PDA

View Full Version : பிடிக்க முடியாத குற்றவாளி!



poo
18-04-2007, 07:08 AM
என்னை
விலங்கிட முடியாது..
மாமனிதர்களையெல்லாம்
விலங்காக்கி
விளையாடியிருந்த போதிலும்!

என்னை
சிறையிலடைக்க முடியாது...
சின்னப் பிஞ்சுகளை
சின்னாபின்னமாக்கி
சிதைத்திருந்த போதிலும்!

என்னை
சவுக்காலடிக்க முடியாது..
வலிமையில்
சளைத்தவனையெல்லாம்
சவலையாக்கியிருந்த போதிலும்!

என்னை
தூக்கிலேற்ற முடியாது..
என்னால்
வாழ்விழந்தவர் ஏராளம்
இழக்கப்போவோரும் தாராளம்!

விருந்துக்கள்தாம்
என்
கொலைவிழாக் களங்கள்..
மருந்தாக
எனையழைப்போரை
மயக்கியழிப்பதுமென் வழக்கு!

தொடர்ந்து
இயங்கிக் கொண்டிருக்கிறேன்...
இயக்கங்களை நிறுத்தியபடி!

என்னை
அடையாளம் தெரிந்திருக்கும்..
நிராயுதபாணிகளான
மனைவிகளுக்கும்..
நிராகரிக்கப்பட்ட
பிள்ளைகளுக்கும்..
என்னை
அடையாளம் தெரிந்திருக்கும்..
அவர்களை
நிறுத்திக் கேட்க
எவருக்கும் நேரமில்லை..
ஆதலால்
ஓடிக் கொண்டேயிருக்கிறேன்
ஆறாக...
மதுவென்னும் பேராக..
மூன்றாம் உலகப்போராக!...


-நன்றி:- கரு கொடுத்த அறிஞர் கிப்சனுக்கும்., உரு கொடுத்த கவிஞர் ஆதவனுக்கும்!

சுட்டிபையன்
18-04-2007, 07:16 AM
அழகான கவிகள்
குடியால் குடியிழந்தவர் பலர்

slgirl
18-04-2007, 07:16 AM
பூவே அருமையான கவிதை தொடருங்கள்

ஆதவா
18-04-2007, 07:55 AM
வருகிறேன்...... இரவில்..... (கோப்பையோடு)

poo
18-04-2007, 07:58 AM
நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்.... கோப்பையோடு என்ற மட்டில்... (கோபத்தோடு என்று இருந்திருந்தால் என்னாவது!?)

poo
18-04-2007, 07:59 AM
நன்றி சுட்டிப்பையன்..
நன்றி இலங்கைப்பெண்ணே... - இருவரும் நிறைய கவிதை எழுதிக் குவித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்!!

pradeepkt
18-04-2007, 08:25 AM
ஹ்ம்ம்... மதுவால் திரிபு கொள்வதே மதி! (ஒடனே மதி சண்டைக்கு வந்துருவான்)
அதைச் சரியான விதத்தில் சொன்னவிதம் சிறப்பு பூ!

paarthiban
18-04-2007, 03:23 PM
டாஸ்மாக்குக்கு நெத்தியடி . ஆனா உரைக்கணுமே

நல்ல கவிதை பூ அவர்களே

ஷீ-நிசி
18-04-2007, 03:34 PM
மாதத்தில் ஒருமுறை குடிப்பவர், விருந்து சமயங்களில் மட்டும் குடிப்பவர், வற்புறுத்தலில் குடிப்பவர்... இவர்களை மன்னிக்கலாம்... குடியே கதி என்று கிடப்பவர்களை என்ன சொல்ல முடியும்? இதில் அதிகம் பாதிக்கபடுவது மனைவியும், பிள்ளைகளுமே!

பூ! நல்லதொரு கவிதை!

இளசு
18-04-2007, 07:01 PM
மதுவினால் மாண்ட சிலநூறு பேரையாவது பார்த்தவன்
மன்றாடுகிறேன்..

அடிமைப்படுவோம் என எண்ணம் கொஞ்சம் வந்தாலும்
அடியோடு தலைமுழுகிவிடுங்கள்!

காலையில் குடித்தல்
தனியாய்க் குடித்தல்
ஓவரோ என உள்ளூறக் குறுகுறுப்பு
குறைச்சுக்கப்பா எனச் சொல்லும் அடுத்தவர் மேல் கடுப்பு.

நாலில் எது வந்தாலும் - நிறுத்தும்
நாள் வந்துவிட்டது என அர்த்தம்!

வாகன விபத்து
வாக்குவாதம்
பணிக்கு திடீர் விடுப்பு
வரு -மான இழப்பு

இவை வருமுன் தடுப்பது
உன் கையில் (ஏந்தாததில்) இருக்கு!

பூவுக்கும் அண்ணன் சொல்றேன்..
பூ சொன்னதைக் கேட்கச் சொல்றேன்..

பாராட்டுகள் பூ...

poo
19-04-2007, 04:15 AM
நன்றி பார்த்திபன், நன்றி ஷீ, நன்றி அண்ணா...நான் சொன்னதைவிட உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.... எங்கள் ஊரில் நான் கண்கூடாக கண்ட நிகழ்வுகள் நிறைய...

----

இந்த கவிதையை நதிநீர் பிரச்சினையைக் கொண்டு எழுதினேன்...கூடவே மதுவுக்கும் பொருந்துமாறு... இரண்டும் ஆபத்தானவைகள்தாம்..

ஆனால் இவன் கவிதை என்றாலே இப்படித்தான் என எல்லோரும் வெறுத்துவிடப் போகிறார்களென ஒற்றைவழிப் பாதையாக்கி அந்த இறுதிக்கு முன்னான "மதுவென்னும் பேராக" என்ற வரியைச் சேர்த்துவிட்டேன்...

ஆதவா
19-04-2007, 10:52 AM
அருமை பூ!...

மாமனிதரையெல்லாம் விலங்காக்கி...... தீடீரென புறப்பட்ட புயலென நான் இருக்கையில் சற்றே நிற்க வைக்கிறது
வரிகள். மது என்ற ஒரு துளி மருந்தால் விளையும் பயிர்களின் விளைச்சல் கொடுமைதான். சட்டென தோன்றிய கவிதை
ஒன்றை இடுகிறேன் பாருங்கள்

கஞ்சா தின்றால்
கவிதை வருமென்று
சொன்னார்களாம்....
என் தோட்டத்தில்
கஞ்சாச்செடிகள்.

சிறையிலைடத்து விலங்கிட்டு முடிக்க திடமா இது?... கண்களை மயக்கும் வாயுவுமல்ல இது.... போதையை எந்த
ரகத்தில் சேர்த்துவது?

முதல் மூன்று பேராக்கள் இழப்புகளைச் சொல்லுகிறது.. மது என்ற பேரழகி நிர்வாணமாய் ஆடும் கேபரே டான்ஸினால்
தொலைந்து போன மனிதத்தைச் சொல்லுகிறது..

விருந்துகள் என் கொலைவிழாக் களங்கள்

சிறந்த கவிஞருக்கு எச்சிலும் எழுத்துக்கள்தான்.... வியக்கிறேன் பூ அண்ணா!! விருந்தின் பேரில் மதுமங்கையை
சுவைப்பவர் பலர்..... இன்றைக்கு அரசே "பார் அமைத்து மது அருந்தச் சொல்லுகிறது.. புலால் மறுக்க முடியாது.
ஆனால் குடி ம(ற)றுக்கலாமே!

இயக்கங்களை நிறுத்தியபடி - உடலியல் மாற்றங்கள், கனவுலகப் பாதைகள்.... காட்சியின் ரணங்கள்,
இன்னும் எத்தனை நாள்தான் என்று கேட்டுக் கேட்டு மீண்டும் டாஸ்மார்க்கில் கொண்டுசென்றுவிடும் மூளையின்
மூடத்தனம்.. நம்மை நாம் உணரா வண்ணம் இயக்கங்கள் நின்று போய்விடுவதில்லை.

எவர் சொல்லி என்ன பயன்? மனைவி சொன்னால் கேட்பவனுண்டா? தன்னைப் பார்த்து மகன் கெட்டுப்போவானே என்று
வருந்தும் மதுக்காரன் தானுண்டோ? ஒரு தகப்பனாக மகனுக்குப் புகட்டவேண்டிய தந்தைப் பாலை ஒயின் கலந்து ஊற்றிவருகிறது சில உள்ளங்கள்...
மூன்றாம் உலகப் போராகக் குறிப்பிடுவது இதையா? மது ஒரு மருந்து.. சிலருக்கு விருந்து.. மற்றபடி வேறல்ல...
(மூன்றாம் உலகப் போருக்கு அர்த்தமென்ன?)

மொத்தத்தில் மயக்கக் கவிதை மதுஇல்லாமல்... உங்களிடமிருந்து இத்தனை மது" வாக வந்தது இன்னும் குறிப்பிடத்தக்கது.. மொண்டு குடிக்கிறேன் மீண்டும்.....
------------------------------------------------
இதேமாதிரி ஒன்று நான் எழுதியது.... இதோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7415)

poo
20-04-2007, 05:04 AM
நன்றி ஆதவன்...

கணக்கெடுப்பில் மதுவினால் இறப்போரின் எண்ணிக்கை இதுவரை நடந்த போரினால் (அண்மை ஈராக் போர் தவிர்த்து!?) ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையைத் தாண்டுமளவு இருக்கிறதாம்... போர் என்று ஒன்று வந்தால் அலறுகிறோம்.. ஆனால் மௌனமாக நம்மைத் தின்னும் விடயங்களை ஒதுக்குகிறோம்..

திரவப் பிரச்சினைதான் (எரிபொருள், நதிநீர்...) அடுத்த உலக போருக்கு.. அபாயத் தேருக்கு அச்சாணி..

lolluvathiyar
20-04-2007, 06:21 AM
மது, மாது இரண்டும் அழவோடு இருந்தால்
நன்மை தரும், அழவுக்கு மீரினால் தீமை தரும்.

ஆனால் இரண்டும் அழவோடு நிறுத்தி கொள்ள விடாது
அப்படி தூண்டி இழுக்கும் பொருட்கள்

புகை, கஞ்சா இவை அழவோடு இருந்தாலும் தீமையே.

மது, எந்த வித லைசன்ஸம் இல்லாமல் விற்க்கவும்
உணவி விடுதியில் பறிமாறவும் இருக்கும் நாட்டில்
அதிக குடிப்பவரை பார்க்கலாம், ஆனால்
போதையோடு இருப்பவரை பார்க்க முடியாது

ஆனால் எங்கு கட்டுபாடு லைசன்ஸ் நடைமுரை
இருக்கிறதோ அங்கு ஒரு சிலரே அந்த நாட்டில்

குறைந்த அளவில் குடிப்பவரை பார்க்கலாம், ஆவர்களில்
அதிக அழவில் போதையோடு இருப்பவரை பார்க்க முடியாது

நம் நாடு இரண்டாவது ரகம்

ஓவியா
22-04-2007, 05:02 PM
பாராட்டுக்கள் பூ, அழகிய கவிதை.

உங்களால் மட்டுமே எப்படி இதெல்லாம் அழகிய வரிகள் கொடுக்க முடியுமோ...நன்று.

மது அரக்கனால் மக்களும் சமுதாயமும் இன்னமும் அழிந்துக்கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலை மாற இன்னும் எத்தனை தலைமுறை வேண்டுமோ!!!!!!!!!!!!

காதல், குடும்பம், மனைவியின் கனவு, பிள்ளைகளின் எதிர்காலம், நாட்டின் எழுச்சி என்று மதுவால் அழிந்த விசயங்கள் கோடான கோடி.

poo
23-04-2007, 05:04 AM
நன்றி ஓவியா...

பூமகள்
05-02-2008, 09:25 AM
ஆஹா ஆஹா..!

பூவின் மனக்கருவை பூவண்ணா அன்றே எழுதிவிட்டாரே...!!

பிடிக்க முடியா குற்றவாளி..!
தெரிந்தே கட்டுண்டுன்னு போகும்
பாழும் மனிதர் கூட்டம்..!

படித்தவர், படிக்காதவர் பேதமற்று
எல்லாரையும் தன்வயமாக்கு-மது..!

படித்தவர் சொல்லுவார்..!
அளவோடு தான் என்று..!
தெரியாமலே தன் சவக்குழி வெட்ட
அன்றே ஆரம்பித்திருப்பார்..!


அளவுக்கு அளவுகோல்
நீள்வது தெரியாமல்
நிதம் ஆரம்பிக்கும்
மெல்ல கல்லீரல் எமனாகும்..!

காலம் கெட்டபின்
படும் வேதனை கொஞ்சமல்ல..!

என்று திருந்துவார்
இந்த அறிவுக் 'குடி'மக்கள்..???!!

ஏக்கமும் துக்கமும்
தொண்டை அடைத்து
நானிருக்க,

அழகாய் அற்புதமாய்
ஓர் கவி பூ ம(ண)னமாய்..!

மணம் பரவட்டும்..!
மனம் மாறட்டும்..!

பாராட்டுகள் பூ அண்ணா. :) :icon_b: