PDA

View Full Version : எனது குட்டிக் கவிதைகள்



சுட்டிபையன்
17-04-2007, 12:56 PM
தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன்
உன்னை கனவு காண்பதற்காகவில்லை
நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக

****



பட்டமரமாய் பாலைவனம் தன்னில்
தனிமையில் தவித்திருந்த போது
தென்றலாக என்னுள் புகுந்து
என்ன சோலை வனமாக்கியவள்
நீதான்




****


அமாவாசைக் காலத்தில்
நிலவிற்க்காக ஏங்குகிறது வானம்
இரவு நேரத்தில்
சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
மழை நேர இரவில்
நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள்
அவற்றிற்கே தேடலிருக்கும் போது
நான் உன்னை தேடக்கூடாதா............?

ஆதவா
17-04-2007, 02:38 PM
இருப்பா!! வந்து விமர்சனம் பண்ணுறேன்

சுட்டிபையன்
17-04-2007, 02:55 PM
இருப்பா!! வந்து விமர்சனம் பண்ணுறேன்

கோபம் ஏதுமிருந்தா தனி மடலில திட்டலாம் நோ மென்சன்:D

மனோஜ்
17-04-2007, 02:57 PM
அருமை குட்டிஸ் கவிதைகள்

ஜெயாஸ்தா
17-04-2007, 03:01 PM
மனததை சலனப்படுத்திய குட்டி'யைப் பற்றிய கவிதையா இது?

leomohan
17-04-2007, 03:04 PM
கவிதைகள் பலே. தொடருங்கள்.

சுட்டிபையன்
17-04-2007, 03:14 PM
அருமை குட்டிஸ் கவிதைகள்
நன்றிகள்.............:music-smiley-019:

சுட்டிபையன்
17-04-2007, 03:14 PM
மனததை சலனப்படுத்திய குட்டி'யைப் பற்றிய கவிதையா இது?

:huh: அப்படியெல்லாமில்லை:icon_tongue:

slgirl
18-04-2007, 06:00 AM
குட்டி கவிதைகள் அனைத்தும் சூப்பரா இருக்குது

சுட்டிபையன்
18-04-2007, 06:08 AM
குட்டி கவிதைகள் அனைத்தும் சூப்பரா இருக்குது
நன்றிகள் இலங்கை பொண்ணு

ஷீ-நிசி
18-04-2007, 06:39 AM
நல்ல முயற்சி... பையன்..

தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன்
உன்னை கனவு காண்பதற்காகவில்லை
நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக

இன்னும் கவிதைப்படுத்தலாம்... இப்படி,


தினமும் காத்திருக்கின்றேன்
இரவுகளை நோக்கி!

கனவில் உன் முகம்
பார்க்க விரும்பியல்ல!
நிலவில் உன் முகம்
பார்க்க விரும்பியே!


பட்டமரமாய் பாலைவனம் தன்னில்
தனிமையில் தவித்திருந்த போது
தென்றலாக என்னுள் புகுந்து
என்ன சோலை வனமாக்கியவள்
நீதான்


பட்டமரமாய் அலைந்தேன்!
பாலைவனம் தன்னில்,
தனிமையாய்!

தென்றலாய் நுழைந்து,
சோலைவனமாக்கினாய் என்னில்,
இனிமையாய்!


அமாவாசைக் காலத்தில்
நிலவிற்க்காக ஏங்குகிறது வானம்
இரவு நேரத்தில்
சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
மழை நேர இரவில்
நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள்
அவற்றிற்கே தேடலிருக்கும் போது
நான் உன்னை தேடக்கூடாதா............?


நிலவிற்காய் ஏங்குகிறது வானம்
அமாவாசையில்!

சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
இரவு வேளையில்!

விண்மீன்களுக்காய் ஏங்குகிறது முகில்கள்
மழைபொழியும் இரவில்!

உனக்காக ஏங்குகிறது என்னிதயம்
எல்லா காலங்களிலும்!


உங்கள் கவிதையின் கரு எல்லாமே உங்களின் கற்பனைத் திறனை காட்டுகிறது.. கவிதையில் நீங்கள் கையாளும் வார்த்தைகளை கொஞ்சம் வரிசைப்படுத்தி பலமுறை பார்த்தால், நல்ல வரி அமைப்புகள் கிடைத்திடும்...

உங்கள் கவிதையை மாற்றியதில் ஏதாகிலும் மன வருத்தம் இருக்குமானால் மன்னிக்கவும்..

கவிதைகள் தொடர்ந்து எழுதிட வாழ்த்துகிறேன்..

ஆதவா
18-04-2007, 08:05 AM
சுட்டிக் கவிதைகள் என்று சொல்லுங்கள். இதயத்தை நொறுக்க முடியா சுவர் எழுப்பும் காதல் கவிதைகள் நீங்கள் இறைத்திருப்பது. வாழ்த்துக்கள் சுட்டி... குட்டி கவிதைகளை இன்னும் தட்டி எழுப்புங்கள்.

ஆதவா
18-04-2007, 08:06 AM
ஷீயின் வரியமைப்புகள் பிரமாதம்.... சுட்டிப் பையரே! மனவருத்தமின்றி எடுத்துக் கொள்ளுங்கள்.. விதைதான் எல்லாவற்றிற்கும் ஆதாரமெனினும் முட்டி மோதிதானே வரமுடியும்??

சுட்டிபையன்
18-04-2007, 08:16 AM
நல்ல முயற்சி... பையன்..

தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன்
உன்னை கனவு காண்பதற்காகவில்லை
நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக

இன்னும் கவிதைப்படுத்தலாம்... இப்படி,


தினமும் காத்திருக்கின்றேன்
இரவுகளை நோக்கி!

கனவில் உன் முகம்
பார்க்க விரும்பியல்ல!
நிலவில் உன் முகம்
பார்க்க விரும்பியே!


பட்டமரமாய் பாலைவனம் தன்னில்
தனிமையில் தவித்திருந்த போது
தென்றலாக என்னுள் புகுந்து
என்ன சோலை வனமாக்கியவள்
நீதான்


பட்டமரமாய் அலைந்தேன்!
பாலைவனம் தன்னில்,
தனிமையாய்!

தென்றலாய் நுழைந்து,
சோலைவனமாக்கினாய் என்னில்,
இனிமையாய்!


அமாவாசைக் காலத்தில்
நிலவிற்க்காக ஏங்குகிறது வானம்
இரவு நேரத்தில்
சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
மழை நேர இரவில்
நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள்
அவற்றிற்கே தேடலிருக்கும் போது
நான் உன்னை தேடக்கூடாதா............?


நிலவிற்காய் ஏங்குகிறது வானம்
அமாவாசையில்!

சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
இரவு வேளையில்!

விண்மீன்களுக்காய் ஏங்குகிறது முகில்கள்
மழைபொழியும் இரவில்!

உனக்காக ஏங்குகிறது என்னிதயம்
எல்லா காலங்களிலும்!


உங்கள் கவிதையின் கரு எல்லாமே உங்களின் கற்பனைத் திறனை காட்டுகிறது.. கவிதையில் நீங்கள் கையாளும் வார்த்தைகளை கொஞ்சம் வரிசைப்படுத்தி பலமுறை பார்த்தால், நல்ல வரி அமைப்புகள் கிடைத்திடும்...

உங்கள் கவிதையை மாற்றியதில் ஏதாகிலும் மன வருத்தம் இருக்குமானால் மன்னிக்கவும்..

கவிதைகள் தொடர்ந்து எழுதிட வாழ்த்துகிறேன்..


ஆஹா நன்றி நிஷி
நான் சற்றுக்காலமாகத்தன் கவிதை எழுதுகிறேன்
அதுதான் மொழி நடையில் தவறுகள் உள்ளது
உங்கள் திருத்தம் அழகாக உள்ளது
தொடருங்கள்:icon_03:

சுட்டிபையன்
18-04-2007, 08:19 AM
ஷீயின் வரியமைப்புகள் பிரமாதம்.... சுட்டிப் பையரே! மனவருத்தமின்றி எடுத்துக் கொள்ளுங்கள்.. விதைதான் எல்லாவற்றிற்கும் ஆதாரமெனினும் முட்டி மோதிதானே வரமுடியும்??


ஆதாவாண்ணா பிழைகளை சுட்டிக்காட்டுவதனால எதற்க்கு மனவருத்த பட வேண்டும், எமக்கு தெரியாததை சொல்லி கொடுப்பதற்க்கு நன்றிதான் சொல்ல வேண்டும்

poo
18-04-2007, 08:25 AM
சுட்டும் விழியாளால் சுடர்விட்ட கவிதைகள்..தொட்டுச்செல்கிறது இதமாக.. தொடருங்கள் நண்பரே!

சுட்டிபையன்
28-04-2007, 08:34 AM
மானிடம் வாழுதே இங்கே
இப்படி சொல்பவர் யாரடா
இங்கே
மானிடம் இறந்து காலம்
பல ஓடி விட்டது
இங்கே மானிடம் பற்றி
பேசுவது உன் மடமையடா
உன்னிடம் மானிடம்
இருந்தால் அதனை
மூட்டை கட்டி வையடா
என் தோழனே
மானிடத்தால் இந்த
உலகத்தில் நடக்கப்
போவது ஏதுமில்லை
மானிடம் அழிந்து விட்டது
மானிட தன்மையும்
அழிந்து விட்டது
இனி நீயும் நானும்தான்
மிச்சம் அழிவதற்க்கு............!

சுட்டிபையன்
28-04-2007, 08:35 AM
சுட்டும் விழியாளால் சுடர்விட்ட கவிதைகள்..தொட்டுச்செல்கிறது இதமாக.. தொடருங்கள் நண்பரே!

நன்றி பூ

மீண்டும் தொடர்கின்றேன்:icon_wink1:

ஓவியன்
28-04-2007, 09:10 AM
நல்ல முயற்சி... பையன்..

தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன்
உன்னை கனவு காண்பதற்காகவில்லை
நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக

இன்னும் கவிதைப்படுத்தலாம்... இப்படி,

.................கவிதைகள் தொடர்ந்து எழுதிட வாழ்த்துகிறேன்..
ஆகா ஷீ-நீசி வார்த்தைகளை அப்படி இப்படி மாற்ற கவி எப்படி அழகு பெறுகிறது.

அருமை - தொடருங்கள்.

அன்புரசிகன்
28-04-2007, 09:20 AM
நல்ல சுட்டிக்கவிதைகள். ச்சீ குட்டிக்கவிதைகள். :D.

எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது சுட்டி.


அமாவாசைக் காலத்தில்
நிலவிற்க்காக ஏங்குகிறது வானம்
இரவு நேரத்தில்
சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
மழை நேர இரவில்
நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள்
அவற்றிற்கே தேடலிருக்கும் போது
நான் உன்னை தேடக்கூடாதா............?

சுட்டிபையன்
28-04-2007, 10:23 AM
நல்ல சுட்டிக்கவிதைகள். ச்சீ குட்டிக்கவிதைகள். :D.

எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது சுட்டி.

நன்றி அன்பு பிடித்ததை ரசியுங்கள் ரசிப்பதுக்குத்தானே கவிதை:icon_wink1:

சுட்டிபையன்
28-04-2007, 10:25 AM
உலகில் யாரும் இல்லை
எனக்கு உன்னைத் தவிர
உன் வார்த்தைகள்தான்
நான் கேட்க்கும் சங்கீதம்
அதைக் கேட்பதற்க்காக
நான் தினமும் துயில்
எழும்புகிறேன்
உந்தன் குரலோசை
கேட்க வேண்டும் தினமும்
என்னை ஏமாற்றாமல்
தினமும் வந்து விடு
உன் கூட்டை விட்டு
அண்டம் காக்காவே......... :D

சுட்டிபையன்
28-04-2007, 03:00 PM
உன்னாலே தான் இந்த உலகத்தில்
இவளவு உயிர்கள் மாண்டு
போகின்றார்கள் யாரும்
நிம்மதியாகவில்லை உனக்கு
உலகம் தொடங்கிய
நாளிலிருந்து ஓய்வே இல்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிண்றாய்
நீ மட்டும் ஓடினால் பறவாயில்லை
கோடிக்கணக்கான உயிர்களையும்
சேர்த்து எடுத்துக் கொண்டல்லவா ஓடுகிறாய்
என்ன முழியை உருட்டுகிறாய்
யுத்தமே உன்னிடம்தான் பேசுகிறேன்
சொல் ஒரு பதில்

சுட்டிபையன்
28-04-2007, 03:12 PM
நீ வந்த பின்னர் என் வாழ்க்கை
இனிக்கும் என்றிருந்தேன்
நீ வந்த பின்னர்
என் விடியல்கள் இரவுக்குள்
மறைந்து விட்டது
என் கனவுகள் கனவுகளாகவே
பிரிவில் உள்ள இனிமை
உன் அருகில் இல்லையே.............

சுட்டிபையன்
29-04-2007, 10:20 AM
வாழும் காலம் சிறிது
அதில் நீ செய்யும்
பாவங்கள்தான் பெரிது
வாழ்வது பெரிய
விடயமில்லை
வாழ்ந்து காட்டுபதுதான்
பெரியது
வாழ்ந்து காட்டுவதை விட
உத்தமனாக வாழ்ந்து
காட்டுவதுதான் பெரியது
இதுவரை வாழ்ந்தது போதும்
இனி மேல் வாழ்ந்து காட்டு
உத்தமனாக..........

சுட்டிபையன்
03-05-2007, 07:20 AM
தேடிவர வேண்டும் உன்னை
ஆயிரம் சொந்தங்கள்
அதுதான் உனக்கழகு
உன்னை விட்டு போன
சொந்தங்களை நினைத்து
எதற்க்கு வேதனைப் படுகிறாய்.........?
உன் உச்சத்தை அடைந்தால்
உன்னைத் தேடி ஆயிரம்
உறவுகள் வரும் எதற்க்கு
நீ கலங்குகிறாய்..........?
நாளை எம்நாள் கலங்காமல்
தூங்கு எந்தன் நண்பா...........!

அக்னி
03-05-2007, 07:25 AM
சுட்டியின் குட்டிக் கவிதைகள், அருமையோ அருமை.
ஷீ-நிஷியின் மெருகூட்டல் கவிதையின் சூட்சுமத்தை தெளிவாக்குகின்றது.

சுட்டிபையன்
03-05-2007, 07:27 AM
சுட்டியின் குட்டிக் கவிதைகள், அருமையோ அருமை.
ஷீ-நிஷியின் மெருகூட்டல் கவிதையின் சூட்சுமத்தை தெளிவாக்குகின்றது.

நன்றி அக்கினி
அவரைப் போல ஆசான்கள் எங்க்கள் போன்ற :icon_rollout: குட்டி கவிஞர்களிற்க்கு சொல்லிக்கொடுத்து முன்னேற்ற வேண்டும்

poo
03-05-2007, 10:02 AM
குட்டிக்கவிதைகள்.. சுட்டிக்கவிதைகள்.. என மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கிறீர்கள்...

crisho
03-05-2007, 10:21 AM
சுட்டியின் குட்டிகளை நான் இன்றுதான் படித்தேன்.

மருமகனே செமத்துப்பா...

முதல் மூன்று கவிதைகளும் அந்த சிங்கள பெட்டைய பத்தி தானே??

முதல் மூன்று கவிதைகளையும் நல் வரிப்படுத்தியமை ஷீ-நிசி க்கே உரிய பெருந்தன்மையை காட்டுகிறது. இதுக்காக 25 இ-பணம் சன்மானம் கொடுக்கலாம்!!

சுட்டிபையன்
06-06-2007, 11:32 AM
வீடுகாணலாம்
எங்கள் தேசத்திற்க்கு சென்று
நாங்கள் தவண்டு வளர்ந்த
வீட்டை காணலாம்
அன்னியர்கள் தாக்கியழித்து
எச்சங்களய் எங்கள்
உறவுகள் பெயர்களை கூறும்
நம் வீட்டை பாக்கலாம்
எங்கள் உறவுகள்
எங்கள் கண்முன்னே
இரத்ததை சிந்தி
தங்கள் உயிர் நீத்த
எங்கள் வீட்டை பாக்கலாம்
சேர்த்து வைத்திருக்கும்
கண்ணீருக்கு
விடை கொடுக்க
எங்கள் தேசம் சென்று
வீடுகாணலாம்

ஓவியா
06-06-2007, 03:14 PM
சஞ்சய்,

கவிதையை படித்ததும் மனம் கலங்கி போகிறது.

கவிதை நன்று. பாராட்டுக்கள்.

இனியவள்
08-06-2007, 08:38 AM
தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன்
உன்னை கனவு காண்பதற்காகவில்லை
நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக

****
பட்டமரமாய் பாலைவனம் தன்னில்
தனிமையில் தவித்திருந்த போது
தென்றலாக என்னுள் புகுந்து
என்ன சோலை வனமாக்கியவள்
நீதான்
***
அமாவாசைக் காலத்தில்
நிலவிற்க்காக ஏங்குகிறது வானம்
இரவு நேரத்தில்
சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
மழை நேர இரவில்
நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள்
அவற்றிற்கே தேடலிருக்கும் போது
நான் உன்னை தேடக்கூடாதா............?


சுட்டிப் பையன் உங்கள் கவிதை கலக்கலோ கலக்களுங்கோ
வாழ்த்துக்கள் பையன் இன்னும் கலக்குங்கோ

இனியவள்
08-06-2007, 08:40 AM
வீடுகாணலாம்
எங்கள் தேசத்திற்க்கு சென்று
நாங்கள் தவண்டு வளர்ந்த
வீட்டை காணலாம்
அன்னியர்கள் தாக்கியழித்து
எச்சங்களய் எங்கள்
உறவுகள் பெயர்களை கூறும்
நம் வீட்டை பாக்கலாம்
எங்கள் உறவுகள்
எங்கள் கண்முன்னே
இரத்ததை சிந்தி
தங்கள் உயிர் நீத்த
எங்கள் வீட்டை பாக்கலாம்
சேர்த்து வைத்திருக்கும்
கண்ணீருக்கு
விடை கொடுக்க
எங்கள் தேசம் சென்று
வீடுகாணலாம்

என்றோ ஒரு நாள் நிறைவேறும் நண்பரே...கனவுகள் நிஜமாகும் காலம் வெகு தூரம் இல்லை
அருமையான கவிதை நண்பரே

namsec
08-06-2007, 08:47 AM
எனக்கு விமர்சிக்க பிடிக்காது

அருமையான கவிதை அதனால் வாழ்த்துகிறேன்

"பொத்தனூர்"பிரபு
28-06-2008, 10:17 PM
சிறப்பாக உள்ளது

குறிப்பாக
..........................
நிலவிற்காய் ஏங்குகிறது வானம்
அமாவாசையில்!

சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
இரவு வேளையில்!

விண்மீன்களுக்காய் ஏங்குகிறது முகில்கள்
மழைபொழியும் இரவில்!

உனக்காக ஏங்குகிறது என்னிதயம்
எல்லா காலங்களிலும்!
.......................
வாழ்த்துக்கள்