PDA

View Full Version : கொழும்பு நகர (நரக) வாழ்க்கை...



slgirl
19-04-2007, 12:06 PM
கொழும்பு நகர (நரக) வாழ்க்கை...

மனிதம் என்பதே இங்கு இல்லை
மனிதரோ கோர உணர்வுகளுடன்
மண்ணில் வாழ முடியா தமிழர்
மரத்துப்போய் இங்கு வருகின்றனர்
மரணத்துக்கு தள்ளும் வண்ணம்
மனிதர்கள்(சிங்களவர்) நடக்கின்றனர்

செல்லும் இடங்களிலெல்லாம்
செல்லாத சோதனை செய்வர்
செல் குண்டு வீச்சுக்களை தாங்கியவர்கள்
சொல் வீச்சுக்களை கேட்டு தவிக்கின்றனர்
செருப்பாக கூட இருந்து உதவுவார்கள்
செருப்பாகவும் மதிக்கான் சிங்களவன்

சிந்தனைகளின் ஊற்றாக திகழ்பவர்கள்
சிந்தனை வாதிகள் எம்மக்கள் என்றும்
சிந்தனை ஆமாம் மகிந்த சிந்தனை
சிந்திக்க வைக்கவில்லை எம்மவரை
சிதறடிக்க வைக்கின்றது இங்கே
சிறுமையாக்க படுகின்றார்கள் எம்மவர்கள்

பொருளுக்கு ஏற்ப விலையில்லை
பொறுமையாக கூலி வேலை செய்து
பெறும் அரைக்காசில் என்ன வாங்குவது
பெருமையாக வாகனத்திலே இருந்தபடி
பொருளுக்கு ஓடர் கொடுப்பார்கள்
பெருமை பிடித்த பணத்தின் அடிமைகள்

நிம்மதி என்பது இங்கு இல்லை எம்மவர்கு
நித்தமும் ஆமி பொலிஸ் சோதனைகள்
நித்திரை என்றும் பாராது நடு நிசியில் வந்து
நித்தம் படுத்தும் பாடு சொல்லிட வார்த்தையில்லை
நியாயமான காரணங்கள் இல்லாமலே
நிறுத்தி வைப்பார்கள் சோதனை சாவடிகளிலே

கெட்டவன் சிங்களவன் எனும் எண்ணம் வர
கெட்ட செயல்கள் செய்வதே காரணமிங்கு
கொழும்பு காசில்லாட்டி எழும்பு என்பார்கள்
கெட்ட இனம் உள்ள இந்த இடத்தில்
கெட்டவர்களுடன் வாழ்வது கடினமே எம்மவர்கு
கொழும்பு என்று பெயர் தான் தமிழருக்கு விடிவில்லை

பாசையை காரணம் காட்டியே பலர் உயிர் போகும்
பாசங்கள் அறியாத அரக்கர்களாச்சே இந்த இனம்
பாசறைகள் பல சென்று எம்மவர் கற்பது
பாசங்களின் உணர்வுகளின் பெறுமதியை தானே
பாசாங்கு காட்டி இங்கு பணம் பறித்திடும்
பாழாப்போன குடுவுக்கு அடிமையானோர்(கள்ளர்)

உணர்வுகளுக்கு இங்கே மதிப்பில்லை
உறுதியாய் சொல்கின்றேன் நானிங்கு
உண்மைகள் அத்தனையையும் சொல்கிறேன்
ஊனமுற்று சிங்கள இனத்துடன் வாழ்வதை விட
உண்மையுள்ள மானமுள்ள தமிழனென
ஊரிலே இருந்து சாவதே மேன்மை....

அன்புரசிகன்
19-04-2007, 12:10 PM
உண்மைகளை புட்டு புட்டு வைக்கிறீர்கள்.
சிறு வேற்றுமை உங்கள் வரிகளில்.
ஊனமுற்று சிங்கள இனத்துடன் வாழ்வதை விட
உண்மையுள்ள மானமுள்ள தமிழனென
ஊரிலே இருந்து சாவதே மேன்மை....
உயிர் போனால் பரவாயில்லை.
போவது மானமென்றால் என்ன செய்ய?

crisho
19-04-2007, 12:35 PM
ஆ ஹா.... இவ்வளவு கொடுமையா??
நான் அங்கு இருக்கும் போது இவ்வளவு அட்டூளியங்கள் இல்லையே??

சரி இப்படியே எல்லா தமிழரும் எண்ணிட்டா யார் தான் வாழ்வதாம்?

poo
20-04-2007, 08:27 AM
கேட்கவே கஷ்டமா இருக்கு... மௌனம்தான் எங்களால் முடிந்ததென ஊமையாக வேண்டியிருக்கிறது.

ஓவியன்
21-04-2007, 12:38 PM
சகோதரி உங்கள் வரிகளின் யதார்த்தம் அறிந்தவன் நான், உண்மைகளை வெளிக் கொணரும் உங்கள் பணி மேன் மேலும் சிறக்கட்டும்.

ராசராசன்
21-04-2007, 12:49 PM
ஒவ்வொரு வரிகளிலும் தெறிக்கும் சோகம், இதயமுள்ள எம்மனிதனையும் உருகவைக்கும்.
விரைவில் உம் துயரங்களுக்கு விடிவுகாலம் வர வேண்டுகிறேன்.

இளசு
21-04-2007, 10:34 PM
ஒவ்வொரு வரிகளிலும் தெறிக்கும் சோகம், இதயமுள்ள எம்மனிதனையும் உருகவைக்கும்.
விரைவில் உம் துயரங்களுக்கு விடிவுகாலம் வர வேண்டுகிறேன்.

தேனிசை நான் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிட்டார்.

இலங்கைப்பென்ணின் துல்லிய பதிவால் நெஞ்சம் நோகிறது.

உடல்நலிந்த அப்பாவுக்கு ஒரு ஹார்லிக்ஸ் வாங்கவும் இயலாத
சோகச்செய்தி படித்தேன்..

எல்லாச் சோகங்களும் விரைவில் நம்மவர் வாழ்வில் இருந்து விலக வேண்டுகிறேன்....

ஓவியா
22-04-2007, 10:19 PM
கவிதை படித்து உருகிதான் போனேன்.

ஓவ்வொரு வரியிலும் சோகம் சொட்டுகிறது.

என் வருத்தங்கள் தோழி.

கவிதையை கவிதையாய் பார்த்தால். மிகவும் நன்று.

vijayan_t
23-04-2007, 12:47 AM
உங்கள் கண்ணீர் கவிதை இதையத்தை தொடுகின்றது.
நம் மக்களின் கண்ணீர் கதையை கேட்டு நெஞ்சம் கணக்கின்றது சகோதரி.

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்

அப்பொழுது உங்களைவிட சந்தோஷப்படுவது உலகில் யாருமில்லாமல் இருப்பர்.