்கள் கதை விடுவார்கள். எனினும், யதார்த்த நிலையை உணர்ந்து செயற்பட வேண்டியது இந்தியாவின் பொறுப்பாகும்.

இந்த நிலையில் வான் புலிகளின் அச்சுறுத்தல் குறித்து இலங்கை கொண்டுள்ள கவலைபோன்று வேறு சில நாடுகளும் தீவிர கவனம் செலுத்துகின்றன. அந்த நாடுகளுக்கு வான் புலிகளால் எவ்வித நேரடி அச்சுறுத்தலும் இல்லாத போதும் தங்களுக்கெதிரான போராட்ட அமைப்புகள் வான் பலத்தை பெற்றுவிட்டால், அவற்றை எப்படி எதிர்கொள்வதென்பதே இவற்றின் கவலையாகும்.

இதுவரை நாளும், இல்லாத விதத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் போட்டி போட்டு இலங்கையில் மனித உரிமைகள் விடயத்திலும், தொடரும் போர் குறித்தும், இனப்பிரச்சினைத் தீர்வு குறித்தும் தீவிர அக்கறை செலுத்துகின்றன. கடந்த வருடம் வடக்கு - கிழக்கில் பெரும் போர் வெடித்து மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றபோது, மௌனம் சாதித்த இந்த நாடுகள் இன்று அவசர அவசரமாக மோதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றன.

வான் புலிகளின் வருகையுடன் இலங்கையில் இராணுவ வலுச் சமநிலையில் வேகமாக மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையிலேயே வடக்கு - கிழக்கு பிரச்சினை குறித்து இந்த நாடுகள் தீவிர கவனம் செலுத்துகின்றன. மனித உரிமைகள் குறித்தும், அகதிகளின் பிரச்சினைகள் குறித்தும் அரசுக்கும் புலிகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்தும் பேசுகின்றன.

போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் போர் வெடித்த போது இவர்கள் தடுக்க முன்வரவில்லை. யுத்த விமானங்கள் தினமும் தமிழர் பகுதிகளில் குண்டுகளைப் பொழிந்த போது ஏனென்று எவரும் கேட்கவில்லை. புலிகளுக்கெதிரான போரெனக் கூறி தமிழர் தாயகப் பிரதேசங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்களது வீடுவாசல்கள் அழிக்கப்பட்டு, அவர்கள் இலட்சக்கணக்கில் அகதிகளாக ஓடியபோதும் எவரும் இவற்றைத் தடுத்து நிறுத்தவில்லை.

தினம் தினம் தமிழர்கள் சொந்த மண்ணில் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், நூற்றுக்கணக்கில் தமிழர்கள் கடத்தப்பட்டபோதும் பெருந்தொகையில் இந்த மக்கள் காணாமல் போனபோதும் இந்த நாடுகள் மௌனம் சாதித்ததுடன் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக விரட்டிய பின், வடக்கில் பெரும் போருக்குச் செல்லப் போவதாக அரசு அறைகூவல் விடுத்த போது கூட முழு உலகமும் கைகட்டி வேடிக்கை பார்த்தது.

வடக்கு, கிழக்கை பிரித்து தமிழர் தாயகத்தை துண்டாடி கிழக்கில் தமிழர்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி தமிழர்களையும் தமிழர்களையும் மோதவிட்டு அவர்களைத் தினமும் அழித்த போதெல்லாம் மௌனம் சாதித்து தமிழரின் பலத்தை குறைத்து இராணுவ வலுச் சமநிலையில் பெரும் மாற்றம் ஏற்படும் நிலையை உருவாக்கியவர்கள், இன்று திடீரென இலங்கை பிரச்சினையில் தீவிர அக்கறை காட்டுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் கவனத்தை ஒரு இரவுடன் மாற்றியது வான் புலிகளின் வருகைதான். அடுத்தடுத்து அவர்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களும் அதனைச் சமாளிக்க முடியாது இலங்கை அரசு தடுமாறுவதும் இராணுவச் சமநிலையில் வேகமாக மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில்தான் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கை பிரச்சினையில் அக்கறை காட்டுகின்றன.

பிரிட்டன் பாராளுமன்றில் திடீரென இலங்கை பிரச்சினை குறித்து முழுநாள் விவாதம் நடைபெற்றது. புலிகள் மீதான தடையை நீக்கி அவர்களை அங்கீகரிக்குமாறு எம்.பி.க்கள் பலர் கோரிக்கை விடுத்தபோது பிரிட்டிஷ் அரசு அதற்கு மறுத்துவிட்டது. புலிகள் மீதான தடையை நீக்குவதென்பது அமெரிக்காவின் சீற்றத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபத்திற்கும் ஆளாக வேண்டுமென்பதால் புலிகள் மீதான தடையை நீக்க பிரிட்டன் மறுத்தது.

அதேநேரம், பாராளுமன்றில் இந்தளவு அழுத்தத்திற்குப் பின்னரும் எதுவித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் தங்களை உலகம் தூற்றுமென்பதால், இலங்கை அரசுக்கான உதவித் திட்டங்களை இடைநிறுத்தியது. புலிகளின் மீதான தடையை நீக்குவதை விட பிரிட்டஷ் அரசுக்கு இது சுலபமானது.

புலிகளின் தடையை நீக்கிவிட்டு, மீண்டும் அதனை அமுலுக்கு கொண்டு வருவதென்பது பல்வேறு கட்டங்களை தாண்ட வேண்டும். ஆனால், இலங்கை அரசுக்கான உதவிகளை நிறுத்திவிட்டு, அதனை எவருக்கும் தெரியாமல் எந்த அறிவிப்பும் செய்யாமல் கூட மீண்டும் வழங்கலாம். இதன் மூலம் இலங்கை அரசை சமாளித்து விடலாம்.

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் உடனடியாகப் பேச வேண்டும், அதற்கு முன் ஜூலையில் லண்டனில் இரு தரப்பையும் சந்திக்க வைக்க வேண்டுமெனவும் பிரிட்டிஷ் அரசு தீவிரம் காட்டுகிறது. இதன் மூலம் இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் மோதல்களை நிறுத்த அழுத்தம் கொடுப்பதே பிரிட்டனின் திட்டமாகும்.

அவ்வாறாயின், வான் புலிகள் தங்கள் தாக்குதலை நிறுத்த வேண்டிய நிலையேற்படும். இதன் மூலம் இலங்கை அரசு வான் புலிகளால் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை தவிர்ப்பதும் இந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசு, வான் புலிகளை எதிர்கொள்ளும் விதத்தில் தன்னை முழு அளவில் தயார்படுத்த கால அவகாசம் வழங்குவதாயுமிருக்கும்.
சமாதான முயற்சிகள் குறித்து பிரிட்டனும் அமெரிக்காவும் தீவிர அக்கறை காட்டுகையில், வான் புலிகள் ஏதாவது தாக்குதலை நடத்தினால், தாங்கள் ேமற்கொள்ளும் சமாதான முயற்சிகளை முறியடிக்க புலிகள் முயல்வதாக அவர்கள் மீது கடும் அழுத்தங்களை கொடுக்கவும் இவர்கள் முற்படக்கூடும்.

புலிகளின் விமானங்கள் இலங்கைக்குள்ளேயே இராணுவ நிலைகளைத் தாக்கும். ஏனைய வெளிநாட்டு அமைப்புக்கள் விமானப் படையை உருவாக்கி விட்டால் அந்த அமைப்புக்களின் விமானங்கள் அமெரிக்காவையே தாக்குமென்பதால், புலிகளின் விமானப் படை அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும், அதனை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய அமைப்புக்களும் விமானப் படைகளை உருவாக்க முற்பட்டுவிடுமென்பதால் புலிகளின் விமானப் படை குறித்து அமெரிக்கா அச்சமடையலாம்.

இதனால், புலிகளின் வான் தாக்குதல் அதிகரித்து, அவர்களது கை ஓங்கி, இலங்கை விமானப் படையின் பலம் குன்றிவிடுவது பேராபத்தாகிவிடலாமெனக் கருதும் அமெரிக்கா போன்ற நாடுகள், இலங்கையில் மீண்டும் சமாதான முயற்சிகளெனக் கூறி வான் புலித் தாக்குதலை தடுத்து அதற்கிடையில் இலங்கை விமானப் படையினரின் பலத்தை அதிகரிக்கச் செய்துவிடும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவே பலரும் கருதுகின்றனர். எனினும், புலிகள் இதனை எவ்வாறு பார்க்கிறார்களென்பதைப் பொறுத்தே அடுத்த நடவடிக்கையிருக்கும்.

அதேநேரம், வான் புலிகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. தாக்குதலொன்றுக்காக வான் புலிகள் வரும்போது, தரையிலிருந்து படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களிலிருந்து அவர்கள் தப்பிவிட்டால் இலக்கை நோக்கி அவர்கள் வருவதற்கிடையில் அவர்களை இடையில் - நடுவானில் வழிமறித்து தாக்கியழிக்கும் திறன் தற்போது விமானப் படையினரிடமில்லை.

வான் புலிகளைக் கண்டுபிடித்து, அவர்களை இடைமறித்து நடுவானில் தாக்கியழிக்கும் திறன் அவசியம் தேவைப்படுகிறது. இதனைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அரசும் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, பிந்திய அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள `மிக் - 29' ரக ரஷ்ய தயாரிப்பு போர் விமானங்களை உடனடியாகக் கொள்வனவு செய்யவும் அந்தக் கொள்வனவிற்கு முன் அவற்றில் ஒரு சிலவற்றை வாடகைக்கு பெற்றுக் கொள்வதிலும் அரசு தீவிர அக்கறை காட்டுகிறது.

விமானப் படையினரிடம் தற்போதிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரேன் தயாரிப்பிலான `மிக் - 27' ரக விமானங்களும் இஸ்ரேல் தயாரிப்பிலான `கிபிர்' விமானங்களும் குண்டுவீச்சுக்களை நடத்துவதற்கு மிகவும் சிறந்தவை. ஆனால், இவற்றிடம் நடுவானில் எதிரி விமானங்களை இடைமறித்து தாக்கியழிக்கும் திறனில்லை.

இவையிரண்டும் அவசர நிலைமைகளில் இறங்கி ஏறுவதற்கு வசதியான விமான ஓடுபாதைகள் அவசியம். இவற்றால் உடனடியாகவும் மிக விரைவாகவும் மேலெழ முடியாது. இதனால், குறுந்தூர ஓடு பாதையில் ஓடிப் பறக்கவும் அல்லது அவற்றில் இறங்கவும் கூடிய விதத்தில், விஷேட பயிற்சி பெற்ற விமானிகளுடன் கூடிய சிறியரக விமானங்களே தற்போது விமானப் படையினருக்குத் தேவை.

`கிபிர்' மற்றும் `மிக் - 27' ரக விமானங்களில், வானிலிருந்து தாக்குதல் நடத்தக் கூடிய பீரங்கிகள் மற்றும் வானிலிருந்து வானுக்கு தாக்குதல் நடத்தக்கூடிய குறுந்தூர ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்தாலும் இவற்றால் வான் பரப்பில் எதிரி விமானங்களின் மீது எந்தளவிற்கு தாக்குதல்களை நடத்த முடியுமென்பது பெரும் கேள்வியே.

`மிக் - 27' விமானங்களைப் பொறுத்தவரை இரவு நேரங்களில் எதிரி விமானமொன்றைத் தேடிக் கண்டுபிடித்து, வான்பரப்பில் வைத்து அதன்மீது தாக்குதலை நடத்துவதற்கேற்ப எதிரி விமானத்தை கண்டுபிடிப்பதற்கான `ராடர்' இல்லை. எனினும் `கிபிர்' விமானங்களில், இரவு நேரங்களில் பறக்கும் எதிரி விமானங்களை கண்டுபிடிக்கக்கூடிய ராடர்களிருந்தாலும் மிகக் குறுகிய நேரத்தில் இந்த விமானத்தால் எதிரி விமானத்தை கண்டுபிடிக்க முடியாவிட்டால், பின்னர் அதனைக் கண்டுபிடிப்பதென்பது கடினமானதாகவேயிருக்கும்.

இதனால், `மிக் - 27' மற்றும் `கிபிர்' விமானங்களைப் பயன்படுத்தி புலிகளின் வானூர்திகளை இரவு நேரத்தில் கண்டுபிடித்து அழிப்பதென்பதை விட, தரையிலிருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளைப் பயன்படுத்துவது சுலபமானதென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில்தான், பிந்திய அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட `மிக் - 29' ரக விமானங்களை பயன்படுத்த இலங்கை அரசும் படைத்தரப்பும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. வானில் எதிரியின் விமானங்களை ராடரின் உதவியுடன் கண்டுபிடித்து, தாக்கி அழிப்பதற்கான சகல தொழில்நுட்ப வசதிகளையும் இந்த `மிக் - 29' விமானம் கொண்டிருப்பதுடன் தரையிலும் 3,000 கிலோ குண்டுகளை துல்லியமாக வீசித் தாக்கக்கூடியது.

எந்தக் காலநிலையிலும் எந்த உயரத்திலும் அல்லது தூரத்திலும் எதிரி விமானங்களை கண்டுபிடித்து தாக்கியழிக்கும் வல்லமை படைத்தது. வானில் தோன்றுமொரு இலக்கை 60 கிலோமீற்றர் முதல் 200 கிலோமீற்றர் தூரத்திற்குள் வைத்து எந்த உயரத்திலும் (தாழப்பறந்துகூட) `மிக் - 29' கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியழித்து விடும். இந்த விமானத்தின் ராடரில் எதிரி விமானம் சிக்கிவிட்டால், அந்த விமானம் அழிக்கப்படுவது நிச்சயம். அந்தளவிற்கு பிந்திய உயர் தொழில்நுட்பமும் தாக்குதல் திறனும் கொண்டது.

சுமார் 150 கோடி ரூபா பெறுமதியான இந்த விமானத்தை முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது பயன்படுத்துகின்றன. இதனைப் பெற்றுவிட இலங்கை அரசு துடிப்பதால் இனிவரும் நாட்களில் மோதல்கள் மிகத் தீவிரமடைய ஏற்படலாம்.
---------

சுட்டிபையன்
20-05-2007, 03:09 AM
ஐரோப்பிய ஒன்றியம் யூன் மாதத்தில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றம் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது. சிறீலங்கா அரசின் ஜனநாயக மரபுகளை மீறி மனித உரிமை மீறல்கள் தொடர்ப்பில் இந்த தீர்மானம் கொண்டுவரவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்த நாடாளுமன்ற ஒன்றுகூடல் பிரான்ஸ் ஸ்ராஸ்போர்க் நகரில் எதிர்வரும் 5ம் நாள் நடைபெறவுள்ளது. இதிலேயே சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டுவரவுள்ளதாகத் தெரியவருகிறது.

அன்றைதினம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 அங்கத்துவ நாடுகளும் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை ஆமோதித்தால் இந்த நாடுகளினால் சிறீலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறீலங்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை இணக்கத்தில் கையெழுத்து இட்டதால்தான் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரக் காரணமாகின்றது.

இதேநேரம் சிறீலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றில் 750 பேர் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே சிறீலங்காவுக்கு எதிராக பிரேரணை சாத்தியமாகும் என அரசியல் அவதானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

-Puthinam-

சுட்டிபையன்
20-05-2007, 03:13 AM
புதிய போர்வலுச்சமநிலையும், புதிய ஏற்பாடுகளும்
-மனோகரன்-

சிறிலங்கா அரசின் போர் முனைப்பைப் புலிகளின் புதிய வியூகங்கள் நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கின்றன. வாகரையிலும் மட்டகளப்பின் படுவான்கரையிலும் சிறிலங்காப்படைகள் பெற்ற முன்னேற்றத்தை வைத்துக்கொண்டு புலிகளை இலகுவாக வென்று விடலாம் என்று கருதிய சிறிலங்கா அரசுக்கு இப்போது புலிகள் பெரும் நெருக்கடியைக்கொடுத்திருக்கிறார்கள்.

மதிப்பீடுகளுக்கப்பாலான போர் முறையையும், வீரமரபையும் உடையவர்கள் புலிகள். எந்தக்கணிதத்துக்குள்ளும், வரையறைகளுக்குள்ளும் உட்படாதவர்கள். இதனால்தான் புலிகளைப் பலரும் புரிந்து கொள்ளவும் மதிப்பிடவும் முடியாமலிருக்கிறார்கள். அதனால்தான் புலிகளை யாராலும் வெற்றி கொள்ள முடியாமலிருக்கிறது.

எல்லோருக்கும் தெரிந்த விசயங்களாயினும் இதை இந்தச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருதடவை தொகுத்துப்பார்ரக்கவேண்டியுள்ளது. இலங்கை இந்திய உடன்படிக்கையின்போது புலிகள் தொடர்பாக ராஜீவ் காந்தி போட்ட தவறான கணிப்பினால்;தான் இந்திய இராணுவம் மோசமான சிக்கலுக்குள் அப்போது சிக்கியது. ஒரு சிறுதொகை சாரம் கட்டிய பொடியள்தான் இருக்கிறார்கள். அவர்களை சில மணித்தியாலங்களில் கட்டுப்படுத்திவிடலாம் என்று அவர் வெளிப்படையாகவே சொல்லியுமிருந்தார். ஆனால் நடந்தது எதிர்மறையானது. புலிகள் ஒரு லட்சத்துக்கும் மேலான பெரும்படையுடன் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நின்று தாக்குப்பிடித்தார்கள். தொடர்ந்து போரிட்டார்கள். வென்றார்கள்.

புலிகள் தொடர்பாக ஜே.ஆரும் இப்படித்தான் தவறான கணிப்பை வைத்துப் போர்ப்பிரகடனம் செய்தார். எழுபத்தியேழாம் ஆண்டில் பெரும் போர்ப்பிரகடனத்தைச் செய்த ஜே.ஆரால் போரை வெல்லவும் முடியவில்லை. புலிகளைத் தோற்கடிக்கவும் முடியவில்லை. அவர் இந்தியாவைக்கொண்டு புலிகளை அடக்கலாம் என்று வகுத்த வியூகத்தையும் புலிகள் உடைத்தெறிந்தார்கள்.

இப்படி புலிகளைத்தோற்கடிக்கவென்றே சிறிலங்காவின் எல்லாத்தலைவர்களும் ஆட்சியை நடத்துகிறார்கள். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இலங்கையின் நிகழ்ச்சி நிரலில் புலிகளைத்தோற்கடிப்பதற்கான இடமே முக்கியமாக இருந்தது. ஒதுக்கப்பட்ட நிதி, செலவழிக்கப்பட்ட வளங்கள், இழக்கப்பட்ட உயிர்கள், வீணாக்கப்பட்ட காலம் என எவ்வளவையோ செய்தும் புலிகளைத் தோற்கடிக்க முடியவில்லை.

சிறிலங்கா அரசாங்கம்; புலிகளைத்தோற்கடிப்பதற்காக பல வெளிநாடுகளின் ஆதரவையும் பெற்றிருந்தது. அத்துடன் தமிழர் தரப்பிலிருந்து புலிகளுக்கெதிராக பல்வேறு சக்திகளை உருவாக்கி களத்திலும் இறக்கியிருந்தது. இவற்றுக்கும் மேலாக படைநிலைகளில் தளபதிகளை மாற்றி, போர் முறைகளை மாற்றி, புதிய வியூகங்களை வகுத்து புலிகளைத்தோற்கடித்து விடலாம் என்றே நம்பியது. அதற்காக அது மிகவும் பாடுபட்டது. ஆனால் அது சிறிய அளவிலேனும் சாத்தியமாகவில்லை. பதிலாக புலிகள் இன்னும் இன்னும் வளர்ந்தார்கள்.

சிறிலங்காவின் ஆட்சியிலிருந்த தலைவர்கள் கடந்த இரண்டரைத் தசாப்த காலத்தில் நாட்டின் ஏனைய விவகாரங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவனத்தையும் விட புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளுக்கே அதிக அக்கறையைச்செலுத்தினார்கள். அவர்களுடைய மூளையில் புலி எதிர்ப்பு என்பதே நிறைந்திருந்தது.

இப்;படியெல்லாமிருந்தும் புலிகளைத்தோற்கடிக்க முடிந்ததா?. சிறிலங்காவின் ஒவ்வொரு தலைவர்களும் இந்த விசயத்தில் தோல்வியோடுதான் பதவியை விட்டுப்போகிறார்கள். அதேவேளை புலிகளை மேலும் மேலும் தம் பங்குக்கு வளர்த்து விட்டும் போகிறார்கள். பதவி விலகிப்;போகுமபோது நிறை வேற்ற முடியாத தங்களின் புலி அழிப்புத் திட்டத்தை அடுத்து வருகின்ற ஆட்சித்தலைமையிடம் கொடுத்து விட்டுப்போகிறார்கள்.

அவர்களும் தங்களின் பங்குக்கு புதிய வயூகங்களை வகுக்கிறார்கள். மூளையைப்போட்டுக்கசக்குகிறார்கள். இரவில் தூக்கமில்லாமலே தவித்துக்கொண்டு யோசிக்கிறார்கள். தங்களின் வெற்றி பற்றிய பெருங்கனவுடனிருக்கிறார்கள். எதையெல்லாமோ செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். கொலை, அழிவு, அட்டூழியம், கொள்ளை, மோசடி என பெரும்பாதகங்களையெல்லாம் செய்தும் இறுதியில் தோல்வியையே சந்திக்கிறார்கள். இது எப்படி?

இதைத்தான் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அடிப்படையான சில காரணங்களிருக்கின்றன.

ஒன்று புலிகள் மக்களின் அமைப்பு. மக்களின் விடுதலைக்காக போராடும் அமைப்பு. அதாவது நீதிக்காகப்போராடும் அமைப்பு. சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமளிக்காது தன் இலட்சியத்திலும் இலக்கிலும் குறியோடு போராடும் இயக்கம். இந்த இயக்கத்தை முப்பதாண்டுக்கும் மேலாக வழிநடத்தும் தலைமையின் திறனும்,. போராளிகளின் அர்ப்பணிப்பும் உறுதியும். தமிழ் மக்களின் தளராத நிலைப்பாடும் முக்கிய காரணிகள்.

அடுத்தது புலிகள் விடுதலை இயக்கமாக இருக்கின்றபோதே பாதி அரசமைப்பாகவும் வளர்ச்சி பெற்றுவிட்டனர். கெரில்லா அமைப்பாக செயற்படும் அதேவேளை மரபுவழியான படை அமைப்பாகவும் செயற்படுகிறார்கள்.

மற்றது, எவராலும் எதிர்பார்த்திருக்கவே முடியாதபடி புதிய போர் முறைகளையும் வியூகங்களையும் எதிர்த்தரப்பின்மீது அதிரடியாகப் பயன்படுத்துவது. புலிகளின் தொடக்ககால தாக்குதல்கள் தொடக்கம் இப்போது தொடருகின்ற போரிடல்வரையில் இதனை அவதானிக்கலாம்.

எந்தக்கணிதத்துக்குள்ளும் வராத வீரத்தை உருவாக்குவதில் தலைவர் பிரபாகரன் கெட்டிக்காரர். அதில் அவர் பெரும் வெற்றியையும் கண்டிருக்கிறார். அதேமாதிரி காலம், களம் இரண்டிலுமுள்ள நுட்பமான அம்சங்களுக்கேற்றவாறு அவற்றைக்கவனத்திலெடுத்து வியூகங்களை வகுப்பதிலும் அவர் பேராற்றலைப் பெற்றிருக்கிறார். இது புலிகளைப் பல மடங்கு பலமாக்குகிறது. அதேவேளை எதிர்த்தரப்பை பலவீனமாக்கிவிடுகிறது. அதிலும் எதிர்த்தரப்பின் உளவியல் இவற்றால் உடைக்கப்படுகிறது. அல்லது சிதைக்கப்படுகிறது.

இப்போதும் புலிகள் இத்தகைய போர் முறையையும் புதிய வியூகத்தையும்தான் சிறிலங்கா அரசின் போர்முனைப்புக்கெதிராகப் பிரயோகித்திருக்கிறார்கள்.

யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக புலிகளின் வான்படை நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது. அதுவும் வெற்றிகரமான தொடக்கமாக அது வளர்ந்து செல்கிறது. புலிகளின் போர்மரபை விளங்கிக்கொள்வோர் ஓரளவுக்கு இதனைப்புரிந்து கொள்வர்.

நெருக்கடிகளும் இறுக்கமான நிலைமையும் எப்போதும் புலிகளை பெரிய அளவில் உயர்த்தித்தான் விட்டிருக்கின்றன. இறுக்கமான காலத்தில்தான் அவர்கள் புதிய போர் முறைகளை அறிமுகப்படுத்துகிறார்கள்.

1987 இல் கரும்புலித்தாக்குதல் இவ்வாறான நெருக்கடிச்சூழலில்தான் அறிமுகமாகியது. பின்னர் அது பெரும் வளர்;ச்சி பெற்றதொரு படைக்கட்டமைப்பாகவும் போர்முறையாகவும் வளர்ந்தது.

இதேபோல இன்னொரு காலகட்டத்தில் கடற்புலிகளை பிரபாகரன் களத்தில் இறக்குகிறார். இவ்வாறு ஒவ்வொரு நெருக்கடிச்சூழல்களை எதிர்கொள்ளவும் அவற்றிலிருந்து மீளவுமாக புலிகள் புதிய போர் முறைமைகளையும் புதிய வியூகங்களையும் பிரயோகிக்கினறனர்.

ஆனையிறவுத்தளத்தை வெற்றி கொள்வதற்கான குடாரப்புத்தரையிறக்கம் இதில் இன்னொரு கவனிக்கவேண்டிய புள்ளி. அதேபோல, ஜெயசிக்குறு படை நடவடிக்கையை இரண்டாண்டுகள் வரையில் எதிர்கொண்ட புலிகள் ஒரே மூச்சில் சிறிலங்காப்படைகளை விரட்டிப்பெரும் நிலப்பரப்பை மீட்டதும் புதிய போர் வலுச்சம நிலையை உருவாக்கியதும் தெரிந்தவை.

இப்போது இதேமாதிரி வான்புலிகள் நடவடிக்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தத்தரப்பின் பிரவேசம் போர் வலுச்சமநிலையை நிர்ணயம் செய்யுமளவுக்கு அதிரடியாக அமைந்திருக்கிறது.

வாகரையையும் படுவான்கரையையும் ஆக்கிரமித்தவுடன் கிழக்கு முழவதையும் தமது கட்;டுப்பட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக படைத்தரப்பும் அரசாங்கமும் நம்பின. கிழக்கில் புலிகள் விரட்டப்பட்டு விட்டனர். அல்லது பலமிழக்கப்பட்டு விட்டனர். அதேபோல யாழ்ப்பாணத்திலும் புலிகள் இல்லை. ஆக வன்னியில் மட்டும்தான் இருக்கிறார்கள். எனவே வன்னியில் இறுதியாக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு புலிகளை ஒடுக்கி விடலாம் என்று இவர்கள் நம்பினர். இந்த நம்பிக்கையின் படியே போர்நிறுத்த உடன்படிக்கையை முற்;றாக சிறிலங்கா அரசு மீறியதும் தொடர்ச்சியாக போர் நடவடிக்கைகளில் அது ஈடுபட்டு வருவதும் பேச்சுவார்த்தையை நிராகரித்ததுமாகும்.

இப்படித்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஒவ்வொரு சிங்களத்தலைமையும் சிந்திக்கின்றது. அமைதியை விரும்புவதை விடவும் சிங்களத்தலைமைகள் போரையும் அழிவுகளையுமே விரும்புகின்றனர். சமாதானத்துக்காக உழைப்பதை விடவும் யுத்தத்;துக்காக பாடுபடுவதிலேயே அவர்கள் கூடுதலாக அக்கறை கொள்கிறார்கள்.

உள்ள வலுவையெல்லாம் கூட்டி பெரும் படையெடுப்புகளை நடத்தி பேரழிவுகளை ஏற்படுத்தி சனங்களை விரட்டி நிலப்பரப்பைக் கைப்பற்றும் சிங்களப்படைகள் தொடர்ந்து விடுகிற தவறு ஒரேமாதிரியாகத்தானிருக்கிறது. புலிகள் தமக்குச்சாதகமில்லாத போரக்களங்களிலும் சந்தர்ப்பங்களிலும் அதிகமாக பினன்வாங்குதல்களைச் செய்வார்கள்.

போருத்தியில் இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். சாதமில்லாத இடத்திலும் பொருத்த மில்லாத சந்தர்ப்பத்திலும் போரில் ஈடுபடுவது தோல்வியையும் இழப்புகளையும் தேடி வாங்குவதாகிவிடும். எனவே தலைவர் பிரபாகரன் மதிநுட்பத்துடன் இவ்வாறான நிலைமைகளில் தந்திரோபாய ரீதியாக பின்வாங்குதல் நடவடிக்கையை மேற்கொள்வார். அதாவது இந்த வலிந்த படை நடவடிக்கையை தவிர்த்து விடுவார். எதிரியின் போர்ப்பொறிக்குள் அவர் சிக்குப்பட விரும்புவதில்லை.

பதிலாக தனக்குச் சாதகமான கள யதார்த்தத்தை அவர் தேடிக்கொண்டும் அதை உருவாக்கிக்கொண்டுமிருப்பார். இந்தத்தளத்தயாரிப்பை அவர் செய்யும்போது அது புலிகளுக்கான வெற்றிகளை குவிக்கிறது.

போரிடும் ஆற்றலிலும் போர் நுட்பத்திலும் புலிகள் எப்போதும் வளர்ச்சி நிலையிலேயே இருக்கின்றனர். எதிர்பாராத திருப்பங்களையும் அதிரடியான மாற்றங்களையும் புதிய போக்குகளையும் ஏற்படுத்தும் வலுவும் ஆற்றலும் புலிகளின் சிறப்படையாளங்களாகும். இதன்மூலம் உலகத்தின் கவனத்தைத் தமது பக்கம் கவர்வதில் அவர்கள் வல்வர்களாக இருக்க்pன்றனர். இதற்கு ஏராளம் உதாரணங்களிருக்கின்றன.

எண்பத்தி மூன்றாம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த கண்ணிவெடித்தாக்குதலிலருந்து கப்ரன் மில்லரின் கரும்புலித்தாக்குதல், திலீபனின் உண்ணாவிரதம், இந்திய-புலிகள் போர், யாழ்ப்பாண இடப்பெயர்வு, முல்லைத்தீவு மீட்பு, ஜெயசிக்குறுச்சமர், குடாரப்புத்தரையிறக்கம், ஆனையிறவுத்தளத்தைக்கைப்பற்றல் என்று பலவுண்டு. எல்லாமே நெருக்கடிகாலத்தை எதிர்கொண்டு அவர்கள் நடத்திய போருபாயங்களும் நடவடிக்கைகளுமே.

வான்புலிகளின் புதிய பிரவேசத்தையும் நாம் இவ்வாறே விளங்கிக்கொள்ள வேண்டும்.

வாகரையையும் படுவான்கரையையும் கைப்பற்றியதன் மூலம் போர் வலுச்சமநிலையை மாற்றி தமக்குச்சாதகமாக ஆக்கிவிட்டதாக கருதிய சிறிலங்கா அரசையும் படையையும் இப்போது புலிகள் திணறடித்துள்ளார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று உணரவே முடியாத ஒரு நெருக்கடி நிலைக்குள் சிறிலங்கா தள்ளப்பட்டிருக்கிறது.

இனி வான்புலிகளின் இலக்குகள் பொருளாதார மையங்களாகவும் படைத்துறையின் இலக்குகளாகவும் வழங்கல் நடவடிக்கையின் வழிகளாகவுமிருக்கலாம். இதில் படைத்துறையுடன் இணைந்திருக்கும் துணை இராணுவ இலக்குகளும் அடக்கமாகும்.

இத்தகைய அபாயப்பின்னணியில் இன்றிருக்கிறது சிறிலங்கா. அதாவது கொழும்பு முற்றாக நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

ஒருபகுதி நிலப்பரப்பை இழந்த விடுதலைப்புலிகள சிறிலங்காவின் வான்வெளியை தமது கட்டுப்;பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். போர்வலுச்சமநிலையைத்தமக்குச்சாதகமாக மாற்றி விட்டதாகவும் புலிகளின் பலம் உடைக்கப்பட்டு விட்டதாகவும் சொன்ன சிறிலங்கா அரசின் கூற்றை மறுத்து புதிய போர் வலுச்சமநிலையொன்றை உருவாக்கியுள்ளனர்.

சிறிலங்கா வான்வெளி உத்தரவாதத்தை இழந்து இன்று பல முனைகளிலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அதன் பொருளாதார மண்டலம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. சிங்கள மக்களின் போர் முனைப்பு சிதைவடைந்து போயுள்ளது. உளவியல் ரீதியாக படையினரும் ஏனைய தரப்பினரும் அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத நிலையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது அரசாங்கம் தனது கட்டுப்பட்டை இழந்திருப்பதையே காட்டுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் கொழும்பு ஆட்டம் கண்டிருக்கிறது எனலாம். கொழும்பின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குள்ளான நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலை தொடருமானால் சிறிலங்கா பெரும் பாதிப்பை விரைவில் சந்திக்க வேண்டிவரும்.

எனவே, இந்த நெருக்கடியைத் தணிக்கவே இப்போது சர்வதேச சமூகம் அவசரமாக முனைகின்றது. இதற்காகவே பிரித்தானியா அவசரஅவசரமாக பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதைப்பற்றியும் போர்நிறுத்த உடன்படிக்கையைப்பற்றியும் பேசுகிறது. அமெரிக்கப்பிரதிநிதிகளின் சிறிலங்காவுக்கான பயணங்களும் அடுத்த கட்டமாக இனப்பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அவர்களின் அறிவுறுத்தல்களும்கூட இந்த வகையிலேயே அமைகின்றன.

கொழும்பைத்தாம் பாதுகாக்கத்தவறும்போது கொழும்பு தவிர்க்க முடியாமல் தனக்குரிய உதவியைப் பெறுவதற்கு சீனாவை நாடும் என்ற அச்சம் மேற்குலகத்துக்குண்டு. சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்ந்திருக்கும் உறவு இதற்கு அதிக சாத்தியங்களை வழங்கி விடும் என்றும் மேற்குலகம் கருதுகிறது. எனவே அதற்கான சந்தர்ப்பத்தையும் அவகாசத்தையும் கொடுக்காமல் மேற்குலகம் இந்தப்புதிய அணுகுமுறையைக் கையாள்கிறது.

மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலில் சீனாவுக்குச்சார்பான எந்தவொரு புள்ளியும் அதிகரிப்பதை அது விரும்பவில்லை. அதிவேகமாக வளர்ச்சி பெற்றுவரும் சீன விரிவாக்கத்துக்கு ஒரு சிறுபுள்ளியும் அதிக பலத்தைக்கொடுத்து விடும் என்று மேற்கு நம்புகிறது. எனவே அது விழிப்பாக இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே அது இந்தப்பிரச்சினையிலும் ஈடுபடுகிறது. எனவே இதன்படி அது கொழும்பைப்பாதுகாக்க வேண்டும்.

கொழும்பைப்பாது காக்க வேண்டுமானால் புலிகளையும் சற்றுத்தணிக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், புலிகள் இப்படி அதிரடியான முறையில் வான்வெளித்தாக்குதலை தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவார்கள் என்பதை மேற்குலகமும் எதிர்பார்பார்க்கவில்லை என்பதுதான்.

ஆக புலிகளின் புதிய போர் வியூகம் மேலும் வளர்ச்சி பெற்றுவிடுவதற்குமுன்பு அதைத்தணித்து விட அது முயற்சிக்கின்றது.

தமிழ்மக்கள் வாகரையிலும் படுவான்கரையிலும் கொல்லப்பட்டபோதும் அங்கிருந்து லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தபோதும் இவர்கள் அதுதொடர்பாக எந்த அபிப்பிராயங்களையும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்தனர்.

யாழப்பாணத்தில் ஆறுலட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றபோதோ, தினமும் தமிழ்ப்பிரதேசங்களில் சிறிலங்கா அரசு விமானத்தாக்குதலையும் போர் நடவடிக்கைகளையும் செய்கின்றபோது அதைப்பொருட்படுத்தாத தரப்பினர் இப்போது கொழும்பு தளம்பத்;தொடங்கியதும் அந்தரப்பட்டு புதிய சமாதான வியுகத்தை வகுப்பதன் நோக்கம் என்ன என்பது தெளிவாகவே தெரிகிறது.

ஆகவே, இப்போதைய சமாதான அறிவிப்புகளும் அடிப்படையில் நீதியானதோ உண்மையில் இனப்பிரச்சினையைத்தீர்க்க வேண்டுமென்ற நோக்குடனோ இல்லை என்பது புலனாகிறது. இது மறுபடியும் தமிழருக்கான ஒரு பொறியாகவே ஒழுங்குபடுத்தப்படுகிறது.

விடுதலைக்காகப்போராடும் தரப்பினர் இத்தகைய பொறிகளைக்கடந்தே தீரவேண்டுமென்பதுதான் வரலாற்றின் விதியாகவுள்ளது

மூலம்: ஈழமுரசு

----------

ஓவியன்
20-05-2007, 03:46 AM
தகவலுக்கு நன்றி சுட்டி!!

சுட்டிபையன்
20-05-2007, 12:00 PM
வவுனியா மன்னார் முன்னரங்க நிலைகளில் நான்கு நாட்களில் 4 அதிகாரிகள் 30 படையினர் பலி
வவுனியா மன்னார் முன்னரங்க நிலைகளில் உள்ள இராணுவத்தினர் கடந்த நான்கு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது விடுதலைப்புலிகளின் தாக்குதலில் விசேட அதிரடிப்படையின் கப்ரன் நிருஷா உட்பட நான்கு அதிகாரிகள், 30 க்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 100 க்கு அதிகமான படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் உயிலங்குளம் மற்றும் ஓமந்தை சோதனைச்சாவடிகளின் ஊடான போக்குவரத்து சிறீலங்கா இராணுவத்தால் தடைப்பட்டிருந்தது தெரிந்ததே.

மன்னார், வவுனியா பாலமோட்டை ஆகிய களமுனைகளில், கடந்த 16ஆம், 17ஆம், 18ஆம் நாட்களில், சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில் களப்பலியாகிய எட்டுப் போராளிகளின் விபரங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மன்னார் களமுனையில் நிகழ்ந்த மோதல்களில், 2ஆம் லெப்ரினன்ட் முல்லைச்செல்வன் என்ற போராளியும், வவுனியா பாலமோட்டை களமுனையில் இடம்பெற்ற மோதலில், வீரவேங்கை தூயமணி என்ற போராளியும் களப்பலியாகியுள்ளனர்.

கடந்த 17ஆம் நாளன்று வவுனியா பாலமோட்டை களமுனையில் நிகழ்ந்த மோதல்களில், லெப்ரினன்ட் கிசோக்குமார், 2ஆம் லெப்ரினன்ட் நடராஜா, 2ஆம் லெப்ரினன்ட் பசீலன், 2ஆம் லெப்ரினன்ட் கணேசலிங்கம், 2ஆம் லெப்ரினன்ட் ஜோசப் பெற்றா ஆகிய நான்கு தமிழீழ தேசிய துணைப்படை வீரர்களும் களப்பலியாகியுள்ளனர்.

அதே களமுனையில், கடந்த 16ஆம் நாளன்று இடம்பெற்ற மோதல்களில், 2ஆம் லெப்ரினன்ட் ராஜகோபால் என்ற தமிழீழ தேசிய துணைப்படை வீரர் களப்பலியாகியுள்ளார்

இதேவேளை இராணுவத்தின் ஆக்கிரமிப்பு முன்னகர்வு நடவடிக்கைகளால் 1700 முதல் 2000 வரையான குடும்பங்கள் மடுவை அண்டிய பகுதிகள், பெரியபண்டிவிரிச்சான், சின்னபண்டிவிருச்சான் உட்பட்ட பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பெரிய மடுப்பகுதியில் தற்காலிய அகதிகள் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

பதிவு

சுட்டிபையன்
21-05-2007, 09:15 AM
மீனவர்களைக் கடத்தியது சிறீலங்கா கடற் படையினரே! !

கடத்தப்பட்ட சிறுவன் வாக்குமூலம்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 கடற்தொழிலாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் காணமல் போயிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இராமேஸ்வரம் வடக்கே உள்ள பிசாசுமுனையில் மற்றும் தங்கச்சிமடத்தில் கரைதிரும்பியிருந்தனர்.

இந்த நிலையில் கரைசேர்ந்த மீனவர்கள் உடனடியாக தமிழக காவல்துறையினரால் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தமிழக முதல்வர் கலைஞர் கருனாநிதியைச் சந்தித்த பின்னர் தமிழக காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறையினரின் விசாரணையின் பின்னர் அவர்களது சொந்த இடங்களுக்குத் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விசாரணையின் பின்னர் விடுதலைப் புலிகள் தான் மீனவர்களைக் கடத்திச் சென்றதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்திருந்த நிலையில் கடத்தப்பட்டிருந்த சிறுவனான 13 அகவையுடைய அனித்தன் தங்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள் அல்ல சிறீலங்கா கடற்படையினரே கடத்திச் சென்றதாக மக்கள் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் இந்த வாக்குமூலம் பலரையும் வியப்புக்குள் ஆழ்தியதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது.

மூகமூடியணிந்த நபர்கள் தங்களை படகு மூலம் கடத்திச் சென்று சிறீலங்கா கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் தங்களை சிறீலங்கா கடற்படையினர் என கூறிக்கொண்டார்கள் அத்துடன் தங்களைக் கடத்திச் சென்ற முகமூடிதாரிகளும் சிறீலங்காப் கடற்படையினருடன் இணைந்திருந்தார்கள்.

கடத்திச் செல்லப்பட்ட நாங்கள் 13 நாட்கள் வீடு ஒன்றினுள் தங்கவிடப்பட்டதாகத் அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தங்களை சிறீலங்கா கடற்படையினரே கடலில் கொண்டு வந்து விடுவித்ததாகவும் அச்சிறுவன் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி
பதிவு

சுட்டிபையன்
23-05-2007, 03:44 AM
மாணவர் பகிஷ்கரிப்பு நேற்றும் தொடர்ந்தது
யாழ்ப்பாணம், மே 23
குடாநாட்டுப் பாடசாலைகளில் பதினொராவது நாளாக நேற்றும் மாணவர்கள் வகுப்புகளை பகிஷ்கரித்தனர்.
மூன்று மாணவர்கள் கடத்தப்பட்டமை, மாணவர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை ஆகியன தொடர்பாக மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே.
கிராமப்புறப் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு சுமாராக இருந்த போதிலும் நகரத்தையும்,நகரத்தை அண்டியும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு வீழ்ச்சி கண்டிருந்தது.
உயர்தர வகுப்பு மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய வகுப்பு மாணவர்களும் நேற்று அதிக எண்ணிக்கையில் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நேற் றுத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தனர். அதனையடுத்து விரிவுரைகள் நேற்று வழமையாக இடம்பெற்றன

உதயன்

சுட்டிபையன்
23-05-2007, 03:45 AM
தமிழர்களுக்குரிய நியாயமான உரிமைகள் கிடைக்க உதவுமாறு புதிய பிரிட்டிஷ் பிரதமரிடம் கோரிக்கை லண்டன் தமிழர் குழு கோடன் பிறவுணுடன் சந்திப்பு
லண்டனில் இருந்து குமரன்
லண்டன், மே 23
ஈழத்தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும், அவர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறவும் உதவுமாறு
பிரிட்டனின் புதிய பிரதமராக அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள, ஆளுங்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கோடன் பிறவுணிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடன் பிறவுணை அவரது (நிதி அமைச்சு) அலுவலகத்தில் லண்டனில் வாழும் தமிழ்ப் பிரமுகர்கள் குழு ஒன்று நேற் றுச் சந்தித்தது.
அப்போதே மேற்கண்ட வேண்டுகோள் அவரிடம் முன்வைக்கப்பட்டது.
ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு கிடைப்பதற்குத் தமது முழு மையான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக, இப்போதைய நிதி அமைச்சரும்,புதிய பிரதமராக ப் பதவியேற்க இருப்பவருமான கோடன் பிறவுண் உறுதியளித்தார்.
கோடன் பிறவுணைச் சந்தித்த பிரமுகர்கள் குழு இலங்கைத் தமிழ் மக்கள் படும் அவலங்களை அவருக்கு எடுத்து விளக்கியது. தமிழர்களது நியாயபூர்வமான உரிமைகளையும், அரசியல் அபிலாசைகளையும் அடைவதற்கு உதவவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
இலங்கை விவகாரத்தில் தீர்வு ஒன்றைக் காண சர்வகட்சிப் பிரதிநிதி குழு ஒன்றைப் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நியமித்துள் ளது. இக்ககுழு விரைவில் இலங்கை வரத் திட்டமிட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையிலேயே புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் கோடன் பிறவுணை இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்கள் குழு நேற்றுச் சந்தித்துப் பேசியது.
இலங்கை அரசு விடுதலைப்புலிகள் நோர்வேத் தரப்பு ஆகிய முத்தரப்புகளும் பங்குகொள்ளும் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடத்தப்படவுள்ளமையையும் தூதுக்குழு அவரின் கவனத்துக் கொண்டு வந்தது.
தாம் பதவியேற்றபின் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டுத் தற்போது எடுக்கப்படும் முயற்சிகளை தொடர உள்ளதாகவும் அவர் உறுதி கூறியதாக தமிழ்ப் பிரமுகர்கள் குழுவின் பிரதிநிதி ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் இன்று பதவி விலகுவார் என முன்னர் அறி விக்கப்பட்டிருந்தது.
எனினும் அடுத்த மாதம் 16ஆம் திகதியே அவர் பதவி விலக இருப்பதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பதவி விலகியதும் தற்போதைய நிதி அமைச்சரும் தொழிற்கட்சியின் நாடாளு மன்றக் குழுத் தலைவருமாக நியமிக்கப்பட்டுள்ளவருமான கோடன் பிறவுண் பிரதமராகப் பதவியேற்கவிருக்கின்றார்.
லண்டனில் தமிழ்மக்கள் பெரும் எண் ணிக்கையில் வாழும் பகுதியில் இருந்து இவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார் என் பது குறிப்பிடத்தக்கது. (அ1)

உதயன்

சுட்டிபையன்
23-05-2007, 03:46 AM
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து மன்னிப்புச் சபை இன்று அறிக்கை வெளியிடும்
லண்டன், மே 23
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் சம்பவங்களைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச் சபை இன்று அறிக்கை ஒன்றை வெளியிடும்.
அந்த அமைப்பு இன்று லண்டனில் நடத்தவுள்ள செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப் படும்.
இலங்கை உட்பட உலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து இந்த அறிக்கை வெளியாகவிருக்கின்றது.
குறிப்பாக இலங்கையில் மிக மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை நிறுத்த இலங்கை அர சுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச் சிபார்சு செய்யும் விதத்தில் இந்த அறிக்கை அமையும் என்று அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவர் லண்டனில் தெரிவித்தார்.


உதயன்

சுட்டிபையன்
23-05-2007, 03:54 AM
இலங்கை அரசைப் பயங்கரவாதி என்றே சர்வதேச நாடுகள் இப்போது சொல்கின்றன! நாடாளுமன்றில் ஐ.தே.கவின் கிரியெல்ல
கொழும்பு, மே 23
முன்னர் விடுதலைப் புலிகளைத்தான் சர்வதேசம் பயங்கரவாதிகள் என்று கூறியது. இப்போது இலங்கை அரசாங்கத்தையும் பயங்கரவாதி என்றே சர்வதேச நாடுகள் சொல்கின்றன.
இவ்வாறு தெரிவித்தார் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்றுச் சபையில் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரே ரணை மீது பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
லஷ்மன் கிரியெல்ல தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெறும் கடத்தல்களுக்கு அரசும் இராணுவமுமே பதில் சொல்ல வேண்டும். கடத்தப்பட்ட நான்கு மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
வெட்கக்கேடானது
சிவில் யுத்தம் ஒன்று நடைபெறும் போது எவ்விதத் தொடர்பும் இல்லாத மாணவர்கள் கடத்தப்படுவது வெட்கக் கேடானது.
முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இந்த மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, கொழும் பிலும் பொதுமக்கள் கடத்தப்படுகின்றனர். இதுவரை 140 பேருக்குமேல் கடத்தப்பட்டுள்ளனர். இதில் 99 வீதமானோர் தமிழர்கள்.
மகாநாயக்கர் கூறியது

உதயன்

சுட்டிபையன்
24-05-2007, 03:08 AM
மண்டைதீவில் கடற்புலிகள் - சிறிலங்கா கடற்படையினர் கடும் மோதல்
Thursday, 24 May 2007
யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணிக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 1 மணிமுதல் காலை 7 மணி கடந்த நிலையிலும் மோதல் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

15-க்கும் மேற்பட்ட படகுகளில் முன்னேறி வந்த கடற்புலிகளுக்கும் தமது படையினருக்கும் இடையில் மோதல் வெடித்ததாக படைத்தரப்பு மேலும் தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

புதினம்

சுட்டிபையன்
24-05-2007, 03:12 AM
அமைதி முயற்சியிலிருந்து நோர்வே விலகவில்லை: எஸ்.ஜெயானந்தமூர்த்தி
Thursday, 24 May 2007
அணுசரணையாளர் நிலையில் இருந்து எந்த ஒரு காரணத்துக்காகவும் தாம் விலகமாட்டோம் என்று இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் தன்னிடம் தெரிவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கூறினார்.

தற்போது நோர்வேயில் தங்கியிருக்கும் மட்டக்களப்பபு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியிலேயே இதனை தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயரை சந்தித்து ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜெயானந்தமூர்த்தி ஒரு மணிநேரம் உரையாடியுள்ளார்.

அந்த உரையாடலில் நோர்வே தூதுவர் வெளிப்படுத்திய கருத்துகளையும் தற்போது வடக்கு -கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள நிலைமைகள் குறித்தும் தமிழ்நாதத்துக்கு அளித்த பேட்டியில் அவர் விவரித்தார்.

அவர் தெரிவித்துள்ளதாவது:

நோர்வே

அணுசரணையாளர் நிலையில் இருந்து எந்த ஒரு காரணத்துக்காகவும் விலகமாட்டோம் என்று நோர்வே உறுதியளித்துள்ளது. இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பௌயர் கூறினார்.

சிறிலங்கா அனைத்துலக சமூகத்துக்கு ஒரு முகத்தைக் காட்டிக்கொண்டு பின்வழியாக பல வேலைகளைச் செய்வதாக தாங்கள் அறிவதாகவும் நோர்வே குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக் குறித்த நல்லெண்ணத்தையும் நோர்வே வெளிப்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் இப்போது சிறுவர்களைப் படையில் சேர்ப்பதில்லை, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை, கிழக்கு மாகாணத்தில் இராணுவ நடவடிக்கையின்போது அவர்கள் நடந்துகொண்ட விதம் எங்களுக்குத் திருப்தி அளித்துள்ளது. இந்த வகையில் புலிகளை மிகவும் முன்னேற்றத்துடன் நோக்குகின்றோம் என்று கூறினார் பௌயர்.

மீள் குடியேற்றம்

சிறிலங்கா அரசாங்கம் மீள்குடியேற்றம் என்ற பெயரில் இராணுவ மயப்படுத்தப்பட்ட இடங்களில் தமிழ் மக்களை குடியேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த ஒன்றரை லட்சம் பேரில் 3,500 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் மீள் குடியேற்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். ஏனைய பகுதிகளில் படிப்படியாக நடைபெறுகிறது.

வாகரையில் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள். தற்போது படுவான்கரையில் மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. மீள்குடியேற்றம் என்றால் கௌரவமான முறையில் மக்கள் குடியேற்றப்பட வேண்டும். அவர்கள் வாழ்வதற்கான சகல அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். வேலை வாய்ப்புக்கள் அமைத்துத் தர வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

மீள் குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாகவும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இராணுவ முகாம்களுக்கு அருகில், சில இடங்களில் இராணுவ முகாம்களில் கூட குடியேற்றப்படுகிறார்கள்.

படுவான்கரையில் தொழில்களை இழந்த நிலையில்தான் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறார்கள். அங்கு 24-க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள், 5 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டவட்டமாக ஒரு இராணுவ மயப்படுத்தலைத்தான் அரசு செய்து வருகிறது. போர் நிறுத்ததை அரசாங்கம் மீறியுள்ளது.

மக்கள் அங்கு சுதந்திரமாக வாழமுடியாது. மீள்குடியேற்றம் என்று இதைச் சொல்லமுடியாது. அங்கு வீடுகள் உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகள், 106 கோவில்கள் உடைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள உருவச்சிலைகள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இராணுவமும் காடையர்களும் சேர்ந்தே இந்தக் கொள்ளைகளைச் செய்கிறார்கள். எறிகணைத் தாக்குதல்களால் வயல்வெளிகள் முற்றும் முழுதாக சுடுகாடாக மாறியுள்ளது. இந்நிலையில் தொழில் வாய்ப்போ, வாழும் வசதியோ இல்லாமல் மக்கள் கட்டாயமாகக் குடியேற்றப்படுகிறார்கள். மக்கள் முழுமையான விருப்பத்துடன் செல்வது என்பது மிகக் குறைவு.

இது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களுடன் அரசாங்கம் எந்தவொரு கலந்தாலோசனையும் செய்யவில்லை. கூட்டங்களும் நடத்தவில்லை. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அராஜகமான முறையில் செயற்படுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மக்களை இணைக்கக்கூடாது. அவர்களைத் தனிமைப்படுத்தி தங்களுடைய அரசியல் வேலைத்திட்டக்களைச் செய்யும் நோக்கிலேயே வேலைகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் வடக்கு-கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை நேரடியாகச் சென்று பார்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுளள்து. எங்கள் பணியைச் செய்வதற்கான போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பை அரசிடம் கேட்டிருந்தோம் ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எங்களது கோரிக்கை ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. இது மோசமான நிலைமை. அரசு திட்டமிட்டுச் செய்யும் நடவடிக்கை. வடக்கிலும் கிழக்கிலும் மக்களின் பிரச்சினைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

வடக்கில் மாணவர்கள் காணாமல் போகிறார்கள். வடக்கு - கிழக்கு முழுவதுமே ஆட்கடத்தல் நடைபெறுகிறது. இந்தப் பிரச்சினைகள் குறித்து அனைத்துலக சமூகத்திடம் பலமுறை எடுத்துக்கூறியும் அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்கவில்லை. இது சிறிலங்கா அரசுக்கு உற்சாகத்தையும் ஆதரவையும் வழங்குவதாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.

இந்நிலையில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு மந்தமாக இருக்கிறது. அக்குழு இருக்கிறதா என்ற ஐயம் தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.

தாயகத்தில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள்

சிறிலங்கா இராணுவத்தினாலும் ஒட்டுக்குழுக்களாலும் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றன. இடம்பெற்று வருகின்றன. இது குறித்து பாரிய அளவில் அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தோம்.
சிறிலங்கா அரசுக்கு பாரிய அழுத்ததைக் கொடுப்பதால் மக்களின் பிரச்சினைகளை ஓரளவு குறைக்க முடியும் என நாங்கள நம்புகிறோம்.

மக்களுக்கு உதவி, நாட்டின் அபிவிருத்தி என்ற பெயரில் சிறிலங்கா அரசு பெறுகின்ற நிதியுதவி அனைத்தும் மக்களைக் கொல்வதற்காக, இராணுவ அபிவிருத்திக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது.

எந்த நாடும் உதவி செய்வதாக இருந்தால், அது நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கக்கூடியதாகச் செய்ய வேண்டும். அனைத்துலக சமூகம் மாற்றாந்தாய்ப் பார்வையாக தமிழ் மக்கள் நிலைமையைப் பார்ப்பது வேதனையாகத்தான் இருக்கிறது.

புலம்பெயர் மக்கள் உதவ வேண்டும்

எங்கள் மக்களைக் காப்பாற்ற, எங்கள் பலத்தை நிரூபிக்க, எங்கள் படையை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இதற்காக பலர் தங்கள் உழைப்பை, நேரத்தை செலவழித்து வருகிறார்கள். தொடர்ந்து செய்ய வேண்டும்.

புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். தொடர்ந்தும் எங்களது பலம் வளர வேண்டும். அதற்காவும் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் இடம்பெயர்நது வாழும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் புலம்பெயர் மக்கள் உதவ வேண்டும்.

அவரவரர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அரசுகளுக்கு இது குறித்து வலியுறுதத் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் சிறு அளவிலான சிங்கள் மக்கள், சிங்கள அமைப்புக்களின் பின்னணியுடன் தமிழ் மக்களுக்கும் தமிழர்களின் போராட்டத்துக்கும் எதிராக தீவிரமான பிரச்சார நடவடிக்கைகளைச் செய்து வருகிறார்கள்.

எனினும் தமிழ் மக்களிடம் எழுச்சியும் போராட்டமும் மிகவும் குறைந்த அளவாகத்தான் உள்ளது. எதையும் நாம் பலவந்தப்படுத்தி செய்ய முடியாது. அவரவர்கள் தங்களது மனச்சாட்சியைத் தட்டிக் கேட்க வேண்டும். மக்கள் உணரவேண்டும். அவர்கள் எழுச்சிதான் எங்களுக்கு கைகொடுக்கும் வலிமை சேர்க்கும் என்றார் அவர்.

தமிழ்ஓசை

சுட்டிபையன்
24-05-2007, 03:17 AM
வட பகுதியில் பதற்றமான சூழ்நிலை மீண்டும் போர் வெடிக்கும் அபாயம்

வடபகுதி பிரதேசங்களான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் வன்னியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னரங்க நிலைகளில் பரஸ்பரம் இருதரப்பும் மேற்கொள்ளும் படைக்குவிப்பு மற்றும் கடும் எறிகணைத் தாக்குதல்கள் என்பன மீண்டும் போர் வெடிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கண்காணிப்பு குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மேலும் கூறியதாவது, .

மன்னார், மடுப் பிரதேசத்தில் இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. இருதரப்பும் பாரிய படை நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரகேசரி நாளேடு

சுட்டிபையன்
24-05-2007, 03:18 AM
யாழ். பல்கலைக்கழக தற்போதைய நிலைமை தொடர்பாக பேரவை கவலை
Thursday, 24 May 2007
யாழ்.பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகப் பேரவையினர் எவ்வித தடங்கலும் இன்றி பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தொடந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே தமது விருப்பமெனவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் இரா.குமாரவடிவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் போது பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமுகமளிப்பது குறித்து மாணவர்களே தீர்மானிக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட பேரவை உறுப்பினர்கள் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் குறித்து மாணவர்கள் நல்ல முடிவொன்றினை விரைவில் எடுப்பார்களென தாம் நம்புவதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும்இ அதற்குரிய சாதகமான சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகுமெனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தமிழ் ஓசை

சுட்டிபையன்
24-05-2007, 04:24 AM
கொழும்பில் சிறிலங்கா இராணுவத்தினரின் பேரூந்து மீது குண்டுத்தாக்குதல்
[வியாழக்கிழமை, 24 மே 2007, 09:22 ஈழம்] [ந.ரகுராம்]
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் சிறிலங்கா இராணுவத்தினரின் பேரூந்து மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


கொழும்பு கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் சென்று கொண்டிருந்த இராணுவ பேரூந்து மீது இன்று வியாழக்கிழமை இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

இத்தாக்குதலை உந்துருளியில் குண்டுகளைப் பொருத்தி வந்த நபர் ஒருவரே நடத்தியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

-புதினம்

கொழும்பு துறைமுக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
கொழும்பு துறைமுக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது. காலை 8.50 மணியளவில் இராணுவம் பயணித்த பேரூந்து மீது உந்துருளியில் வந்த தற்கொலைக் குண்டுத்தாரி தாக்குதலை நடாத்தியுள்ளார்.


பேரூந்து முற்றாக எரிந்த நிலையில் காணப்படுகின்றது. மேலும் 5 இராணுவத்தினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதான வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- சங்கதி

சுட்டிபையன்
25-05-2007, 05:28 AM
http://www.pathivu.com/news2/admin/data/upimages/nedu1.jpg

http://www.pathivu.com/news2/admin/data/upimages/nedu14.jpg

http://www.pathivu.com/news2/admin/data/upimages/nedu2.jpg

http://www.pathivu.com/news2/admin/data/upimages/nedu3.jpg

http://www.pathivu.com/news2/admin/data/upimages/nedu4.jpg

http://www.pathivu.com/news2/admin/data/upimages/nedu5.jpg

http://www.pathivu.com/news2/admin/data/upimages/nedu6.jpg

http://www.pathivu.com/news2/admin/data/upimages/nedu7.jpg

http://www.pathivu.com/news2/admin/data/upimages/nedu8.jpg

http://www.pathivu.com/news2/admin/data/upimages/nedu9.jpg

சுட்டிபையன்
25-05-2007, 05:30 AM
மேலும் இரண்டு பீரங்கிப்படகுகள் சேதமாக்கப்பட்டன. இதனையடுத்து தளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கடற்புலிகள் அங்கிருந்த கடற்படையினரின் ராடார் - 01, 50 கலிபர் துப்பாக்கி - 03, பிகே எல்எம்ஜி துப்பாக்கிகள் - 02, ஆர்பிஜி - 01, ரி-56 2 ரக துப்பாக்கிகள் - 08, ஏகே எல்எம்ஜி - 01, 50 கலிபர் துப்பாக்கிகளுக்கான ரவைகள் உட்பட போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், இராணுவத் தளபாடங்கள் ஆகியவற்றை கைப்பற்றி வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளனர்.
http://img466.imageshack.us/img466/8104/20070524001kp1.jpg

http://img469.imageshack.us/img469/3860/20070524002do8.jpg

நெடுந்தீவு கடற்படைத் தள பிரதேசத்தின் ஒரு பகுதி
http://img355.imageshack.us/img355/8127/20070524003vz0.jpg

http://img355.imageshack.us/img355/956/20070524004vj9.jpg
-புதினம்

சுட்டிபையன்
25-05-2007, 05:32 AM
கொழும்பு - மே 24, 2007: யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு பகுதியில் உள்ள இலங்கை கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.

வான் புலிகள் பிரிவின் அதிரடித் தாக்குதலால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள இலங்கை படைகளுக்கு நேற்று நள்ளிரவு விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவிடமிருந்து பெரும் தாக்குதலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில், உள்ள கடற்படை முகாமை நோக்கி 15 கடல் புலிகள் படகுகள் விரைந்து வந்தன. அவற்றில் 3 படகுகளில் ஏராளமான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த புலிகள் அதில் இருந்தனர்.

நெடுந்தீவு முகாம் மீது புலிகள் கடும் தாக்குதலை தொடுத்தனர். அதே நேரத்தில் தரை மார்க்கமாக பீரங்கித் தாக்குதலிலும் புலிகள் குதித்தனர். இதனால் பொறியில் அகப்பட்ட எலி போல ஆனது இலங்கை கடற்படையினரின் நிலை.

விடிய விடிய இந்த சண்டை நடந்தது. காலை வரை தொடர்ந்த இந்த சண்டையின் இறுதியில், 35 கடற்படை வீரர்கள் பலியானார்கள். புலிகள் தரப்பில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் ஒரு படகும் சேதமடைந்தது.

தாக்குதலை வெற்றிகரமாக முடித்த புலிகள், கடற்படை முகாமில் இருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தங்களது பகுதிக்குச் சென்று விட்டனர்.
-தற்ஸ் தமிழ்

அமரன்
25-05-2007, 06:45 AM
சுட்டிபையனுக்கு நன்றி.

சுட்டிபையன்
28-05-2007, 06:14 AM
விசேட அதிரடிப்படையினர் தொப்பிகல நோக்கி தாக்குதல் புலிகளின் ஷெல் வீச்சில் 18 பேர் காயம்
குடும்பிமலை (தொப்பிகல) காட்டுப் பகுதியில் விடு தலைப் புலிகள் நிலைகொண்டுள்ளனர் எனக் கூறப் படும் பகுதி நோக்கி விசேட அதிரடப்படையினர் நேற் றுத் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று தெரி விக்கப்படுகிறது.
மட்டக்களப்பு நகரில் இருந்து 36 கிலோ மீற்றர் தொலை வில் உள்ளது குடும்பிமலை. நேற்றுக்காலை முதல் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தரைத் தாக்குதலுக் குப் பதிலடியாக விடுதலைப்புலிகள் கடும் ஷெல் தாக்கு தல்களை நடத்தினர் என்று கூறப்படுகிறது. இதில் விசேட அதிரடிப்படையினர் 18 பேர்வரை காயமடைந்தனர் என்று ஒரு தகவல் தெரிவித்தது. இவர்களில் 11 பேர் அம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஏனை யோர் மஹா ஓயா மருத்துவமனைக்கு கொண்டுசெல் லப்பட்டனர். என்று மட்டக்களப்பு பொலிஸாரை மேற்கோள்காட்டி "தமிழ் நெற்' இணையத்தளம் தெரி வித்தது.

சுட்டிபையன்
28-05-2007, 06:17 AM
அரசும் புலிகளும் இராணுவ வெற்றியிலேயே அதிக நம்பிக்கை அதனால் போர் புரிவதில் வெகு தீவிரம்! விரைவில் யுத்தம் வெடிக்கும் அபாயம்
அரசாங்கப் படைகளும் விடுதலைப் புலிகளும் தமக்கே வெற்றி கிட்டும் என்று அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றன. அதனால், அவை போரை நடத்துவதிலேயே வெகு தீவிரமாகக் காணப்படு கின்றன
இத்தகைய பின்னணியில் எதிர்வரும் வாரங்களில் போர்வெடித்து, வன்முறைகள் அதிகரித்து இரத்த ஆறு ஓடும் சாத்தியம் நிறையவே உண்டு.
இவ்வாறு இலங்கை நிலைமை குறித்து இராஜதந்திரிகள் கணிப்பீடு செய்திருக்கிறார்கள்.
சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று, இலங்கையின் நிலைமை குறித்த தனது ஆய்வில் இவ்வாறு இராஜதந்திர வட்டா ரங்களை மேற்கோள் காட்டித் தகவல் வெளியிட்டிருக்கின்றது.
அமைதி முயற்சிகள் முறிந்துள்ள நிலை யில் வான் வழி மற்றும் கடல் சமர்கள் பெரும் எடுப்பில் வெடிப்பதற்கான ஏது நிலைகள் அதிகரித்துள்ளன. அத்தகைய சமருக்கு அரசு, புலிகள் ஆகிய இருதரப்பினருமே மும்முரத்துடனும் தீவிரத்துடனும் தயாராகி வருகின்றனர் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வானிலும் கடலிலும் புலிகளால் எழுந் துள்ள சவாலைச் சமாளிப்பதற்காக அரசுப் படைகள் "மிக் 29' ரக சுப்பசொனிக் ஜெற் விமானங்கள், "எம். ஐ.24' ரக தாக்குதல் ஹெலிகள், கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு அதிக வீச் சும் செயற்றிறனும் கொண்ட சுடுகலன்கள் போன்றவற்றைச் சுவீகரிப்பதில் முனைப்புக் காட்டுகின்றன எனப் பாது காப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
""சமாதான முயற்சிகள் மீள ஆரம்பிக் கப்படுவதற்கான சாத்தியங்கள் பெரும் பாலும் அருகி அடியோடு இல்லாமல் போய் விட்டன. செத்துவிட்ட யுத்தநிறுத்தத்தை இனிமேலும் காப்பாற்றலாம் என்று நான் நம்பவில்லை. வருங்காலத்தில் இன்னும் கொடூர யுத்தத்தை நாம் எதிர்பார்க் கலாம்'' என்று மாற்றுக் கொள்கைக் கான நிலையத்தின் ஊடகப் பணிப்பாளர் சுனந்த தேசப்பிரிய கூறுகின்றார்.
இந்தியா இலங்கை இடையேயுள்ள குறுகிய பாக்கு நீரிணையில் புலிகளின் நகர்வுகளை அவதானிக்கும் நெடுந்தீவுக் கரையோர "ரடார்' நிலையத்தைப் பறிகொடுத்தமை அரசுப் படைகளுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு என்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.
""நெடுந்தீவு மீதான தாக்குதல் மூலம் புலிகள் தங்களின் கடல்வலு ஆதிக்கத்தை மீள ஒரு தடவை நிரூபித்திருக்கின்றார்கள். அதேசமயம் கொழும்பில் நடத்திய கிளைமோர் தாக்குதல் மூலம் தங்களின் கெரில்லாத் தாக்குதல் வலிமையும் பாதுகாப்பாகத் தங்களுக்கு உள்ளது என்பதை அவர்கள் நிரூபித்திருக்கின்றனர்.'' என்கின்றார் பாதுகாப்பு நிலைவரம் பற்றிய ஆய்வாளர் நாமல் பெரேரா.
""தீவுப்பகுதி மீது இவ்வாறு ஒழுங்குக் கிரமமாகத் தாக்குதல் தொடருமானால் யாழ்ப்பாணம் முழு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.'' என்கின்றார் ஓய்வு பெற்ற இராணுவ பிரிகேடியர் விபுல் போட்ஜு.
இராணுவம் தற்போது ஆரம்பித்துள்ள பெரும் படை நடவடிக்கைத்திட்டத்தை நிறுத்தாத வரையில், 2005 ஒக்டோபரில் குழம்பிய அமைதிப் பேச்சுகளை மீள ஆரம்பிக்க இடமேயில்லை என்று புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் கூறியிருக்கின்றமையும் கவனிக்கத்தக்கது.
இவையெல்லாம் பெரும் யுத்தம் வெடிப்பதற்கான கட்டியங்கூறலாகவே கொள்ளப்படவேண்டியவை.
இவ்வாறு அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கின்றது

உதயன்

சுட்டிபையன்
28-05-2007, 06:21 AM
நிஜப்போரும் நிழல்போரும்
ஆங்கில வார இதழில் பாதுகாப்பு நிலைவரம் பற்றிய விடயங்களை வரையும் பிரபல இராணுவ விமர்சகர் ஒருவர் இலங்கையில் இரண்டு விதமான யுத்தங்கள் கட்டவிழ்ந் திருக்கின்றன எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஒன்று அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையில் களத்தில் வெடித்துள்ள போர்.
மற்றது அரசுத் தரப்பு கட்டவிழ்த்து விட்டிருக்கும் பிர சாரப் போர்.
இராணுவ இழப்புகள் பற்றிய உண்மைகளை மறைத்து இந்த ஊடகத்துறைப் போரில் அரசுத் தரப்புச் செய்யும் பிர சாரத் தந்திரோபாயத்தை அவர் கோடிகாட்டியிருக்கின்றார்.
இதற்கு அப்பாலும் இதில் ஒரு விடயம் உள்ளது.
முதலாவது வகைப் போரில் அரசுப் படையினரும், புலி களும், அத்தோடு இடையில் சிக்கி அப்பாவிகளும் உயிரிழக் கின்றார்கள்.
மற்றைய ஊடகப் போரில் சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்றால், தமிழ் ஊடகவியலாளர்களோ அந்த அச்சுறுத்தலையும் தாண்டி உயிர்ப்பலி கொடுக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
அதுவும் இந்த ஊடகப் போரில் களப்பலி கொடுத்து, விழுப்புண் கண்ட தமிழ் ஊடகங்களின் வரிசையில் உங்கள் "உதயன்', "சுடர் ஒளி'க்கு முதலாவது இடம். இந்த ஒன்றரை வருட காலத்துக்குள் ஐந்துக்கும் அதிகமான பணியாளர்களின் உயிர்களை இந்நிறுவனங்கள் காவு கொடுத்து விட்டன. பல ஊழியர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். சேமிப்புக் களஞ் சியங்கள், தொழில்நுட்பத் தொடர்பாடல் சாதனங்கள், வாக னங்கள் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, நாசமாக்கப்பட்டுள் ளன. கிழக்கில் பல பிரதேசங்களில் "சுடர் ஒளி' விநியோகம் கருணா குழுவினால் பலவந்தமாக அச்சுறுத்தி தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. அது குறித்து பாராமுகமாக இருப் பதன் மூலம் ஊடகத்துக்கு எதிரான இந்த ஆயுத அராஜ கத்துக்கு துணையும் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்கு கின்றது அரசு.
"உதயன்' நிறுவன பத்திரிகைத்தாள் களஞ்சியம், இனந் தெரியாதோரின் பெயரால் தீயிட்டு எரிக்கப்பட்டமை ஒரு புறம் என்றால், மறுபுறத்தில் உதயனுக்குத் தேவையான பத் திரிகைத்தாளை எடுத்துச் செல்ல அரச கெடுபிடி, தடை, கட் டுப்பாடு, மட்டுப்படுத்தல்கள், இடைஞ்சல்கள், முட்டுக்கட் டைகள் எல்லாம்.
இவ்வாறு களத்தில் ஆயுதப் போருக்குப் புறம்பாக ஊட கப் போர் ஒன்றும் அரூபக் கரங்களால் கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கின்றது. அதில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஆயு தங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு பக்கத்தில் சிறுபான்மையினரான தமிழர்களின் நியா யமான உரிமைகளைப் பிடுங்கி, அவர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைகளாக்குவதற்காக, அவர்களின் சுதந்திரத் தைப் பிடுங்கும் பேரினவாத அதிகாரப் போக்கு நிலை நிறுத்தப்படுகின்றது என்றால்
மறுபக்கத்தில், அது பற்றிய உண்மைகள் உலகுக்குத் தெரிந்துவிடாமல் தடுக்கும் நோக்குடன் ஊடகங்களின் சுதந் திரத்தைப் பறிக்கும் அடிப்படை உரிமை மீறல் போக்கும் முழு அளவில் மேற்கொள்ளப்படுகின்றது.
புலிகளுக்கு எதிராக அரசும் படைத்துறையும் முன்னெ டுக்கும் பிரசார யுத்தத் தந்திரோபாயத்துக்கு ஒத்துழைக்காத அல்லது மற்றப்பக்க உண்மைகளை அம்பலப்படுத்து வதன் மூலம் அந்தத் தந்திரோபாய நகர்வுகளுக்கு முட்டுக் கட்டை போடுகின்ற ஊடகவியலாளர்கள் அல்லது போடு கின்ற ஊடகங்கள் என்று கருதப்படுகின்ற தரப்புகளே இந்தப் பிரசாரப் போரில் பெரும் பாதிப்புக்கு இலக்காகின்றன.
சமூகப் பிரக்ஞையுடன், சமூக விடுதலைக்காக உழைக் கும் ஊடகவியலாளன் அதன் மூலம் தனது இருப்பிற்கும் மற்றவர்களது வாழ்விற்கும் அர்த்தத்தைக் கொடுக்கிறான். அதுவும் அவலத்தில் சிக்குண்டு தவிக்கும் ஓரினத்துக்காகக் குரல் எழுப்பும் ஊடகவியலாளன் அந்த இனத்தின் விடு தலைக்கும் சுபீட்ச வாழ்வுக்கும் வழிகாட்டும் ஒளியாகின் றான்.
ஓர் ஊடகவியலாளன் தான் வாழும் சமூகத்தையும், அந்த சமூகத்தின் வாழ்நிலைப் பிரச்சினைகளையும், தனது மக் களின் அவலத்தையும், அபத்தத்தையும், நெருக்கடிகளை யும், நோவுகளையும், துன்பங்களையும், துயரங்களையும் உதாசீனம் செய்து விலக முடியாது. வரலாற்று செல்நெறி யிலிருந்து அவன் விலகி ஓட முடியாது.
அபத்தமான கட்டுகளிலிருந்து, அவலமான அடிமைத்தளையிலிருந்து தனது மக்களுக்கு நியாயத்தையும், நீதியை யும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கௌரவத்தையும் சுய அடையாளத்தையும் மீட்டுக் கொடுக்கும் பணியில் ஊடகவியலாளனின் பொறுப்பும் கடமையும் ஒரு போரா ளிக்கு போர் வீரனுக்கு ஒப்பானது; நிகரானது; ஒரு வகை யில் அதை விடவும் மேலானது.
இந்த உன்னத நோக்கத்தை உயரிய விழுமியத்தை அடைவதற்காக சில சமயங்களில் ஒரு போராளி போல தன்னையே ஆகுதியாக்க வேண்டியவனாக அவன் ஆகி விடுகின்றான். அதைத்தான் இலங்கைத் தமிழ் ஊடகவியலா ளர்கள் இன்று எதிர்கொண்டு, சந்தித்து வருகின்றார்கள்.
அதிகாரச் சங்கிலிகளால் அடிப்படை உரிமைகளைப் பிணைத்து, நிஜவுலக நிர்ப்பந்தங்களால் மனிதனைக் கட் டுப்படுத்தி, அவனது சிந்தனையை மனவுலகச் சுவர் களுக்குள் அடைத்து, அவனின் சுதந்திரத்தைப் பறித்து, அவனை அடிமைச்சிறைக்குள் தள்ளும் எதேச்சாதிகாரக் கெடுபிடித்தனத்துக்கு எதிராக சுதந்திரக்குரல் எழுப்பி, சமூக மாற்றத்திற்கும், மனித விழிப்புணர்வுக்கும், சுதந்திர எழுச் சிக்கும் தூண்டுகோலாக அமையும் ஊடகவியலாளன் தனது வரலாற்றுக் கடமையை நிறைவு செய்தவனாகின்றான்.
அந்தப் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் சுமையோடு முன்நகருகின்றது தமிழ் ஊடகவியல்துறை.
இந்த வரலாற்றுப் பெரும் பொறுப்பை நிறைவு செய்வ தற்காக அது சுமக்கவேண்டிய பாடுகள் இன்னும் எவ்வ ளவோ உள்ளன.
அவை சகிக்க முடியாமல் தகிக்கக் கூடியவை. ஆனாலும் சுட்டெரிக்கும் அந்தத் தீக்கடலைத் தனது சமூகத்துக்காக நீந் திக் கடக்கவேண்டியவனாகின்றான் ஊடகவியலாளன்.

உதயன்

சுட்டிபையன்
31-05-2007, 08:51 AM
இனநெருக்கடிக்கு துரித தீர்வைக் கண்டு இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுவதை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகமும், உள்நாட்டிலுள்ள நியாய சிந்தை படைத்ததோரும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் நிலையில் தென்னிலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் மதிப்புக்குரியவர்களான பௌத்த மதகுருமாரின் ஜாதிக ஹெல உறுமய இந்த நாட்டில் இனப்பிரச்சினையொன்று இல்லை. தமிழ் மக்களுக்கு துயரங்கள், சிக்கல்கள் இருப்பதாக தமக்குத் தென்படவில்லையென்ற `வாய்ப்பாட்டை' மீண்டும் பாடியுள்ளது.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் முளைவிட்ட இனநெருக்கடி பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம்பெற்ற பின் அரச நிர்வாக இயந்திரம் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பிரதிநிதிகளிடம் கைமாறிய பின் படிப்படியாக உக்கிரமடைந்தது. சிறுபான்மை மக்கள் ஆட்சிப் பங்கில் மட்டுமல்லாமல், கல்வி, தொழில் வாய்ப்பு என்று சகல வழிகளிலுமே ஓரம்கட்டப்பட்டனர். இதனாலேயே தமிழ் தலைவர்கள் அகிம்சை வழிப் போராட்டத்தை முன்னெடுத்தார்களென்பதும் பின்னர் அது ஆயுதப் போராட்டமாக மாறி நாடு பலவழிகளிலும் பின்னடைவு கண்டுவருவதும் தொடரும் அவலநிகழ்வாகிவிட்டது.

தென்னிலங்கையில் ஆட்சிக்கதிரையை கைப்பற்றுவதற்காக இனப்பிரச்சினையில் குளிர்காய்ந்து அரசியல் வியாபாரத்தை விஸ்தரித்து இலாபம் ஈட்டும் போக்கே தொடர்கதையாகிவிட்டது.

இலங்கையின் நீண்டு செல்லும் இனநெருக்கடியும், மோதல்களும் அண்டைநாடான இந்தியாவுக்கும், உலக நாடுகள் பலவற்றுக்கும் தொடர்ந்தும் தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருப்பதால் இலங்கையிலுள்ள சகல இனமக்களுக்கும் ஏற்புடையதான அரசியல் தீர்வொன்றை காணுமாறும் இராணுவ வழியிலான தீர்வுகள் நாட்டுக்கு ஒருபோதும் நிரந்தர சமாதானத்தைத் தேடித்தரப்போவதில்லை எனவும் அந்த நாடுகளும், அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கொடுத்து வருகின்றன.

இனநெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வு சகல கட்சிகள், குழுக்களின் கருத்தொருமைப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்*ஷ அதற்காக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றையும் அமைத்து அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்று வரும் நடவடிக்கைகளும் தற்போது தொடர்கின்றன. இந்நிலையில் பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இலங்கையில் இனநெருக்கடியொன்று இல்லை. தமிழ் மக்கள் இலங்கையில் 9 சதவீதத்தினரே என்றும் ( தவறான புள்ளிவிபரம்) பிஜியில் உள்ள இந்தியர்கள், பூட்டானில் உள்ள நேபாளத்தவர்கள், மசிடோனியாவிலுள்ள அல்பேனியர்கள் போன்ற சிறுபான்மையினர் மட்டுமே தவிர ஆட்சி நிர்வாகத்தில் ஏனைய வரப்பிரசாதங்களில் பங்காளிகள் அல்லவென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு யோசனை சமர்ப்பித்துள்ளது.

தற்போதைய ஒற்றையாட்சி அமைப்பு முறைமையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து அரச மதமாக பிரகடனப்படுத்த வேண்டுமெனவும் பிரதேச சபை மட்டத்திலேயே அதிகாரங்களைப் பரவலாக்கி திருத்தங்களுடன் தற்போதைய நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை தொடரவேண்டுமெனவும் சிபார்சுகளை முன்வைத்திருக்கிறது.

அத்துடன், தமிழ் மக்கள் இந்நாட்டின் இனத்தவர்களே அல்லர் என்றும் சிங்களர்கள் மட்டுமே இங்குள்ள ஒரே இனம் என்றும் ஹெல உறுமய திட்டவட்டமாக கூறுகிறது. ஆனால், வரலாற்றுக்காலம் தொட்டே தமிழ் மக்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதற்கு இந்த ஹெல உறுமயவின் பௌத்த மதகுருமார், போற்றித்துதித்து முன்னுதாரணம் காட்டும் `மகாவம்சத்தை' அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

ருகுணரட்ட மன்னன் துட்டகைமுனு அநுராதபுரத்தில் தமிழ் மன்னனான எல்லாளனை தோற்கடித்து முழு நாட்டையும் பரிபாலித்ததையும் வங்கதேசத்து இளவரசன் விஜயனின் வருகையுடன் சிங்கள மக்களின் வரலாறு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதென்பதையும் உறுதியான நம்பிக்கையுடன் வெளிப்படுத்திவரும் ஹெல உறுமயவினர் போன்றவர்கள் தமிழ் மக்களும் இலங்கையின் பூர்வீகக் குடி மக்கள் என்பதையோ, வடக்கு,கிழக்கு பகுதிகளில் நெடுங்காலமாக அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையோ ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும் அத்துடன் பெரும்பான்மை மக்களுக்கு உள்ள சகல உரிமைகளும் இந்தநாட்டில் வசிக்கும் சகல இனமக்களுக்கும் உண்டு என்பதையும் ஏன் அங்கீகரிக்க தயங்குகிறார்கள் என்பதும் விசனத்திற்குரியதாகும்.

அத்துடன் ஹெல உறுமயவினரிடமிருந்து இன்னுமொரு விதண்டாவாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை. அவர்கள் வேண்டுமென்றால் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்கு சுயநிர்ணய உரிமை கோரியும், இதர உரிமைகளைக் கேட்டும் போராட்டம் நடத்தலாமே என்பது அவர்கள் முன்வைத்துள்ள இன்னுமொரு நகைப்புக்கிடமான வாதமாகும். அண்டை நாடான பாரதத்திலிருந்தே இலங்கைக்கு சிங்களவர்கள், தமிழர்கள் குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பது சான்றுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறு. காலத்திற்குக் காலம் இடம்பெற்ற இந்தியப் படையெடுப்புகளினால் குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து இடம்பெற்ற படையெடுப்புகளினால் தமிழர்கள் வரலாற்றுக் காலம் தொட்டே இலங்கையில் குடியேறியுள்ளனர். காகங்கள் பறந்து வந்துவிட்டுத் திரும்பும் தூரத்திலுள்ள தமிழகத்திலிருந்து இலங்கைக்கு குறிப்பாக வடபகுதிக்கு தமிழ் மக்களின் வருகை வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே இருந்திருக்க முடியும் என்பது உண்மையா என்பதுபற்றி மனதை குடையவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

புத்தாயிரமாம் ஆண்டில் உலகம் சுருங்கி ஒரு கிராமமாகி விட்ட நிலையில், பொருளாதாரம், விஞ்ஞானத்துறைகளில் பல்வேறு சவால்களை உலகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், இலங்கையிலுள்ள பெரும்பான்மைச் சமூகத்தின் போற்றுதலுக்குரியவர்களாக உள்ள ஹெல உறுமயவினர் கற்காலச் சிந்தனைகளுடன் விளங்குவது கவலையையும், விரக்தியையும் தரும் விடயமாகும். மேலும், ஐ.நா.வால் சிறுபான்மையினருக்கு விதந்துரைக்கப்பட்ட உரிமைகளிலும் பார்க்க இலங்கையில் தமிழர்களுக்கு அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன என்று அக்கட்சியின் யோசனையில் குறிப்பிடப்பட்டிருப்பது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாக அடைக்கலம் கோரி பல்வேறு துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தொடர்பாக இக்கட்சியினரின் கண்ணோட்டம் எந்தமட்டத்தில் இருக்கின்றது என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.

கடந்த ஒன்றரை வருடத்திலேயே சுமார் 2 இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாகி அடிப்படை வசதிகளின்றி கூடாரங்களில் படும் துன்பங்கள், அவலங்கள் ஆட்சியில் தற்போது பங்காளிகளாக விளங்கும் ஹெல உறுமயவினருக்கு தென்படவில்லையா? அல்லது ஆட்சிக் கதிரையை பிடிப்பதற்காக, அதனை தக்கவைப்பதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை அடியோடு நிராகரித்துவிட்டு, `அரசியல் பிழைப்பு' தொழிலுக்கு இக்கட்சியினர் முதலீடு செய்கிறார்களா என்பதே எம்முன்னாலுள்ள கேள்வியாகும்.

அகிம்சா மூர்த்தியான புத்தர் பெருமானின் போதனைகளை பின்பற்றி நடப்பவர்களெனக் கூறிக்கொள்ளும் இந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள், ஏனைய சமூகம் ஒன்றின் அடிப்படைப் பிரச்சினைகளை புரிந்து கொண்டு நியாயமான முறையில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு ஆக்கபூர்வமான வழியில் தமது பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதே நியாய சிந்தை படைத்தோரின் எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாகும்.
தினக்குரல்

அக்னி
31-05-2007, 09:09 PM
கொழும்பு மாநகரில் தங்குவிடுதிகளில் தங்கியுள்ள் அனைத்து தமிழர்களையும் நாளை வெள்ளிக்கிழமை காலைக்கிடையில் வெளியேறுமாறு கொழும்பு காவல்துறை விடுதி உரிமையாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, மலையகத் தழிழர் பலர் இன்று வியாழக்கிழமை (31.05.2007) மாலை பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால், பலத்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்படைந்த நிலையிலுள்ளனர்.

பல்வேறு விதமான தேவைகளின் பொருட்டும் தங்கிநின்ற மக்களின் சிரமத்தை இலங்கை அரசாங்கம் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை.

நன்றி:- தமிழ்வின்
மேலதிக தகவல்களுக்கு... (http://www.tamilwin.com/article.php?artiId=3057&token=dispNews)

சுட்டிபையன்
01-06-2007, 12:45 PM
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், கொழும்பு நகரிலுள்ள தங்கு விடுதிகளில் (லொட்ஜ்) தங்கியிருக்கும் வடக்கு -கிழக்கு மற்றும் மலையகப் பகுதித் தமிழர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு விடுதி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.


நாளை வெள்ளிக்கிழமைக்குள் காலைக்குள் இவர்களை வெளியேற்றுமாறு கடுமையாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்த உத்தரவுக்குப் பணியவில்லை என்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இன்று மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரையும் அவசர கூட்டம் ஒன்றுக்கு அழைத்த புறக்கோட்டைப் பகுதி காவல்துறையினரே இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்தனர்.

புறக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புறக்கோட்டைப் பகுதியிலுள்ள சுமார் 60 தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கூட்டத்தில் கடுமையாகத் தனது உத்தரவைப் பிறப்பித்த காவல்துறை அதிகாரி, நாளை காலைக்குள் விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் வெளியேற்றப்படா விட்டால், விடுதிகளிலுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுவார்கள் எனக்கடுமையாக தொனியில் எச்சரித்ததாக விடுதி உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதாவது 12 மணி நேரத்துக்குள் இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். புறக்கோட்டைப் பகுதி உரிமையாளர்களே இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், கொழும்பிலுள்ள அனைத்து தங்கு விடுதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என காவல்துறையினர் தெரிவி்த்தாகவும் அறியவருகின்றது.

புறக்கோட்டைப் பகுதியிலேயே அதிகமான விடுதிகள் இருக்கின்ற போதிலும், கொழும்பு நகரில் சுமார் 150 வரையிலான தங்குவிடுதிகள் இருப்பதாகவும், இவற்றில் பத்தாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

வெளிநாடு செல்வதற்காகவும், மருத்துவ, கல்வி மற்றும் நேர்முகப் பரீட்சை போன்ற அலுவலக அல்லது சொந்த வேலையாக வருபவர்களுமே இவ்வாறு விடுதிகளில் தங்கியிருக்கின்றார்கள்.

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக வருபவர்களில் பலர் விடுதிகளில் மாதக்கணக்கில் இவ்வாறான விடுதிகளில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைவிட, சிலர் இவ்வாறான விடுதிகளில் தங்கியிருந்தே கொழும்பில் தொழில் புரிகின்றார்கள். உடனடியாக இரவோடிரவாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து இவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தருப்பதாகத் தெரிகின்றது.

பலர் என்ன செய்வதெனத் தெரியாது திண்டாடிக்கொண்டிருப்பதையு஼br />?் காணமுடிகின்றது. முக்கிய வேலைகள் நிமித்தமும், மருத்துவத் தேவைகளுக்காகவும் வந்தவர்கள் என்ன செய்வதெனத் தெரியாது அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இது மேலிடத்து உத்தரவு எனவும், இதில் எந்தவிதமான மாற்றமும் இருக்கப்போவதில்லை எனவும் காவல்துறையினர் கடுமையாகத் தெரிவித்து விட்டார்களாம்.

இதேவேளையில், கொழும்பிலுள்ள கடைகளில் தொழில்புரியும் தமிழர்களையும் வெளியேற்றுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களே பெருமளவுக்கு இவ்வாறு கடைகளில் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களையும் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதினம்

சுட்டிபையன்
01-06-2007, 12:46 PM
தமிழ் மக்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது கொடூரமான வன்முறை: த.தே.கூ
தமிழ் மக்களை கொழும்பில் உள்ள விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது அடிப்படை உரிமைகள் மீதான கொடூரமான வன்முறை எனவும், இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா தெரிவித்துள்ளதாவது:

இந்த நடைமுறை வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தில் இருந்து தமது தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு வரும் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பது தெளிவானது.

இதனால் வடக்கில் இருந்து வந்த தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏ-9 பாதை முகமாலையில் மூடப்பட்டிருப்பதனால் அவர்கள் உடனடியாக தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாது.

வானூர்தி மூலம் அல்லது கப்பலின் மூலம் திரும்புவது என்றாலும் பயணச்சீட்டுக்களை பெறுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். எனவே அரசு தனது முடிவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.


-புதினம்

சுட்டிபையன்
02-06-2007, 12:18 PM
சிங்களவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வேடர்கள் ஆணையிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை


தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்று தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற யோசனையை முன்வைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய, எதிர்காலத்தில் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்கள், சிங்களவர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஆணையை பிறப்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென்பதை புரிந்துகொள்ள வேண்டுமென ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் ஹெல உறுமய தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்று தீர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது. அமைச்சராகவிருக்கும் சம்பிக ரணவக்கவிடம் நான் கேட்கிறேன். அமைச்சர் பேரியல் அஷ்ரப்பிற்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் மலேஷியாவிற்கு அல்லது வேறெந்தவொரு நாட்டுக்குச் சென்றா தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலைமை தொடருமானால் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்களும் சிங்களவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டுமென்று சொல்வார்கள். அவ்வாறு நிகழுமானால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பாதுகாப்பு காரணங்களை காட்டி லொட்ஜுகளில் தங்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றச் சொல்லும் அரசாங்கம் எதிர்காலத்தில் வெள்ளவத்தையில் வாழும் தமிழ் மக்களையும் வெளியேறச் சொல்வார்கள். பல்வேறுபட்ட தேவைகளுக்காக கொழும்புக்கு வந்து தங்கியிருப்போருக்கு விசேட அடையாள அட்டைகளையோ அல்லது வேறு உறுதிப்படுத்தலையோ வழங்கி கொழும்பில் அவர்கள் நம்பிக்கையுடன் தங்கியிருக்கும் நிலைமையை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து, வெளியேற்றுவதென்பது பிழையான தீர்மானமாகும். பாதுகாப்பு செயலாளர் பயணம் செய்யும் போது பாதைகள் பல மணிநேரம் மூடப்படுகின்றன.

இதன் காரணமாக அண்மையில் அமைச்சரான கரு ஜயசூரிய தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் வீதியில் நிற்க வேண்டிய நிலை உருவானது. ஆரம்பத்தில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டனர். இன்று முஸ்லிம்கள் கடத்தப்படுகின்றனர். எதிர்காலத்தில் சிங்கள வர்த்தகர்களும் கடத்தப்படும் நிலைமை உருவாகும். கொழும்பு செட்டியார்தெருவிலுள்ள நகைக்கடை உரிமையாளர்கள் அச்சத்தில் தமிழகத்துக்கு சென்றுவிட்டனர். அங்கிருந்தே வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். முஸ்லிம் வர்த்தகர்களும் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். அனைவரும் பயத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், பொலிஸ் மா அதிபர் கூறுகிறார். இவ்வாறான குற்றச்செயல்களை தடுப்பதற்கு தம்மிடம் மனிதவளம், ஆயுதபலம் உள்ளதென்று. அவ்வாறானால் கப்பம் கோரல், கடத்தல், கொலைகளை தடுக்க ஏன் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. நாட்டில் காட்டுத் தர்பாரை முன்னெடுக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், தினம், தினம் தமிழர்கள், முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்படுகிறது. கொலை செய்யப்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் காட்டு தர்பார் இல்லையா இதனை ஏன் தடுக்க முடியாதென்றும் தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பினார்.

நிதர்சனம்

சுட்டிபையன்
02-06-2007, 12:18 PM
யுத்த நிறுத்த உடன்படிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை கண்காணிப்புக் குழு

அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலி களுக்கும் இடையே கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக எந்த விதமான மாற்றமும் தம்மைப் பொறுத்தமட்டில் இல்லை என்று இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் எதனையா வது கொண்டுவருவதா அல்லது ஒப்பந் தத்தை ரத்துச் செய்வதா என்பது குறித்து அரசு தமக்கு எந்தவித அறிவுறுத்தல்களை யும் இதுவரை விடுக்கவில்லை என்றும்
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்க ளுக்கு அமைய போர் நிறுத்த ஒப்பந்தம் தம்மால் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது என்றும் அது தெரிவித் துள்ளது. (சி)
நன்றி - உதயன்

சுட்டிபையன்
02-06-2007, 12:19 PM
காணாமற்போன உறவுகளை மீட்டுத்தருமாறு ஜனாதிபதியிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை! நேற்று அலரிமாளிகையில் உறவினர்கள் மன்றாட்டம்
காணாமற் போனவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று அழுது புலம்பிக் கெஞ்சிக் கேட்டுள்ளனர்.
அவர்களை மீட்டெடுப்பதற்கான நட வடிக்கையை தாம் தீவிரப்ப டுத்துவார் என்றும் அடுத்தவாரமளவில் 5 பேர் அடங்கிய விசேட குழு வொன்றை அமைத்து அக்குழுவின் ஊடாக இந்த நடவடிக்கை முன் னெடுக்கப்படும் என்றும்
கொழும்பில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இக்குழு வின் ஊடாகத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அந்த உறவினர் களிடம் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.
விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்களும் கொழும்பு வாழ் தமிழர்களும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி னால் உடனடியாக இக்குழுவுக்கு முறைப் பாடு செய்யலாம் என்றும் ஜனாதிபதி கூறி யிருக்கின்றார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகி யோரின் ஏற்பாட்டில் காணாமல் போனவர் களின் உறவினர்கள் நேற்றுமாலை ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளி கையில் சந்தித்து காணாமல்போன தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டனர்.
கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்
இவர்கள் அனைவரும் ஜனாதிபதி முன் னிலையில் கண்ணீர் பெருக அழுது, தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு மன்றாடி யிருக்கின்றனர்.
ஒவ்வொருவரினதும் பிரச்சினைகளை ஜனாதிபதி அமைதியாகச் செவிமடுத்த தோடு காணாமல் போன உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்கான துரித நடவடிக்கை எடுப்பார் என்று அவர்களிடம் உறுதியளித் திருக்கின்றார்.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் "உதயனு'க்குக் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:
""காணாமல் போனவர்களை மீட்டெடுக் கும் எமது நடவடிக்கைகளில் ஒன்றாக காணா மல் போனவர்களின் உறவினர்களை ஜனா திபதியிடம் அழைத்துச் சென்று அவர்களை ஜனாதிபதியிடம் நேரடியாக முறையிட வைத் தோம்.
""தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் அழுது கேட்டனர். அவர்களின் முறைப்பாட்டை வேண்டுகோளை ஜனாதிபதி அமைதியாகச் செவிமடுத்தார். காணாமற்போனவர்களை மீட்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்வார் என ஜனாதிபதி அவர்களிடம் வாக்குறுதியளித்தார்.
""காணாமற்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், தற்போது கொழும்பில் தமி ழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக் குத் தீர்வு காண்பதற்குமென அடுத்த வாரமள வில் 5 பேர் கொண்ட குழுவொன்றை அமைக் கவிருக்கிறார் என ஜனாதிபதி அச்சந்தர்ப் பத்தில் கூறினார்.
பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழர் கள் இந்தக் குழுவிடம் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் அந்தக் குழு சம்பந்தப் பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
விடுதிகளில் தங்கியிருப்போர் விவகாரம்
அதேவேளை, விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் வெளியேற்றப்பட வேண் டும் என்று பொலிஸாரால் உத்தரவு பிறப் பிக்கப்பட்டமை தொடர்பாகவும் நாம் அச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் மீண் டும் முறைப்பாடு செய்தோம்.
அவ்வாறு தமிழர்களை வெளியேற் றும் நிலைப்பாட்டில் அரசு இல்லை என்றும் அவ்வாறு வெளியேற்றப்பட வேண்டும் என்று யாரும் கூறவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
கொழும்பில் தமது அலுவல்களைக் கவனிப்பதற்காக வடக்கு கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தமது வேலை முடிந்த வுடன் உடனடியாகத் தமது சொந்த இடங் களுக்குத் திரும்பிப்போவது நல்லது என ஜனாதிபதி கூறினார்.
இச்சந்தர்ப்பத்தில் காணாமல் போன வர்களின் உறவினர்கள் தமது முறைப்பாடு களை எழுத்து மூலம் அங்கு சமூகம் கொடுத் திருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரி டம் ஒப்படைத்தனர். இவ்வாறு முறைப் பாடு செய்யுமாறு ஜனாதிபதியே அவர்க ளைப் பணித்தார் எனக் கூறினார்.
இச்சந்திப்பில் 50க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள், அமைச்சர் சந்திரசேகரன், பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ் வரன், அமைச்சர்கள் ராஜித சேனாரத்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ஏ.எச்.எம்.பௌஸி, மஹிந்த சமரசிங்க, பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். (சி)
உதயன்

சுட்டிபையன்
02-06-2007, 12:21 PM
தென்பகுதியில் தமிழர்கள் வாழ்வு குறித்து சீனப் பிரதிநிதிகள் குழு பிரதமரிடம் கேள்வி இடையூறுகள் இல்லை என்கின்றார் அவர்

தென்பகுதியில் தமிழர்கள் நிம்மதி யாக வாழ்வதற்குரிய சூழ்நிலை இல்லை என்பது பொய்யானகருத்து. நீங்கள் நம்ப வேண்டாம்
இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க சீனப்பிரதிநிதிகளுக்குத் தெரிவித்துள் ளார்.
பிரதமரை நேற்று அவரது அலுவலகத்தில் சீனப்பிர திநிதிகள் குழு ஒன்று சந்தித்த வேளை சீனப்பிரதிநிதிகள் பிரதமரிடம் கொழும்புக்கு வரும் தமிழர்கள் எதிர்நோக் கும் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்துள்ளதாவது:
எத்தகைய பாரபட்சமும் இன்றி இந்த நாட்டுமக்கள் சுதந்திரமாக வாழும் உரி மையைப் பாதுகாப்பதற்கு அரசு தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது.
எத்தகைய இடைஞ்சல்களும் இல்லா மல் தமது அன்றாட வாழ்க்கையை கொழும் பில் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர் களும், முஸ்லிம்களும் மேற்கொள்கின்றார்கள்.
ஆனால், தென்பகுதியில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழ்நிலை இல்லை என்ற பொய்யான ஒரு கருத்தை சில குழுக்கள் உருவாக்க முயற்சிக்கின்றன.
இத்தகை பொய்வதந்திகள் அனைத்து இலங்கையர்களுக்கும் அபகீர்த்தியை ஏற் படுத்துகின்றன.
எனவே, இத்தகைய முயற்சிகளை மேற் கொள்ளாமல் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட் டுக்கொள்கிறேன் என்றார்.
இந்தச் சந்திப்பின் போது பொருளா தார மேம்பாடு மற்றும் அரசியல் ஒத்து ழைப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
(சி)
நன்றி - உதயன்

சுட்டிபையன்
02-06-2007, 12:31 PM
லொஜ்களில் தங்கிய தமிழர்களை வெளியேற்ற உத்தரவிடப்படவில்லை - காவல்துறை மா அதிபர்

சனி 02-06-2007 05:07 மணி தமிழீழம் [மயூரன்]

கொழும்பு லொஜ்களில் எதுவித காரணங்களும் இன்றி நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் தமிழர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்படுவர் என சிறீலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதுவித காரணங்களுமின்றி லொஜ்களில் தங்கியிருக்கும் தமிழர்கள் வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதே தவிர அவர்களை வெளியேற்ற புறக்கோட்டை காவல்துறையினர் உத்தரவைப் பிறப்பிக்கப்படவில்லை எனவும் காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளையும் தமிழ் மக்களையும் வேறுபடுத்திப் இனங்காண முடியவில்லை. இதனால் பிற பகுதிகளிலிருந்து கொழும்பு வந்த தமிழர்கள் தமது அலுவல்கள் முடிந்ததும் அவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க வசதிகளைச் செய்து கொடுகின்றோம்.

நாம் மனித உரிமைகள் தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றோம். இன்று பல மக்கள் கொல்லப்படுகின்றனர். இதனால் மனித உரிமை மீறல்கள் மீறப்படுகின்றன. மக்களின் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கும் போது அதனைப் பறிப்பவர்களின் மனித உரிமை மீறல்களை மீறலாம் எனவும் காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

பதிவு

சுட்டிபையன்
02-06-2007, 12:39 PM
கொழும்பு விடுதிகளில் தங்கும் தமிழர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காவல்துறை மா அதிபர்.

கொழும்பு உள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை அதனை விட்டு வெளியேறி அவர்களது சொந்த இடங்களுக்கு செல்லுமாறு சிறிலங்கா அரசு நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

நேற்று அதனை உறுதி செய்த சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்டர் பெரெரா, கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ள அப்பாவி பொதுமக்கள் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொழும்பு விடுதிகளில் உள்ள தமிழ் மக்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்ப வேண்டும். விடுதிகளில் இருந்து வெளியேறுவோருக்கு பயண வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்போம்.

சிங்கள மக்களின் பாதுகாப்பை முன்னிட்டே நாம் இதனை மேற்கொண்டுள்ளோம். விடுதிகளில் உள்ள தமிழ் மக்கள் தேசியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள்.

எனினும் ஊடகங்கள் கூறுவது போல் 56 விடுதிகளில் உள்ள எல்லா மக்களையும் வெளியேறும் படி நாம் கேட்கவில்லை. சந்தேகத்திற்கு இடமானவர்களையும், தமது அடையாளத்தை நிரூபிக்கத் தவறியவர்களையுமே வெளியேற்றும் படி விடுதி உரிமையாளர்களை கேட்டுள்ளோம் என்றார் அவர்.

-Puthinam-

சுட்டிபையன்
03-06-2007, 10:36 AM
புலிகளின் எறிகணைத் தாக்குதலில் ஆயுதக்கிடக்கு வெடித்தது : 5 படையினர் பலி! 15 பேர் படுகாயம்
வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவத்தினரின் ஆட்டிலறி எறிகணைத்தளம் முற்றாகச் சேதடைந்ததோடு ஆயுதங்கிடக்கும் வெடித்துச் சிதறியுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி மற்றும் மோட்டார் அணியினர் புதிதாக உருவாக்கப்பட்ட 57 பிரிகேட் படையணியின் ஆட்டிலறி தளம் மீது நடத்திய எறிகணைத் தாக்குதலிலேயே ஆட்டிலறித் தளம் முற்றாகச் சேதடைந்ததோடு ஆயுதக் களஞ்சியக் கிடக்கும் வெடித்துச் சிறதியுள்ளது.

எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்பில் 5 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 15 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது கொல்லப்பட்ட படையினரது விபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை. பம்பைமடு வவுனியாவிற்கு வடமேற்கே 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு

சுட்டிபையன்
03-06-2007, 10:37 AM
விடுதலைப்புலிகளின் பீரங்கித்தாக்குதலில் 57 ஆவது படையணியின் ஆயுதங்கிடங்கு வெடித்து சிதறியது
Sunday, 03 June 2007
வவுனியா பகுதியில் உள்ள பம்பைமடுவில் அமைந்திருந்த 57 ஆவது படையணியின் தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தளத்தின் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன் 15 இற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் பீரங்கி நிலைகளை குறிவைத்து விடுதலைப்புலிகள் ஓமந்தை பகுதியில் இருந்து பீரங்கித் தாக்குதலை நடாத்தியதாகவும் அதன் போதே ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

ஒமந்தையின் எல்லைப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து படை நிலைகள் மீது விடுதலைப்புலிகள் கடுமையான பீரங்கித் தாக்குதலை நடத்தியதாகவும் அது நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பகுதியில் உள்ள பம்பைமடுவில் அமைந்திருந்த 57 ஆவது படையணியின் தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தளத்தின் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன் 15 இற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் பீரங்கி நிலைகளை குறிவைத்து விடுதலைப்புலிகள் ஓமந்தை பகுதியில் இருந்து பீரங்கித் தாக்குதலை நடாத்தியதாகவும் அதன் போதே ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

ஒமந்தையின் எல்லைப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து படை நிலைகள் மீது விடுதலைப்புலிகள் கடுமையான பீரங்கித் தாக்குதலை நடத்தியதாகவும் அது நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழோசை

சுட்டிபையன்
03-06-2007, 10:37 AM
வவுனியாவில் ஆயுதக்கிடங்கு அழிப்பு: பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

விடுதலைப்புலிகளால் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் சிறீலங்கா இராணுவத்தால் அண்மையில் ஆக்கிரமித்த வவுனியா - மன்னார் முன்னரங்க எல்லைப்பகுதி கிராமங்களான முள்ளிக்குளம், விளாத்திக்குளம் ஆகியபகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கமாண்டோ தாக்குதலில் பம்பைமடுவில் ஆயுதக்கிடங்கு தகர்க்கப்பட்டும், பவள் துருப்பு காவி வாகனம் உட்பட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இராசையா இளந்திரந்திரையன் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 35 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை முன்னகர்ந்துள்ள முள்ளிக்குளம், விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து பின்னகர்த்துவதற்காக பெருமளவு ஆட்டிலறி எறிகளை மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.

இதேவேளை விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுததளபாடங்களின் விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

-Pathivu-

சுட்டிபையன்
03-06-2007, 10:37 AM
வவுனியாவில் ஆக்கிரமிப்பு படைகள் மீது அதிவிசேட பயிற்சி பெற்ற புலிகளின் கொமாண்டோ படைப்பிரிவு பாரிய தாக்குதல். ஆட்லறித்தளம் முற்றாக அழிப்பு! டாங்கிகள், ஏவுகணைகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன!!
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 3 யூன் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ
நேற்றிரவு வவுனியா-மன்னார் எல்லைபுறத்திலுள்ள முள்ளிக்குளம், விளாத்திக்குளம் கிராமங்களை அண்மையில் கைப்பற்றிய சிறிலங்காப்படையினர், அங்கு பாரிய இராணுவ முகாங்களை அமைத்திருந்தனர். நேற்றிரவு ஏககாலத்தில் மம்பைமடுவிலுள்ள சிறிலங்காப்படையினரின் பாரிய ஆட்லறித்தளம் மீது தாக்குதலைத் தொடுத்த விடுதலைப் புலிகள் அதனை முற்றாக அழித்தெறிந்த சமயத்தில் விளாத்திக்குளம்-முள்ளீக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாங்கள் மீது கொமாண்டோ அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடுத்தனர்.

தாக்குதல் தொடுக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே முகாங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த விடுதலைப்புலிகளின் கொமாண்டோ அணியினர், அங்கிருந்த டாங்கிகள், ஏவுகணைகள் உட்பட்ட அனைத்து ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றியதாக தெரிய வருகிறது, இவ்வெற்றிகரமான தாக்குதலை சர்வதேச ஊடகங்களுக்கு விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் பல சிறிலங்காப்படையினர் கொல்லப்பட்டதாகவும், தற்போதும் அப்பகுதிகளில் பாரிய சண்டை தொடர்வதாகவும், விடுதலைப்புலிகளின் கொமாண்டோப்படையினர் பல பகுதிகளைக் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிய வருகிறது. மேலதிக தகவல்கள் தொடரும் ...

நிதர்சனம்

சுட்டிபையன்
03-06-2007, 10:38 AM
இலங்கையின் உண்மையான வரலாறு புரியாது பிதற்றிக்கொண்டிருக்கிறது ஜாதிக ஹெலஉறுமய'



இலங்கையின் உண்மையான வரலாறு தெரியாது பிதற்றுகின்றார் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க என்று மேலக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
கண்டியிலிருந்து ஆட்சி புரிந்த தமிழகம் இருந்து வந்த தமிழர்கள் யார் என்பது சம்பிக்க ரணவக்க அறியாதது ஏன்? ஹெல உறுமய இந்நாடு பௌத்தர்களுக்குரிய நாடாக மட்டும் இருக்கக்கூடியதாக இருக்கவேண்டும் எனப்பகற்கனவு காண்கின்றது. வடக்கு கிழக்கு இந்நாட்டு தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியென்பது வரலாற்று சான்று கொண்டது போல மேலகம் வாழ் தமிழர்களுக்கும் இங்கு வரலாறு உள்ளது.

பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிந்தோ அறியாமலோ இருக்கக்கூடிய சுதந்திரத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட தலைநகரில் பெயர் போன தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரம் ஒரு வரலாற்று பொக்கிஷம். கொழும்புத் தமிழர் பிரதிநிதித்துவம் இலங்கைத் தேசிய காங்கிரஸினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1913 முஸ்லிம் சிங்கள கலவரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சிங்களவர்களை தலைநகரில் வாழ்ந்த சேர் பொன்னம்பலம் இராமநாதன் தான் கப்பலில் பிரிட்டிஷ் சென்று விடுவிக்கச் செய்தார். இவரைத் தேரில் வைத்திழுத்து சிங்களவர் நன்றி கூறிய வரலாறு தெரியாது பேசுகின்றார் பாட்டலி சம்பிக்க ரணவக்க என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தினக்குரல்

சுட்டிபையன்
03-06-2007, 10:39 AM
பட்டினிச்சாவின் விளிம்பில் யாழ். குடாநாட்டின் 5 லட்சம் மக்கள்

Sunday, 03 June 2007
யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு குறைந்த அளவு கப்பல்களே உள்ளதனால் அங்கு வாழும் 5 லட்சம் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் இருப்பதாக மனிதாபிமான அமைப்புக்கள் கடந்த வாரம் தெரிவித்துள்ளன.

இந்த அச்சறுத்தலினால் யாழ். குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 75 வீதங்களாக அதிகரித்துள்ளன. இது மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். குடாநாட்டில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களில் 20 வீதமான உணவுப் பொருட்களையே கொண்டு செல்லக்கூடியதாக உள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் ஜெப்ஃ ரப்ற் டிக் தெரிவித்துள்ளதாவது:

யாழ். குடாவில் உள்ள மக்களின் தேவைக்கு மாதத்திற்கு 1,000 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் தேவை. அரசினது கப்பல்களில் போதிய இடவசதிகள் இல்லாததால் உலக உணவுத் திட்டம் ஒரு மாதத்திற்கு 200 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களையே தற்போது தருவித்து வருகின்றது.




எனினும் கடந்த 3 மாதங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு விநியோகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 11 ஆம் நாளில் இருந்து இன்று வரை 200 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களையே உலக உணவுத் திட்ட அமைப்பு குடாநாட்டுக்கு தருவித்துள்ளது.

யாழ். குடாநாட்டில் தற்போது 250 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களே கையிருப்பில் உள்ளன. நிவாரண உணவுப் பொருட்களின் விநியோகம் கடந்த ஏப்பிரல் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்பட்ட பின்னர் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அது இடைநிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ். குடாநாட்டில் மட்டுமல்லாது மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பில் உள்ள 138,597 இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உணவு உதவிகள் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு தேவைப்படும் உணவின் அளவில் 11 வீதமான உணவுப் பொருட்களே கடந்த மாதம் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.


தமிழோசை

சுட்டிபையன்
03-06-2007, 10:40 AM
அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த படுதோல்வியே இந்தியாவின் அழுத்தம்



இலங்கை இனநெருக்கடிக்கு இந்தியாவை பகைத்துக் கொண்டு தீர்வு காண முடியாதென தெரிவித்திருக்கும் ஐ.தே.க.; சீனா, பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவியை இலங்கை பெறக்கூடாதென இந்தியா அழுத்தம் கொடுத்திருப்பது அரசின் வெளிவிவகார கொள்கைக்கு கிடைத்த படுதோல்வியெனவும் வர்ணித்துள்ளது.

இது பற்றி ஐ.தே.க. சார்பில் அதன் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்:

இந்தியா எமது அயல் நாடாக மாத்திரமன்றி பிராந்தியத்தில் வல்லரசாகவும் விளங்குகின்றது. அவர்களின் பங்களிப்பின்றி இனநெருக்கடிக்குத் தீர்வு கண்டுவிட முடியாதென்பதில் ஐ.தே.க. உறுதியாகவுள்ளது.

இதன் காரணமாகவே ஐ.தே.க. ஆட்சியிலிருந்த சமயம் ஏற்படுத்தப்பட்ட இணைத் தலைமை நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான் , நோர்வே ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இந்தியாவின் ஆசீர்வாதமின்றியும் அவர்களை புறக்கணித்து விட்டும் தீர்வினை எட்டுவது இலகுவானதல்ல. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கூற்று இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடா என்பதும் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை இந்தியா, இலங்கைக்கு இவ்வாறு கண்டிப்பாக கூறியுள்ளமை இலங்கை அரசின் வெளிவிவகார கொள்கைகளில் உள்ள பலவீனமும் காரணமாகும்.

எமது ஆட்சிக் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட சிறந்த வெளியுறவுக் கொள்கை தற்போதைய அரசாங்கத்தினால் நாசம் செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள அரசாங்கத்தின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் மேலும் சர்வதேச ஆதரவை இழக்கும் துர்ப்பாக்கிய நிலையே இலங்கைக்கு உருவாகும் என்றார்.


தினக்குரல்

சுட்டிபையன்
03-06-2007, 10:40 AM
தெற்கில் இனம்தெரியாத நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு

Sunday, 03 June 2007
சனிக்கிழமை சிறீலங்கா காவல்துறையினரால் நான்கு இனம்தெரியாத உடலங்கள் சிறீலங்கா தெற்குபகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இரு உடலங்கள் சப்பிரகமுவ மாகாணம் வெலிஓயா பகுதியிலும் மற்றொரு உடலம் வெலிகண்டி மாத்தளை பிரிவில் மத்திய மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும௼br />? மற்றய உடலம் மதவாச்சி வடமத்திய மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெலிகண்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உடலம் தலையிலும், உடலிலும் கூரான ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் மற்றய மூன்று உடலங்களும் துப்பாக்கி சுட்டு காயங்களும் காணப்பட்டதாக தெரியவருகிறது.

சிறீலங்கா காவல்துறையினரால் இவ்உடலங்கள் இனம்காண்பதற்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழோசை

சுட்டிபையன்
03-06-2007, 10:41 AM
மட்டக்களப்பிலுள்ள அகதிமுகாம்களில் தொற்றுக்காய்ச்சல், இருவர் உயிரிழப்பு

[03 - June - 2007] [Font Size - A - A - A]

மட்டக்களப்புமாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களிலுள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களிடையே வேகமாகப் பரவி வரும் தொற்றுக்காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கன்னன்குடா காயான் மடுவிலிருந்து இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பிலுள்ள தற்காலிக முகாமில் வசித்து வந்த எஸ்.இராசமாணிக்கம் (வயது 33) என்பவரே வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மூன்று தினங்களுக்கு முன்னர் திராய்மடு அகதிமுகாமில் வசித்துவந்த முனைக்காட்டைச் சேர்ந்த ஒரு குடும்பஸ்தரும் உயிரிழந்துள்ளார்.

இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு வயிற்றுளைவு, வாந்திபேதி என்பனவும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிக கூடாரங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வரும் மக்கள் மத்தியில் அதிவேகமாகப் பரவிவரும் தொற்றுக்காய்ச்சலினால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொற்றுக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரதிணைக்களம் உரிய நடவடிக்கையெடுக்க முன்வருவதுடன் நடமாடும் வைத்தியசேவைகளையும் உடன் நடத்துவதற்கு அதிகாரிகள் முன்வரவேண்டுமென்று இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


thinakkural

சுட்டிபையன்
03-06-2007, 10:42 AM
வட,கிழக்கிலிருந்து தென்பகுதிக்கு வாகனங்கள் வருவதற்கு கட்டுப்பாடு




* கிழக்கிலிருந்து வருவோர் புகைப்படம் எடுக்கப்படுவர்
கே.பி.மோகன்

வடக்கு, கிழக்கிலிருந்து தென் பகுதிக்கு வாகனங்கள் வருவது நேற்று சனிக்கிழமை முதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் எதுவித காரணமுமின்றித் தங்கியிருக்கும் தமிழர்கள் உடனடியாக அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டுமென நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸார் அறிவித்த நிலையில் வடக்கு, கிழக்கிலிருந்து இனிமேல் தென் பகுதிக்கு வாகனங்கள் வருவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிப்போரை புகைப் படம் எடுத்து அவர்களின் தனிப்பட்ட விபரங்களை பதியவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே இப் புதிய நடைமுறை உடனடியாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதற்கு இராணுவத்தின் பூரண ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிக்கவரெட்டி கொட்டவெஹெர பலுகஸ்சந்தி வீதிச் சோதனை நிலையத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை, அதிசக்தி வாய்ந்த வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லொறியொன்று கண்டு பிடிக்கப்பட்டதையடுத்தே, வடக்கு - கிழக்கிலிருந்து தென்பகுதிக்கு வாகனங்கள் வருவதைக் கட்டுப்படுத்தும் நடைமுறை உடனடியாக அறிமுகப் படுத்தப்பட்டதாக கிழக்குமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த விஜேசூரிய தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளுக்காகவும் அத்தியாவசிய தேவைகள் நிமித்தமும் தெற்கே வரும் வாகனங்களை தவிர்ந்த வேறு எந்த வாகனமும் இப்புதிய பாதுகாப்பு நடைமுறையின் கீழ் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியே செல்ல முடியாது. இந்த நடைமுறை கனரக வாகனங்களுக்கே அதிகம் பொருந்தும், லொறிகள், ட்ரக் வண்டிகள், நீண்டவான்கள் இதில் அடங்கும்.

கிழக்கு மாகாணம் திருகோணமலை பிரிமா மா ஆலையிலிருந்து மா எடுத்துச் செல்லும் லொறிகளும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் லொறிகளுக்கும் இந்த பாதுகாப்பு நடைமுறை பொருந்தாது.

இதேவேளை வெளி இடங்களிலிருந்து கிழக்கு மாகாணத்தை நோக்கிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்கவும் தீவிரசோதனைகளுக்குட்படுத்தவ௼br />?ம் திட்டமிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பொது மக்களை விசேட பாதுகாப்பு நடைமுறைக் குட்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு உட்பட தென்பகுதியில் ஏனைய இடங்களை நோக்கி பயணிக்கும் பொது மக்களின் சந்தேகத்திற்குரிய அனைவரையும் கிழக்கு மாகாண எல்லை பாதுகாப்பு நிலையங்களில் வைத்து புகைப்படமெடுத்து அவர்களின் பெயர் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் அனைத்தையும் பதியவும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். பொலிஸாரின் இந்த புதிய பாதுகாப்பு நடைமுறைகள், தென் பகுதியில் மேற்கொள்ளத்திட்டமிடப்பட்டி஼br />?ுப்பதாக கூறப்படும் நாசகார வேலைகளை முறியடிக்கும் வகையில் தற்காலிகமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அந்தப் பொலிஸ் அதிகாரி கூறினார்.

கொழும்பு தலைநகரிலுள்ள லொட்ஜ்களில் புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாகவும் அவ்வப்போது அவர்கள் கொழும்பில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இந்த பாதுகாப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாகவும௼br />? அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.


thinakkural

சுட்டிபையன்
03-06-2007, 11:23 AM
Tigers destroy SLA artillery launchpad in Vavuniyaa, 20 SLA troopers killed, 40 wounded

[TamilNet, Sunday, 03 June 2007, 07:10 GMT]
Liberation Tigers launched a commando raid Saturday night into Vavuniyaa Mannaar border villages where the SLA had recently advanced its Forward Defence Line, LTTE Military Spokesman Irasiah Ilanthirayan said. The Tigers have destroyed a SLA artillery launchpad, seized military hardware including Buffel Armoured Personnel Carriers and established their FDL positions in Mu'l'likku'lam and Vi'laththikku'lam, Mr. Ilanthiryan said. Meanwhile, informed military sources in Vavuniyaa said 20 SLA troopers were killed, 40 wounded, an ammunition dump was destroyed in Pampaimadu, and that the Tigers have seized a big haul of weapons in their raid Saturday night. Fighting is still continuing.
The Tiger spokesman said the mission of their raid was succesful in restoring their FDL positions.

Medical sources said more than 40 wounded soldiers were admitted at Anuradhapura hospital from Vavuniyaa.

Meanwhile, Sri Lankan military sources in Colombo have claimed they have inflicted heavy losses to the Tigers and said 35 SLA troopers were wounded in the attack.

According to Tiger officials, a fierce fighting was still continuing in the area where the SLA has been pushed back.

The SLA has launched an artillery barrage using Multi Barrel Rocket Launchers. Sri Lanka Air Force (SLAF) bombers were also engaged in bombardment.

The Tigers are yet to release details of the weapons and the military hardware seized from the SLA.

The artillery launchpad and ammunition dump at Pampaimadu were recently strengthened with the deployment of additional troops in the Forward Defence Line.

This is the first time, the Tigers have breached the Sri Lankan FDL in Vavuniyaa after the re-emergence of violence following the Norwegian brokered Ceasefire between the GoSL and the LTTE.

The SLA has been engaged in a protracted campaign of offensive operations into LTTE territory in Vavuniyaa Mannaar border recently.

masan
03-06-2007, 11:38 AM
மானத்தமிழ்மாந்தர் மறவர் வரலாற்றில் முதலாவது வான்படையின் ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டதை இத்தால் சகலருக்கும் அறியத்தருகிண்றேன்

சுட்டிபையன்
16-06-2007, 05:10 AM
லொட்ஜ்களிலிருந்து வெளியேற்றப்படோருக்கு அசெளகரியம் ஏற்பட்டிருப்பின் வருந்துகிறோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு லொட்ஜ்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக குழப்பகரமான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவிக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலளார்களின் 93ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஜெனிவாவில் இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்:

பொருளாதார நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் நலன்புரி ஆகியவற்றின் பொது கொள்கையொன்றை ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். 14 வயதிற்கு கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கு கட்டாயக் கல்வி, அத்தோடு அரசாங்க பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கைத்தொழில் தொடர்பான கல்வியை இலவசமாக கற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

நாட்டில் சகல மக்களுக்கும் இலவசமாக வைத்திய உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், ஏழ்மையான மக்களுக்கு நிவாரண அடிப்படையில் நுகர்வுப் பொருட்கள் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் புடைவை கைத்தொழிலை மாற்றியுள்ளோம். மனித அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்பட்டதினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வெளிப்பாட்டில் இலங்கைக்கு 93ஆவது இடம் கிடைத்துள்ளது. கிராம மட்டத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக கடந்த 10 வருடங்களாக தூரநோக்கோடு செயற்பட்டு வருகின்றோம். எதிர்காலத்தில் அந்த நோக்கோடு கொண்டுள்ள எமது கொள்கையை முன்னெடுத்துச் செல்வோம். பிரச்சினைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மனிதர்களுக்கிடையில் சில குறைப்பாடுகள் காணப்படும். அந்த குறைப்பாடுகளை கொள்கை அடிப்படையில் மக்கள் முன்கொண்டு சென்று தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற பயங்கரவாத செயற்பாடுகள் எங்கள் சமூக அபிவிருத்தியையும் சீர்குலைத்துக்கொண்டு இருக்கின்றது. நாங்கள் பல அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம் கொடுத்து பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

யதார்த்த உலகத்தில் பயங்கரவாதம் இல்லாத இடமில்லை. அரசாங்கம் என்ற ரீதியில் பயங்கரவாதத்திற்கு தலைகுனிய நாம் எப்போதும் தயார் இல்லை. நாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டில் நீங்கள் இருந்தால் உங்களுடைய அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு முன் கீழ் பணிவதற்கு விரும்பாது.

-Tamilwin-

சுட்டிபையன்
16-06-2007, 05:12 AM
புதிய உயர் பாதுகாப்பு வலயங்களாக சம்பூர், மூதூர் கிழக்கு.

சிறீலங்கா படைகளால் அண்மையில் ஆக்கிரமிக்கப்பட்ட சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கு பிராந்தியங்கள் மக்கள் அற்ற உயர்பாதுகாப்பு வலயங்களாக சனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆறுகிராம சேவயாளர் பிரிவுகளை உள்வாங்கி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உயர் பாதுகாப்பு வலயத்தை எஞ்சியுள்ள மக்கள் வெளியேற்றப்படுவர் என்று சனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கின்றது.

மக்களை வெளியேற்றி தமிழரின் பூர்வீக கிராமங்களை ஆக்கிரமிக்கும் இந்நடவடிக்கைக்கு கிழக்கு பிராந்திய பாதுப்பு படைகளின் தளபதி பாராக்கிரம பன்னிப்பிட்டியவை மகிந்த பொறுப்பாக்கியுள்ளார்.

-Pathivu-

சுட்டிபையன்
16-06-2007, 05:12 AM
தமிழ் மக்களை வெளியேற்ற அரசு மீண்டும் முயற்சித்தால் வீதியில் இறங்குவோம்
வீரகேசரி நாளேடு

கொழும்பில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கு மீண்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் ஐக்கிய தேசியக்கட்சி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும். அவ்வாறான முயற்சியை தோற்கடிக்க ஐ.தே.க. தன்னாலான அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ளும். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி போராடவும் எமது கட்சி தயாராக இருக்கின்றது. அரசியலமைப்பை மீறுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

அரசியலமைப்பின் பிரகாரமே இந்த நாடு நிருவகிக்கப்படவேண்டும். அதனை மீறுவதற்கு அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்திற்கு எந்தவிமான அதிகாரமும் கிடையாது. அந்த வகையில் இந்த நாட்டின் மக்கள் எப்பகுதியிலும் வாழும் உரிமையை அரசியலமைப்பு உறுதிப்படுத்துகின்றது. இதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பை மீறியே அரசாங்கம் அண்மையில் தமிழ் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றும் மிலேச்சத்தனமான செயற்பாட்டை மேற்கொண்டது.

தற்போதைய நிலைமையில் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசாங்க அமைச்சர்களின் கூற்றுக்களைப் பார்க்கும் போது தமிழர்கள் மீண்டும் கொழும்பில் இருந்து வெளியேற்றப்படுவார்களா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் அண்மைய கூற்றுக்கள் முன்னுக்குப்பின் முரண்பட்டவையாக உள்ளன். ஆனால் எந்த அடிப்படையிலும் தமிழ்மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம்.

ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் வடக்கில் இருந்து வெளியேற்றினார்கள் என்ற காரணத்திற்காக கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற முயற்சிப்பது நியாயமற்றது. விடுதலைப்புலிகளைப் போன்று அரசாங்கத்தால் செயற்படமுடியாது. காரணம் அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அமைப்பாகும்.

இன மற்றும் மத அடிப்படையில் எவரையும் எந்தப்பகுதியில் இருந்தும் வெளியேற்ற முடியாது. யுத்தம் ஒன்று நாட்டில் நிலவுகின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் தமிழ் மக்களை வெளியேற்றுவதன் மூலம் யுத்தத்திற்கோ இனப்பிரச்சினைக்கோ தீர்வு காண முடியாது.

சுட்டிபையன்
16-06-2007, 05:13 AM
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு நேரடி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவுள்ளோம்: மேலக மக்கள் முன்னணி.

கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படும் தமிழ் மக்கள் சார்பில் நேரடி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மேலக மக்கள் முன்னணி தயாராகவுள்ளது. மனித உரிமை சட்ட வல்லுநர்களின் உதவியுடன் நாம் வெளியேற்றப்படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கத் தயாராகவுள்ளோம். இவ்வாறு மேலக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பிலிருந்து வவுனியாவிற்கும் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் தமிழ் மக்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இன்னொரு பிரிவினர் மலையக பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கும் அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரத்தை மீறிய செயற்பாட்டிற்கும் எதிராக இதுவரையில் பொதுநலன் கருதிய சட்ட நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களின் சார்பில் நேரடி சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மீண்டும் கொழும்பிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு இத்தகைய பொதுநலன் கருதிய நடவடிக்கை முழுமையான உத்தரவாதத்தை தரமுடியாது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களின் சார்பில் நேரடி சட்டநடவடிக்கை எடுப்பதற்கு மனித உரிமை சட்ட வல்லுநர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

எனவே, இத்தகைய பலவந்த வெளியேற்ற நடவடிக்கையினால் தமது உரிமையும், சுதந்திரமும் பாதிக்கப்பட்டதாகக் கருதும் ஒவ்வொருவரும் இது தொடர்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இவர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குவதற்கு மேலக மக்கள் முன்னணி தயாராக இருக்கின்றது.

ஏற்கனவே, இப்பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியே வீதிகளிலும் அதேவேளையில் இராஜதந்திரீதியாகவும் நடவடிக்கைகளை மனோ கணேசன் முன்னின்று மேற்கொண்டிருந்தார். இவ்வரிசையில் தற்போது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகியுள்ளது.

-Sankathi-

சுட்டிபையன்
16-06-2007, 05:15 AM
மனித உரிமை மீறல்களுக்கு அரசே பொறுப்பு - நான்கு மதத் தலைவர்களும் கூட்டாக வலியுறுத்தல்.

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, நான்கு மதத் தலைவர்களும் இன்று கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் வலுவடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில், மனித உரிமை மீறல்களும் அதிகரித்துச் செல்வதாக, மதத் தலைவர்கள் விடுத்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத் தலைவர் பெல்லன்வில விமலரத்ன, கிறிஸ்தவ மதத் தலைவர் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ், மற்றும் இந்து, முஸ்லீம் மதத் தலைவர்கள் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகர்கள் மாநாட்டில் தமது கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

மனித உரிமை மீறல்களை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் சிறீலங்கா அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இந்த அறிக்கை, மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தால், உலகில் மிக மோசமான நாடாக சிறீலங்கா மாற்றம் பெறும் எனவும் எச்சரித்துள்ளது.

கொழும்பிலிருந்து தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கு அரசு மன்னிப்புக் கோரியதை வரவேற்றுள்ள மதத் தலைவர்கள், இருப்பினும் இந்தப் பிரச்சினை இதுவரை சுமுகமாகத் தீர்க்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனப் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு உகந்தது அல்ல எனவும், அப்பாவிப் பொதுமக்களின் இடப்பெயர்வுகள், கடத்தல்கள், கொலைகள் என்பன தமக்கு ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், நான்கு மதத் தலைவர்களும் விடுத்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-Pathivu-

சுட்டிபையன்
16-06-2007, 05:15 AM
சட்டமா அதிபர் அலுவலகத்தின் தலையீடு: விசாரணைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலை.

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் விசாரணை செய்துவரும் நிலையில், அதில் சட்டமா அதிபர் அலுவலகத்தின் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றன.

சிறீலங்கா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக, இந்திய முன்னாள் தலைமை நீதியாளர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அதிபர் ஆணைக்குழு தனது விசாரணைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது.

சட்டமா அதிபர் அலுவலகத்தின் தலையீடு காரணமாக மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகள் தோல்வியில் முடிவடைய சந்தர்ப்பம் இருப்பதாக, சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ ஜெனீவாவில் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதிகளைச் சந்தித்துவரும் நிலையில், இந்த ஆணைக்குழுவின் கருத்து அவரது சந்திப்புக்களுக்கு மேலும் சிக்கலையும், அழுத்தத்தினையும் தோற்றுவித்துள்ளது.

அனைத்துலக வல்லுனர்களை உள்ளடக்கிய இந்த ஆணைக்குழுவிற்கு சாட்சியம் அளிப்பவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் எனவும், தவறினால் சாட்சிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும் எனவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தக் குழுவின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர்.

மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என, அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட பல அமைப்புகளும், அரசுகளும் சிறீலங்கா அதிபரிடம் வலியுறுத்தி வருகின்ற போதிலும், அவற்றை நிராகரித்துவரும் அதிபர் ராஜபக்ஸ, எதிர்ப்புகளைத் தவிர்ப்பதற்காக இந்த அதிபர் ஆணைக்குழுவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-Pathivu-

சுட்டிபையன்
16-06-2007, 05:55 AM
ஓகஸ்ட் பருவமழை தொடங்கு முன்னர் குடாநாட்டில் பெரும் சண்டை மூளலாம் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளரிடம் யாழ். தளபதி

ஓகஸ்ட் பருவ மழைக்காலத்துக்கு முன் னர் யாழ்ப்பாணத்தில் பெரும் சண்டை மூளலாம்.
இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு விஜ யம் செய்த "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியா ளரிடம் தெரிவித்திருக்கிறார் யாழ். படை களின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி.
யாழ். குடாநாட்டின் களநிலைமையை நேரில் பார்வையிட்டு நீண்ட செய்திக் கட் டுரை ஒன்றை வரைந்துள்ளார் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளர் சோமினி செங்குப்தா.
யாழ்ப்பாண நிலைவரம் பற்றி அதில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் இரவுகள் நிசப்தத்தை இழந்துவிட்டன; கரும் நீரே ரிக்கூடாக ஆட்லெறித் தாக்குதல் சத்தங்கள் ஒலித்த வண்ணமுள்ளன. இந்த குடாநாட் டின் தரைப் பாதை கடந்த ஓகஸ்ட் முதல் மூடப்பட்டுவிட்டது. இப்பகுதி பெரும் பாலும் செயலிழந்துவிட்டது.
எனினும் உணவுப் பண்டங்களும், எரி பொருள்களும் ஒருவாறு வந்தடைகின் றன. அதேவேளை, அவற்றை களஞ்சியப் படுத்தி வைக்க, கடைக்காரர்கள் தயங்கு கிறார்கள். எந்தநேரத்திலும் கடைகளைப் பூட்டி விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்படலா மென்ற அச்சம் அவர்கள் மத்தியில் நிலவு கிறது.
இரவு மணி 7 சூரியன் ஏற்கனவே அஸ்த மித்துவிட்டான். யாழ்ப்பாண வீதிகளில் கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம். நகர மக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட் டார்கள். எட்டு மணிக்கு ஊரடங்குச் சட் டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர், இத்தகைய ஒருநிலைப்பாடு.
ஒழுங்கைகளின் முனைகளில் இரா ணுவ வீரர்களின் பிரசன்னம்.
""எந்நேரத்திலும் எதுவும் சம்பவிக்க லாம்'', ""மக்கள் எதற்கும் அஞ்சியவர்களாக இருக்கிறார்கள்'' என இரவீந்திரன் இராம நாதன் என்பவர் அச்சம் தெரிவித்தார். இவர் ஒரு தையல்காரர்.

அரச கப்பல்களை எதிர்பார்த்து
15,000 மக்கள்

ஏறத்தாழ 15,000 மக்கள் அரச கப்பல் களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந் தார்கள். தலைநகரான கொழும்பிலுள்ள தம் உறவினர்களிடம் சென்றுவிட வேண்டு மென்ற துடிப்பு. அங்கேயாவது நிம்மதிப் பெருமூச்சு விடலாமென்ற நம்பிக்கை.
இதுதான் இன்றைய யாழ்ப்பாணம். இலங்கையின் இன ரீதியான சிவில் யுத் தம் தோற்றுவித்துள்ள நிலைப்பாடு. புதிய புயலைத் தடுப்பதற்கான நடவடிக்கை.
மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, இப் பகுதி இராணுவத் தளபதியாக இருக்கி றார். ஓகஸ்ட் பருவமழைக் காலத்துக்கு முன் னர், யாழ்ப்பாணத்தில் பெரும் சண்டை மூண்டு விடலாமென தாம் எதிர்பார்ப் பதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய யுத்தச் சுவடு, இலங்கை யில் ஏனைய இடங்களில் பதியவில்லை. ஏனெனில் யாழ்ப்பாணத்துக்கு ஏற்பட்டுள்ள பெருந்துன்பம், ஏனைய எந்த ஓர் இடத் திற்கும் நேரவில்லை. இது தாயகத்தின் இரு தயம். இதனை அடைவதற்காகவே புலிகள் போராடுகின்றார்கள்.
இதன்பொருட்டு, ஏறத்தாழ 25 ஆண்டு களாக இராணுவத்தினரும், தீவிரவாதிகளும் சண்டையிட்டு வருகிறார்கள்.
2002ஆம் ஆண்டு, போர்நிறுத்த உடன் படிக்கை கைச்சாத்தானது. இதனால் சிறிது காலம் இரத்தம் சிந்துவது தவிர்க்கப்பட் டிருந்தது. எனினும் அந்த ஒப்பந்தம் செய லிழந்துவிட்டது. கவிழ்ந்துவிட்டது.
சண்டை பரவி வருகிறது
கடந்த ஓராண்டு காலமாக நாட்டின் பல பகுதிகளில் சண்டைபரவி வருகிறது. சிங் களப் பெரும்பான்மை இனத்தவரின் ஆதிக் கத்துக்குட்பட்ட இலங்கை இராணுவத் துக்கும், பிரிவினைவாத சக்தியான தமி ழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே சண்டை மூண்டு வருகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் தகவலின் படி, 2005ஆம் வருட டிசம்பர் முதல், 4,800 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இவர்களில் சிவிலியன்களும் போராளி களும் அடங்குவர்.
இந்த எண்ணிக்கை முற்றும் முழுதாக ஏற்றுக்கொள்ளத்தக்க தொன்றல்ல. ஏனெ னில் நீண்டகால, குரூர போரில், ஒரு குறிப் பிட்ட காலப் பகுதிக்குரிய இழப்பு எண் ணிக்கையே இதுவாகும்.
யுத்தம் நீடிக்காலம், சமாதானப் பேச்சு கள் பலிதமாகலாம் என்பதற்கில்லை. அதற்கான அறிகுறி கிடையாது.
இலங்கையின் பாதுகாப்புச் செயல ராக இருப்பவர் கோத்தபாய ராஜபக்ஷ. இவர் செல்வாக்குப் படைத்தவர்.
தீவிரவாதத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அழிக்குமாறும், அவரது அமைப்பை ஒரேயடியாக நிர்மூலமாக்கி விடுமாறும் இராணுவத்துக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என இவர் தெரி வித்துள்ளார்.
""அந்த தலைமைத்துவம் அழித்தொழிக் கப்படவேண்டும். அதுவே எமது முக்கிய நோக்கம். இந்தப் பணியை நிறைவேற்ற இரண்டு மூன்று ஆண்டுகள் செல்லலாம்'' என, மே மாதம் தாம் அளித்துள்ள பேட்டி யொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வெளியுலக அழுத்தங்களால் காத்திரமான மாற்றங்கள் இல்லை
இவ்விரு, பிரிவினரின் நடவடிக்கை களில் வெளியுலக அழுத்தங்களால் கூட, காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்த முடிய வில்லை.
அமெரிக்கா உட்பட இன்னும் அநேக நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2004ஆம் வருடத்தின் டிசம்பரில் நேர்ந்த சுனாமிப் பேரலை அனர்த்தங் களையொட்டி, பிரிட்டனும், அமெரிக்கா வும் உதவிக் கரங்கள் நீட்டின. தற்போது அவ்வுதவிகளும் இடைநிறுத்தம் செய்யப்பட் டுள்ளன.
யுத்தத்தைப் பொறுத்தமட்டில், யாழ்ப் பாணம் அதற்குப் புதியதொன்றல்ல. கடந்தகால யுத்தச் சுவடுகளை அதன் கோவில் களும், தேவாலயங்களும் கொண்டுள் ளன. ஓடுவதிலும் மரணிப்பதிலும் மக்களுக் குப் பரிச்சயமுண்டு.
எனினும் இன்று போர்க் கருவிகள் என்று மில்லாதவாறு அசுத்தமடைந்துள்ளன. குறிவைப்புக் கொலைகளும் சிவிலியன் கள் செறிந்த பகுதிகளில் இடம்பெறும் நிலக் கண்ணிவெடித் தாக்குதல்களும் சர்வ சாதாரண நிகழ்வுகளாகி விட்டன.
விடுதலைப் புலிகள் கிரமமாக தற் கொலைக் குண்டுதாரிகளை நியமிக்கிறார் கள். பாதுகாப்புப் படைகள் தொடர்பாக விமர்ச்சிக்கும் பத்திரிகையாளர்கள், இரா ஜதந்திரிகள் நிவாரண ஊழியர்கள் கடும் சோதனைக்குள்ளாக நேரிடும்.
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் பத்திரி கையொன்றின், இளம் நிருபர் ஒருவர் ஏப்ரல் மாதம், ஒரு ஞாயிறு காலை சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் துவிச்சக்கரவண் டியில் தமது வேலைத்தலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, துப்பாக்கி வேட்டுக்குப் பலியாகியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பதற்றமும் பரபரப்பும்
மே மாதத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவின. பெயர்ப்பட்டியலொன்று பிரச்சினையைத் தோற்றுவித்தது.
அதில் அடங்கியிருந்தோர் அனைவரும் தீவிரவாதிகளின் அனுதாபிகள்; ஆதரவாளர்கள்; எனவே விசாரணைக்குட்படுத்தப்படவேண௼br />?டியவர்கள் என்ற கெடுபிடிகளும் இடம்பெற்றன.
இவை மட்டுமல்ல, புதிய பீதியும் யாழ்ப் பாணத்தை உலுக்கத் தொடங்கியுள்ளது. என்றுமில்லாதவாறு மக்கள் கிலி கொண்டுள்ளார்கள்.
ஊரடங்குச் சட்ட அமுலின்போது, மர்மமாக ஆள்கடத்தல்கள் இடம்பெறுகின்றன. யார் கடத்தப்பட்டார்? என்ன காரணம்? எவரால் கடத்தப்பட்டார்? என்ற விடயங்கள் மர்மமானது. எவராலும் உறுதிப்பாடாகக் கூறமுடியாது.
சிலவேளைகளில் கடத்தப்பட்டோரின் சடலங்கள் வீதியில் போடப்பட்டிருக்கும். அநேகமாக, சடலங்கள் அகப்படுவ தும் ஓர் அரிதான நிகழ்வே.
இவ்வாறு "நியுயோர்க் ரைம்ஸ்' செய்தியாளர் எழுதியிருக்கிறார். (அசி)
நன்றி - உதயன்

masan
16-06-2007, 06:11 AM
நன்பரே உமது பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

சுட்டிபையன்
16-06-2007, 06:30 AM
நன்றி மாசன்

rmsachitha
21-06-2007, 01:33 PM
சுட்டி பையான் நீங்க யார் வானவில்லா அல்லது ............?????

சுட்டிபையன்
05-08-2007, 04:51 AM
சர்வதேச மட்டத்திலும் ஈழத்தமிழர்களின் இராஜதந்திரக் காய்நகர்த்தல் அவசியம்
புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழ் உறவு களிடம் ஒரு முக்கிய பொறுப்பை நினைவுபடுத்தியிருக் கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன்.
""ஈழத்தமிழர் தாயகத்தில் சிங்களத் தரப்பால் ஏற்படுத் தப்படும் அவலங்களை - அல்லல்களை - சர்வதேச மயப் படுத்துங்கள். அந்தந்த நாடுகளில் இராஜதந்திர மட்டத்திலான கவனத்துக்கு அவற்றைக் கொண்டு வாருங்கள்!'' இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு உணர்வும் உயிரும் ஊட்டும் உன்னதப் பணியை உயர்வுடன் ஆற்றி வருகின்றவர்கள் நமது புலம் பெயர்ந்த உறவுகள்தாம். தாங்கள் கடும் உழைப்பால் பெறும் ஊதியத்தின் ஒரு பகுதியை விடுதலைப் போராட்டத்தின்பால் திருப்பி விடு வதன் மூலம் அந்தப் போராட்டத்துக்கு வெறுமனே நிதிப் பங்களிப்புச் செய்பவர்களாக மட்டுமன்றி, அதற்கு உயிர்ப் புக் கொடுப்பவர்களாகவும் அவர்கள் விளங்குகின்றனர்.
உலகின் எந்த நாட்டினதும் நேரடி உதவியின்றி, ஈழத் தமிழர் தாயகத்தில் ஒரு விடுதலைப் போராட்டம் முன்னெ டுக்ப்படுகின்றது. உலகின் வேறு எந்தச் சக்தியிடமும் மண்டி யிடாமல், ஈழத்தமிழர்கள் தங்களின் விடுதலைப் போராட் டத்தை சுயாதீனமாக - சுதந்திரமாக - பக்கம் சாராமல் - தாங்களே தனித்து நின்று - முன்னெடுக்கின்றார்கள் என்றால் அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
ஒன்று - தனது சொந்தக் காலில் நின்று போராடி தமிழர் களின் இறுதி அபிலாசையை - இலட்சியத்தை - வென்றெடுக்க வேண்டும் என்பதில் தளராத மன உறுதியும் திடசங் கற்பமும் கொண்ட தலைமையின் வழிநடத்தலில் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது.
அடுத்து - சர்வதேச நாடு எதிலும் தங்கியிருக்கத் தேவை யில்லை என்ற வகையில் அந்த இடத்தை முழுஅளவில் நிரப்பத் தயாரான தமிழ் உறவுகள், புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் பரந்து வாழ்ந்தபடி இப்போராட்டத்துடன் தங்களைப் பிணைத்திருப்பது.
விடுதலைப் போராட்டத்துக்கு பின்னணி வலுவூட்டல் சக்தியாக - உயிர்நாடியாக - விளங்கும் புலம்பெயர்ந்த உறவுகளுக்கு அவற்றின் பொறுப்பையும் கடமையையும் மீண்டும் ஒரு தடவை நினைவூட்டியிருக்கின்றார் சமாதானச் செய லகப் பணிப்பாளர் புலித்தேவன்.
வெறும் நிதிப்பங்களிப்புத் தருவதோடு அவர்களின் கடமை முடிந்து விடவில்லை. அதற்கு அப்பாலும் முக்கிய பொறுப்பு இருப்பதை ஞாபகப்படுத்தி உணர்வூட்டியிருக் கின்றார் அவர்.
ஈழத்தில் துவந்த யுத்தம் என்னவோ விடுதலை வேண் டும் ஈழத்தமிழர்களுக்கும் அரச ஒடுக்கு முறையில் வெறி யாக இருக்கும் சிங்கள அரசுக்கும்தான். ஆனால் இதில் சர்வ தேச ஈடுபாடும் பங்களிப்பும் தவிர்க்க முடியாத விவகாரங் களாக இழுத்து விடப்பட்டிருக்கின்றன.
ஓர் அரசு என்ற முறையில் கொழும்பு தனது வசதி, வாய்ப்பு கள், இராஜதந்திர சிறப்புரிமைகள், தேசக் கட்டமைப்பு ஒன் றுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கக் கூடிய விசேட அந் தஸ்து, அதிகாரங்கள் என்பவற்றைப் பயன்படுத்தி, தமிழர் களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசத்தின் முன்னிலை யில் முன்னிலையில் வெறும் குறுகிய இனவாதமாகவும், பயங் கரவாதமாகவும் பிரசாரப்படுத்தி, சித்திரித்து வருகின்றது. தமிழர் களின் விடுதலைப் போராட்டத்தின் உட்கிடையாகப் பொதிந்து கிடக்கும் தார்மீக நியாயங்களையும் அவர்களது போராட்ட வடிவத்தின் தவிர்க்க முடியாத கட்டாயத்தையும் சர்வதேசம் சரிவர அறியாத பின்னணியில், சிங்கள அரசின் பித்தலாட்டப் பிரசாரமே உலக அரங்கில் அம்பலத்தில் ஏற்கப்பட்டு வரும் துன்பியல் போக்கை நாம் காண்கின் றோம்.
தமிழ் மக்களின் தனித்துவத்தையும் இனத்துவ அடையாளத்தையும் - ஏன் இருப்பியலையும் கூட - நிர்மூலமாக்கி அழித்து, ஒழிக்கும் சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக - திட்டமிட்டு மேற்கொள்ளப் படும் அரச ஒடுக்கு முறைக்கு எதிராக - நியாயமும், கௌர வத்துடன் கூடிய வாழ்வும், வாழ்வியல் உரிமைகளும் வேண்டி, வேறு மார்க்கம் இல்லாததால், போராட வேண்டிய கட்டத்துக்கு - கட்டாயத்துக்கு - ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டி ருக்கின்றார்கள் என்ற மெய்மை நிலை சர்வதேசத்துக்கு இன்னும் சரிவர உணர்த்தப்படவேயில்லை.
தென்னிலங்கைச் சிங்களத்தின் அரச கட்டமைப்பு இராஜ தந்திர ரீதியில் மேற்கொண்டு வரும் திட்டமிடப்பட்ட - அபத்த - பிரசாரங்கள், சர்வதேச ரீதியில் ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை மூடி மறைத்து மறக்கப் பண்ண வைத்துள்ளன.
கொழும்பில் இந்தப் பொய்ப்பிரசாரத்தை முறியடித்து உலகத்துக்கு இலங்கைத் தீவின் உண்மை நிலையை - ஈழத் தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை - எடுத்து ரைத்துத் தெளிவுபடுத்தும் முக்கிய பொறுப்பு வெளிநாடு களில் வசிக்கும் புலம்பெயர்ந்த நமது உறவுகளையே பெரு மளவில் சேருகின்றது. அதையே உரிமையோடு நினைவு படுத்தி, அதை மேற்கொள்ளும்படி புலம்பெயர்ந்த உறவு களைக் கோரியிருக்கின்றார் புலித்தேவன்.
அந்தந்த நாடுகளில் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங் கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அவற்றில், நமது புலம்பெயர்ந்த உறவுகளும் பெரும் எண்ணிக்கையில் பங்குபற்றியும் வருகின்றனர். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தவும் நமது தரப்பு நியாயங்களை சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தவும் இத்த கைய எழுச்சி நிகழ்ச்சிகள் உதவும் என்பது வாஸ்தவம்தான்.
இதற்கு அப்பாலும் ஒரு முக்கிய பணி உண்டு. எமது விடுதலைப் போராட்ட நியாயப்பாடுகளை சர்வதேச நாடு கள் ரீதியாக அவற்றின் இராஜதந்திர வட்டாரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அதுவாகும். புலம் பெயர்ந்த நாடுகளில் நடத்தப்படும் பகிரங்க பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கு மேலதிகமாக மூடிய அலுவலக அறைக்குள் மேற்கொள்ள வேண்டிய இராஜதந்திர நகர்வுகளும், சந்திப்புக்களும், கலந்துரையாடல்களுமே அவை.
அதனையே தவறாது முன்னெடுக்க நமது புலம்பெயர்ந்த உறவுகளை நினைவூட்டித் தூண்டியிருக்கின்றார் புலித் தேவன்.

உதயன்

சுட்டிபையன்
05-08-2007, 05:00 AM
தமிழர் தாயக அவலங்களை சர்வதேச மயப்படுத்துங்கள்! புலம் பெயர்ந்தவர்களிடம் புலிகள் அமைப்புக் கோரிக்கை

தமிழர் தாயகத்தில் சிங்களத் தரப்பால் நிகழ்த்தப்படும் அவலங்களை சர்வதேச மயப்படுத்துங்கள். அந்தந்த நாடுகளில் இராஜதந்திர மட்டத்திலான கவனத்துக்கு அவற்றைக் கொண்டுவாருங்கள்.
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.
புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் இந்த வேண்டு கோளை முன்வைத்தார்.
ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட் டுத்தாபன வானொலிச் சேவை தனது "செய்தி அலைகள்' நிகழ்சியில் கடந்த செவ்வா யன்று புலித்தேவனின் செவ்வியை ஒலி பரப்பியது. அந்தச் செவ்வியிலேயே புலித் தேவன் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அவர் அந்தச் செவ்வியில் கூறிய முக் கிய விடயங்கள் வருமாறு:
சிங்களத் தலைவர்கள் எமக்கு நீதியான தும் நியாயமானதுமான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை தமிழீழ விடுதலைப் புலி களுக்கு எப்போதுமே இல்லை. ஏனெனில், காலம் காலமாக சிங்களத் தரப்போடு தமி ழர் தரப்பு பல்வேறு பேச்சுகளை மேற்கொண்ட போதும் ஒருபோதுமே தமிழ் மக்களுக்கு நீதியான நியாயமான உருப்படியான தீர்வை சிங்கள தேசம் முன்வைத்தது கிடை யாது. அது இப்போதும் நடைபெற்றுக்கொண் டிருக்கிறது. ஆகையால் எமது தரப்பு நியா யத்தை எமக்கு தனித்தேசம் வேண்டும் என்பதை எமது மக்கள் படுகின்ற அல்லல் களை சிங்கள ஆட்சியாளர்களால் கட்ட விழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துக்கூறவே சமாதான முன்னெடுப்புகளையும் சமாதான செயலகத்தையும் நாங்கள் பயன்படுத்தி னோம்.
காலம் காலமாக சிங்களத் தரப்பினரு டன் தமிழ்த் தரப்பினர் நடத்திய பல்வேறு பேச்சுகளில் பல படிப்பினைகளை நாங்கள் கற்றிருக்கிறோம். 50 களிலிருந்து 80கள் வரை தமிழர் தரப்பு பல்வேறு ஒப்பந்தங்களை சிங் கள அரசுகளுடன் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தங்கள் அனைத்துமே குப்பைக் கூடைக்குப் போய்விட்டன. 1987 இல் இந்திய அரசு உருவாக்கிய ஒப்பந்தத்தாலும் சிங் களத் தலைவர்களை வழிக்குக் கொண்டு வர முடியவில்லை.
சிங்கள அரசியலில் ஆள்கள் மட்டுமே மாறுகின்றனர்
அதன் பின்னர் 1994 95 களில் சந் திரிகாவுடன் நாங்கள் பேச்சுகள் நடத்தினோம். அதுவும் அதே நிலைதான். சிங்களத்தின் ஆட்சியில் ஆள்கள்தான் மாறினார்களே தவிர எண்ணங்கள் மாறவில்லை. தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கிவிடக்கூடாது என்கின்ற எண்ணம் எப்பொழுதுமே மாறிய தில்லை.
தமிழ் மக்கள் இத்தனை அவலங்களை வெளிப்படுத்தியும் ஸ்ரீலங்காவுக்கு உரிய அழுத்தங்களை அனைத்துலகம் கொடுக் காமல் இருக்கின்றமை ஏன் என்ற கேள்வி காலம் காலமாக தமிழ் மக்களிடத்தில் உண்டு. இது தொடர்பான அனைத்துலகத்தின் செயற் பாட்டில் அதிருப்தி உள்ளது. அதேநேரத் தில் அனைத்துலகம் நூற்றுக்கு நூறுவீதம் மௌனமாகவும் இருந்துவிடவில்லை. பல் வேறு விடயங்களில் பல்வேறு அழுத்தங்களை ஸ்ரீலங்காவுக்குக் கொடுத்துக் கொண்டிருக் கிறது. மனித உரிமைகள், மனிதாபிமான விவ காரங்களில் ஸ்ரீலங்கா அரசை அனைத்துலக நாடுகள் கண்டனம் செய்கின்றன. பல்வேறு நாடுகள் நிதியுதவியையும் நிறுத்தியிருக்கின் றன.
1990 களின் இறுதிப்பகுதியில் எமது தேசி யத் தலைவரை நோர்வேயின் எரிக் சொல் ஹெய்ம் சந்தித்த போதே எமது விடுதலைப் போராட்டமானது அனைத்துலக மயமாகிவிட் டது என்றுதான் கூற வேண்டும்.
சொல்லுக்கு முன் செயல் என்ற மரபு
விடுதலைப் புலிகளுக்கு ஒரு மரபு உள் ளது. "சொல்லுக்கு முன்பு செயல் இருக்க வேண் டும்' என்பதுதான் அது. எமது தேசியத் தலை வர் எப்பொழுதும் வலியுறுத்துவதும் அத னைத்தான். விடுதலைப் புலிகளும் அதையே விரும்புகின்றனர்.
தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒருவிதமாக மேடையிலே கத்த லாம். ஆனால், புலிகளைப் பொறுத்தவரை சொல்வதைத்தான் செய்வார்கள். செய்வதைத் தான் சொல்வார்கள். ஸ்ரீலங்கா இராணுவம் பாரிய போர் நடவடிக்கைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் நாங்களும் (தமிழீழ விடுதலைப் புலிகளும்) பாரிய அள வுக்கு அதனை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங் களில் பாரிய வெற்றிச் செய்திகளை புலம் பெயர்வாழ் தமிழர்கள் கேட்கக் கூடியதாக இருக்கும்.
புலம்பெயர் தமிழரின் உதவியே பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றியது
மண், பாறையாகி வெடித்து, எந்தவித மான தண்ணீரும் இல்லாமல் பயிர்கள் வாடி, வதங்கிக்கொண்டு போகின்ற நிலை யில் பாரிய மழை கொட்டியதுபோல் எமது புலம்பெயர் தமிழர்கள் "ஜெயசிக்குறு' சமர் நடைபெற்ற காலப்பகுதியில் செய்த பேருதவி தான் எமது சிறார்களை போஷாக்கின்மை யிலிருந்தும் எமது மக்களை பட்டினிச் சாவி லிருந்தும் காப்பாற்றியது.
தொடர்ந்தும் தங்களாலான உதவிகளை அந்த பனிக்குளிருக்குள்ளும், பனிமழைக்குள் ளும் தமது குடும்பத்தினருடன் இணைந் திருக்கக்கூட நேரமின்றி அனைவருமே உழைத்து சம்பாதித்து அந்தப் பணத்திலிருந்து எமக்கு என்று ஒரு பகுதியை ஒதுக்குகின் றீர்கள். இது எம் மனங்களை புல்லரிக்கச் செய் கின்ற விடயம். அத்தகைய உதவிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழர் கள் அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளுடனோ, அந்தந்த நாட்டு அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், பிரமுகர் கள் ஆகியோருடனோ தொடர்புகளையும், உறவுகளையும் உருவாக்கி அதனூடே தாய கத்திலே நிகழ்கின்ற மனித அவலம், மனித உரிமை மீறல்கள், ஸ்ரீலங்கா இராணுவத் தினது அடக்கு முறைகள், பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றை அவர்களின் மேலதிக மான கவனத்துக்குக் கொண்டுசெல்ல உத விட வேண்டும். யூதர்கள் எப்படித் தங் களது மக்களின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அனைத் துலகத்தின் கவனத்தை ஈர்த்தார்களோ அதே போல் எங்கள் மக்களும் அத்தகைய முயற் சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இத்தகைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும் முக்கியமானதாகும். உணர்வு பூர்வமாக மட்டுமன்றி அறிவுபூர்வமாகவும் இராஜதந்திர ரீதியாகவும் இந்த விடயத்தை எடுத்துச் செல்ல வேண்டும். என்றார் புலித் தேவன். (சி)

உதயன்

இலக்கியன்
09-08-2007, 02:21 PM
சுட்டியின் செய்தி இணைப்புக்கு நன்றி தொடரட்டும்