PDA

View Full Version : இருள்



சுட்டிபையன்
18-04-2007, 12:52 PM
சோலையில் பூத்த மலர்களே
நீங்கள் கண்மூடி உறங்குங்கள்
எங்கள் நிலை பார்த்தால்
காலையிலையே
நீங்கள் வாடிவிடுவீர்கள்
ஆடை தரித்த எங்களூர்
இன்று குட்டி
கிரோஷிமாவாகிவிட்டது
எங்கள் நிலை கண்டு
கூவிக் கூவியே நம்மூர்
குயில்களின் குரல்ககும்
தேய்ந்து விட்டன
கரைந்த காகங்களும்
காலமாகிப் போய்விட்டன
அமாவாசை இரவில்
பூரணைச் சந்திரனை
எதிர் பார்த்து
ஏமாந்து போனவர்கள்
விடிகின்றது தினமும்;
நமக்கில்லை
நான் என்னும்
இருட்டிற்குள்தான்
நாளை போர் தீர்ந்து
கண்ணீர் குறையுமா
நம் கண்ணில்..........?

ஓவியன்
18-04-2007, 12:58 PM
நாளை போர் தீர்ந்து
கண்ணீர் குறையுமா
நம் கண்ணில்..........?
இந்தக் கேள்விக்கு உங்கள் கையெழுத்திலேயே விடை இருக்கிறதே!!!

கவிதை வரிகள் அருமை சுட்டி.

ஓவியா
18-04-2007, 12:59 PM
கவலைகளை கலையுங்கள்
வெற்றியின் கொடி - அங்கே
நெயப்பட்டுக் கொண்டிருகின்றது.
கூடிய விரைவில்
கண்ணீர் துடைக்கும் நாள் வரும்.


அழகிய கவிதை. நெஞ்சம் கணக்கின்றது.

சபாஷ் சஞ்சய்

சுட்டிபையன்
18-04-2007, 01:00 PM
இந்தக் கேள்விக்கு உங்கள் கையெழுத்திலேயே விடை இருக்கிறதே!!!

கவிதை வரிகள் அருமை சுட்டி.

அந்த நம்பிக்கையில்தானே எம்மவர்கள் வாழ்கிறார்கள்

சுட்டிபையன்
18-04-2007, 01:05 PM
கவலைகளை கலையுங்கள்
வெற்றியின் கொடி - அங்கே
நெயப்பட்டுக் கொண்டிருகின்றது.
கூடிய விரைவில்
கண்ணீர் துடைக்கும் நாள் வரும்.


அழகிய கவிதை. நெஞ்சம் கணக்கின்றது.

சபாஷ் சஞ்சய்

நன்றி ஓவியாக்கா.............. எங்கள் கொடி வெகு விரைவில் ஐ. நா சபையில் பறக்கும்

ஓவியா
18-04-2007, 01:09 PM
அதே அதே,

சரி பின் ஏன் நம்புங்கள் நாளை தமிழீழம் கிடைக்கும் என்று போட்டுள்ளீர்கள். எதுக்கு கிடக்கனும் அது நமதுதானே தமிழீழம் நமதே என்று....சூப்பரா இருக்கும்லே......

சுட்டிபையன்
18-04-2007, 01:55 PM
அதே அதே,

சரி பின் ஏன் நம்புங்கள் நாளை தமிழீழம் கிடைக்கும் என்று போட்டுள்ளீர்கள். எதுக்கு கிடக்கனும் அது நமதுதானே தமிழீழம் நமதே என்று....சூப்பரா இருக்கும்லே......

:icon_hmm: அது நமக்குத்தானே ஆனா யார் தலையீடுமில்லாத தனி தமிழீழம் கிடைக்க வேண்டும், அதன் பின்னர் நீங்கள் சொன்னது போல போடலாம்:angel-smiley-010:

இளசு
18-04-2007, 07:23 PM
அந்தக் கண்ணீர் மறைந்து
சிந்தும் புன்னகை நம் மக்கள்
முகத்தில் மலரும் நாள் விரைவில்
அமைய வேண்டுகிறோம்!

slgirl
19-04-2007, 04:43 AM
ஒரு பொழுது மலரும் அது எம்மவர் ஈழ விடுதலை பொழுதாக மலுரும் காத்திருப்புகள் வீண்போகாது எம் அண்ணன் வென்றிடுவான்

poo
19-04-2007, 05:13 AM
எதிர்ப்பார்ப்புகள்.. ஏமாந்துபோவதற்கல்ல நண்பா...

ஆதவா
19-04-2007, 08:58 AM
மன்றத்தில் ஈழக் கவிதைகள் பெருக்கமடைந்தது மனதிற்கு சந்தோசம்.. இருளில் ஒளிந்துகொண்டிருக்கும் பகலை வெளிச்சம் போட்டுக் காட்டத்தான் பார்க்கிறோம்... அங்கவர்களுக்கு எத்தனைநாள்தான் இருட்டில் வாழ்க்கை... ??

அமாவாசைச் - ச் எதற்கு?

ஹீரோஷிமா ஆகவில்லை நண்பரே!! அதன் கதி என்ன என்பது உலகிற்குத் தெரியும்... ஆனால் ஆகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது... கவிதைக்கும் எழுதிய உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...

மேலும் செதுக்குங்கள்... அழகிய சிற்பம் கிடைக்கும்..

ஷீ-நிசி
19-04-2007, 09:12 AM
உங்கள் கவலைகள் முழுமையாய் கவிதையில் அறிய முடிகிறது.. விரைவில் விடியல் திரும்பும்.. நண்பா!