PDA

View Full Version : கல்லறைகூவல்



ஆதவா
18-04-2007, 08:32 AM
தேய்ந்துபோன வானத்தினடி
தேயத்துடிக்கிறது
தேனிலா

முட்டி மோதி விருட்சமாய்
மலர நினைக்கும் மேகத்தை
விலக்கிவிட்டு புணரத் துடிக்கிறது
பகலவனும் பல்லவியும்.

இடையிடையே உதிர்ந்த
ரத்தங்களைப் பொறுக்கி
எடுத்துக் கொண்டு
பொத்தி வைக்கிறது
நிலமெனும் அரக்கி.
நெஞ்சில் புண்களை விதைத்து
அறுவடை செய்யும் கிழத்தி

:nature-smiley-003:

புற்களுக்கூடான பாதையில்
நடை தளர்ந்து
போய் நிற்கிறது
ஒரு ஆவி
அதன் கையில் விண்ணை
வெடிக்கச் செய்யும்
ஒலிப் பெருக்கி.

அறைகூவலுக்குத் தயாரான
நிலையில், சொறிந்துகொண்டிருந்த
இரத்தப் பிழம்புகளை
வெறித்துப் போய்
பார்த்துக் கொண்டே
கண்களை மிரட்டுகிறது
கல்லறையை வாடகைக்குப்
பிடித்துத் தொங்கும் பேய்.

முருங்கை மரத்து நண்பர்களும்
நெஞ்சு பிளந்து தின்னும் எதிரிகளும்
உறங்கியே உடைந்துபோகும்
உறவினர்களும்,
இன்னும் பல இத்யாதிகளும்
இரைக்கும் கூவலை
எதிர்நோக்கி இருந்தார்கள்

பூச்செண்டு பறித்த கதையுண்டு
கரமிழந்தவர்கள் காதல் கேட்டதுண்டு
கணவன் இழந்து சிரித்தவர்கள் பார்த்ததுண்டு
இதை மொண்டு எடுக்க பலருண்டு

ஒரு சொல் சொல்லிற்று.
ஏற்கனவே இறந்துபோன பேய்

வாழ்வது சாவது மேலது.

முட்ட முடியாமல் -கைகள்
வெட்டு பட்ட வீரர்கள்
ஒற்றைச் சூரியனாய்
உள்நுழைகிறார்கள்
கல்லறைக்கு...
புதிய உறுப்பினர்கள்
கூடிவிட்டது சுடுகாட்டில்..

slgirl
18-04-2007, 11:07 AM
கல்லறை குமுறல்கள் அருமை ஆதவா

poo
19-04-2007, 05:56 AM
எதுவுமில்லை நிரந்தரம் என்று சொல்கிறோம்.. யோசித்துப் பார்த்தால் விடை தெரியும் "மரணம்" நிரந்தரம்.

"வாழ்வது சாவது மேலது" - இறந்தபின் சொன்னாலும் , வாழ்ந்தபிறகுதானே இறந்தாய்..,
நானும் வாழ்ந்துவிட்டு பின் சேர்ந்து கொள்கிறேன் இந்த சொல்லில்.. என்பதே பதில். இந்த பதில்தான் முடிச்சு, சூன்யம், விதை.

-- இன்னும் எழுத வாழ்த்துக்கள் ஆதவன்.

ஆதவா
19-04-2007, 06:07 AM
மிகவும் நன்றிங்க இலங்கைப் பெண்.
மிகவும் நன்றிங்க அண்ணா! உங்கள் வாழ்த்துக்களினால் மேலும் நிறைய எழுதுவேன்.

ஓவியன்
22-04-2007, 09:12 AM
ஆதவா கொஞ்சம் புரிகிறது நிறையப் புரியவில்லை, விளக்கினால் நன்றாக இருக்கும்.

ஓவியா
22-04-2007, 07:56 PM
பூச்செண்டு பறித்த கதையுண்டு
கரமிழந்தவர்கள் காதல் கேட்டதுண்டு
கணவன் இழந்து சிரித்தவர்கள் பார்த்ததுண்டு
இதை மொண்டு எடுக்க பலருண்டு



அருமையான கரு, உக்காந்து யோசிப்பீறோ!!!

எழுத்து நடை அமர்களம்.

பாராட்டுக்கள் தலிவா

டாக்டர் அண்ணாதுரை
23-04-2007, 08:08 AM
கவிதையின் நயம் அருமை நண்பரே.
வாழ்த்துகள்
அன்புடன்
ஆனந்த்

ஆதவா
04-05-2007, 05:03 PM
வாழ்வில் எது நிரந்தரம்?,

இந்த சூரியனே ஒரு காலத்தில் அழியத்தான் போகிறது. ஆக நிரந்தரமானது என்று எதுவுமே இல்லை. ஒரு பேயின் அறைகூவலில் சுட்டியிருப்பது அதுதான்.. இறப்பு நிலைதான் இறுதியில் மிஞ்சும்...

முட்டமுடியாமல் - இந்த சமுதாயத்தோடு மோத முடியாமல் தோற்கும் இளைஞர்களே வெறும் வார்த்தைகள் போதாது தைரியம் வளர்க்க,. இன்றைய தேவை என்னவோ அதை உணருங்கள்... எத்தனையோ மக்கள் இப்படித்தான் முடியாமல் ஓய்ந்துபோய் சுடுகாட்டில் பிணமாகிறார்கள்... அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிவிடுகிறது.

இறப்பு அல்லது அழிவு ஒன்றுதான் நிரந்தரம். மற்றவைகள் தற்காலிகம் தான்...

சுட்டிபையன்
10-05-2007, 01:06 PM
வாழ்த்துக்கள் தலை, இந்த உலகத்தில் 6அடி நிலம்தான் எல்லோருக்கும் சொந்த்தம் அது யாருக்கும் புரிவதில்லை, புரியவைக்க முயற்ச்சி செய்யுங்கள் என்னும்