PDA

View Full Version : கல்லூரி கடைசி நாள்...



ஷீ-நிசி
25-04-2007, 05:45 AM
(நண்பர் ஒருவர் கல்லூரி கடைசி நாள் விழாவிற்காய் ஒரு கவிதை கேட்டிருந்தார்..)

விடைபெறுகின்றன
பட்டாம்பூச்சிகள்!

கற்பித்தவனை
கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும்
தண்டித்ததையும் மறந்து.....

நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!

உருவங்களுக்கு இடையில்
புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!

கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை
கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!

பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!

நேற்றுவரை
அழகிய நட்பை
சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை
சுமந்து அலைவோம்!

நாம் சுற்றித் திரிந்து
தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும்
பட்டுப்பூச்சிகளுக்காய்..
மனம் வீசும்......

அந்த வனத்தில் வீசிய மனம்
நம் மனதில் வீசும் தினம்...

ஓவியன்
25-04-2007, 05:55 AM
ஆகா ஷீ-நிசி!, எனது கல்லூரியின் நினைவுகளையும் கிளறி மனதைக் கல்லாக்கி விட்டீர்களே?


நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!

உருவங்களுக்கு இடையில்
புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!

அருமையான வரிகளவை,

இப்போது நினைத்தாலும் இனம் புரியாத வலியை நெஞ்சிலே ஏற்படுத்தும் பிரிவு அது.

பலவேளைகளில் நான் சிந்திப்பதுண்டு மீண்டும் அந்தக் காலம் வராதா என்று.......
அப்படி வந்தால் விட்ட பிழைகளையும்
நழுவ விட்ட சந்தர்பங்களையும்
திருத்துவதற்கு மீள ஒரு வாய்ப்புக் கிடைக்குமே??........ - கிடைக்குமா அந்த வாய்ப்பு???


உணர்வுகளில் நனைய வைத்த கவி வரிகளுக்கு நன்றிகள்.

ஷீ-நிசி
25-04-2007, 05:58 AM
நன்றி ஓவியன், எல்லோருமே சின்னதொரு பிரச்சினையில் பேசாமல் இருந்த ஓரிரு நட்புகளை எண்ணி என்றைக்குமே வேதனைப்பட்டுக்கொண்டிருப்பர்... நானும்....

poo
25-04-2007, 06:12 AM
இதமான கவிதை ஷீ.. பாராட்டுக்கள்... சாயங்கள் பூசாமல் நிதர்சனத்தை எளிமையான வரிகளில் போட்டு மனதை வருடச் செய்துள்ளீர்கள்...

ஷீ-நிசி
25-04-2007, 06:19 AM
நன்றி பூ...

சுட்டிபையன்
25-04-2007, 06:23 AM
என்னால் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வென்றால் அது கல்லூரி கடைசி நாள்தான் எல்லோர் வாழ்விழும் அதே போல்தான்

கல்லூரி கடைசி நாளை அழகான கவிதையாக வடித்த நிசிக்கு வாழ்த்து பாராட்டுக்கள்

ஷீ-நிசி
25-04-2007, 06:25 AM
நன்றி சுட்டிப்பையன்..

அரசன்
25-04-2007, 01:17 PM
எவராலும் கல்லூரி வாழ்க்கையை மறக்க முடியாது. ஏனெனில் அது ஒரு இனிமையான உணர்வுகள் (ஃபீலிங்க்ஸ்). தங்கள் கவிதையை படிக்கும்போது எல்லோர் மனதுக்கும் ஒரு ஆறுதல் தரும் என்று நினைக்கிறேன். எளிமையான வரிகளில் நிதர்சனமான உண்மையை விளக்கியமைக்கு பாராட்டுக்கள் ஷீ!

மனோஜ்
25-04-2007, 01:30 PM
இனிய உணர்வை தட்டி எழப்பி மலரும் நினைவுகளாக்கிய ஷீக்கு என் பாராட்டுக்கள்

மயூ
25-04-2007, 03:24 PM
ஷீ.... 3 மாத பயிற்சிக் காலத்தில்தான் கம்பஸ் அருமையைப் புரிந்துகொண்டேன்!!!
இன்னும் ஒரு வருடம்தான் உள்ளது... கம்பஸ் முடிந்து எல்லாரும் பிரிவதை நினைக்கும் போது மனம் சங்கடமாக உள்ளது... (குறிப்பாகச் சிங்களப் பெட்டைகள்) :D

அன்புரசிகன்
25-04-2007, 03:28 PM
என்னவென்று சொல்ல...
அது ஒரு அழகிய நிலாக்காலம்...
(நன்றி: பாண்டவர்பூமி :D)

சுட்டிபையன்
25-04-2007, 03:30 PM
என்னவென்று சொல்ல...
அது ஒரு அழகிய நிலாக்காலம்...
(நன்றி அன்பு சித்தப்பா :D)
(இது எப்படி இருக்கு)

அன்புரசிகன்
25-04-2007, 03:31 PM
என்னவென்று சொல்ல...
அது ஒரு அழகிய நிலாக்காலம்...
(நன்றி அன்பு சித்தப்பா :D)
(இது எப்படி இருக்கு)

நல்லா இல்ல..

ஷீ-நிசி
25-04-2007, 04:19 PM
நன்றி நண்பர்களே! எல்லாருக்குள்ளும் இருக்கின்ற ஞாபகங்கள்தான் கவிதையாய்..

பென்ஸ்
26-04-2007, 02:07 PM
ஷீ...

கல்லூரியின் கடைசி நாள்...
இன்று நினைத்து பார்த்தாலும் மனசு பாரமடையும்...

என்னுடைய கால்லூரி காலங்கள் கொஞ்சம் நீண்டாவையே
3 வருடங்கள் டிப்பளமோ
3 வருடங்கள் பொறியியல்
1 வருடம் சான்றிதள் படித்தம்
மேலும் சிலகாலம் சான்றிதள் படித்தம்
2 வருடம் முதுகலை
என்று நீண்டு கொண்டு போன என் கல்லூரி வாழ்க்கையில் என் மனதில் இன்று மாறாமல் இருப்பது அந்த 3 வருடம் பொறியியல் வாழ்க்கைதான்...


எல்லா உணர்வுகளையும் ஒரு படி மேலே வைத்து பார்க்கும் காலம் அது...
காதலா , அப்படினா என்ன???
ஆகா.. காதல்...எங்கே அவள் !!!
ஐயோ ஐயோ.. காதலா, எதுக்கு அது ???
காதல் என்வாழ்வில் இல்லையோ???
என்று எல்லாம் எண்ணும் வித்தியாசமான எல்லோரும் ஒறெ கூட்டதில் இருப்பர்...

அடியா... எங்க, யப்பா ஓடிடலாம்..
அடியா.. எங்க எங்க , வா பாக்கலாம்.
அடியா, எவன்புல அது வுடாத....
இவர்கள் எல்லாம் ஒறெ கூட்டத்தில்....

நட்புக்கு எந்த இலக்கணமும் வைக்காமல்....
ஒரு சிகரெட் வாஙி ஒன்பது பேர் குடித்து...
கடைசு "பவ்"க்காய் சண்டை போட்டு...
ஒரு இலையில் ஒன்பது கைகள்...
ஒரு கட்டிலில் ஒன்பது தூக்கம்
ஒரே அறையில் ஒன்பது குடித்தனம்..

பல விஷயங்களில் சமாளித்து, சமதித்து, சஙமித்து...
ஒரு ஜென்மத்தின் வாழ்க்கையை , சில நாட்களில் வாழ்ந்துவிட்டு...
இன்று விலகி செல்லும் போது.... :medium-smiley-100: :medium-smiley-100:

அன்பு சொன்னது போல், அது ஒரு அழகிய நிலாகாலம்...
பரிமானத்தில், அது முழுநிலவு காலம்...

ஷீ-நிசி
26-04-2007, 03:28 PM
ஷீ...

கல்லூரியின் கடைசி நாள்...
இன்று நினைத்து பார்த்தாலும் மனசு பாரமடையும்...


அன்பு சொன்னது போல், அது ஒரு அழகிய நிலாகாலம்...
பரிமானத்தில், அது முழுநிலவு காலம்...


பென்ஸ், அப்படியே கல்லூரி காலத்துக்குப் போயிட்டு வந்துட்டீங்கப் போல..

கவிதையைப் பற்றி ஒன்றுமே சொல்லலையே...

பென்ஸ்
26-04-2007, 04:16 PM
பென்ஸ், அப்படியே கல்லூரி காலத்துக்குப் போயிட்டு வந்துட்டீங்கப் போல..

கவிதையைப் பற்றி ஒன்றுமே சொல்லலையே...
முதல்வன் படத்தில் ஒரு டயலாக் வரும்...
"வீசிஆர்ல இருக்கிறமாதிரி நம்ம வாழ்க்கையிலையும் ஒரு ரீவைன்ட் பட்டன் இருந்தா நல்லா இருக்குமில்ல..."
எல்லோருடைய ஆசைகளும்தான், நம்மால் போகமுடியாவிட்ய்டாலும்,
நம் நினைவுகள் நம்மை தூக்கி போகின்றன அல்லவா....

அதை இயக்கும் சுவிட்தான் இதை போன்ற நல்ல கவிதைகள்.....

பாராட்டுகள் ஷீ.....

குறிப்பு: நான் என்னைக்காவது கவிதையை வரிவரியாய் பாராட்டி இருக்கேனா... கவிதை ஒன்றை சொல்ல நான் வேற எதோ ஒன்றை சொல்லிட்டு போரேன்ன்னு வருத்தமா இருக்கும், இருந்தாலும் ... அந்த எண்ண ஓட்டங்களை தூண்டுவது இந்த கவிதைகள் தானே..... அந்த வகையில் மகிழ்ச்சி...

ஷீ-நிசி
27-04-2007, 03:35 AM
ஒரு வரியில் பாராட்டினாலும் 'நச்' என்று பாராட்டியிருக்கிறீர்கள் பென்ஸ்.. உங்கள் போன்றவர்களின் பாராட்டுதலும், குட்டுதலும் தானே என் போன்றோரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திடும்.. நன்றி பென்ஸ்..

ஓவியா
27-04-2007, 01:05 PM
(நண்பர் ஒருவர் கல்லூரி கடைசி நாள் விழாவிற்காய் ஒரு கவிதை கேட்டிருந்தார்..)

விடைபெறுகின்றன
பட்டாம்பூச்சிகள்!

கற்பித்தவனை
கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும்
தண்டித்ததையும் மறந்து.....

ஆரம்பமே குரு பக்தியா...பலே


நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!

உருவங்களுக்கு இடையில்
புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!

நட்பிற்க்கு ஈடு இணை யாது? பலே

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!

கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை
கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!

பின்னொருநாள் நட்பின் இலக்கனம் பாட ஒரு நல்ல நினைவு. பலே


பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின.....
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!

இந்த கற்ப்பனை ரொம்ப அழகா இருக்கு...பலே


நேற்றுவரை
அழகிய நட்பை
சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை
சுமந்து அலைவோம்!

நட்பிலும் காவியம் படைக்கலாமா?? பாலே

நாம் சுற்றித் திரிந்து
தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும்
பட்டுப்பூச்சிகளுக்காய்..
மனம் வீசும்......

இங்கு கற்ப்பனையின் உச்சத்தை உரசி செல்கின்றீர்கள் ஷி. பலே

அந்த வனத்தில் வீசிய மனம்
நம் மனதில் வீசும் தினம்...

இந்த வரிகள் பொருந்தாத ஒரு கல்லூரி/பல்கலைகலக மாணவன்/வி யே உலகத்தில் கிடையாது. :ernaehrung004: பலே




அருமை சகோ ஷி,

கவிதையை என்னவென்று சொல்ல, ஏதுவென்று சொல்ல, எழிமையான வார்த்தைகள், படிக்கும் எவருக்கும் புரியும் வண்ணம் மிகவும் அழகிய நடை. அற்ப்புதராஜின் அற்ப்புதமான படைப்பிணை பாடி புகழ்கிறேன். சபாஷ் நண்பா. என் மனதில் ஒட்டியாகிவிட்டது இந்த கவிதை. :icon_drunk:



கொசுரு:
உங்கள ஒரு பிடிபிடித்த அந்த கவிதை போட்டி நினைவில் வந்து போகின்றது.........ஹி ஹி ஹி,
ச்சே நீங்க இவ்வலோ நல்லவருனு தெரிஞ்சி இருந்தா, இன்னும் ஜாஸ்தியா கவிதைய பி(டி)ச்சி இருப்பேன்...சும்மா சும்மா :sport-smiley-002: :icon_35:

ஷீ-நிசி
27-04-2007, 04:05 PM
நன்றி ஓவியா, ஆரோக்கியமான விவாதங்கள் ஒருநாளும் நட்பினை திசை திருப்பிடாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன்...

நீங்கள் என்றும் விமர்சிக்கவேண்டும் என் கவிதைகளை.....

ஓவியா
27-04-2007, 04:13 PM
நன்றி நண்பா.

பிச்சி
03-05-2007, 06:54 AM
அட ஆமாம்.. நான் இதைப் படிகலயே. எப்போவும் போல பின்னீட்டிங்க. என்னோட கவிதை, உங்கள்டதை அப்படியே காப்பி அடிச்சமாதிரி இருக்கு. தலைப்பு முதல்கொண்டு. எதுகை மோனை வெச்சு நல்லா எழுதிரீன்க சாரே அந்த விழாவில கைதட்டல் விண்ணைப் பிளந்திருக்குமே.. சூப்பர்

ஷீ-நிசி
03-05-2007, 07:03 AM
அந்த நண்பர் கவிதை கேட்டு வாங்கியதோட சரி! ஆளையே காணோம்..

நன்றி பிச்சி...

அக்னி
03-05-2007, 07:12 AM
நேற்றுவரை
அழகிய நட்பை
சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை
சுமந்து அலைவோம்!


சத்தியமான வரிகள்... பள்ளிக்காலம் முடிந்ததுமே, நட்புக்குள் விழும், தவிர்க்க முடியாத விரிசலை, அற்புதமான வரிகளில் தந்ததற்கு, பாராட்டுக்கள்...

சுட்டிபையன்
03-05-2007, 07:25 AM
ஆகா நிஷி அண்ணா உங்க பாணியில அழகா வடித்திருக்கிறீங்கள் உங்கள் கவிதையை இப்போதான் நானும் படித்தேன் அழகான கவிதை, அந்த கவிதையை படித்த பின்னர் ஒரு இனம் புரியாத சோகம் பரவுகிறது

ஷீ-நிசி
03-05-2007, 08:59 AM
நன்றி அக்னி.. நன்றி சுட்டி