PDA

View Full Version : அகதி முகாம்

சுட்டிபையன்
19-04-2007, 08:26 AM
அகதி முகாம்
http://www.refugeesinternational.org/files/2771_image1_vm-tamil-dec03-3.jpg
கோடைக் கொதிப்பையும்
மாரித் தூறலையும்
மாறி மாறி வடி கட்டுதே - இந்த
அரிதட்டுக் கூரைகள்
சூரிய விளக்கையும்
பனிமழைத் தென்றலையும்
அணைகட்ட முடியாமல்
இலவசமாகக் கொடுக்கும்
கிடுகுச் செத்தைகள்
மீன் பிடி வலைகளாக

பௌர்ணமி வெளிச்சத்தில்
எங்கள் சிறுவர்கள்
ஆனா, ஆவண்ணா
எழுதிப் பழகும்
பால் நிறச் சிலேட்டுக்கள்
எங்கள் முற்றங்கள்

குப்பி விளக்கு
திரியிற்க்கு வக்கில்லை
எண்ணை வார்க்க
எதுவுமில்லை
நுளம்புக்கு எங்கே
கொயில் வாங்குவது....?
மனித உரிமை மங்கினாலும்
நுளம்பின் உயிருக்கு
உரிமையுண்டு
அதுதான் அகதி முகாம்கள்

இருபத்தோரம் நூற்றாண்டிண்
எங்கள் யாவருக்கும்
புகலிடம் இதுதானா.........?

http://www.refugeesinternational.org/files/2768_image1_vm-tamil-dec03-1.jpg

slgirl
19-04-2007, 10:37 AM
மனம் கனக்கின்றது நிஜம் சுடுகின்றது....:(

அன்புரசிகன்
19-04-2007, 10:42 AM
உருக்கமானது சுட்டியரே...

இருபத்தோரம் நூற்றாண்டிண்
எங்கள் யாவருக்கும்
புகலிடம் இதுதானா.........?
இது எல்லாம் விளம்பரத்திற்கு மட்டும் தான். செயற்படுத்த யார் வருவார்?

crisho
19-04-2007, 12:43 PM
:shutup: :traurig001:

ஜெயாஸ்தா
19-04-2007, 02:04 PM
வருந்துவதை தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.

lolluvathiyar
19-04-2007, 02:23 PM
இருபத்தோரம் நூற்றாண்டிண்
எங்கள் யாவருக்கும்
புகலிடம் இதுதானா.........?[/b]

வெறும் தூப்பாகியை மட்டும்
நம்பி இருந்தால் இதைவிட
மோசமான நிலைக்கு போகும்
அரசியலும் அறிந்திருந்தால்
இந்த நிலமை மாறும்

poo
20-04-2007, 08:02 AM
வரிகளின் வலுவைக் காட்டிலும் அதிக வலியைக் கொடுக்கின்றது அந்த பிஞ்சுகளின் படம்...

பார்க்கும் எங்களுக்கே திராணியில்லையெனில், தாங்கும் அவர்களுக்கு.. உங்களுக்கு...!!!?

இளசு
20-04-2007, 09:31 PM
தீவிரமான வலி புரிகிறது..
தீரும் வழி?

பூக்கள் வாடும் நிலை மாறட்டும்..
வேர்களில் பிடித்த நோய் தீரட்டும்..

இப்பிரசினை அடியோடு தீர்ந்து
நல்வாழ்வு நம் இனத்துக்கு மலரட்டும்..

ஓவியன்
21-04-2007, 06:34 AM
கோடைக் கொதிப்பையும்
மாரித் தூறலையும்
மாறி மாறி வடி கட்டுதே - இந்த
அரிதட்டுக் கூரைகள்

அகதி முகாமில் இருக்கவில்லையென்றாலும் இந்த வரிகளை நேரடியாக அனுபவித்தவன் நான்.

2006 ஆம் ஆண்டு கிளிநொச்சியிலிருந்து புலம் பெயர்ந்து அக்கராயன் பகுதியில் வசித்த போது, இந்தக் கொடுமைகளை அனுபவித்தேன். கூரை வேய பணமில்லை, பணமிருக்கும் போது கிடுகு இருப்பதில்லை என்ற நிலை, ஒரு குண்டு வெடிப்பில் தவறுதலாகச் சிக்கி காயமுற்ற தந்தை!!!!. இருப்பதோ ஒன்றிரண்டு இறப்பர் விரிப்புக்கள் அவற்றினை கூரையில் தந்தையின் படுக்கையின் நேர் மேலாக விரித்து அவருக்கு மட்டும் மழைத் தூறல் படாமல் பார்த்த ஞாபகம் இன்றும் மனதில் - பசுமையாக...

பல இரவு வேளைகளில் நானும் அம்மாவும் வீட்டினுள்ளேயே குடை பிடித்து தூங்காமல் இருந்திருக்கின்றோம்....

வரிகளை தந்த சுட்டிக்கு நன்றிகள்.

சுட்டிபையன்
21-04-2007, 12:36 PM
மனம் கனக்கின்றது நிஜம் சுடுகின்றது....:(

எங்கள் மனம் நொந்து என்ன நடக்கப் போகிற்து
நிஜங்கள் எப்போதும் சுடத்தான் செய்யும்

உருக்கமானது சுட்டியரே...

இருபத்தோரம் நூற்றாண்டிண்
எங்கள் யாவருக்கும்
புகலிடம் இதுதானா.........?
இது எல்லாம் விளம்பரத்திற்கு மட்டும் தான். செயற்படுத்த யார் வருவார்?

எங்கள் உறவுகளை வியாபாரம் செய்யும் பலருக்கு வெகு விரைவில் பதில் கிடைக்கும் அன்பு

சுட்டிபையன்
21-04-2007, 12:40 PM
:shutup: :traurig001:

வருந்துவதை தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.

என்ன ஆச்சுது, கேட்பவரே அழுகிறீர்கள் என்றால் அவஸ்தையை அனுபவிகும் எம்மவர்கள் என்ன செய்வார்கள்

சுட்டிபையன்
21-04-2007, 12:43 PM
வெறும் தூப்பாகியை மட்டும்
நம்பி இருந்தால் இதைவிட
மோசமான நிலைக்கு போகும்
அரசியலும் அறிந்திருந்தால்
இந்த நிலமை மாறும்

துப்பாக்கிகளை நம்பி யுத்தம் செய்யவில்லை, புலிகள் அரசியலில்லும் புலிகள்தான், அதனால் தான் இலங்கை அரசு இன்று போர் செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளனர்

சுட்டிபையன்
21-04-2007, 12:51 PM
அகதி முகாமில் இருக்கவில்லையென்றாலும் இந்த வரிகளை நேரடியாக அனுபவித்தவன் நான்.

2006 ஆம் ஆண்டு கிளிநொச்சியிலிருந்து புலம் பெயர்ந்து அக்கராயன் பகுதியில் வசித்த போது, இந்தக் கொடுமைகளை அனுபவித்தேன். கூரை வேய பணமில்லை, பணமிருக்கும் போது கிடுகு இருப்பதில்லை என்ற நிலை, ஒரு குண்டு வெடிப்பில் தவறுதலாகச் சிக்கி காயமுற்ற தந்தை!!!!. இருப்பதோ ஒன்றிரண்டு இறப்பர் விரிப்புக்கள் அவற்றினை கூரையில் தந்தையின் படுக்கையின் நேர் மேலாக விரித்து அவருக்கு மட்டும் மழைத் தூறல் படாமல் பார்த்த ஞாபகம் இன்றும் மனதில் - பசுமையாக...

பல இரவு வேளைகளில் நானும் அம்மாவும் வீட்டினுள்ளேயே குடை பிடித்து தூங்காமல் இருந்திருக்கின்றோம்....

வரிகளை தந்த சுட்டிக்கு நன்றிகள்.

ஓவியன் உங்கள் பதிலை பார்க்க, எனக்கு கண்ணீர் எட்டிப் பார்க்கின்றது. 1995ற்க்கு முன்னர் நான் இந்த அவலத்தை அனுபவித்துள்ளேன், என்றுதான் இந்த அவலம் தீருமோ தெரியவில்லை.................
இந்த கவிதை பல ஆண்டுகள் முன்னர் கண்ணீருடன் எழுதியது
நீங்கள் பட்ட அவலத்தை இனி யாரும் படக்கூடாது

ஓவியா
22-04-2007, 10:13 PM
மனம் கனக்கின்றது. நிலை மாற கடவுளிடம் வேண்டுவோம்.

கவிதைக்கும் படத்திர்க்கும் நன்றி சஞ்சய்.

சுட்டிபையன்
28-04-2007, 08:52 AM
மனம் கனக்கின்றது. நிலை மாற கடவுளிடம் வேண்டுவோம்.

கவிதைக்கும் படத்திர்க்கும் நன்றி சஞ்சய்.

எல்லோரும் சேர்ந்து வேண்டுவோம்
நன்றி ஓவியாக்கா

அக்னி
28-04-2007, 11:51 AM
அகதி முகாம்
இருபத்தோரம் நூற்றாண்டிண்
எங்கள் யாவருக்கும்
புகலிடம் இதுதானா.........?

ஆம்..!
வானமே கூரையாக.., பூமியே ஒரு பெரும் வீடாகித்தான் போகின்றது...
காற்றில் சுவர் கட்டி வாழும் இவர்கள்தான்...
உலகிலேயே பெரும் வாழ்விடங்களைக் கொண்டவர்கள்...
அதனால்தானோ, உலகம் இன்னமும் இவர்களை நோக்காதிருக்கின்றது...
பிரசவம், மரணம், திருமணம், மனைவியோடு கூடி வாழ்தல், குழந்தைக்குப் பாலூட்டுதல், இயற்கை உபாதைகளைக் நிறைவேற்றுதல், உடை மாற்றுதல் (உடை உள்ளதா என்பதும் ஓர் விடயம்) எல்லாவற்றிலும் சமத்துவம்... பெற்றுவிட்ட இவர்கள்தான்.., ஈழத்தின் "ஏதிலிகள்..!"

சுட்டிபையன்
03-05-2007, 07:44 AM

இந்த நிலை ஒரு நாள் மாறும், ஈழத்தமிழன் ஒரு நாள் தனது மன்னில் தனது சுதந்திரத்துடன் வாழும் காலம் வெகு விரைவில் வரும்