PDA

View Full Version : பாகிஸ்தானின் புதிய அணித்தலைவர்



சுட்டிபையன்
21-04-2007, 02:54 PM
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கப்டனாக ஷோயிப் மாலிக் (25 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் வரை ஷொயிப் மாலிக் கப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசீம் அஷ்ரப் தெரிவித்தார்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது;

உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின் கப்டன் பதவியிலிருந்து இன்சமாம் விலகியதையடுத்து அந்த இடத்துக்கு முதலில் அணியின் மூத்த வீரர் முகமது யூசுப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அவர் கப்டன் பொறுப்பை ஏற்க மறுத்ததையடுத்து சகல துறை வீரர் ஷோயிப் மாலிக்கை கப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு இறுதி வரை நடைபெறும் போட்டிகளில் ஷோயிப் மாலிக்கின் திறமை பரிசோதிக்கப்படும். அதன் பின் அவர் கப்டனாக தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும். அணியில் உள்ள மூத்த வீரர்கள் மாலிக்குக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

137 ஒருநாள் போட்டிகளிலும், 18 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஷோயிப் மாலிக், அனைத்து வீரர்களினதும் நன்மதிப்பைப் பெற்றவர்.

தினக்குரல்

மனோஜ்
21-04-2007, 03:12 PM
வெற்றி பெற ஷோயிப்புக்கு வாழ்த்துக்கள்
தகவல் பதிந்த சுட்டிக்கு நன்றிகள் அப்படிளே தினக்குரலுக்கும்

aren
22-04-2007, 03:03 AM
ஷோயிப் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆனால் இது முகமது யூசுப்பிற்கு கொடுத்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

நன்றி வணக்கம்
ஆரென்

arun
22-04-2007, 04:28 AM
ஷொயபிற்கு எனது வாழ்த்துக்கள் இவராவது நீண்ட நாட்கள் கேப்டனாக இருக்கிறாரா என பார்ப்போம்

ஓவியன்
22-04-2007, 04:40 AM
மாலிக் ஒரு திறமையான வீரர் அவரது திறமை அணியை வழி நடத்துவதிலும் ஜொலிக்கட்டும்.

பரஞ்சோதி
22-04-2007, 07:09 AM
முகமது யூசுப் திறமையானவர்.

சோயிப் தனிப்பட்ட விளையாட்டில் திறமையானவர் தான், ஆனால் கேப்டனாகு தகுதி அவருக்கு கிடையாது என்றே சொல்வேன், இன்னும் பக்ககுவமடையாத வீரர், பல போட்டிகளில் அநாகரீகமாக நடந்து கொண்டவர்.

அப்துல் ரசாக் நல்ல தேர்வாக இருந்திருப்பார்.

சுட்டிபையன்
22-04-2007, 08:03 AM
முகமது யூசுப் திறமையானவர்.

சோயிப் தனிப்பட்ட விளையாட்டில் திறமையானவர் தான், ஆனால் கேப்டனாகு தகுதி அவருக்கு கிடையாது என்றே சொல்வேன், இன்னும் பக்ககுவமடையாத வீரர், பல போட்டிகளில் அநாகரீகமாக நடந்து கொண்டவர்.

அப்துல் ரசாக் நல்ல தேர்வாக இருந்திருப்பார்.

இந்த கிரிக்கட் சபை நிர்வாகத்தை யாராலும் புரிந்து கொள்ளவே முடிவதில்லை, எல்லா நாட்டு நிர்வாகங்களும் கிட்டத் தட்ட இப்படித்தன் உள்ளன

ஓவியன்
22-04-2007, 08:06 AM
அப்துல் ரசாக் நல்ல தேர்வாக இருந்திருப்பார்.
உண்மைதான் நான் ரசாக்கைத் தான் எதிர் பார்த்தேன்.

சுட்டிபையன்
22-04-2007, 08:23 AM
உண்மைதான் நான் ரசாக்கைத் தான் எதிர் பார்த்தேன்.

அப்துல் ரசாக் அடிக்கடி உடல் உபாதைகளிற்க்கு உற்படுபவராச்சே

அமரன்
03-05-2007, 07:30 PM
யூனிஸ்கான் ஏன்ன ஆனார். மாலிக் பரவாயில்லை. தலைவராக எப்படியோ?

அறிஞர்
03-05-2007, 07:34 PM
அணித்தலைவர் மாறுவதால்.... ஆட்டத்தின் போக்கு மாறிவிடுமா என்ன???