PDA

View Full Version : துரோகம்...!!!slgirl
18-04-2007, 12:15 PM
துரோகம்

என்மீது
பிரியம் உள்ளவன் ?
போல நடித்த...
பிரியமில்லாதவனுக்கு...
இதயம் நொறுங்கியவளின்...
இரங்கற்பா !

எனக்கு
எதையெல்லாமோ
கற்றுக்கொடுத்தாய்!
ஏழையாய் வாழ...
கவிதை எழுத...
அவமானப்பட...

அதற்கு
குருதட்சணையாகத்தான்
என் காதலை
பறித்துக்கொண்டாயோ

மௌனம்
சம்மதத்தின் அறிகுறி!
ஆனால்
உன் மௌனமோ என்...
காதலின் சவக்குழி!

நீ
என்றேனும்
இந்த கவிதையை
பார்க்க நேர்ந்தால்...
பதில் அனுப்பு!

எனக்கு
துரோகம் செய்த காரணத்தை...

அன்புரசிகன்
18-04-2007, 12:19 PM
உருக்கமான கவி. அனுபவங்கள் ஏதேனும் உண்டோ?

நன்றி உறவே...

சுட்டிபையன்
18-04-2007, 12:29 PM
[quote=slgirl;194417]துரோகம்

என்மீது
பிரியம் உள்ளவன் ?
போல நடித்த...
பிரியமில்லாதவனுக்கு...
இதயம் நொருங்கியவளின்...
இரங்கற்பா !
---------------
--------------
கவிதை அழகு
யாருக்கோ எழுதியது போலுள்ளது:confused:

அரசன்
18-04-2007, 12:29 PM
வாழ்வில் சில சமயம் இது போன்ற அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. உண்மைதானே. இடித்துரைக்கும் உண்மை. வாழ்த்துக்கள்

ஓவியன்
18-04-2007, 12:45 PM
நெஞ்சத்தை நெருடுகிறது உங்கள் வரிகள்

எது எதையோ கற்றுத் தந்து விட்டு, பறித்துக் கொண்ண்டாய் என் காதலை - குரு தட்சணையாக.....

அருமையான கற்பனை, வாழ்த்துக்கள்.

பென்ஸ்
18-04-2007, 02:45 PM
இலங்கை பெண்...

கவிதைகள் எப்போதும் உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்பேன்...
ஆனால் அதே நேரம் கவிதைகள் கவிதையாக மட்டுமே படிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லுவேன்...

மனிதனின் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது காதல் தோல்வி என்பதை விட காதலில் தூக்கி எறியப்படும் உணர்வு வரும்போதுதான் என்று உறுதியாக சொல்லுவேன்...

செம்மீன் நாவல் விமர்சனத்தில் இளசு சொல்லும் போது "சொல்லிக் கொண்டு போனால்" எல்லாம் தீர்ந்துவிட்டது என்று ஒரு கருத்து இருக்கக் காரணம், இப்படிப் பிரியும் போது நம்முடைய "ஈகோ" காயப்படுவதில்லை... அதற்குப் பதிலாக
"பாவம், அவளும்/ னும் என்னதான் செய்வான்/ ள்" என்று ஒரு டிபன்ஸ்சை உருவாக்கி சமாதானப்படுத்திக்கொள்ளும்...

இல்லையென்றால்....
தான் தூக்கியெறியப்பட்டேன் என்பதைக் காயமாகக் கொண்டு, அதை வெளியே காட்டாமல்
நான் என்ன தவறு செய்தேன்... ???
காதலித்தேன்...
அன்பு காட்டினேன்..
விட்டுக்கொடுத்தேன்...
காத்திருந்தேன்...
என்று தன் பக்கத்தை பலப்படுத்தி...

காக்கவைத்தாய்...
வலியுடன் இருக்க வைத்தாய்...
புரிந்துகொள்ளவில்லை...
என்று குறை கண்டு பிடித்துக் காட்டும்...

சில நேரங்களில் சிம்பதி தேடி, அடுத்தவர் கவனம் கிடைக்காதா என்று ஏங்க வைக்கும் ஒரு காதல் இதயத்தை அழகாக சித்தரித்து காட்டியுள்ளீர்கள்....

என்ன செய்வது கவிதையின் நாயகியும் ஒரு சாதாரணப் பெண்தானே....

ஆனால் காயப்படும் நெஞ்சம் பல நேரம் உண்மையான காதலை காட்டும் நெஞ்சமாக இருப்பது ஒரு கசப்பான உண்மை....

கொடியவன் உண்மைக்காதலை புரிந்து கொள்ளவில்லையெனில், விட்டுவிடலாம்... காலம் காதலின் வலி(மை) சொல்லும்...

வாழ்த்துகள்...

இளசு
18-04-2007, 07:54 PM
இன்னும் ஒரு மணி நேரத்துக்காவது
இலங்கைப் பெண்ணின் கவிதையையும்
இனிய பென்ஸின் பின்னூட்டத்தையும்
பிரித்து அலசி எழுதலாம்..

அத்தனை ஆழமான மன உணர்வுச் சிக்கல்களை
இருவரும் அழகாய் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்..

காதல் - ஈர்ப்பு - நிராகரிப்பு
முழுக்க உணர்வு சார்ந்த நிகழ்வுகள்..
அறிவைக்கொண்டு ஆராய்தல்
நிகழ்வில் இல்லாதவருக்கே அந்த நேரங்களில் சாத்தியம்..

மௌனமான உதாசீனம்
விடை தெரியா விலகல்கள்
விளங்காப் பிரிதல்கள்
முழுமையடையா முறிவுகள்...

பல பத்தாண்டுகள் கழித்தும்
சில இரவின் முன்காலைகளில்
துன்பக்கனவாய் வந்து நெஞ்சு மிதிப்பதை
அறிவும் தர்க்கமும் நிறுத்த முடிவதில்லை!!!

slgirl
19-04-2007, 03:56 AM
படித்து பதிலிட்டவர்களுக்கு நன்றிகள்

ஓவியா
19-04-2007, 04:02 AM
மௌனம்
சம்மதத்தின் அறிகுறி!
ஆனால்
உன் மௌனமோ என்...
காதலின் சவக்குழி!


இந்த வரி மிகவும் அருமை


கவிதை நன்று.

slgirl
19-04-2007, 04:11 AM
நன்றி ஓவியா

poo
19-04-2007, 06:22 AM
அழகான கவிதை.. நேர்த்தியான அலசல்..

பாராட்டுக்கள் தோழிக்கும், நண்பர் பென்ஸுக்கும், அன்பு அண்ணனுக்கும்!

ஆதவா
19-04-2007, 08:53 AM
துரோகம்... காதலனின் வஞ்சனை.. தவிப்பவளின் கண்ணீர்த் துளிகள்... அருமையாக எழுதூகிறீர்கள்... அனுபவக் கொடுமையா?
மௌனம்
சம்மதத்தின் அறிகுறி!
ஆனால்
உன் மௌனமோ என்...
காதலின் சவக்குழி!

வரிகள் இம்மாதிரி சிலருக்குத் தான் வரும்.. நம் மன்றத்தில் சிலர் இம்மாதிரி கவிதைகள் எழுதுவார்கள்.... நீங்கள் அதினினூடே!

அறியாமல் பறித்துக்கொண்ட காதல் துரோகத்தின் காரணத்தை அறிய விரும்பி மடல் எழுதிய உங்கள் கவிதையின் வரிகள்.... அட்டகாசம்...

பாராட்டுக்கள் தோழி.

ஆதவன்

slgirl
19-04-2007, 10:08 AM
நன்றிகள் ஆதவா

crisho
19-04-2007, 01:11 PM
ஆனால் காயப்படும் நெஞ்சம் பல நேரம் உண்மையான காதலை காட்டும் நெஞ்சமாக இருப்பது ஒரு கசப்பான உண்மை....


அது அது அது... வாழ்க பென்ஸ்... சரியா சொன்னீங்க....

கவனிக்க: காயப்படும் உண்மை நெஞ்சம் கூடிய அளவு ஆடவரே!

தங்கவேல்
19-04-2007, 01:32 PM
சகோதரி..
எப்போதும் கவிதையை வெறுப்பவன். ஆம்.. கவிதை என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களை என்னால் சகிக்க இயலாமல், படிப்பதையே நிறுத்தி இருந்தேன்.

ஆனால், உமது கவிதை...

அனுபவமா ? இல்லை எனில் எனது நெஞ்சுக்குழியில் தேன் வார்த்தது போல். ஆமாம் எனில்,

வருத்தம்... கனக்கும் இதயம். கவிதையில் இத்தனை உயிர்ப்பாடா ???

சகோதரி, உமது எழுத்துக்கள் எம்மை, எனது இதயத்தை கத்தி கொண்டு கீரியது போல் வருடுகிறது..

வாழ்க வளமுடன்..

அன்பு சகோதரன் ---- தங்கம்

slgirl
20-04-2007, 04:06 AM
அனைவருக்கும் நன்றிகள்

நன்றி தங்கவேல் அண்ணா கவிதைகளை வெறுக்கும் நீங்களே இந்த கவி பக்கம் வந்திருப்பது மகிழ்ச்சியே தொடர்ந்து இணைந்திருங்கள்

ஆதவா
02-05-2007, 02:43 PM
சகோதரி..
எப்போதும் கவிதையை வெறுப்பவன். ஆம்.. கவிதை என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களை என்னால் சகிக்க இயலாமல், படிப்பதையே நிறுத்தி இருந்தேன்.

அன்பு சகோதரன் ---- தங்கம்

நீங்கள் யாரைக்குறிப்பிடுகிறீர்கள் அல்லது என்ன குறிப்பிடுகிறீர்கள்/?