PDA

View Full Version : புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



தமிழ்பித்தன்
14-04-2007, 06:08 AM
http://i37.photobucket.com/albums/e92/menutoday/tamil04.gifhttp://www.geocities.com/kobisiva/newyear.mp3
தமிழர் துயர்தீர்த்து
தரணி புகழ் சேர்த்து
தரணியதையாளும்
தமிழர் திருநாளே

சிங்களம் அது கொன்று
செங்களம் அது வேன்று
மங்களம் அது பாடி
எங்களம் அது மகிழ

தலைவன் வழி நின்று
தமிழர் அணி சேர்ந்து
தமிழீழம் மலர்ந்திட
வருக புத்தாண்டே!

பசிப் பிணியது போக்கி
புதுமைகள் படைத்து
பழம் தமிழர் புகழ் சேர்த்து
பாரதம் மீதினிலே..

பல அணிகள் மறைந்து
ஓரணியாய் பலம்மிக்க
தமி்ழ்நாடாய் மலர வருக
புத்தாண்டே!

சிங்கை முதல் கொண்டு
கனடா வரை கண்ட
தமிழன் குலம் ஓங்கி
வையகம் அதிலே வாழ்வோங்க!

புத்தாண்டே நீ வருகவே
வருக வருகவே
வளம் பல தருகவே

அநியாயம் ஒழிந்து
அமைதியுள்ள உலகமாய்
புதுப்பொழிவுடன்
புலர்க புத்தாண்டே!




அனைவருக்கும் தமிழ்பித்தனின் தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்

இளசு
14-04-2007, 07:06 AM
எல்லாத் தமிழர்கள், குறிப்பாய் ஈழத்தமிழர்கள் வாழ்வில்
இன்னல்கள் மறைந்து, அமைதியும் நலமும் நிலவிட
புத்தாண்டில் நல்வழி பிறக்கட்டும்..