PDA

View Full Version : சிலையாக நின்றேன்



leomohan
14-04-2007, 08:25 PM
சிலையாக நின்றேன்


ஓதுவர் தட்டில் விழுந்த காசை வேட்டியில் மடித்ததை பார்த்தும்
-சிலையாக நின்றேன்
கொள்ளை அடித்த பணத்தை உண்டியலில் போட்டு என்னை பங்காளியாக்கியதை கண்டும்
-சிலையாக நின்றேன்
1500 ரூபாய் கொடுத்து அர்ச்சனை சீட்டுவாங்கி வந்து பண பலத்தை என்னிடம் காட்டியதை கண்டும்
-சிலையாக நின்றேன்
48 மணி நேரம் கால் கடுக்க என்னை காண நின்றிருந்த என் நிஜ பக்தனை கண்டும்
-சிலையாக நின்றேன்
கூட்டத்தோடு கூட்டமாக என்னை காண வந்த பெண்களை உரசியவர்களை கண்டும்
-சிலையாக நின்றேன்
என் படத்தை விற்று காசு செய்து என் பெயர் சொல்லி பணம் பார்த்தவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் பல பெயர்களில் உலகில் வலம் வர என்னை வைத்து என்னில் யார் பெரியவன் என்று சண்டையிடுவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என்னுள் அவனா அவனுள் நானா என்று என்னையே பகடையாக்கிய மனிதரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என்னை போற்றி என் பக்தர் எழுதிய கதைகளை என் முன் கொச்சைபடுத்தி பேசும் நாக்குள்ளவரை கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் இப்படித்தான் நான் இப்படிச் செய்வபவன் தான் என்று எனக்கே வரைமுறை எழுதியவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் சிலையாக நிற்கலாமா உருவமுள்ளவனா அற்றவனா என்று அவரவர் விதி விதிப்பதைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என் சிலைகளில் சிலவை சக்தி வாய்ந்ததென்றும் சிலவை விளக்கேற்ற கூட அருகதை இல்லாதவை என்றும் ஒதுக்கிய மனிதனை கண்டும்
-சிலையாகவே நான் நின்றேன்


-மோகன் கிருட்டிணமூர்த்தி

இளசு
14-04-2007, 09:36 PM
மோகன்,

சட்டென படித்ததும் மனதில் தோன்றியதை
நானும் எழுதுகிறேன்..

என் பதிலே உங்களுக்கான பாராட்டு!

---------------------------
அளவிலா முடியாதவனை
அளக்க முயன்றவர்களையும்

ஒரு நில வரையறைக்குள்
உலவ விட்ட சில முன்னோர்களையும்

என் பெயரைச் சொல்லி, என் புகழ் காப்பாற்ற (!)
என்னால் படைக்கப்பட்டவர்களைக் கொன்றவர்களையும்

என் நல்லேட்டில் தான் ஏறி, எதிரியை இறக்க
என்னுடன் பேரம் பேசி லஞ்சம் தந்தவர்களையும்

என்னை மகிழ்விக்க (!) நரபலி, உயிர்ப்பலி
இன்னும் என்னென்னவோ பலியிட்டவர்களையும்

சகமனித நேயம் மிதித்து, சக பெண்ணை இழித்து
பகல்நேரம் பக்த வேடம் தரித்த நல்ல நடிகர்களையும்...

பலகாலம் கவனித்து சிலையாய் நின்றேன்..இனி
சிலகாலம் கழித்து வந்தாலும் வருவேன்!

leomohan
15-04-2007, 07:58 AM
அற்புதம் இளசு. The same message conveyed with more powerful words, hence the impact.

இளசு
15-04-2007, 09:52 AM
மோகன்

முழுப்பாராட்டும் உங்களுக்கே உரியது..
முதல் வினை நீங்கள் புரிந்தது.
என்னுடையது ஓர் இயைந்த பக்கவிளைவு மட்டுமே!

leomohan
15-04-2007, 10:11 AM
சிலையாக நின்று கொண்டே...

நீ உயர்ந்தவன் என்று எண்ணாமல் இருக்க தினம் தலைவலி வயிற்றுவலி கொடுத்தேன்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

ஆழிபேரலையில் என் கோபத்தை காட்டி புகம்பத்தால் உன் படைப்புகளை அசைத்தேன்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

நீ தீர்த்துவிட்டதாக நினைத்த விடுகதைகளின் விடையை தினமும் மாற்றினேன்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

புதனுக்கும் சுக்கரனுக்கும் செல்லும் மனிதா உன் மூக்கு சளிக்கு விடை கிடைத்தா, ஆனால்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

ஆண்-பெண் படைத்து அண்டத்தையும் படைத்து இயற்கை இயற்றினேன்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

பிறப்பின் ரகசியம் உனக்கு தெரியவில்லை உன் இறப்பின் ரகசியமும் உனக்கு தெரியவில்லை
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

பயம், கோபம், ஏக்கம், துக்கம், பேராசை, பொறாமை இதையெல்லாம் எப்படி பெற்றாய்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

இறுமாப்பில் வாழும் மனிதா உன் பாட்டானாரும் கூட என்னை அறியவில்லை, ஆனால்
-இன்னும் என்னை சிலையாவே நினைக்கிறாய்

நீ வருவாய் போவாய் உன் பிள்ளைகள் வந்து போகும் நான் இங்கு காண்பேன் இவையெல்லாம்
-சிலையாகவே நின்று கொண்டே

இளசு
15-04-2007, 10:22 AM
மோகன்

உக்கிரம் தெறிக்கிறது... பாராட்டுகள்!

நாளை நிச்சயமில்லை என அறிந்தும் நாம் மட்டும் சாசுவதம் என
எண்ணி இயங்கும்

மனிதனின் எண்ணவோட்டமே தருமனும் புரிந்துகொள்ள முடியா மாபெரும் மர்மம்!

பல ஆக்கங்களுக்கும் அழிவுகளுக்கும் ஒரே ஊற்றுக்கண் இதுவே!

ஷீ-நிசி
15-04-2007, 11:46 AM
மிக அர்த்தம் நிறைந்த கருத்துக்கள்...

நான் சிலையாகவே இருக்கிறேன், எங்கும் எப்போதும், எல்லாவற்றிலும் ஒர் அர்த்தம் கொண்டு...

பலவாறு மனம் யோசிக்கிறது... அருமை..

ஓவியா
15-04-2007, 04:23 PM
ரசித்து படித்தேன்,

அர்த்தம் நிறைந்துள்ளன. படித்து, சிலையாகவே நான் நின்றேன்


நன்றி மோகன்.

arun
16-04-2007, 05:01 AM
அர்த்தம் பொதிந்த பதிப்பு இது எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

அன்புரசிகன்
16-04-2007, 09:07 AM
மிக இலகுவாக என்னுள்பதிந்த சில கவிகளில் இங்கு இத்திரியில் அழகான சிலையாக இருக்கின்றன. வாழ்த்துக்கள் மோகன் மற்றும் இளசு. தொடருங்கள் இது போன்ற கவிகள்.

leomohan
16-04-2007, 09:36 AM
அனைவருக்கும் நன்றி.

அமரன்
21-05-2007, 03:32 PM
அனைவரும் படிக்க வேண்டிய திரி. ஆனாலும் சிலரே படித்து பின்னூட்டமிடுள்ளனர். வித்தியசமான கவிதையாக எனக்குப் படுகின்றது. வாழ்த்துக்கள் மோகன்.

மயூ
21-05-2007, 04:45 PM
வாசித்தேன் அர்த்தம் புரிந்து தலைதெறித்தது..
அப்படியே அசையாமல் சிலையாய் நின்றேன்!!!

lolluvathiyar
21-05-2007, 05:07 PM
சிலையாக நிண்ரேன்
இன்னும் என்னை சிலையாக நினைக்கிறாய்
சூப்பர் மோகன்,
கடவுள் நடுநிலையானர் என்பது தான் தத்துவமோ
நல்லது கெட்டது எல்லாம் நாம் ஏற்படுத்தியது
என்று சொல்லிவாட்டார் சிலையாக இருந்து கொண்டே
உன் வடிவில்

விகடன்
21-05-2007, 05:19 PM
சிலையாக நிற்பதை படித்து சிலையாக நானும்...

அருமையான ஆக்கமும் அதற்கு எதிப்பாட்டாக அமைந்த இணைஆக்கமும் கொள்ளை கொள்ள வைக்கிறது.

வாழ்த்துக்கள்.

அக்னி
21-05-2007, 05:35 PM
படித்ததும் சட்டென மனதில் பதிந்துவிடும் கவிதைகளைத் தந்த மோகன், இளசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...