PDA

View Full Version : எனது கவிதைக் கோடுகள்ஆதவா
18-04-2007, 06:48 AM
காற்றோடு வாளேந்தி
குருதி வடிக்கப்
போராடுகிறது
என் மைத்துளிகள்

ஈரக் குமிழ்களை
எச்சிலில் அடக்கிவிட்டு
நமட்டுச் சிரிப்போடு
சூரியனைத் துளைத்தெடுக்கும்
என் வியர்வையின் பலன்கள்

உள்ளூர அடக்கியிருக்கும்
உறுப்பிடியில்லா பசியை
ஓர் எழுத்தில் அடக்க
முயற்சிக்கும்
என் காகிதத்தின் கோடுகள்

பின்னிரவை பின்னி
சரமாக்கி நெஞ்சில் இட்டு
சந்திரனைத் தேடியலையும்
என் கற்பனைச் சிறகுகள்

பிரபஞ்சத்தை தாளில்
அடைத்துவிட்டு
எல்லை தேடிக் கொண்டிருக்கிறது
என் பேனாவின் முனைகள்

ஓர்விழிப் பார்வையும்
ஓராயிரம் கைதட்டல்கள்
நிமிர்ந்த நெஞ்சு
முரண் பட்டு உதிக்கும்
வடக்குச் சூரியன்கள்

எத்தனையோ எழுதிக்
கிழித்துவிட்டு
இது கவியோ என்று
நினைத்தேகுகிறது
புடைத்துப் போட்ட
மனப் புற்கள்.

அரசன்
18-04-2007, 06:51 AM
கவிதையின் முழு விளக்கமும் என் மரமண்டைக்கு ஏரவில்லை.இருப்பினும் கவிதையின் சந்தம் அருமை.

ஆதவா
18-04-2007, 06:53 AM
மூர்த்தி அவர்களே!! நான் எழுதும் கவிதைகளைப் பற்றிய கவிதை இது...

நன்றிங்க..

slgirl
18-04-2007, 06:56 AM
அருமையா வடித்திருக்கிறீங்க ஆதவா மனதின் எண்ணக்கணைகளை

தாமரை
18-04-2007, 07:04 AM
நெற்கதிரா
புற்கதிரா?
விற்பன்னரா
விற்பவரா?
சொப்பனமா
சொல்வண்ணமா?

சுட்டிபையன்
18-04-2007, 07:07 AM
கவிக்கே கவி வடித கவி கவியாக உள்ளது கவியே

ஆதவா
18-04-2007, 07:10 AM
நெற்கதிரா
புற்கதிரா?
விற்பன்னரா
விற்பவரா?
சொப்பனமா
சொல்வண்ணமா?


நெற்கதிரல்ல இது புற்கதிருமல்ல.... வெறும் சொற்கதிர்கள்

விற்பன்னரல்ல இது விற்பவருமல்ல.. வெறும் சொற்ச் சந்துகள்

சொப்பனமுமில்லை வெறும் சொல்வண்ணமுமில்லை.. துளிகளின் எதார்த்தம்.

நன்றிங்க தாமரை அண்ணா

ஷீ-நிசி
18-04-2007, 07:17 AM
கவிதை எழுத யோசித்து, பின் கவிதை எழுதுவதையே கவிதையாய் எழுதினால் என்ன என்று நினைத்து பிறந்த கவிதை.. ம்ம்... நன்றாகவே இருக்கிறது.

ஆதவா
18-04-2007, 07:41 AM
நன்றிங்க இலங்கைப் பெண், ஷீ! மற்றூம் சுட்டிப் பையன்

ஓவியன்
18-04-2007, 07:42 AM
உங்கள் கவிதைக் கோடுகள் என்றுமே எனக்குப் பிடித்தவை ஆதவா!

ஆதவா
18-04-2007, 07:48 AM
நன்றிங்க ஓவியன்

poo
18-04-2007, 07:55 AM
திருப்தியடையாத மனது...
ஓய்வை விரும்பாத புலன்கள்.. கவிக்கும் கவிதைக்கும் ஆகாரம்..அதுவே ஆதாரம்.

பாராட்டுக்கள் ஆதவன்.. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்...

மனோஜ்
18-04-2007, 08:05 AM
கவிக்கு கவியாக்குவது
கவிதைக்கு கவிதைதருவது
வரிக்கு வரியாக்குவது
அருமை நண்பா நன்றிகள்

ஆதவா
18-04-2007, 04:26 PM
நன்றிங்க மனோஜ் மற்றும் பூ!!

அன்புரசிகன்
18-04-2007, 05:09 PM
ஓர்விழிப் பார்வையும்
ஓராயிரம் கைதட்டல்கள்
நிமிர்ந்த நெஞ்சு
முரண் பட்டு உதிக்கும்
வடக்குச் சூரியன்கள்
-------------------
எத்தனையோ எழுதிக்
கிழித்துவிட்டு
இது கவியோ என்று
நினைத்தேகுகிறது
புடைத்துப் போட்ட
மனப் புற்கள்.
எளிய வரிகள். பாராட்டுக்கள் சூரியரே...:icon_clap:
இரண்டாவதில் உங்கள் அடக்க வரிகளுக்கு தனி மவுசு உண்டு.

அன்புரசிகன்
18-04-2007, 05:12 PM
உங்கள் கவிதைக் கோடுகள் என்றுமே எனக்குப் பிடித்தவை ஆதவா!

ஆதவா... உங்களுக்கு தும்மல் வரவில்லையே...?:eek: :mittelgr124: :wuerg019:

பென்ஸ்
18-04-2007, 05:24 PM
கவிதையின் கடைசி வரிகள் மட்டுமே உடக்கபட வேண்டியவை...

நம்மை சுற்றிய வேலிகள்...
நாமே அமைத்தது அல்லது சமுதாயம் கொடுத்தது...
அது இருப்பதால் இந்த கவிதைகள்....
சில இவற்றை தாண்டுபவைகளை கண்டு...
சில உன்னை இவை தாண்ட விடாமை கண்டு...

எழுதிய ஒரு வரியேனும் ஒறாயிரம் இதயத்தை பாதிக்கு என்னும் தைரியம் வேண்டும்...

உன் கவிதைகள், குப்பையானாலும் இங்கு கொட்டு, நான் அடுக்கி தருகிறென்...
கூடவே இந்த மன்றமும்...

ஆதவா
18-04-2007, 05:41 PM
நன்றிங்க பென்ஸ்....

உடக்கப் படவேண்டியவை என்றால் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை..

ஆதவா
18-04-2007, 05:42 PM
ஆதவா... உங்களுக்கு தும்மல் வரவில்லையே...?:eek: :mittelgr124: :wuerg019:

ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா!!!.. என்னடா இன்னும் ஆளைக் காணோமே ன்னு இருந்தேன்....

பென்ஸ்
18-04-2007, 05:49 PM
மனத்தடையை உடைக்க சொன்னேன்...

ஆதவா
18-04-2007, 05:54 PM
நன்றிங்க பென்ஸ்...

இளசு
18-04-2007, 06:29 PM
சுயதேடல்
சுயபரிசீலனை..
சுய அக்னிப்பிரவேசம்..

விம்மிதமும் சஞ்சலமும்
மாறி மாறி வெல்ல முயல
இடைவெளிகளில் பிரசவிக்கும்
மனக் குழவிகள்.. கவிதைகள்!

பிரசவங்களைப் பிரதாபித்து, விமர்சித்தே
பிறிதொரு பிரசவம்!

வைரத்தை வைரத்தால் அறுத்த ஆதவனுக்கு வந்தனம்!

புல்லும் புதைந்திருந்து வெளிப்பட்டால் வைரம்!
வைரமும் பட்டை தீட்டிச் செதுக்க, மதிப்புயரும்!!

ஆதவா
18-04-2007, 11:33 PM
விம்மிதமும் சஞ்சலமும்
மாறி மாறி வெல்ல முயல
இடைவெளிகளில் பிரசவிக்கும்
மனக் குழவிகள்.. கவிதைகள்!என்னே வரிகள்!!!!!

அருமை அண்ணா!!!! இந்த ஊக்கங்களே என்னை உயர்த்தும்,,,,

அனைவருக்கும் என் நன்றிகள்

ஓவியா
28-04-2007, 09:41 PM
ஆதவா,

உன் கவித்திரண் அலைபாயும் அலைப்போல் அதற்க்கு அழிவு என்பது இருக்கலாம் ஆனால் எப்பொழுது என்று யாருக்குமே தெரியாத ரகசியம்.

எண்ணங்கள் அலைப்பாயும் வரை எழுதிக் கொண்டே இரு. குப்பையானாலும் இங்கு கொட்டு(நன்றி:பென்சு) அடுக்கித்தர பலர் உள்ளனர்.

உன் கவிதை ஒருவரை தொட்டாலும் பிறந்த பலனை அடையும்.

அழகிய கவிதை. பாராட்டுக்கள்.
.....................................................................................................பூ, கவிதையின் கருவை கப்புனு பிடித்துவிடீர்கள். சபாஷ்

சக்தி
01-05-2007, 08:20 AM
கவிதை கோடுகள் வரைய காகிதமும் பேனாவும் மட்டுமல்ல கண்ணீரும் சிறிது செந்நீரும் தேவை

ஆதவா
02-05-2007, 05:41 AM
ரொம்பவும் நன்றிங்க ஓவி அக்கா...

நன்றிங்க ரோசாவின் ராசா