PDA

View Full Version : வெண்பாவில் ஒரு காதல்பா

ஆதவா
13-04-2007, 11:41 AM
திடீரென உதித்து எழுதியது.... தவறைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. பா அறிந்த பாவலர்கள் தயவு செய்து தளைதட்டுதா என்று பார்க்கவும்...

தோளில் இருகைகள் கண்டதென் உள்ளத்தே
நாளில் முடிந்திடா காதல் காவியம்
வாளில் ஒளிந்திருக்கும் என்காதல் தீரங்கள்
வீணிலே போயிடுமோ கண்ணே

பா: வெண்பா

ஷீ-நிசி
13-04-2007, 11:49 AM
குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
சவலை வெண்பா

ஆதவா, இத்தனை வகை வெண்பாக்கள் உள்ளன...

நீங்கள் இரண்டாம் அடியில் கோடு போட்டு எழுதியிருந்தீர்களானால் அது நேரிசை வெண்பா வகையை சேரும்..

இரண்டாம் அடியில் கோடு போடாமல் எழுதினால் மூன்றடியில் முடிக்கவேண்டும்.. இது இன்னிசை வெண்பா வகையைச் சேரும்..

அங்கங்கே வலைப் பக்கங்களில் படித்ததை வைத்து சொன்னது.. பாரதி அவர்கள் வெண்பா எழுதுவது எப்படி என்ற தொகுப்பிலும் கூறியுள்ளார்..

ஆதவா
13-04-2007, 12:02 PM
எனக்குத் தெரிந்து கோடு போடுவதெல்லாம் இலக்கணத்திலேயே இல்லை...

நீங்கள் எப்படிப்பட்ட வெண்பா வேண்டுமானாலும் எழுதலாம். தளை சரியாக இருக்க வேண்டும்..

வெண்பாவின் தளைகள் இரண்டு : இயற்சீர் வெண்டளை, வெண்சீர்வெண்டளை...

கோடுகள் பற்றி நான் படித்தது கிடையாது

இளசு
13-04-2007, 04:23 PM
நல்ல முயற்சி ஆதவா... பாராட்டுகள்!

இலக்கணக்கணக்கு சரியாகத்தான் இருக்கும்..

(கவீ, ஸ்ரீராம் எங்கேப்பா..???)

கவிதையின் பொருளோட்டத்தில் ஒரு 'ஜெர்க்' தெரிகிறது -
தளை தட்டாமல் இருப்பதில் கவனம் சென்றதாலா?

ஆதவா
13-04-2007, 04:29 PM
நல்ல முயற்சி ஆதவா... பாராட்டுகள்!

இலக்கணக்கணக்கு சரியாகத்தான் இருக்கும்..

(கவீ, ஸ்ரீராம் எங்கேப்பா..???)

கவிதையின் பொருளோட்டத்தில் ஒரு 'ஜெர்க்' தெரிகிறது -
தளை தட்டாமல் இருப்பதில் கவனம் சென்றதாலா?

ஆமாம்.. அதை எழுதி முடிந்ததும் கண்டுகொண்டேன்... இருப்பினும் திருத்த முற்படவில்லை... அவசரக்குடுக்கையாக எழுதிவிட்டேன்..

கவனம் முழுவதும் தளையிலேயே இருந்த்மையால் தலையில் பொருள் ஏறவில்லை

நன்றிங்க இளசு... சோதனை ஓட்டம் இப்போழ்தானே ஆரம்பம்...

சுட்டிபையன்
13-04-2007, 04:31 PM
குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
சவலை வெண்பா

ஆதவா, இத்தனை வகை வெண்பாக்கள் உள்ளன...

நீங்கள் இரண்டாம் அடியில் கோடு போட்டு எழுதியிருந்தீர்களானால் அது நேரிசை வெண்பா வகையை சேரும்..

இரண்டாம் அடியில் கோடு போடாமல் எழுதினால் மூன்றடியில் முடிக்கவேண்டும்.. இது இன்னிசை வெண்பா வகையைச் சேரும்..

அங்கங்கே வலைப் பக்கங்களில் படித்ததை வைத்து சொன்னது.. பாரதி அவர்கள் வெண்பா எழுதுவது எப்படி என்ற தொகுப்பிலும் கூறியுள்ளார்..

வெண்பாவில் இத்தனை உள்ளதா............? தமிழ் வாத்தி படிபிக்கும் போது வகுப்புக்கு போயிருந்தால் தெரிந்திருக்கும் இதெல்லாம்:grin:

இளசு
13-04-2007, 04:32 PM
சோதனை ஓட்டம் இப்போதானே ஆரம்பம்...

ஆதவா,

உன் திறமையில் உன்னைவிட எங்களுக்கு நம்பிக்கை அதிகம்!

பல சாதனைகள் உன்னால் முடிக்கப்படக் காத்திருக்கின்றன..

அண்ணனின் வாழ்த்துகள்..

தொடரட்டும் கவியோட்டங்கள்!

ஆதவா
13-04-2007, 04:41 PM
நன்றி அண்ணா!

ஷீ-நிசி
14-04-2007, 03:42 PM
எனக்குத் தெரிந்து கோடு போடுவதெல்லாம் இலக்கணத்திலேயே இல்லை...

நீங்கள் எப்படிப்பட்ட வெண்பா வேண்டுமானாலும் எழுதலாம். தளை சரியாக இருக்க வேண்டும்..

வெண்பாவின் தளைகள் இரண்டு : இயற்சீர் வெண்டளை, வெண்சீர்வெண்டளை...

கோடுகள் பற்றி நான் படித்தது கிடையாது

நன்றி ஆதவா... வெண்பாவில் எனக்கு எள்ளளவும் ஞானமில்லை... சிலர் எழுதியதை வைத்து சொன்னேன். தளை, தளை என்கிறாயே, அதைப் பற்றியும் புரியாது...

இது வலைப்பக்கத்திலிருந்து எடுத்தது
http://geeths.info/archives/category/venba-muyarchi/

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.

விளக்கம்:
தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.

இது என்ன வகை வெண்பா? இப்படி இரண்டாம் அடியின் முடிவில் கோட்டினை பயன்படுத்தி எழுதுவது இலக்கணப்படி சரியா, இல்லையா?

விளக்கவும் ஆதவா! தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆதவா
15-04-2007, 03:01 AM

இது கடிலடி. கோடு போடுவது என்பது அர்த்தத்தைப் பிரிப்பதற்காக இருக்கும்... மற்றபடி இலக்கணத்தில் கோடு போடுவதைப் பற்றிய குறிப்பே இல்லை. அதை நீங்கள் மறந்துவிடுங்கள். இரண்டாம் வரியில் மட்டுமல்ல முதல் வரியிலேயே கோடு போட்டு அர்த்தத்தைப் பிரிக்கலாம்... எழுத எழுத உங்களுக்குகே புரிந்துவிடும்.....

இலக்கணம் நன்றாக கற்றுக்கொள்ளுங்கள்....

நன்றி...