PDA

View Full Version : ஒரு கடலாக !



ப்ரியன்
24-04-2007, 03:37 PM
எண்ண அலைகள்
கணம் தவறாமல்
எழுந்தெழுந்து மோதி
உடைந்துக் கொண்டே இருக்கின்றன
வெந்நுரை பொங்க!

சின்னதாய்
பெரியதாய்
ஆயிரமாயிரம்
ஆசை மீன்கள்
வலம் வருகின்றன
மண்டிக்கிடக்கும் அழுக்கு பாசிகளை
புசித்து கொழுத்தப்படி!

அன்றொரு நாள்
என்னுள் சிந்திய
ஒற்றை கண்ணீர்த்துளியை
முத்தாக்கி அவளுக்கே
பரிசளித்திருக்கிறேன்!

பளபளப்பு காட்டி
மகிழ்வு பரப்பும் பவளமதின் ஒளியும்;
காதோடு ஒட்டிவைத்தால்
சிறு குரலில்
இசையும் சங்கின் சோகமும்;
மூழ்கிப்போன எண்ணற்ற
ஞாபகக் கப்பல்களதின்
சிதிலமடைந்த பாகங்களும்
சிக்கனமில்லாமல் கிடைக்க கூடும்
சிரமம் பார்க்காமல் அகழ்ந்தால்!

அணைத்து அரவணைப்பதில்
குறுகுறுப்பூட்டும் சிற்றலையாய்;
சீரும் கோபமதில்
புயலின் கோரமாயென
பலவாறாய் உணர்த்தியிருக்கிறேன்;

என்றாலும் எவரும்
எற்க மறுக்கின்றனர்
என்னை ஒரு சிறு கடலாகவேணும் !

- ப்ரியன்.

ஷீ-நிசி
25-04-2007, 04:39 AM
கடலோடு தன்னை ஒப்புமைப்படுத்தி கவிஞர் எழுதியிருக்கும் இந்தக் கவிதையில் மிக அழகான வார்த்தை நயங்கள் உள்ளன... சில இடங்களில் மனம் அப்படியே இலேசாகிறது...

மனம் என்னும் கடலில் எண்ணம் என்னும் அலைகள், மாறி மாறி வந்துக்கொண்டேயிருக்கின்றன.. அதில் ஆசைகள் என்னும் மீன்கள் பலவித அளவில் எழும்பி வருகின்றன..

அன்றொரு நாள்
என்னுள் சிந்திய
ஒற்றை கண்ணீர்த்துளியை
முத்தாக்கி அவளுக்கே
பரிசளித்திருக்கிறேன்!

சிப்பிக்குள் விழும் ஒருதுளி கடல் நீர்தானே முத்தாக மாறுகிறது..
இங்கே உவமையாக்கிட முயற்சித்ததில் இன்னும் முயன்றிருக்கலாம்...

பளபளப்பு காட்டி
மகிழ்வு பரப்பும் பவளமதின் ஒளியும்;
காதோடு ஒட்டிவைத்தால்
சிறு குரலில்
இசையும் சங்கின் சோகமும்;
மூழ்கிப்போன எண்ணற்ற
ஞாபகக் கப்பல்களதின்
சிதிலமடைந்த பாகங்களும்
சிக்கனமில்லாமல் கிடைக்க கூடும்
சிரமம் பார்க்காமல் அகழ்ந்தால்!

ரசித்தேன்! பலமுறை ரசித்தேன்! காதோடு ஒட்டிவைத்தால்
சிறு குரலில் இசையும் சங்கின் சோகமும்; வார்த்தை மிக அழகாக அமைந்துள்ளது.. வாழ்த்துக்கள் நண்பரே! காது அருகை சங்கை வைத்தால் அதில் எழும்பும் ஒரு வித வினோத அமைதியான ஒலி சங்கு அதன் சோகத்தை எழுப்புவதாய் கூறியது அருமையாக உள்ளது..

பவளம், சங்கு, உடைந்துபோன கப்பல்களின் பாகங்கள், கடலில் மூழ்கி தேடினால் இவையெல்லாம் அங்கே கிடைக்கும், என் மனம் என்னும் கடல்தன்னில் நீங்கள் தேடிப்பார்த்தால், இவைபோன்றே பல என்னுள் புதைந்திருக்கும்..


அணைத்து அரவணைப்பதில்
குறுகுறுப்பூட்டும் சிற்றலையாய்;
சீரும் கோபமதில்
புயலின் கோரமாயென
பலவாறாய் உணர்த்தியிருக்கிறேன்;

என்றாலும் எவரும்
எற்க மறுக்கின்றனர்
என்னை ஒரு சிறு கடலாகவேணும் !

கடல்போல நானும், சீறும் அலையென கோபமாயும் இருந்துள்ளேன், தழுவும் அலையாய் மென்மையாயும் இருந்துள்ளேன், ஆனாலும் யாரும் கவிஞரை சிறு கடலெனவும் ஒத்துக்கொண்டதில்லையே என்று ஏங்குகிறார்...

கடலும் ஏங்குகிறதாம்...

என்றாலும் எவரும்
எற்க மறுக்கின்றனர்
என்னை ஒரு சிறு ப்ரியனாகவேனும்.....:aktion033:

கவிதை படித்தவுடனே மனம் லயித்ததை கொட்டவேண்டும் என்று மனம் விரும்பியது... வாழ்த்துக்கள் நண்பரே!

poo
25-04-2007, 05:50 AM
கவிதை அழகோ அழகு. அந்த கடைசிவரியில் ஆசை, கோபம், ஏமாற்றம் என எல்லாம் கலந்த கலவை நிற்கிறது..

வாழ்த்துக்கள் ப்ரியன்.. அடிக்கடி மன்றம் வாருங்கள்.. கவிதை மழையில் கடலாக்குங்கள்..

பென்ஸ்
26-04-2007, 02:45 PM
விக்கி...

மனிதனின் பரிமான வளர்ச்சியின் ஒரு மேல்படியின் தேவைதானே இது...

அடிப்படை தேவைகள், பாதுகாப்பு தேவைகள், காதல்/அன்பு தேவைகள் கடந்து வரும் மனிதனின் சமுதாய தேவைகள் அல்லவா இது....

சமுதாயத்தால் ஏற்றுகொள்ளபடுவது. அங்கிகாரம்... மற்றவர்களால் மதிக்கபடுதல் என்று...
இதில் எதார்தம் வரும் வரை குழப்பம் இருக்கும், பதில் கிடைத்துவிட்டால்... தேவை பிரமிடின் உச்சியில்....

எதோ ஒரு பழைய பாடல் , எம்ஜீஆர், பாடல் என்று தெரியும்....
"உன்னையறிந்தால், நீன் உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்..."

அறிய முற்படும் முதல் நிலை..
சுயம் அறிய வேண்டி நான் பல உளயியல் வல்லுனர்கள் பல வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.
நான் பயன் படுத்துவது இவைகளின் கலவையான ஒரு வழிமுறை...
1, வினாவுதல்
2, அறிதல்
3, பொருத்துதல்
4, தெளிதல்
5, ஏற்றுகொள்ளுதல்/ மாற்றம்.

இந்த முறையை கடை பிடித்து பாருங்கள்....

(நேரம் கிடைத்தால் இதை பற்றி விரிவான பதிவுகள் கொடுக்கிறேன்)