PDA

View Full Version : ஆய பயன்..



rambal
10-05-2003, 09:25 AM
ஏகாந்த இரவுப் போதுகளில்
ராணிகளின்
சாம்ராஜ்ஜியத்தில்
மதி மயக்கும்
மதுவுடன்
கொண்டாட்டமாய்
குடியேறிய பின்
வந்தமர்ந்த
வறட்டுச்சிந்தனைகள்
கொண்டு
என் தமிழ் எழுதி
ஆய பயன்?

உற்று உற்றுப் பார்த்து
உயிரோடுதான்
நான் இருப்பதை பறைசாற்றி
என் பிரேதத்தில்
உயிரோடு இருக்கும்
ஒரே ஒரு உறுப்பான
கண்களினால்
ஆய பயன்?

என் எழுதுகோலை
கறையான்கள்
அரித்துச் சமைத்து
சாப்பிட்ட வேளையில்
எழுதுவதற்கு
ஏதுமற்ற போதுகளில்
விட்டேத்தியான பார்வைகளை
விண்ணில் வீசி எறிந்து
வெறித்துப் பார்த்ததினால்
ஆய பயன்?

நாலு சுவருக்குள்
அமர்ந்து
என் எதிரே உட்கார்ந்து கொண்டு
என்னைப் பார்த்து
கண்ணடித்துச் சிரித்து
என்
உணர்வுகளை
அற்றுப் போகச் செய்து
விட்டவளை
விட்டு கொஞ்சம்
ஒதுங்கி நின்றதால்
ஆய பயன்?

கலகக்காரர்களின்
கைகளில்
அகப்பட்ட பந்தாய்
நாலா திசையும்
எறியப்பட்டு
எதிர்ப்பட்ட சுவரில் மோதி
மறுபடியும் கலகக்காரர்களின்
கையில் சிக்கி
தப்பிக்க நினைக்கையில்
வெடித்துவிட்டதால்
ஆய பயன்?

என்னை நானே
கொல்கின்ற
நிலைக்கு வந்த போதும்...
இந்த பிரபஞ்சத்தின்
காற்று எனக்கு
எதிராய் கிளம்பிவிட்டபோதும்
சொல்ல முடியாத
ரகசிய அவஸ்தையை
அனுபவிக்கத்தான்
மனம் நாடுகிறதே...

ஆகையால்,
ஆய பயன்
என்னவெனில்,
நான் நீயாகத்
திரிந்து போனதுதான்
ஆய பயனால் ஆனபயன்....

இளசு
10-05-2003, 09:31 AM
உனக்கு என்ன பயன் என்பதெல்லாம் விளங்கவில்லை ராம்...
எங்களுக்கு இனிய பயன்... உன் கவிதைகள்...
அவை போதும் .... இடைவிடாமல் தொடர்ந்தால்.....

karikaalan
10-05-2003, 09:53 AM
நான் நீயாகத் திரியவில்லை ராம்பால்ஜி! நானும் நீயும் ஒன்றானோம். அதுதான் ஆய பயன்.

===கரிகாலன்

Nanban
11-05-2003, 10:31 AM
ஆய பயன் - புதிய சிந்தனைகளாக இருக்கும். இருப்பதால் என்ன பயன் என்ற சிந்தனையே, புதியவற்றைத் தோற்றுவிக்கும்.. உலகம் இயங்குவதே, ஆய பயன் என்ன என்ற கேள்வியின் சித்தாந்தமே.....

ஆகையால், எல்லோரும் கேளுங்கள், ஆய பயன் என்ன என்று.....

என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற கீதையின் சொல்லுக்கும் அர்த்தம் விளங்கும்.......