PDA

View Full Version : போலி முகங்கள்slgirl
18-04-2007, 06:17 AM
போலி முகங்கள்

பொய் என்று தெரிந்தும்
சந்தர்ப்பத்தில் சத்தியம் செய்து
அகமொன்று வைத்துப்
புறமொன்று பேசி
வேசத்தில் வாழும் மனிதர்கள்
பலர் இன்று...
உள்ளத்தில் வஞ்சகம்
மறைந்திருக்கும்
முகத்திலே புன்னகை
மலர்ந்திருக்கும்
மானிடர்க்கு பல வேடங்கள்...
போலி முகங்களே இன்று பல...

pradeepkt
18-04-2007, 06:28 AM
பலருக்குத் தங்கள் நிஜமுகமே மறந்து போகுமளவு போலிகள் ஒட்டிக் கொண்டு விட்ட காலத்தில் உங்கள் கவிதை உண்மை, வெறும் வார்த்தையில்லை.

பாராட்டுகள்.

slgirl
18-04-2007, 06:33 AM
ஆமாம் போலிகளாகவே இருந்துவிடுகிறார்கள் பல நிஜங்களை மறந்து நன்றி பிரதீப் அண்ணா

சுட்டிபையன்
18-04-2007, 06:39 AM
யதார்த்தமான கவிதை

slgirl
18-04-2007, 06:48 AM
நன்றி சுட்டிபையன்

ராஜா
18-04-2007, 06:56 AM
தனித் தனி திரியாகப் போடாமல் ஒரே தொகுப்பாகப் போடலாமே இளவரசி..!

எங்களுக்கும் நித்தம் வந்து கவிச்சுவை அருந்த வசதியாக இருக்கும்..

இது ஒரு யோசனை மட்டுமே.. உங்கள் வசதிப்படி, விருப்பப்படி செய்யுங்கள்..!

slgirl
18-04-2007, 06:59 AM
தனியாக போட்டால் படிப்பவர்களுக்கு ஈசியா இருக்குமுன்னு போட்டேன் ஐயா

ஷீ-நிசி
18-04-2007, 06:59 AM
போலி முகங்களற்ற மனிதன் யாருமில்லை.. எங்காவது, எதற்காகவாது நாம் மாட்டிக்கொண்டே தான் இருக்கிறோம்...

தொடருங்கள் இ.பெண்.

slgirl
18-04-2007, 07:03 AM
நன்றி நிசி

ஆதவா
18-04-2007, 07:07 AM
முகச் சாயங்கள் - என் பாசையில் போலி முகங்கள்....

நாமனைவரும் நாடக நடிகர்களே என்று அன்றே சொன்ன பிறகு நாம் என்றுமே வேடம் கலைக்க முடியுமா? பூச்சுக்கள் நிறைந்து போனால் பொய்மையும் நிறையும்... அளவான சாயங்கள் உதடுகளை வெடிக்காமல் கவனிக்க்கும்..

போலியான முகம் - நிஜமான கவிதை..

வாழ்த்துக்கள் இலங்கைப் பெண்ணே!

slgirl
18-04-2007, 07:13 AM
ஆமாம் வாழ்க்கை நாடக மேடையில் போலி வேசமே அதிகம் நன்றி ஆதவா

Mano.G.
18-04-2007, 07:36 AM
போலி முகங்கள்,
இல்லாத இடங்கள் இல்லை
வீட்டில், நடைபாதையில்,
பேரூந்தில், அலுவலகத்தில்
சுற்றிலும் இல்லாத இடங்களே இல்லை

போலிப்புன்னகை, போலி சோகம்
போலி அனுதாபம், போலி கண்ணீர்
பல போலிகள், இதில் எந்த போலிதனத்தில்
நானும் நீங்களும் ஏமாந்து கொண்டிருக்கிரோம்.


தெரியவில்லை


மனோ.ஜி

poo
18-04-2007, 08:19 AM
நிஜத்தோடு ஒருவன் இருந்தால் நிச்சயம் கோமாளிதான்.

- போலிகள் இப்போது அவசியமானதாகிவிட்டது.

-- முகத்திரை கண்டு வெட்க ஒரு கவிதை.

வாழ்த்துக்கள் இலங்கைப்பெண்ணே.

slgirl
18-04-2007, 11:01 AM
நன்றி மனோ

நன்றி பூ

பென்ஸ்
18-04-2007, 03:13 PM
இலங்கை பெண்...
நிஜம் சுடும்...

போலி முகங்கள்... !!!
பல முகங்கள்...!!!
இதில் என்ன வித்தியாசம்...

இருக்கிறது தோழி... ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் பலமுகமூடிகளை அணிகிறன், இது ஒரு தேவை... (பழைய திரிகளில் ஜூங் க்ற்றும் "பேர்சனா" வை பற்ரி ஆராய்ந்து பின்னி எடுத்து இருக்கிறார்கள் நண்பர்கள்"....

தாயாய்...
சகோதரியாய்...
மனிவியாய்..
மகளை...
மேலாளராய்...
தோழியாய்...
என்று ஒரு சாதாரண பெண்ணே ஒரே நாளில் எத்தனை முகமூடிகள் அணிய வேண்டி இருக்கிறது... ஒவ்வொரு முகமூடிக்கும் ஏற்றார் போல் தன்னுடைய பாவனை, உடை, அனுகுமுறை எல்லாவற்றையும் மாற்றி... இது ஒரு சைக்கோஸோசியல்- பிகேவியர் அல்லவா....???

ஆனால் போலி முகங்கள்... பாசமாய் இருக்கும் காதலியாய் நடித்து வேறேங்கோ மனதை அலையவிடுவது, நல்ல மகளை நடித்து நாதாரிதனம் பன்னுவது... இது மிக கொடியது அல்லவா... ???

போலிமுகங்கள் கிழிக்க படட்டும்...
உன்மையான அன்பு மலரட்டும்...

வாழ்த்துகள்...

paarthiban
18-04-2007, 03:26 PM
போலி கலப்பு இல்லாத மனிதரே இன்னைக்கு இல்லை.
அளவுதான் கூட குறைய.
எல்லார்க்கும் பொருந்தும் உண்மை கவிதை.
இலங்கை பெண் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இளசு
18-04-2007, 07:15 PM
இலங்கைப்பெண்ணின் கவிதையும்
இனிய பென்ஸின் விமர்சனமும்
நிதர்சனம் என்ற நாணயத்தின்
இருவேறு பக்கங்கள்!

பாராட்டுகள் இருவருக்கும்..


ராஜா அவர்களின் யோசனையை ஒட்டிய என் கருத்து -

ஒவ்வொரு கவிதையையும் தனித்தனியாகப் பதித்துச்
செறிவான பின்னூட்டங்கள் கவிஞர்கள் பெறட்டும்...


கவிதை மன்றத்தை இன்னும் விரிவாக்கும்போது
அங்கே ஒவ்வொரு கவிஞரும் தம் எல்லாக்கவிதைகளையும்
தனியாக ஒரு திரியில் தொகுத்துக் கோர்த்து வைத்துக்கொள்ளவேண்டும்.

மற்றவர்கள் எண்ணம் என்ன?

பென்ஸ்
18-04-2007, 07:22 PM
ஒவ்வொரு கவிதையையும் தனித்தனியாகப் பதித்துச்
செறிவான பின்னூட்டங்கள் கவிஞர்கள் பெறட்டும்..

கவிதை மன்றத்தை இன்னும் விரிவாக்கும்போது
அங்கே ஒவ்வொரு கவிஞரும் தம் எல்லாக்கவிதைகளையும்
தனியாக ஒரு திரியில் தொகுத்துக் கோர்த்து வைத்துக்கொள்ளவேண்டும்.

மற்றவர்கள் எண்ணம் என்ன?

நானும் இதையே சொல்லுவேன்....

தனித் திரியில் பதிக்கப்படும் கவிதைகள் அதிகம் விமர்சனம் மற்றும் பின்னூட்டம் பெறுகின்றன....

நண்பரே... நீங்கள் தனித் திரியிலேயே தொடருங்கள்...

இளசு
18-04-2007, 07:26 PM
....

தனித் திரியில் பதிக்கப்படும் கவிதைகள் அதிகம் விமர்சனம் மற்றும் பின்னூட்டம் பெறுகின்றன....

...

ஆமாம்...பென்ஸ்

பிச்சி, ஆதவா போன்றவர்களின் நெடுந்தொகுப்புகளை
தொடக்கத்தில் தொடரமுடியாமல் விட்டதால் - பின்
தொடவே முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டே................

slgirl
19-04-2007, 04:07 AM
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்....

ஆம் நண்பர்களே தனித்தனியாகவே பதிக்கின்றேன் நன்றி