PDA

View Full Version : சுடும் நிஜம்...



slgirl
18-04-2007, 04:51 AM
காலையில் பேருந்தில் வேலைக்கு வந்துகொண்டிருந்தபோது
(வழமைக்கு மாறாக) எல்லா பேருந்துகளும் இன்று நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது (யாராச்சும் தமிழர் அதுவும் யாழ்பாண அடையாள அட்டை என்றால் மேலும் கீழும் பார்க்கிறான் ஆமி) சிங்கள முஸ்லிம்களை சிரிப்போடு அனுப்புகின்றான்.....

எங்கள் அடையாள அட்டையில்
பெயரை பார்க்கலாம்
ஊரை பார்க்கலாம்-ஆனால்
உள்ளுக்குள் ஒளிந்திருக்கும்
தீவிர வாத எண்ணத்தை
இவர்களால்
எப்படி பார்த்திட முடியும்???

ராஜா
18-04-2007, 04:52 AM
அனுபவிக்கும் இன்னல்களைக் கூட எளிய இனிய கவிதையாக்கும் திறமை அருமை.

slgirl
18-04-2007, 04:55 AM
நன்றி ராஜா ஐயா....

ராஜா
18-04-2007, 04:57 AM
இலங்கைப் பெண்ணின் கவிதைகள் எதார்த்தமானவை..

நான் தான் கவிதை.. முடிந்தால் புரிந்துகொள் என்ற அதிமேதாவித் தனம் அவற்றில் இருக்காது. நாம் உணர்ந்தவற்றை இன்னொரு கோணத்தில் எளிமையாக உணர்த்த வல்லவை அவை.

அந்த அம்சமே ஏராளமான ரசிகர்களை இலங்கைப் பெண்ணுக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

அரசன்
18-04-2007, 04:58 AM
உண்மைதான். சோதனை என்பது ஒரு சம்பிரதாயமாகத்தானே செய்கிறார்கள்.

slgirl
18-04-2007, 05:02 AM
உங்கள் அன்பு பின்னூட்டத்திற்கு நன்றி ராஜா ஐயா...

நன்றி முத்து

arun
18-04-2007, 05:11 AM
எதார்த்தமான கவிதை உண்மைகள் சுட தான் செய்கின்றன

slgirl
18-04-2007, 05:15 AM
நன்றி அருண்

சுட்டிபையன்
18-04-2007, 05:20 AM
காலையில் பேருந்தில் வேலைக்கு வந்துகொண்டிருந்தபோது
(வழமைக்கு மாறாக) எல்லா பேருந்துகளும் இன்று நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது (யாராச்சும் தமிழர் அதுவும் யாழ்பாண அடையாள அட்டை என்றால் மேலும் கீழும் பார்க்கிறான் ஆமி) சிங்கள முஸ்லிம்களை சிரிப்போடு அனுப்புகின்றான்.....

எங்கள் அடையாள அட்டையில்
பெயரை பார்க்கலாம்
ஊரை பார்க்கலாம்-ஆனால்
உள்ளுக்குள் ஒளிந்திருக்கும்
தீவிர வாத எண்ணத்தை
இவர்களால்
எப்படி பார்த்திட முடியும்???


slgirl அருமையான கவிதை, இந்த அடையாள அட்டையாள் நம் உறவுகள் படும் பாடு சொல்லன்னா துயரம்

நான் சிறுவயதிலயே கொழும்பு வந்தபடியால் அந்த பிரச்சினை எதிர் கொள்வது குறைவு

இளசு
18-04-2007, 06:07 AM
மனங்களைப் புரிந்தால்
மற்ற அடையாளங்கள் அழிந்துவிடுமே..

பிரித்து, வன்மம் வைத்து
வக்கிர மனிதர்கள்
மனித நேயத்துக்கு வைக்கும் தீ..
நிஜத்தில் சுடுகிறது...

வைத்தவனையே எரிக்கும் சாத்தியம் மறந்து
நித்தம் தீ வைப்பவர் மாறும் நாள் என்று?


இலங்கைப்பெண்ணின் பார்வைகள் + பதிவுகள் = ஆழமான கவிதைகள்!
பாராட்டு - கவிதைக்கு!
விருப்பம் - இக்கவிக்கரு அழிய!!

slgirl
18-04-2007, 06:13 AM
மிக்க நன்றி சுட்டிபையன்

என்னுடைய விருப்பவும் இந்த கவியின் கருவுக்கு விடிவு கிடைப்பதே
நன்றி இளசு

சுட்டிபையன்
18-04-2007, 06:18 AM
மிக்க நன்றி சுட்டிபையன்

என்னுடைய விருப்பவும் இந்த கவியின் கருவுக்கு விடிவு கிடைப்பதே
நன்றி இளசு

அதற்கு நமது தலைவனால் மட்டும்தான் விடிவு கிடைக்கும்

pradeepkt
18-04-2007, 06:21 AM
விடுதலை வேள்வியென்று கூறுவோர் இருக்க
தீவிரவாத எண்ணமென்று நீங்களே சொல்லாதீர்கள் இலங்கைப்பெண்...

நிற்க, உள்ளத்திற்குப் பூட்டு போட்ட ஆண்டவனை நினைத்துப் பல நாள் வியந்திருக்கிறேன் நான். பாராட்டுகள்.

slgirl
18-04-2007, 06:22 AM
நிச்சயமாக ஒரு பொழுது மலரும் அது எம்மவர்காக மலரும் வெகு விரைவில் அது மலர்ந்திட வேண்டுவோம் இறைவனை சுட்டிபையன்

slgirl
18-04-2007, 06:26 AM
பிரதீப் அண்ணா தீவிரவாதம் என்பது அவங்க பாசையில் (அப்படித்தான் சொல்லனும் அண்ணா) உண்மையிலே தீவிரவாதம் என்று நான் சொன்னது ஈழத்தவ்ருக்காக நாம் எம் மனதில் வைத்திருக்கும் விருப்ப எண்ணங்களை அண்ணா உங்க பின்னூட்டத்திற்கு நன்றிகள்

ஆதவா
18-04-2007, 06:58 AM
உள்ளூர பிதற்றிக் கொண்டிருக்கிறது காவலர்களில் மனதுகள். எங்காவது கவிமணிகள் கிடைக்குமா என்று. அடையாள அட்டைகளில் எழுதித் தொலைத்துவிடலாம்... அதைக் கண்டும் ரசித்துவிடலாம்.. எண்ணங்களை என்றுமே காண முடியாது. நெஞ்சுக் கூட்டைப் பிரித்தாலும் தமிழ் என்று துடிக்கும் இதயத்தின் பாசையும் அறியாதவர்கள் தான் இவர்கள்..

அருமையான நொடிநேரக் கவிதை... உங்கள் சிறப்பே இதுதானே!! நொடியைவிட வேகமான எழுத்துப் பிரசவங்கள்..

slgirl
18-04-2007, 07:05 AM
மிக்க மிக்க நன்றி ஆதவா

poo
18-04-2007, 08:45 AM
அறையும் கவிதை..

நிஜம் சுடுகிறது!

- இன்னும் எழுதுங்கள் தோழியே!

மனோஜ்
18-04-2007, 08:53 AM
உணர்வை அறையா உயிர்கள்
உண்மையை உனறமறுக்கும் உருவங்கள்
உருவகித்த இ.பெண்ணிற்கு வாழ்துக்கள்

slgirl
18-04-2007, 10:53 AM
நன்றி நண்பர்களே