PDA

View Full Version : யாழின் இதயம் இறந்த நாள்...



slgirl
17-04-2007, 10:37 AM
யாழ் நூலகம்

என்ன அநியாயம்
நான் பிறக்குபுன்பே
யாழ் மண்ணின் இதயம்
அழிந்துவிட்டதாம்
ஓ நான் கண்ணாலே
கண்டதும் அந்த
அழிந்த இதயத்தை தானே
என்ன தான் எம் யாழ்
இதயத்தை மீண்டும்
கட்டி எழுப்பினாலும்
இதயமது இழந்தவை
மீளப்பெறமுடியாது

கயவர்கள்
யாழ் மக்களின் உயிரை
உணர்வை...பண்பாட்டை
எரித்துவிட்டார்கள்
காடையர்கள்

எதிரியின் இந்த கொடூரம் தான்
தூங்கிகிடந்த தமிழனை
விழிக்க வைத்தது...
கயவர்கள் தீயிட்டதால்
தீயாகவே எழுந்தார்கள்
தமிழர்கள்...தீயவனை
அழிப்பதென முடிவோடு
அன்று வைத்த தீ தான்
இன்று தமிழன் நெஞ்சில்
சுடர்விட்டு எரிகிறது
ஈடுகொடுக்க முடியாத
இழப்பல்லவா எம் இதயத்தின்
இழப்பு.......
இறைவனே கயவர்களை
கண்கொண்டு பாத்திரு
தமிழன் அவன் கயவனை
விட்டுவைக்க மாட்டான்
நீ காத்திரு...

தமிழ் மன்றத்தில் எனது முதல் கிறுக்கலாக இது மிளிரட்டும்

அன்புரசிகன்
17-04-2007, 10:43 AM
தாங்கமுடியாத இழப்பது. எத்தனையோ மதிப்பு மிகுந்தவை. தெற்காசியாவின் பொக்கிசம் அது. எரித்த கழுதைகளுக்கு தெரியுமா அதன் வாசனை...
இன்னொன்று... எரரித்ததன் விளைவை இன்று அனுபவித்தக்கொண்டிருக்கின்றனர். பாலம் பதில் சொல்லும். பதிந்த சொந்தத்திற்கு நன்றி.

ஓவியன்
17-04-2007, 10:45 AM
ஈழத்து தமிழ் மக்கள் சந்தித்த பெரும் சோகத்தினை எழுத்திலே வடித்தமைக்கு நன்றிகள் சகோதரி.

இந்த விடயம் தெரியாதவர்களும் தெரிந்து கொள்வார்கள்.

pradeepkt
17-04-2007, 10:50 AM
வணக்கம் இலங்கைப் பெண் அவர்களே...
யாழ் நூலக எரிப்பைப் பற்றி நாங்களும் கேள்வியுற்றிருக்கிறோம்.
அத்துன்பியல் நிகழ்வை, கோழைகளின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.

உங்கள் கவிதை சூடாக இருக்கிறது, சகோதரி.

ஷீ-நிசி
17-04-2007, 10:59 AM
இப்படியான சம்பவம் உங்கள் கவிதை படித்தபின் தான் அறிந்தேன்.. இது முற்றிலும் மிக மோசமான செயல்...

கோபாவேச கவிதை... தொடருங்கள் சகோதரி.

ஆதவா
17-04-2007, 10:59 AM
பிரமாதம் இ.பெ. அக்கா! அருமையான விருந்து. முதல் கவிதை முற்றிலும் முத்தான முத்து. வாழும் இடத்தின் பிரச்சனைகளை அள்ளி வீசும் கனல். எடுத்ததை எடுத்தபடி சொன்னதை சொன்னபடி உரைக்கும் கவிதைக் கல்.

யாழ் நூலகம்

யாழ் என்றதுமே நான் நினைத்தது ஒரு இசைக்கருவி.. கவிதை படித்ததறிந்து அது கருவி அல்ல,, யாழ்ப்பாண மருவி என்று நினைத்துக் கொண்டேன். நூலகம்? படிப்பகம்.-. அனுபவம். கண்களில் கண்ட காட்சிகள்... அருமையான தலைப்பு...

என்ன அநியாயம்
நான் பிறக்குபுன்பே
யாழ் மண்ணின் இதயம்
அழிந்துவிட்டதாம்
ஓ நான் கண்ணாலே
கண்டதும் அந்த
அழிந்த இதயத்தை தானே
என்ன தான் எம் யாழ்
இதயத்தை மீண்டும்
கட்டி எழுப்பினாலும்
இதயமது இழந்தவை
மீளப்பெறமுடியாது

மண்ணிற்கும் ஒரு இதயமுண்டு, அதையும் அழிப்பவர்கள் இதயமற்றவர்கள். ஊனம் இருவகை. உள்ளூனம். வெளியூனம்.. இரண்டாம் வகையை சரிசெய்யலாம் முதல்வகையை என்றென்றும் முடியாது. இதய ஊனத்தினால் திரும்பப் பெற முடியாத அளவிற்கு கோரம் செய்திருக்கிறார்கள்.
இதயத்தை எழுப்பினாலும் இழந்தவைகளை பெறமுடியாது.///

இந்த வரிகள் நெஞ்சை சுடுகின்றன. ஆம்.. என்றுமே பெறமுடியாதுதான்.. புண்களை ஆற்றிவிடலாம்... மண்களில் விழுந்த உயிர்களை எப்படி ஆற்ற?

கயவர்கள்
யாழ் மக்களின் உயிரை
உணர்வை...பண்பாட்டை
எரித்துவிட்டார்கள்
காடையர்கள்

உணர்வை/பண்பாட்டை எரிப்பது - அழகிய வரிகள். மறைமுக சாடல் இக்கவியின் பெரும் பலம். அழுத விழிகளுக்குண்டான பலன் கருப்பொருளில் காணக் கிடைக்கிறது.

எதிரியின் இந்த கொடூரம் தான்
தூங்கிகிடந்த தமிழனை
விழிக்க வைத்தது...
கயவர்கள் தீயிட்டதால்
தீயாகவே எழுந்தார்கள்
தமிழர்கள்...தீயவனை
அழிப்பதென முடிவோடு
அன்று வைத்த தீ தான்
இன்று தமிழன் நெஞ்சில்
சுடர்விட்டு எரிகிறது
ஈடுகொடுக்க முடியாத
இழப்பல்லவா எம் இதயத்தின்
இழப்பு.......
இறைவனே கயவர்களை
கண்கொண்டு பாத்திரு
தமிழன் அவன் கயவனை
விட்டுவைக்க மாட்டான்
நீ காத்திரு...

ஒருவகையில் அவர்களுக்கு நன்றி சொல்லலாம்தான்.. ஆனால்... கூடாது. தமிழர்கள் என்றுமே தீ போலதான்... குளிரும் காயலாம்.. உயிரும் வேகலாம்.. தமிழன் நெஞ்சில் யாழ் இதயம் - சுவைக்கத் தகுந்த வரிகள். இறைவனிடம் முறையிட்டு என்ன லாபம்? இங்கே இறைவன் என்ற சொல்லுக்குப் பதில் யமன் என்று போட்டிருக்கலாம். இறுதி வரிகள் நிச்சயம் நாளை சொல்லும்..

தமிழ் மன்றத்தில் எனது முதல் கிறுக்கலாக இது மிளிரட்டும்

இது கொஞ்சம் ஓவரு.... இப்படி அருமையா கவிதை எழுதிட்டு அதை கிறுக்கல்னு வேற சொல்றீங்க. எப்படி நான் ஒத்துக்க.??

------------------------------
ஆக மொத்தம் ஒரு மண்ணின் பாசம் இங்கே தெறிக்கிறது. இரத்தமாக... என்றாவது ஒருநாள் பால் பொங்கும் என்று சாட்டையடிக்கிறது கவிதை. கருப்பொருள் பிரமாதம். நூலகம் எரிந்தது பற்றியது என்று பின்னர் அறிந்துகொண்டேன் (நன்றி பிரதீப் அண்ணா) ஆலமரமாக வேரூன்றிய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்....

குறை : கிறுக்கல் என்று சொன்னது..

அன்புரசிகன்
17-04-2007, 11:03 AM
எழுத்துக்களிலும் கிறுக்கவ்களுக்கு மவுசு ஜாஸ்தியோ???

ஓவியன்
17-04-2007, 11:06 AM
இப்படியான சம்பவம் உங்கள் கவிதை படித்தபின் தான் அறிந்தேன்.. இது முற்றிலும் மிக மோசமான செயல்...

கோபாவேச கவிதை... தொடருங்கள் சகோதரி.

உண்மை தான் ஷீ-நிசி நிறைய பேருக்கு இந்த விடயம் தெரியாது!

இதில் அநியாயம் என்னவென்றால் இதனை முன்னின்று நடத்தியவர்கள் இலண்ண்க்கையின் அன்றைய பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் என்பது தான்.

அந்த பிரதமர் பின்னர் ஜனாதிபதியானவர்.

அன்புரசிகன்
17-04-2007, 11:10 AM
படித்தவனுக்கு ஊரெல்லாம் பெருமை. நூலகம் எரித்த அவர்களால் நம் வேட்கையை அழிக்கவோ அணைக்கவோ முடியவில்லை. (எரிந்தது நம் பொக்கிஷம் மட்டுமே) பதில் சொல்லத்திணறுவர் ஒருநாள். அன்று பார்த்துக்கொள்வோம்.

slgirl
18-04-2007, 04:58 AM
படித்து கருத்திட்ட அனைவருக்கும் மிகவும் நன்றிகள்...

ஆதவா ரசித்தமை எனக்கு மனம் கவர்ந்துள்ளது உங்களின் விரிவான அன்பு பின்னூட்டம் நன்றிகள்

இளசு
18-04-2007, 05:38 AM
இந்த மாபெரும் வரலாற்றுத் துயரம்
திட்டமிட்ட பண்பாட்டு சீரழிப்பு
உலகத்தமிழர்கள் பலரையும் சென்றடையாமல்
இருட்டடிக்கப்பட்ட இழிசெயல்..

இந்நிகழ்வை மையப்படுத்தி மனதைப் பிசைந்த
சிறுகதை ஒன்று வாசித்திருக்கிறேன்..
இக்கவிதை மனதை நொறுக்கியே விட்டது.

நூலகம் - வெறும் நூல்களின் அகம் மட்டுமா?
காலகாலமாய் சேகரித்த பண்பாட்டின், கலாச்சாரத்தின்
ஒட்டு மொத்த உயிர்நிலை அல்லவா?

அதனால் அதை இதயம் என்றது சாலப்பொருத்தம்..

உயிர்த்துடிப்பும், உணர்வும் , நினைவும் பொருந்திய
அதை ஒருமுறை அழித்துவிட்டால் -
ஈடு என்பதே அதற்கு இல்லை!

இயற்கைச் சீற்றம் செய்திருந்தால் அழுது ஆற்றித் தேற்றிக்கொள்ளலாம் - சங்க மதுரை, பூம்புகார் போல என்று!
வெறுப்பில் குளித்து, தமிழர் வரலாற்று வேரில்
நெருப்பிட்ட மனித மிருகங்கள் செய்த வன்செயலை
மறப்பதெப்படி?மன்னிப்பதெப்படி???

படிப்பவர் விழியில்
பச்சைக் குருதி வடியவைக்கும்
இலங்கைப் பெண்ணின் முதல் கவிதைக்கு
என் வந்தனமும் மரியாதையும்!

slgirl
18-04-2007, 05:41 AM
மிக்க நன்றி மன்ற ஆலோசகர் இளசு அவர்களே....

சுட்டிபையன்
18-04-2007, 05:45 AM
sl girl எங்கள் யாழ் நூலகம் பற்றி கீழ் உள்ள திரியில் பதிந்துள்ளேன் பாருங்கள்

யாழ் நூலகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8814)

slgirl
18-04-2007, 05:48 AM
ஆமாம் படித்தேன் சுட்டிபையன் முதல் பின்னூட்டமும் என்னுடையதே அந்த பதிவுக்கு பாருங்கள்