PDA

View Full Version : ஆறா ரணம் - செவிகள்



ஆதவா
13-04-2007, 07:09 PM
கழிநெடிலடிவெண்பா

புள்ளிசை கேட்டறிந்த காதிலே நீயும்தான்
உள்ளிருந்து ஊற்றுகிறாய் ரத்தக் குழம்பு
கமழக் கமழச் கவிகள் படித்ததை
என்செவி உற்று அறிந்ததே கேளாயோ
உன்வார்த்தை கண்டென் செவிமுடி எல்லாம்
நடனங் களித்த கதைமாறி யின்று
சடலமாய் போனது வெந்து அவைகள்
அதரவில் லாலே குதறவும் கொண்டாய்
பதமொரு காதல் பிழியவும் கண்டாய்
நிதமொரு காவியம் காதுகள் கேட்கும்
தொளைத்து விடுவாயோ நீகாதல் கொண்டு
செவிகளை மீறி நுழைகிறது அன்று
புவியைச் சருக்கிய வார்த்தைக ளாலே
கவிதைகள் கண்ணீர் விடுமேபார் காகிதம்
சாகும் குருதி படியுமடி வற்றி
கதையை நிறுத்தடி சற்றே!

leomohan
13-04-2007, 08:07 PM
அருமை ஆதவா. அனைத்து வகை கவிகளிலும் கலக்குகிறீர்கள்.

இளசு
13-04-2007, 08:31 PM
ஆதவா,

ஆறாத ரணமென்னும் கருத்துத் தொடர்ச்சியிலும்
மாறாத பாவிலக்கண பயிற்சியையும் புகுத்தி
ஆறாக நீ படைக்கும் கவிவெள்ளத்தில் நனையும்
வேராக மகிழ்கிறேன்,வளர்கிறேன், வாழ்த்துகிறேன்..


வேறு வகைத்துன்பம் நேர்கையில் காதலியின் குரல் யாழிசை..
ஆனால் காதல் முறிந்தால், கொதிக்கும் செவியாற ஏது திசை?

ஆதவா
14-04-2007, 12:43 AM
நன்றி இளசு அண்ணா, மற்றும் மோகன் அவர்களே!!

ஷீ-நிசி
17-04-2007, 04:56 PM
செய்யுள் கவிதைகள் எல்லாம் உனக்கு சரளமாக வருகிறது ஆதவா..

நன்றாக இருக்கிறது.. ஆனால் ஏனோ விளங்கவில்லை..


உன்வார்த்தை கண்டென் செவிமுடி எல்லாம்
நடனங் களித்த கதைமாறி யின்று

இந்த வரிகள் ரொம்ப நன்றாக உள்ளது.

ஆதவா
17-04-2007, 04:59 PM
வார்த்தைகள் பிரித்து போட்டிருப்பேன் மற்றபடி அர்த்தம் விளங்கிவிடும் ஷீ!! மீண்டுமொருமுறை படியுங்கள்...

இதே கவிதையை செய்யுள் வடிவல்லாமலும் எழுதியிருக்கிறேன்... அதை பிந்தைய நாட்களில் இடுகிறேன்... (முதலில் எழுதியது.... பிறகுதான் அதை அப்படியே வெண்பாவாக மாற்றிவிட்டேன்.)

ஓவியா
17-04-2007, 05:02 PM
பதமொரு காதல் பிழியவும் கண்டாய்
நிதமொரு காவியம் காதுகள் கேட்கும்
தொளைத்து விடுவாயோ நீகாதல் கொண்டு

அருமை ஆதவா,

அருமை, ஆதவா.

ஆதவா
17-04-2007, 08:13 PM
நன்றிங்க !!

pradeepkt
18-04-2007, 05:28 AM
ஹூம்... மரபுக் கவிதை...
செய்யுள் வடிவம்.. எனக்கு இப்படிக் கவிதைகளில்தான் மிக நாட்டம்.

புள்ளிசை கேட்டறிந்த காதிலே நீயும்தான்
உள்ளிருந்து ஊற்றுகிறாய் ரத்தக் குழம்பு
கமழக் கமழச்(க்) கவிகள் படித்ததை
என்செவி உற்று அறிந்ததே கேளாயோ
உன்வார்த்தை கண்டென் செவிமுடி எல்லாம்
நடனங் களித்த கதைமாறி யின்று
சடலமாய் போனது வெந்து அவைகள்
அதரவில் லாலே குதறவும் கொண்டாய்
பதமொரு காதல் பிழியவும் கண்டாய்
நிதமொரு காவியம் காதுகள் கேட்கும்
தொ(து)ளைத்து விடுவாயோ நீகாதல் கொண்டு
செவிகளை மீறி நுழைகிறது அன்று
புவியைச் சருக்கிய வார்த்தைக ளாலே
கவிதைகள் கண்ணீர் விடுமேபார் காகிதம்
சாகும் குருதி படியுமடி வற்றி
கதையை நிறுத்தடி சற்றே!

ம்ம்ம்... கவிதையின் கரு மீண்டும் காதல் ரணமே... வார்த்தை விளையாட்டுதான் இதில் சுகம்! சருக்கியது என்ற வார்த்தையில் தவறு இல்லையெனினும் "ரு" என்பது புது உபயோகம்.

இன்னும் இதுபோல் பலப்பலச் செய்யுட்கள் படைக்க! வாழ்த்துகள்!!!

pradeepkt
18-04-2007, 05:29 AM
கழிநெடிலடி வெண்பாவில்
எண்சீர், அறுசீர் கேள்வியுற்றிருக்கிறேன்
நால்சீர் புதிதாய் இருக்கிறதே....

ஆதவா
18-04-2007, 06:48 AM
நன்றிங்க பிரதீப்.... செய்யுளில் தளைதட்டுகிறதா?

கழிநெடிலடி- தவறுதான்.. மன்னிக்க..

poo
18-04-2007, 08:22 AM
வாழ்த்துக்கள் ஆதவன்!.

ஆதவா
10-05-2007, 07:32 PM
நன்றிங்க பூ!! இன்னுமொரு ஒரு மாதம் கழித்து தனிக் கவிதைகள் பயணத்தைத் தொடர்கிறேன்... அதுவரையிலும் இறைகவிகளும் கவிச்சமரும்.....