PDA

View Full Version : நட்புslgirl
19-04-2007, 08:03 AM
நட்பு

வாழ்வில் சிலரையே
சினேகிதராய் கொள்
பலரின் சினேகம்
பொய்த்து போகும்

நட்பு கொள்வதில்
நிதானமாய் இரு
நட்பு கொண்டபின்
நிலையாய் நில்

கற்றவர் என்று எண்ணி
நட்பு கொள்ளாதே
மட்டுப்படுத்திக்கொள்
உன் உறவு வட்டத்தை

உண்மைக்கு உயிர்கொடு
உறவுகள் வரவாகும்

நிலையில்லா வாழ்வில்
விலையில்லா நட்பை
நிலையாக்கிக்கொள்
நிம்மதி உன்னை நாடிவரும்

வாடி விடாதே உன்
துன்பங்கள் ஓடிவிடும்
நல்ல நட்பை நீ
தேடிக்கொண்டால்

நட்பு என்பது எதுவரைக்கும்
கற்பு போன்ற நட்பை
பட்டுபோகவிடாமல்
தொட்டுச்செல்லும்
மனங்கள் வாழும்வரை

மனோஜ்
19-04-2007, 08:17 AM
அருமை நட்பின் இலக்கனத்தை கவிதை ஆகியது வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
19-04-2007, 08:19 AM
நிதானமான கவி. மேற்கோள் காட்டமுடியவில்லை. அத்தனையும் பொன் மொழிகள் போன்றவை.
நட்பு கொள்வதில்
நிதானமாய் இரு
நட்பு கொண்டபின்
நிலையாய் நில்
இதை நிச்சசம் பின்பற்றினால் நட்பு என்றபோர்வையில் துரோகம் சேராது.

நட்பு என்பது எதுவரைக்கும்
கற்பு போன்ற நட்பை
பட்டுபோகவிடாமல்
தொட்டுச்செல்லும்
மனங்கள் வாழும்வரை

நட்பிற்கு கற்பு உள்ளவரைதான் அது நட்பாக இருக்கும்.

என்னவென்று பாராட்ட... பளீச்சென்று என் மனதில் புகுந்தன உங்கள் வரிகள். நன்றி.

ஆதவா
19-04-2007, 08:39 AM
நட்பு : நெஞ்சில் சுமக்கும் வழுக்களை மென்று தின்றுவிடும் காரணி. உயிர்மூலத்தில் சேரா வரை நட்பு புனிதமாகவே கருதப் படுகிறது./

பலரின் சினேகம் பொய்த்துப் போகும்... - போலி முகமென நீங்கள் எழுதிய அதே கவிதையினை ஒருவரியில் அடக்கப்பட்டு எழுதியிருப்பது அறிகிறேன். சினேக முகமூடிகள் தொண்ணூறு பேர் அலைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுக்கும் சிலரைத் தவிர...வாழ்வில் சிலரையே சினேகிதராய் கொள்

நிதானம் என்றுமே பிரதானம்... நட்புக்கென்ன விதிவிலக்கா? யோசித்து முடிவெடுத்தல் நட்பில் நிச்ச்சயம் தேவை... வீண் முகமூடிகள் சேரவும் வாய்ப்புண்டு..

கற்றவன் எல்லான் நல்லான் அல்ல. வட்டத்தைச் சுருக்கு.. நட்பியல் விதிகள்.........

ஆக மொத்தம் நட்புக்கென்று விதிமுறை வித்திட்டீர்கள். அருமை.. வெறும் வாய்ப்பேச்சோடு செல்லும் நட்பாக என் மனம் இருக்காது... உங்கள் விதிகளில் என் நட்பும் அடக்கம்.
வாழ்த்துக்கள்

நட்புக்கவிதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7734) என்ற திரி ஒன்று இருக்கிறதூ... பார்வையிடுங்கள்...

சுட்டிபையன்
19-04-2007, 08:41 AM
அழகிய நட்பு கவிதை
நட்புதானே உலகமே

slgirl
19-04-2007, 10:10 AM
அனைவருக்கும் மிக்க நன்றி

ஷீ-நிசி
19-04-2007, 10:17 AM
இ.பெண் கவிதை மழை பொழிகின்றார், நட்பை பற்றின உங்கள் கவிதை அழகுதான்..

slgirl
19-04-2007, 10:34 AM
நன்றி நிசி

crisho
19-04-2007, 01:01 PM
நட்பு
நிலையில்லா வாழ்வில்
விலையில்லா நட்பை
நிலையாக்கிக்கொள்
நிம்மதி உன்னை நாடிவரும்


இவை வைர வரிகள்.... வாழ்த்துக்கள்

poo
20-04-2007, 08:16 AM
நல்ல பாடம் தோழியே.

பல நட்புகள் அந்த நண்பர்களாலேயே சாகடிக்கப்படுவது உச்சக்கட்ட வேதனை..

இளசு
20-04-2007, 09:18 PM
காதல் போல நட்பும் மிக விரிவான பரப்பில் பயன்படுத்தப்படுகிறது..

அகலம் அல்ல
ஆழமே முக்கியம்..
அழகாய்ச் சொன்ன கவிதை!
வாழ்த்துகள் இலங்கைப் பெண்!

ஓவியன்
21-04-2007, 12:31 PM
நட்பு என்ற ஒரு வார்த்தையே பல பொருள் தரும் கவிதையே,
அதனைக் கருவாக்கி,
உணர்வுகளை புடமாக்கி,
அவையனைத்தையும்
அழகிய வரிகளாக்கி,
மன்றத்திலே தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

ஓவியா
22-04-2007, 09:55 PM
அழகிய கவிதை. வார்தைகள் அருமை.

நட்பு அது ஒரு அழகிய ஆரஞ்சு குளம், நீந்த நீந்த இனிக்கும்.
அதிகமானாலும் கசக்கும். ஹி ஹி ஹி

நன்றி இலங்கைப்பெண்.