PDA

View Full Version : கருவேலம் பூக்கள் -மீனாகுமார்
19-04-2007, 10:23 AM
கருவேலம் பூக்கள்

பொழுதும் புலர்ந்தது. காய்களும் கனிந்தது.
தென்றலும் சிலிர்த்தது. நதிகளுமோடிக் களைத்தது.
பசுமை படர்ந்தது. வெண்கொக்கும் பறந்தது.
கெண்டை குதித்தது. மழையும் பெய்தது.

நீர்வளம் பெருகி நிலவளம் ஓங்கி
குடியின் பெருமை வானுயர ஓங்கி
பொங்கற் பானையில் மகிழ்ச்சி பொங்கி
பொங்கி வாழ்ந்தது பாரதத் திருநாடு.

அடுக்கடுக்காய் வந்த அந்நிய கயவர்
நம்மை எட்டி எட்டி உதைத்தாரே.
நம்வளம் கவர்ந்திட நம்குடி கெடுத்திட
புற்றீச லாய்ப் புறப்பட்டு வந்தாரே.

நம்செல்வ மதைக் கண்டு கவர்ந்திட
பலப்பல திட்டம் வகுத்தாரே.
கருவேல மென்றும் அறிந்திராத பாரதமெங்கும்
விதைத்து நாசத்தை அறிமுக மாக்கினாரே.

மண்ணின் வளத்தை யெல்லாம் முழுமையாய்
உறிஞ்செடுத்து பயனில்லா முள்ளைத் தந்திடுமாம்.
மண்ணின் வளத்தை நிரந்தரமாய்க் கெடுத்திடுமாம்.
ஆங்கே வேறெந்த செடியும் வளருமோ ?

பேரூந்தில் செல்கையில் பார்வையெங்கும் கருவேலமடா.
அதன் நாசத்தை அளந்தவர் உளரோ ?
பார்க்க பார்க்க நெஞ்சம் வெடித்திடும்
நம்மேல் இட்ட ஆற்றமுடியா நாசமிது.

எத்தனை வளங்கள். எத்தனை மரங்கள்
அத்தனையும் வெட்டி வெட்டி சாய்த்தாரே.
இன்றும் நம்முள் திருடர் பலருண்டு.
அவர் வெட்டும் வளத்தின் அளவுதானென்ன ?

சுயநலம் மேலிட பொதுநலம் குன்றிட
தன்னிச்சை யின்பின் நாயாய் திரிகிறாரே.
தன்னுடைய ஐம்பது ரூபாய்க்காக நாட்டின்
ஐனூறு கோடியைக் கெடுக் கிறாரே.

அவர் கோடாரியால் மரத்தைப் பிளக்கவில்லை
நம் வளத்தின் இதயத்தைப் பிளக்கிறாரே.
பாரதம் பாலைவன மானால் அடுக்குமோ ?
அந்நாட்கள் வெகு தூரத்தில் இல்லையடா.

கருவேலத்தை வேறோடு பிடுங்கி எறிந்திடு.
மண்ணின் வளத்தை ஆராய்ந்து உயர்த்திடு
ஒவ்வொரு பிறந்தநாளும் கேக்கை வெட்டாதே
புதிய மரமொன்றை நட்டு வளர்த்திடு.

நாளை உலகை ஆளப்போகும் நம்குழந்தைகட்கு
நல்லதொரு இந்தியாவை அளித்திட முயல்.
ஒளவையார் வாழ்த்திய நீருயர மனதிற்கொண்டு
வளத்தைப் பெருக்கிட ஆவன செய்வீர்.

மரம் வளர்ப்பீர். மழை வளம் சேர்ப்பீர்.

slgirl
19-04-2007, 10:41 AM
அருமையான கருவுடனான கவிதை

ஆதவா
19-04-2007, 11:04 AM
கவிதை அருமை மீனா குமார்.... தொடர்ந்து பங்களியுங்கள்..

அன்புரசிகன்
19-04-2007, 11:22 AM
கருத்தான கவி. மரம் வளர்த்தால் நாடே செழியும்.
அதன் பிறகு இந்தியாவில் காவிரி பிரச்சனைக்கிடமேது?
நமது நாட்டில் நாம் கஷ்டப்பட்டு உருவாக்கிய செயற்கை காடுகறை கொடிய அரக்கர்கள் அழித்துக்கொண்டிருக்கின்றனர். (உ+ம் மணற்காடு)
பனைவளம் மிக்கது வடகிழக்கு. (ஈழத்தில்)
படைப்பிற்கு நன்றி.

poo
20-04-2007, 08:32 AM
மீண்டுமொரு அற்புதமான கவிதை...

இளசு
20-04-2007, 08:56 PM
மீனாகுமார்

முக்கிய பிரசினையை நல்ல வடிவத்தில் கவிதையாய்க்
கொடுத்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள்..

(இன்றைய அவசர உலகில் துரித உணவைப்போல்
புதுக்கவிதை வடிவம் என்றால் இன்னும் பரவலான வீச்சு கிடைக்கும்)

இயற்கைச் சமன்பாட்டில் எதுவும் குறிப்பாய் ஒரு கெட்டது
அதன் விகிதம் தாண்டுவது நல்லதன்று..

(ஓவியாவின் ஒரு சந்தேகம் பதிவில் இதையொட்டி பல நல்ல கருத்துகளைக் காணலாம்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8753 )

இங்கே கருவேலம் மரங்கள் பெருகுவதைக்
கண்ணீர் வர சொன்ன கவலை -கரிசனம் தைக்கிறது..

பார்த்தீனியன் செடிகள், யூகலிப்டஸ் மரங்கள் பற்றியும்
இத்தகைய கவலை உண்டல்லவா?

முகிலனால் தெளிவு கிடைக்கும் !

ஓவியா
22-04-2007, 06:06 PM
நன்றி மீனாக்குமார்,

அழகிய கவிதை, உள்ளுணர்வை தூண்டியே செல்கின்றது. நல்ல சமுதாய சிந்தனை. அற்ப்புத பூமியை நாம்தான் சீரழித்துக் கொண்டிருகிறோம்.

பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும்.


....................................................................................
நன்றி இளசு.

lolluvathiyar
26-07-2007, 08:02 AM
மீனாகுமார் உங்கள் கவிதை யில் கூறிய கருத்து அருமையாக இருந்தது.
கருவேலா மரங்கள் குளத்துக்கு பக்கத்தில் இருந்தால் அதன் இலை வேகமாக உதிர கூடியது. குப்பை அதிகமாகி சீக்கிரம் அது குளத்தை நிரப்பி விடும்.
செழிப்பில்லாத காடுகளில் அதை வளர்கிறார்கள், இன்று அது நல்ல எரிபொருளாக இருகிறது

சுகந்தப்ரீதன்
26-07-2007, 08:13 AM
கருவேலம் பூக்கள்

நாளை உலகை ஆளப்போகும் நம்குழந்தைகட்கு
நல்லதொரு இந்தியாவை அளித்திட முயல்.
ஒளவையார் வாழ்த்திய நீருயர மனதிற்கொண்டு
வளத்தைப் பெருக்கிட ஆவன செய்வீர்.

மரம் வளர்ப்பீர். மழை வளம் சேர்ப்பீர்.

மீனாகுமார்....அருமையான கவிதை என்பதை விட இனிமையான எச்சரிக்கை..... எனது பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

இனியவள்
26-07-2007, 08:15 AM
மீனாகுமார் நான் படித்த உங்கள்
முதல் கவிதையிது
கவிதையென்பதையும் பார்க்க
கவியோடு கூடிய எச்சரிக்கைசெய்தி

அருமை நண்பரே வாழ்த்துக்கள் :nature-smiley-002: :nature-smiley-002: :icon_08:

சிவா.ஜி
26-07-2007, 08:21 AM
எந்த மரங்களையும் வெட்டுவது பாவம்,ஆனால் இந்த மரங்களை விட்டுவைத்தால் அழிவு என கருவேலக்கவிதையில் கருத்து சொன்ன மீனாகுமாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஓவியன்
03-08-2007, 01:51 PM
எம்மை நாமே வெட்டிக் கொண்டிருக்கிறோம், விளைவுகளை அறிந்த போதும்.................!

விளங்கிக் கொள்ள வேண்டும் எல்லோருமே.......!

விளங்க வைக்கும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் மீனா குமார் அவர்களே!

அமரன்
03-08-2007, 02:15 PM
சிறப்பான கவிதை. இதுவரை கருவேலமரம் பற்றி எனக்குத் தெரியாது. கருவேலமரம்பற்றி ஓரளவு இக்கவிதைமூலமும் இளசுஅண்ணாவின் சுட்டிமூலம் வேறு பல விடயங்களையும் அறிந்துகொண்டேன். நன்றி.

பூமகள்
02-10-2007, 11:29 AM
கான்கிரீட் சாலைகள் மிக்க நகரத்தில் பிறந்து வளர்ந்த என் போன்ற பலருக்கு கருவேலம் பற்றி தெரியாது இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.
நான் படித்த உங்களின் முதல் கவி..!! அசத்தலாக இருக்கிறது.
உண்மையை அழகாக உரக்கக் கூறி தட்டியெழுப்பியுள்ளீர்கள் எல்லாருடைய மனசாட்சியையும்..!!
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் மீனாகுமார்.

யவனிகா
02-10-2007, 11:55 AM
நல்ல கவிதை,மனிதர் சிலர் கூட கருவேலம் மரங்கள் தான் சிலசமயங்களில்.அனால் இவர்களை வைத்து அடுப்புக் கூட எரிக்க இயலாது.கவிதைகள் தொடர வாழ்த்துக்களுடன்
யவனிகா.

ஜெயாஸ்தா
02-10-2007, 01:08 PM
இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கே திரும்பினாலும் கருவேலம் மரங்கதான். வேறு மரங்களையே பார்க்க இயலாது. இது குறித்து பேருந்தில் பயணம் செய்ய போது எல்லாம் தெரிந்த ஒரு ஏகாம்பரம் கூறியதாவது : காமராஜர் முதலமைச்சராக இருக்கும் போது ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தாராம். அப்போது விமானத்திலிருந்து கீழே பார்க்கும் போது அடர்த்தியாய் தெரிந்த அந்த மரங்களை பற்றி விசாரித்தாராம். அப்போது அவர்கள் அது வறட்சியை தாங்கி வளரும்படி உருவாக்கிய செயற்கைத்தாவரம். தாங்கள் அதை எரிபொருளுக்கு பயன்படுத்துவதாக சொன்னார்களாம். இராமநாதபுர மாவட்டத்தில் அப்போது மக்களுக்கு மழையில்லை. விவசாயமில்லை. எங்கும் வழிப்பறி. கொள்ளை. இதைத் தடுக்க அங்கேயிருந்து 20 மூடை விதை வாங்கி வந்து விமானம் மூலம் தூவினார்களாம். அதுதான் இப்போது அழிக்கவே முடியாதாபடி வளர்ந்து நிற்கிறது என்று சொன்னார். இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால் எனக்குத் தெரிந்த சில உண்மைகள். இந்த மரங்களை வெட்டி பக்குவமாக எரித்து கரியாக்கி அதை பல்வேறு ஊர்களுக்கு பல்வேறு பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்கின்றனர் இங்குள்ள மக்கள். அது மட்டுமல்லாமல் இராமநாதபுரம், வழுதூர் உட்பட மூன்று இடங்களில் இந்த கருவேலம்மரங்களை எரித்து மின்சக்தி உருவாக்கி, சுற்றுபுற வட்டார மக்களுக்கு பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது.

நண்பர்கள் சொன்னது போல் இந்த கருவேலம் செடி வளரும் இடங்களில் வேறு எந்த வகை மரங்களும் வளராது. ஏனென்றால் அது அதற்குள்ள தண்ணீரையு சேர்த்து உறிஞ்சி அபகரித்துவிடுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த மரங்களை வேரோடு பிடுங்கி மட்டுமே அழிக்க முடியும். வெட்டினால் மீண்டும் தளிர்த்துவிடும். தரை மேலே ஒரு அடி உயரத்தில் இந்த மரம் காணப்பட்டால் பூமியினுள் வேர் சுமார் 5 அடிக்கு மேல் பரவியிருக்கும்.


அது சரி அந்த பார்த்தினீயசெடி (மஞ்சள்கடுகு) மற்றம் யூகலிப்டஸ் பற்றி விளக்குங்கள் நண்பர்களே...?