PDA

View Full Version : முடமாகிப்போன சர்வதேசமே



slgirl
18-04-2007, 11:04 AM
[B]B]

சர்வதேச
சனநாயகமே
மனித உரிமைபற்றி
மூசிமூசிக் கத்துகின்றாய்
இங்கே நடக்கும்
அவலம் காண
இல்லையா கண் உனக்கு???

இரத்தங்களை குடிக்கும்
கழுகு கூட்டத்திடம்
காணமல் போனவனை
அடையாளமிட்டு
காட்டுகின்றாய்
மன்னித்திடு உனக்கும்
எனக்கும் மட்டும் தெரியட்டும்
அவர்கள் பிணத்தையும்
தின்பார்களாம்

திருகியெறியப்பட்ட
தலையின் தகவல்களும்
கடத்தப்பட்டவர்களின்
திடுக்கிடும் தகவல்களும்
இவர்களை தேடி
புகைப்படத்தை ஏந்தி
அலைந்து திரியும் கோலமும்
மலிந்ததொன்று நம் நாட்டிலே

இழந்து போனது
நிலத்தையும் வீட்டையும்
மட்டுமல்ல
உயிர்களையும் தான்
தொலைந்து போனது எங்கள்
முகவரி மட்டுமல்ல
சிலரின் முகங்களும் தன்
இனியும் இழப்பதற்கு எதுவும்
இல்லை கண்ணீரை தவிர...

ஓவியன்
18-04-2007, 11:19 AM
இனியும் இழப்பதற்கு எதுவும்
இல்லை கண்ணீரை தவிர...

ஏற்றுக் கொள்ள மாட்டேன் நான் இதை.............
நாம் இழக்காமல் வைத்திருப்பது இன்னும் ஒன்று - அது தன் மானம்.
ஈழத் தமிழன் இன்னமும் அதனை இழக்கவில்லை, இழக்கவும் மாட்டான்.

slgirl
18-04-2007, 11:30 AM
நீங்கள் சொல்வது சரி தான் ஓவியன் அனுபவிக்கும் அவலங்களால் வந்த வரிகளிவை (தமிழ்ன் இன்னும் இத்தனையும் தாங்குவதற்கு காரணம் தன்மானம் தமிழன் என்ற தன்மானம் தானே) போற்றிடனும் அந்த செயலை எம்மவர்க்கு ஈழம் கிடைக்க வேண்டிடுவோம்

ஓவியன்
18-04-2007, 11:34 AM
ஆமாம், உணர்சிவசப் பட்டு உங்கள் கவிதையைக் கூட வாழ்த்தவில்லை.

வரிகள் அருமை சகோதரி - உணர்வுகளைக் கொட்டுகிறீர்கள் வாழ்த்துக்கள்.

slgirl
18-04-2007, 11:45 AM
நன்றி ஓவியன்

அன்புரசிகன்
18-04-2007, 12:08 PM
நம் கை நமக்குதவி என்பது சர்வதேசம் நமக்கு புகட்டிய நல்ல பாடம். இனிமேலும் சர்வதேசம் ஒன்றையும் வாரி இறைத்துவிடப்போவதில்லை. அரசாங்கத்தின் பொய்ப்பிரச்சாரத்தில் மயங்கிநிற்கின்றனர். குளிரூட்டிய அறையில் மிக்சரும் குளிர்பானத்தையும் உண்ணவேண்டுமென்றால் மட்டும் நமது பக்கம் எட்டிப்பார்ப்பார்கள்.

கவிவடிவில் தந்த உறவுக்கு நன்றிகள் கோடி.

slgirl
18-04-2007, 12:13 PM
நன்றிகள் அன்புரசிகன்

சுட்டிபையன்
18-04-2007, 01:15 PM
[B]B]

சர்வதேச
சனநாயகமே
மனித உரிமைபற்றி
மூசிமூசிக் கத்துகின்றாய்
இங்கே நடக்கும்
அவலம் காண
இல்லையா கண் உனக்கு???

இரத்தங்களை குடிக்கும்
கழுகு கூட்டத்திடம்
காணமல் போனவனை
அடையாளமிட்டு
காட்டுகின்றாய்
மன்னித்திடு உனக்கும்
எனக்கும் மட்டும் தெரியட்டும்
அவர்கள் பிணத்தையும்
தின்பார்களாம்

திருகியெறியப்பட்ட
தலையின் தகவல்களும்
கடத்தப்பட்டவர்களின்
திடுக்கிடும் தகவல்களும்
இவர்களை தேடி
புகைப்படத்தை ஏந்தி
அலைந்து திரியும் கோலமும்
மலிந்ததொன்று நம் நாட்டிலே

இழந்து போனது
நிலத்தையும் வீட்டையும்
மட்டுமல்ல
உயிர்களையும் தான்
தொலைந்து போனது எங்கள்
முகவரி மட்டுமல்ல
சிலரின் முகங்களும் தன்
இனியும் இழப்பதற்கு எதுவும்
இல்லை கண்ணீரை தவிர...

இழப்பதற்க்கு கண்ணீர் கூட இல்லை, அது கூட வரண்டு போய்விட்டது

slgirl
19-04-2007, 04:25 AM
நன்றி சுட்டிபையன்

poo
19-04-2007, 06:24 AM
முடமாகிப்போன சர்வதேசமே.. என்று தலலப்பிட்டிருக்கலாம் தோழி.

சிலரது கவிதைகளை படித்து ரசிக்கலாம்.. ஆனால் உங்களுடையதை ரசிக்கமுடியவில்லை... உருகவைக்கிறது!

slgirl
19-04-2007, 08:01 AM
உங்க விருப்பப்படி மாற்றி விடுகின்றேன் தலைப்பினை நன்றி பூவே

ஆதவா
19-04-2007, 08:47 AM
சர்வதேசம்... சர்வம் என்றால் எல்லாமே என்று பொருள்... சர்வம் சத்தியம் சன்மார்க்கம்... இதில் தேசங்கள் சர்வத்தையும் தொலைத்துவிட்டு நிற்கின்றன.

மூசிமூசிக் - இதற்கென்ன அர்த்தமெனச் சொல்லுவீரா?

கவிதை வரிகள் நேர்த்தியாகப் பின்னப்பட்ட கூந்தலைப் போல இருக்கிறது. காதல், வலி, நட்பு, என்று மாறிமாறி அறையில் முத்தெடுக்கும்போது ஒரு அறைகூவல் காதில் ஒலிக்கிறது. மிரண்டு போன கண்கள் விமர்சனம் எழுதவும் தயங்கத்தான் செய்கிறது.

விடைகள் ஒழிக்கப்பட்ட கேள்விகளைத்தான் ஈழத்தில் எழுப்புகிறார்கள் ஈனர்கள்... நமக்கு பதில் தெரிந்தும் அதைத் திருகி குப்பையில் வீசுகிறார்கள். உங்கள் நாட்டு அவலங்கள் கண்களுத் தெரியும்படியான கவிதை இது...

உங்கள் எழுத்துக்களையாவது அவர்கள் புசிக்கட்டும்... அன்றாவது மனம் பசியடங்குமா என்று பார்ப்போம்...

கவிதையினால் தாள்கள் எரிகின்றன... உங்கள் வேதனை நெஞ்சைக் கீறுகிறது.... வாழ்த்து சொல்ல இது இடமல்ல்ல ஆயினும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்...

அங்கங்கு முற்றுப் புள்ளிகள் வைக்கவும். எழுத்துப் பிழையைத் தவிர்க்கவும்...

நன்றி

ஆதவா
19-04-2007, 08:49 AM
சுட்டிப் பையரே!! முழுக் கவிதையும் மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.. எல்லா இடங்களிலும் இப்படிச் செய்வதால் படிப்பவர்களுக்க்கு இடையூறு ஏற்படலாம்.. தொடர்ந்து செய்திட்டால் நிர்வாகிகள் கவனத்திற்குச் செல்லவும் வாய்ப்புண்டு... முழித்துக்கொள்ளுங்கள்...

ஷீ-நிசி
19-04-2007, 08:57 AM
மனதை நெகிழ வைக்கும் வரிகள் தான் இங்கே கவிதையாய்...

அன்பு சகோதரி! உங்கள் தேசத்தில் அன்பும் அமைதியும் திரும்பும் காலம் வெகு தொலைவில் அல்ல...

slgirl
19-04-2007, 09:39 AM
சர்வதேச
சனநாயகமே
மனித உரிமைபற்றி
மூசிமூசிக் கத்துகின்றாய்

இதில் மூசிமுசிக் கத்துகின்றாய் என்பது இடைவிடாமல் அதை பற்றி மட்டுமே கத்துதல் என்று பொருள்படும் ஆதவா நன்றி உங்க பின்னூட்டத்திற்கு

நன்றி நிசி ஆமாம் வெகு தொலைவில் இல்லை காத்திருக்கோம் விடியலுக்காக

lolluvathiyar
19-04-2007, 10:10 AM
கவிதை அருமை
ஆனால் அதுக்கு
சர்வதேச சனநாயகத்தை
அழைப்பது தான் வேடிக்கை

சர்வதேச சனநாயகம் என்றுமே வேடிக்கை தான் பார்க்கும்
அவர்களை குரை கூறி பயனில்லை

சர்வதேச சனநாயகத்துக்கு பொழுது போக
சினிமா, ஆடல் பாடல், கூத்து எல்லாம் பார்த்து போரு அடித்து போய்
இப்பொழுது அவலங்களை பார்த்து ரசிக்கும் படி ஆகிவிட்டது.

சர்வதேச சனநாயக ஒரு நாட்டில் நுழைந்தால் அந்த வீட்டின் இருக்கும்
மிச்ச மீதியான மானும் பறிபோகும்

ஏ,கா - சதாம் ஈராக் மக்களால் விரும்பபட்டவர் அல்ல
ஆனால் அவரை அகற்றிய அமெரிக்கர்கள் அதை விட மோசமான
நிலமைக்கு தான் ஈராகை மாற்றினார்கள்


சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழுவதே மேல்

புரிந்து கொள்ளுங்கள், புரியும் பக்குவம் உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை