PDA

View Full Version : வந்துட்டோம்ல...Pages : [1] 2

வெற்றி
16-04-2007, 12:30 PM
நண்பர்: என் மனைவிக்கு என் மேலே அன்புன்னா அன்பு, கொள்ளை அன்பு!
மற்றவர்: எப்படி?
நண்பர்: நான் சமைச்சு வைக்கவேண்டியதுதான். தன் கையாலேதான் பரிமாறுவேன்னு பிடிவாதம் பிடிப்பா.

:spudnikbackflip: :spudnikbackflip: :spudnikbackflip: :spudnikbackflip: :spudnikbackflip:
மனைவி: தவணையில் வாங்கிய பீரோவைத் தூக்கிக் கொண்டு போக ஆள்கள் வந்திருக்கிறார்கள்.
கணவன்: நான்தான் இந்த மாதத் தவணை பணத்தைத் கொடுத்து விட்டேனே. ஏன் கட்டவில்லை?
மனைவி: சத்தம் போடாதீர்கள். பீரோவை மாடியிலிரூந்து கீழே இறக்கிக்கொண்டு போனதும் கொடுத்து விடுவேன்.
கீழே உள்ள அறைக்கு பீரோவை மாற்றவேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
:musik010: :musik010: :musik010: :musik010: :musik010: :musik010:


"தெருவில் கிடந்த மணிபர்ஸில் ஐந்தாயிரம் ரூபாய் இருந்தது!"
"நீ என்ன செய்தே?"
"அடுத்தவன் பர்ஸ் நமக்கெதுக்குனு பணத்தை எடுத்துக்கிட்டு பர்ஸை அங்கேயே போட்டுட்டு வந்துட்டேன்!"
:icon_v: :icon_v: :icon_v: :icon_v: :icon_v: :icon_v: :icon_v: :icon_v:

சுட்டிபையன்
16-04-2007, 12:40 PM
ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?

சர்தார் : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்

வெற்றி
16-04-2007, 01:28 PM
யானைக்கு ஆங்கிலத்தில் எலிபோண்ட்..எலிக்கு ஆங்கிலத்தில் என்ன??
யானைபோண்ட்

சுட்டிபையன்
16-04-2007, 01:38 PM
ஒரு இந்திய விவசாயியும் பாகிஸ்தான் விவசாயியும் சந்தித்துக் கொண்டார்கள்.. இந்தியர் தன் வயலைச் சுற்றிக் காட்டினார்.. பாகிஸ்தானி சொன்னார்..

என்னுடைய வயலை காரில் சுற்றிப் பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும்..

இந்தியர் சொன்னார்..

" என்கிட்டேயும் அது மாதிரி ஒரு ஓட்டைக் கார் இருந்தது. பழைய இரும்புக்கு போட்டுட்டேன்,,!

வெற்றி
16-04-2007, 01:59 PM
ஒரு அமெரிக்கனும் ஜப்பானியனும் இந்தியனும்(தமிழன்!!) பேசிக்கொண்டு இருந்தார்கள்..
அமெரிக்கன்:- நாங்கள் தான் முதலில்
தொலைபேசியை கண்டு பிடித்தோம் தெரியுமா???

ஜப்பானியன்:- நாங்கள் தான் முதலில் செல்போனை கண்டிபிடித்தோம் தெரியுமா??

நம்மாளு:- இதென்ன பிரமாதம் நாங்கள் தான் முதன் முதலாக மிஸ்டு காலை கண்டுபிடித்தோம் தெரியுமா???

சுட்டிபையன்
16-04-2007, 02:04 PM
சுட்டி -ஒரு எறும்பை கட் பண்ணினா என்ன ஆகும்

மொக்கச்சாமி -தெரியலிய

சுட்டி - கட்டெறும்பு ஆகும்

வெற்றி
16-04-2007, 02:08 PM
வேணாம் ......வலிக்கிது...அழுதுடுவேன்...அழுதுடுவேன்
இப்ப போறன் ..
ஆன மறுபடியும் வருவேன்..
அவ்வ்வ்வ்வ்வ்

சுட்டிபையன்
16-04-2007, 02:09 PM
சுட்டி: சார் எறும்புக்கு பவுடர் வாங்கிட்டு போங்க..

மொக்கச்சாமி: வேணாம்! இன்னைக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, நாளைக்கு அது லிப்ஸ்டிக் கேட்கும்.. ஹ.. ஹ..

அன்புரசிகன்
16-04-2007, 02:10 PM
கலக்குறீங்கப்பா... தொடருங்க.

சுட்டிபையன்
16-04-2007, 02:14 PM
நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; லொள்..லொள்..

நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; வவ்..வவ்.. வவ்,,

நாய் 1 ; நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்கு இப்போ பேச்சை மாத்துறே..?

அன்புரசிகன்
16-04-2007, 02:15 PM
நாய் 1 ; நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்கு இப்போ பேச்சை மாத்துறே..?

பையனுக்கு என்னமா புரியுது பார்...:icon_clap: :icon_clap: :icon_clap:

சுட்டிபையன்
16-04-2007, 02:18 PM
நம்ம ஹீரோ ரெண்டு பேரு ஒரு துப்பறியும் நிறுவனத்துல வேலை பார்த்தாங்க. ஒரு முக்கியமான கேஸைப் பத்தி துப்பு துலக்கிக்கிட்டு இருக்கும் போது ஒரு வாகனத் தடத்தைப் பார்த்தாங்க..

"இது மாருதி கார் போன தடம்.."

"இல்லே இல்லே.. அம்பாசடர் கார்.."

இப்படி ரெண்டு பேரும் மாறி மாறி அடிச்சுக்கிட்டு இருக்கும் போது பின்னாடி வந்த ரயில் அவங்களை அடிச்சுப் போட்டுட்டு போயிடுச்சு..!

சுட்டிபையன்
16-04-2007, 02:23 PM
ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது. ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்..

"அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..."

"நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??"

" வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..."

" என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக் கண்டுபிடித்தீர்களா உங்கள் ஆய்வில்..?"

" மன்னிக்கவும் அய்யா.. இது...."

"நான் இன்னும் முடிக்கவில்லை..என்னுடைய தம்பி கடனாளி ஆகி குடும்பத்துடன் விஷம் குடித்தானே.. அது தெரியுமா உங்களுக்கு..?"

" தெரியாது அய்யா.."

" அவ்வளவு அவஸ்தைப் பட்ட அவர்களுக்கே நான் ஒரு பைசா கொடுக்கவில்லை.. உங்களுக்கு தருவேனா..? போய் வாருங்கள்..!"

pradeepkt
16-04-2007, 02:38 PM
அது சரி...
சரியான ஆள்கிட்ட போயி நிதி கேட்டாய்ங்க பாருங்க... ஹி ஹி

சுட்டிபையன்
16-04-2007, 02:43 PM
என்ன பண்ண அப்ப்டியும் சில பேரு இருக்கிறாங்கலள்

சுட்டிபையன்
16-04-2007, 02:43 PM
ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

சுட்டிபையன்
16-04-2007, 02:43 PM
கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு

சுட்டிபையன்
16-04-2007, 02:44 PM
ஊரில் பெரிய செல்வந்தர் ஒருவர் வசதியாக வீடு கட்டி வாழ்ந்து வந்தார். திடீரென ஒருநாள் அவர் தன் குடும்பம் சகிதம், அடுத்த வீதியிலுள்ள வேறொரு வீட்டுக்கு குடியேர ஆயத்தமானார்.

இதனைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவரது நண்பர் அவரிடம் சென்று "என்ன இப்படித் திடீரென வீடு மாறுகிறீர்கள்? இந்த வீட்டுக்கு என்ன குறை?" என்று ஆதங்கத்தோடு கேட்டார்.

"இந்த வீட்டில் இருப்பதால் சன்மார்க்கப் போதனைகளுக்கு முரணக வாழ வேண்டியுள்ளது. அதனால் தான் வேறு வீடு தேடினேன்" என்றர் செல்வந்தர்.

நண்பருக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு மார்க்க பக்தியுள்ளவராக இருக்கிறாரே இந்த மனுஷன் என எண்ணியவாறு "அதென்ன பிரச்சினை அப்படி?" என்று விளக்கம் கேட்டார்.

"உமக்குத் தெரியும்தானே! அண்டை வீட்டான் பசித்திருக்கையில் நாம் ஆடம்பரமாக உண்ணக்கூடாது என்று நமது மார்க்கம் சொல்கிறது. நமது அடுத்த வீட்டுக்காரனும் குடும்பமும் எந்த நாளும் பட்டினி கிடக்கிறார்கள். எனவே இந்த வீட்டிலிருந்து கொண்டு நாம் ஆடம்பரமாக உண்ணுவது ஆகாதல்லவா! அதனால்தான் வேறு வீட்டுக்குப் போகிறேன்" என்று உருக்கமாக விளக்கம் கொடுத்தார் செல்வந்தர்.

சுட்டிபையன்
16-04-2007, 02:45 PM
ஒருநாள் ஒரு வகுப்புல திருவிழா காரணமா வருகை குறைவா இருந்துச்சு. அந்த வழியே போன தலைமை ஆசிரியர் வகுப்பாசிரியர்கிட்ட விளக்கம் கேட்க, அவர் உண்மையைச் சொல்லிட்டார்.. கடுப்பான தலை. உள்ளே வந்து இவ்வாறு முழங்கினார்...

இன்னிக்கு ஸ்கூலுக்கு வராத பய எல்லாம் எழுந்து நில்லுங்க..!

----------------
கெமிஸ்ட்ரி வாத்தியார் ஒரு பொண்ணுக்கிட்ட கேட்டார்..

வாட் ஈஸ் நைட் ரேட்..?

சுட்டிபையன்
16-04-2007, 02:49 PM
ஒருவன் தனது நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தான். அவன் அப்போது வீட்டில் இல்லை. நண்பனின் மனைவியிடம் "ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா?" என்றான். நண்பனின் மனைவியும் எரிச்சலுடன் ஒரு கோப்பையில் சூடாக பால் கொண்டுவந்து கொடுத்தாள். உடனே அங்கிருந்த ஒரு நாய் இவனைச் சுற்றி வந்தது. இவனும் "பரவாயில்லையே இந்த நாய்க்கு என்னைத் தெரிந்திருக்கிறதே" என்றான். அதற்கு அவள் "நீங்கள் குடித்துக் கொண்டிருப்பது அதன் கோப்பையில்!" என்றாள்.

சுட்டிபையன்
16-04-2007, 02:53 PM
சித்தன்: நேற்று ரெயிலில் என்னால் சரியாக தூங்க முடியவில்லை.

நண்பர்: ஏன்

சித்தன்: எனக்கு அப்பர் பெர்த் தான் கிடைத்தது.

நண்பர்: நீ ஏன் கிழே இருப்பர்களிடம் பேசி மாற்றியிருக்கக்கூடாது?

சித்தன்: நான் இரவு முழுவதும் விழித்திருந்து கீழ் பெர்த்திற்கு யாராவது வருவார்கள், வந்தால் கேட்கலாம் என்று இருந்தேன், யாருமே வரவில்லை.

நண்பர்: ::D:P

சுட்டிபையன்
16-04-2007, 02:55 PM
ஜட்ஜ் புத்தன் பார்த்து,

"சரி நான் உனக்கு டைவோர்ஸ் கொடுக்கிறேன், ஆனால் உங்களிடம் 3 குழந்தைகள் இருக்கிறதே, அதை எப்படி பிரிப்பது?

புத்தன்: "அப்படியா, சரி அடுத்த வருடம் நாங்க டைவோர்ஸ் செய்துக் கொள்கிறோம்"

சுட்டிபையன்
16-04-2007, 02:55 PM
மாப்பு தன்னுடைய தோட்டக்காரனைப் பார்த்து ஏன் இங்கே நிற்கிறாய், செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது தானே?

வேலைக்காரன்: மழை பெய்கிறதே!

மாப்பு: அதனால் என்ன? குடை எடுத்துக் கொண்டு போ.

சுட்டிபையன்
16-04-2007, 02:56 PM
ஒருவர் புளோரிடாவில் கடற்கரையில் நடந்துபோய்கொண்டிருந்தார் அப்பொழுது அவருடைய காலில் ஒரு விளக்குதட்டுப்பட்டது அதனைகையிலெடுத்து உரசிப்பார்த்தார் அவர்முன்னே ஒரு புதம் தோன்றியது புதத்தைகண்டதும் அவர்அதிர்ந்து போனார் எனினும் சமாளித்துகொண்டு கேட்டார் யார் நீ
புதம்சொன்னது ஐயா நீங்களதானே என்னைஅழைத்தீர்கள்
நான் அழைத்தேனா?

ஆமாம் உங்கள்கையிலிருக்கும் விளக்கு யாரிடம் இருக்கிறதோ அவருக்கு நான் அடிமை விளக்கை நீங்கள் தேய்தால் உங்கள்முன்வருவேன் விளக்கு தற்பொழுது உங்களிடம் இருக்கிறது எனவே தற்பொழுது நான் உங்கள் அடிமை தற்பொழுது உங்கழுக்கு என்ன வேணும் என்று கேட்டது
ஓ அப்படியா என்றுவிட்டு தன்னுடைய மனதிலுள்ள நீண்டநாள் ஆசையை சொன்னார்

ஹவாய் தீவுக்கு நான் போகவேணும் ஆனால் பிளேனில் போக விருப்பம் இல்லை காரில் போகவேண்டும் எனவே இங்கிருந்த ஹவாய்க்கு போவதற்கு றோடு அமைத்துவிடுஎன்றார்

புதம் சொன்னது ஐயா றோடு போடுவதானால் மிகவும் சிரமம் ஐயா வேற ஏதாவது கேழுங்கள் என்றது
ஓஅப்படியா என்றுவிட்டு யோசித்தார் பின்னர் கேட்டார்
எனக்கு 4 மனைவிமார் ஆனாலும் இந்த பெண்களின் மனசை புரிந்துகொள்ளமுடியாமலிக்கி஼br />?து
எனவே பெண்களின் மனதை பரிந்து கொள்ள சக்தியை தாவென கேட்டார்

ஐயா ஹவாய்க்கு ஒருவழிப்பாதை வேண்டுமா இருவழிப்பாதை வேணுமா எனக்கேட்டு
பாதையை போட்டுகொடுத்துவிட்டு ஓடியே மறைந்தது

சுட்டிபையன்
16-04-2007, 02:56 PM
ஒரு இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தான். தன் காதலியை புதுமையாகத் தன் தாயிடம் அறிமுகம் செய்ய விரும்பிய அவன் தாயிடம்
''அம்மா நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். நான் அவளை உங்களிடம் அறிமுகம் செய்யப் போகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் மூன்று பெண்களை ஒரேயடியாகக் கூட்டிவருவேன். அவர்களுடன் ஒரு மணிநேரம் உரையாடிய பின் என்னுடைய காதலி யாரென்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்''
என்று சொன்னான்
தாயாரும் சம்மதம் தெரிவிக்கவே மூன்று பெண்களைக் கூட்டி வந்தான்
ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் விடைபெற்றுப் போனபின் அம்மா நீ என்னுடைய காதலியைக் கண்டுபிடித்து விட்டீர்களா? என்று கேட்டான்
தாயார் சற்றும் தாமதிக்காமல் சரியாக அவன் காதலி யாரென்று சொல்லவே ஆச்சரியப்பட்டவனாய் எப்படியம்மா சரியாகக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்க
தாயார் சொன்ன பதில்
'' வந்த மூன்று பெண்களிலும் அந்தச் பெண்ணைப் பார்க்கப் பார்க்கத் தான் எனக்குக் கோபம் கோபமாக வந்தது.
அதனால் அவள் தான் என்னுடைய மருமகள் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டேன்''

சுட்டிபையன்
16-04-2007, 02:56 PM
ஒரு ஊரில் ஒரு சாமியார், அந்த ஊரில் உள்ள எல்லாஆண்களையும் அழைத்து , பெண்டாட்டி பேச்சை கேட்பவர்கள் எல்லாரும் ஒரு பக்கம் நில்லுங்கள் என்றார். ஒரே ஒருவனை தவிர அனைவரும் ஒரு பக்கம் போய் விட்டனர் சாமியாருக்கு அந்த தனியாக நின்றவணை பார்த்து கொஞ்சம் சந்தோசம். அவனை கூப்பிட்டு விசாரித்தார் அதற்கு அவன் என் மனைவி கூட்டத்தோடு எப்போதும் சேர்த்து இருக்க கூடாது என சொல்லி உள்ளாள் என்றான்

சுட்டிபையன்
16-04-2007, 02:57 PM
இரண்டு இளம்பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தனர். அன்று காலை தொலைபேசி மணி அடித்தது. இதனால் விழித்து கொண்ட இளம் பெண்களில் ஒருவர் தொலை பேசியை எடுத்து பேசினார்.
மறுமுனையில் பேசிய ஆண், அவரை நலம் விசாரித்தார். அந்த பெண், தனது நலத்தை தெரிவித்து விட்டு, நீங்கள்யார் பேசுகிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு அந்த ஆண் குரல், நல்ல வினோதம். தந்தையின் குரலை கூட கண்டுபிடிக்கத்தெரியாத மகளாக இருக்கிறாயே என்றது.
அதற்கு இளம்பெண், அதைவிட வினோதம் மகளின் குரலை கூட தெரியாத தந்தையாக இருக்கிறீர்களே. நான் உங்கள் மகளின் தோழி பேசுகிறேன். அவள் இன்னமும் தூங்கி கொண்டிருக்கிறாள் என்று பதிலளித்தாள்

சுட்டிபையன்
16-04-2007, 02:57 PM
மனிதன் தனது மனைவியால் மிகவும் கஸ்டப் பட்டான். அவர் அவனுக்கு அடங்காமல் இவனை ஆட்டுவித்தாள்! இந்த உலகத்தில் பெண்களே இல்லாத இடத்திற்குப் போய் சந்தோஷமாக இருக்க போகின்ரேன். நான் பட்டது போன்ற வேதனையை என்மகனும் பட கூடாது என்று நினைத்து தனது ஒரே மகனையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போய்....

மனிதர்களே இல்லாத ஓர் தீவில் மகனுன் வாழ்த்து வந்தான். வருடங்கள் பல சென்றன. ஒரு நாள் ஒரு சிறிய கப்பல் அந்த தீவிற்கு வந்தது. அதிலே ஒரு குடும்பம் வந்திறங்கியது அதிலே ஓர் இளம்மங்கை ஒருத்தியும் இருந்தாள். தகப்பனும் மகனும் அங்கே (ஒடைகள் இல்லாது) வந்த போது அந்த மங்கை இவர்களைக் கண்டதும் பயத்தில் ஓ....வென்று கத்தியபடி ஓடத்தொடங்கினாள்.

அவள் ஓடிய சிறிது நேரத்தில் அந்த கப்பலும் இந்த தீவினை விட்டு போய்விட்டது. அப்போது மகன் தந்தையைப் பார்த்து கேட்டான்.

" நாங்கள் கண்டது என்ன அப்பா?"
"ஓ....அதுவா அது பிசாசு! அந்தப் பிசாசு எங்களைக் கொன்று இரத்ததைக் குடிக்கும்"

ஆ! அப்படியா என்று மகனும் பயத்துடன் கேட்டான்.

இரவு பாதி துக்கத்தில் மகன் சொன்னான்.

"அப்பா, அப்பா அந்த பிசாசு வடிவா இருந்தது என?

அப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சுட்டிபையன்
16-04-2007, 03:00 PM
வகுப்பில கெமிக்கல் பாடம் நடந்துகிட்டிருந்துது.
ஒரு பாத்திரத்தில கெமிக்கல் கலந்த நீரை நிரப்பி அதில 1 ருபாயை போட்டா அது கரையுமா கரையாதா?

"டேய் ராமு நீ சொல்லடா" என்றார் வாத்தியார்.

"கரையாது சார்" என்றான் ராமு.

"ஆக எப்படி ராமு இவ்வளா சரியா சொல்லுறாய்? கெமிக்கலோட தன்மையை வச்சுத்தானே?" என்றார் வாத்தியார்.

"ஒரு தன்மையையும் வச்சு இல்ல. எல்லாம் உன்னோட தன்மைய வச்சு தான். கரையிற 1 ருபாயா இருந்தால் நீ உள்ள போடுவியா"

சுட்டிபையன்
16-04-2007, 03:00 PM
ஆசிரியர்: "அன்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம். சோமு நீ சொல்லு"

"உங்க மகள் மேல நீங்க வச்சிருந்தா அது அன்பு சார். அதே அன்பை நான் வச்சிருந்தா அது காதல் சார்"

சுட்டிபையன்
16-04-2007, 03:04 PM
ஒருத்தன் சாக்கடையில விழுந்து எழும்பிட்டு பரிட்சைக்கு போனான்.
அவனோட பரிட்சை எழுதின எல்லாரும் நாத்தம் தாங்க முடியா மூக்கை போத்திக்கொண்டு எழுதினாங்க.

ஆசிரியர்: "ஏன்டா உனக்கு ஒழுங்க குளிச்சிட்டு வந்து எழுத தெரியாதா"

"எங்கப்பா தான் சார் சொன்னார் எல்லாரும் மூக்கு மேலை விரலை வைக்கிற மாதிரி பரிட்சை எழுதீட்டு வாடா என்டு"

சுட்டிபையன்
16-04-2007, 03:04 PM
"குழந்தை மணிக்கணக்கா அழுதிட்டிருந்திருக்கு.. இப்ப கொண்டு வந்திருக்கீங்களே?"
"அதுவும் என்னை மாதிரியே டி.வி. சீரியல் பார்த்து
அழுதிட்டிருக்காக்கும்னு இருந்துட்டேன்.. டாக்டர்!"

சுட்டிபையன்
16-04-2007, 03:04 PM
ஜானியின் நண்பன் ஒரு பிரச்னையோடு ஜானியிடம் வந்தான். ''இந்தப் பிரச்னையை நீதான் தீர்த்து வைக்கனும். நேத்து எங்க அம்மா ஒரு இளம் விதவையை எனக்கு அறிமுகப்படுத்தி அவளைத்தான் கல்யாணம் கட்டிக்கிறனும்னு சொல்றாங்க. அவகிட்ட ஏகப்பட்ட சொத்து இருக்கு. ஆளும் அழகா இருக்கா. ஆனா நான் எங்க வீட்டு வேலைக்காரியை காதலிக்கிறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ண நினைக்கிறேன். ஆனா என்ன பண்றதுன்னே தெரியல. நீ ஒரு வழி சொல்லு.'' ஜானி சொன்னான், ''நீ இரண்டு விஷயம் செய்யணும். ஒண்ணு உங்க வீட்டு வேலைக்காரியவே கல்யாணம் பண்ணிக்கனும். ஏன்னா காதலைவிட பெரிசு உலகத்தில எதுவுமே இல்லை.'' நண்பன் கேட்டான், ''இரண்டாவது விஷயம் என்ன?'' ஜானி அலட்டாமல் சொன்னான். ''அந்த விதவையோட அட்ரஸை எனக்குத் தா.''

சுட்டிபையன்
16-04-2007, 03:05 PM
நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்

டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்

நோயாளி: நான் நடக்கலாமா

டாக்டர்: நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க

நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.

டாக்டர்: தாராளமா

நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.

டாக்டர்: ம்..ஓட்டலாமே...

நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.

டாக்டர்: ......??????????

சுட்டிபையன்
16-04-2007, 03:05 PM
ஒரு மெக்கானிக் காரின் எஞ்சினை கழற்றி பழுது பார்க்கும்பொழுது அவ்வழியே அவ்வூரின் தலைசிறந்த இதயநோய் நிபுணர் வருவதைக் கண்டார்.
அவரிடம் சென்று " டாக்டர்! உங்ககிட்ட ஒரு கேள்வி. இங்க பாருங்க.. நானும் வண்டியோட இதயம், எஞ்சினை தான் பழுது பார்க்கிறேன். வால்வ் ரிப்பேர் பண்றேன். ஆனா ஒரே மாதிரி வேல பார்த்தும் உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கிடைக்குது?"

டாக்டர் சொன்னார்...

"எஞ்சின் ஓடும் போது பழுது பார்க்க முயன்று பார்..தெரியும்"

சுட்டிபையன்
16-04-2007, 03:05 PM
கறுப்பி. டொக்ரர் எனக்கு மற்றவர்கள் பேசுவது நன்றாக தெளிவாக கேட்கிறது ஆனால் பார்க்க முடியவில்லை

டொக்ரர். ஓ அப்படியா எவ்வளவு காலமாக உங்களிற்கு இந்த பிரச்சனை இருக்கு

கறுப்பி. போனிலை கதைக்கும் போது மட்டும் தான் டொக்ரர்.

டொக்ரர். ???????

சுட்டிபையன்
16-04-2007, 03:06 PM
அமெரிக்காவில ஒரு இடத்தில கணவனும், மனைவியும் சந்தோசமா வாழ்ந்து கொண்டு இருப்பீனம். வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருக்கும். ஆனால், கணவனுக்கு மாத்திரம் மனைவியில் ஒரு விடையம் பிடிக்காம இருக்கும். அதுவென்னவென்றா அவவுக்கு இவர் எப்போதும் புதுசு, புதுசா பரிசுகள் வாங்கிக் குடுத்துக்கொண்டு இருக்க வேணும். அதுவும் பிறந்தநாளென்றா சொல்லி வேலை இல்லை. கணவன் தனக்கு சரியான காசை செலவளித்து ஏதாவது வாங்கித்தராட்டி மனைவி வீட்டில ஒரே ரகளை தான்.

இப்பிடித்தான் ஒருமுறை மனைவிக்கு பிறந்தநாள் வரும் போது என்ன வாங்கிக்கொடுக்கலாம் எப்படி என்ற மனுசிய திருத்தலாம் என்று கணவன் யோசிச்சுக் கொண்டு இருக்கும் போது நல்ல ஒரு ஐடியா அவருக்கு வரும். அவர் இந்தமுறை வித்தியாசமான ஒரு பரிசை மனைவிக்குக் கொடுத்தார். அது என்ன வென்றா மிக அழகான விலை உயர்ந்த சவப்பெட்டி! மனைவியும் அழகாகவும் விலை உயர்ந்தும் சவப்பெட்டி இருந்ததால் அதைவாங்கி கவனமா ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்தா. இப்படியே நாட்கள் கடந்தது.

அடுத்த வருட பிறந்த நாளும் வந்தது. மனைவி இன்னும் தான் திருந்தவில்லை. கணவன் இந்தமுறை தனக்கு என்ன வாங்கித்தருவார் என்று கனவு கண்டு கொண்டு இருப்பா. பிறந்த நாளும் வந்தது. ஆனால் கணவன் இந்த முறை மனைவிக்கு ஒன்றும் வாங்கிக் கொடுக்கவில்லை. மனைவிக்கோ பேரதிர்ச்சி! கணவனைப் போய்க் கேட்பா, ஏன் தனக்கு ஒன்றும் வாங்கித்தரவில்லை என்று!

இதற்கு கணவன் ஆறுதலாக அமைதியாக இவ்வாறு பதில் சொல்வார்: "நான் போன வருசம் உனக்கு பிறந்த நாளுக்கு வாங்கித்தந்த பரிசையே நீ இன்னும் பாவிக்கவில்லை! அதற்குள் நான் எப்படி இன்னொரு புதிய பரிசை இந்த வருட பிறந்த நாளுக்கு வாங்கித்தர முடியும்?"

மனைவி இந்தப்பதிலைக் கேட்டு வாயடைச்சு நிற்பா! இதற்குப் பிறகு அவ ஒரு நாளும் பரிசுகள் கேட்டு கணவனை கஸ்டப்படுத்தாது சந்தோசமாக வாழ்வா!

புத்திசாலிக் கணவன்?

சுட்டிபையன்
16-04-2007, 03:09 PM
காமெடி படம் பார்க்க ஒரு ஸீட் தள்ளி உங்க மனவிய உட்கார வெச்சிருக்கீங்களே, ஏன்?
சொந்தப் பிரச்சனையத் தள்ளிவெச்சுட்டு,
கொஞ்ச நேரம் சிரிக்கலாமேன்னுதான்!

சுட்டிபையன்
16-04-2007, 03:09 PM
டாக்டர்! நீங்க தெய்வம்!
ரொம்ப தேங்க்ஸ்!
தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க.
நீங்களும் நின்னுகிட்டுதானே ஆபரேஷன்
பண்றீங்க, அதான் தெய்வம்னேன்!

சுட்டிபையன்
16-04-2007, 03:10 PM
தலவர் ஜெயிச்சா, நூத்தியெட்டு தேங்காய் உடக்கிறதா சாமிகிட்ட வேண்டி இருக்காரு!
தோத்ப்போனா?
நூத்தியெட்டு சோடா பாட்டில் உடப்பாராம்

சுட்டிபையன்
16-04-2007, 03:10 PM
ம்... இன்னைக்கு எவன்
மண்டையைப் போடப் போறான்னு தெரியலை..!

இதோ பாருங்க சிஸ்டர்... ஆபரேஷன்
தியேட்டர்ல நின்னுக்கிட்டு இப்படியெல்லாம்
மெகா சீரியலைப் பத்திப் பேசக் கூடாதுன்னு
எத்தனை தடவை சொல்றது...?

சுட்டிபையன்
16-04-2007, 03:10 PM
போர்க்களத்தில் முள் குத்தியதால்
மன்னர் துடிக்கிறார்!

யாரிடமாவது குண்டூசி வாங்கி
முள்ளை எடுப்பதுதானே?

வேண்டாம். போர்க்களத்தில்
பின்வாங்கினோம் என்ற
அவப்பெயர் வந்துவிடும்!

சுட்டிபையன்
16-04-2007, 03:11 PM
தமிழனின் பெருமை

நபர்1- அடேய் தமிழனின் பெருமை உனக்கு என்ன தெரியும் அந்தக்காலத்திலேயே நீராவியில புட்டு,இடியப்பம் அவிச்சாக்கள் நாங்கள்

நபர்2- ஓம் எனக்கு தெரியும் வெள்ளைக்காரன் நீரவியை வச்சு கப்பல் ஒட்டீட்டான் ரயில் ஒடீட்டான் எங்கட சனம் இன்னும் புட்டும் இடியப்பமும் அவிக்குது

சுட்டிபையன்
16-04-2007, 03:11 PM
சர்தாஜி ஒருவர் - ஏப்ரல் ஓராம் திகதியில...
அதுதாங்க - முட்டள்கள் தினம்...

இன்னிக்கு -யாரையாவது ஏமாத்தணும் என்னு நினைச்சாராம்........
ஒரு பஸ்ல ஏறினாராம்...
இந்த ஊருக்கு போகணும் - டிக்கட் கொடுன்னு- நடத்துனர்கிட்ட கேட்டாராம்!
அவரும் கொடுத்தாராம்!

உடன சர்தாஜி விழுந்து விழுந்து சிரித்தாராம்...

நடத்துனரர்: ஏன் இப்பிடி சிரிக்கிறீங்க?
சர்தாஜி: நல்லா ஏமாந்திட்டியா- எங்கிட்டதான் - பஸ் பாஸ் இருக்கே!!

சுட்டிபையன்
16-04-2007, 03:12 PM
ஒரு பல் வைத்தியரிடம் ஒரு பிரஞ்சுக்காரன் வைத்தியம் பார்த்துவிட்டு காசு கொடுக்கும் போது, நான் பிரஞ்சுக்காரனிடம் காசு வாங்கு வதில்லை என்று வைத்தியர் கூறினார் அடுத்த நாள் வைத்தியர் மருத்துவமனைக்கு வரும்போது ஒரு விலை உயர்ந்த வைன் போத்தல் மருத்துவமனை வாயிலில் கிடந்தது.

அடுத்த நாள் ஒரு முஸ்லீம் வைத்தியம் பார்த்துவிட்டு காசு கொடுக்கும் போது, நான் முஸ்லீமிடம் காசு வாங்கு வதில்லை என்று வைத்தியர் கூறினார் அடுத்த நாள் வைத்தியர் மருத்துவமனைக்கு வரும்போது ஒரு கூடை மாட்டிறைச்சி பிரியாணி மருத்துவமனை வாயிலில் வைக்கப் பட்டிருந்தது

அதற்கு அடுத்த நாள் ஒரு பிராமணன் வைத்தியம் பார்த்துவிட்டு காசு கொடுக்கும் போது, நான் பிராமணனிடம் காசு வாங்கு வதில்லை என்று வைத்தியர் கூறினார் அடுத்த நாள் வைத்தியர் மருத்துவமனைக்கு வரும்போது பல பிராமணர்கள் மருத்துவமனை வாயிலில் இலவசமாக மருத்துவம் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

சுட்டிபையன்
16-04-2007, 03:12 PM
குடிகாரன் ஒருவனிடம் ஒருவர் போய்கேட்கிறார் ஏன் அண்னை நீங்க குடிச்சு குடிச்சு உடம்பை கெடுகிறீங்க என

அதுக்கு குடிகாரன் சொன்னான் ஒரே கவலை தம்பி என
அப்படி என்ன கவலை என அவர் கேட்க அவர் சொன்னாராம் இப்படி குடிச்சு குடிச்சு உடம்பை கெடுக்கிறன் என கவலைதான் தம்பி எண்டானாம் அந்த குடிகாரன்

சுட்டிபையன்
16-04-2007, 03:13 PM
ஆங்கில ஆசிரியர் ஒருவர் வகுப்பில் Discover கும் Invention வேறுபாட்டை பின்வருமாறு விளக்கினார் அவர் அதனை விளக்கும் பொருட்டு கொலம்பஸ் Discovered America எனவும் கிரகம் பெல் Invented telephone எனவும் விளக்கினார் அதன் பின் ஒரு மாணவனை இவ்விரு வசங்களையும் வைத்து வசனம் இரண்டு அமைக்கும் படி வேண்டினார் அதற்கு அம் மாணவன் நான் ஒரு வசனத்தில் அமைக்கவா என கேட்டபோது அசிரியர் மிக்க சந்தோசத்தில் என்னைவிட என் மாணவன் இவ்வளவு புத்திசாலியாக இருகிறானே எங்க சொல்லு பாப்பம் என்றார் அதற்கு அம் மாணவன் my father discovered my mother and invented me என்றான்

மனோஜ்
16-04-2007, 04:14 PM
ஒரே நாளில் 66 பதிவுகள் அதும் வறுவலிக்க சிறிக்க வாழ்த்துக்கள்

சுட்டிபையன்
17-04-2007, 01:09 PM
தமிழ் வாத்தியார் - மூன்று காலங்களுக்கும் உதாரணம் சொல்லு பார்க்கலாம்.

மாணவன் - நோற்று உன்கள் மகளை பார்த்தோன் - இது இறந்த காலம்
இன்று உங்கள் மகளை காதலிக்கிறோன் - நிகழ்காலம்
நாளை உன்கள் மகளை இழுத்துக் கொண்டு ஓடப்போகிறோன் - எதிர் காலம்.
ஆசிரியர் - ???

சுட்டிபையன்
17-04-2007, 01:10 PM
ஆசிரியை: நான் இப்ப ஒரு புகையிரத்தக் (ரெயின்) கணக்கு போடுறன் எல்லோரும் விடை சொல்லனும் என்ன..?!

மாணவர்கள்: ஓம் ரீச்சர்.

ஆசிரியை: இதோ இந்த பிளக் போட்டில இருக்கே இதுதான் கணக்கு.. 2 நிமிசம் தாறன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்..

இரண்டு நிமிடத்தின் பின்..

மாணவர்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல முந்தியடிச்சுக் கொண்டிருக்க ஒருவன் மட்டும் மெளனமா இருந்தான்..

அவனிடம் ..

ஆசிரியை : என்னடா.. எல்லாரும் பதில் சொல்லுறாங்க நீ மட்டும் மெளனமா இருக்கே.. எங்க காட்டு உன் பதிலை..

மாணவன்: நீங்க கணக்குப் போட்டு ஒரு நிமிசத்திலேயே ரெயின் புறப்பட்டுப் போயிட்டு ரீச்சர்.. அதுதான் யோசிச்சிட்டு இருக்கன்.. எப்ப அடுத்த ரெயின் வருமென்று.

சுட்டிபையன்
17-04-2007, 01:10 PM
(கலவன் பாடசாலை ஒன்றில்....)

ஆசிரியர் : டேய் எழுவாய் செயற்படுபொருள் பயனிலை வைச்சு ஒரு வாக்கியம் சொல்லு பார்க்கலாம்..?!

மாணவன் : நான் வதனியைக் காதலிக்கிறேன்.

சுட்டிபையன்
17-04-2007, 01:11 PM
ஆசிரியர்: தேவை + ஆ + நீ இதை சேர்த்துச் சொல் பார்க்கலாம்..

மாணவன்: சார் நீங்க தேவயாணி fan ஆ.. நானும் தான் சார்

சுட்டிபையன்
17-04-2007, 01:11 PM
மாணவன் ஒருவன் வகுப்பறையின் மூலையை காலால் உதைந்து கொண்டிருந்தான்..அப்போ வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் அவனிடம்..

ஆசிரியர் : ஏண்டா மூலைக்கு போட்டு உதையுறா..

மாணவர் : கோனர் கிங் (Corner kick) பழகுறேன் சார்.

சுட்டிபையன்
17-04-2007, 01:11 PM
ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து..

நான் உங்கள் மதியூகங்களை செக் பண்ணப் போறேன்...

ஆசிரியர் கேள்வி கேட்டதும் பையங்கள் விழுந்தடிச்சுப் பதில் சொல்லிக்கிட்டே இருந்தாங்க..

ஒருவன் மட்டும்.. மெளனமா..

ஆசிரியர் அவனிடம் : என்ன உன் பதிலைக் காணேல்ல..

மாணவன்: நீங்க தானே சார் மதியை ஊகிக்கச் சொன்னிங்க.. அதுதான் மதி எப்படி இருப்பாளுன்னு ஊகிச்சிட்டு இருக்கன்.

சுட்டிபையன்
17-04-2007, 01:12 PM
காதலன்: டார்லிங் ஆப்பு ஆப்பு என்றாங்களே அப்படின்ன என்னென்று தெரியுமா..?!

காதலி: கொஞ்சம் பொறுங்க... இன்னும் கொஞ்ச நாளில நானே காட்டிறன்..!

சுட்டிபையன்
17-04-2007, 01:12 PM
காதலன்: டார்லிங் உலகிலேயே.. நீ தான் பேரழகி..

காதலி: ஏங்க எப்ப உங்க பார்வை கெட்டது..!

சுட்டிபையன்
17-04-2007, 01:12 PM
காதலன்: சிரிச்சு சிரிச்சுப் பேசுற அழகே அழகுடி உனக்கு..

காதலி: அதுதான் பைத்தியமுன்னு தெரிஞ்சும் லவ் பண்ணினீங்க போல

சுட்டிபையன்
17-04-2007, 01:13 PM
காதலன்: உன் மேசேஜைப் (Message) பார்த்து பயந்து போனே..

காதலி: உங்க இமேஜை (image) தானே அனுப்பி இருந்தே..!

சுட்டிபையன்
17-04-2007, 01:13 PM
காதலி: ஏங்க..நீங்க மெகா(Mega) பொய்யெல்லாம் சொல்லுறீங்க..

காதலன்: நீ எப்பிசொட்டா (Episode) சொன்னதை சேர்த்து வைச்சு சொல்லுறன்..!

சுட்டிபையன்
17-04-2007, 01:13 PM
மகன் - அப்பா போம் எல்லாம் நிரப்பிட்டன். ஆனால், மதர் ரன்க் (தாய் மொழி - அம்மாவின் நாக்கு), என்ன போடுறது அப்பா?

அப்பா - கொஞ்சம் நீளம் என்று போடு.

சுட்டிபையன்
17-04-2007, 01:14 PM
கால்பந்தாட்டம் பார்க்க நேர்ந்த ஒரு குப்பத்தவர் அதை விபரிக்கும் போது..

நைனா.. நா இன்னு ரவுணுக்கு போயிருந்தே... அங்குனா ஒரு பெரிய கிரவுண்டு.. அப்பாட்மெண்டு கட்டிக்க வெட்டின்னாப் போல இருந்திச்சு.. அங்கினை ஆக்க குழுமிட்டு இருந்தாய்ங்க.. என்னா நடக்குன்னு லுக்கு விட்டா.. பால் ஒன்னுக்கு சண்டை பிடிக்கிறாய்ங்கப்பா.. மொத்தம் ஒரு 24 பேர் இருப்பாய்ங்க.. ஆளை ஆளு தள்ளிவிட்டிட்டு ஓடி ஓடி பால விரட்டுறாய்ங்க.. யாரும் பிடிச்சுக்கிறதா தெரியல்ல.. மக்குப் பசங்கப்பா.. பால் கைகிட்ட வந்து.. காலால தட்டி விட்டிறாய்ங்க..இடைல பொலீசிக்காரிய்ங்க அரை றாயரோட நின்னு விசில் ஊதிட்டே இருக்காய்ங்க. யாரையும் நிறுத்திக்கிறதா தெரியல்லப்பா. மாமூல் வாய்ங்கிருப்பாய்ங்க போல.... அத்தின பசங்களும் அரை ராயரல தாப்பா.. நம்ம முனுசாமி பெரியசாமி சின்னப் பசங்களாட்டம்..பாலை விரட்டிறாய்ங்க.. யாருக்கும் வித்தியாசமே தெரியல்லப்ப..பொலீசு எது..பசங்க எதுண்ணு..அவனுல ஒருத்த நெற்று போல ஒரு கூட்டுய்க்க பால ஒளிக்கிறாப்ப.. காலால தட்டிட்டு கூச்சல் போடுறாப்பா.. படு பேமாளி போல இய்ப்பாங்க போல இயிக்கூ.. பால் அப்படியே தெரியுதுப்பா..நெற்றுக்கால.. அதுக்கு இன்னொருத்த.. கையில கவுறு எல்லாம் போட்டிருய்க்கா.. அவனு.. பால்ல ஊத்த பட்டிட்டின்னு தூக்கி வீசிறாப்பா.. மற்றவைய்ங்க அதையும் விட்டு விரட்டிறாய்கப்பா..பார்க்க பேஜராப் போய்ச்சுப்பா.. என்னா ரவுனு பொலிசு..பைசங்க.. ஒரு பாலுக்கு இம்புட்டு சண்டையான்னு சலிச்சுட்டே வந்திட்டேப்பா..!

சுட்டிபையன்
17-04-2007, 02:24 PM
எங்க மேனேஜர் பத்திரிகை சுதந்திரத்தை பறிச்சுட்டாரு.....

எப்படி?

அலுவலகத்தில யாரும் புத்தகம் படிச்சா திட்டுறாரே......

சுட்டிபையன்
17-04-2007, 02:24 PM
பரவாயில்லையே.. உங்க ஆபிஸிலிருந்து சம்பளத்தை வீட்டுக்கே கொண்டு வந்து தர்றாங்களே....

ஆபிஸில கொடுத்தா தூக்க கலக்கத்துல எங்கேயாவது விட்டுவோம்னு பயம்தான்

சுட்டிபையன்
17-04-2007, 02:24 PM
முப்பது பெட்ரூம் கொண்ட பிளாட் ஏதவது வாடகைக்கு இருந்தா சொல்லுங்க....

எதுக்குங்க...

எங்க ஆபிஸுக்குதான்.....

சுட்டிபையன்
17-04-2007, 02:25 PM
பொங்கல் முதல் அந்த ஆபிஸில புது வசதி செஞ்சுருக்காங்களாமே.....

ஆமாம். லஞ்சப்பணத்தை கிரெடிட் கார்டு மூலம் தரலாமாம்

சுட்டிபையன்
17-04-2007, 02:25 PM
நேத்துதான் ஆஸ்பத்திரியிலே இருந்து டிஸ்சார்ஜ் ஆனிங்க... அதுக்குள்ளே ஆபிஸ் வந்துட்டீங்க???????

டாக்டர் ஒருமாசம் எந்த வேலையும் செய்யாம ரெஸ்ட் எடுக்க சொன்னாரு......

சுட்டிபையன்
17-04-2007, 02:25 PM
ஏம்பா... டைப்பிஸ்ட் லதா மடில படுத்து தூங்குறீயாமே????????

நீங்க தானே சார்.. மேஜை மேல படுத்து தூங்கக்கூடாதுன்னீங்க.....

சுட்டிபையன்
17-04-2007, 02:25 PM
புதுசா ஆபிஸ்ல சேர்ந்துருக்கீங்க... உங்களை பத்தி சொல்லுங்க...

நான் தூங்கும்போது குறட்டை விடமாட்டேன். ஆனா பாதி தூக்கத்தில யாராவது எழுப்பினா பயங்கர கோபம் வந்திடும்.

சுட்டிபையன்
17-04-2007, 03:33 PM
டேய் என்ன தேர்வுல '0' வாங்கியிருக்க

அப்பா அது '0' இல்லப்பா நான் நல்லா படிக்கிறேனு "ஓ" போட்டு இருக்காங்க

சுட்டிபையன்
17-04-2007, 03:34 PM
ஆசிரியர் : உனக்கு பக்கத்துல ஒருத்தன் தூங்குறானே அவன எழுப்பி விடு

மாணவன் : தூங்க வைக்கிறது நீங்க எழுப்பிவிடுறது நானா?

சுட்டிபையன்
17-04-2007, 03:34 PM
ஆசிரியர் : நேத்து எது வரைக்கும் பாடம் நடத்தினேன்

மாணவன் : பெல் அடிக்கிற வரைக்கும்

சுட்டிபையன்
17-04-2007, 03:35 PM
ஆசிரியர் : மாணவன் 10 சாக்லெட் இருக்கு அதை உமாவுக்கு 3 ராதாவுக்கு 3 சுதாவுக்கு 3 கொடுக்கிற இப்ப உனக்கு என்ன கிடைச்சிருக்கும்.

மாணவன் : எனக்கு புதுசா 3 கேர்ள் பிரண்ட் கிடைச்சிருக்கும்

வெற்றி
19-04-2007, 12:25 PM
ரெட்டை வாழைப்பழத்தை வாங்கிட்டு வந்து சர்ஜனிடம்
தந்திருக்கக் கூடாது..."

"ஏன்?"

"சர்ஜரி பண்ணி ரெண்டையும் தனித் தனியா பிரிக்கப்
போறாராம்..தியேட்டர் ரெடி பண்ணச் சொல்றார்..!"

வெற்றி
19-04-2007, 12:26 PM
"சரவணபவன் ஓட்டல் பார்சல் செக்ஷன்ல வேலை
செய்றவர் நிறைய ஜோக் அடிக்கிறார்..."

"அப்படின்னா கெட்டி சட்னி வச்சு ரெண்டு ஜோக்கைப்
பார்சல் கட்டி வாங்கிட்டு வா..."

வெற்றி
19-04-2007, 12:27 PM
"புல்லானாலும் புருசன்னு என் பொஞ்சாதிகிட்ட சொன்னது
தப்பு.."

"ஏன்? என்ன ஆச்சு?"

"வாயால திட்டிட்டு இருந்தவ இப்ப அரிவாளைத் தூக்கிட்டு
நிக்கறா.."

வெற்றி
19-04-2007, 12:28 PM
டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?

நோயாளி: : பரவாயில்லை. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!

வெற்றி
19-04-2007, 12:30 PM
''என்னய்யா இது சைக்கிளில் முன் சீட்டில் உள்ள குழந்தையை இப்படியா கிள்ளிக் கிள்ளி அழவைப்பது?''

''என்னங்க பண்றது. என் சைக்கிளில் பெல் இல்லையே!''

சுட்டிபையன்
26-04-2007, 12:28 PM
கிஷோ : என்னாங்க இது கல்யாணத்துக்கு வந்த எல்லாரையுமே ஒரேயொரு
கோப்பையில சாப்பிடச் சொல்லுறாங்களே..
ஓவியன் : என்ன செய்ய சாப்பாட்டுக் கோப்பையை வாங்கி வாங்கன்னா பரம்ஸ்மாமனாரு சற்லைற் கோப்பையை வாங்கி வந்துட்டாரே. :D

சுட்டிபையன்
26-04-2007, 12:29 PM
ஒருவர் : என்னாங்க பெரியவர் கிறடிட்காட் மோசடியில மாட்டியிட்டாராமே ?

மற்றவர் : பாவம்.. வயசானவரு கிரடிட்காட் என்னு நெனச்சு சற்லைற் தொலைக்காட்சி பாக்கிற காட்டை பாங் மொசீனில போட்டுட்டாரு..

சுட்டிபையன்
26-04-2007, 12:30 PM
கிரிக்கட் ரசிகர் : என்னங்க இது... சுழல் பந்துவீச்சை.. சுழல் குண்டுவீச்சுன்னு வர்ணிக்கிறாரே அறிவிப்பாளர்..

மற்றவர் : மன்னிச்சுக்கிங்க.. செய்திப் பிரிவில இருந்தவரை மாற்றி விளையாட்டு பிரிவுக்கு அனுப்பியிட்டாங்க..

சுட்டிபையன்
26-04-2007, 12:31 PM
ஒருவர் : குழந்தை பிறந்திருக்கிறது மறுபிறவிதான்.. போன பிறவியிலேயும் இங்கதான் பிறந்திருக்குன்னு எப்பிடி அவ்வளவு உறுதியா சொல்லுறீங்க..

மற்றவர் : அட... முற்பிறவியில சாகிற அன்னைக்கு எத்தினையாவது எபிசொட்ஸ் பாத்துட்டு செத்தேன்னு கரொக்டா சொல்லுதே.. இதைவிட வேறென்ன ஆதாரம் வேணும்?

சுட்டிபையன்
26-04-2007, 12:32 PM
ஒருவர் : எதுக்கு செய்தி வாசிக்கிறவரு பொறுக்க முடியாது விட்ட எழுத்தில இருந்தே யுத்தத்தை ஆரம்பிக்கப் போறாங்கன்னு உறுதியா சொல்லுறாரு..

மற்றவர் : அவரு முந்தி பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தியிட்டிருந்தவரு

சுட்டிபையன்
26-04-2007, 12:32 PM
ஒருவர் : எதுக்காக தொலைக்காட்சியை போஸ்ட் ஆபிசிலே வைச்சு ஒளிபரப்புறாங்க..?

மற்றவர் : அனுப்புற நிகழ்ச்சிகள் எல்லாமே போஸ்டில தொலையுறதால போஸ்ட் ஆபிசுக்கே வந்துட்டாங்க..

சுட்டிபையன்
26-04-2007, 12:33 PM
ஒருவர் : எதுக்கு நிகழ்ச்சி முன்னோட்டம்னு போடுறாங்க.. ?

மற்றவர் : பாக்கிறவங்க முன்னாடியே எழுந்து ஓடிப்போயிடுங்கன்னு சொல்லாமல் சொல்லுறாங்கப்பா..

சுட்டிபையன்
26-04-2007, 12:35 PM
ஒருவர் : கல்யாண வீட்டுக்கு வந்தவங்க ஒருத்தர் முகத்தை மற்றவங்க பாக்காமலே திரும்பித் திரும்பி எங்கேயோ பாத்துக்கிட்டு இருக்காங்களே என்னாச்சு ?

மற்றவர் : இந்தப்பக்கமா திரும்பியிருக்கிறவங்க மடார் ரீவி ரசிகர்கள், அவங்கள பாக்காம அந்தப்பக்கமா திரும்பி இருக்கிறவங்க குடார் ரீவி ரசிகர்கள் எப்படிப் பாப்பாங்க.. ?

சுட்டிபையன்
26-04-2007, 12:37 PM
ஒருவர் : தொலைக்காட்சி பாக்கிறவங்க எல்லாருமே எதுக்காக ஒரே நேரத்துpல பூதக்கண்ணாடிய மடியில இருந்து எடுக்கிறாங்க.. ?

மற்றவர் : திரைப்படம் ஆரம்பமாகப் போவுது... கிளியரா இருக்கணுமில்லே..

சுட்டிபையன்
26-04-2007, 12:37 PM
ஒருவர் : அழுவுறதுக்கே ஆளில்லாம பிணம் நடு வீட்ல கிடக்குதே.. வீட்டுக்காரங்க எங்கையா.

மற்றவர் : சாரி... தொடர் நாடகம் பாக்கப் போயிருக்காங்க.. ஜஸ்ட் அரை மணி நேரந்தான்.. மறுபடியும் வந்து அழுகையை ஆரம்பிச்சிடுவாங்க

சுட்டிபையன்
26-04-2007, 12:38 PM
ஒருவர் : பொண்ணு மாப்பிள எல்லாம் ஒரே ஜாதிதான்.. அப்புறமா எதுக்கு பெத்தவங்கள வராம விட்டாங்க ?

மற்றவர் : பெண்ணு அந்த ரீ.வீ குறூப் மாப்பிள இந்த ரீ.வீ குறூப் பெத்தவங்க எப்படி வருவாங்க ?

சுட்டிபையன்
26-04-2007, 12:39 PM
ஒருவர் : அறிவிப்பாளரே முதலாவது பாட்டுக்கு நாலுபேருதான் வாக்களிச்சிருக்காங்க.. நீங்க நாலாயிரம் பேருண்ணு சொல்லுறீங்களே..

அறிவிப்பாளர் : இது சீரோ சீரோ சீரோ ரீவீ எப்பவுமே மூணு பூஜ்ஜியத்த அருகில போட்டுக்குவோம்

சுட்டிபையன்
26-04-2007, 12:39 PM
ஒருவர் : என்னங்க இது அந்தக் கிரடிட் நிறுவனத்தில மட்டும் ஜனங்கள்ளாம் கடன் கேட்டு வரிசையில நிக்கிறாங்க..

மற்றவர் : அது எபிசொட் கிரடிட் நிறுவனம் வாங்கின கடன எப்ப கொடுத்து முடிக்கனும்னு அவசியமில்லே நீட்டிக்கிட்டே போகாலாம்..

சுட்டிபையன்
29-04-2007, 06:01 AM
சர்தார்ஜியும் அவரது காதலியும்...

காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..

சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!

சுட்டிபையன்
29-04-2007, 06:02 AM
மேனேஜர் : சர்தார், நீங்க பொறந்தது எங்க ?

சர்தார்ஜி : பஞ்சாப்ல சார்..

மேனேஜர் : சரி பஞ்சாப்ல எந்த பார்ட் ?

சர்தார்ஜி : கை, கால்னு எல்லா பார்ட்டும் பஞ்சாப்ல தான் சார் பொறந்தது...

சுட்டிபையன்
29-04-2007, 06:03 AM
சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...

சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது

சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்

சுட்டிபையன்
29-04-2007, 06:04 AM
நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...

காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...

இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...

சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?

சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...

சி.இ.ஓ : ஙயே !!

சுட்டிபையன்
01-05-2007, 06:38 AM
கணவன்; : என்ன மீன் கொழம்பு வழமையை விட 20 வீதம் அதிகமா உறைப்பா இருக்கே?

மனைவி : ஆமா.. இப்ப ஒரு பக்கட் கறிப்பவுடர் வாங்கினா 20 வீதம் அதிகமா கொடுக்கிறாங்க

சுட்டிபையன்
01-05-2007, 06:38 AM
ஒருவர் : எதுக்காக சுவத்தில ஒட்டியிருக்கிற பெண்ணு படத்தைப் பாத்து ஐ லவ் யூ ஐ லவ் யூ என்னு சொல்லுறாரு ?

மற்றவர் : அவர் ஒரு நேயர் விருப்பம் ரசிகர்.. அறிவிப்பாளர் பிம்பத்தைப் பார்த்தே ஐ..லவ்..யூ சொல்லிப் பழகினவரு..

சுட்டிபையன்
01-05-2007, 06:38 AM
ஒருவர் : என்னாங்க ஜோதிடர் எல்லா ராசிக்காருக்குமே இந்த ஆண்டு அறுவடை அமோகமா இருக்கும்னு சாதகம் சொல்லுறாரே..

மற்றவர் : ஆமா.. அவரு தொலைக்காட்சிக்கு சாதகமா பாக்கிறாரு..

சுட்டிபையன்
01-05-2007, 06:38 AM
மனைவி : எதுக்கு தொலைக்காட்சிய பாத்து கண்ணக் கண்ண கூசுறீங்க.. ?

கணவன் : அதில சூரியன் படம் போட்டிருக்காங்களே அதுதான்

சுட்டிபையன்
01-05-2007, 06:41 AM
ஒருவர் : காலையில பட்டினி கிடக்கிறவங்களுக்காக கண்ணீர் விட்டு பிரசங்கம் பண்ணினாரே அதே ஆள் இப்ப சமையல் நிகழ்ச்சிக்கு வந்திருக்காரே..

மற்றவர் : பசியில் இருப்பவங்களுக்குத்தான் ருசி தெரியாது.. அதுதான்.. சமைக்க வந்திருக்காரு..

சுட்டிபையன்
01-05-2007, 06:41 AM
நேயர் : உங்க தொலைக்காட்சி இணைப்பைப் பெற நாம என்ன செய்யணும் ?

மற்றவர் : மற்றத் தொலைக்காட்சியின் இணைப்பை அறுத்துக்கணும்

சுட்டிபையன்
01-05-2007, 06:43 AM
ஒருவர் : எதுக்கு நிகழ்ச்சியில அடிக்கடி பிரேக் கொடுக்கிறாங்க.. ?

மற்றவர் : ஸ்பீட் கொன்ரோலர் தூரத்தில நிக்கிறாரு போல

சுட்டிபையன்
01-05-2007, 06:44 AM
திருடன் 01 : அதந்தத் தொலைக்காட்சியில மிளகாய்த் தூள் விளம்பரத்துக்கு ஆடின பொண்ணுங்க இங்க அதே ஆட்டத்த தங்க நகை விளம்பரத்துக்கு ஆடுறாங்களே..?

திருடன் 02 : மிளகாய்தூள வீசினா பணம் கொடுக்காமலே தங்க நகையை எடுத்துக்கலாமின்னு சொல்லாம சொல்லுறாங்க..

சுட்டிபையன்
01-05-2007, 06:44 AM
ஒருவர் : நிகழ்ச்சி நடக்கும் போது நடுவில் முகமூடித் திருடன் வந்திருக்கிறானே எதுக்கு ?

மற்றவர் : நடக்கிறது தங்க வேட்டைன்னு அறிவிச்சது தப்பாப் போச்சு.

சுட்டிபையன்
01-05-2007, 06:44 AM
ஒருவர் : எதுக்காக உங்க தொலைக்காட்சியில தியாகராஜ பாகவதர் பாடல்களையே ஒளிபரப்பு செய்யுறாங்க.. ?

மற்றவர் : நடத்துறவங்கங்கள தொடர்ந்து மாத்தாமலே வைச்சிருக்காங்க என்ன செய்ய...

சுட்டிபையன்
01-05-2007, 06:44 AM
ஒருவர் : எதுக்கு பணம் வாங்காமலே ஒளிபரப்பு செய்யிறாங்க..

மற்றவர் : அவங்க அடுத்த அலைவரிசையை பாக்கிறவங்களுக்கு பணம் கொடுக்கப் போறாங்க, அதுக்காக இப்பவே இலவசமா விடுறாங்க..

சுட்டிபையன்
01-05-2007, 06:47 AM
ஒருவர் : எதுக்காக காட்டை புதுப்பியுங்க காட்டை புதுப்பியுங்கன்னு அறிவிப்பாளர் கத்துறாரு..

மற்றவர் : காட்டை புதுசா வைச்சிருந்தா அவங்க நிகழ்ச்சியை பாக்கிறவங்களுக்கு காட்அற்றாக் வராம இருக்கணும்னு நினக்கிறாங்கபோல..

சுட்டிபையன்
01-05-2007, 06:48 AM
ஒருவர் : என்னாங்க இது புத்துல இருந்து வெளியவந்த முனிவரு பாஞ்சாலி சின்னத்திரை தொடர் முடிஞ்சுதான்னு கேக்கிறாரே..

மற்றவர் : பேசாம ஒரு லட்சத்து ஐம்பாதியிரத்து முன்நூற்றி ஏழாவது எபிசொட்ஸ் போய்க்கிட்டிருக்கின்னு சொல்லியிடுறது தானே.. ?

சுட்டிபையன்
02-05-2007, 04:03 PM
சட் ரூமில் அதிகம் பாவிக்கும் வசனங்கள்

http://img95.imageshack.us/img95/1912/faceeh3.jpg
http://img87.imageshack.us/img87/8133/appakn8.jpg
http://img87.imageshack.us/img87/9447/dontul5.gif
http://img87.imageshack.us/img87/2057/lovekb8.jpg
http://img87.imageshack.us/img87/6883/testingdg9.gif
http://img300.imageshack.us/img300/4551/mailqp1.gif
http://img87.imageshack.us/img87/2434/paisarj5.jpg
http://img300.imageshack.us/img300/8230/sponsorpr3.jpg
http://img241.imageshack.us/img241/1259/tamilmz8.jpg
http://img300.imageshack.us/img300/6002/maasamcd5.jpg

மனோஜ்
02-05-2007, 04:31 PM
சாட் ரூம் வாழ்க்கை ரூம் ஆயிடும் பொல வருங்காளத்தில்
அனைத்தும் அருமை சுட்டி

சக்தி
02-05-2007, 05:27 PM
ஆசிரியர்: தீட்சிதர் படைப்புகளிலே உனக்கு பிடித்தது எது?
மாணவர்: மாதுரி தீட்சித் சார்

ஓவியன்
06-05-2007, 11:47 AM
ஆசிரியர்: தீட்சிதர் படைப்புகளிலே உனக்கு பிடித்தது எது?
மாணவர்: மாதுரி தீட்சித் சார்

பையன் நம்ம ஆளு போல,,,,,,,,,,,,:icon_03:

சுட்டிபையன்
06-05-2007, 03:51 PM
சாட் ரூம் வாழ்க்கை ரூம் ஆயிடும் பொல வருங்காளத்தில்
அனைத்தும் அருமை சுட்டி
நன்றி அண்ணா


பையன் நம்ம ஆளு போல,,,,,,,,,,,,:icon_03:

சத்தியமா நன் இல்லை:sport-smiley-017:

அறிஞர்
07-05-2007, 09:41 PM
ஆஹா இந்த ரவுசுகளை படிக்க ஒரு நாள் வேணும் போல இருக்கு.. மொக்கச்சாமியும், சுட்டியும் தொடருங்கள்..

poo
08-05-2007, 08:24 AM
கலக்கறீங்க மக்கா...

அன்புரசிகன்
08-05-2007, 08:35 AM
எனக்கு ஆயுள் கூடப்போகுது... (சிரிச்சுக்கிட்டே இருக்கேன்)

வாசகி
08-05-2007, 05:00 PM
மொக்கச்சாமி! கெஞ்சிக்கேட்டுக்கிறேன். முடியல. அனுப்பிடு. வயிற்று வலிக்கு மாத்திரை அனுப்பிடு. ஒருத்தன் ரவுசே தாங்கமுடியல. நீங்க என்னன்னா கூட்டணி போட்டுத் தாக்குறீங்களே. யப்பா...... ரொம்ம்ம்ம்ம்ம்ம்பக்கண்ணைக்கட்டுதே.

வெற்றி
09-05-2007, 01:37 PM
விலைவாசி உசந்துதான் போச்சுங்கிறதை பேச்சாளர் இப்ப
மறுக்க மாட்டார்னு நினைக்கிறேன்...?"

"ஏன், என்ன ஆச்சு?"

"சோடா விலை உசந்து போனதால மேடையில பேசின
அவருக்கு சோடா வாங்கித்தராம வச்சிட்டாங்களே? "

வெற்றி
09-05-2007, 01:37 PM
"தாதாவோட பொண்ணைக் கட்டும் போதே பயந்தேன்."

"ஏன், என்ன ஆச்சு?"

"சீர் வரிசைகேட்டா கை வரிசையைக் காட்றார்...."

வெற்றி
09-05-2007, 01:38 PM
"ஸ்கூல் டீச்சரைக் காதலிச்சது தப்பு..."

"ஏன், என்ன ஆச்சு?"

"நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுகன்னு
லவ் லெட்டரைத் திருப்பிட்டாரே!"

சுட்டிபையன்
09-05-2007, 01:38 PM
மொக்கா ஆரம்பிச்சுட்டானய்யா ஆரம்பிச்சுட்டான்

இதோ நானும் வந்துட்டுறேன்

வெற்றி
09-05-2007, 01:39 PM
"கொஞ்சம் சர்க்கரை, கொஞ்சம் காபி பொடி இரவல் வாங்கிட்டு
வான்னு இவளை பக்கத்துவீட்டுக்கு அனுப்பி இருக்கக்கூடாது.."

"ஏன், என்ன ஆச்சு?"

"இங்கேயே ஒரு கப் காபியைக் குடிச்சிட்டுப் போயிடுங்கன்னு
அவளுக்கு மட்டும் காபி குடுத்தனுப்பிட்டாங்க.."

வெற்றி
09-05-2007, 01:39 PM
"சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கத் தயார்னு
சொல்லி இருக்கக் கூடாது..."

"ஏன், என்ன ஆச்சு?"

"முதல்ல நம்ம தோட்டத்துப் பெருச்சாளியை அதன் வளையிலேயே
சந்திச்சுப் பேசுங்கன்னு எங்க வீட்ல கேலி செய்றாங்க."

வெற்றி
09-05-2007, 01:40 PM
"புதுசா திறந்த ஓட்டல்ல எனக்கு இன்னிக்கு மாலை மரியாதை
எல்லாம் நடந்தது..!"

"ஏன், என்ன ஆச்சு?"

"நான் தான் காசில்லாம சாப்பிட்டு மாவாட்ட வந்த முதல் ஆளாம்...!"

சுட்டிபையன்
09-05-2007, 01:40 PM
என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னை பார்த்து இளிக்கிறதில்லை?

நீங்க சிரிக்கும்போது அப்படியே என் தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்... அதோட விளைவு தான் இது...

சுட்டிபையன்
09-05-2007, 01:42 PM
ஹெட் கிளார்க்கை ஆக்டிங் மேனேஜரா போட்டதில இருந்து ஓவராதான் துள்ளுறார்..

அப்ப "ஓவர் ஆக்டிங்" மேனேஜர்ன்னு சொல்லு..!

வெற்றி
09-05-2007, 01:42 PM
"யார் யாருக்கு நான் கடன் தரணுங்கிறது மறந்து போயிடுச்சு. யார் யார் எனக்குக் கடன்

தரணுங்கிறதெல்லாம் நல்லா நினைவில் இருக்கு... இது என்ன வியாதி?

"இதுதாங்க செலக்டிவ் அம்னீஷியா!"

வெற்றி
09-05-2007, 01:42 PM
"தீபாவளிக்கு புடவை எடுக்கப் போகிற போது என்னையும் கூட்டிக்கிட்டுப் போனால் என்ன?"

"வேண்டாம் மீனாட்சி, நடு ராத்திரியில் உன்னையும் கூட்டிக் கிட்டு சுவர் ஏறிக்குதித்து

ஜவுளிக்கடையில் நுழையிறது கஷ்டம்!"

சுட்டிபையன்
09-05-2007, 01:43 PM
மேனேஜர் : சர்தார், நீங்க பொறந்தது எங்க ?

சர்தார்ஜி : பஞ்சாப்ல சார்..

மேனேஜர் : சரி பஞ்சாப்ல எந்த பார்ட் ?

சர்தார்ஜி : கை, கால்னு எல்லா பார்ட்டும் பஞ்சாப்ல தான் சார் பொறந்தது...

சுட்டிபையன்
09-05-2007, 01:43 PM
சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...

சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது

சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...

சுட்டிபையன்
09-05-2007, 01:43 PM
இண்டர்வியூவில்...

தேர்வாளர் : ஒரு எலக்ட்ரிக் மோட்டார் எப்படி இயங்கும்...சொல்லுங்கள்...

சர்தார்ஜி : ட்ட்ட்ருருருருருருருருர்ரூரூருரு

தேர்வாளர் : யோவ் நிறுத்துய்யா நிறுத்துய்யா

சர்தார்ஜி : ரூரூரூருரு ட்ட்டு டுடு டுடு டுடு.

சுட்டிபையன்
09-05-2007, 01:45 PM
மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள். அங்கு நீதி தேவன் முதல் நபரை அழைத்து, "உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்' என்றார். இந்த நபர் ஏன் என்று கேட்ட தற்கு, நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய் அதனால்தான் என்றார். அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.
மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார். இருவரும் ஏன் என்று கேட்டதற்கு நீதிதேவன் இப்படி பதிலளித்தார், "அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றார்' என்றார்.

சுட்டிபையன்
09-05-2007, 01:46 PM
இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.

அறிஞர்
09-05-2007, 01:47 PM
வாவ்.. இருவரும் இந்த போடு போட்டா நாங்க எங்க போறது...

ஒவ்வொன்றையும் ரசித்தே தனி பதில் எழுதலாம் போல.... இருவருக்கும் சிறிய இ-பணம் அன்பளிப்பு.

சுட்டிபையன்
09-05-2007, 01:47 PM
மூன்று வயோதிகர்கள் தங்களது நினைவுத்திறனைபரிசோதித்துக் கொள்வதற்காக மருத்துவரிடம் சென்றனர். மருத்துவர் முதல் வயோதி கரிடம் மூன்றும் ஏழும் எவ்வளவு என்றார். அவர் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு 274 என்றார். மருத்துவர் அடுத்ததாக இரண்டாவது முதியவரிடம் அதே கேள்வியை கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்து விட்டு செவ்வாய்க்கிழமை என்று பதில் அளித்தார். மருத்துவர் மூன்றாவது முதியவரிடம் அதே கேள்வியை கேட்டபோது அவர் உடனே 24 என்று பதில் அளித்தார். மருத்துவர் சபாஷ் எப்படி சொன்னீர்கள் என்று கேட்க, அவர் 274லிருந்து செவ்வாய்க் கிழமையைகழித்துச் சொன் னேன் என்று பதில் சொன்னார்

சுட்டிபையன்
09-05-2007, 01:47 PM
புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாண வர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந் தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.

சுட்டிபையன்
09-05-2007, 01:48 PM
ஒரு ஊரில் முட்டாள் பணக் காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொ ழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம். ஒரு நாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய் வதற்கு தேவையான எண் ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.
வேலைக்காரனும் கடைவீதிக் குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டி ற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன் என்று கேட்டார். அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அத னால் கீழே வழிந்து விட்டது என்று கூறினான். அதற்கு பணக் காரர், கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று கத்தினார்

சுட்டிபையன்
09-05-2007, 01:49 PM
ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்

சுட்டிபையன்
09-05-2007, 03:08 PM
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.

சுட்டிபையன்
09-05-2007, 03:13 PM
ஒருவன்: பஞ்சாப்ல ஏன் ATMம் ஒர்க் ஆகுறதில்லை....
மற்றவன்: ஏன்?
ஒருவன்: எல்லா சர்தாரும், "Enter ur PIN"ன்னு கேட்டா பொண்டாட்டி ஹேர்பின்ன சொருகிடுறாங்க

சுட்டிபையன்
09-05-2007, 03:14 PM
ஹலோ! PEPSI உமாவா?????? எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு போடுங்க.........
உமா: சாரிங்க...நான் இப்பொ சென்னைல இருக்கேன்.


-----
வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS"

சுட்டிபையன்
09-05-2007, 03:15 PM
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

சுட்டிபையன்
09-05-2007, 03:16 PM
TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ......... ????

sarcharan
09-05-2007, 03:16 PM
இது எல்லாம் பேராசிரியர் சோதி எழுதிய முட்டாள் ஜோக்ஸ் புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.

சுட்டிபையன்
09-05-2007, 03:18 PM
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
---

கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

அறிஞர்
09-05-2007, 03:19 PM
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
வயிற்றுல.. ஸ்டாராங்கா.. பில்டிங்க் உருவாகப்போகுது...

அருமை சுட்டி

அறிஞர்
09-05-2007, 03:20 PM
TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ......... ????
ஏலே கேட்கிறது நியாந்தேனே....

அறிஞர்
09-05-2007, 03:21 PM
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
சுட்டி மாதிரி வாடிக்கையாளர் இருந்தா கடைக்காரர் கதி அம்பேல் தான்.

சுட்டிபையன்
09-05-2007, 03:37 PM
ஆஹா இந்த ரவுசுகளை படிக்க ஒரு நாள் வேணும் போல இருக்கு.. மொக்கச்சாமியும், சுட்டியும் தொடருங்கள்..

தொடர்ந்திட்டா போச்சு அறிஞ்சரே, ஆனா வைத்து வலி ஏதும் வந்தா நான் பொறுப்பில்லை:lachen001:


இது எல்லாம் பேராசிரியர் சோதி எழுதிய முட்டாள் ஜோக்ஸ் புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.

எல்லாமே படித்து சுவைத்ததுதானே சரவணா

சுட்டிபையன்
09-05-2007, 03:40 PM
வயிற்றுல.. ஸ்டாராங்கா.. பில்டிங்க் உருவாகப்போகுது...

அருமை சுட்டி

அத்திவாரத்த ஸ்ரோங்கா போட்டா பில்டிங்கும் ஸ்ரோங்கா வரும்


ஏலே கேட்கிறது நியாந்தேனே....
என்ன பண்ணுறது, இப்படி அறிவாளிகளாலதான் உலகத்தில பல நல்லது நடக்குது


சுட்டி மாதிரி வாடிக்கையாளர் இருந்தா கடைக்காரர் கதி அம்பேல் தான்.
:food-smiley-002:

நன்றி இதோ தொடருது நம்ம சேவை:icon_b:

சுட்டிபையன்
09-05-2007, 03:49 PM
."உங்க கடையை எப்படி இன்னும் ஆக்கிரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க?"

"யோவ்.. என்னய்யா சொல்றே நீ?" "திருச்சி மெயின் ரோடுலகடை வெச்சிருக்கேன்னு சொன்னீங்களே!"

சுட்டிபையன்
09-05-2007, 03:49 PM
."மாமியாருக்கும் மருமகளுக்கும் இவ்ளோ சீக்கிரம் சண்டை வரும்னு யாருமே எதிர்பார்க்களைல..."

"அப்படியா... என்னாச்சு?" "வலது காலை எடுத்து வெச்சு வாம்மான்னு சொன்னதோட, இடது காலை வெச்சே, வெட்டிடுவேன்'னாளே அந்த மாமியார்க்காரி!"

சுட்டிபையன்
09-05-2007, 03:54 PM
"என் பையன் பெரிய ஆளாகணும்! என்ன செய்யலாம் டாக்டர்?"

"இருபது வருஷம் வெயிட் பண்ணுங்க!"

அறிஞர்
09-05-2007, 03:55 PM
."உங்க கடையை எப்படி இன்னும் ஆக்கிரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க?"

"யோவ்.. என்னய்யா சொல்றே நீ?" "திருச்சி மெயின் ரோடுலகடை வெச்சிருக்கேன்னு சொன்னீங்களே!"
ஏதோ திருச்சிக்காரர் ராஜாவை தாக்குற மாதிரி இருக்கு

மனோஜ்
09-05-2007, 04:03 PM
ஆரம்பமே ஆமேகமா இருக்கே சுட்டி
அப்ப மருமகள் என்ன செல்லியிருப்பா

சுட்டிபையன்
09-05-2007, 04:06 PM
ஏதோ திருச்சிக்காரர் ராஜாவை தாக்குற மாதிரி இருக்கு

ஏங்க உங்களுக்கே நல்லா இருக்கா, சிவனே எண்டு இருக்க எங்கூட அவர மூட்டி விடுறது

ஆரம்பமே ஆமேகமா இருக்கே சுட்டி
அப்ப மருமகள் என்ன செல்லியிருப்பா

இடது கால வெட்டுறதுக்கு உனக்கு வலது கை இருந்தாதானெ எண்டு சொல்லியிருப்பா

சுட்டிபையன்
10-05-2007, 02:42 PM
"அந்த டாக்டர் ரொம்ப நல்லவரு...!" "எதைவெச்சு சொல்றீங்க?"

"ஆபரேஷனுக்கு முன்னாடியே, உயிர் மேல ஆசையிருந்தா ஓடிப்போயிடுன்னு ஒரு சான்ஸ் தர்றாரே..!"


."நம்ம டாக்டர் ஒரு தாதாவுக்கு ஆபரேஷன் பண்ணப் போறதா இருந்துச்சு. அப்புறம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாரு!"

"ஏன்?" "எல்லாரும் என்கவும்ட்டர்னு கிண்டல் பண்ணாங்களாம்!"

சுட்டிபையன்
10-05-2007, 02:43 PM
ஏன் தாடி வளர்க்கிறே?" "லவ் பெய்லியர் ஆகிடுச்சு!"

"அடடா... உன்னை லவ் பண்ணுன பெண்ணை வேறொரு மாப்பிள்ளைக்குக் கட்டி வெச்சுட்டாங்களா?"

"ம்ஹீம்... எனக்கே கட்டி வெச்சுட்டாங்க!"

-------
"நான் பார்த்திருக்கிற மாப்பின்னையைத்தான் நீ கட்டணும்!" "முடியாது! நான் காதலிக்கிற பையனைத்தான் கட்டுவேன்!"

"அது நடக்காது?" "அநாவசியமா என்னைக் கொலைகாரி ஆக்கிடாதீங்க!"

சுட்டிபையன்
10-05-2007, 02:44 PM
"நாம காதலிக்கிறது எங்கப்பாவுக்குத் தெரிஞ்சுபோச்சு!"

"ஐயோ, அப்புறம்?" "கல்யாணச் சாப்பாடு எப்பபோடுவீங்கன்னு கேட்கிறார்!"
--------

"தெருவுக்குத் தெரு... முக்குக்கு முக்கு சிறுநீர் கழிப்பிடம் கட்டணுமா?"

"ஆமா... நம்பர் ஒன் தொகுதியா மாத்குவேன்னு வாக்குறுதி குடுத்திருக்தேன்ல!"

சுட்டிபையன்
10-05-2007, 02:45 PM
"இந்தக் காலத்துப் பசங்க ஒரே வருஷத்துல பாஸ் பண்றதில்லை!"

"என்னாச்சு?" "என் மகன் பி.ஏ. மூணான் வருஷம் படிக்கிறான்!"

---------

"என்ன டாக்டர் சொல்கிறீர்கள்? கழுத்து வலி எனக்குப் போகணும்ன்னா மனைலியை விட்டுப் பிரிந்திருக்கணுமா?

ஏன் டாக்டர்?"

"நீங் ஒரு வாரக்துக்குத் தலையாட்டாமல் இருக்கணுமே... அதுக்குத்தான் சொன்னேன்!"

சுட்டிபையன்
10-05-2007, 02:47 PM
"நாக்கு குளறுது டாக்டர்.."எப்போ...?"

" மனைவியை எதிர்த்துப் பேசும் போதெல்லாம்...!!"
-----

"இந்த மாத்திரையை, ஒரு நாளைக்கு மூணு தடலை சாப்பிடணும்."

"முதல் தடவைச் சாப்பிட்டதுமே உள்ளே போயிடுமே.... பிறகு அதை எப்படி மறுபடியும் சாப்பிட முடியும்?"

அறிஞர்
10-05-2007, 03:04 PM
சுட்டியின் லொள்ளுகள் அருமை.. இன்னும் தொடரட்டும்...

சுட்டிபையன்
10-05-2007, 03:08 PM
சுட்டியின் லொள்ளுகள் அருமை.. இன்னும் தொடரட்டும்...


நன்றி நன்றி


அறிஞர்:கையைக் கொடுங்க டாக்டர்!
டாக்டர்:எதுக்கு சார்?
அறிஞர்:நீங்கதானே ஊசி போட்டதும் கையைத் தேய்ச்சுவிடச் சொன்னீங்க!"
:D :D :D :sport009: :sport009: :cool-smiley-008: :cool-smiley-008:

அறிஞர்
10-05-2007, 03:08 PM
நன்றி நன்றிஅறிஞர்:கையைக் கொடுங்க டாக்டர்!
டாக்டர்:எதுக்கு சார்?
அறிஞர்:நீங்கதானே ஊசி போட்டதும் கையைத் தேய்ச்சுவிடச் சொன்னீங்க!"
:D :D :D :sport009: :sport009: :cool-smiley-008: :cool-smiley-008: தேய்ச்சு விட்டா பீஸ் கேட்க மாட்டார்தானே.. :aktion033: :aktion033: :aktion033:

சுட்டிபையன்
10-05-2007, 03:11 PM
தேய்ச்சு விட்டா பீஸ் கேட்க மாட்டார்தானே.. :aktion033: :aktion033: :aktion033:

அதை அவர்கிட்டத்தான் கேக்கணும்

சுட்டிபையன்
10-05-2007, 03:26 PM
"நேத்து ராத்திரி நீங்க எனக்கு ரெண்டு பட்டுப்புடைவை பட்டுப்புடைவை

எடுத்துக் கொடுத்த மாதிரி கனவு கண்டேங்க!"

"அப்படியா? ஒரு புடைவையை இப்பக்கட்டிக்கோ. இன்னொரு புடைவையைத் தீபாவளிக்குக் கட்டிக்கோ!"

-----------------------------

"கராத்தே கத்துக்கிற பொண்ணை வல் பண்ணுனியே... மேரேஜ் எப்போ?"

"எங்க அம்மாவுக்கு வர்மக்கலை டிவெயினிங் முடிஞ்சதும் கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க."

அறிஞர்
10-05-2007, 04:41 PM
-----------------------------

"கராத்தே கத்துக்கிற பொண்ணை லவ் பண்ணுனியே... மேரேஜ் எப்போ?"

"எங்க அம்மாவுக்கு வர்மக்கலை டிரெயினிங் முடிஞ்சதும் கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க."
வீட்டீலே இலவச சண்டைக்காட்சி.... கலக்கல்தான்.

அறிஞர்
10-05-2007, 04:42 PM
அதை அவர்கிட்டத்தான் கேக்கணும்
டாக்டர் நீங்கன்னு நினைத்தேன்...

சுட்டிபையன்
11-05-2007, 08:03 AM
வீட்டீலே இலவச சண்டைக்காட்சி.... கலக்கல்தான்.
ஹா ஹா தினம் நம்ம ஆதவா மயூ ஓவி வீட்டில நடக்குறதுதானே:D

டாக்டர் நீங்கன்னு நினைத்தேன்...

சீ ச்சீ நான் டாக்டரெல்லாமில்லை

சுட்டிபையன்
12-05-2007, 02:37 PM
ஒரு பூங்காவில் வயதான ஒருத்தர் உட்கார்ந்து அழுது புலம்பிக்கிட்டு இருந்தார்.

அவரு கிட்ட போயி "என்னங்க விஷயம்"ன்னு கேட்டேன்.

"போன மாசம் தான் ரிட்டயரு ஆனேன். ஏகப்பட காசு வந்துச்சி நெறய சொத்து, காரு இருக்கு, அருமையான மனைவி, புள்ளைங்க எல்லாம் இருக்காங்க, வேளாவேளைக்கு அருமையான சாப்பாடு போட்டு என்னை அருமையா கவனிச்சுக்குவாங்க"ன்னாரு.

"அப்றம் ஏங்க இங்க ஒக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க"ன்னு கேட்டேன்

"என் வீட்டுக்கு போற வழி மறந்து போயிட்டேன்"ன்னாரு

மனோஜ்
12-05-2007, 03:01 PM
இவ்வளவும் இருந்து என் புன்னியம அவருக்கு பாவம்

சுட்டிபையன்
14-05-2007, 02:12 PM
நோயாளி : காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்.
டாக்டர் : (செக் பண்ணிவிட்டு) எனக்கு ஒன்னும் கேட்கலையே?
நோயாளி : அப்படியா! அப்போ ஏதாவது ஜங்ஷன்ல நின்னிருக்குமோ!

சுட்டிபையன்
14-05-2007, 02:25 PM
ஆசிரியர் : ஒரு பெண்ணின் உயர்வுக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?
மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.

****

நபர் : ஜோசியரே, நம்ம ஜாதகத்துல ஏதும் தோஷம் இருக்கா பாருங்க.
ஜோசியர் : தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்குப்பா. கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும்.
நபர் : என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்

அக்னி
14-05-2007, 02:31 PM
துணுக்குகள் ஒன்றையொன்று விஞ்சுகின்றன...

sarcharan
14-05-2007, 02:47 PM
ஆசிரியர் : ஒரு பெண்ணின் உயர்வுக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?
மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.


ஹி ஹி சரி தான். ஃபோரம் போன போது சொன்னாங்கநபர் : ஜோசியரே, நம்ம ஜாதகத்துல ஏதும் தோஷம் இருக்கா பாருங்க.
ஜோசியர் : தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்குப்பா. கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும்.
நபர் : என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்

ஹ்ம்ம் சரிதான்.

சுட்டிபையன்
14-05-2007, 03:06 PM
தயாரிப்பாளர்(கதாநாயகனிடம்): பேசின தொகையைத்தான் முதலிலேயே மொத்தமா கொடுத்துவிட்டேனே, பின்ன இன்னும் எதுக்கு மேல வேணும்னு கேக்கறீங்க?
கதாநாயகன்: எல்லாரும் படத்தில,நான் ஓவர் ஆக்ட் பண்ணிருக்கறதாச் சொல்றாங்களே- அதுனாலதான்!

***

சுட்டிபையன்
14-05-2007, 03:06 PM
நீதிபதி (குற்றவாளியிடம்): பயங்கரமான ஆயுதங்களைக் கோர்ட்டுக்குள்ள கொண்டுவரக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?

குற்றவாளி: அப்போ நீதிபதி ஐயா மட்டும் கையிலே சுத்தி வச்சுக்கலாமா
***

ஆசிரியர்: உங்க கதை ரொம்ப சுமாரா உப்புச் சப்பே இல்லாம இருக்கு!

எழுத்தாளர்: நான் உங்களைக் கதையைப் படிக்கத்தானே சொன்னேன், நீங்க ஏன் அதைச் சாப்பிட்டங்க?

***

sarcharan
14-05-2007, 03:10 PM
ஆசிரியர்: உங்க கதை ரொம்ப சுமாரா உப்புச் சப்பே இல்லாம இருக்கு!

எழுத்தாளர்: நான் உங்களைக் கதையைப் படிக்கத்தானே சொன்னேன், நீங்க ஏன் அதைச் சாப்பிட்டங்க?

***

வாசகர்: உங்களோட "சமைத்துப்பார்" புத்தகத்தைப்பார்த்து சமைத்தேன். சமையல் நல்லாவேயில்லை.
எழுத்தாளர்: நான் "சமைத்துப்பார்" என்று தானே எழுதினேன். "சாப்பிட்டுப்பார்" என்றா எழுதினேன்?

சுட்டிபையன்
14-05-2007, 03:24 PM
வாசகர்: உங்களோட "சமைத்துப்பார்" புத்தகத்தைப்பார்த்து சமைத்தேன். சமையல் நல்லாவேயில்லை.
எழுத்தாளர்: நான் "சமைத்துப்பார்" என்று தானே எழுதினேன். "சாப்பிட்டுப்பார்" என்றா எழுதினேன்?

ஹீ ஹீ சரவணா:icon_clap:

சுட்டிபையன்
14-05-2007, 03:27 PM
டாக்டர்: எதுக்கு அரை குறையா ஒரு கதையை எழுதி எங்கிட்ட கொடுக்கறீங்க?

எழுத்தாளர்: நீங்க கதையை முடிக்கறதிலே கெட்டிக்காரர் னு சொன்னாங்க அதுதான்!

***

நோயாளி : ஆபரேஷனுக்கு ஐயாயிரம் ரூபாய்னுதானே சொன்னீங்க? இப்போ ஐயாயிரத்து ஐம்பது ரூபாய் னு பில் போட்டிருக்கீங்களே?

டாக்டர்: அதுவா. அது நான் உன்னோட வயத்திலெ மறந்து வச்சுட்ட கத்திரிக்கோலின் விலையும் சேர்த்திருக்கேன்!

சுட்டிபையன்
15-05-2007, 01:06 PM
அன்பே... உனக்காக நான் உயிரைகூடத் தருவேன்..

அதான் தந்துட்டிங்களே, என் வயித்துல

---

என் அம்மாவுக்கு ஏன் சாப்பாடு போடலை?

அவங்கதாங்க இனிமே நான் வாயே திறக்கப் போறதில்லைனு சொன்னாங்க

----
பஸ் ஸ்டாண்டில் கணவனும் மனைவியும்...வீட்டு வேலை எல்லாத்தையும் என்னால பார்க்க முடியலங்க. ஒரு வேலைக்காரி வெச்சுக்கட்டுமா?

(கிண்டலாக) ??தாராளமா வெச்சுக்கோ... வேலைக்காரியை நீ வெச்சுக்கிட்டா தப்பு இல்ல. நான் வெச்சுக்கிட்டாதான் தப்பு. உங்க குறும்பு அப்படியேதான் இருக்கு. ஆடிஅடங்குன அம்பது வயசுக்காரியா பார்த்து வெச்சுக்கறேன், அப்பதான் சேஃப்டியா இருக்கும்!

சுட்டிபையன்
15-05-2007, 01:11 PM
ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னல் கிழிஞ்சிருக்கே... என்னடி ஆச்சு?

சொன்னேனே... ஒருத்தன் என் மனசைக் கொள்ளையடிச் சுட்டான்னு!

----------

என் காதலன் அடிக்கடி கழுத்துக்குக் கீழே பார்க்கிறான்!

??ச்சீ... அப்புறம்? அதான்... செயினைக் கழற்றி வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன்!

சுட்டிபையன்
15-05-2007, 01:18 PM
எனக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை
என்கிற காரணத்தை டாக்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

உன் கணவர் என்ன சொல்லுகிறார்?

டாக்டரை மாற்ற சொல்லுகிறார்!

உன் டாக்டர் என்ன சொல்லுகிறார்?

கணவனை மாற்ற சொல்லுகிறார்.

சுட்டிபையன்
15-05-2007, 01:21 PM
ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ?

சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான்

சுட்டிபையன்
15-05-2007, 01:32 PM
மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க !

கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல மட்டும் நல்லா பாரு, நாட்டு நடப்ப புரிஞ்சிக்காதே !

-----------

கஸ்டமர்: என்ன பாய், சீக்கு வந்த கோழி மாதிரி டல்லா இருக்க ?

கறிக்கடை பாய்: ஓசில லெக் பீஸ்கேப்பியே, முழு கோழி இருக்கு வாங்க்கிருயா?
கஸ்டமர் ஓட்டமெடுக்கிறார்

சுட்டிபையன்
15-05-2007, 01:40 PM
நோயாளி: டாக்டர், சிக்கன் லெக் சாப்டதுலேர்ந்து, கலுத்தெல்லாம் நீண்டு ஒரு கொக்கரக்கோவா வருது டாக்டர்.

டாக்டர்: நீங்க வெட்னரி டாக்டரைதான் பார்க்கனும், பயப்படத்தேவையில்லை, தொடைய சுத்தி சுத்தி தொன்னூறு ஊசி போடுவாங்க

---------

முனியான்டி விலாஸ் ஓனர்: எதுக்கு என்னை அரஸ்ட் பண்ணுரிங்க சார் ?

போலிஸ்: ஏன்யா, சிக்கன பார்த்து ஊரே ஓடிக்கிட்டு இருக்கு, நீ என்ன தெனாவட்டா, இங்கு சிக்கன் சிக்ஸிடி பைவ் கிடைக்கும்னு போர்ட மாட்டிவைச்சிருப்ப !

சுட்டிபையன்
16-05-2007, 01:45 PM
"தலைவர் பேசறப்போ ஏன் முதுகில சொறிஞ்சிட்டே இருக்காரு?"

"அவர் தனக்குப் பின்னால ஒரு படையே இருக்குன்னு சொன்னாரே, அதுதான்!"

****

"உங்க நகைக் கடைக்கு சேதாரம் இல்லை, செய்கூலி இல்லை என்று விளம்பரம் பண்ணினீங்களே, அப்படியும் ஏன் வியாபாரம் டல் ஆயிடிச்சு?"

"அவங்க நகைகளிலே தங்கமே இல்லைனு கண்டுபிடிச்சுட்டாங்க!"

****

சுட்டிபையன்
16-05-2007, 01:52 PM
"குவைத்திலே வேலை கிடைக்கும்னு ஏன் ஜோசியர் நிச்சயமா சொல்றார்?"

"ஏன்னா பையனோட நட்சத்திரம்,"ஆயில்"யமாச்சே?"

****

"அந்த பெரிய கம்பெனி டீ மாதிரியே எங்க கம்பெனி டீயும் இருக்கும்."

"அப்போ 'காப்பி' ன்னு சொல்லுங்க."

****

"எங்க ஆஸ்பத்திரியில எல்லாருமே இன்பேஷன்ட்."

"அப்படியா?"

"ஆமாம், ஆனால் எல்லாருமே அவுட்."

****

சுட்டிபையன்
16-05-2007, 01:55 PM
"கண்ல மண் விழுந்துடுத்துன்னு ட்ரீட்மென்ட்டுக்கு வந்தவர் பீஸ் கொடுக்காமலே போயிட்டார்."

"அப்போ கண்ணில மண் தூவிட்டுப் போயிட்டார்னு சொல்லுங்க."

****

"எங்க தாத்தாவுக்கு நூறு வயசாச்சு- ஆனா இன்னும் டாக்டர்கிட்ட போனதே இல்ல."

"நீ நூறு வயசாச்சுன்னு சொல்றப்போவே நினைச்சேன்."

****

அறிஞர்
16-05-2007, 02:01 PM
அருமை சுட்டி....

சிக்கன் சிரிப்புக்கள் எல்லாம அருமை..

ஒவ்வொன்றும் முத்தான சிரிப்புக்கள்.. தொடரட்டும்

சுட்டிபையன்
16-05-2007, 02:02 PM
அருமை சுட்டி....

சிக்கன் சிரிப்புக்கள் எல்லாம அருமை..

ஒவ்வொன்றும் முத்தான சிரிப்புக்கள்.. தொடரட்டும்

எல்லாம் உங்க வயிற்ற நோகடிக்கத்தான்:grin: :grin:

சுட்டிபையன்
16-05-2007, 02:04 PM
"என்ன டாக்டர், ஆபரேஷன் முடிஞ்சு இன்னும் தையல் போடாம இருக்கீங்க?'

'அட, நீங்க இன்னும் உயிரோடவா இருக்கீங்க! "

***

"டாக்டர் ஏன் கோபமாயிருக்கார்?"

"எம். தர்மராஜன்னு எழுதவேண்டிய அவர் பெயரை எம தர்மராஜன்னு எழுதிட்டாங்களாம்!"

***

"ஆபரேஷன் முடிஞ்சபிறகு நான் குளிக்கலாமா டாக்டர்?

"அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க- உங்க உறவுக்காரங்க பாத்துப்பாங்க'

***

நோயாளி : டாக்டர். எனகென்னவோ எப்பவும் பயமாயிருக்கு, தற்கொலை செஞ்சுக்கலாமான்னு தோணுது !

டாக்டர்: அதெல்லாம் ஒன்னும் வேணாம்- எங்கிட்ட வந்துட்டீங்க இல்ல, நான் பாத்துக்கறேன் !

***

'டாக்டருக்கு ஆபரேஷன் செஞ்சு அனுபவம் இருக்கா?'

"ஊம், இதுக்கு முன்னால ஒரு நாளைக்கு நாலு அஞ்சு போஸ்ட் மார்டம் செஞ்சுருக்காரு !"

***

"டாக்டர், பிரிஸ்கிரிப்ஷன்ல இருக்கற எல்லா மருந்தையும் வாங்கிட்டேன், மேல எழுதியிருக்கறது மட்டும் என்னன்னு புரியல்லை'

'ஓ, அதுவா அது, பிள்ளையார் சுழி"

***

நண்பர் (டாக்டரிடம்) : தினமும் இவ்வளவுபேருக்கு ஸ்டெதஸ்கோப் வச்சு பாக்கறிங்களே, கஷ்டமாயில்லை?

டாக்டர் : இல்லை, அந்த நேரத்தில அவங்க பர்சில கையை வைக்கறதா நினச்சுப்பேன்.

***

"விட்டு விட்டு இருமல் வருதுங்கறதுக்காக நீங்க கொடுத்த மருந்தை சாப்பிட்டேன்'

"இப்போ சரியாப் போயிருக்குமே!"

"இப்போ தொடர்ச்சியா இருமறேன் டாக்டர்"

***

சுட்டிபையன்
16-05-2007, 02:10 PM
அறிஞரே மீதி சிக்கன் ஜோக்ஸ் உங்களுக்காக

மந்திரி: எங்கள் தலைவர், ஒரு லட்சம் கோழிகளை அழித்து சிக்கன நடவடிக்கை எடுத்திருக்கிறார், தலைவர் வாழ்க.

உதவியாளர் மெதுவாக: தலைவா சொதப்பிட்டியே, அது சிக்கன நடவடிக்கை இல்ல தலைவா, சிக்கன் மீது நடவடிக்கை !


----------

கோழி 1: ஏன்டா, ரொம்ம சந்தோசமா கூவுர ?

கோழி 2: நம்ப கண்ணு முன்னேடியே, நம்ம ளுங்கள அறுப்பாங்கல்ல, இனி கொஞ்ச நாள், புள்ள குட்டியோட சந்தோசமா இருக்கலாம்


----------

பாரி: ஏன்டா, கோழி வருத்துன்னு கோட்வேர்ட்ல சொன்ன ஜொள்ளுவடிய நிப்பானே, நம்ம சுந்தர் ஏன்டா, அவுங்க அப்பனா பாத்தாப்பல ஓடுறான் ?

மாரி: முன்னடி, கோழின்னு பிகருங்களைத்தான் சொல்லுவோம், இப்ப கோர்டு வேர்டு, பேர்ட் வோர்டா மாறிடுச்சி, அதான் புளு வந்துடுமே பயந்து ஓடுறான்.----------

வாத்தியார்: பசங்களா, 'கூறை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் ...' எங்க பழமொழியை முடிங்க பார்க்கலாம்..

சுட்டி பையன்: சார், கோழிய புடிச்சா உடனே வைகுண்டம் தானாம், எங்க அப்பா சொன்னாரு !


----------

கமலா: விமலா, என்ன ஒங்க மாமியாரு, திடீர்னு போய்டாங்களா, எப்படிடி ?

விமலா: இதான் சரியான சமயம்னு, சிக்கன் வருவல் செஞ்சிபோட்டேன், அவுங்க சை சையா சாப்பிட்டு போய்டாங்க!


----------

புறா: எறும்பு நண்பா, எப்படி நீ வேடனை கடிக்காமல், என்னை காப்பாற்றினாய் ?

எறும்பு: உனக்கு பறவை காய்சல் இருக்குன்னு சொன்னேன், அதான் தலை தெறிக்க ஓடிட்டான்.

அறிஞர்
16-05-2007, 02:14 PM
டாக்டர் ஜோக் போட்டு.. இப்படி வாரிவிட்டீர்களே...

பாவம் டாக்டர்கள்..

அறிஞர்
16-05-2007, 02:16 PM
ஹிஹி அடுத்த சிக்கன.. சாரி சிக்கன் ஜோக்குகளும் அருமை.....

வைகுண்ட ஜோக் சூப்பர்...

சுட்டிபையன்
16-05-2007, 02:16 PM
டாக்டர் ஜோக் போட்டு.. இப்படி வாரிவிட்டீர்களே...

பாவம் டாக்டர்கள்..

தாங்களும் டாக்டர் என்று கேள்விப்பட்டேன் உண்மையா.........?:grin: :grin:

அமரன்
16-05-2007, 02:36 PM
சுட்டி கலக்குறேப்பா. எத்திரியிலும் கலக்கும் உனக்கு என்ன பரிசளிப்பதென்றே தெரியவில்லை. உன் இ-பணம் அதிகரிக்கும் சூட்சுமம் புரிந்ததடா செல்லமே.

சுட்டிபையன்
16-05-2007, 02:41 PM
ஹிஹி அடுத்த சிக்கன.. சாரி சிக்கன் ஜோக்குகளும் அருமை.....

வைகுண்ட ஜோக் சூப்பர்...

ஹீ ஹீ சுட்டினா சும்மாவா


சுட்டி கலக்குறேப்பா. எத்திரியிலும் கலக்கும் உனக்கு என்ன பரிசளிப்பதென்றே தெரியவில்லை. உன் இ-பணம் அதிகரிக்கும் சூட்சுமம் புரிந்ததடா செல்லமே.

ஹா ஹா கண்டு பிடிச்சிட்டீங்களா, அப்போ போட்டியா நமக்கு?:icon_cool1:

சுட்டிபையன்
17-05-2007, 02:01 PM
"அரசியல்வாதிகளைக் காதலிக்கக் கூடாதுப்பா..."
"ஏன்?"
"நான் கைவிட்டு விட்டால், என்னோட பினாமியைக் கட்டிக்கோங்கிறார்."


***

"அந்த ஜவுளிக்கடையில் ஏன் கூட்டம் அலை மோதுகிறது?"

" 20,000 ரூபாய்க்கு ஜவுளி எடுத்தால், ஒரு இன்ஜினியாங் சீட் ப்ரீயாம்."


***

"அதோ வர்றாரே அவரும் நானும் 20 வருஷமா கிளாஸ்மேட்ஸ்!"
"20 வருஷமா ஒண்ணாப் படிச்சீங்களா?!!!"
"இல்லை......20 வருஷமா ஒரே கிளாசில் தண்ணி அடிச்சோம்.......!"

சுட்டிபையன்
17-05-2007, 02:06 PM
"இருபத்தி நாலு மணி நேரமும் எப்.எம். ரோடியோ கேட்டு பைத்தியம் பிடித்த உன் பையன் என்ன செய்கிறான்.....?"
"இப்பவும் கேட்கிறான்... கேட்கிறான்....... கேட்டுக்கிட்டே இருக்கிறான்.........!"


***

"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்..."
"அடையாளம் சொல்லுங்க..."
"அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதியே இருக்கும்.......!"


***

சுட்டிபையன்
18-05-2007, 12:45 PM
காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு?

காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?


***

"என்னை ராணி மாதிரி வச்சுக் காப்பாத்துவேன்னு சொன்ன என் காதலரைத் திருமணம் செய்து கொண்டது தப்பாப் போச்சு
"ஏன்?
"அவருக்கு ஏற்கனவே ராணி என்ற பெயாரில் முதல் மனைவி ஒருத்தி இருக்கா"


***

"என் காதலி குற்றால அருவி மாதிரி"
"குளு குளுன்னு இருப்பாளா?"
"இல்லை. தலையிலேயே கொட்டுவா"


***

சுட்டிபையன்
18-05-2007, 12:47 PM
ஒருத்தி: 10 வருஷத்துக்கு முன்னே என்னைக் காதலித்துக் கை விட்டவரை இப்பக் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
மற்றொருத்தி: "என்ன இருந்தாலும் உனக்குப் பழி வாங்குற உணர்ச்சி ஜாஸ்திதான்!"


***

"பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு."
"ஏன்?"
"பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்."

சுட்டிபையன்
18-05-2007, 12:48 PM
மனைவி வேலைக்காயிடம்: "ஸா முனியம்மா... ஏதோ கோபத்துல என் கணவர் உன்னை அடித்துவிட்டார்"
வேலைக்கா: "இதைப் போய் ஏம்மா பெருசா எடுத்துக்கறே.... அடிக்கிற கைதான் அணைக்கும்.


***

"மாப்ள, தினமும் உன் மனைவிக்குக் பூ வாங்கிட்டுப் போறியே, அவ மேல அவ்வளவு பாசமா?"
"பூக்கா அவ்வளவு அழகுடா"

சுட்டிபையன்
18-05-2007, 02:59 PM
மனைவி: நம்ம வேலைக்காரி கமலாவுக்கு அதிக இடம் கொடுக்குறதா எல்லோரும் பேசுறாங்க.
கணவன்: உனக்கும் தெரிஞ்சு போச்சா சுதா? பத்து சென்ட் தான் அவளுக்குக் கொடுத்தேன். மீதிஎல்லாம் உனக்குத் தான்.
மனைவி: ??????


***

"எங்க வீட்டு வேலைக்காரி 20 பவுன் நகையைத் திருடிக்கிடடு ஓடிட்டா சார்."
"அடையாளம் சொல்லுங்க?"
"அவளோட வலது மார்புல பெரிய மச்சம் இருக்கும் சார்."


***

சுட்டிபையன்
18-05-2007, 03:05 PM
டாக்டர்: "காது இப்ப சரியாக் கேட்குதா?"
நோயாளி: "தெளிவாக் கேட்குது டாக்டர்."
டாக்டர்: "வெரிகுட். சரி, பீஸ் 300 ரூபாய் கொடுங்க."
நோயாளி: "என்ன டாக்டர்? காது கேட்க மாட்டங்குது டாக்டர்."
டாக்டர்: ????????


***

"மாப்பிள்ளை விண்வெளித் துறையில வேலை பார்க்கறாரு."
"அதுக்காகக் கல்யாணப் போட்டோவைச் சாட்டிலைட் மூலமாத்தான் எடுக்கணும்னு அடம் பிடிப்பது கொஞ்சம் ஓவர்."


***

"டாக்டர், உங்க நர்ஸ் கை பட்டதும் என் நோய் காணமல் போயிடுச்சு."
"அப்ப அதுக்குத் தனியா 100 ரூபாய் பீஸ் கொடுத்துருங்க."


***

சுட்டிபையன்
18-05-2007, 03:08 PM
"பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வர்றத எப்படிக் கண்டு பிடிச்சே?"
"நம்ம ராஜாவும், ராணியும் சுரங்க வழியாத் தப்பிச்சுப் போனதைப் பார்த்தேன்."


***

டைரக்டர்: என் படத்துல ஹீரோவுக்குக் கடைசி வரைக்கும் பட்டாசு பத்த வைக்கவே தெரியாது. அதைப் பார்த்து அவரோட அப்பா வெறுத்துப் போறாரு?
தயாரிப்பாளர்: படத்தோட பெயர்?
டைரக்டர்: பத்தா மகன்.


***

"டாஸ்மாக் கடையில் தண்ணி அடித்து விட்டுக் கள்ள நோட்டு அடித்தது தப்பாப் போய் விட்டது?"
"ஏன்?"
"100க்குப் பதில் 001னு அடித்து விட்டேன்."


***

"நம்ம தலைவரு அடிக்கடி எண்ணிப்பார்க்க வேண்டும், எண்ணிப்பார்க்க வேண்டும்னு ஏன் சொல்றாரு?."
"அவரு இதுக்கு முன்னாடி பாங்க் காஷியரா இருந்தாரு. அதனாலதான்."


***

அமரன்
18-05-2007, 03:08 PM
ஹா...ஹா..... ஹா..... தாங்கமுடியலையே ஓ.....

சுட்டிபையன்
18-05-2007, 03:14 PM
ஹா...ஹா..... ஹா..... தாங்கமுடியலையே ஓ.....

ஹீ ஹீ அதுக்கு ஏங்க ஓ போட்டு ஒப்பாரி வைக்கிறீங்க:icon_cool1: :icon_shout:

சுட்டிபையன்
18-05-2007, 03:36 PM
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா... எப்படி ?
காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னிட்டா

-----
தலைவருக்கு தேர்தல் பற்றி விழிப்புணர்ச்சியே இல்லைன்னு எப்படி சொல்றீங்க ?

ஓட்டுகளைப் பிரிக்கணும்னு சொன்னா தனக்குக் கூரையேறிய அனுபவம் நிறைய உண்டுங்கறhரே

-------

பொண்ணு சுமாரத்தான் பாடுவா

பையனும் சுமாரத்தான் சமைப்பான்

சரி, கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ?
___________________

வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.

செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும்
________________

என்னது... திருவோடு ஃபிலிம்ஸh ?

ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறhங்க
_______________

எங்க கூட்டுக் குடும்பத்தில் அறுபது பேர் இருக்கோம்.

அப்ப தேர்தல் கூட்டணிக்குப் பேச்சு நடத்தலாமே ?
__________________

எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?

பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறhன்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே.. .
________________

அந்த சாமியார் நடிகைகளோட மேனியழகு நிஜம் தானானு பல பேர் கிட்ட விசாரிக்கிறhர்

தீர விசாரிப்பதே மெய்னு நினைக்கறhர் போல
____________________
நாலஞ்சு ராஜpனாமா கடிதம் எழுதிக் குடு;ங்க தலைவரே

எதுக்குப்பா ?

பேப்பர்ல அப்பப்ப ஏதாவது நியூஸ் வந்தால் ஆட்சிக்கு நல்லது

சுட்டிபையன்
18-05-2007, 03:42 PM
அவர் பல் டாக்டரா ?

எப்படித் தெரிஞ்சது ?

பல்லாண்டு வாழ்க-னு வாழ்;த்தறதுக்குப் பதிலா ,
பல் ஆடி - வாழ்கனு சொல்றாரே
----

நம்ம தலைவர் தீவிர ராமராஜன் ரசிகர் ஆயிட்டார்ன்னு சொல்றீயே... எப்படி ?

நான் ஊழலே பண்ணலைன்னு நிரூபிக்க - வேப்பிலை கட்டி, கையிலே தீச்சட்டி ஏந்தி பூ மிதிக்கத் தயார்னு சொல்றாரே
----


தலைவருக்கு எல்லாமே பொருத்தமாய் அமைஞ்சிடுச்சா... எப்படி ?

அவருக்கு ஒரு சின்ன வீடாம்
தேர்தலில் அவர் சின்னமும் வீடாம்
----
அவன் சோழர் பரம்பரை, துணிக்கடை வெச்சிருக்கானா... அவன் பெயர் ?

குளோத் (cloth) துங்க சோழன்
---

மனோஜ்
18-05-2007, 03:44 PM
அனைத்தும் அருமை சுட்டி
சுட்டதா சுடாததா

சுட்டிபையன்
18-05-2007, 03:45 PM
அனைத்தும் அருமை சுட்டி
சுட்டதா சுடாததா

சுட்டாத்தானே சுட்டி:sport-smiley-017: :icon_shout: :icon_cool1:
மின்னஞ்சலில் சுட்டது

சுட்டிபையன்
18-05-2007, 03:54 PM
நான் மேலே படிக்கப் போறேன் *

ஆயல-லேதான் விடுமுறை ஆச்சே *
----
தலைவர் சரியான கோழை *

என்னவாம் ?

புலி, யாகம், ரத்தம் இந்த மாதிரி செய்திக்குப் பிறகு வீட்;டுச் சமையல்ல புளி உபயோகப் படுத்தறதைக்கூட விட்டுட்டார் *
----
உனக்கு அப்பா பிடிக்குமா... அம்மா பிடிக்குமா ?

எனக்கு சித்திதான் பிடிக்கும் *
-----

சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?

பின்னி எடுத்துட்டா *
-----

என் - பையனுக்கு ராஜh-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு *

ஏன் என்ன ஆச்சு ?

எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான் *
----
என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா *

என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா *
-----

ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ?

நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு *
--------
அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?

இதுவாடா முடியும் *

சுட்டிபையன்
20-05-2007, 02:51 PM
நேற்று ஏன் லீவு ?

ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்

---
சதா வாந்தி வருது டாக்டர்

சாதா வாந்தியா... ஸ்பெஷல் வாந்தியா

-----

போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றார்?

ரிஜிஸ்டர் மேரேஜ; பண்ணிக்கலாம்கிறார்

---
அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ?

சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறார்

சுட்டிபையன்
20-05-2007, 02:59 PM
என்னப்பா... என் பாடு எவ்வளவோ தேவலாம்னு சொல்லிக்கிட்டுப் போற ?

தேர்தல்ல நிக்கிறவங்க படுற பாட்டைப் பார்த்துட்டுச் சொல்றேன் தாயி *

----------
ஹலோ டாக்டர் ஸ்ரீதரா ..? அவசரமா ஒரு நுhறு ரூபாய் இருந்தா கொடுக்க முடியுமா ..?

யாருய்யா நீ டெலிபோன்ல கடன் கேட்கறது ?

நான்தான் உங்க பேஷண்ட்... நீங்கதானே ஏதாவது அவசரம்னா உடனே போன் பண்ணச் சொன்னீங்க

சக்தி
20-05-2007, 03:11 PM
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி சுட்டி, எனக்கு வந்த வயிற்று வலிக்கு நீ மட்டும் கையில கெடச்சே மவனே அவ்வளவு தான்

aren
20-05-2007, 03:13 PM
சிரிப்புகள் அனைத்தும் அருமை. ராஜா அவர்களும் சுட்டிப்பையன் அவர்களும் ஜோக்குகளை இங்கே அள்ளிவீசுகிறார்கள். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சுட்டிபையன்
21-05-2007, 01:00 PM
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி சுட்டி, எனக்கு வந்த வயிற்று வலிக்கு நீ மட்டும் கையில கெடச்சே மவனே அவ்வளவு தான்

அதுக்கு மாத்திரை வேனுமா........?

2 மெகா சீரியல் பாருங்கோ எல்லாம் சரியாகிடும்


சிரிப்புகள் அனைத்தும் அருமை. ராஜா அவர்களும் சுட்டிப்பையன் அவர்களும் ஜோக்குகளை இங்கே அள்ளிவீசுகிறார்கள். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி அண்ணா

சுட்டிபையன்
21-05-2007, 01:02 PM
நிருபர்: நீங்க சமீபத்திலே நடிச்சு வெளிவந்த பயங்கரப் படத்தைப் பார்த்தேனுங்க.
நடிகை: அது பயங்கரப் படம் இல்லேங்க. நான் மேக்கப் இல்லாம நடிச்ச முதல் படம்

----
டாக்டர்: வாயை நன்றாகத் திறங்க.
நோயாளி: ஆ!
டாக்டர்: இன்னும் பெரிசா!
நோயாளி: ஆ! ஆ!
டாக்டர்: இன்னும் அகலமா...
நோயாளி: நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்ய முடியும்னா எனக்கு அது வேணாம், டாக்டர்.

சுட்டிபையன்
21-05-2007, 01:04 PM
என்ன உங்க மாப்பிள்ளை வெளியிலே வராம ஜன்னல் வழியாகவே பார்க்கிறாரு?
தீபாவளிக்கு அவருக்குச் சட்டை எடுத்தேன். பேண்ட் எடுக்க மறந்துட்டேன். அதனால்தான்.

----மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?
டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.
மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து க்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?
டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!
---
இளவரசி: மணந்தால் உங்களைத்தான் மணப்போன். இல்லையேல் மரணந்தான் என்று அந்த இளவசரிடம் சொல்லச் சொன்னேனே! சொன்னாயா?
தோழி: நீங்கள் சொன்னபடியே அவரிடம் சொன்னேன். அவர் என்னையே மணப்பதாகச் சத்தியம் செய்து கொடுத்துவிட்டார், இளவரசி!

அக்னி
21-05-2007, 01:05 PM
சுட்டி சூப்பர் சுட்டி...

சுட்டிபையன்
21-05-2007, 01:07 PM
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

-----
மாலா : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
கலா : ஏன்னா அதைத் தான் தோய்க்கிறாங்களே. அதுதான்

---தாத்தா : நாய்க்கு ஒரு கால் இல்லைன்னா எப்படிக் கூப்பிடுவாங்க
பேரன் : நொண்டி நாய்ன்னு, மூணுகால் நாய்ன்னு கூப்பிடுவாங்க
தாத்தா : இல்ல... நய் ன்னு கூப்பிடுவாங்க.

---
பூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?
ராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.

---நோயாளி : அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
டாக்டர் : கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.

சுட்டிபையன்
21-05-2007, 01:11 PM
ஏன் உங்க பையன் கிணற்றுக்குள்ளே போய் படிக்கிறான்
நான்தான் அவனை ஆழமா படிக்கச் சொன்னேன்.


---
ஒரு பேப்பர் மசாலா கொண்டுவாப்பா.
ரூல்டா அன்ரூல்டா?


---
என்னுடைய அலாரக்கடிகாரம் முதல்முறையாக இன்று என்னை எழுப்பியது.
எப்படி?
என் மனைவி அதைக்கொண்டு என் மண்டையில் ஓங்கி ஓர் அடி கொடுத்தாள்.


---
வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!


---

என்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா எப்படிப் போவாங்க?
ராவோட ராவா.

அக்னி
21-05-2007, 01:16 PM
வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!

ஹா... ஹா... அருமை சுட்டி...

சுட்டிபையன்
21-05-2007, 01:38 PM
ஹா... ஹா... அருமை சுட்டி...

ஹீ ஹீ நன்றி தலைவா

அமரன்
21-05-2007, 01:41 PM
கடிச்சிட்டே சுட்டி.

சுட்டிபையன்
21-05-2007, 02:12 PM
கடிச்சிட்டே சுட்டி.

குழந்த பிள்ளையென்றால் எல்லாத்தையும் கடிக்கத்தான் செய்யும்:sport009:

அறிஞர்
21-05-2007, 05:02 PM
டாக்டர், தயிர், நாய், ராவ் என கலக்குகிறீங்க....

தொடரட்டும் உம் சிரிப்புக்கள்.

சுட்டிபையன்
22-05-2007, 01:11 PM
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!


-------------------

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!


-----------

என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!


------------------

சுட்டிபையன்
22-05-2007, 01:13 PM
டாக்டர், தயிர், நாய், ராவ் என கலக்குகிறீங்க....

தொடரட்டும் உம் சிரிப்புக்கள்.

ஆகட்டும் தலைவரே எல்லாம் உங்கள் புண்ணியம்,

அக்னி
22-05-2007, 01:14 PM
என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

இது ஆகலும் ஓவராயில்ல...

அன்புரசிகன்
22-05-2007, 01:19 PM
ம். நன்றாக உள்ளது.

சுட்டிபையன்
22-05-2007, 03:15 PM
உன் அப்பாவ பாத்தாலும் பயம்,உன் அம்மாவ பாத்தாலும் பயம்,உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி பொண்ணே!

=======================

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னுஅரசாங்கம் சொன்னதும், சர்தார்ஜி தன்வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரு... ஏன் தெரியுமா? அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!

======================
மாப்பிள்ளை,
E=MC2... இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது உன்னோட ஃபார்முலா!

=====================

டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!

தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?

=======================

ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!

============================

என்ன மாமூ...
புதுசுபுதுசா தினுசுதினுசா
இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே.
ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு
பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

சுட்டிபையன்
22-05-2007, 03:18 PM
இது ஆகலும் ஓவராயில்ல...

ஹீ ஹீ என்ன பண்ணுற்து :icon_smokeing:

சுட்டிபையன்
22-05-2007, 03:22 PM
ம். நன்றாக உள்ளது.

அப்போ நகைச்சுவை..........?:music-smiley-012: :music-smiley-012:

அக்னி
22-05-2007, 03:29 PM
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னுஅரசாங்கம் சொன்னதும், சர்தார்ஜி தன்வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரு... ஏன் தெரியுமா? அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!


சிரிப்பானாலும் கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய விடயம். தப்பான விளக்கங்கள், முதலுக்கே மோசம் தரக்கூடியதே...

தூள்... சுட்டி...

சுட்டிபையன்
23-05-2007, 11:27 AM
சிரிப்பானாலும் கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய விடயம். தப்பான விளக்கங்கள், முதலுக்கே மோசம் தரக்கூடியதே...

தூள்... சுட்டி...


ஹீ ஹீ சர்தாஜியா கொக்கா:062802sleep_prv:

சுட்டிபையன்
23-05-2007, 03:36 PM
பொதுஜனம் 1 : "இந்த ஊர்வலம் நகராமல் ஒரே இடத்தில் ரொம்ப நேரமா நிற்குதே ஏன்?"

பொதுஜனம் 2: "ஆபிஸ் ஊழியர்களோட ஊர்வலமாச்சே... ஏதாவது தள்ளினால் தான் இது நகரும்."


*****

"நம்ம பூபதி கோடீஸ்வரனாயிட்டதால பெயரை மாத்திக்கிட்டானாமே... ?"

"ஆமாம் பூபதிங்கிற பெயரை "குரோர்பதி" ன்னு மாத்திக்கிட்டான்."


*****

"என்னங்க இது முகூர்த்த நேரம் முடியப்போகுது... மாப்பிள்ளை மணமகன் அறையிலே கார்ட்டூன் பார்த்துக்கிட்டு மேடைக்கு வர மாட்டேன்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்லே... "

"நாங்கதான் முதலிலேயே சொன்னோமே மாப்பிள்ளை குழந்தை மாதிரின்னு ..."


*****

ஆசிரியர்: சார் உங்க பையனைக் கண்டித்து வையுங்க...

மாணவனின் தந்தை: ஏன்?

ஆசிரியர்: சிவகாசின்னு சொன்னவுடன் எது ஞாபகத்துக்கு வருதுன்னு கேட்டால் விஜய்யோட பைட்டுத்தான்னு சொல்றான்


*****

"நம்ம பாஸ்ட் புட் கடையிலே தயாரிக்கிற அயிட்டங்கள் சாப்பிட்டுப் போகிறவங்களுக்கு பிடிக்கலைன்னு எதை வைத்துச் சொல்றே?"

"நம்ம கடை போர்டுல இருக்கிற 'எ பாஸ்ட்புட்'டுங்கற வார்த்தையிலே 'பா' வை அடித்து விட்டு 'வே' ன்னு போட்டு 'எ வேஸ்ட் புட்' டுன்னு ஆக்கி விட்டிருக்காங்க பாருங்க ..."


*****

சுட்டிபையன்
26-05-2007, 01:19 PM
எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கிற விஷயம் என் மனைவிக்குத் தெரியாது

ஏன்... தெரிஞ்சா கவலைப்படுவாங்களா ?

இல்லை... நிறைய ஸ்வீட் பண்ணி கொடுத்துடுவா

---

என்ன உங்க பாக்கெட்ல பிளேடு இருக்கு ?

நான்தான் சொன்னேனே... பஸ்ல யாரோ என் பாக்கெட்ல பிளேடு போட்டுட்டாங்கனு

---

எங்க ஆபீஸ்ல மானேஜர் இருக்காரு, ஸ்டெனோ இருக்காங்க...

இதை ஏன் என்கிட்டே வந்து சொல்றீங்க ?

நீங்கதானே படிச்சுட்டு யாராவது வேலை இல்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க

----

மனோஜ்
26-05-2007, 01:30 PM
எங்க மன்றத்துல சுட்டி இருக்காரு, ஓவியா இருக்காங்க...

இதை ஏன் என்கிட்டே வந்து சொல்றீங்க ?

நீங்கதானே படிச்சுட்டு யாராவது வேலை இல்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க

அக்னி
26-05-2007, 01:33 PM
எங்க மன்றத்துல சுட்டி இருக்காரு, ஓவியா இருக்காங்க...

இதை ஏன் என்கிட்டே வந்து சொல்றீங்க ?

நீங்கதானே படிச்சுட்டு யாராவது வேலை இல்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க
ஆகா.., கல்ல எறிஞ்சுட்டாரு மனோஜ்....

சுட்டிபையன்
26-05-2007, 01:36 PM
எங்க மன்றத்துல சுட்டி இருக்காரு, ஓவியா இருக்காங்க...

இதை ஏன் என்கிட்டே வந்து சொல்றீங்க ?

நீங்கதானே படிச்சுட்டு யாராவது வேலை இல்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க

ஹீ ஹீ அப்போ நானும் அக்காச்சியும் வேலை இல்லாமலா இருக்கோம்

சுட்டிபையன்
26-05-2007, 01:48 PM
ப்ளஸ்-டூ-வில் நீங்க எந்த குரூப் எடுத்து படிக்க விருப்பப் படறீங்க ?

ஏ குரூப்பையும், பி குரூப்பையும் கூட்டணியா சேர்த்து வச்சிப் படிக்கலாம்னு இருக்கேன் சார்

-----

இராமு... நான் கொடுத்த பிரம்படி எப்படியிருந்தது ?

பாவம்... உங்க வீட்டுக்காரர் எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறhரோ ?

-----

இந்த ஆளுக்கு பூலோகத்தில கணக்கு முடிஞ்சு போச்சே... ஏன் கொண்டு வரலை ?

சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட வசதியாக 3 மாதம் உயிர் நீடிப்பு தந்துள்ளேன்

சுட்டிபையன்
26-05-2007, 02:05 PM
ஏண்டா, மாலதி பின்னால் சுத்தறீயாமே... உண்மையா ?

நான் சுத்தலையே... நடந்துதான் போறேன் *
-----

ரெண்டு முறை மொய் எழுதுறீங்களே ஏன் ?

பந்தியில் நான்கு முறை சாப்பிட்டுட்டேன். அதனாலதான் *
-----

யோவ் * எதுக்குய்யா மூட்டை துhக்குற ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கே ?

நீங்கதானே சார் சொன்னீங்க நேத்து * நிறைய ஃபைல்களை இன்டர் நெட்டில் இருந்து டவுன் லோட் பண்ண வேண்டியிருக்குன்னு *

மனோஜ்
26-05-2007, 02:13 PM
ஏண் சுட்டி , மாலதி பின்னால் சுத்தறீயாமே... உண்மையா ?

நான் சுத்தலையே... நடந்துதான் போறேன் *(யாரு சுட்டி அந்த மாலதி)

சுட்டிபையன்
26-05-2007, 02:23 PM
ஏண் சுட்டி , மாலதி பின்னால் சுத்தறீயாமே... உண்மையா ?

நான் சுத்தலையே... நடந்துதான் போறேன் *(யாரு சுட்டி அந்த மாலதி)

மாலதியா....................?:weihnachten031:

சுட்டிபையன்
26-05-2007, 02:25 PM
ஞாபக மறதியால என் வாழ்க்கையே போயிடுச்சு *

என் மனைவி காணாமப் போனதை கம்ப்ளெயின்ட் பண்ணக் கூடாதுனு நினைச்சேன். ஞாபக மறதில கம்ப்ளெயின்ட் பண்ணிட்டேன் *

----

ஏண்டா பாக்கெட் சாராயத்தை உடைச்சி, பானையிலே ஊத்தறீங்க ?

இன்னியோட பாக்கெட் சாராயம் ஒழிக்கப்படும்னு தலைவர் பேப்பர்லே நியூஸ் குடுத்துட்டாராம் *

----

தலைவருக்கு புத்தி கெட்டுப் போச்சுன்னு எப்படிச் சொல்றீங்க *

சின்ன வீடு பிரிஞ்சு போனதுக்கு எதிர்க்கட்சி சதின்னு அறிக்கை விட்டிருக்காரே *

சுட்டிபையன்
26-05-2007, 02:29 PM
நாம மோசம் போயிட்டோமா ? என்னய்யா சொல்றே ?

கூட்டணிக் கட்சிகளுக்குச் சீட்டு கொடுத்தது போக, பாக்கி நமக்கு ரெண்டு இடம்தான் இருக்கு *
----

தலைவர் மாதிரியே குளோனிங்-லே ஒருத்தரைப் தயார் பண்ணணுமா...

ஏன் ?

பூகம்பப் பகுதியைப் பார்வையிடப் போக பயமா இருக்காம் *

---

மசாலா கதை இருக்கா...?

சொல்லுங்க *

இஞ்சி வியாபாரி மகளை பூண்டு வியாபாரி மகன் காதலிக்கிறான்..

மனோஜ்
26-05-2007, 02:37 PM
மசாலா கதை இருக்கா...?

சொல்லுங்க *

இஞ்சி வியாபாரி மகளை பூண்டு வியாபாரி மகன் காதலிக்கிறான்..
தொழநுட்ப கதை சொல்லுங்க

சாப்டுவேர் இஞசினியர் பெண்ண ஹர்ட்டுவேர் இங்சினியர் பையன் காதலித்தான்...

சுட்டிபையன்
26-05-2007, 02:45 PM
தொழநுட்ப கதை சொல்லுங்க

சாப்டுவேர் இஞசினியர் பெண்ண ஹர்ட்டுவேர் இங்சினியர் பையன் காதலித்தான்...

ஐயோ உங்களால எப்படி இதெல்லாம் முடியுது?

மனோஜ்
26-05-2007, 02:59 PM
சும்மா சுட்டி நீங்க கொடுத்ததிலிருந்து கொஞ்சம் மாத்தி
இதுக்கு ஏதாவத கவனிக்க வேன்டியது தானே