PDA

View Full Version : நினைவலைகள் ஓய்வதில்லை!



அரசன்
12-04-2007, 02:40 PM
அழியாத
நினைவுகள்
என்றுமே அழிவதில்லை!

விழியால்
கண்ட காட்சிகள்
என்றுமே நிலைப்பதில்லை!

கழியாத
நாட்களென
என்றுமே ஒன்றுமில்லை!

ஆழியால்
பெற்ற முத்துக்கள்
என்றுமே தரம் குறைவதில்லை!

மழையால்
பெற்ற வளங்கள் அனைத்தும்
புவிக்கு சொந்தமில்லை!

சோழியால்
சொன்ன வார்த்தைகள்
எல்லாம் பழித்ததில்லை!

நாழிகையால்
கண்ட உண்மைகள்
அனைத்தும் விளங்குவதில்லை!

நட்பின்பால்
பெற்ற அன்பு
என்றுமே தேய்வதில்லை!

நினைவலைகள்
என் மனக்கடலில்
என்றுமே ஓய்வதில்லை!


:music-smiley-010: :music-smiley-010: :music-smiley-010:

gayathri.jagannathan
13-04-2007, 03:57 AM
அழியாத
நினைவுகள்
என்றுமே அழிவதில்லை!

விழியால்
கண்ட காட்சிகள்
என்றுமே நிலைப்பதில்லை!

கழியாத
நாட்களென
என்றுமே ஒன்றுமில்லை!

உண்மை நண்பரே,
"இதுவும் கடந்து போகும்".. ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த வரிகள் இவை....
இந்த வரிகள் கூறுவது போல, உலகத்தில்,உறவுகளில், மனதில்,குணத்தில் ஏற்படும் மாற்றங்களை (சில நேரம் சந்தோஷமாக, சில நேரம் வருத்தமாக) நாம் கடந்து போகின்றோம்... போய்க் கொண்டே இருக்கின்றோம், நமது முடிவு வரும் வரை....
யாருக்காகவும், (எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும்), எதற்காகவும், (எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்),
நாம் நமது பயணத்தை நிறுத்துவதில்லை...





நட்பின்பால்
பெற்ற அன்பு
என்றுமே தேய்வதில்லை!

நினைவலைகள்
என் மனக்கடலில்
என்றுமே ஓய்வதில்லை!



இதுவும் உண்மை நண்பரே, நினைவுகளினால் பின்னப்பட்ட மனத்தில், நட்பின் காலடிச் சுவடு ஒரு கல்வெட்டு.....காலத்தால் அழியாதது...


முதல் காதல் எப்படி ஒருவரால் மறக்க முடியாததோ, அதே போல், முதல் நட்பும் மறக்க முடியாததே....


நன்றி நண்பரே...

இளசு
13-04-2007, 06:22 AM
ழகரம் எதுகையாக பெரும்பான்மை வரிகளில்...
(எல்லாம் மன்றத்தில் கவிதா, பாரதி பதித்த
பாவகைகள் பற்றிய பதிப்புகளின் பாதிப்புதான்..)

பாராட்டுகள் கலியமூர்த்தி..

நிலைக்காதவற்றை முதலில் வரிசையாகச் சொல்லி
முத்தாய்ப்பாய் அழியாத நினைவுகளைச் சிலாகித்து முடித்திருக்கலாமோ?

காயத்ரியின் விமர்சனம் அழகு..