PDA

View Full Version : அன்பின் விலகல்...!!!slgirl
19-04-2007, 10:53 AM
அன்பின் விலகல்...!!!

வாழ்க்கை நந்தவனத்தில்
காதலனாய் நுழைந்தாய்
ஆறுதல் தந்தாய்
வசந்தம் கண்டேன்
அன்பு தந்தாய்
ஆனந்தமடைந்தேன்
சின்ன சின்ன சண்டைகள்
அன்பின் ஆழமுனர்ந்தேன்
இன்று காரணமில்லாமல்
என்னை விட்டு நீ
கண் காணா தூரம்
சென்றுவிட்டாய் ஏனோ
கலங்கி போனேன் நான்
போன தடயம் இருக்கிறது
என் மனதில் நினைவுகளாக
பிரிவு தற்காலிகமா நிரந்தரமா
என்ற வினாவுக்கு விடை
தெரியாது விக்கித்து நிற்கின்றேன்
காதல் பிரிவு இத்தனை
வலி கொண்டதா ஏங்குகின்றேன்
நம் அன்பின் விலகல்
உயிரையும் உருக்குலைக்கிறது

ஆதவா
19-04-2007, 11:02 AM
விலகல்... நிரந்தரமல்ல...

அன்புக்குமுண்டோ அடைக்குந்தாழ் என்று சொன்ன மொழிகள் பொய்த்துவருகின்றன. அடைபட்டுக் கிடந்தால் நம்மை விட்டு விலகியிருக்குமா? நந்தவனத்து வாழ்க்கையில் காதலன் ஒரு ரோசா,.., ஆனந்தம் கொடுத்தான்.. அன்பு வளர்த்தான்... அதை எடுத்துக் கொண்டோம்.. பிரிதலின்போது நெஞ்சு புடைக்கிறது... விக்கிநிற்கிறது... ஏன்?

காதல் இன்று நிரந்தரமா? இல்லை. சிலருக்கு நிரந்தரமாகத் தெரிகிறது... அவர்கள் கண்ணாடியைப் பார்த்துக்கொள்ளட்டும்.

பிறத்தல் வாழ்தல் சாதல் , இதற்கிடையில் காதல். அதற்கு முடிவில் காதலின் பிரிவு..

உருக்குலையுமளவு பிரித்திருக்கிறதென்றால் புரியாத காதல் என்று சொல்வேன். புரிந்திருந்தால் அப்போதே செத்துப் போயிருக்கும்..

உங்கள் கவிதையின் வலி நன்றாக இருக்கிறது... வலிகள் தொடராமல் இருக்க வேண்டுகிறேன். கவிதைகள் முடியாமல் இருக்க யாசுகிறேன்..

slgirl
19-04-2007, 11:05 AM
நன்றி ஆதவா

அன்புரசிகன்
19-04-2007, 11:05 AM
உருக்கமான கவி வரிகள்.
நம் அன்பின் விலகல்
உயிரையும் உருக்குலைக்கிறது
மாசற்ற வரிகள். நெஞ்சை கனக்க வைக்கிறது.
நன்றியும் பாராட்டுக்களும்.

slgirl
19-04-2007, 11:07 AM
நன்றி அன்புரசிகன்

crisho
19-04-2007, 12:54 PM
நல்லா எழுதியிருக்கிங்க... இரசித்தேன்...
வேதனைப்பட்டேன் கருவில்!


இன்று காரணமில்லாமல்
என்னை விட்டு நீ
கண் காணா தூரம்
சென்றுவிட்டாய் ஏனோ

ஆனா பசங்க காரணம் சொல்லாம எஸ்கேப் ஆவது வெகு குறைவு.....

காவல் துரையில யாராவது பிடிச்சி அடைச்சிட்டாங்கலோ என்னவோ?

மனோஜ்
19-04-2007, 01:38 PM
மனதில் நின்றது கவிதைவரிகள் அருமை

lolluvathiyar
19-04-2007, 02:14 PM
காரனம் தேடி அலைய வேண்டாம்
ஈழ பெண்னே, காதலை சுமக்கலாம்
ஆனால் காதல் வலியை சுமுக்க வேண்டியதில்லை
பிரிவு என்று வந்துவிட்டால் அது தார்காலிகமானதாக
இருந்தாலும் நிரந்தரமாக்கி கொள்ள வேண்டும்

காதல் இனிமையானது, இருக்கமானது
ஆனால் அது ஒருவனிம் மட்டுமே
இருக்க வேண்டிய அவசியமில்லை

சிம்பிள் அட்வைஸ்
காதலை மாற்றாமல், ஆனால் காதலித்த ஆளை மட்டும் மாற்றிவிடு

ஷீ-நிசி
19-04-2007, 03:57 PM
இ.பெண்.. உங்கள் வலி விலகிட ஒரு வழி கிடைத்திடும்....

கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

slgirl
20-04-2007, 03:53 AM
மிக்க நன்றி அனைவருக்கும்

சுட்டிபையன்
20-04-2007, 04:08 AM
கவிதை அழகு
விலகல்கள் நிரந்தரமில்லை

ராஜா
20-04-2007, 07:21 AM
காலமெனும் மருத்துவன் உங்கள் காதல் புண்களை ஆற்றுவான்.

தழும்புகளைத் தடவிப் பார்த்து கவிதை வடியுங்கள்.. கிளறிப் பார்த்து கண்ணீர் வடிக்காதீர்கள்..!

poo
20-04-2007, 07:58 AM
காதல் கிடைத்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடான துயரத்தை பிரியும்போது கொடுக்கவேண்டி இருக்கிறது..

காலங்கள் வலியையும் தன்னோடு கரைத்துச் செல்லும்..

- இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் தோழி!

இளசு
20-04-2007, 09:26 PM
ஒர் உண்மைச் செய்தி - (ஊர் -திருச்செங்கோடு)

ஒரு அறுபது வயது முதியவர்..

விடுதியில் படித்த மகன் சில மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டான்..

காவல்துறை வழக்கை ஆறப்போட்டுவிட்டது..

அவரே முனைந்து விசாரித்தார்.. சில தகவல்கள் கிடைத்தன..

விசாரணை முடுக்கிவிடப்பட...

அவன் பல மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டது தெரிந்தது..

கேள்வி -

அந்தத் தந்தையின் வேதனைகளில் எது பெரியது?

என்ன ஆனான் எனத் தெரியாமல் அல்லாடியதா?
மாண்டான் என மனம் நொறுங்கியதா?

காணாமல் போன உறவினர்கள் மட்டுமல்ல
உறவுகளும் கொடுக்கும் வேதனை அதிகம் -

ஒரு முடிவிருந்தால் - காயம் ஆறத்தொடங்கலாம்..
முடிவென்ன எனத் தெரியாவிட்டால்????

இலங்கைப்பெண்ணின் கவிதைக்கு பாராட்டுகள்!

ஓவியன்
21-04-2007, 12:15 PM
அன்பின் விலகல்...!!!
நம் அன்பின் விலகல்
உயிரையும் உருக்குலைக்கிறது

நம் என்று பன்மையில் எழுதி இருக்கின்றீர்கள், இருவரது அன்பிலும் விலகல் இருக்கிறதா?

அதாவது உங்கள் அன்பில் கூட??????? (கோவிக்காதீர்கள் உங்கள் வரிகளை வைத்து தான் கேட்கின்றேன்).

அப்படியானால் இந்த கவிதையின் கருப் பொருளே மாறுகிறதே???

ஓவியா
22-04-2007, 10:04 PM
நம் அன்பின் விலகல்
உயிரையும் உருக்குலைக்கிறது

அழகிய ஏண்டிங் வரி. பாராட்டுக்கள்


கவிதை நலம்.
காதல் வலி மிகவும் கொடுமை. வலிதான் எற்றுக்கொள்ள சற்று வருத்தமாக இருகின்றது. இது தானே வாழ்க்கை தோழி.