PDA

View Full Version : ஹைக்கூ...(2)



அரசன்
12-04-2007, 02:21 PM
ஆ! என்னே சமுதாயப்புரட்சி
ஆங்கோர் கலப்புத் திருமணம்.
ஊனமுற்ற தம்பதிகள்!
:fragend005: :fragend005: :fragend005:

ஓவியா
12-04-2007, 02:30 PM
ஆஆ நெத்தியடி ஹைக்கூ

நன்றி.


சமுதாயப்புரட்சினு சொல்லிக்கொண்டே விட்டில் அதை ஆதரிக்கா மனிதர்களை நினைத்தால் தான் வயிறெரியுது.

பேசாமல் கம்ம்ம்ம்முனு ஒரு கருத்தும் சொல்லாமல் இருப்பதே மேல்னு இருப்பவர்களே தேவலாம்.

இளசு
13-04-2007, 06:18 AM
இயற்கையாலும் சமூகத்தாலும் அநீதி
இழைக்கப்பட்ட
இனம் இனத்தோடு சேரும்..!?

சுட்டிபையன்
13-04-2007, 03:29 PM
வளைந்து நின்றது உடம்பு!
நிமிர்த்தி விட்டது வாத்தியாரின்
ஒரே ஒரு பிரம்படி!

சுட்டிபையன்
13-04-2007, 03:30 PM
படிக்கும் நேரத்தில்
மூளையைக் குழப்பி
வயிற்றெரிச்சல் தரும்
கொலுசுச் சிணுங்கல்...

ஆதவா
13-04-2007, 04:05 PM
மூர்த்தியண்ணாவோட ஹைட்கூ!! பிரமாதம்லே!! ஆனா மண்டைக்கு சட்டுனு புரியமாட்டேங்குதுலே!!
--------------------
சஞ்சய்தம்பி நல்லா எழுதுறாக... நமக்குத் தான் கொடுப்பினை இல்லை

சுட்டிபையன்
13-04-2007, 04:10 PM
மூர்த்தியண்ணாவோட ஹைட்கூ!! பிரமாதம்லே!! ஆனா மண்டைக்கு சட்டுனு புரியமாட்டேங்குதுலே!!
--------------------
சஞ்சய்தம்பி நல்லா எழுதுறாக... நமக்குத் தான் கொடுப்பினை இல்லை

கண் மூடி கிறுக்குங்கள் கைக்கூ வரும்

ஆதவா
13-04-2007, 04:15 PM
கண் மூடி கிறுக்குங்கள் கைக்கூ வரும்

கண்ணமூடிட்டு கிறுக்கினா எழுத்தே வராதே!!:music-smiley-010:

அதுக்கெல்லாம் நல்ல திறமை வேணுமுங்கோ!!! இங்க நிறைய பேரு இருக்காங்க...

சுட்டிபையன்
17-04-2007, 01:20 PM
கண்ணமூடிட்டு கிறுக்கினா எழுத்தே வராதே!!:music-smiley-010:

அதுக்கெல்லாம் நல்ல திறமை வேணுமுங்கோ!!! இங்க நிறைய பேரு இருக்காங்க...


கண்ண மூடிட்டு கிறுக்கினா வாராதா.........? முதலிலை பேனா மூடிய கழட்டிடு கிறுக்குங்கள்:icon_good:

திறமை ஒன்னும் பிறக்கும் போதே வருவதில்லை
முயற்ச்சி செய்தால் வரும்
முயலுங்கள் வானம் தொடும் தூரத்தில்தான்