PDA

View Full Version : பத்திரிக்கைக்கு அனுப்புவது எப்படி?



அரசன்
23-04-2007, 04:23 AM
ஒரு படைப்பை பத்திரிக்கைக்கு அனுப்பும் போது நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள், கடைப்பிடிக்க வேண்டியவை மற்றும் விதிமுறைகள் என்னென்ன? மேலும் எந்த அஞ்சல் முறையில் அனுப்புவது? எவ்வாறு அனுப்புவது? போன்ற விசயங்கள் குறித்து விவரம் தெரிந்தவர்கள் விவரமாக தெரியப்படுத்துங்கள். நன்றி!

:angel-smiley-026:

RRaja
23-04-2007, 04:59 AM
பொதுவாக எந்தப்பத்திரிக்கைக்கு அனுப்பவேண்டுமோ அதன் எடிட்டருக்கு அனுப்பவேண்டி அந்தந்தப்பத்திரிக்கைகளில் முகவரியுடன் பார்த்திருக்கிறேன். இதற்கென்று தனி அஞ்சல் / மேலுறைகள் தபால் அலுவலகங்களில் கிடைக்கின்றன.

சுட்டிபையன்
23-04-2007, 05:02 AM
அனுப்பும் செய்திகள்,கட்டுரைகளிற்க்கு மறவாமல் ஆதரத்தை அனுப்பி வைக்கவும்

aren
23-04-2007, 05:58 AM
மிகவும் ஜாக்கிரதையாக செயல்படவேண்டிய விஷயம். ஆகையால் கவனம் தேவை. உங்களுடைய படைப்பை மற்றவர்கள் எடுத்து சிறிது மாற்றம் செய்து அவர்களுடைய பெயரில் படைத்துவிடுவார்கள், ஆகையால் கவனமாக இருக்கவும்.

என் தந்தையும், தாத்தாவும் நிறைய இப்படி இழந்திருக்கிறார்கள். தான் எழுதிய கதை வேறு ஒருவர் (அதிலும் மிகவும் நெருக்கமானவர்) பெயரில் வந்து அதையும் காசு கொடுத்து வாங்கி வந்தவர்கள் எங்கள் குடும்பத்தினர். ஆகையால் என் தந்தையும், தாத்தாவும் அவர்களுடைய சுய இன்பத்திற்காக கதைகளை எழுதி அதை பிரசுரிக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் இறந்தபிறகு அதை எரித்துவிடும்படி சொல்லிவிட்டு சென்றார்கள். அதன்படி என் பாட்டி அனைத்தையும் போட்டு எரித்தார்.

ஆகையால் உங்கள் கதையின் ஆதாரத்தை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

தெரியாத எந்த நிறுவனத்திற்கும் கதையை அனுப்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். முழுக்கதையையும் அனுப்பவேண்டாம். அதன் சாராம்சத்தை மட்டும் அனுப்பவும். அவர்களுக்கு கதை பிடித்திருந்தால் பின்னர் நேரடியாக பேசலாம் என்று சொல்லுங்கள்.

இது என்னுடைய கருத்து மட்டுமே. நீங்கள் சுயமாக முடிவெடுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பரஞ்சோதி
23-04-2007, 07:00 AM
ஆரென் அண்ணாவின் ஆலோசனைகள் அற்புதமானவை.

அண்ணாவின் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வு மன வேதனை கொடுக்கிறது.

leomohan
23-04-2007, 07:33 AM
இணையத்தில் பிரசுரிப்பது அதிக வரவேற்ப்பை இந்நாட்களில் தருகிறது.