PDA

View Full Version : பதவி விலகுகிறார் - பிளேமிங்ஓவியன்
25-04-2007, 04:30 AM
எவக்கீரீன் கப்டன் என்று அழைக்கப் பட்ட நியூசிலாந்தின் அணித்தலைவர் ஸ்டீவன் பிளேமிங் நேற்று உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கையுடன் ஏற்பட்ட தோல்வியுடன் தனது ஒரு நாள் போட்டிகளின் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் தான் டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவராகத் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சுட்டிபையன்
25-04-2007, 04:49 AM
பிளமிங் ஒரு சிறந்த காப்டன் அதிக போட்டிகளுக்கு தலமை தாங்கிய சாதனை அனுபவ தலைவர், அவர் பதவியிலிருந்து விலகுவது நியூசிலாந்து அணிக்கு இழப்பேயாகும்

arun
25-04-2007, 05:13 AM
ஒரு அனுபவ கேப்டனை நியூசிலாந்து அணி இழக்க போகிறது

அரை இறுதி தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகும் பிளம்மிங் எங்கே? :aktion033:

முதல் சுற்றில் வெளியேறினாலும் கண்டும் காணாமல் இருக்கும் நமது அணி தலைவர் எங்கே? :D :D

aren
25-04-2007, 08:18 AM
இவ்வளவு தூரம் வந்து தோற்றதற்கே வெட்கப்பட்டு (அதுவும் சாதாரண வீரர்களைக்கொண்டு இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்) தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார், ஆனால் நம் மக்கள் முதல் சுற்றிலேயே தோற்றுவிட்டு (இத்தனைக்கும் பெரிய ஜாமபவான்கள் அனைவரும் நம் குழுவில் இருந்தும்) நம் மக்கள் வெட்கப்படாமல் இன்னும் தொடர்கிறார்கள்.

இந்திய வீரர்களுக்கு Self-Respect இல்லை என்றே இதன்மூலம் தெரிகிறது.

அன்புரசிகன்
25-04-2007, 09:07 AM
சாதாரணமாக சழல் பந்துவீச்சை சாதூரியமாக எதிர்கொள்பவர் பிளமிங். சற்று பின்னர் வந்திருக்கலாம். ஆனால் இலங்கையணியின் வெற்றிக்கு அவர்களின் சுழல்பந்துவீச்சு மற்றும் மஹேலவின் திடீர் பிரகாசமும் தான். முதலில் மெதுவாக ஆடியவர் 60 ஓட்டங்களின் பின் மிக வேகமாக ஓட்டங்களை குவிக்கத்தொடங்கினார்.
இன்னும் ஒன்று மாலிங்க எடுத்த விக்கட்டால் விளையாட்டு திசைதிரும்பியதின் முதல் படி எனலாம். ஆனாலும் நேற்றய தோல்விக்கு பிளமிங் ஐ மாத்திரம் குறை சொல்ல முடியாது. நியூசிலாந்து மிக நேர்த்தியான அணி ஒன்று. தமக்காக விளையாடியதே இல்லை. ஆனாலும் அவரது பதவிவிலகலானது அவரது நல்லஎண்ணங்களைத்தான் காட்டுகிறது. அவரை உதாரணபுருஷராக இந்தியா நினைத்து புதிய சாதனையாளர்களுக்கு இடமளிக்கவேண்டும். அப்பொழுது தான் இந்தியா உருப்படும். இல்லையேல் அதோ கெதிதான்.

ஓவியன்
25-04-2007, 09:29 AM
திறமையான வீரர், சிறந்த களத்தடுப்பாளர், ஒரு தலைசிறந்த அணித் தலைவரென பிளேமிங் வகித்த பாத்திரங்கள் பல. இன்றைய நியூசிலாந்து அணியினரின் பலத்தினது அச்சாணி.

இவர் அணித் தலமையிலிருந்து விலகுவது நியூசிலாந்து வீரர்களுக்கு இழப்பாயினும் அவர் தகுந்த நேரத்தில் இளையவர் ஒருவருக்கு தனது பதவியை விட்டுக் கொடுப்பதன் மூலம் நியூசிலாந்து அணியினரின் முன்னேற்றத்திற்கே வித்திடுகிறாரென நினைக்கின்றேன்.

அவரது பெருந்தன்மை அணிமீதான பற்றுதல் இவற்றுக்குத் தலை வணங்குவோம்.

அன்புரசிகன்
25-04-2007, 09:45 AM
உண்மைதான் ஓவியரே... தலை வணங்கியே ஆகவேண்டும்.
எப்படியும் இருக்கலாம் என்பவர்களில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை செயல் முலம் உணர்த்தியவர்.

ஷீ-நிசி
25-04-2007, 10:14 AM
ஃபிளமிங் ஒரு சிறந்த, கேப்டன்... மற்ற அணி வீரர்களையும் மதிக்கக்கூடியவர். நேற்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது.. தொடர்ந்து 5 -வது முறையாக அரைஇறுதிக்கு வந்து வெளியேறுகிறது... உலக கோப்பைக்கு முன்பே தனக்கு பதவி விலகும் எண்ணம் இருந்ததாகவும், உலக கோப்பை நெருங்கிய சமயத்தில் அவ்வாறு அறிவிப்புகள் செய்து அணியை சங்கடத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.. இதைவிட கடைசியாக அவர் கூறியதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... தன்னுடைய பதவிவிலகல் அணிக்கு நிச்சயம் வளர்ச்சியைக் கொடுக்கும் என்று நம்புவதாக கூறினார்...

பாகிஸ்தான் - இன்சமாம் - விலகல்
வெ.இண்டீஸ் - லாரா - விலகல்
நியுஸிலாந்து - ஃபிளமிங் - விலகல்
பங்களாதேஷ் - அபிபுல் பஷார் - விலகல்
இங்கிலாந்து - வாகன் - விலகல்(?)
இந்தியா - டிராவிட் - ஹி ஹி....

அன்புரசிகன்
25-04-2007, 10:18 AM
பாகிஸ்தான் - இன்சமாம் - விலகல்
வெ.இண்டீஸ் - லாரா - விலகல்
நியுஸிலாந்து - ஃபிளமிங் - விலகல்
பங்களாதேஷ் - அபிபுல் பஷார் - விலகல்
இங்கிலாந்து - வாகன் - விலகல்(?)
இந்தியா - டிராவிட் - ஹி ஹி....

அத்தி பூத்து கண்டிருக்கிறீர்களா... பிளாஸ்டிக் பூ தான் வைக்கவேண்டும்.
யாரும் கலைத்தால் தான் உண்டு.

ஷீ-நிசி
25-04-2007, 10:25 AM
அத்தி பூத்து கண்டிருக்கிறீர்களா... பிளாஸ்டிக் பூ தான் வைக்கவேண்டும்.
யாரும் கலைத்தால் தான் உண்டு.

நேற்றைக்குத்தானே ஃபிளமிங் விலகியிருக்காரு...

அன்புரசிகன்
25-04-2007, 10:28 AM
நான் இந்திய கப்டனைப்பற்றி சொல்லியிருந்தேன். தடித்த எழுத்தில் போட்டிருந்தேனே...

ஷீ-நிசி
25-04-2007, 10:49 AM
அதுவும் சரிதான் ரசிகரே!

அன்புரசிகன்
25-04-2007, 11:53 AM
அதிக ஆவேஷம் வேண்டாமே. முதலில் வெல்லும் போது தாம் தூம் என்று குதிப்பது தோற்கும் பொழுது எகிறுவது இந்த பழக்கங்கள் நல்லதல்ல.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதான்.

அமரன்
03-05-2007, 06:43 PM
உலககிண்ணத்தில் ஏற்பட்ட தோல்வியால் பிலமிங் பதவி விலகினாலும் இப்போதுள்ள அணித்தலைவர்களில் மிகவும் சிறந்தவர் பிளமிங்கே. எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் முகத்தில் பதட்டமோ இல்லை கண்டிக்கத்தக்க விருபத்தகாத மாற்றமோ காணமுடியாது. முகதில் எப்போதும் நம்பிக்கையும் ஸ்திரத்தனமையும் காணப்படும். இறுதிவரை போராடும் குணம் உள்ளவர். அவர பதவி விலகுவதால் நியூசிலாந்து அணிக்கே பாதிப்பு அதிகம்.

அறிஞர்
03-05-2007, 07:11 PM
நல்ல தலைவரை இழக்கிறது.. நியூசிலாந்து..

அவர் இடத்தை சரியாக நிரப்ப... அடுத்தவருக்கு இன்னும் பல நாட்களாகும்.