PDA

View Full Version : கிழிந்துபோன கவித்தாள்கள்ஆதவா
18-04-2007, 03:07 PM
மந்தைவெளிக்கு அருகே
மங்கை ஒருத்தி இருக்காளாம்.
மச்சமுள்ளவனைத் தொட்டு
பிச்சை போடுவாளாம்
வாருங்களடா செல்லுவோம்.

கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.
இன்னுமென்ன சேஷ்டைகள்?
துண்டு சிகரெட் ஒன்று எடு
எரித்துப் பார்ப்போம் குலைகளை.

காக்கிச் சீனி விற்பவன்
இருந்தால் பிடித்து
நகநுனியில் சிறைபிடி!
கிராமுக்கு மேலே
பணம் கொடுத்து
நட்சத்திரங்களைப் பிரிப்போம்.

போகும் வழியில்
பானம் இருந்தால்
கொஞ்சம் இடுக்கில் வை
அவளோடு ஊற்றிக் கொள்ள..

இன்னுமென்ன உலகில்
திளைத்துக்கொண்டு இருக்கிறது?
தேர்ந்தெடு. விதைப்போம்.

" போகும் வழியில்
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"

அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா,
கொஞ்சம் காசு, நிறைய சுகம்
காட்டுகிறேன்.

பென்ஸ்
18-04-2007, 03:27 PM
ஆதவா...
உங்கள் கவிதையை படித்துவிட்டு , டாக்டர். ஆனந்த் அவர்களின் காலத் தராசில் தவறுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8735)வாசித்தேன்...

இந்த தவறுகளையும், அதன் பதிலையும் அவர் கொடுத்திருந்தார்.....
உன் கவிதைகளில் இப்போது இரு பொருள் எடுத்து மகிழ முடியுது...

முன்னால் நண்பன் இதே போல கவிதைகள் கொடுப்பார்....

நேரடி விமர்சணம் மிக கடினம்.... விமர்சணமும் கொஞ்சம் மறைமுகமாதான் எழுதனும்... (சில நேரங்களில் இது பாதுகாப்பானது கூட..)...

இந்த வகை கவிதைகள், உன்னை சிறந்த கவியாக காண்பிக்கும், மற்ரும் நல்ல ரசனையாளர்களை உன்னை நேசிக்க வைக்கும்....

ஆனால்...

புதியவர்களை, உன் கவிதை மேல் இளுக்காது.... நியாபகம் வைத்துகொள்...

ஆதவா
18-04-2007, 03:31 PM
நன்றிங்க பென்ஸ்... உங்கள் விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்திட்டது...

புதியவர்கள் என் கவிதையை ருசிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு....

ஷீ-நிசி
18-04-2007, 03:42 PM
மாது, புகை, ப்ரெளன் சுகர், மது.... இது போதென்று இன்னும் என்னவெல்லாம் இன்பம் உலகில் இருக்கிறதென்று ஏங்கிடும் இதயங்கள்...

இளைய சமுதாயம் இத்தகைய கம்பள விர்ப்பின் மீதுதானே நடந்துக்கொண்டு இருக்கிறது...

மீண்டும் நல்லதொரு கவி... தொடருங்கள் ஆதவா..


எல்லாம் சரி! " போகும் வழியில்
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"

இது என்ன கவிஞர் வைரமுத்துவின் கவிதை புத்தகத்தின் தலைப்பு இடையில்?

ஆதவா
18-04-2007, 04:20 PM
நன்றிங்க ஷீ!!!

ஒரு ஐம்பது ரூபாய் கவிதைப் புத்தகம் வாங்காமல் வீணே செலவு செய்யும் மூடர்களைப் பற்றிய கவியிது. கருப்பொருள் அங்கேயே இருக்கிறது. அதன் காரணமாகவே வயிரமுத்துவின் அந்த புத்தகத் தலைப்பை இடவேண்டியாதாகிப் போனது.

இளசு
18-04-2007, 06:46 PM
தேவதையை விட அதிக ஆரம்பக் கவர்ச்சி
சாத்தான்களிடம்..

சில காலம் வருடி விடுபடுவர்கள்
பாக்கியவான்கள்..

கரடிப்பிடியாய் அவற்றிடம் சிக்கிக்கொள்பவர்கள்
பரிதாபவான்கள்..

மணி கட்டிய ஆதவனுக்குப் பாராட்டுகள்!

ஆதவா
18-04-2007, 11:29 PM
நன்றி இளசு அண்ணா

poo
19-04-2007, 04:44 AM
உடலை அடிமையாக்கும் போதை, மனதை அடிமையாக்கும் போதை...
அவரவர் இயல்புகளுக்கேற்ற சுகம்..

கவிஞனுக்கு தாள் கிழிவது மூடத்தனம், கவியார்வம் இல்லாதவனுக்கு பேனா திறப்பதே மடத்தனம்.

பாராட்டுக்கள் ஆதவன்.. கையில் ஊறித் திளைக்கும் பெற்றவனின் வியர்வைகள்- புதுப்பார்வை.. ரசிக்கவைக்கிறது.. கூடவே யோசிக்கவும்.

கவிதைப் புத்தகம் வாங்குவதைக் காட்டிலும் போதைக்கு மாற்றாக வீரியமானவொன்றை காட்டியிருக்கலாம்..அனைத்து மட்டமும் ஏற்கும்படியாய்.., ஆனால் எழுதியது கவிக்கரம் என்பதால் அதுவே இமயச் சிகரமாக காட்டப்பட்டுள்ளது?!.

அன்புரசிகன்
19-04-2007, 04:53 AM
இத்தனை உண்டா? (போதைகள்)இந்தமுறை ஆதவனின் கவி ஒரே வாசிப்பில் புரிந்து கொண்டேனென நினைக்கிறேன். வாழ்த்துக்கள் சூரியரே.

அன்புரசிகன்
19-04-2007, 04:54 AM
கவிஞனுக்கு தாள் கிழிவது மூடத்தனம், கவியார்வம் இல்லாதவனுக்கு பேனா திறப்பதே மடத்தனம்.

நாங்கள் எல்லாம் நினைத்துப்பார்க்கவே கூடாது. (பேனாவை)

ஆதவா
19-04-2007, 05:07 AM
நன்றிங்க பூ!!! நான் எழுத நினைத்ததே கவிதை புத்தகத்தை வைத்துதான். அதனாலேயே அப்படி காண்பிக்கவேண்டியதாகிவிட்டது. நீங்கள் சொன்னபிறகு இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாமோ என்று தோணுகிறது.
-+-------------------
நன்றிங்க அன்பு/// நீங்கள் நினைக்கவேண்டும்.... இல்லையென்றால் ஒரு பூ, ஒரு ஷீ, ஏன் ஒரு ஆதவனே கிடைத்திருக்கமாட்டார்களே!

poo
19-04-2007, 05:08 AM
அப்படியல்ல அன்புரசிகன்.... நான் சொன்னதை பொத்தம்பொதுவாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது.. கொள்ளவும் கூடாது!

அன்புரசிகன்
19-04-2007, 05:18 AM
நான் தமாசுக்குத்தான் சொன்னேன். உள்நோக்கம் ஏதுமில்லை ஐயா...

ஓவியன்
22-04-2007, 08:30 AM
பெரியவர்கள் எல்லாம் விமர்சித்து விட்டார்கள், ஆதலால் கவிக் கருப்பொருளைப் பற்ற்றி மூச் :shutup:

ஆதவா பெற்றோரின் உழைப்பை வீணாக்குவது பற்றிய உங்களது வரிகள் என்னை ரொம்பக் கவர்ந்துள்ளது.


கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.


ஆதவா!
பென்ஸ் அண்ணா சொன்ன மாதிரி நீர் இப்போது கவியெழுதுவதில் புதிய பரிமாணத்தில் பிரவேசித்துக் கொண்டிருக்கின்றீர்.

வாழ்த்துக்கள்.

leomohan
22-04-2007, 09:13 AM
வித்தியாசம் என்றால் ஆதவன் தான்.

பூ இளசு ஷீ இவர்களின் விமர்சனமும் கவிதைகள் தான்.

வாழ்த்துகள் ஆதவன்.

ஓவியா
22-04-2007, 07:11 PM
ஆதவா நல்ல கவிதை. உங்கள் கவிதை ஒவ்வொன்றும் ஒரு பொற்ற்க்காசுபோல். உயர்ந்தவை.

கவி உலகில் உங்கள் கவிதைகள் கொடிகட்டி பறக்க வாழ்துகிறேன்.