PDA

View Full Version : தமிழும், பிறமொழிச்சொல்லும்



அரசன்
23-04-2007, 02:51 PM
தமிழகத்தின் மீது பல்வேறு காலங்களில் நிகழ்ந்த பன்னாட்டு படை எடுப்பால் தமிழ் மொழியில் ஆங்காங்கே வடமொழி மற்றும் பன்மொழிச் சொற்கள் தமிழில் கலந்தும் பழக்கத்திலும், புழக்கத்திலும் உள்ளன். எனவே அவற்றை தெளிவாக பிரித்து இப்பகுதியில் காண்போம். மேலும் இவற்றை படித்தாலே தமிழை வடமொழிக் கலப்பின்றி பேசலாம், எழுதலாம்.


வடமொழிச்சொல் - தமிழ்ச்சொல்

அபிஷேகம் - திருமுழுக்கு
அர்ப்பணம் - படையல்
அதிபர் - தலைவர்
அநேகம் - பல
அபிப்ராயம் - கருத்து
அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைக்கேடு
அசலம் - உறுப்பு
அந்தரங்கம் - மறைவு
அபகரி - பறி
அபூர்வம் - புதுமை
அயோக்கியன் - நேர்மையற்றவன்

lolluvathiyar
23-04-2007, 03:28 PM
மூர்த்தி, பிறமொழி கலந்தால் அதில்
பாதிப்பு ஒன்றும் இல்லை
தமிழ் மொழி எளிமையானதாக இருக்க
பிற பொழி கலப்பதில் பயன் தான்.
பாமரர்களுக்கு எது சிறந்த தமிழோ
அதுதான் சிறந்த தமிழ்
பண்டிதர்களின் தமிழ் ஏட்டில் மட்டுமே இருக்கும் ஒன்று
தமிழை தூய்மை படுத்தும் விசயத்தில் அதை கடினமாக்கினால்
அது நம் மொழி வளர்ச்சி நல்லதல்ல.

மயூ
23-04-2007, 03:33 PM
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பர்!!!
அன்று வட மொழி கலக்காது இருந்திருந்தால் தென்னகம் முழுவதும் தமிழ் நாடாக இருந்திருக்கும்!!!
இன்று ஆங்கிலம்!!!

ஓவியா
24-04-2007, 04:53 AM
மூர்த்தி அண்ணா, நல்ல திரி. பாராட்டுக்கள்.

ஒரு குறிப்பு,
இது போல் ஒரு திரி நண்பர் மோகன் தொடங்கியுள்ளார்,
பலர் கலந்து சிறபித்து இருகின்றனர்.

இங்கே சுட்டியை தட்டி காணுங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8695