PDA

View Full Version : கூகிள் பற்றிய தகவல்கள்சுட்டிபையன்
16-04-2007, 01:48 PM
ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.

""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்த࠮?ன் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

நன்றி தினமணிக்கதிர்

சுட்டிபையன்
16-04-2007, 01:51 PM
கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.

கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.

கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;

கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.

பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.

பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்க࠮?்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

சுட்டிபையன்
16-04-2007, 01:52 PM
கூகிள்
கூகிள் என்பது அமெரிக்காவிலுள்ள ஓர் நிறுவனம் இதுவே கூகிள் தேடுபொறியைப் பராமரித்து வருகின்றது. இந்நிறுவனத்தில் ஏறத்தாழ 5, 700 பேர்வரை பணிபுரிகின்றனர்.

கூகிள் சேவைகள் யாவும் வழங்கிப் பண்ணைகளிலேயே en:Server farm இயங்குகின்றன. இவை மலிவான ஆயிரக்கணக்கான கணினிகளில் சற்றே பளு குறைக்கப் பட்ட லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகின்றன. இந்த நிறுவனமானது கணினிகளின் எண்ணிக்கை பற்றி எதுவும் கூறாத போதும் 2005ஆம் ஆண்டில் 100, 000 லினக்ஸ் கணினிகள் மூலம் இயங்குவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.


சரித்திரம்

ஆரம்பம்
1996 ஆம் ஆண்டு ஜனவரியில் ஓர் ஆய்வு முயற்சியாக லாரி பேஜ் (en:Larry Page) மற்றும் சேர்ஜே பிரின் (en:Sergey Brin கலாநிதிப் (டாக்டர்) படிப்பிற்காக கலிபோர்னியா ஸ்ராண்ட்போட் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. இது அப்போதிருந்த தேடுபொறிகளைப் போலல்லாது எத்தனை முறை தேடும் சொல்லானது அப்பக்கதிலிருகின்றது என்று கருதாமல் தேடுபொறியானது இணையப் பக்கதிற்கான தொடர்புகளை ஆராயவேண்டும் என்று கருதி ஆய்வுகளில் ஈடுபட்டனர். இது ஆரம்பத்தில் பக்ரப் ("BackRub") என்றழைக்கப் பட்டது ஏனெனில் இது எத்தனை பக்கங்கள் இந்த இணையப் பக்கங்களை இணைகின்றத என்பது கணக்கெடுக்கப் பட்டது.

கூடுதலான இணைப்புள்ள பக்கமே கூடுதலான பொருத்தாமான பக்கம் தேடல் முடிவுகளில் இதைப் பிரயோகிக்கலாம் என்ற நம்பிக்கையில் தமது கலாநிதி (டாக்டர்) ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பித்தனர். பேஜ் மற்றும் பிறின் ஆய்வுகளே கூகிள் தேடுபொறியின் அடிக்கல்லாக அமைந்தது. ஆரம்பத்தில் கூகிள் தேடுபொறியானது google.stanford.edu. google.com டொமைன் ஆனது செப்டம்பர் 14, 1997 இல் பதிவு செய்யப்பட்டு கூகிள் செப்டம்பர் 7, 1998 இல் ஒன்றிணைக்கப் பட்ட நிறுவனமாக நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிடத்தில் உருவாகியது. சண் மைக்ரோசிஸ்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஆண்டியின் 1 இலட்சம் அமெரிக்க டாலர் உதவியுடன் மொத்த முதலீடு 1.1 மில்லியனிற்கு அளவில் இருந்தது

சுட்டிபையன்
16-04-2007, 01:53 PM
கூகிள் தனது நிறுவனத்திற்கு ஆளுமைகளை எவ்வாறு சேர்த்துக் கொள்கின்றதென ஆராய்வோம். கூகிளின் மொத்த நடவடிக்கைகளிலும் புதுமை, விவேகம் என்பன காணப்படுவது தனது நிறுவனத்திற்கு மனித வளங்களைச் சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையிலும் காணப்படாமலில்லை.

கீழுள்ள நிழற்படத்தினைப் பற்றி அறிவீர்களா? சற்று சிந்தியுங்கள்
http://img03.picoodle.com/img/img03/7/3/26/f_billboardlam_e10f692.jpg

குறித்த நிழற்படத்தில் உள்ள விளம்பரப் பலகையில் காணப்படும் ஆங்கில எழுத்துக்கள் வருமாறு:

{first 10-digit prime found in consecutive digits of e}.com

இது கூகிள் நிறுவனத்திற்கு விவேகமான, திறமை வாய்ந்த கணினி பொறியியலாளர்களைச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, கலிபோர்னியாவின் வீதியொன்றின் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையாகும். இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது???
ஆராய்ச்சிக்கான கேள்வி. இந்த விளம்பரப் பலகையானது, கணிதப்புதிர் ஒன்றினையே ஆங்கிலத்தில் கொண்டுள்ளது. இங்கு e என்பதனால் சொல்லப்படுவது இயற்கை மடக்கையின் அடி எண்ணொன்றாகும். இந்த மடக்கை எண்ணின் பெறுமானம் 2.71828 ஆக அமையும். இந்த எழுத்தின் கணித நிலையை துல்லியமாக அறிந்திட இங்கே (http://mathworld.wolfram.com/e.html) செல்லுங்கள். ஆக, இந்தப் புதிருக்கு மிகச் சரியான விடையைக் கண்டுபிடித்து அந்த இலக்கங்களை இணைய உலாவியில் இணைய முகவரியாக டைப் செய்ய, அது இந்தப் புதிரினை விடச் சங்கீரணமான கணிதப் புதிரினைக் கொண்ட இணையத் தளத்திற்கு அழைத்துச் செல்லுமாம். அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகச் சரியான விடைகளை வழங்குபவர் கூகிள் எனும் புதுமைகளை செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாம். புதுமையான சிந்தனை.

அது சரி மேலுள்ள கணிதப் புதிருக்கு நீங்கள் விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா? முயற்சி செய்யலாமே.. உங்களால் முடியாவிட்டாலும் இணையத்தில் தேடியாவது விடையைப் பெறலாமே!

உலகத்திலுள்ள பலரும் இப்புதிரினை விடுவிக்க நிறைய பிரயர்த்தனங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பதனை இந்த தளத்திற்க்கு (http://discuss.fogcreek.com/joelonsoftware/default.asp?cmd=show&ixPost=160966&ixReplies=23)செல்வதன் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

கூகிள் தனது நிறுவனத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதில் காட்டும் புதுமை அந்த நிறுவனத்தின் அத்தனை வருவிளைவுகள், நடவடிக்கைகள் என்பனவற்றிலும் காணப்படுகின்றன என்பதனை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மயூ
16-04-2007, 01:57 PM
நல்ல தகவல்கள் சுட்டிப்பையா!!!
நன்றி...
அந்த நிறுவனத்தில் நாய் பூனை உலாவுவது பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கின்றேன்..!! அத்துடன் உணவு வழங்கப்படுவது அனேக மென்பொருள் நிறுவனங்களில் நடைபெறுகின்றது தானே!!!

varsha
16-04-2007, 02:00 PM
கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)


ஆம் கூகிளின் சுதந்திரம் வெற்றியின் ரகசியம்

சுட்டிபையன்
16-04-2007, 02:00 PM
அங்கே போல எங்கும் கிடையாது
உதாரணத்திற்கு கீழ் உள்ள படங்களை பாருங்கள்

http://img03.picoodle.com/img/img03/7/3/26/f_googleplex0m_0b1db1f.jpg
http://img03.picoodle.com/img/img03/7/3/26/f_googleplex0m_fae913c.jpg
http://img03.picoodle.com/img/img03/7/3/26/f_googleplex0m_9a36bf9.jpg
http://img03.picoodle.com/img/img03/7/3/26/f_googleplex0m_4f56958.jpg
http://img03.picoodle.com/img/img03/7/3/26/f_googleplex0m_518c768.jpg
http://img03.picoodle.com/img/img03/7/3/26/f_googleplex0m_dd0bb29.jpg
http://img03.picoodle.com/img/img03/7/3/26/f_googleplex0m_023a89d.jpg
http://img03.picoodle.com/img/img03/7/3/26/f_googleplex0m_6e17e4a.jpg
http://img03.picoodle.com/img/img03/7/3/26/f_googleplex0m_6492278.jpg

varsha
16-04-2007, 02:04 PM
நம்ம கார்ப்பரேட் கம்பெனிகளில் இவ்வளவு அதிகமான சுதந்திரம் கொடுத்தால் கம்பெனியை ........

சுட்டிபையன்
16-04-2007, 02:07 PM
நம்ம கார்ப்பரேட் கம்பெனிகளில் இவ்வளவு அதிகமான சுதந்திரம் கொடுத்தால் கம்பெனியை ........

:4_1_8: அப்புறம் முதலாலி நடு தெருவிலதான்

சுட்டிபையன்
16-04-2007, 02:07 PM
கூகுள் ஆண்டவர் இல்லையென்றால் மென்பொருள்துறையில் ஒரு நாளை ஓட்டுவது கூட கடினமாகிவிடும். அப்படி நான் உபயோகிப்பது இல்லை என்று கதை விடுபவர்கள் யாரும் இந்த குறிப்புகளை வாசிக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க கூகுளையே கடவுளாக பூஜிப்பவர்களுக்க்கான மற்றொரு பக்தனின் காணிக்கையாக.

1. இது அல்லது அது
தேடலின் போது சில சமயம் இது அல்லது அது எது இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலை அடிக்கடி ஏற்படும். எ.காட்டாக சூர்யா மற்றும் ஜோதிகா யாருடைய பேர் இருந்தாலும் அந்த முகவரிகள் தேவை என்று இருக்கின்றது என வைத்துக்கொள்வோம் அப்போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Google Search: சூர்யா OR ஜோதிகா
சூர்யா ஜோதிகா என்று தேட கொடுத்தால் இருவர் பெயர் இருக்கும் முகவரிகள் மட்டும் கிடைக்கும்.

2. அங்க என்ன நேரம்?

உலகில் சில முக்கியமான நகரங்களின் தற்போதைய நேரம் என்ன என்பதை அறிய மிக எளிதாக ஒரு வசதி உள்ளது.

Google Search: Time in Bangalore

என்று கொடுத்தால் போது. சென்னையை இந்த தேடலில் காணவில்லை.

3. கணக்கில் சிங்கம்

நமக்கு தான் இப்ப எல்லாம் 1 + 1 என்பதற்கு கூட கணிப்பான் தேவை படுகின்றது. கூகிள் இன்னும் வாழ்வை சோம்பல் படுத்த ஒரு வசதி கொடுத்துள்ளது. எப்படி?

Google Search: 123 * 1234

என்று கொடுத்து பாருங்கள்

4. வலைதளத்தில் மட்டும் எப்படி தேடுவது?

உங்களுக்கு ஒரு வலைதளத்தில் ஏதாவது ஒரு வார்த்தை தேடவேண்டும். உதாரணத்திற்கு திண்ணை வலைதளத்தில் இருக்கும் ஜெயமோகன் பதிவுகளை மட்டும் பார்க்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன வார்த்தை தேடவேண்டுமோ அதை கொடுத்துவிட்டு, அந்த வலைதளத்தில் முகவரியை Site:<வலைத்தள முகவரி> என கொடுத்தால் நமக்கு தேவையான பக்கங்கள் மட்டும் கிடைக்கும்

Google Search: வானவில் site:yarl.com
5.கோப்புகள் மட்டும்

கோப்புகளுக்குள் தேடவும் கூகுளில் வசதியுள்ளது. கோப்புகள் மட்டும் தேவை என்றால்

filetype:pdf,doc,ppt என்று தரலாம். அந்த கோப்புகள் மட்டும் கிடைக்கும். (குகிள் 101KB அளவுள்ள கோப்புகளை மட்டுமே பட்டியலிடுகின்றது என ஒரு வதந்தி உள்ளது)

Google Search: தமிழ் filetype:doc

(இந்த தேடலில் நான்கு விடை மட்டும் வருகின்றது)

6. எண் விளையாட்டு.

பல சமயங்களில் வருடங்கள் அல்லது எண்கள் சரியாக தெரியாது. 1990ல் இருந்து 2000 வரை ஏதோ ஒரு ஆண்டு அல்லது 10ல் இருந்து 25 வரை இருக்கும், ஆனால் சரியாக எந்த எண் என்று தெரியாது, இது போல பயங்கர இக்கட்டான் நிலையில் எப்படி கூகிள் ஆண்டவரிடம் கோரிக்கை வைப்பது, வைக்கும் விதத்தில் கோரிக்கை வைத்தால் பலன் கிட்டும்.

அதற்கு 1900..2000 என கொடுக்க வேண்டும்.

Google Search: இந்தியா 1945..1948

6.1 சில சமயம் 10க்கு மேல் அல்லது 10க்கு கீழ் என்று மட்டும் தெரியும், அப்பொழுது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

10.. (பத்திற்கு மேல் தேட)

..10 (பத்திற்கு கீழ் எண்களை தேட)

7. தவிர்க்க முடியாத வார்த்தைகள்

கூளிள் தேடலில் மொத்தம் 32 வார்த்தைகளை கொடுத்து தேடலாம். முன்னர் பத்து வார்த்தைகள் மட்டுமே தேடிவந்தது. இந்த முப்பத்தி இரண்டில் சில வார்த்தைகள் மிக அவசியமாக நமக்கு தோன்றலாம். அந்த வார்த்தைகளை மிக அவசியம் தேவை என்று நமக்கு தோன்று அப்போது அந்த வார்த்தைகளை உள்ளே போட்டு தேடினால் பலன் கிடைக்கும்

Google Search : இந்தியா வெற்றி

பல தேடும் போது இந்தியா + வெற்றி என தேடுவதை பார்த்துள்ளேன். கூகிள் தேடுஇயந்தரத்தில் ஒவ்வொரு வார்த்தை நடுவிலும் AND தானாக சேர்த்துக்கொள்ளும். ஆனவே + போட வேண்டிய அவசியம் இல்லை

8. பதிலை தேடுங்கள்.கேள்விகளை அல்ல..

ஒரு சின்ன விடயத்தை மனிதில் வைத்துக்கொண்டால் கூகிள் தேடலில் கை தேர்ந்தவாராகிவிடலாம். கூகிள் பதில்களில் இருந்து தான் தேடுகின்றது, ஆகவே பதில்களை மட்டுமோ தேடல் சொற்களில் வைக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் தேடுவது போல தமிழிலும் தேட ஆரம்பியுங்கள். தேட தேட தான் பல பக்கங்கள் வலைதலைங்கள் கூகுளுக்குள் பட்டியலிடப்படும். தமிழில் ஒருங்கிறியில் (Unicode) பக்கங்கள் மட்டுமே தேடப்படுகின்றது.

தேடுங்க தேடுங்க தேடிகிட்டே இருங்க..

நன்றி : google.com

சுட்டிபையன்
16-04-2007, 02:11 PM
கூகிள் - காப்புரிமை வழக்கு

பெல்சியம் நாட்டு பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய மொழி செய்திகளை, கூகிள் தனது தேடு பொறி தளத்திலும், செய்தி திரட்டியிலும் வெளியிட்டமைக்காக, அந்நாடு கூகிளுக்கெதிராக காப்புரிமை மீறல் வழக்கை துவங்கியிருந்தது. அவ்வழக்கின் தீர்ப்பு கூகிளுக்கு சாதகமாக அமையவில்லை. தலைப்புச் செய்திகளை மட்டுமே கூகிள் வெளியிடுவதாகவும், முழு செய்திகளையும் வாசிக்க குறிப்பிட்ட செய்திதளங்களுக்கு தகுந்த சுட்டிகள் தந்திருப்பதாகவும் கூகிள் செய்த வாதம் பலிக்காமல் போனது.

வழக்கின் தீர்ப்பின்படி கூகிள் தனது திரட்டி சேவையை தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் $32500 அமெரிக்க டாலர்களை அபராதமாக் செலுத்த வேண்டும்.

வழக்கின் முடிவு கூகிளுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் பாதிப்பு அந்த செய்தி நிறுவனங்களுக்கே பெரும்பான்மையாக இருக்கும் என்று வலை அறிஞர்கள் கருதுகிறார்கள். பெரும் நிறுவனங்கள் கூகிள் தேடு பொறி முடிவுகளில் தங்கள் நிறுவனம் முதலிடம் வருவதற்கு விளம்பரம் செய்வதற்கு பல அயிரங்களை செலவு செய்யும் இந்த காலகட்டதில் இவ்வழக்கு சற்றே விசித்திரமானதாகும்.

இவ்வழக்கின் முடிவு கூகிள், MSN, யாஹூ போன்ற நிறுவனங்களுடன் நின்றுவிடுவதில்லை. DIGG, DELICIOUS போன்ற திரட்டி சேவைகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்மணம், தமிழ் ப்ளாக்ஸ், தேன்கூடு போன்ற திரட்டி சேவைகளும் தங்கள் காப்புரிமையை தூசுதட்டவேண்டியது அவசியம்.

us tamils

சுட்டிபையன்
16-04-2007, 02:15 PM
கூகிளின் முதற் பக்கம் வெறுமையாகவே காணப்படும் - தேடல் பொறி தவிர்ந்து. ஆனால் நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு முதற் பக்கத்தை அமைக்க வழிசெய்கிறது கூகிள். இங்கு சென்று (http://www.google.com/ig)உங்களுக்கு வேண்டிய வகையில் தீம் மற்றும் ஏனைய விடையங்களை தெரிவு செய்யலாம்.
http://img79.imageshack.us/img79/3439/googlexb0.th.jpg (http://img79.imageshack.us/my.php?image=googlexb0.jpg)

சுட்டிபையன்
05-05-2007, 06:18 AM
கூகிள் எர்த்-ல் சிற்றூரை மாற்றியமைக்க சிலி வேண்டுகோள்
கூகிள் நிறுவனத்தின் எர்த் பூகோளவியல் சர்ச் வரைபடத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறு கிராமத்தை அர்ஜென்டினா எல்லையில் இருந்து சிலி பகுதியில் மாற்றுமாறு சிலி கேட்டுக் கொண்டுள்ளது.

சிலி நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர் பெர்னார்டோ பெயரில் பெர்னார்டோ ஓ ஹிக்கின்ஸ் என்ற அந்த சிற்றூரை கூகிள் ஜியாக்கிரபிகள் சர்ச் வரைபடம் அர்ஜென்டினா எல்லையில் காட்டியுள்ளது.

இந்த ஊர் சிலி தலைநகர் சாண்டியாகோவில் 1,600 கி.மீ. தூரத்தில் இருப்பதாகவும், எனவே விரைவில் கூகிள் நிறுவனம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிலி அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தங்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டிருப்பதாகவும், அதுபற்றி கூடுதல் ஆதாரங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும், கூகிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மேகான் குய்ன் தெரிவித்தார்.

தென் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள சிலி மற்றும் அர்ஜென்டினா இடையே எல்லை தொடர்பான சர்ச்சை, போப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.

msn.co.in

ராஜா
05-05-2007, 02:05 PM
கூகுள் தோற்றப் பொலிவு குறித்த தகவலுக்கு நன்றி சுட்டி.