PDA

View Full Version : எப்படி மறக்க முடியும்?



lenram80
18-04-2007, 01:43 AM
அன்றாட வேலைகளினால் அசந்திருந்த போது
சின்ன சின்ன சம்பவங்களினால் சிலிர்க்க வைத்தாளே!
அதை மறக்கச் சொல்கிறீர்களா?

இல்லடா செல்லம்!
ஆமாண்டா குட்டி!
இப்படி நன்முறை பெயர்களையும்,
போடா தடியா!
டேய் டுபுக்கு மண்டையா!
நிறுத்துடா வெண்ணே!
இப்படி வன்முறை பெயர்களையும் கூறி
சொர்க்கத்தை சுகத்தால் உருக்கி என் அகத்தில் ஊற்றுவாளே!
அதை மறக்கச் சொல்கிறீர்களா?

காதில் குருதி கசியும் என் கடிகளுக்குக் கூட
உலகத்தின் மிகச் சிறந்த சிரிப்புக்களைக் கேட்டவள் மாதிரி
இடியை சிரிப்பாக மாற்றி செல்போனில் அனுப்புவாளே!
அதை மறக்கச் சொல்கிறீர்களா?

உலகத்தின் ஒட்டுமொத்த கரும்புகளையும் ஒன்றாகப் போட்டு ஆட்டி
இவள் குரலில் கூட்டி, என்னைப் போட்டு வாட்டி
குமட்ட குமட்ட 'குடிடா குடிடா' என
வெறும் குரலாலேயே என்னை குடிகாரன் ஆக்கினாளே!
அதை மறக்கச் சொல்கிறீர்களா?

என் படைப்புகளைப் பற்றி பக்கம் பக்கமாய் கூவி
என் பக்கம் பக்கமாய் தாவி
ஆர்ட்டிக்கிள் வழியே உள்வந்து
வென்ட்ரிக்கிள் வழியே வெளியே போகாமல்
வால்வுகளைப்* பிடித்து வயலின் வாசித்தாளே!
அதை மறக்கச் சொல்கிறீர்களா?

பல நூறு வோல்டேஜ் உடம்பை ஜீன்ஸ் போட்டு மறைத்து
சில நூறு வோல்டேஜ் பல்பை கண்ணில் கட்டிக் கொண்டு
அண்ணாந்து பார்த்தாலே அதிர்ச்சிக் கொடுப்பாளே!
உற்றுப் பார்த்தால் உயிரையே பறிப்பாளே!
அதை மறக்கச் சொல்கிறீர்களா?

என் பெற்றோர்களிடம் 'பம்மி'
என்னை கவர சில இடங்களில் 'படம்' போட்டு
தெரியாததை கூட தெரிந்ததாய் 'வெத்து பீலா' விட்டு
ஒரு படையப்பா நீலாம்பரியாய் வலம் வந்தாளே!
அதை மறக்கச் சொல்கிறீர்களா?

சின்னதாய் தோளில் குத்தி
செல்லமாய் முதுகில் தட்டி
காதை சற்று கழற்ற திருகி
தலை கோதி மூளை நிறுத்தி
இதயத்தை மட்டும் எம்பிக் குதிக்கவைத்து
வலியே இல்லாத ஒரு வர்மக் கலை செய்வாளே!
அதை மறக்கச் சொல்கிறீர்களா?

இப்படி அவளோடு
அளவே இல்லாமல் அளவளாவியதையும்
கணக்கே இல்லாமல் காதல் செய்ததையும்
செல்சியஸ் எகிற செய்த சில்மிஷங்களையும்
சிரிப்புகளையும் சிலிர்ப்புக்களையும் அள்ளிப் போட்டுகொண்டு அலைந்ததையும்
இன்னும் ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்க முடியாது!
அப்படி இருக்க,
அவளை எப்படி என்னால் மறக்க முடியும்?

(*வால்வுகள் - இதயத்தில் ஈரிதழ் வால்வு, மூவிதழ் வால்வு என இரு வால்வுகள் உள்ளன)

slgirl
18-04-2007, 06:06 AM
நிஜத்தோடு தொடருகின்றது கவிதை....அருமை

இளசு
18-04-2007, 06:24 AM
பாராட்டுகள்..பாராட்டுகள்..பாராட்டுகள்.. பலமுறை லெனினுக்கு..

பலப்பல புத்தம்புது வரிகள்.... முற்றிலும் புதிய பார்வைகள்..

காதல் கவிதைகளில் புதுமை - அரிதினும் அரிது.

உடற்கூறியல், உடல் இயங்கியலில் பலவற்றை மிக லாவகமாய், பொருத்தமாய்க் கையாண்டு - சாதித்துவிட்டீர்கள் லெனின்..

வலியில்லா வர்மக்கலை
வால்வே வயலின்
செல்சியஸ் உயர்வு

என நவீன கவிதைப் போரே நிகழ்த்திவிட்டீர்கள்...

போரில் - வெற்றி உங்களுக்கு!
வாழ்த்துகள்...