PDA

View Full Version : வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு



arun
22-04-2007, 05:19 AM
வங்க தேச தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு நாள் தொடரில் இருந்து சச்சினுக்கும்,கங்குலிக்கும் ஓய்வு கொடுத்துள்ளனர் (ஓய்வு அல்லது நீக்கம்?)

இர்பான் பதான்,அஜித் அகர்கர் மற்றும் கர்பஜன்சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்

வீரேந்தர் சேவாக் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

திராவிடின் வற்புறுத்தல் காரணமாக ஒரு நாள் தொடருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது (என்ன தான் நடக்குது?)

சேவாகுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுத்து விட்டு ஒரு நாள் தொடரில் இருந்து நீக்கி இருக்கலாம்

புதிதாக மனோஜ் திவாரி,ராஜேஷ் பவார் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது

தினேஷ் மோங்கியா,பியூஷ் சாவ்லா,வி.ஆர்.வி.சிங்.ஆர்.பி.சிங் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

கைப் மற்றும் சுரேஷ் ரெய்னா மீண்டும் சேர்க்கப்படவில்லை

தோனிக்கு மீண்டும் வாய்ப்பை வழங்கி உள்ளனர் (உலக கோப்பையில் இவர் என்ன சாதித்தார்?)

அணிக்கு துணை கேப்டன் தேர்ந்து எடுக்கப்படவில்லை

அணி விபரம்

டெஸ்ட் அணி

ராகுல் திராவிட்(கேப்டன்),சச்சின் தெண்டுல்கர்,சவுரவ் கங்குலி,யுவராஜ் சிங்,வாசிம் ஜாபர்,வி.வி.எஸ்.லக்ஷ்மண்,தினேஷ் கார்த்திக்,தோனி,அனில் கும்ப்ளே,ஜாகீர் கான்,வி.ஆர்.வி.சிங்,முனாப் பட்டேல்,ஸ்ரீ சாந்த்,ரமேஷ் பவார்,ராஜேஷ் பவார்

ஒரு நாள் தொடருக்கான அணி

ராகுல் திராவிட்(கேப்டன்),வீரேந்தர் சேவாக்,யுவராஜ் சிங்,கவுதம் கம்பீர்,தோனி,ராபின் உத்தப்பா,தினேஷ் கார்த்திக்,மனோஜ் திவாரி,ஸ்ரீ சாந்த்,முனாப் பட்டேல்,ஜகீர் கான்,பியூஷ் சாவ்லா,ஆர்.பி.சிங்,ரமேஷ் பவார்,தினேஷ் மோங்கியா

அணி தேர்வு சரியானது தானா நண்பர்களே?

aren
22-04-2007, 05:32 AM
அனைவருக்கும் நம் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம் (இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்).

தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் சிறப்பாக ஆடினால் அவர் அடுத்த தொடரில் உதவி காப்டனாக அறிவிக்கப்படலாம். பின்னாளில் காப்டனாகவும் அவருக்கு வாய்ப்பிருக்கிறது. இதனாலேயே அவரை தமிழ்நாடு 20/20 அணிக்கு தலைவராக அறிவித்திருக்கிறது தமிழக கிரிக்கெட் வாரியம். அவரும் கோப்பையை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளார்.

இந்த தடவை தோனி உயிரைக்கொடுத்து ஆடவேண்டும். இரண்டு விக்கெட் கீப்பர்களை ஒரே அணியில் வைத்திருப்பது அபூர்வம்.

விரேந்திர ஷேவாக்கிற்கு ஏன் மறுபடியும் இடம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.

பழுத்த கொட்டைகள் மறுபடியும் டீமூக்குள் வந்துவிடும் என்று நினைக்கிறேன். இந்த புதியவர்கள் ஒரு ஆட்டத்தில் சரியாக ஆடவில்லலயென்றாலே கழட்டிவிட்டுவிடுவார்கள். இதைத்தான் நாம் பல வருடங்களாக பார்த்து வருகிறோமே.

சுரேஷ் ரைனா அடிபட்டிருப்பதால் ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அடுத்த தொடரில் நிச்சயம் ஆடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

சுட்டிபையன்
22-04-2007, 05:51 AM
ஒருதடவை முயற்ச்சிதான் செய்து பாக்கட்டுமே, அணியை ஒரு சில தொடர்க்ளுக்கு மட்டும் தேர்வு செய்யாமல், நீண்ட கால போட்டித்தொடர் நோக்கில் தேர்வு செய்து புது வீரர்களிற்க்கு பயிர்ச்சி அளிக்கலாம்

ஓவியன்
22-04-2007, 05:55 AM
வங்கதேசத்தில் வைத்து ஒரு சதம் அடித்துவிட்டால் போதும் சேவக்கிற்கு அவர் இன்னும் ஒரு வருடத்திற்கு அணியில் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்.:icon_clap:

பரஞ்சோதி
22-04-2007, 06:23 AM
இன்னும் வாய்ப்பு கொடுக்க வேண்டிய இளம் வீரர்கள் நிறைய பேர் இருக்காங்க, குறிப்பாக டெல்லி வீரர் தவான்.

சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இடம் பிடிப்பார், கார்த்திக்கு நல்ல எதிர்காலம் இருக்குது. வேகப்பந்து வீச்சில் இனிமேல் புதியவர்கள் வருவது நல்லது.

ராஜா
22-04-2007, 07:07 AM
ஓ.. விளையாட்டுத் திரியா..?

நமக்கும் இதற்கும் வெகுதூரம்.

ஓவியன்
22-04-2007, 07:12 AM
ஓ.. விளையாட்டுத் திரியா..?

நமக்கும் இதற்கும் வெகுதூரம்.



பரவாயில்லை ராஜா அண்ணா!

இங்கேயும் நீங்கள் கலக்கலாம், ஏனென்றால் கிரிக்கற் வீரர்கள்ளெல்லாம் சமீப காலத்தில் நகைச் சுவை வீரர்களாகவே மாறிவிட்டனரே!:smartass:

சுட்டிபையன்
22-04-2007, 07:12 AM
ஓ.. விளையாட்டுத் திரியா..?

நமக்கும் இதற்கும் வெகுதூரம்.



எத்தனை கிலோ மீட்டர் தூரம்:smartass:

arun
23-04-2007, 04:53 AM
வங்கதேசத்தில் வைத்து ஒரு சதம் அடித்துவிட்டால் போதும் சேவக்கிற்கு அவர் இன்னும் ஒரு வருடத்திற்கு அணியில் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்.:icon_clap:

நீங்கள் சொல்வது சரியே :D

ஆனால் வெங்சர்க்காரின் நேற்றைய பேட்டியை பார்த்தீர்களா?

ராகுல் திராவிடுக்கு கூட ஓய்வு கொடுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்

எனவே கண்டிப்பாக ஏதேனும் மாற்றம் வரும் என்று நம்பலாம்
அதாவது ஒரு சதம் அடித்து விட்டு ஒரு வருடம் எல்லாம் கால தள்ள முடியாது :sport009:

aren
23-04-2007, 06:03 AM
இது வெறுமனே மக்களை ஏமாற்றுவதற்கு சொல்லும் பொய். டெண்டுல்கரை மீண்டும் உள்ளே கொண்டுவருவதற்கு மக்களை தயார் செய்கிறார்கள் அவ்வளவே.

suraj
23-04-2007, 04:02 PM
என்னப் பண்ணினாலும் பரவாயில்லை. கோப்பையை கொண்டுவந்தால் போதும்.

ஓவியா
24-04-2007, 03:33 AM
தம்பி சூரஜ்,
திறமையாக விளையாடி கோப்பையை கொண்டுவந்தால் தான் சிறப்பு.

pradeepkt
24-04-2007, 05:23 AM
அட அட அட...
ஓவியா இன்றைய கிரிக்கெட் நிலையைத் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள்... போற போக்கில் நம்ம மக்கள் "என்ன பண்ணினாலும்" என்பதைத் தப்பாக (சரியாக)ப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

ஓவியா
24-04-2007, 05:30 AM
நன்றி பிரதீப்

இந்த உலக ஃமேட்சில் நாம் அனைவரும் நொந்து போன விசயம்தான் நினைக்கவே பத்திகிட்டு வருதே!!

arun
25-04-2007, 05:16 AM
என்னப் பண்ணினாலும் பரவாயில்லை. கோப்பையை கொண்டுவந்தால் போதும்.

அதற்காக நம்ம வடிவேலு மதிரி கடையிலா வாங்கி வர முடியும் ? :D :D

அமரன்
03-05-2007, 06:45 PM
கங்குலிக்கு வாய்ப்புக் கொடுக்காதது ஏனோ. மற்றப்படி அணி பரவாயில்லை. புதுமுக சுழல்பந்துவீச்சாளர் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றார். பார்ப்போமே அவர் என்னத்தை சாதிக்கப் போகின்றார் என்று.

அறிஞர்
03-05-2007, 07:05 PM
புதியவர்கள் பலரை.. அறிமுகப்படுத்தவேண்டும்..

பழையவர்களை கழித்தல் மிகவும் அவசியமானது.

சேவாக்கை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்..

கங்குலியை சேர்க்காதது.. வருத்தமே..

அமரன்
03-05-2007, 07:12 PM
என்ன அறிஞரே இப்படிச் சொல்லிட்டீங்க. உலககிண்ணத்தில் ஷேவாக் விளாசினாரல்லவா? (எந்த அணியுடன் என்றுமட்டும் கேட்டு விடாதீர்கள்)

அறிஞர்
03-05-2007, 07:15 PM
என்ன அறிஞரே இப்படிச் சொல்லிட்டீங்க. உலககிண்ணத்தில் ஷேவாக் விளாசினாரல்லவா? (எந்த அணியுடன் என்றுமட்டும் கேட்டு விடாதீர்கள்)
இது கொஞ்சம் ஓவரா இல்லை...

பெர்முடா, கனடா, கென்யாவுக்கு எதிராக மட்டும் சேவாக்கை சேர்க்கலாம் என்பது என் எண்ணம்.

அமரன்
03-05-2007, 07:21 PM
ஹி ஹி ஹி......:natur008: :natur008: :natur008: :natur008: