PDA

View Full Version : கொடி இடை வேண்டுமா?



роЪрпБроЯрпНроЯро┐рокрпИропройрпН
18-04-2007, 10:13 AM
இளம் பெண்கள் பலர் கண்ணாபின்னாவென்று சாப்பிட்டு உடல் பருமனால் அலங்கோலமாய்க் காட்சியளிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உடல் எடைக் குறைப்புக்காக நவீன சிகிச்சை, மெஷТனில் உடற்பயிற்சி என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இனி செலவே செய்யாமல் கொடியிடை பெறலாம்.


அதற்கான சிறு சிறு பயிற்சிகள் இதோ...

கச்சிதமான உடலுடன் இருக்க விரும்பும் பெண்களுக்கு உடலில் அதற்கு தகுந்த மாதிரி தசை இருப்பது அவசியம். சிறிய தசைகள் மீது போதிய கவனம் செலுத்தினால் உடல் நல்ல வடிவத்தைப் பெறும். இந்த தசைகளைச் சுற்றி குறைந்த அளவு கொழுப்பே இருப்பதால் மேக்ரோ ஏரியாக்கள் எனப்படும் தொடை மற்றும் பிட்டங்கள் மீதே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம்.

ஆனால் மைக்ரோ ஏரியாக்களில் (சிறிய தசைகள்) கவனம் செலுத்துவதன் மூலம் குறைந்த காலத்தில் சிக் கென்ற உடம்பைப் பெற முடியும்.


தோள் பட்டை பயிற்சி

நல்ல வடிவமான தோள்கள் உங்கள் இடுப்பை சிறியதாகக் காட்ட உதவும். இதற்கு மிக எளிதான பயிற்சி ஒன்று உள்ளது. தரையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். இந்த நிலையில் தலை மற்றும் மார்பை உயர்த்தவும்.

தோள் பட்டையை குறுக்கி வயிற்றுத் தசைகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு நிமிரவும். இந்த நிலையில் ஒன்று முதல் ஆறுவரை எண்ணவும். இந்த பயிற்சியை 12 தடவைகள் செய்யவும்.


முதுகுப் பயிற்சி

வலிமையான முதுகு உங்கள் தோற்றத்தை செம்மையாக்கும். உங்களை ஸ்லிம்மாக காட்ட உதவும்.

ஒரு நாற்காலியில் உட்கார்ந்து பாதங்களைத் தரையில் பதித்துக் கொள்ளுங்கள்.

அப்படியே முன்புறமாக முதுகை (நிமிர்த்திய நிலையில்) வளைத்து முழங்கால்களின் மீது மார்பு படும் நிலைக்கு வரவும். உங்கள் கைகள் ஒவ்வொன்றிலும் 2 அல்லது 3 கிலோ எடையை பிடித்துக் கொண்டு கீழ்புறமாக தொங்க விடவும். கைகளை மெல்ல தோளுக்கு இணையாக (பக்க வாட்டில்) உயர்த்தவும். பிறகு மெல்ல கீழிறக்கவும். 8 முதல் 12 தடவை இப்படிச் செய்யவும். இடைவெளி விட்டுவிட்டு இந்தப் பயிற்சியை 3 முறை செய்யவும்.


வயிற்றுப் பயிற்சி

தட்டையான வயிற்றைப் பெற இந்தப் பயிற்சியைப் பெறவும். தரையில் மல்லாந்து படுக்கவும். பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும். கைகளை விட்டம் நோக்கி உயர்த்தும் போது வயிற்றை இறுக்கமாக வைத்திருக்கவும். இடுப்புப் பகுதியிலிருந்து கால்களை உயர்த்தவும். கொண்டைக்கால் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். முதுகை தட்டையாக தரையில் படும்படி வைத்து கைகளை தலையை நோக்கி கொண்டு வரவும். இதே சமயத்தில் உங்கள் வலது காலை நீட்டவும்.

ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். மீண்டும் பழைய நிலைக்கு வந்து இடது காலை நீட்டவும்

роУро╡ро┐ропройрпН
18-04-2007, 10:14 AM
என்னப்பா சுட்டிப் பையா எல்லாத் துறையிலும் புகுந்து கலக்கிறீங்க அப்பு!!

роЪрпБроЯрпНроЯро┐рокрпИропройрпН
18-04-2007, 10:19 AM
நான் தான் சகலகலா வல்லவன் அப்படி சொல்ல ஆசைதான்

crisho
18-04-2007, 10:30 AM
நீங்க படு சுட்டி தானுங்கோ :grin:

роЪрпБроЯрпНроЯро┐рокрпИропройрпН
18-04-2007, 10:40 AM
நீங்க படு சுட்டி தனுங்கோ :grin:

நன்றிங்க:icon_03:

ро░ро╛роЪро░ро╛роЪройрпН
21-04-2007, 01:14 PM
நல்லவேளை..! சிறிது சந்தேகத்தோடுதான் இங்கே வந்தேன்.
கொடியிடை வேண்டுமா? எனக்கேட்டுவிட்டு, இடுப்பில் ஒரு கொடியைகட்டிக்கொண்டு இதுதான் "கொடியிடை" என சொல்லாமல் விட்டீர்களே..

கோடி புண்ணியம் சுட்டிப்பையரே.

роЪрпБроЯрпНроЯро┐рокрпИропройрпН
21-04-2007, 01:21 PM
நல்லவேளை..! சிறிது சந்தேகத்தோடுதான் இங்கே வந்தேன்.
கொடியிடை வேண்டுமா? எனக்கேட்டுவிட்டு, இடுப்பில் ஒரு கொடியைகட்டிக்கொண்டு இதுதான் "கொடியிடை" என சொல்லாமல் விட்டீர்களே..

கோடி புண்ணியம் சுட்டிப்பையரே.

என்ன காந்த்தி தாத்தா இது........ நல்லா இல்லை சொல்லிட்டேன்
அப்புறம் அழுதிடுவன்

рооройрпЛроЬрпН
21-04-2007, 01:32 PM
அருமை சுட்டி ஆனா செய்யதா மாட்டங்க அதனால்தான் எளிய உடற்பயிற்சி சாதனம் விலை அதிகம் புரிகிறதா

роЪрпБроЯрпНроЯро┐рокрпИропройрпН
21-04-2007, 01:56 PM
அருமை சுட்டி ஆனா செய்யதா மாட்டங்க அதனால்தான் எளிய உடற்பயிற்சி சாதனம் விலை அதிகம் புரிகிறதா

புரியுது இந்த காலத்தில, இயந்திரத்தின் மேல உள்ள நம்பிக்கை மனைதன் மேல இல்லை

роУро╡ро┐ропро╛
22-04-2007, 10:07 PM
அடடா, பெண்களின் மேல் என்ன அக்கறை!!!!!!!!!!!!!!!! அசந்துட்டேன்.

பதிவுக்கு நன்றி சஞசய்.