PDA

View Full Version : இன்னும் பகுதிகள் வேண்டும்



lolluvathiyar
25-04-2007, 03:41 PM
இன்னும் பகுதிகள் வேண்டும்

மன்ற நிர்வாகி அவர்களுக்கு
தமிழ் மன்றத்தில் இருக்கும் பகுதிகள்
அருமையாக இருக்கிறது,
ஆனால் இன்னும் சில பகுதிகள் சேர்க்கலாம்



1. உரைநடை - பகுதி வேண்டும் மல்லி மன்றத்தில்
தான் சொல்ல வந்த கருத்துகளை, கவிதை அல்லது பாடல் மூலம் சொல்ல முடியாதவர்களுக்கு
உரைநடையாக வசனமாக அழகிய தழிழ் வார்த்தை பயன்படுத்தி சொல்ல ஒரு தனி பகுதி வேண்டும்

2. தத்துவங்கள் - பகுதி வேண்டும் சாமந்தி மன்றத்தில்
தன்க்கென்று தோன்றிய அல்லது தெரிந்த தத்துவங்கள் பதிய ஒரு பகுதி வேண்டும்

தாமரை மன்றத்தில் பொது விவாதம் மற்றும் அலசல்கள் இருக்கு
அதை தனி மன்றமாக்கி அதில் உட்பிரிவுகளை இப்படி போடலாம்
பொது விவாதம்
தமிழை பற்றிய விவாதம்
பட்டி மன்றம்
காதல் (இதுக்கு சத்தியமா தனி மன்றமே வேண்டும் தலைவா)
சுற்றுசூலல்

சமயலுக்கு தனி பகுதி இருப்பது போல குடும்பம் எனற் ஒரு தனி பகுதி இருந்தால் சிறப்பாக இருக்கும்

சாமந்தி மன்றத்திலிருந்து அரசியலை பிரித்து விடுவது நல்லது
வேண்டுமானால் அரசியலுக்கு ஒரு தனி மன்றம் இருப்பது நலம் அதில்
தமிழ்நாடு அரசியல்
தேசிய அரசியல்
சர்வதேச அரசியல்
இப்படி பல

முல்லை மன்றத்தில் புகார் பகுதி வேண்டும்
இது யாரவது ஒரு பதிப்பை தவறான இடத்தில் பதித்து விட்டால், அதை சுட்டி காட்டவும்
ஆபசமான பதிவுகள், மற்றும் தனி நபர் சாடல் போண்றவைகளை சுட்டி காட்டவும்


மேலும் ஆலொசனை தாரும் உருப்பினர்களே

அன்புரசிகன்
25-04-2007, 03:43 PM
மேற்பார்வையாளர்கள் நிர்வாகி இவர்கள் தான் முடிவு எடுக்கவேண்டும்.

பென்ஸ்
25-04-2007, 03:45 PM
உங்கள் கருத்தை நிர்வாகியிடம் பரிந்துரைக்கிறேன்...

poo
26-04-2007, 04:35 AM
மன்றத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்கும் ஆர்வத்தினை கருத்தில் எடுத்து, தலைவர் சிறந்ததை செயல்படுத்துவார் என்பதில் ஐயமில்லை..

aren
26-04-2007, 05:02 AM
நண்பரே,

இது ஒரு அருமையான பதிவு. தலைவர் இதை கவனித்து ஆவன செய்வார் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

இராசகுமாரன்
26-04-2007, 08:27 AM
நண்பரே,

உங்கள் ஆலோசனைக்கு நன்றி.. ஆனால், தமிழ் மன்றத்தில் பகுதிகள் அதிகமாகி கொண்டே போனால் உறுப்பினர்கள் குழம்ப வாய்ப்புகள் உள்ளது. அதனால், பங்களிப்புகள் சிதற வாய்ப்புள்ளது, திரிகள் தவறான பகுதியில் செல்ல வாய்ப்புள்ளது.

எந்த பகுதியில் பங்களிப்பு மிக அதிகமாக வருகிறதோ, அதை பிரிந்தால் நல்லது. அதன் மூலம் பழைய நல்ல பதிப்புகள் வெளியில் வந்து, பல புதியவர் பார்வையில் பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கவிதைகள்/பாடல்கள் பகுதியில் அதிக பங்களிப்பு உள்ளது, அது விரைவில் தனி பகுதியாக மாறும்.

அரசியலுக்கு தனி பகுதி உருவாக்கினால், தமிழ்மன்றம் குஸ்தி மன்றமாகிவிடலாம். நமது தமிழ் மன்ற நண்பர்களுடன் பிணக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது. நிறைய பூட்டுக்களைகளும் நாங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அரசியல் நமக்கு தேவை தான், ஆனால் அது குறிப்பிட்ட அளவில் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.

புகார் கூற ஏற்கனவே வசதி உள்ளது. ஒவ்வொரு பதிவின் வலது பக்கத்தில் சேர்ந்த தேதிக்கு மேல் உள்ள http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/report.gif படத்தை அழுத்தினால் போதும், அது எங்களுக்கு தனி தலைப்பாக நிர்வாக உதவியாளர்கள் மன்றத்தினுள் வந்து சேரும், பிறகு அதன் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இதற்கென்று தனி பகுதி தேவையில்லை.

நீங்கள் கூறியுள்ள சில பகுதிகள் ஏற்கனவே வேறு வடிவில் உள்ளது, சிறு மாற்றங்கள் செய்தால் போதும். மற்ற பகுதிகள் உருவாக்குவதை/திருத்தம் செய்வதை மேலும் உறுப்பினர்கள் பரிந்துரை செய்தால் நிச்சயம் உருவாக்கப் படும்.

poo
26-04-2007, 08:32 AM
கவிதைக்கு தனி பகுதி என்ற அறிவிப்பில் உள்ளம் மகிழ்கிறேன்...

அரசியல் குறித்த உங்கள் பதில் - நிச்சயமாக யோசிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்..

புகார் கூறும் வசதியை இன்றுதான் அறிகிறேன்.. நல்ல வசதி. நன்றி தலைவரே..

ஓவியா
28-04-2007, 01:01 AM
நல்ல கருத்துக்கள். கலந்து ஆலோசிக்கலாம்.


நன்றி தலைவரே

lolluvathiyar
13-07-2007, 06:13 AM
மன்றம் குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகள் என்று இருக்கும் இந்த பிரிவில் மாற்றம் வேண்டும் என்று ஒரு யோசனை.
சந்தேகம் என்பது என்ன செய்வது என்று தெரியாமல் கேட்டு தெரிந்து கொள்ளபடும் கேள்வி.
ஆனால் ஆலோசனை என்பது மன்றம் எப்படி செயல் பட வேண்டும் என்று உருப்பினர்கள் கூறும் ஆலோசனை.
இதை ஏன் ஒன்றாக வைத்திருக்க வேண்டும் பிரித்து விடலாமே
[B]மன்றம் குறித்த சந்தேகங்கள்
மன்றம் குறித்த ஆலோசனைகள் [/ப்]
இப்படி இரு பிரிவாக பிரித்து விடலாமே

அறிஞர்
13-07-2007, 02:25 PM
மன்றதில் உள்ள சந்தேகங்களை... கேள்வி−பதில் என தொகுத்து இங்கு கொடுக்கலாம்...

அமரன்/அக்னி/அன்புரசிகன்/ஓவியன்... கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

ஓவியன்
13-07-2007, 02:28 PM
மன்றதில் உள்ள சந்தேகங்களை... கேள்வி−பதில் என தொகுத்து இங்கு கொடுக்கலாம்...

அமரன்/அக்னி/அன்புரசிகன்/ஓவியன்... கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

நான் தயார் தான் அண்ணா!

என்னென்ன செய்ய வேண்டுமென்று சொன்னால் போதும்!, உங்களுடன் ஒத்துழைக்கத் தயாரே!.

அறிஞர்
13-07-2007, 03:28 PM
மன்றத்தில் பலர் சந்தேகங்களை கேட்டிருப்பார்கள்.. அதற்கு சில சரியான பதில் அளித்து இருப்பார்கள்.. அவற்றை தொகுக்க வேண்டும்.

உதாரணத்திற்கு..

கேள்வி: தட்டச்சு சரியாக செய்ய வேண்டும்.

கேள்வி: படங்களை இணைப்பது எப்படி?

கேள்வி: சிலநேரங்களில் * தோன்றுகிறதே.. ஏன்?

ஓவியன்
13-07-2007, 03:37 PM
ஆகட்டும் அண்ணா!

செய்துவிட்டால் போயிற்று!.

namsec
14-07-2007, 04:36 AM
அனைத்தும் சரி மகளிருக்கு அரசாங்கமே இடஒதிக்கிடு செய்யும் பொழுது நாம் மகளிரை மதிப்பவர்கள் அவர்களை பொருமைபடுத்த ஒரு தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்

aren
14-07-2007, 04:45 AM
மகளிருக்கு தனி தலைப்பு வேண்டுமா அல்லது தனி மன்றம் வேண்டுமா?

namsec
14-07-2007, 04:52 AM
மகளிருக்கு தனி தலைப்பு வேண்டுமா அல்லது தனி மன்றம் வேண்டுமா?

தலைப்பு என்று விலாவரியக பதித்துள்ளேன்

aren
14-07-2007, 04:55 AM
மேல் முறையீடு செய்திருக்கிறேன் நாம்சேக் அவர்களே. கூடியவிரைவில் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

namsec
14-07-2007, 05:13 AM
மேல் முறையீடு செய்திருக்கிறேன் நாம்சேக் அவர்களே. கூடியவிரைவில் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி

lolluvathiyar
14-07-2007, 06:49 AM
அனைத்தும் சரி மகளிருக்கு அரசாங்கமே இடஒதிக்கிடு செய்யும் பொழுது நாம் மகளிரை மதிப்பவர்கள் அவர்களை பொருமைபடுத்த ஒரு தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்

மகளிர் நம்முடன் சரி சமமாக கலக்க விடுவதே அவர்களுக்கு பெருமை சேர்பது, அவர்களுக்கு என தனி இடம் அமைத்தால் மீண்டும் அவர்களை தனிமை படுத்துவது போல தான் எனக்கு தோன்றுகிறது

அரசாங்கம் அரசியல் நடத்துகிறது பிரித்தாலும் சூல்ச்சியின் அடிபடையில் பென்களை தனிமைபடுத்துகின்றனர். ஆனால் நம் மன்றத்தில் நாம் அரசியல் நடத்த கூடாது. மகளிர் தங்கள் பிரச்சனைகளை ஆண்களிடமே பகிரும் போது ஆண் பெண் என்ற பேதம் குரைய வாய்பு இருகிறது.

ஆகையால் என் கருத்து மகளீருக்கு என்று தனி தலைப்பு வேண்டாமென்றூ தான்

சூரியன்
15-07-2007, 05:37 AM
நல்ல யோசனை நாம்செக்.,,இருந்தாலும் இது அவர்களை தனிமை படுத்துவது போல் ஆகிவிடும்,....

namsec
15-07-2007, 05:43 AM
நல்ல யோசனை நாம்செக்.,,இருந்தாலும் இது அவர்களை தனிமை படுத்துவது போல் ஆகிவிடும்,....

அவர்களை தனிமைபடுத்த சொல்லவில்லை சிற*ப்பிக்க, பெருமைபடுத்த மகளிர் பகுதி என சேர்த்தால் நன்றாக இருக்கும்.

சூரியன்
15-07-2007, 05:46 AM
இதை நிர்வாகி பரிசீலிக்க வேண்டும்.

இதயம்
15-07-2007, 06:01 AM
அனைத்தும் சரி மகளிருக்கு அரசாங்கமே இடஒதிக்கிடு செய்யும் பொழுது நாம் மகளிரை மதிப்பவர்கள் அவர்களை பொருமைபடுத்த ஒரு தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்

நம் மன்றத்தில் மகளிரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அவர்களில் தொடர்ச்சியான பங்களிப்பை கொடுப்பவர்கள் மிக, மிக சிலரே. அவர்களுக்காக தனிப்பகுதி தோற்றுவிப்பது என்பது ஏற்புடையதாக தெரியவில்லை. காரணம், ஏற்கனவே உள்ள சமையல்கலை, அழகு குறிப்புகள், சின்னத்திரை போன்ற பகுதிகள் ஆண்களை விட பெண்கள் அதிகமாக பங்கெடுக்க வேண்டிய பகுதிகள். அங்கும் பெண்களின் பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இணையத்தில் மகளிருக்கு தனி இடம் ஒதுக்குதல் என்பது அவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற தோற்றத்தை தான் ஏற்படுத்தும். அவர்கள் சுதந்திரமாக எல்லா பகுதிகளுக்கும் சென்று தங்கள் பங்களிப்பை தர வேண்டும் என்பது தான் நம்முடைய எதிர்பார்ப்பு அதை விடுத்து தனி இடம் அளித்தல் என்பது வீட்டில் அவர்களுக்கென சமையலறையை ஒதுக்கி கொடுத்தல் போலாகிவிடும். மற்ற விஷயங்களில் மகளிருக்கான இட ஒதுக்கீடு என்பது அவர்களை எல்லா வகைகளிலும் உயர்த்தவே..! ஆனால், மன்றத்தில் இட ஒதுக்கீடு அவர்களை நம்மிடமிருந்து பிரிக்க மட்டுமே பயன்படும்.

இந்த விஷயத்தை பொறுத்தவரை தனி இட ஒதுக்கீட்டை ஆண்களாகிய நாம் பேசுவதை விட, சம்பந்தப்பட்ட பெண்கள் சொன்னால் தான் அது பொருத்தமாக இருக்கும். இதன் மூலம் மன்றத்தில் தன் தேவையை தெரிவிக்க பெண்களுக்கு முழு உரிமை கொடுத்த மன்றம் என்ற பெருமையும் நமக்கு கிடைக்கும். எனவே அவர்களை பேச விடுங்கள். அவர்கள் எதுவும் கேட்காத பட்சத்தில் இட ஒதுக்கீட்டை அவர்கள் விரும்பவில்லை என்பதை குறிப்பால் உணர்த்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

alaguraj
15-07-2007, 06:03 AM
கேள்வி பதில் பகுதி கொண்டுவந்தால் இன்னும் நன்றாக இருக்கும். மன்றம் குறித்த சந்தேகம் மட்டுமல்லாமல் பொதுவான கேள்வி பதில்கள், யார் வேண்டுமானாலும் பதிலளிக்காலாம், அல்லது பண்பட்டவர்கள் மட்டும் பதிலளிக்க அனுமதி இப்படி ஏதாவது ஒன்று ஏற்படுத்தினால் நமது மன்றத்திலிருந்தும் நிறைய ஹாய் மதன்கள், சுஜாதக்கள் வரக்கூடும்.

namsec
15-07-2007, 06:10 AM
சகோதரர் இதயம் அவர்களே நான் கூறியதை முழுமையாக தெரிந்த்து கொள்ளுங்கள்.

அவர்களை தனிமை படுத்த நான் விரும்பவில்லை அவர்களை சிறப்பிக்க ஒரு தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் இதில் பெண்களை பற்றிய சிறப்புபான தகவல்களை பதிக்கலாம் என்பதே எனது நோக்கம் இதன் மூலம் பெண்கள் அதிகம் பங்குகேற்க்க வாய்ப்பிருக்கிறது.

இன்பா
18-07-2007, 01:02 PM
நல்ல வரவேற்க்கத் தக்க சில ஐடியாக்கல் வந்து கொண்டிருக்கின்றன.

என்னை பொருத்த வரையில் சரியாக இயங்காத அதிக வம்பை கிளப்பக் கூடிய சில பகுதிகளை நீக்கி விடுவது சால சிறந்தது.

நிறைய பகுதிகள் இருப்பதால் சற்று குழப்பமேதான்... புதியவர்களுக்கு...

பெண்ங்களை பெருமை படுத்தும் விதமாக ஒரு பகுதி வந்தால் சிறப்பு தான்.

கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுப்பார் தலைவர்.....

ஓவியா
09-08-2007, 01:22 AM
அனைத்தும் சரி மகளிருக்கு அரசாங்கமே இடஒதிக்கிடு செய்யும் பொழுது நாம் மகளிரை மதிப்பவர்கள் அவர்களை பொருமைபடுத்த ஒரு தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்

வணக்கம் நாம்செக் அண்ணா.

ஒரு மகளீராக என்னிடம் கருத்துக் கோட்டால் நான் இப்படி ஒரு பதிவு எங்களுக்கு நல்ல மதிப்பையும் ஊக்கத்தையும் அளிக்குமாயின் அவை வரவேற்க்க தக்கவையே என்று பதிலளிப்பேன்!!

ஆனாலும் என்னுடைய சுய கருத்து இது தேவையில்லை என்றுதான் தோண்றுகின்றது.

பிறப்பில், வளர்ப்பில், பரிட்சையில் ஆண் பெண் பேதமில்லை அதைப்போல் இங்கும் பேதமில்லாமல் சமமாக சமத்துவமாக இருப்போம், எங்களுக்கு காரணமில்லா சலுகைகள் வேண்டாம் அவை இங்கு எங்களின் சேவையை பிரிக்கக்கூடும்.


கவிதா, மைதிலி, சுவேதா, நிலா, சுமா, தேம்பா, லவண்யா, மீரா, குணா, அல்லிராணி, கண்மனி, இனியவள், தென்றல், பிச்சி, மலர், காயத்திரி, அகிலா, தமிழ்செல்வி, ஷன்முகி, வெண்தாமரை, தீபா என பலர் வந்து போகின்றனர் மற்றவர்களின் பதிலையும் காண்போம், பின் ஒரு சாலச்சிற*ந்த முடிவை எடுப்போம்.


நன்றி அண்ணா.