PDA

View Full Version : ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்!



அரசன்
26-04-2007, 04:49 PM
வாஷிங்டன்: தேர்வில் தனக்கு ஃபெயில் மார்க் போட்டதால் ஆத்திரமடைந்து ஆசிரியையை கத்தியால் குத்திய இந்திய மாணவருக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் நிகில் தர்(23). மாசசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அங்கு அறிவியல் ஆய்வகப் பிரிவில் உதவிப் பேராசிரியையாக இருப்பவர் எலிசபெத் ஹூக்கர்.

தேர்வில் நிகில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் கல்லூரியை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவானது.

இதனால் பயந்து போன நிகில் தர், தனக்கு ஃபெயில் மார்க் போட்ட ஆசிரியை எலிசபெத் மீது கோபம் கொண்டார். இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கேம்பிரிட்ஜில் உள்ள தனது வீட்டுக்கு ஆசிரியை எலிசபெத் கிளம்பியபோது அவரைப் பின் தொடர்ந்து சென்றார்.

கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரம் சென்ற பின்னர் எலிசபெத்தின் காரை மறித்து அவரை சரமாரியாக குத்தி விட்டுத் தப்பினார். பின்னர் கைது செய்யப்பட்ட நிகில், மீது மிடில்செக்ஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார் நிகில். இதையடுத்து அவருக்கு 4 முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

crisho
26-04-2007, 05:16 PM
:teufel021: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :teufel021:

மனோஜ்
26-04-2007, 05:47 PM
ஆசிரியை எலிசபெத் கதை என்ன ஆனது?

அன்புரசிகன்
26-04-2007, 07:29 PM
என்னவென்று சொல்ல... பழக்க வழக்கங்கள் ரொம்ப முன்னேறுது...