PDA

View Full Version : மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் 12பாடல்கள



ஓவியா
24-04-2007, 08:49 PM
மக்களே இந்தத் திரியில்


http://www.tamilnation.org/images/literature/barathiyar.jpg
தமிழ் மகான் மகாகவி ஸ்ரீமான் சி.சுப்ரமணிய பாரதியாரின்
12 பாடல்களை தொடுத்து கொடுக்க ஆசைப்பட்டேன். இன்று அதனை வழங்கியும் விட்டேன்.
இந்த இனிய பாடல்கள் அனைத்தையும்,

http://www.thehindu.com/thehindu/mp/2003/03/20/images/2003032000650201.jpg
இசை மாமேதை ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் தெய்வீக குரலில் ஒலித்தது.


நான் தினமும் கேட்டு ஆனந்தமடந்தேன். இனி நீங்களும் கேட்கலாம்.
அந்த பாடல்களின் வரியை அதன் வரிசையிலே கீலே கொடுத்துள்ளேன்.

1. சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா
2. கண்ண பெருமானே
3. தீராத விளையாட்டுப் பிள்ளை
4. வெள்ளைத் தாமரை
5. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
6. பாருக்குள்ளே நல்ல நாடு
7. எத்தனை கோடி இன்பம்
8. கண்ணன் - என் - காதலன் - (காட்டிலே தேடுதல்)
9. வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்
10. கண்ணம்மா - என் காதலி - பாயு மொளி நீ யெனக்குப்
11. நந்த லாலா - காக்கைச் சிறகினிலே
12. கண்ணம்மா - என் காதலி - (குறிப்பிடம் தவறியது)

சுட்டி இங்கே
http://www.tamilsongs.net/page/build/moviedisplay/Bharathiyar_Padal/


நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்

ஓவியா
24-04-2007, 08:51 PM
1. சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் !

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற் சித்திரமே !
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே !

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளங் குளிருதடி !
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடி!

உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி!
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள் வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி!

சற்றும் உன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி!
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடி!

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரங் கொட்டுதடி!
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ?

சொல்லும் மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்!
முல்லை சிரிப்பாலே எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

இன்பக் கதைகளெல்லாம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே உனை நேர் ஆகுமோர் தெய்வமுண்டோ?

மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைர மணிகளுண்டோ?
சீர் பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ?




2. கண்ண பெருமானே

காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே - நீ

காற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே - நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே - நீ
சேற்றிலே குழம்பலென்ன? கண்ண பெருமானே - நீ
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே - நீ

ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே - நீ
எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
போற்றினாரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே நீ

வேறு
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
கண்ண பெருமானே! நின்
பொன்னடி போற்றி நின்றேன்,
கண்ண பெருமானே!

ஓவியா
24-04-2007, 08:53 PM
3. தீராத விளையாட்டுப் பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

4. பின்னலைப் பின்நின்று இழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட் டிருப்போம். (தீராத)


4. வெள்ளைத் தாமரை

ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,
தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்;
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யதிங் கெளிதென்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளி பெறு நாடு;
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழத் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்,
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்,
மான மற்று விலங்குக ளப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்)

நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்)

ஓவியா
24-04-2007, 08:58 PM
5. நாட்டு வணக்கம் - எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

ராகம் - காம்போதி தாளம் - ஆதி

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ? - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?


6. பாரத நாடு - பாருக்குள்ளே நல்ல நாடு

ராகம் - இந்துஸ்தானி தாளம் - தோடி

பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.


சரணங்கள்

ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

ஓவியா
24-04-2007, 09:07 PM
7. இறைவா! இறைவா! - எத்தனை கோடி இன்பம்

பல்லவி

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (ஓ - எத்தனை)

சரணங்கள்

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்
பக்தியென் றொரு நிலை வகுத்தாய் - எங்கள
பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)


8. கண்ணன் - என் - காதலன் - (காட்டிலே தேடுதல்)

ஹிந்துஸ்தானி தோடி - ஆதி தாளம்
ரசங்கள்: பயாநகம், அற்புதம்.

திக்குத் தெரியாத காட்டில் - உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.

1.
மிக்க நலமுடைய மரங்கள், - பல
விந்தைச் சுவையுடைய கனிகள், - எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள், - அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள், - ஒரு ... (திக்குத்)

2.
நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள் - மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள்
மண்டித் துயர்பொடுக்கும் புதர்கள், - ஒரு ... (திக்குத்)

3.
ஆசை பெறவிழிக்கும் மான்கள், உள்ளம்
அஞ்சக் குரல்பழகும் புலிகள், - நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை, - அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு, - ஒரு ... (திக்குத்)

4.
தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் - அதன்
சத்தத் தினிற்கலங்கு யானை அதன்
முன்னின் றோடுமிள மான்கள் - இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை - ஒரு ... (திக்குத்)

5.
கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு
கண்ணும் துயில்படர லானேன் - ஒரு
வேல்கைக் கொண்டுகொலைவேடன் - உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான் - ஒரு ... (திக்குத்)

6.
''பெண்ணே உனதழகைக் கண்டு - மனம்
பித்தங்கொள்ளு'' தென்று நகைத்தான் - ''அடி
கண்ணே, எனதிருகண் மணியே - எனைக்
கட்டித் தழுவமனம் கொண்டேன்.

7.
சோர்ந்தே படுத்திருக்க லாமோ? - நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம் - சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் - நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.''

8.
என்றே கொடியவிழி வேடன் - உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான் - தனி
நின்றே இருகரமுங் குவித்து - அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன்:

9.
''அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா - பிறன்
கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணே - என்றன்
கண்ணற் பார்த்திடவுந் தகுமோ?''

10.
''ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின
தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போலே''

11.
காதா லிந்தவுதை கேட்டேன் - 'அட
கண்ணா!' வென்றலறி வீழ்ந்தேன் - மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே - என்றன்
போதந் தெளியநினைக் கண்டேன்.

12.
கண்ணா! வேடனெங்கு போனான்? - உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ? - மணி
வண்ணா! என தபயக் குரலில் -எனை
வாழ்விக்க வந்தஅருள் வாழி!

ஓவியா
24-04-2007, 09:26 PM
9 போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

போகின்ற பாரதத்தின் பாடல் சுட்டியில் இல்லை அதனால் இங்கு கொடுக்கப்படவில்லை.

9. வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா

இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
விழியி னால் விளக்குவாய் வா வா வா

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா




10. கண்ணம்மா - என் காதலி - பாயு மொளி நீ யெனக்குப்

யோகம்

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! ... 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! ... 2

வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! ... 3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! ... 4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! . ... 5

காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! . ... 6

நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! ... 7

தரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! ... 8

ஓவியா
24-04-2007, 09:41 PM
11. நந்த லாலா - காக்கைச் சிறகினிலே

ராகம் - யதுகுல காம்போதி தாளம் - ஆதி

காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறந் தோன்று தையே, நந்த லாலா!

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா!

கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீத மிசைக்குதடா, நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா!




12. கண்ணம்மா - என் காதலி - (குறிப்பிடம் தவறியது)

செஞ்சுருட்டி - ஆதி தாளம்
சிருங்கார ரசம்


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
பாவை தெரியு தடீ! ... 1

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
நகரத் துழலுவதோ? ... 2

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் - எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள். ... 3

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி! ... 4

ஓவியா
24-04-2007, 10:46 PM
யாரேனும் இந்த பாடல்களை MP3 கோப்பாக மாற்றி எனக்கு அனுப்ப முடியுமா???

நன்றி.

aren
25-04-2007, 08:22 AM
கலக்கலான பதிவு. தொடருங்கள்.

நீங்கள் லண்டனில் படிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது.

அன்புரசிகன்
25-04-2007, 11:32 AM
யாரேனும் இந்த பாடல்களை MP3 கோப்பாக மாற்றி எனக்கு அனுப்ப முடியுமா???

நன்றி.

முயற்சிக்கிறேன்.
நல்லதொரு பதிவு.

aren
25-04-2007, 12:56 PM
யாரேனும் இந்த பாடல்களை MP3 கோப்பாக மாற்றி எனக்கு அனுப்ப முடியுமா???

நன்றி.

கேசட் கடையில் தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

paarthiban
25-04-2007, 03:10 PM
அருமையான தொகுப்பு. நன்றி ஓவியா அவர்களே

மயூ
25-04-2007, 03:12 PM
நன்றி ஓவியா அக்கா!!!
உங்கள் பணி தொடரட்டும்!

சிதம்பரம்
25-04-2007, 04:08 PM
மிக பயனுள்ள பதிவு நன்றி

ஓவியா
28-04-2007, 01:23 AM
கலக்கலான பதிவு. தொடருங்கள்.

நீங்கள் லண்டனில் படிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது.

அப்படிதான் நாமலே டைம் எடுத்துக்குனும்


முயற்சிக்கிறேன்.
நல்லதொரு பதிவு.

நன்றி


கேசட் கடையில் தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அண்ணா லண்டனில் கேசட் கடையில் தேடினால் கிடைக்காது.

ஓவியா
28-04-2007, 01:25 AM
அருமையான தொகுப்பு. நன்றி ஓவியா அவர்களே

நன்றி பார்த்திபன் சார்



நன்றி ஓவியா அக்கா!!!
உங்கள் பணி தொடரட்டும்!

நன்றி மயூ.



மிக பயனுள்ள பதிவு நன்றி

நன்றி சிதம்பரம்

சுட்டிபையன்
28-04-2007, 03:27 AM
யாரேனும் இந்த பாடல்களை MP3 கோப்பாக மாற்றி எனக்கு அனுப்ப முடியுமா???

நன்றி.

அக்கா நீங்கள் கேட்ட பாடல்களில் சில கீழே உள்ள சுட்டியில் உள்ளது, அதை விட மேலதிகமாக பாரதியாரின் சில் பாடல்களும் உள்ளன.



சுட்டி (http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/s/composer.10/):sport-smiley-014:

சுட்டிபையன்
28-04-2007, 03:38 AM
இதோ என்னும் சில மேலதிக பாடல்கள் சுட்டி (http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/s/album.12/artist.103)

ஓவியா
28-04-2007, 01:56 PM
யாரேனும் இந்த பாடல்களை MP3 கோப்பாக மாற்றி எனக்கு அனுப்ப முடியுமா???
நன்றி.


அக்கா நீங்கள் கேட்ட பாடல்களில் சில கீழே உள்ள சுட்டியில் உள்ளது, அதை விட மேலதிகமாக பாரதியாரின் சில் பாடல்களும் உள்ளன.

சுட்டி (http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/s/composer.10/):sport-smiley-014:



இதோ என்னும் சில மேலதிக பாடல்கள் சுட்டி (http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/s/album.12/artist.103)


சஞ்சய் அவர்களே,
நான் கேட்டது:
யாரேனும் இந்த பாடல்களை MP3 கோப்பாக மாற்றி எனக்கு அனுப்ப முடியுமா???

நான் பதிந்த பாடல்களின் சுட்டியை நான் முதல் பின்னூட்டத்திலே கொடுத்து விட்டேனே. இப்படி அங்கே இருக்கு இங்கே இருக்கு என்ற விசயம் எனக்கும் தெரியும்.

பாடல்களின் சுட்டியை கொடுத்தமைக்கு நன்றி.

நண்பர் அன்பு உதவி புரிகிறேன் என்று கூரியுல்லார்.

சுட்டிபையன்
28-04-2007, 03:17 PM
அப்படியே ஆகட்டும் அக்கா

அறிஞர்
04-05-2007, 07:32 PM
வாவ் அருமையான தொகுப்பு.. நன்றி தோழியே.....

ஆதவா
04-05-2007, 11:12 PM
அடடே இதை நான் கவனிக்கலையே!!! பொறுங்க மேடம்.. கேட்டு வந்து சொல்றேன்..

ஓவியா
04-05-2007, 11:30 PM
வாவ் அருமையான தொகுப்பு.. நன்றி தோழியே.....

நன்றி அரிஞரே,
இதெல்லாம் பாரதியின் பொக்கிஷம். கேட்க கேட்க மனம் எங்கோ செல்லும். இதை ரசிக்கும் மக்களின் ரசனை வேறு, அனைவருக்கு இது பிடிக்காது.


அடடே இதை நான் கவனிக்கலையே!!! பொறுங்க மேடம்.. கேட்டு வந்து சொல்றேன்..

ஆதவானந்தா,
இந்த பாடல்கள் உமக்கு 100% பிடிக்கும்,
நீர் இதில் மெய் மறந்து மன்றம் வராமல் இருந்து விடாதே!!!!!!!!!!


ஓவ்வொன்றும் ஒரு சுவை,

இது இரண்டும் சொர்க்கம்.
காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

திக்கு தெரியாத் காட்டில்............அடடா சொல்ல வார்தை இல்லை,
ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா ...........இதுவும் அருமை


அனைத்து பாடல்களும் ஒரு வித தெய்வீகமாக இருக்கும், குரலும் வரியும் நம்மை பாற்கடலில் தாலாட்டும்.

shivasevagan
17-05-2007, 09:27 AM
ஓ! பாரதியார் பாடல்களா! அருமை!

பிச்சி
17-05-2007, 09:33 AM
பாரதின்னா ரொம்ப உசுரு

lolluvathiyar
17-05-2007, 03:01 PM
பாடல்களை டிஜிட்டல்
வடிவில் தந்த ஓவியாவுக்கு
மிக்க நண்றி
நான் எழுத்து வடிவில் தேடி
கொண்டிருந்தேன்
வாழ்க தேசியகவி பாரதியே

ஓவியா
14-07-2007, 02:43 AM
பாரதின்னா ரொம்ப உசுரு

ந*ன்றி பிர*பா.



ஓ! பாரதியார் பாடல்களா! அருமை!

ந*ன்றி சிவ*சேவ*க*ன்.



பாடல்களை டிஜிட்டல்
வடிவில் தந்த ஓவியாவுக்கு
மிக்க நண்றி
நான் எழுத்து வடிவில் தேடி
கொண்டிருந்தேன்
வாழ்க தேசியகவி பாரதியே


நன்றி அண்ணா.

மீனாகுமார்
15-07-2007, 06:29 PM
வாரத்தில் நான்கைந்து முறை என் கைப்பேசியிலிருந்து தேனாக என் காதில் பாய்ந்து கொண்டிருக்கிறது... ஒவ்வொரு வரியாக கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மொத்த கவிதையையே இங்கு கொடுத்தது தேன் கூட்டையே கொடுத்தது போல் உள்ளது...

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடலை கேட்டுக் கொண்டே என் மகனைக் கொஞ்சும் போது இன்பம் பண்மடங்காகி உலகமே மறக்குதய்யா...

மாதவர்
15-07-2007, 10:14 PM
பாரதி பாருக்கு எல்லாம் அதிபதி

இனியவள்
19-07-2007, 06:32 PM
நன்றி ஓவி

அருமையான பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்
உங்கள் திரியின் உதவியுடன்

ஓவியா
05-08-2007, 12:05 AM
வாரத்தில் நான்கைந்து முறை என் கைப்பேசியிலிருந்து தேனாக என் காதில் பாய்ந்து கொண்டிருக்கிறது... ஒவ்வொரு வரியாக கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மொத்த கவிதையையே இங்கு கொடுத்தது தேன் கூட்டையே கொடுத்தது போல் உள்ளது...

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடலை கேட்டுக் கொண்டே என் மகனைக் கொஞ்சும் போது இன்பம் பண்மடங்காகி உலகமே மறக்குதய்யா...

மிக்க நன்றி அண்ணா..

இதுபோல் சுட்டும் சுடர் விழிதான் கண்ணம்மாவும் அருமையான பாடல்.




பாரதி பாருக்கு எல்லாம் அதிபதி

ஹி ஹி ஹி எந்த பாரு, பாருக்குள்ளே பாரத நாடு அதுவா!!!! இல்ல பாருக்குள்ளே பாரத நாட்டு மக்கள் அதுவா???

நன்றி மாதவர்.




நன்றி ஓவி

அருமையான பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்
உங்கள் திரியின் உதவியுடன்

நன்றி இனியவள். உங்களுடைய சில கவிதைகளிலும் பாரதியின் தாக்கம் இருப்பதை கவணித்தேன்.

ஓவியா
07-05-2008, 02:08 PM
மக்களே இந்தத் திரியில்


http://www.tamilnation.org/images/literature/barathiyar.jpg
தமிழ் மகான் மகாகவி ஸ்ரீமான் சி.சுப்ரமணிய பாரதியாரின்
12 பாடல்களை தொடுத்து கொடுக்க ஆசைப்பட்டேன். இன்று அதனை வழங்கியும் விட்டேன்.
இந்த இனிய பாடல்கள் அனைத்தையும்,

http://www.thehindu.com/thehindu/mp/2003/03/20/images/2003032000650201.jpg
இசை மாமேதை ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் தெய்வீக குரலில் ஒலித்தது.


நான் தினமும் கேட்டு ஆனந்தமடந்தேன். இனி நீங்களும் கேட்கலாம்.
அந்த பாடல்களின் வரியை அதன் வரிசையிலே கீலே கொடுத்துள்ளேன்.

1. சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா
2. கண்ண பெருமானே
3. தீராத விளையாட்டுப் பிள்ளை
4. வெள்ளைத் தாமரை
5. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
6. பாருக்குள்ளே நல்ல நாடு
7. எத்தனை கோடி இன்பம்
8. கண்ணன் - என் - காதலன் - (காட்டிலே தேடுதல்)
9. வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்
10. கண்ணம்மா - என் காதலி - பாயு மொளி நீ யெனக்குப்
11. நந்த லாலா - காக்கைச் சிறகினிலே
12. கண்ணம்மா - என் காதலி - (குறிப்பிடம் தவறியது)

சுட்டி இங்கே
http://www.tamilsongs.net/page/build/moviedisplay/Bharathiyar_Padal/


நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்


மக்களே இந்த திரியில் சிவப்பு வர்ணத்தில் நான் கொடுத்துள்ள சுட்டி இப்பொழுது வேளை செய்வதில்லை, இதே பாடல்களை எம்.எஸ் அம்மாவின் குரலில் இதே வரிசையிலே வேறு எங்கும் கேட்க இயலுமா? :medium-smiley-045::medium-smiley-045:

இந்த பாடல்களை கேட்காமல் என்னால் இருக்க முடியவில்லை, :traurig001::traurig001::traurig001: தயவு செய்து யாராவது தேடி தந்து என்னை காப்பாற்றுங்கள்.


விழிநீரை துடைத்தபடியே :traurig001::traurig001:
- ஓவியா

அனுராகவன்
24-05-2008, 03:12 AM
பாரதியின் கவிதை என்றால் எனக்கு உயிர்..
இப்பதான் இந்த திரி கண்ணில் பட்டது..
என் நன்றி ஓவியா!!

Keelai Naadaan
24-05-2008, 05:26 PM
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் (http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/s/artist.120/) பாடல் இந்த தளத்தில் உள்ளது.

சூரியன்
25-05-2008, 09:08 AM
மிகவும் அற்புதமான பகிர்வு நன்றி ஓவியா அக்கா.

ஓவியா
13-11-2008, 03:20 PM
பாரதியின் கவிதை என்றால் எனக்கு உயிர்..
இப்பதான் இந்த திரி கண்ணில் பட்டது..
என் நன்றி ஓவியா!!

நன்றி அனு.


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் (http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/s/artist.120/) பாடல் இந்த தளத்தில் உள்ளது.

மிக்க நன்றி அண்ணா. (ஒரு பாடல் கிடைத்து விட்டது))
ஆஹ மீண்டும் என்னை மறந்துக்கிடக்கிறேன் இன்று.



மிகவும் அற்புதமான பகிர்வு நன்றி ஓவியா அக்கா.

நன்றி சூரியன்.

*******************************************************************************************************


மக்களே இந்த திரியில் நான் பதித்த அத்தனை பாடல்களும் மீண்டும் எனக்கு கேட்கவேண்டும் என்று ஆசை நிதம் ஊறுகிறது.

எங்கேனும் கேட்க வழி உண்டா!! உதவிக்கரம் நீட்டுவீர்களா??

நன்றி.

shana
27-11-2008, 07:23 AM
ஓவியாவின் இரசனையை நானும் இரசிக்கிறேன் நன்றி ஓவியா

ஓவியா
08-12-2008, 11:09 PM
ஓவியாவின் இரசனையை நானும் இரசிக்கிறேன் நன்றி ஓவியா

நன்றி ஷஹன,
ஆனால் இந்த பாடல்களை கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் அதிகமாகவே உள்ளது.

siva
27-12-2008, 06:27 PM
இந்தப் பாடல்களுக்கு விளக்கவுரை கிடைக்குமா? எனக்கு பாரதியார் பாடல்கள் மற்றும் கவிதைகளுக்கு விளக்கம் வேண்டும்...

மதுரை மைந்தன்
27-12-2008, 09:11 PM
அன்பு சகோதரி ஓவியா

நிங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களில் மூன்று பாடல்களின் லிங்கை இங்கு தருகிறேன். 12 சொட்டுக் கண்ணிரீல் 3 சொட்டுக் கண்ணீரை குறைத்துக் கொள்ளவும்.

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா
http://au.youtube.com/watch?v=HPzCda4-HWI

காக்கை சிறகினில...
http://au.youtube.com/watch?v=R_h-TmMPL_4

தீராத விளையாட்டுப் பிள்ளை
http://au.youtube.com/watch?v=c9cOzfkKK0M

shibly591
28-12-2008, 03:09 AM
நல்லதொரு திரி...

குழந்தைகளுக்கு பாரதியார் பாடல்களை மனப்பாடம் செய்து பதிய வைக்க .வைகளை பயன்படுத்தலாம்..

பாராட்டுக்கள்

ஓவியா
04-06-2009, 02:01 AM
இந்தப் பாடல்களுக்கு விளக்கவுரை கிடைக்குமா? எனக்கு பாரதியார் பாடல்கள் மற்றும் கவிதைகளுக்கு விளக்கம் வேண்டும்...

என்னிடமில்லை தங்களுக்கு கிடைத்தால் எனக்கும் ஒரு லிங்க் கொடுங்கள். :)




அன்பு சகோதரி ஓவியா

நிங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களில் மூன்று பாடல்களின் லிங்கை இங்கு தருகிறேன். 12 சொட்டுக் கண்ணிரீல் 3 சொட்டுக் கண்ணீரை குறைத்துக் கொள்ளவும்.

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா
http://au.youtube.com/watch?v=HPzCda4-HWI

காக்கை சிறகினில...
http://au.youtube.com/watch?v=R_h-TmMPL_4

தீராத விளையாட்டுப் பிள்ளை
http://au.youtube.com/watch?v=c9cOzfkKK0M

நன்றி அண்ணா, ஆனால் எனக்கு பாரத ரத்னா சுப்புமாமி பாடியது தான் வேண்டும். :traurig001:




நல்லதொரு திரி...

குழந்தைகளுக்கு பாரதியார் பாடல்களை மனப்பாடம் செய்து பதிய வைக்க .வைகளை பயன்படுத்தலாம்..

பாராட்டுக்கள்

அட ஆமால்லே, :icon_b:

பரஞ்சோதி
04-06-2009, 06:25 AM
அருமையான திரி சகோதரி, இன்று தான் நான் கண்டேன்.

என்னிடம் கூட 50க்கும் மேற்பட்ட பாரதியாரின் பாடல்கள் எம்பி3 கோப்பாக இருக்கின்றன.

தினம் தினம் கேட்டு மகிழ்கிறேன். பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் பாடல்கள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு தேவையா?

கா.ரமேஷ்
04-06-2009, 07:24 AM
அருமையான தொகுப்பு...

sakthim
26-01-2010, 02:24 PM
அருமையான தொகுப்பு, மிக உபயோகமாக இருந்தது, நன்றி.