PDA

View Full Version : மழையும் நீயும்



பிச்சி
19-04-2007, 11:39 AM
மழையின் முகப்பை எடுத்து
முகர்ந்து கொண்டேன்
நீயும் உன் வியர்வை நாற்றமும்
நுனிமூக்கில் நிற்கிறது.


துளிகளில் துவைக்கிறாய்
உதடுகளை
உலுக்கிய உள்ளத்தை
மழையின் கோபத்தில்
மறைத்து வைக்கிறாய்.


xxxxxxxxxxxxxxxxxxx


சின்னத் தூறலுக்குள்
தீபமாய் ஒளிருகிறாய் நீ
சாரல் மழையின்
மண்வாசனையை நுகரும்
பூமித்தாயின் பிள்ளையாட நீ


செவிகள் கேட்கும்
மழையோசையின்
இன்பத் திருவிழா நீ!
இன்னமும் விளங்காத
மின்னலின் கருவறைக்குள்
உதைத்துக் கொண்டிருக்கும்
இடியும் நீ!


உன்னை மழையோடு
ஒப்பிட நினைக்கிறேன்
தோற்றுப் போய்
நின்றுவிடுகிறது அது.

slgirl
19-04-2007, 11:48 AM
பிச்சியின் எழுத்துக்களில் தெரிகின்றது ஆழமான எண்ணவோட்டம் அருமை தங்கையே....

உங்களின் கவிதைகள் படிக்க கிடைத்தமை என் பாக்கியமே நன்றிகள்

ஷீ-நிசி
19-04-2007, 03:51 PM
லாவகமான வார்த்தைகளில் கவிதைகளில் புகுத்துவதில் பிச்சி சிறந்தவர்... வாழ்த்துக்கள் பிச்சி! நன்றாக உள்ளது.

மனோஜ்
19-04-2007, 04:08 PM
கவிதையில் நனைந்து விட்டேன் அருமை பிச்சி அவர்களே

paarthiban
19-04-2007, 04:43 PM
நல்ல கவிதை. பிச்சி அவர்களுக்கு பாராட்டுகள்.

ஓவியா
19-04-2007, 07:03 PM
பிச்சி நலமா???? கவிதை அருமைடா கண்ணு.


உன்னை மழையோடு
ஒப்பிட நினைக்கிறேன்
தோற்றுப் போய்
நின்றுவிடுகிறது அது.

இந்த வரிகள் மனதை கொள்ளையடிக்கின்றன!!!!!!!!!!சபாஷ்


கவிதை மழை பொழியும் எங்கள் பிச்சு வாழியே. :icon_08:

ஆதவா
19-04-2007, 08:59 PM
பிச்சியின் கவிதை பற்றி நான் என்னதான் சொல்ல?

அருமை என்றோ , பிரமாதம் என்றோ நான் சொல்லத் தகுதி அற்றவன்.

மேலும் எழுதுங்கள் பிச்சி. நிறைய கவிதைகள் தமிழ்மன்றத்திற்கு கொடுங்கள்...

poo
20-04-2007, 08:16 AM
இயற்கைகளை விஞ்சும் அவளும் அவளின் செய்கைகளும்..

அழகாக வடித்திருக்கிறீர்கள்..

இளசு
20-04-2007, 09:16 PM
இந்த வகை சொல்லாட்சி கண்டு
இன்னும் இன்னும் பிரமிப்பு கூடியபடியே..

அசந்து அமர்ந்துவிட்டேன் பிச்சி...

பிச்சி
03-05-2007, 06:59 AM
எல்லாருக்கும் என் நன்றி