PDA

View Full Version : பாசறையில் பூத்து கல்லறைகளில் உறங்கும் மா



சுட்டிபையன்
18-04-2007, 06:22 AM
பாசறையில் பூத்து
கல்லறைகளில் உறங்கும்
மாவீரர்களே............

நீங்கள் ஒடுக்கப்பட்ட
நம் தமிழினத்திற்காக
மண்ணிற்க்குள்
புதைக்கப் பட்டு,
விதைக்கப் பட்டவர்கள்.

நீங்கள் மண்ணிற்க்குள்
புதைக்கப் படவில்லை
நமது தாயகமெனும்
கட்டிடத்திற்க்கு
உறுதியான
அத்திவாரமாக்கப் பட்டவர்கள்.

மண்ணிற்க்குள்
விதைக்கப்பட்ட உங்களின்
கனவுகள் எரிமலைகளாக
குமுறிக்கொண்டிருக்கின்றன
நாளை நிச்சயம்
எரிமலைகள் வெடித்துச் சித்றும்
அப்போது உங்கள்
ஆசைகள் நிறைவேறும்

உறங்குங்கள்
அமைதியாக அதன்பின்பு

slgirl
18-04-2007, 06:45 AM
இறந்தும் வாழும் மாவீரர்களுக்கான கவிதை அருமை....

தமிழ்த்தாய்கள் பெற்ற மாவீரர் நீவீர்
எம்மவர் கஸ்ரங்கள் தாங்காது இருக்க
இளைஞர் நீவீர் சென்றீர் போர்களம்
மனதார மௌனமாகின்றேன் நான்
உங்களை என்னவென்று கவிபாட தெரியாமல்
மண் மீட்கவே நீவீர் ஈந்தீர்கள் உம் உயிரை
மண் இன்னும் மீட்கப்படாமலே இருக்கிறது
நீங்கள் இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்
மண்ணது மீட்கபடும் நாள் வெகுதொலைவில் இல்லை
எமக்காய் உமதுயிர் நீத்த உங்களுக்கு
எந்தனது கண்ணீர் அஞ்சலிகள்...

மாவிரர் நாளுக்காக எழுதிய கிறுக்கலிது.....

pradeepkt
18-04-2007, 08:05 AM
எழுச்சிக் கவிதை!
வாழ்த்துகள்

ஓவியன்
18-04-2007, 08:11 AM
மாவீரர்கள் - எம்மண்ணிலே புதைக்கப் பட்டவர்களல்ல விதைக்கப் பட்டவர்கள், மரணத்தை வென்றவர்கள்.

நன்றிகள் சுட்டிப் பையா!

பரஞ்சோதி
18-04-2007, 08:17 AM
அருமையான கவிதைகள்.

படிக்கும் போது உடம்பில் புத்துணர்ச்சி உருவாகிறது.

மாவீரர்களுக்கு மரணம் என்பது இல்லை, அவர்கள் என்றும் ஜோதியாக மின்னுவார்கள்.

சுட்டிப்பையனையும், சகோதரியையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

poo
18-04-2007, 08:31 AM
மனம் நெகிழும் கவிதை..

நன்றிகள் நட்புகளே!

poo
18-04-2007, 08:32 AM
மாவீரர்கள் - வார்த்தையைச் சொல்லும்போதே உணர்ச்சிமயம்..

வாழவைக்க இறந்தவர்கள்.. இறந்தும் வாழ்பவர்கள்..

சுட்டிபையன்
18-04-2007, 08:45 AM
இறந்தும் வாழும் மாவீரர்களுக்கான கவிதை அருமை....

தமிழ்த்தாய்கள் பெற்ற மாவீரர் நீவீர்
எம்மவர் கஸ்ரங்கள் தாங்காது இருக்க
இளைஞர் நீவீர் சென்றீர் போர்களம்
மனதார மௌனமாகின்றேன் நான்
உங்களை என்னவென்று கவிபாட தெரியாமல்
மண் மீட்கவே நீவீர் ஈந்தீர்கள் உம் உயிரை
மண் இன்னும் மீட்கப்படாமலே இருக்கிறது
நீங்கள் இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்
மண்ணது மீட்கபடும் நாள் வெகுதொலைவில் இல்லை
எமக்காய் உமதுயிர் நீத்த உங்களுக்கு
எந்தனது கண்ணீர் அஞ்சலிகள்...

மாவிரர் நாளுக்காக எழுதிய கிறுக்கலிது.....


ஆஹா எமது வீரர்களிற்க்கு அழகான கவிதைப்பூக்கள்
தொடரட்டும் உங்கள் பணி
விடியட்டும் அவர்கள் கனவுகள்

சுட்டிபையன்
18-04-2007, 08:46 AM
பிரதீப், ஓவியன், பரம்ஸ் மற்றும் பூ ஆகியோருக்கு நன்றிகள்

பரஞ்சோதி
18-04-2007, 09:04 AM
உங்க ஊருல தாத்தாவை பெயர் சொல்லி அழைப்பீங்களோ?

மனோஜ்
18-04-2007, 09:11 AM
கவிதைகளில் உயிர்பெறும் வீரர்களின் என்னங்கள்
விரைவில் வெற்றியடைய இறைவனை பிரத்திக்கிறோன் உறவுகளே

சுட்டிபையன்
18-04-2007, 09:26 AM
உங்க ஊருல தாத்தாவை பெயர் சொல்லி அழைப்பீங்களோ?

அப்படி பெயரெல்லாம் சொல்ல மாட்டோம்

ஜோவ் கிழடு அப்படித்தான் சொல்லுவம் மரம்ஸ் தாத்தா:icon_give_rose: :D

ஷீ-நிசி
18-04-2007, 09:52 AM
கவிதை நன்று! தொடரட்டும்... தோழா..

சுட்டிபையன்
18-04-2007, 09:57 AM
கவிதைகளில் உயிர்பெறும் வீரர்களின் என்னங்கள்
விரைவில் வெற்றியடைய இறைவனை பிரத்திக்கிறோன் உறவுகளே



தமிழர்கள் அனைவரின் பிரார்த்தனையும் அதுதான் வெகு விரைவில் வெற்றியடையும்

ஆதவா
19-04-2007, 09:00 AM
கல்லறையில் ஒரு கூவல்... ஒரு பூ என்று சொல்வதை விட... வேர் என்று சொல்லலாம்... பிடுங்க முடியா வேர்களை பிடுங்கியெடுத்து புதைத்துவிட்டாலும் மரத்தினை சாய்க்க முடியாது... கவிதை அருமை.. கண்களில் தெரிகிறது உங்கள் வலிகள் நாற்றம்..

சுட்டிபையன்
19-04-2007, 09:14 AM
கல்லறையில் ஒரு கூவல்... ஒரு பூ என்று சொல்வதை விட... வேர் என்று சொல்லலாம்... பிடுங்க முடியா வேர்களை பிடுங்கியெடுத்து புதைத்துவிட்டாலும் மரத்தினை சாய்க்க முடியாது... கவிதை அருமை.. கண்களில் தெரிகிறது உங்கள் வலிகள் நாற்றம்..

அவர்கள் ஆலம் வேல் போன்றவர்கள் அசைக்கமுடியாதவர்கள்